பொய் 7

Poi7

பொய் 7

7 பொய்யில் ஒரு மெய் !!

ஆண்களின் முடிவு எப்போதும் அவசரமாய் இருக்கும் ... பெண்களின் முடிவு எப்போதும் நிதானமாக இருக்கும்.. 10 மாதம் குழந்தையை வயிற்றுக்குள் வைத்து பெற்றெடுக்கும் அவள் பொறுமை போல , வேறு ஏதும் வருமா?

கண்கள் அவனை குற்றவாளி என்று காட்டுகிறது.. மனதும் குற்றவாளி என்று காட்டுகிறது, ஆனால் சாட்சி வேண்டும் ..இவை உண்மையா பொய்யா? என்று அறிந்து கொண்டால் மட்டுமே இதை பற்றி அவளால் தெளிவாக ஒரு முடிவு எடுக்க முடியும்...

 யாரோ ஒருவர் சொல்வதற்காக அவளோடு வாழ்ந்த அவனை ஒரு நொடியில் சந்தேகப்பட்டு குற்றம் சுமட்டி விட்டால் , நாளை அவள் குற்றவாளியாகி விடுவாளே .. வீசும் வார்த்தைகள், அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவள் வாழ்க்கையையும் சேர்த்து தான் சூனியம் ஆக்கிவிடும்... எனவே இந்த விஷயங்களை எல்லாம் மனதில் அப்படியே பத்திரமாய் பல பூட்டுகள் போட்டு ஊற்றி வைத்து விட்டால் ஆனால் கண்கள் விழித்துக் கொண்டது சிந்தை தன்னை சுற்றி நடப்பதை ஆராயத் தொடங்கி விட்டது.. இத்தனை நாள் கண்ணை மூடி நம்பிய கணவனை அவள் கண்கள் கூர்ந்து உற்று நோக்க ஆரம்பித்தது...

சீதா என்று உள்ளே வந்த அரவிந்த் குரலில் தன் முகத்தை துடைத்து சரி செய்து கொண்ட சீதா 

"வாங்க ராம் வேலை எப்படி போச்சுது 

"எப்போதும் போலத்தான் மண்டை காய வைச்சானுக... என்ற கணவனை கண்ணை சுருக்கி பார்த்தாள்.... சட்டை மீது சிறியாக சந்தனம் ஒட்டி இருந்தது .. ஷில்பா பொட்டு மீது சந்தனம் கீற்று வைத்திருப்பதை பார்த்து இருக்கிறாள்.... சரியாக அவன் நெஞ்சில் சந்தனம் ஒட்டி இருக்க இனி எல்லாவற்றுக்கும் உட்கார்ந்து அழுது என்ன பயன் ??

நம்பிக்கை உடைந்து போனது 

பரஸ்பரம் கேள்வி குறியாகி போனது 

காதல் காலாவதி ஆகி போனது

இப்போது இருப்பது துரோகம் துரோகம் மட்டுமே ..

எல்லாவற்றுக்கும் அவன் துணிந்து போன பின்பு இதை எல்லாம் தாங்க அவளும் துணிவை வரவைத்து தான் ஆகணும் ... 

துரோகம் செய்த அவனே வாழும் போது அவள் ஏன் உடைந்து சாக வேண்டு்ம்.. உடைய ஒரு நிமிடம் போதும் ஆனால் திடமாக நின்றாள் .. 

"என்ன ராம் வொயிட் சட்டையில ஏதோ சந்தன கறை போல இருக்கு என்றதும் ராம் சற்று பதறி சரியாக நெஞ்சை பார்த்தான்..அதை தடவி கொண்டே 

"ஓஓஓ அதுவா சீதா , லிப்ட்ல ஏறும் போது ஒரு வயசான அம்மா இடிச்சிருச்சு அதுல ஒட்டி இருக்கும் போல...

"அப்படியா ? என்றவள் காப்பியை கொண்டு வந்து கொடுக்க.. போனை நோண்டி கொண்டிருந்த ராம் போனை பாக்கெட்டில் வைத்து விட்டு காப்பியை வாங்க 

"ராம் உங்க போன் கொஞ்சம் கொடுங்களேன்

"எதுக்கு ஏன் கேட்கிற??" என்று பதறி அவளை பார்க்க 

"போனை தான கேட்டேன் ராம் அதுக்கு ஏன் பதறுறீங்க "

"ச்சே சே பதறலையே பேங்க் வரவு செலவு சிலது இதுல இருக்கு எதாவது ஆகிட கூடாதுல்ல அதான் உன் போனுக்கு என்னாச்சு? "

"என் போன்ல சார்ஜ் இல்ல ராம் 

"ப்ச் ஒரு நாள் முழுக்க வீட்டுல சும்மா தான இருக்க , ஒரு சார்ஜ் போட்டு வைக்க மாட்டியா ? 

"ஓஓ நான் சும்மா இருக்கேன்னு பார்த்தீங்களா ராம் 

"பின்ன வெட்டி முறிக்கிற வேலையா , நாலு காயை நறுக்கி சோத்தை பொங்கிட்டு சும்மாதான இருப்ப அப்ப இதெல்லாம் பார்க்க மாட்டியா 

"என்ன ராம் புதுசா குறை எல்லாம் கண்டு பிடிக்கிறிங்க 

"இது குறையா தெரிஞ்சா ஒன்னும் செய்ய முடியாது சீதா, நீ இப்பவெல்லாம் ரொம்ப கிராஸ் கேள்வி கேட்குற ... 

"போனை தாங்கன்னு கேட்டேன் அது தப்பா?" தன் குட்டை மறைக்க கோவப்பட்டான்.... பெருமூச்சு விட்ட சீதா எழும்பி உள்ளே போனவள் அங்கிருந்து ஓரக்கண்ணால் அவனை தான் பார்த்தாள் .. அவனோ வேகவேகமாக போனை எடுத்து எதோ செய்து விட்டு 

"சீதா போன் இந்தா என்று தன் போனை நீட்ட 

"ஒன்னும் தேவையில்ல ராம், என் போனை சார்ஜ் போட்டு அதுல பேசிக்கிறேன் என்று முடித்து விட்டாள் 

இந்த போனை கிளறினால்,அவன் குப்பை கண்டிப்பாக கிடைக்கும் என்று மூளைக்குள் மணி அடித்து குறித்து வைத்து கொண்டாள்..

எப்போதும் குழந்தைகள் வந்தால், அதுவும் மகள் வந்து விட்டால், அவள் வளவளக்கும் கதைகளை ரசித்து கேட்பதில் அரவிந்த் தான் முதல் ரசிகன்!! மகன் அவன் மீது கிடந்து ஏதாவது அது என்ன இது என்ன என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். இவனும் சளைக்காது பதில் சொல்லிக்கொண்டே இருப்பான் ... மொத்தத்தில் எப்போதும் அந்த குடும்பத்தில் அவன் விழிப்போடு இருந்து கொண்டே இருப்பான்.... ஆனால் , இப்போதுதான் சீதா யோசிக்கிறாள், சில மாதங்களாக அரவிந்த் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவு செய்வது இல்லை...டிவியும் பார்ப்பது இல்லை , அவளோடும் வம்பு இழுப்பது உரையாடுவது இல்லை .. அவ்வளவு ஏன் படுக்கையில் கூட நச்சரிப்பது இல்ல...

பிள்ளைகள் அவனிடம் போனால், எனக்கு வேலை இருக்கு போய் விளையாடுங்க, படிங்க இல்ல தூங்குங்க என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு அந்த படுக்கை அறை உள்ளே புகுந்து கொள்கிறான்.. முழு நேரமும் ஃபோனில் தான் ஏதோ செய்து கொண்டே இருக்கிறான்.

எப்படி இதையெல்லாம் கவனிக்காமல் விட்டேன்??? என்ற தலையை தடவிக் கொண்டு படுக்கையறையில் தனியாக போனை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த கணவனை கண்கள் கலங்க பார்த்தாள்..

அவள் ஆசை ஆசையாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை.. இதில்தோற்று நின்றால் அவள் குடும்பமே காறி துப்புமே... 

கையை விட்டு நழுவி போனது பொருள் என்றால் சரி இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுவிடலாம்... ஆனால் அவள் கையை விட்டு வழுவி போனது அவள் வாழ்க்கை .... அவள் கணவன்..

என்னிடம் என்ன இல்லை என்று இன்னொரு பெண்ணை நாடினான்... அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை... நான் போரடித்து விட்டேனா? இல்லை என்னைவிட அவளிடம் அதிக இன்பம் இருக்கிறது என்று தேடி ஓடி விட்டானா ஐயோ மூளை வலித்தது.. யோசித்து யோசித்து இவளுக்கு கிறுக்கு பிடித்து விடும் போல் இருந்தது நான் எதுவும் தவறு செய்து விட்டேனா என்று சிந்தனையில் மூழ்கி போய் இருந்தாள்

தன் கணவனை பற்றி நன்றாக தெரியும்.. எந்த அளவு காதலை எதிர்பார்க்கிறானோ காதலை கொடுக்கிறானோ அதே அளவு அவளிடம் காமத்தை எதிர்பார்க்கும் ஒருவன்..

அப்படி இதுல என்னதான் இருக்கு ராம் என்று அவள் சலித்துக் கொண்டாலும்

தெரியலையே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, உன்கிட்ட இப்படியே ஒட்டிக்கிட்டு இருந்தா மனசு அவ்வளவு லேசாகுதுடி.. நான் என்ன பண்றது ... ஏன் உனக்கு கஷ்டமா இருக்காடி என்று தினம் தினம் அவளை நாடும் கணவனை சலித்துக் கொண்டு சகித்துக் கொண்டுதான் அவளும் வாழ்ந்து இருக்கிறாள்...

ஆனால் சமீபகாலமாக அவளாலும் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை, குடும்பத்தின் சூழல் அவனை தன் அருகில் சேர்க்கவும் முடியவில்லை இப்போதுதான் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரிசை கட்டி வந்து அவளை துன்பப்படுத்தியது..

"ப்ளீஸ்டி வாரத்தில் ஒரு நாளாவது கொடேன் , என்னால மேனேஜ் பண்ண முடியல ப்ளீஸ் என்று சில மாதங்களுக்கு முன் கணவன் வாய்விட்டு அவளிடம் கேட்டது ஞாபகம் வந்தது....

நான் முடியலைன்னு மறுத்தா அத தேடி இன்னொரு பொண்ணு கிட்ட போவாரா, அப்ப நான் கொடுத்த காதல் ??அவர் எனக்கு கொடுத்த காதல் என்ன ஆனது உடல் தேவை மட்டும் தான் காதலா?? நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்!? கதறி வந்த அழுகையை துடைத்துக் கொண்டவள்.... தன் கண்முன்னே விளையாடும் இரண்டு பிள்ளைகளையும் பார்த்து தான் துக்கத்தை பல் இடுக்கில் அடக்கிக் கொண்டாள்... 

இவனை நம்பி சாக கூட முடியாது, செத்து அடுத்த நாளே அந்த பெண்ணை கொண்டு வந்து வைத்து விட்டால் அவள் பிள்ளைகள் நிலைமை அய்யய்யோ!! நினைத்து பார்க்கவே உள்ளம் பதறியது கதறியது.... எதிரே தெரிந்த கண்ணாடியில் தன் பிம்பம் பாத்தாள் .. நாற்பது வயது இளமை கருகி போய் நடுத்தர பெண்ணாக தோய்ந்து போன மார்பகம் , தாலியில் நாலு ஊக்கு , பழைய நைட்டி கொண்டை போட்டு ஏனோதானோவாக இருந்தாள் ...

சீதா கடைக்கு போறேன் எதாவது வேணுமா? என்று ராம் கமகமவென வெளியே வந்தான் டிரவுசர், டிசர்ட்டில் இளமை முகக்களை கூடி போய் நின்றான் முன்பு எல்லாம் கண்ணாடியில் தன்னை பாக்கவே மாட்டான் 

"நீதான ரசிக்கணும்டி எதுக்கு நான் கண்ணாடி பார்க்கணும் என்பானே .. அவள் முன் நின்று கண்ணாடியில் தலையை சீவி, பவுடரை கழுத்தில் தேய்த்து முன்னும் பின்னும் திரும்பி பார்த்து கொண்டு நின்ற அர்விந்த்தையும், தன்னையும் மாறி மாறி பார்த்தாள் 

இவனால் தானே இந்த அழகு போச்சு !!இவனுக்கு தகப்பன் அந்தஸ்து கொடுக்க தான என் அழகு தொங்கி போச்சு , இவன் சுகித்து சுகித்து தானே இளமை வத்தி போனது .. அந்த எண்ணம் அவனுக்கு வரவே இல்லையா ??

சீதா எதாவது வேணுமான்னு கேட்டேன் ...

"எங்க போறீங்க ராம் 

"கடைக்கு 

"என்ன வாங்க 

"சும்மா உள்ள போர் அடிக்குது அப்படியே போயிட்டு ப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சிட்டு வரலாம்னு பார்த்தேன்.. 

"ஓஓஓஓ அவனுக்கு வெட்டி கதை அளக்க நண்பர்களே கிடையாது என்று மனைவிக்கு தெரியாதா என்ன அடித்து விட்டான்...

"பார்த்து போயிட்டு வாங்க "என்ற சீதா குரலுக்கு அவன் பதிலே கொடுககாது வேகமாக போனை

 பார்த்து கொண்டே நடக்க ஆரம்பித்தான்... இரவும் தூங்கும் மனைவிக்கு தெரியாது போனை வெறித்து பார்த்த கணவனை தூங்குவது போல கிடந்த சீதா கவனிக்காத இல்லை ..

இதோ திருடன் அகப்படும் நாளும் வந்தது , அரவிந்த் வேலைக்கு அவசரமாக போனவன் போனை மறந்து அறையில் வைத்து விட்டு போக ..சமைக்க மனம் இல்லாது படுக்கையில் வந்து விழுந்த அவள் கண்ணில் அரவிந்த் போன் கிடைக்க.. இந்த நாளை எதிர்பார்த்து தானே காத்து கிடந்தாள்.. குதித்து போய் அதை எடுத்து உள்ளே போக 

சீசீ என்று ஆகி போனது ...

இவ்வளவு கீழ்தரமான ஒருவனா என் கணவன் என்று முகம் சுளிக்க வைத்தது எவளோ ஒருத்தியோடு அவன் பேசிய உரையாடலும் அவள் அனுப்பி இருந்த அசிங்கமாக விளக்கங்களும், இவன் அனுப்பிய படங்களும் அவள் அனுப்பிய வீடியோ என்று இருவரும் காமத்தின் சாக்கடையில் விழுந்து எழும்ப முடியாத ஆழத்துக்கு போய் இருந்தனர் 

உவாக் உவாக் என்று சீதாவுக்கு குமட்டி கொண்டு வந்ததது ... போன் முழுக்க கண்ட கண்ட படங்கள் கன்றாவியாக அவன் வாழ்ந்த ஒரு வாழ்க்கை ... 

அவன் கட்டிய தாலியே உடலில் அருவருப்பை ஒவ்வாமையை ஏற்படுத்த .. அவன் போனை வைத்து கொண்டு சிலையாக நின்றாள் ராமின் சீதா , 

சீதா சீதா என் போனை மறந்து வச்சிட்டு போயிட்டேன் பார்த்தியா ?என்று உள்ளே வந்த அரவிந்த் அவள் கையில் இருந்த போனை பதறி வாங்கி.. அதை பார்க்க கள்ள குடித்தனம் பண்ணிய சங்கதி திறந்து கிடந்தது..

அந்த பெண்ணோடு பேசிய உரையாடல் அவன் கைபட்டு ஓட ஆரம்பிக்க.. பதறி அதை நிறுத்தியவன் எதிரே உணர்வு செத்து நின்ற மனைவியை எச்சில் விழுங்கி பார்த்தான் ...இனி தப்பிக்க வழியே இல்லேயே !!

எந்த தவறுக்கும் மறுவாய்ப்பு கொடுக்கலாம்

துரோகத்துக்கு மறுவாய்ப்பு கொடுக்கவே கூடாது 

தவறு தெரியாது நடப்பது 

துரோகம் தெரிந்தே நடப்பது 

ஒருமுறை துரோகம் செய்பவன்(ள்)மீண்டும் செய்ய மாட்டாள்(ன்) என்று என்ன உர்ஜிதம் இருக்கிறது ....