என் இனிய விவாகரத்தே 2

Divorce 2

என் இனிய  விவாகரத்தே 2

2 என் இனிய விவாகரத்தே!! 

ஏய் இஇஇஇஇஇஇஇஇஇ அதிசயமாக இரவு வீட்டில் வந்து நின்ற பிராபவை ஹாலில் உட்கார்ந்து மகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்த புகழினி அண்ணாந்து பார்த்தாள் , அவள் முகத்தில் அவன் வீசி எறிந்த விவகாரத்து நோட்டீஸ் வந்து விழுந்தது ..

என்னடி இது ? ஆங்காரம் குறையாது சீறினான்...

ஏன் படிக்க தெரியாதா தீபக்..

என்னடி பேரு சொல்லி கூப்பிடுற அளவுக்கு திமிரு வந்திடுச்சா? எவன் கொடுத்த தைரியத்துல டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்க .... மனைவி மனைவியாக வேண்டாம் ஆனால் கெளரவம் தர வேண்டும் சமையல்காரியாக வேண்டும் கட்டி அணைக்க பெண் இல்லாத நேரம் தாசியாக வேண்டும் தடுமாறும் போதும் தாங்கி பிடிக்க தாதியாக வேண்டும் அதற்கு அவள் வேண்டுமே!! 

என் கள்ள புருசன் கொடுத்த தைரியத்துலன்னே வச்சிக்கோங்க தீபக் .... இந்த கல்யாண வாழ்க்கையே வீண்னு ஆன பிறகு , ங்க என்னங்க என்ன மண்டாங்கட்டிக்கு தீபக் ... 

உன்ன அழகுக்கு அடுக்கி வைத்திருந்த பொருள் எல்லாம் அவள் அருகே வந்து விழ 

2 ப்ளஸ் 2 என்ன ?ஒழுங்கா போடு யாழினி வேடிக்கை பார்க்காத என்று அங்கே ஆறடி உயரத்தில் மூர்க்கம் நிறைந்த கண்ணோடு நின்ற கணவனை பொருட்டாக மதிக்காது, மகளை நோக்கி திரும்பி கொண்டாள் ..

பெண்களுக்கு சாதகமாக சட்டம் இருக்கும்னு நினைச்சு இதை எல்லாம் செய்றியா, இல்லை ஜீவனாம்சமா என் கிட்ட பல கோடி கறக்க ட்ரை பண்ணுறியா ?

ஏன் கறந்தாலும் தப்பு இல்லையே .... உங்களால இழந்தது என்ன ., அதுக்கு விலை உங்க ஆஸ்தியை வித்தாலும் எனக்கு கொடுக்க முடியாது " என்று மகளை தூக்கி கொண்டவள் அவனை தாண்டி போக போக அவள் மணிக்கட்டை பிடித்து தடுத்த பிரபா....

"அசிங்க பட போறது நீதான் நான் இல்லை " அவன் போட்டு வைத்திருக்கும் நல்லவன் சாயம் வெளுத்து போகுமே என்று சற்று பயம்தான்... 

"உன்ன மாதிரி ஒரு அசிங்கத்தோட வாழ்றது விடவா இனி ஒரு அசிங்கம் வந்திட போகுது .... என்று அவன் கையை உதறி விட்ட புகழினி , அவன் தொட்ட கையை புடவையில் துடைத்து கொண்டு தனி அறை உள்ளே தாயும் மகளும் நுழைந்து கொண்டனர்...வெகு நேரம் பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்டது , அவன் கார் புறப்படும் சத்தமும் கேட்டது 

அவ்வளவு தான் இனி சுதந்திர பறவை அவன் கவலை மறக்க பெண் பறவை தேடி போயாச்சு" என்று மெலிதாக சிரித்து கொண்டவளுக்கு அவன் செயல் வலிக்க வில்லை , தெளிவான முடிவு எடுத்த பின்பு நிம்மதியாக தூங்க கண் சொக்கியது.... 

காலில் இரும்பு குண்டை கட்டி கொண்டே நடந்து கொள்கிறேன் என்பதும் 

காலில் கட்டிய இரும்பு குண்டை கழட்டி விட்டு நடக்க போகிறேன் என்பதும் அவரவர் சுயவிருப்பத்தை பொறுத்தது.. 

விவாகரத்து விவாகத்தை மட்டும் ரத்து செய்வது இல்லை... தேவையில்லா பல வலியையும் ரத்து செய்யும் என்றால் ,அதை தேர்ந்தெடுப்பதில் தவறு இல்லையே !! 

அன்று பார்த்த கணவனை அதன் பின்பு பார்க்க அவளுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை ... அவன் வீட்டில் தான் இருந்தாள் .... ஆனால் அவன் மனைவி என்ற வேலையில் இருந்து ஓய்வு பெற்று கொண்டாள் ... உனக்கு சமைச்சு கொடுக்க வேலைக்காரி போதும் உன் படுக்கை தேவையை பூர்த்தி செய்ய விபச்சாரி போதும் என்றால் உனக்கு ஏன் மனைவி என்று தன்னை முழுதாக அவனை விட்டு விலக்கி கொண்டாள் ...  

அவளின் தாய் தகப்பனுக்கு செய்தி பறந்தது கணவன் தான் போட்டு கொடுத்து விட்டான் புரிந்தது 

"எல்லாம் மாறும் இனியா, இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணாத" அவள் தாய் உபதேசம்

"இதுக்கா கோடியை கொட்டி கொடுத்து உன்ன கட்டி கொடுத்தோம்" அவள் தகப்பன் அங்கலாய்ப்பு 

"வெட்டிட்டி வந்து வீட்டோட இருக்க போறியா?? விளங்கிடும்" அண்ணியின் கார பேச்சு 

"இத்தனை நாள் இல்லாம இப்ப என்ன புதுசா இப்படி பண்ற ஊரே கைகொட்டி சிரிக்கும் தேவையா ?அண்ணனின் எரிச்சல் குரல் 

"நான் உங்க யார்கிட்டேயும் அனுதாபமோ, உதவியோ ,பாதுகாப்போ கேட்கவே இல்லையே முடிவு எடுத்தது நான் , என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்றாள் புகழினி தெளிவான அமைதியான குரலில் ... 

"உன் வாய்க்குதான் இப்படி சீரழியுற" தாயின் குத்தல் வந்தது 

"இப்படியே மருமகன் கிட்ட பேசினா அவருக்கு எப்படி உன்ன பிடிக்கும்" தகப்பன் கண்டனம் வந்தது ..

"நீயே முடிவு எடுத்தா , இனி எதுக்கும் இந்த வீட்டு பக்கம் வர கூடாது , சொத்துல பங்குன்னு வந்து நிக்காத"அண்ணி கிடைச்சது லாபம் என்று எரியும் வீட்டில் ஆதாயம் தேடியது ...

"மானத்தை வாங்கியே தீருவேன்னா வாங்கு வேற என்ன செய்ய "கைகழுவிய அண்ணன்.... 

"இவ்வளவு யோசிக்கிற உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது யோசிக்க தோணவே இல்லல்ல என்ற புகழினி குற்றசாட்டில் பேரமைதி !! 

"என் குடும்பம் எனக்கு கெட்டது செய்யாதுன்னு நம்பி இவனை கட்டிக்கிட்டது தான் நான் செஞ்ச தப்பு என்றவளுக்கு தொண்டை உள்ளே இரும்பு குண்டு முட்டியது.. 

"எல்லாரும் பொண்ணு நல்லா இருக்கணும்னு தான் கட்டி குடுப்பாங்க, ஒன்னு ரெண்டு நாம நினைச்சது போல இல்லைன்னா தாய் சப்பை கட்டு கட்ட பார்க்க 

ம்ம் சொல்லும்மா உன் புருசன் ராத்திரி ஆனா வேற பொண்ணு கூட கூத்தடிச்சுட்டு வந்தா ஒத்துப்பியா?? 

சரிடி தப்புதான் மன்னிக்க கூடாதா? "

"தெரியாம செஞ்சா மன்னிக்கலாம் ,மறக்கலாம் அந்த நாய் ஆம்பளைங்கிற திமிர்ல பண்ணிட்டு இருக்கான் .... இன்னைக்கு வீட்டுக்கு வெளியே பண்றார் , நாளைக்கு வீட்டுக்கு உள்ளேயே கண்டவளுகள கூட்டிட்டு வருவான்... எல்லாத்துக்கும் மண்டையை ஆட்ட சொன்னா... நான் அவனை விட கேடு கெட்டவ ஆகிடுவேன் இப்படி வாழ எனக்கு முடியாதும்மா .... என் வழியை நான் பார்த்துக்கிறேன், நீங்க எல்லாரும் நல்லா இருங்க போதும்" என்று புகழினி போனை வைத்து விட்டாள்...

இப்படியான பதில்கள் தான் தன் குடும்பத்திடம் இருந்து வரும் என்று அறிந்ததுதான் ... அதற்காக வேறு கவலை படணுமா ப்ச் போங்கடா என்று நொந்து கொண்டாள்.. சொம்பு இல்லாம பஞ்சாயத்து பண்ணவ குடும்பத்துல நாலு முழு நேர ஜாப்பா வச்சிட்டு திரியும்ங்க, உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்பது போல உங்க குடும்பத்துல பிரச்சனையா நான் தீர்த்து வைக்கிறேன்னு ரெண்டு சொட்டையும் நாலு தொப்பையும் வருமே... புகழினிக்கு மூளை சலவை செய்ய இருபக்க உறவின்முறையில் சிலரும் வர .... இவள் யார் பேசுவதற்கும் பதிலே கொடுக்காது அமைதியாக இருந்தே சாதித்தாள்..... 

"உன் பிள்ளைக்கு அப்பா வேண்டாமா!? கடைசி அஸ்திரம் விட்டுபார்க்க

"பாஞ்சி பாஞ்சி அப்பா கடமை செஞ்சு கூன் விழுந்து கிடக்கார், புள்ளை பேருக்கு ஸ்பெல்லிங் சரியா சொல்ல சொல்லுங்க பாப்போம்...

"அது ஆம்பளைன்னா "என்று அவர் தொடங்க 

"ஆம்பளைன்னா அவனுக்கு மட்டும் ரெண்டு இதயம் நாலு லீவரா இருக்கு..... அவனும் மனுசன் தான என்றவள் பேச்சுக்கு பதில் சொல்ல தெரியாது பஞ்சாயத்தை பாயில்காட் பண்ணிய மீசைகள் பல....   

இப்படியே விவாகரத்து கேஸ் ஹியரிங் நாளும் வந்தது ... கோவிலுக்கு கூட இத்தனை ஆண்டுகளில் சந்தோசமாக கிளம்பியது இல்லை இன்று கிளம்பினாள்.... பச்சை காட்டன் புடவையை கட்டி கொண்டவள் தன் கருப்பு விழுந்த கண்களை கண்மை இட்டு சரி செய்து பூவை தலைநிறைய சூடி கொண்டாள்.... ஆட்டோ பிடித்து அவளும் மகளும் குடும்ப நீதிமன்றம் வந்து சேர்ந்தனர்.... 

ஜட்ஜ் தன் எதிரே அமைதியே உருவாக நின்ற புகழினியை கூர்மையாக பார்த்து கொண்டு இருந்தார்

"இப்படி அமைதியா நின்னா என்னம்மா அர்த்தம் ஏதாவது வாயை திறந்து சொல்லு... நீதான் விவாகரத்து வேணும்னு கேஸ் பைல் பண்ணி இருக்க ... நீதான பண்ணின ? கேள்வியாக அவளை பார்க்க புகழினி தன் எதிரே நின்ற கணவன் பிரபாவை ஒரு நிமிடம் ஆழ பார்த்தாள் ... அதில் அவளுக்கு கட்ட போகும் பல வேசி பட்டம் தெரிந்தது உதட்டை வளைத்து சிரித்தாள்...  

சொல்லும்மா நீதான டைவர்ஸ் அப்ளை பண்ணினது ?

"ஆமா மேடம் 

"என்ன காரணம் உன் கணவன் அந்தஸ்துல உயர்ந்த இடத்துல இருக்கிறவர் மரியாதைக்குரியவர்.... இப்படி டைவர்ஸ் வேணும்னு கேட்க என்ன காரணம் ....

"வேணுங்கிறதுதான் காரணம் மேடம்  

"உன்ன அடிச்சு காய படுத்தினாரா??

இல்ல 

"

தண்ணீ, போதை அப்படி எதுவும் "

"நோ மேடம் 

"அப்பறம் வேற எந்த பொண்ணு கூடவாவது தப்பான உறவு 

"இல்லைங்க மேடம் என்ற மனைவியை பிராபவே சற்று யோசனையாக பார்த்தான் ... 

"பின்ன என்னதான் காரணம், இதை தவிர டைவர்ஸ் வாங்க கொடுக்க என்ன காரணம் இருக்க போகுது ஜட்ஜ் சலிக்க

 இருக்கே மேடம் ... 

"இருக்கா 

"ம்ம் அவரால என்ன படுக்கையில ஒருநாள் கூட திருப்தி படுத்த முடியல என்றவள் பேச்சு புரியாது அத்தனை பேரும் பே என்று பார்க்க 

"புரியல ம்மா என்ன சொல்ற? 

"கல்யாணம் முடிஞ்சு ஐஞ்சு வருசம் ஆகுது, ஆனா ஒருநாள் கூட என்ன படுக்கையில திருப்தி படுத்தியது இல்லை ஆம்பளன்னு சொன்னா மட்டும் போதுமா மேடம் ... குழந்தை கொடுத்தா ஆம்பளையா?? என் கிட்ட அத்தனை சுகமும் வாங்க தெரிஞ்சதுல்ல , அதுல பாதி விடுங்க கால்வாசி கூட கிடையாது, ஒரு பெண் அந்த நேரம் என்ன சுகம் அடைவான்னு கூட எனக்கு தெரியாது மேடம்" என்று சொன்ன புகழினி குற்றசாட்டில் ஆண் என்று கர்வம் கொண்டு மார் நிமிர்த்தி அலைந்த பிரபா முகத்தில் அவமானம் தாண்டவம் ஆடியது முகத்தில் ஈ ஆடவில்லை

"என்னம்மா செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா ?" ஜட்ஜ் ,என்ன பொண்ணுடா இது என்பது போல அவளை பார்த்து வைக்க ...

"ஒரு பொண்ணு ஆணுக்கு தேவையானது கொடுக்கலைன்னா இந்ந சமூகமும் சட்டமும் இதே போல கேட்குமா மேடம் ?? ஒரு பெண் மலட்டு தன்மையோட இருந்தா அதை ஆணும் குடும்பமும் ஏத்துக்குமா மேடம் என்று இத்தனை நாள் பதுங்கியவள் சீறி பாய கோர்ட் நிசப்தம் நிறைந்து போனது ...

ஏய் இஇஇஇஇஇஇஇஇஇ சீசீ எல்லாம் பொம்பளயா என்று பிரபா சீற

"ஸ்ஊஊஊ ஒரு பொண்ணை திருப்தி படுத்த முடியாத நீயெல்லாம் ஆம்பளையான்னு கேட்க ரெண்டு நிமிசம் ஆகாது தீபக் என்று புகழினி அதே போல சீற 

சயிலண்ட் சயிலண்ட் !!! என்ற ஜட்ஜ் கண்டன குரலில் கோர்ட் அமைதியானது 

பல பெண்கள் சயிலண்டாக இல்லை என்றால் ஆணின் வாழ்க்கை வயலண்ட் ஆகி விடும் என்பது உறுதி!! 

என்ன மிஸ்டர் தீபக் பிரபாகரன் உங்க மனைவி இப்படி ஒரு குறைபாட்டை உங்க மேலே வைக்கிறாங்க இதுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க ?

"நோ மேடம் அப்பட்டமான பொய் , என் மானத்தை வாங்கணும் என் பேரை கெடுக்கணும்னு வேணும்னே அவ இப்படி அவதூறா சொல்றா" பிரபா என்னன்வோ யோசித்து வர ... இப்படி ஒரு தீடீர் தாக்குதலை எதிர் பார்க்க வில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது...

பரீட்சை எழுதுற எல்லாருமே பாஸ் ஆகிடுவேன்னு தான் மேடம் சொல்வாங்க .... பட் திருத்திற ஆசிரியருக்கு தான் தெரியும் அவனோட லட்சணம்.... ஐந்து நிமிசம் கூட தாங்காது ...என் உணர்வுகளை கிளப்பி விட்டுட்டு அவர் உணர்வை மட்டும் தணிச்சுட்டு தூங்குறது , பட்டினி போடுறது இல்லையா மேடம்?? ஐஞ்சு வருசம் பட்டினி கிடக்கிறேன் .... இனிமேல் இந்த பொய் வாழ்க்கை வாழ எனக்கு விருப்பம் இல்லை டைவஸ்ல் கொடுத்துடுங்க மேடம் .... என்ற புகழினி நேர்கொண்ட பேச்சுக்கு ஆயிரம் சபாஷ் போடலாம் .... நான் ஆம்பள பத்து பேர் கூட போவேன் என்றவன் முகத்தில் சாணியை கரைத்து ஊற்றி இருந்தாள்,... 

எம்மா மெடிக்கல் கவுன்சிலிங் போனா இதெல்லாம் சரி செய்ய கூடிய விஷயம் தான்... அதுக்காக டைவர்ஸ் வாங்கியது தப்பு இல்லையா ? ஜட்ஜூக்கே என்ன தீர்ப்பு சொல்ல புரியவில்லை

"நான் ஏன் மெடிக்கல் கவுன்சிலிங் எடுக்கணும் நான் ஆம்பள , அவ சொல்றது மாதிரி எல்லாம் கிடையாது... ஒரே நேரத்துல பத்து பேரை திருப்தி பண்ண என்னால முடியும் .. நான் எங்கேயும் போக முடியாது போக மாட்டேன் அதே போல என்ன கேவலப்படுத்தி நிக்க விட்ட இவளுக்கு நானும் டைவஸ்ல் கொடுக்க மாட்டேன் ... என்ன பண்றான்னு பார்க்கலாம்... என்று பிரபா கத்த ..

ஊப்ஸ் அவர் மேல குறை இருக்குன்னா, அதுக்கான மருத்துவ ஆதாரத்தோட வாங்க புகழினி மேற்கொண்டு பேசலாம் ஆதாரம் இல்லாம யார் பக்கம் தப்புன்னு தீர்ப்பு சொல்ல முடியாது என்று ஜட்ஜ் இறங்கி போய் விட... 

சீசீ குடும்ப மானத்தை வாங்கிட்டியே நீ விளங்குவியா... என்று அவள் குடும்பமும் அவன் குடும்பமும் வசை பாட ..அவளுக்கு அது எல்லாம் காதில் விழவே இல்லை ..தன் தோழி கையில் தூங்கிய மகளை தூக்கி தோளில் போட்டு கொண்டவள் ஒரு பாடலை மெலிதாக பாடி கொண்டே ஆட்டோவில் போய் ஏறி அமர்ந்து  

என் வீட்டுக்கு போங்க அண்ணா.. அவர் எந்த வீடுன்னு தெரிலையே என்பது போல பார்த்து வைக்க 

என் நகையை ஈடு வச்சி வாங்குன வீடு இனி என் வீடுதான் நான் ஏன் காலி பண்ணணும் மானம் உள்ளவன் ஆம்பள சிங்கம் பொண்டாட்டி சொத்துல வாழ மாட்டான் ..... போகலாம் என்று தன் கார் அருகே நின்ற பிரபாவுக்கு கேட்க சொல்ல.....

உனக்கு அவ்வளவு சீக்கிரமா விடுதலை கொடுத்துட்டா பார்ப்போம்டி என்ன அவமான படுத்துன உன்ன, அய்யோ முடியலன்னு நீயே தூக்கு மாட்டி சாகுற நிலைக்கு கொண்டு வரல நான் பிரபா இல்லை என்று அவன் பல்லை கடிக்க...

உன்கூட வாழ நான் பட்ட போராட்டத்தை விட இந்த விவகாரத்து வாங்க நான் போராடணும்னு தெரியாம ஒன்னும் இந்த முடிவுக்கு வரல ... போடா பார்த்துக்கலாம் என்று திமிராக ஒரு பார்வை பார்த்து விட்டு சீட்டில் தலை சாய்ந்த அவளுக்கு தெரியும் 

ஒர பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் எதுவும் கிடைத்து விடாது விவகாரத்தும் கூட அவள் போராடி தான் வாங்க வேண்டும் !!