மெய் பேசும் மித்தியமே-22

மெய் பேசும் மித்தியமே-22

மெய் பேசும் மித்தியமே-22

ரோஜாவை வசமாகப்பிடித்து சுவரில் சாய்த்த சூர்யா”ஏன் போற?எங்கே போற? என்னைவிட்டுப் போயிடுவியா நீ?”என்று அவளது கண்ணைப் பார்த்துக்கேட்டான்.

“ஏன் தாலிகட்டத் தெரிஞ்சவருக்கு நான் இங்க இருக்கேனா இல்லையான்னு பார்க்கத் தெரியாதா?அப்படியே எவளுக்கு வந்த விதியோன்னு போய் கவுந்தடிச்சுப் படுத்துக்கத் தெரியுதுல்ல இதையும் கண்டுப்பிடிக்கத் தெரியணும்”

“ஏன் நீயா வந்து பக்கத்துல படுக்கமாட்டியா என்ன?” 

“நான் எதுக்குய்யா உன் பக்கத்துல வந்து படுக்கணும்”

“நீதானே என் பொண்டாட்டி நீதான் என் பக்கத்துல வந்துப்படுக்கணும்”

“அதுசரி நான் எப்போ சொன்னேன் உன் பொண்டாட்டின்னு? நீயா தாலிகட்டினா, நீயா வந்து எங்கண்ணனுங்கக்கிட்ட சண்டைப்போட்ட அவ்வளவுதான்.அதுக்காகவெல்லாம் உன் பக்கத்துல நான் வந்து படுக்க முடியாது”

“ஓஹோ அப்போ நான் படுக்கவைக்க முடியும்ல?” 

“ஓஹோ அப்படி ஒரு நினைப்பு இருக்கோ? அப்படியெல்லாம் இங்க நடக்காது.நீ கட்டின கட்டாயத் தாலிக்காக ஒன்னும் இங்க வரலை.நாளைக்கு எங்கப்பாவுக்கு ஒரு தலைகுனிவு வந்திடக்கூடாதேன்னுதான் உன்கூட வந்தேன்.உன் பக்கத்துல படுக்கிறதுக்காக இல்லை”என்று உதட்டைச் சுழித்து சொன்னவளை கண்ணிமைக்காது பார்த்தான்.

அவனது பார்வையைத் தாங்கிக்க முடியாது தனது இமைகளைத் தாழ்தியவளுக்கு படபடவென்று நெஞ்சம் அடித்துக்கொண்டது.

அப்படியே அங்கிருந்து நகர்ந்துப்போக எத்தனித்தவளின் இருபக்கமும் கைகளை ஊன்றி போகவிடாது தடுத்தான்.

ரோஜா மெதுவாக தனது கண்களை சுழற்றி ஏறிட்டு சூர்யாவைப் பார்த்தாள்.

“என்னடி பார்வை இது?ம்ம்ம்?”என்று கொஞ்சம் கிறக்கமான குரலில் கேட்டான்.

அந்தக்குரலில் மாற்றம் உணர்ந்தவள் “ரோசா ஓடித்தப்பிச்சிரு.இவன் உன்னைய மொத்தமா இன்னைக்கே ஆட்டையைப்

போட்டுருவான்போல.இடங்கொடுக்காத பட்டுரோசா!”என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டாள்.

“என்ன அமைதியா நிக்கிற பட்டுரோஜா?எப்படி இவன்கிட்ட இருந்து இன்னைக்குத் தப்பிக்கலாம்னு யோசிக்கிறியா?”என தனது ஒரு விரலால் அப்படியே கன்னத்தில் கோடிழுத்தவாறே கேட்டான்.

அவனது விரல் கன்னத்தில் படவும் உடல் உதறல் எடுத்தது.அதை காட்டிக்கொள்ளாது தனது உதட்டை உள்ளாக மடித்துக் கடித்துப்பிடித்தவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவள் முகத்தைத் திருப்பவும் கன்னத்தில் பச்சக்குன்னு முத்தம் வைத்து அப்படியே ஒட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

அவளோ ஐயோ என்று முகத்தைத் திருப்பி அவனைப் பார்க்க முயன்றாள்.அதில் அவளது உதடும் அவனது உதடும் உரசிக்கொண்டது.

ரோஜாவின் இதழ்கள் அதில் அதிர்ந்து உணர்வில் துடித்தது.அதன் துடிப்பை சூர்யா உணர்ந்தான்.அவனது கண்கள் பளபளவென்று மின்ன சந்தோசத்தை தனது கண்களை விரித்தவன் தனது உதட்டை விரித்து அப்படியே அவளது இதழ்களை கவ்விப்பிடித்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

அவனது கைகள் அவளது தோளில் விழுந்தது”என்ன பண்றாரு இந்த டாக்டரு?” என்று அவள் யோசித்து முடிக்கும் முன்னே அடுத்தக் கையால் அவளது பின் கழுத்தைத் தாங்கிப்பிடித்துக்கொண்டான்.

ரோஜாவால் அதைத்தடுக்கமுடியாது போனதுமட்டுமல்லாது, அவளது உடலோ அவன் கொடுத்துக்கொண்டிருக்கும் முத்தத்தை தனக்குள் வாங்கியது. அப்படியே கண்கள் இரண்டும் உணர்வில் சொருக கிறங்கி மயங்கி அப்படியே நின்றிருந்தாள்.

அவனது உடல் முழுவதும் அவள்மேல் அழுந்தி பதிந்திருக்க அவளுக்கோ அவனது உடல் உணர்வைத் தூண்டுமளவிற்குய் தீண்டியிருந்தது.

அவளது மொத்தமும் ஒற்றை முத்தத்தில் வலுவிழந்து கைகாளெல்லாம் தளர்ந்ததுபோன்று உணர்ந்தாள்.

அவனும் அதைப் புரிந்துக்கொண்டு அவளது தோளில் இருந்துக் கையை மெதுவாக கீழிறக்கினான்.அவளது இடையில்போட்டுப் பிடித்து தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

முத்தம் மொத்தமாக அவளைத் தீண்டிச் சாய்த்திருக்க, கண்கள் மயக்கத்தில் மூடியவாறே அப்படியே அவனோடு இணைந்து இசைந்து நின்றிருந்தாள்.

இப்போதைக்கு இதுபோதுமென்று நினைத்தவன் அவளது உதட்டில் இருந்து தனது உதட்டை விலக்கி எடுக்கவும், தனது கண்களை மெதுவாகத் திறந்து அவளையே பார்த்திருந்தாள்.

அவளது விழிகளில் ஏன் விலகின?என்ற கேள்விதான் தொக்கி நின்றது.அவளது விழிமொழியைப் படித்தவன் மெதுவாக அவளது ஈர உதட்டை தனது விரல்கொண்டுப் பிடித்து வருடியவன் கண்களாலயே அவளை மொத்தமாக சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவனது கண்களின் பாஷையில் அப்படியே சொக்கிப்போனவள் ‘இப்படியே டாக்டரு நம்மளை மொத்தமா தின்றுவாரு போல.ஐயோ நானே இந்தப்பார்வையைத் தாங்கிக்க முடியாமதான் திணறிட்டிருக்கேன்.இப்படி பார்க்காதாய்யா டாக்டரு.என்னால விலகிப்போக முடியல.ஏதோ ஒன்று உன்கிட்ட என்னை இழுக்குது’என்று நினைத்தவாறே திணறிப்போய் நின்றிருந்தாள்.

“என்னம்மா ரோசா இந்த மச்சானைப் பத்தி மனசுக்குள்ள நிறைய யோசிச்சிட்டிருக்க போலிருக்கு”

“எந்த மச்சானையும் நினைக்கலை?”

“இந்த மச்சானை பத்தி நினைக்கிறியோன்னு சொன்னேன்”

“நீங்க எனக்கு மச்சானா?”

“பின்ன இல்லையா அதுதான் தாலியை பெருசா போட்டிருக்கனே.உங்க ஊர்ல புருஷங்களை மச்சான்தானே சொல்லுறாங்க.நீயும் சொல்லு”

“அப்படியெல்லாம் சொல்லமுடியாது”

“ஏன்?”

“எனக்கு அப்படிக்கூப்பிடத் தோணலை.தாலிக்கட்டி முழுசா ஒருநாளுக்கூட ஆகலை.அதுக்குள்ள மச்சான்னு கூப்பிடணுமாம்ல.ரொம்பத்தான் பேராசை”என்று பேச்சை வளர்த்துக்கொண்டிருந்தாள் ரோஜா.

அப்போதான் பேசியே விடிஞ்சிரும்,டாக்டரு ஆளைவிட்றுவான்னு அவள் ஒரு திட்டம்போட்டாள்.

“அதைக்கேட்டவன் அதுக்கான அச்சாரத்தை தண்ணிக்குள்ள அன்னைக்கே போட்டுட்டனே.உன்னை தண்ணிக்குள்ள வைச்சே முழுசா பார்த்தவன்டி நானு.அப்போத்துல இருந்து எப்போட இவக்கழுத்துல தாலியைக்கட்டலாம்னு காத்திருந்தேன்.அதை இன்னைக்கு நடத்திட்டேன்.உன் மனசைத் தொட்டுச்சொல்லு உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு”

“அது அது” என்று ஏதோ சொல்ல வந்து முடியாது வாயை மூடிக்கொண்டாள்.

அவ்வளவுதான் கொஞ்சம் கோபத்தில் அவளது முகத்தை இழுத்துப்பிடித்து அப்படியே பார்த்தவன்”என் மேல உனக்கு ஆசையில்லைன்னு சொல்லுடி?உன் கண்ணுலயும் மனசுலயும் என் மீதான காதல் நிறைஞ்சு நின்னதைப் பார்த்துட்டுத்தான் தைரியமா இந்தத் தாலியைக் கட்டினேன்.அப்போ குழந்தை இருந்தா அந்தக் காதால் காணாமல் போயிடுமா?உண்மையான காதல் இல்லை.இவனா வந்தா கட்டிக்கலாம் அப்படிங்கிற மாதிரிதான உன் ஆசை என்மேல இருந்துச்சா?”என்று வெடுக்கென்று கேட்டான்.

அதைக்கேட்டவளுக்கு கண்ணீர் சட்டென்று திரண்டு இமையோரம் நின்றது.ஆனால் பதிலேதும் சொல்லாது அவனது கைகளைத் தனது முகத்தில் இருந்து தட்டிவிட்டு விலகிப்போனாள்.

அவளை விலகவிடாது அப்படியே இழுத்துக் கட்டிலால் தள்ளியவன் அவளோடு சேர்ந்து தானும் படுத்துக்கொண்டு அவளை அசையவிடாது பிடித்துக்கொண்டான்.

“என்கிட்ட இருந்து விலகிப்போனதுக்கு காரணம் சொல்லுடி?” 

ரோஜா பதிலே சொல்லாது தூங்கும் பூஜாவினை இழுத்து தன்பக்கம் படுக்கவைத்துவிட்டு,கண்களை மூடிக்கொண்டாள்.

சூர்யாவுக்கு அவள்மேல் கோபப்படணும்னு இல்லை.ஆனால் அவள் விலகி விலகிப்போகவும் லேசான கோபம் எட்டிப்பார்த்ததில் பேசிவிட்டான்.

இப்போது அதை உணர்ந்தவன் அவளது இடுப்பிலூடே கைகளைப் போட்டு அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தான்.

அவளிடம் இருந்து எந்தவிதமான எதிர்வினையும் வரவில்லை என்றதும் அப்படியே நெருங்கிப்படுத்தான். ஒன்றுமே பேசாது அவளது கழுத்தோரம் முத்தம் வைத்தான்.

சூர்யாவின் சூடான உதடுகள் அவள் கழுத்தில் பட்டதும் சட்டென்று அதிர்ந்து முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.

அந்தக் கண்களையும் அவளது நிர்மலமான முகத்தையும் பார்த்தவனால் தன்னையே கட்டுப்படுத்த முடியாதுபோனது.

காதல் உணர்வில் கொந்தளித்தவன் ஒன்றுமே பேசாது அவளது உதட்டை அப்படியே கவ்விக்கொண்டான்.

அவள் துடித்து விலக அவனது கைகளோ அவளது இடுப்பில் அழுத்தி விரல்களால் பதம்பார்த்து தன்னோடு இழுத்து சேர்த்துக்கொண்டான்.

இதற்குமேல் அவளாலும் அவனைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது திணறினவளின் உதடுகள் அவனுக்குக் காதல் உணவாகின.

அவ்வளவு மென்மையாக தன்னையும் தான் அவள் மீது வைத்திருக்கும் காதலையும் வெளிப்படுத்துவது போன்று அவன் முத்தம் கொடுத்தான்.

ரோஜாவின் கண்களோ அவன் உதட்டைக் கடித்ததுமே மூடிக்கொண்டன.மூடியக்கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

அதைப்பார்த்தவன் மெதுவாக துடைத்துவிட்டு”இப்போ உனக்கு ஒரு சந்தர்ப்பம் தர்றேன்.என்னைப் பிடிக்கல,நான்வேண்டம், நான் கட்டினதாலி வேண்டாம்னா இப்பவே எழுந்து உன் வீட்டுக்குப் போயிடு.அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.நீ என்கிட்ட நெருங்காத.நானும் உன்கிட்ட நெருங்கமாட்டேன்”என்றவன் அவளிடமிருந்து விலகிப்படுத்துக் கண்களை மூடிக்கொண்டு கைகளை நெற்றியில் வைத்து அப்படியே படுத்திருந்தான்.

அவன் சொன்னதைக் கேட்ட ரோஜாவோ எழுந்து உட்கார்ந்தாள்.அவள் தன்னருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கண்ணைத் திறந்தான்.

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுதுய்யா?ஊருக்கு வந்ததுல இருந்து கண்ணடிப்பியாம், முத்தம் குடுப்பியாம்.உன்னை நம்பி மனசுல ஆசையை வளர்த்தா நீ பிள்ளையோடு வந்து நிப்பியாம்.அதைப் பார்த்து வேதனையோடு ஒதுங்கிப்போனால் நீயா திட்டம்போட்டுக் கட்டம் கட்டித் தாலிக்கட்டுவியாம்.இதையெல்லாம் ஏத்துக்கிட்டு அமைதியா உன்கூடவந்தா தொடுவியாம்.அதை வேண்டாம்னு விலகிப்போனா எனக்கே நேரம் தந்து விலகிப்போனும்னா போன்னு சொல்லுவியா?டேய் டாக்டரு பொளந்துடுவேன் பொளந்துப் பார்த்துக்க”என்று கையை நீட்டி எச்சரித்தவளைப் பார்த்து சத்தமாகச் சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிற?சிரிக்காத கொன்னுடுவேன்”என்றவளின் கையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டான்.

“உன்னால் என்னைவிட்டுப் போகமுடியாதுன்னு தெரிஞ்சுதான்டி போகச்சொன்னதே.இப்படி போறதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை என்னவளாகக் கொண்டுவந்திருக்கேன்”என்றவன் அவளது கையில் முத்தம் கொடுத்தான்.

“நீ எதுவும் சொல்லவேண்டாம் போய்யா”என்று அவனது நெஞ்சில் கையால் அடித்தாள்.

அதை வாங்கிக்கொண்டவன் புன்னகையோடு அவளது கையை மீண்டும் பிடித்து இழுத்து கட்டிலில் போட்டவன்,அவள் மேல் சரிந்துப்படுத்துப் பிடித்துக்கொண்டான்.

இருவரது கண்களும் மற்றவர்களைப் பார்வையாலயே கொய்துக்கொண்டிருக்க, சூர்யா மெதுவாக அவளது உதட்டில் தனது விரல்வைத்து தடவிக்கொடுத்தான்.

அவளோ உதட்டை சுழிக்க அவ்வளவுதான் அவளுக்குள் மூழ்க பாய்ந்துவிட்டான்.

இருவருக்குள்ளும் வாய் வார்த்தைகளோ, சத்தியங்களோ, வாழ்க்கையில் நடந்தவைகளோ கடந்தகாலமோ எதுவுமே பங்கிடப்படவேயில்லை.

அப்படியே ஒருவர் மற்றொருவரை நம்பிக்கையினாலும் காதலினாலும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

சூர்யாவின் கைகள் தானாகவே அவளது உடலுக்குள் தனது தேடலைத் தொடங்கியிருந்தது.ரோஜாவுக்குமே அவனைப்பிடிக்கும்,இப்போது இவன்தான் தனது எதிர்காலம் என்று வாழவந்திருப்பதால் வேறு எதையுமே கேட்டு அவனை வருத்தப்படுத்தாது அப்படினே அவனை அவனாகவே ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.

ரோஜாவின் வாசனையில் தன்னைத் தொலைத்தவன் அவளது கழுத்தில் தனது மீசை உரச முத்தம் கொடுத்தான்.

அதில் முற்றிலுமாக மயங்கித் தள்ளாடிய ரோஜா அவனது தோளைப்பிடித்து தன்னை நிதானப்படுத்தினாள்.

“எவ்வளவு வாசமா இருக்கத் தெரியுமாடி அப்படியே உனக்குள்ளயே இருந்திடலாம்னு தோணுது” என்று அவளது காதில் சொன்னவன் அவளது காது மடலில் முத்தம் வைத்தான்

அதில் சிலிர்த்தவள் ஹ்ஹ்ம் என்று முணங்க அவனது தோளில் தலைசாய்த்தாள்.அதுபோதுமே அவனுக்கு புகுந்து விளையாடிடுவானே!

சூர்யா ரோஜாவின் காதில் :ரோஜாவினை திறந்துப்பார்க்கட்டுமா?”என்று மெதுவாக குரல் தாழ்த்தி கேட்டான்.

அவளோ தனது இமையைத் தாழ்த்தி சம்மதம் சொல்ல டாக்டரு தனது வேலையை வேகவேகமாகத் தொடங்கினான்.

ரோஜாவின் மொட்டுக்களை சட்டென்றுப்பிடித்துக் கடித்துவைக்க அவள் துடித்து துள்ளிவிட்டாள்.

“என்னடி?”என்று பாவமாக முகத்தை வைத்துக்கோண்டுக் கேட்டான்.

அதைப்பார்த்தவளுக்கு சிரிப்புத்தான் வந்தது”அடேய் இந்த மூஞ்சியை மட்டும் எப்படி இப்படி வைச்சிருக்க?செய்யுறதெல்லாம் செய்துட்டு இப்படி பாவமாக பார்க்கிற?”என்றவள் அவனது முடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

அவள் சும்மா இருந்தாளே சூர்யா மொத்தமாக முடிச்சிட்டுத்தான் சும்மா இருப்பான்.இப்போ அவளே முத்தம் குடுத்தா சும்மாவா இருப்பான்?அவளை மடக்கிப்பிடித்து கன்னத்தைக் கடித்துவைத்தான்.

அவள் வலியில் துடிக்கும்போதே கன்னத்திலிருந்துக் கழுத்திற்கு வந்தவனது கைகள் அவள் உடுததியிருந்த புடவையை மொத்தமாக கழட்டினான்.

ஐயோ என்று அவள் பிடிப்பதற்குள் மொத்தமாக உருவி எறிந்தவனது கைகள் மொத்தமா அவளது அங்கங்களைபதம் பார்த்தான்.

இத்தனை நாளும் தமக்கும் உணர்வுகள் உண்டோ என்றிருத்தவளின் காதல்மொட்டுக்கள் மலர்ந்து வெடித்து சிதறியதில் பூரித்து அவனையே பார்த்திருந்தாள்.

“என்னமா?”என்று அவளது முகத்தை தாங்கிப்பிடித்து கண்களில் முத்தம் வைத்துக்கேட்டான்.

அவ்வளவுதான் உடைந்துவிட்டாள்.அவனது கைகளைப் பிடித்தவள் முத்தம் வைத்து தனது கன்னங்களில் வைத்துக்கொண்டாள்.

அவளது நிலை என்ன அவனுக்குப் புரிந்தது.உடனே அவளது காதில் “ஓய் நான்தான் இந்த ரோஜாவின் ராஜா.நான் தொட்டா மட்டும்தான் இந்த ரோஜா மலரும்.இப்போ மலருது அவ்வளவுதான்.என் உயிர் நீ.உன் பாதி நான்.இதுக்குமேல எதையுமே யோசிக்காத புரியுதா?”

அதைக் கேட்டதும் கண்ணீர் கன்னத்தில் கரைபுரண்டோட அவனது நெஞ்சில் முத்தம் வைத்தாள்.

“ஆஹா! முத்தம் கேட்காமலயே கிடைக்குதே! சூர்யா மொத்தமா அள்ளிடுடா” என்றவன் அவளைத் தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டான்.

இருவரது முகமும் பூரிப்பில் பூத்துச்சிரிக்க காதலும் வெட்கப்பட்டு இடையில் நின்றது.அந்தக்காதலின் ஆழத்தைப் பார்க்க கண்கள் அவளது உடலில் தனக்கானதைத் துலாவித்தேடியது.கைகளோ அதைத்தொட்டுப்பிடித்து விளையாடத்தொடங்கியது.

ரோஜாவின் இதழ்கள் வழியாக கள்ளுண்ணத் தொடங்கியவன் காதலையும் அவளையும் சேர்த்து சுவைக்கத்தொடங்கினான்.

அவனது கைகளுக்கு வழிவிட்டு தன்னை அவனிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்து மொத்தமாக சூர்யனின் கதிரைத்தாங்கும் ரோஜாவாகிப்போயிருந்தாள்.

ஆக்ரோஷமான ஆழமான ஒரு காதலின் முழுநிலையை இருவரும் எட்டியிருந்தனர்.

இதுபோதுமே டாக்டருக்கு.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சூர்யபிரகாஷா?