பொய்9

Poi9

பொய்9

9 பொய்யில் ஒரு மெய் !!

இருவரும் தனித்தனியாக வக்கீல் ஆபிஸ் வந்து சேர்ந்தனர்.. வக்கீல் அழைக்க அரவிந்தும் உள்ளே போய் வக்கில் முன் அமர்ந்தான்...

சார் ஏற்கனவே போன்ல உங்கிட்ட எல்லாம் சொன்னதுதான் நீங்களே பேசி முடிச்சிடுங்க சார் என்றாள் சீதா தெளிவாக.... இனி முடிவில் தடுமாற என்ன இருக்கிறது துரோகம் ஆளை கொல்லும் விஷம், அதையே உண்டு விட்டால் இனி எதற்கும் கலக்கமில்லை...  

"ஓகே சீதா நீங்க வெளியே போங்க ..நான் சார்கிட்ட பேசிட்டு சொல்றேன் 

"ம்ம் என்று அவள் வெளியே போக.. தலையை தூக்கியே பார்க்காத அரவிந்தை சில நொடி கூர்ந்து பார்த்த வக்கீல் .. 

"வெல் , மிஸ்டர் அரவிந்த், உங்க பொண்டாட்டி வெளியே போய்ட்டாங்க .. இப்ப சொல்லுங்க கண்டிப்பா இந்த டைவர்ஸ் வேணுமா..

"ம்ஹூம் ..மறுத்து தலையாட்டினான்

"புரியல வாயை திறந்து சொல்லுங்க 

"சார் எனக்கு என் பொண்டாட்டி புள்ள வேணும் .. இந்த டைவர்ஸ் வேண்டாம் , அவகிட்ட எப்படியாவது பேசி இதை நிறுத்திடுங்க" என்ற அரவிந்த் குரல் உடைந்து சுக்கு நூறாகி வந்தது... விட்டால் அழுது விடுவேன் என்பது போல் தலையை குனிந்து அமர்ந்து இருந்தான்

"ரைட், உங்களுக்கு பொண்டாட்டி புள்ளையும் வேணும் அதே சமயம் அந்த பொண்ணும் வேணும் இல்லையா என்றவரை தலையை தூக்கி அவன் பார்க்க 

"20 வயசு பொண்ணு உங்களை அந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறா இல்லையா.. வெறும் உடல் சுகத்துக்காக தேடுற பொண்ணுக்காக உங்களுடைய பொண்டாட்டி பிள்ளைங்க இதையெல்லாம் ஏமாத்தி வாழ்ந்திருக்கீங்களே.. இத தப்புன்னு நான் சொல்ல விரும்பல, ஆனா உங்க மனைவி அத ஏத்துக்க முடியாம அழுறாங்க.. இப்ப கூட உங்களுக்கு ஒரு அவமானம் வந்துட கூடாதுன்னு நினைக்கிறாங்க.. அவங்க டைவர்ஸ் பண்ணிட்டு போன பிறகு வேணும்னா, நீங்க அந்த பொண்ண முறைப்படி கல்யாணம் கட்டி வாழலாம்னு சொல்றாங்க .. இதுவும் அவங்க எடுத்த முடிவுதான் .. 

"சார் நான் அலுத்து போயிட்டேன் , சலிச்சு போயிட்டேன்.. அதனால தானே அவர் இன்னொரு பொண்ண அதுவும் சின்ன பொண்ணா தேடி வாழ ஆரம்பிச்சிட்டார்.. எப்போ நான் இருந்த இடத்துல இன்னொரு பெண்ணை அவரால வைக்க முடிஞ்சதோ, அப்பவே நான் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் காணாம போயிடுச்சு.. எங்கே நம்பிக்கை இழந்து போயிடுச்சோ , இனிமே அந்த இடத்தில் நான் வாழ்ந்து எதுக்கு ? ஆனா நானும் ஒரு வகையில தப்பு பண்ணிட்டேன் , என் புருஷனுக்கு என்ன தேவை ஏது தேவைன்னு பார்த்தேனே தவிர அவருக்கு எப்போ எது தேவைன்னு நான் பாக்கல போல இருக்கு சார் ... நான் அவரை காய போட்டு இருக்கேன் .. அதனால அவர் எங்க செழிப்பான இடம் எங்க இருக்கோ அங்க தேடி போயிட்டார்.. 

அழாதீங்க சீதா.."

"முடியல சார் , எனக்கு என் குழந்தைங்க புள்ள குடும்பம் கௌரவம் எல்லாம் முக்கியம்னு நெனச்சேன்... ஆனா அவர் அப்படி நினைக்கல போல இருக்கு.. எப்போ நாங்க அவருக்கு வேண்டாம்னு தோணி அந்த பொண்ண நாடி போயிருக்காரோ, என்னை ஏமாத்திட்டு இத்தனை மாசமா அவ கூட வாழ்ந்து இருக்காரோ , அப்பவே எல்லாமே முடிஞ்சு போச்சு சார் .. இனிமே இந்த தாலியையும் குடும்ப வாழ்க்கையையும் புடிச்சு வச்சு எதுக்கு??.. சோ , அவரை நான் அவமானப்படுத்த விரும்பல.. அவர் எனக்கு செஞ்சது தப்பாவே துரோகமாக இருந்துட்டு போகட்டும்.. ஆனா அவர் சந்தோஷமாக இருக்கட்டும் சார்..

ம்ம் 

"டைவர்ஸ் ஆன பிறகு இன்னொரு பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டாருங்கிறது ,ஒன்னும் அவ்வளவு பெரிய அவமானம் இல்லையே.. இந்த சமுதாயத்துக்கு ஒண்ணும் பெண்களை குறை சொல்றது கடினமான வேலை கிடையாதே.. எல்லா பழியையும் நானே ஏற்றுக்கிறேன் அவர் அசிங்கப்படுத்தினால. நாளைக்கு என் பிள்ளைகளுக்கு ஒரு நல்லது கெட்டதுன்னு வரும்போது... பொண்ணுக்கு அப்பா கூத்தியா வச்சிருந்தானாம் அதனால தான் ரெண்டு பேரும் விவாகரத்து ஆகிடச்சான்னு கண்டதையும் பேசி அவ நல்ல வாழ்க்கையும் கெடுத்துடுவாங்க..

"எஸ் "

"அதனால என்ன நடந்ததுன்னு உலகத்துக்கு தெரியாத மாதிரி இந்த விவாகரத்து வாங்கி கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும், என்று கொட்ட கொட்ட வந்த கண்ணீரை சீதா லட்சுமி துடைத்துக் கொண்டே வக்கீலிடம் கூற 

அவருக்கே பாவமாகி போனது..

"பாருங்க சீதா லட்சுமி, விவாகரத்து பரஸ்பரமா வாங்கிக்கிறதுல ஒன்னும் தவறில்லை. ஆனா எல்லா குழம்பத்திற்கும் விவாகரத்து மட்டுமே தீர்வா ஆகாது.. உங்க புருஷன் தரப்பில் இருந்து இதுவரைக்கும் வாயைத் திறந்து எதுவுமே சொல்லல... ஒத்த பக்கத்துல உள்ள நியாயத்தை வச்சு எப்பவுமே தீர்ப்பு வழங்குறது சரியா இருக்காது... ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க சீத்தா ... உங்க ஹஸ்பண்ட் கிட்ட ரெண்டு வார்த்தை பேசி அவர் மனசுல என்ன இருக்குன்னு 

அவர் மனசுல என்ன இருக்கு, அதான் நான் இல்லைன்னு ஆகிப்போச்சே .. அந்த பொண்ணு தானே இருக்கு பின்ன இதுல பேசி என்ன இருக்கு சார்

"பொறுமையா கேளுங்கம்மா, நீங்க ஆயிரம் காரணம் சொல்ற மாதிரி, அவரு அட்லீஸ்ட் ஒரு காரணமாவது சொல்லுவாரு இல்லையா .. அத கேக்குறதுக்கு நமக்கு பொறுமை வேணும் இல்லையா.. சோ ப்ளீஸ் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க சார் கிட்ட பேசிட்டு உங்ககிட்ட முடிவு சொல்றேன்..

"நான் அவர் என்ன பேசுகிறாருன்னு கேட்க முடியுமா?? என்று தலையை குனிந்து கொண்டே சீதாலட்சுமி கேட்க

"உங்க நம்பருக்கு நான் போன் போடுறேன், அது வழியா சார் என்ன பேசுறாருன்னு கேளுங்க.. அவர் பேசுறத வச்சு உங்களுக்கு இதுதான் முடிவுன்னு தோன்றுச்சுன்னா இதையே நாம பண்ணிடலாம் ஓகேவா என்று வக்கீல் கூறவும் .. சீதாலட்சுமி தலையாட்டிக்கொண்டு வெளியே போக.. இருக்கையில் உலகம் இருண்டு போய் அரவிந்த் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான் .. அவளுக்கும் அவனை பார்க்க முடியவில்லை வெறுத்து போனது ...

நீயா இப்படி நீயா எனக்கு துரோகம் செய்தாய் ?? முகம் பார்த்து பேசவே தோணவில்லை... வெறுப்பின் உச்சியில் நின்றாள்.  

அவனுக்கும் தன் மனைவியை தலை தூக்கி பார்க்கவே இல்லை... தலை தூக்கி பார்க்கும் செயலொன்றும் அவன் செய்யவில்லையே... 

எத்தனை ஆழமாக நேசித்த தன் மனைவி, அவனும் நேசத்தில் குறைந்தவன் இல்லையே.. இப்போது கூட அவள் மீது உள்ள நேசம் குறையவில்லைதான் ஆனால் சறுக்கி விட்டானே என்ற அவமானம் தாங்க முடியவில்லை...

பிள்ளை மனைவி இவர்களில்லாமல் இன்னொரு வாழ்க்கை நினைத்துப் பார்க்கவே ஐயோ!! நெஞ்சே கலங்கியது.. கண்கள் எல்லாம் கட்டிக் கொண்டு அழுகை வரவா வேண்டாமா என்று இருந்தது...

"சொல்லுங்க அரவிந்த் என்ன முடிவு சொல்றீங்க... அந்த பொண்ணோட உள்ள ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிட்டு மறுபடியும் உங்க மனைவி கூட மனம் ஒத்து வாழ விரும்புகிறீர்களா? அரவிந்த் எச்சில் விழுங்கினான்

அந்த பொண்ணு கிட்ட பேச வேண்டியது, என் பொறுப்பு ... இனிமே உங்க குடும்பத்துக்குள்ள வராம நான் பார்த்துக்கிறேன்.. உங்களுக்கு சம்மமான்னு மட்டும் சொல்லுங்க அரவிந்த் அமைதியாக இருக்க 

"சார் இப்படி அமைதியா இருந்தா என்ன முடிவு தான் எடுக்கிறது.. ப்ளீஸ் ஓப்பன் யுவர் மவுத் , ஏதாவது சொன்னா தானே அதுக்கு ஏத்தாப்ப ஏதாவது பண்ண முடியும் .. இப்படி அமைதியாக இருந்தா உங்கள் வாழ்க்கை தொலைஞ்சு போகும்.. ஒரு முறை இழந்துட்டா வாழ்க்கையை மறுபடி தொட்டு பிடிக்க முடியாது சார் புரிஞ்சுக்கோங்க "என்ற வக்கீலை எச்சில் விழுங்கி பார்த்த அரவிந்த்

"சார் ஒரு பத்து நிமிஷம் உங்க கிட்ட பெர்சனலா பேசலாமா என்று நடுக்கமான குரலில் அரவிந்த் கேட்க 

"ம்ம் சொல்லுங்க என்ன விஷயம் ???போனை சீதா லட்சுமிக்கு போட்டு விட்டார் . இனி ஒளிவு மறைவுக்கு வேலையே இல்லை .. இருவரும் இலைமறை காயாகப் பேசிக் கொள்வதில் அர்த்தமும் இல்லை.. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என விஷயங்கள் வெளிப்பட்டால் தான் இதற்கு முடிவெடுக்க முடியும் என்பது வக்கீலின் கருத்து

அந்தப் பொண்ணு பேரு, ஹான் ஷில்பா, அது கிட்ட நான் வேணும்னா பேசவா.."

"சார் அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்ற அரவிந்த் திடீர் அந்தர்பல்ட்டியில் வக்கீல் மட்டுமல்ல, அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்த சீதாலட்சுமியும் அதிர்ந்து தான் போனாள்

"என்ன அரவிந்த் சொல்றீங்க ??!!

"ம்ம் அவளுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்ல 

"அப்போ உங்க போன்ல இருக்கிற மெசேஜ் ,சாட் இதெல்லாம் பொய்யின்னு சொல்றீங்களா? இல்ல உங்க மனைவி மேல தப்பு சொல்ல பாக்குறீங்களா?

"ஐயோ என் மனைவி சீதாங்குற பேருக்கு ஏத்தாப்ப சீதா தான் சார் ..அவளை நான் குறை சொல்ல மாட்டேன் , இப்பவும் தப்பு என் பேருல தான் அவளுக்கு துரோகம் செஞ்சது நான்தான்

"புரியலையே ஷில்பாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க .. ஆனா நான் மனைவிக்கு துரோகம் பண்ணிட்டேன்னு சொல்றீங்க.. அப்போ வேற எந்த பொண்ணு கூடையும் இல்லீகளா இருக்கீங்களா ? அரவிந்த் ஆமாம் என்றும் இல்லை என்றும் இரண்டு வாரியாக தலையை ஆட்டி வைக்க.. வக்கீல் தான் குழம்பி போய் தலையை சொரிந்தார்

"போன் உங்கூட சேட் பண்ணின பொண்ணு யாரு அரவிந்த் ?

அது அது ???

ப்ச் நீங்க டைவர்ஸே பண்ணிடுங்க கிளம்புங்க எவ்வளவுதான் அவரும் பொறுப்பார்

"சார் சார் எந்த பெண்ணும் இல்லை .. எனக்கு நானே தான் மெசேஜ் பண்ணிக்கிட்டேன்" என்று கூற ... கேட்டு கொண்டிருந்த இருவரும் அதிராது இருப்பார்களா 

வாட் ???

 "ம்ம் எனக்கு நானே பண்ணிக்கிற மெசேஜ் தான் அது ..நான் எந்த பொண்ணுக்கும் அனுப்பல யாரும் எங்கிட்ட தொடர்பும் வச்சிக்கல, என் மனைவி தவிர நான் யாரையும் தொட்டது இல்லை ... நானே என்ன எமாத்திட்டு இருக்கேன் சார் ..... 

ஏன் ? 

ஏன் ? 

ஏன் என்று சீதா லெட்சுமி கூட யோசனையாக நின்றாள்...

காதல் பஞ்சம் சார் ," என்றவன் தொண்டை அடைக்க கூறினான்....

காதல் பஞ்சமா??அப்படி என்றால் என்ன ?? 

பெண்ணுக்கு மட்டும் திருமணத்திற்கு பிறகு அன்பு குறை வருவது இல்லை ... ஆணுக்கும் சரி சமமாக அன்பில் குறை ஏற்படு.. ம் பெண்ணுக்கே தெரியாமல் ஆணுக்கான அன்பு குறை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், பெண் மட்டும் சகித்து வாழ்வது இல்லை... பல ஆண்களும் சகித்து பொறுத்து தான் வாழ்கின்றனர்.. 

அன்பில் இடைவெளி ஏற்படும் பொழுது அன்பில் குறை வரும் பொழுது, ஆண் ஒன்று அதற்கு பழகிக் கொள்கிறான் இல்லை , அதை பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது தடுமாறுகிறான்.. இல்லை எங்கு மாய அன்பு கிடைக்கிறது , எங்கு தனக்கான தேவைகள் நிறைவேற்றப்படுகிறதோ அங்கே சாய ஆரம்பிக்கிறான் ... 

நூறில் 50 விவாகரத்துகள் நடப்பதற்கு காரணம் அன்பு குறை!!  

அது ஆண் பக்கமும் இருக்கலாம் பெண் பக்கமும் இருக்கலாம்.. என் கணவன் என்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று பாதி பெண்கள் சொன்னால், என் மனைவிக்கு என்னை பார்த்துக் கொள்ள நேரமில்லை என்று பாதி ஆண்கள் சொல்லும் அளவிற்கு தான் நம் குடும்ப பின்னணிகள் இப்போது சென்று கொண்டிருக்கிறது..

அவனும் காதல் பஞ்சத்தால் நலிந்து போனான்..