பொய் 12
Poi12

12 பொய்யில் ஒரு மெய் !!
அல்ப சுகங்களுக்காக வாழ்க்கையை இழப்பவர்கள் தான் இந்த உலகில் அதிகம்..
பணத்தைத் தேடி நிம்மதியை இழக்கும் ஒரு சாரார், வசதியைத் தேடி தூக்கத்தை தொலைக்கும் ஒரு சாரார் , வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக வாழ்க்கையை தொலைக்கும் ஒரு சாரார் ...
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் நமக்காக வாழ ஒரு நொடி கூடவா இல்லை , உலகம் பணத்தின் பின்னால் போகவில்லை, மனிதன் உலகத்தை பணத்திற்குள் அடக்கி விட்டான்.. அதனால் பணம் இங்கே பிரதானமாகிவிட்டது.. அன்பு இங்கே பற்றாக்குறை கிடையாது அன்பையும் தாண்டி ஏதோ ஒரு கடமை இங்கே நம் கழுத்தை நெரிக்கிறது.. அந்த கடமையை லேகுவாக்கத் தெரியாது மூடர் கூடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவ்வளவே !! ...
பச்சை நிற புடவை ஓரம் மட்டுமே குனிந்து இருந்த அரவிந்த் கண்ணில் பட்டது நிமிரவே இல்லை ..
வாங்க சீதா என்ன முடிவு பண்ண போறீங்க
"வீட்டுக்கு போயிட்டு வர்றேன் சார்..""
"முடிவு எதுவும் சொல்லைலையே ..
எனக்கு இந்த புருஷன் வேண்டாம் என்றதும் அரவிந்த் உடைந்து போய் அவளை கண்ணீர் கட்டி பார்க்க ..
"எப்படி இவருக்கு இந்த பொண்டாட்டி வேண்டாமோ அப்படியே எனக்கும் இநத புருசன் வேண்டாம்..
"சீதா நான் என்று அரவிந்த் அவள் கையை பிடிக்க போக நகர்ந்து நின்று உள்ளங்கையை விரித்த சீதா
"எங்க உங்க வப்பாடியை எடுத்து கையில வைங்க
"சீதா
"ஓஓஓ வப்பாட்டியை கொடுக்க அவ்வளவு கஷ்டமா இருக்கோ அர்விந்த் புரியாது முழிக்க
"அந்த போனை எடுத்து கையில வைங்கன்னு சொன்னேன் .. என்றதும் அரவிந்த் அந்த போனை எடுத்து அவள் கையில் வைக்க அதை தூக்கி போட்டு உடைத்தவள் .. ..
"என்னோட ராமா வர்றதா இருந்தா பின்னாடி வாங்க , வக்கீலுக்கு பீஸை கொடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புங்க... என்றவள் முந்தானை எடுத்து அவன் கண்ணை துடைத்து விட்டுவிட்டு, தன் கண்ணீரையும் துடைத்து கொண்டே வெளியே போக... அரவிந்த் பீஸ் எடுத்து அவர் கையில் கொடுக்க ..
"நல்லா இருந்தா சரிதான் போயிட்டு வாங்க என்று வக்கீல் சிரித்து கொண்டே அனுப்பவும்
"எந்த முடிவும் சொல்லாம போறாளே "படபடத்து கொண்டே அர்விந்த் போகும் மனைவி பின்னால் ஓடினான் ..
ஆட்டோகாரரிடம் காசை கொடுத்து கொண்டு நின்ற சீதா
நீங்க போங்க அண்ணா ... நான் என் புருஷன் கூட வர்றேன் என்றவள் அவனை திரும்பி பார்க்க தயக்கமாக அரவிந்த் பைக்கை தள்ளி கொண்டு அவள் அருகே வந்து நிற்க ...
சீதா அவன் பின்னால் ஏறி அமர்ந்து ... அவன் தோளை பிடிக்க போனவள் கையை அவன் இடையில் போட்டு கொண்டு ...
"அந்த ஷில்பா வீடு தெரியுமா?
"ம்ம் ...
""அங்க போங்க
இன்னும் நம்பலையா சீதா ..
"உங்கள போங்கன்னு சொன்னேன்...
"இல்ல சீதா எதாவது பிரச்னை ஆகிட போகுது
"பிரச்சனை ஆன பிறகு எல்லாத்தையும் முடிச்சிடலாம் ராம் .. இல்லை குப்பை எப்பவாவது காத்து அடிச்சு நம்ம பக்கம் வரத்தான் செய்யும் போங்க , போவோம் என்று அவன் காதில் கிசுகிசுக்க அரவிந்த் பேச வாயெடுக்க ...
"வீட்டுல போய் மீதியை பேசுவோம், இப்போ போங்க என்று முடித்து விட்டாள்...
ஷில்பாவின் வீட்டில் கொண்டு போய் அரவிந்த் வண்டியை நிப்பாட்ட அவன் கையை பிசைந்து கொண்டே மனைவியை பார்க்க
"பொண்டாட்டிய தாண்டி இன்னொருத்திகிட்ட வாயை திறந்தா இது தான் நடக்கும்... பொண்டாட்டிக்கு செய்ற மாதிரி கண்டவளையும் கூட்டிகிட்டு திரிஞ்சா , இப்படித்தான் சந்தி சிரிச்சு போய் நிக்கணும்
"இல்லை சீதா அப்பா அம்மா இல்லாத பொண்ணு இயலாமையில் இருக்கான்னுதான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன்" ..
"அத்தனை பேருக்கும் இல்லாத அக்கறை அவ மேல எதுக்கு ?
அது
"வப்பாட்டியா வர்றேன்னு சொன்ன பொண்ண கூட்டிட்டு திரிஞ்சா, இப்படி தான் படணும் .. ஒருத்தி புத்தி தெரிஞ்சா அவளை தள்ளி விட்டுட்டு போக தெரியணும், கள்ளகுடித்தனம் பண்ண வர்றேன்னு சொன்னவளை தூக்கி சுமந்து இப்ப அவமான பட்டு நிக்கிறது யார் ஹான் ??
சாரி சீதா ...'
"இப்ப சாரி கேளுங்க ,கொஞ்சம் அசந்து இருந்தா மானம் கப்பல் ஏறி இருக்கும் ..என்கிட்ட கிழிக்கிற வாயை அங்க கிழிச்சி இருந்திருக்கலாம்ல..
அது "
"ம்ம், இந்த அளவுக்கு இளிச்சவாயனா இருந்தா போறவன் வர்றவன் எல்லாம் இப்படித்தான் கோமாளி வேஷம் உங்களுக்கு போட்டு விட்டுட்டு போவான்... உள்ள வாங்க என்றதும் அரவிந்த் அவள் பின்னாலேயே நாய்குட்டி போல நடக்க ஆரம்பிக்க..
ஹாலில் உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த ஷில்பா சட்டென இருவரையும் பார்த்து எழும்பி நின்றாள்..
விறுவிறுவென்று உள்ளே போன சீதா லட்சுமி ஷில்பா ஏன் எதற்கு என்று அறியும் முன்னே அவள் கன்னத்தில் பளார் பளார் என்று நான்கு அறையை ஆசை தீர போட்டவள் ஆத்திரத்தில் அரவிந்த் தன் கன்னத்தை பொத்தினான், இருக்கு மாப்பிள்ளை உனக்கு என்பது போலவே தோன்றியது..
'ஏய் என்று ஷில்பா கத்த
"மூச்சு, மூச்சு விட்ட அம்மிக்கல்லை எடுத்து மண்டையில போட்டு கொன்னுடுவேன், கொலையும் செய்வாள் பத்தினி கேள்வி பட்டிருக்கியா... ஷில்பா எச்சில் விழுங்கிட...
நீ பத்தினிதான், உன் புருசன் உத்தமனா? என்றாள் ஷில்பா நக்கலாக சிரித்த படி..
இப்பவும் என் புருஷன் ராமன் தான்..
"ராமனுக்கு என் கூட என்ன வேலையாம்... ஓ உங்கிட்ட நல்லவர் வேஷம் போடுறாரா, அவர் என் கூட சுத்துன போட்டோ அத்தனையும் என்கிட்ட இருக்கு நல்லவர் வேஷம் போட்டா நல்லவராயிடுவாரா என்றதும் அரவிந்த் திகைத்துப் போய் ஷில்பாவை பார்த்தவன்
"ஏம்மா , உனக்கே இது நியாயமா இருக்கா .. உன் கூட நான் அப்படியா பழகி இருக்கேன் .. நீ என்கிட்ட கண்டதையும் பேசும் போது கூட உனக்கு அறிவுரை சொல்லி உன்ன அனுப்பிதானே வச்சேன்" என்ற அரவிந்த் இடையில் வேகமாக குத்திய சீதாலட்சுமி
"அவளே குடும்பத்த கெடுக்குறதுக்கு நாயா பேயா அலஞ்சுகிட்டு இருக்கா, நீங்க அவகிட்ட போய் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க "என்று திரும்பி ஷில்பாவை பார்த்து முறைத்துக் கொண்டே
'சீசீ எத்தனை குடும்பத்தைப் கெடுத்திருக்க...
அன்னைக்கு போன் போட்டது நீதானே?? வாயை திறக்கிறியா இல்ல ஆட்டோ பாம் எடுத்து வாய்க்குள்ள சொருகவா
"ப்ச் ஆம்" என்று ஷில்பா தலையாட்ட
அப்போ நீயே போட்டும் கொடுத்துட்டு, அவர் கூட லிங்கும் ஆகறதுக்கு தயாராக இருக்க... என் புருஷன் தடுமாறாம இருந்ததுனால தப்பிச்சான் இல்ல மொத்தமா அவன சோலி முடிச்சிருப்ப அப்படித்தானே..
"ஆமா ஆமா, என்ன என் வீட்டுக்குள்ள வந்து என்னைய பயம் காட்டி பாக்குறியா .. சீதாலட்சுமி நான் இப்போ நினைச்சா கூட உங்க குடும்பத்தை ஒன்னும் இல்லாம ஆக்க முடியும்.. என்கிட்ட அவ்வளவு ஆதாரம் இருக்கு , அவர் என்ன வச்சிருக்காருன்னு ஒரு பொண்ணு நான் போயி வெளியே சொன்னா... பாதி பேர் நம்பதான் செய்வான் .... அதோட எவனுக்கோ உண்டான குழந்தையை ரெண்டு முறை அழிச்சு இருக்கேன், அதுக்கான பழியையும் உன் புருஷன் மேல போட்டா உலகம் முழுக்க நம்பித்தான் ஆகணும் ....அவள் பேச்சில் அரவிந்த் கண்ணை விரித்தான் அழகாய் இருப்பது அத்தனையும் மானாக இருக்காது கொடிய விஷம் கொண்ட பாம்பாக கூட இருக்கலாம்..
"எப்படின்னு கேட்கிறீங்களா, அன்னைக்கு மயக்கம் போட்டு விழும்போது என்ன ஹாஸ்பிடடல் கூட்டிட்டு போனது, உன் புருஷன்.. அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருந்து வாங்கி வச்சிருக்கேன் ... சோ புருஷனும் , பொண்டாட்டியும் இப்போ நான் சொல்றத கேட்டு தான் ஆகணும் ... இல்ல அத்தனை ஆதாரத்தையும் பரப்பிவிட்டேன் உங்க குடும்பம் நாறிப்போகும் என்ற ஷில்பாவை அரவிந்த் திகைத்துப் போய் பார்த்தான்...
நாம் வாழ்வது நயவஞ்சகமான பூமி.. ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு உதவி கிடைக்கும் என்பதெல்லாம் அந்த காலத்தோடு முடிந்து விட்டது... உதவி செய்தால் உபத்திரியம்தான் வந்து தீரும் எனவே நமக்கு என்ன வந்தது என்று சில நேரங்களில் சுயநலமாக கடந்து போவது சாலச் சிறந்தது...
பெண்ணா இவள்?! என்று அரவிந்த் அதிர்ந்து போய் நிற்க, சீதாவோ நக்கலாக ஷில்பாவை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்
ஒரு குடும்பத்தை கெடுக்கிறதுக்கு நீ இவ்வளவு பிளான் போடும்போது ,என் குடும்பத்தை காப்பாத்திக்கறதுக்காக நான் எவ்வளவு பிளான் பண்ணுவேன்னு, நீ யோசிச்சு பாக்கலையே ஷில்பா?? என்றவள் தன் போனை தூக்கி அவள் முன் ஆட்டி காட்டியவள் ..
"உன்கிட்ட ஆயிரம் ஆதாரம் இருந்திருக்கலாம் , ஆனா நீ இப்ப பேசுனியே, எல்லாம் இதோ இந்த போன்ல ரெக்கார்ட் ஆயிருக்கு.. இந்த ஒன்னு போதும் , எங்க பக்கத்துல தப்பு இல்ல , எங்க ராம் தப்பானவர் இல்லன்னு காட்டுறதுக்கு ஆதாரத்தை பாக்குறியா ஒரு குறும்படம் ஓட்டவா ..நீ போட்டோ தான வச்சிருக்க , அந்த போட்டோவை ஊர் முழுக்க தாராளமா போய் கொடுத்துக்கோ, அதனால என் குடும்பத்துல எந்த பிரச்சினையும் வரப்போறது கிடையாது.... நான் கிளியரா இருக்கேன்... ஆனா நீ பேசுனதை நான் காட்டுனாஉன் நிலமை?? வேலை போகும் , சோத்துக்கு பிச்சை நோ நோ எத்தனை பேர் கூடவோ போக வேண்டி இருக்கும்.. என்று அவள் பேசியதை அப்படியே போனில் சீதா ஓட்டி காட்ட ..அரவிந்துக்கு அப்பாடா என்றிருந்தது....
"சரி இப்போ வேணும்னா நீ உன் புருஷனை காப்பாத்திகளாம்.. ஆனா எப்போதும் உன் சபலபுத்திகார புருஷனை எப்படி காப்பாத்துவ அதான் போன்ல இருக்கறதெல்லாம் பார்த்து இருப்பியே அத்தனையும் அசிங்கம் , ஆபாசம் என்றதும் அரவிந்த் இரண்டு பெண்களையுமே பார்க்க முடியாது தலையை குனிய ..
இங்க எவனும் நல்லவனும் இல்ல .. எவளும் நல்லவளும் இல்ல கொட்டி கிடக்கிற அசிங்கத்தை பாதி பேர் பார்த்துட்டு கடந்து போறான்... சில பேர் பார்க்காம கடந்து போறான் , பாக்குறதுனால அவன் கெட்டவனும் கிடையாது , பாக்காததுனால அவன் நல்லவனும் கிடையாது ,. அது அவங்களுடைய பெர்சனல் .. எங்களோட பெர்சனல்.. நீ அதுக்காக கவலைப்பட வேண்டாம்.. அதை எப்படி சரி செய்யணும்னு எங்களுக்கு தெரியும் ... சோ பொத்து என்பது போல் சீதா வாயை பொத்தி காட்டியவள்
"உன் உடம்பு அரிப்புக்கு , உன்ன போல அரிப்பு எடுத்தவன் எவனாவது இருப்பான்... போய் தேடு இந்த மாதிரி குடும்பத்தை கெடுக்கிற கேவலமான வேலையெல்லாம் செய்யாத, அந்த பாவம் உன்ன சும்மாவே விடாது என்றவள் அரவிந்தை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
எத்தனை பேர் இந்த சாக்கடையில் விழுந்து, வெளியே வர முடியாமல் அமிழ்ந்து போகின்றனர்...