கண்கட்டு வித்தைக்காரா 2
Kan2
2 கண்கட்டு வித்தைக்காரா
ஆதிகேசவன் சுருக்கி ஆதி.. ஆதிகேசவன் தேயிலை தொழிற்ச்சாலை, ஏலக்காய் தோட்டம் கேரளாவில் வெற்றிலைத் தோட்டம், ரப்பர் தோட்டம் இங்கிலாந்தில் ஆதி கேசவன் மல்ட்டி பிசினஸ் என்று கால் பதிக்காத துறையும் இல்லை இடமும் இல்லை..
இந்திய தாய் ஜானகிக்கும் இங்கிலாந்து தகப்பன் எட்வர்ட் இருவருக்கும் ஒற்றை மகன்.. தேயிலை தோட்டம் வாங்க வந்த எட்வர்ட் கண்களில் தமிழ்நாட்டு ஜானகி பட..அது காதலாகி திருமணமாகி இன்றுவரை காதல் குறையாமல் வாழும் தம்பதிகள்.. படிப்பை இங்கிலாந்தில் முடித்த ஆதி அங்கே கிடைக்கும் கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் தன் உடல் தேவைக்கு எப்போதாவது அதற்கான பெண்களை பயன்படுத்தி கொண்டு தொழில் தொழில் என்று வேங்கையாக திரிய.. தமிழ்நாட்டு முறையில் வளர்ந்த ஜானகிக்கு தன் மகனின் பெண் சகவாசம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரிய நொடிந்து விட்டார் கூப்பிட்டு அவனை கண்டிக்க..
அவன் "மாம் அது தேவைப்பட்டுச்சி சோ பணத்துக்காக வந்தவங்ககிட்ட போனேன் "என்று கூலாக சொல்ல..
வாயில் கைவைத்தவர்.. அப்போ கல்யாணம் பண்ணிக்கோடா..
"ஹாஹா ஜோக் பண்ணாதீங்க மாம் பழம் சாப்பிட ஆசைப்பட்டு பழத்தோட்டம் வைக்க முடியுமா.. எனக்கு அந்த கமிட்மென்ட் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திறது .. கல்யாணம் பண்ணி பிள்ளைப் பெத்து வளர்க்கிறது இதெல்லாம் செட் ஆகாது.. இப்படியே போக வேண்டியதுதான் .. எனக்கு உலகம் முழுசும் இந்த ஆதி பேர் தெரியணும்.. தொழில்ல அசைக்க முடியாத இடத்துக்கு போகணும் இதுக்கு கல்யாணம் சரிவராது மாம்.."(என் ஹீரோ பன்னிக்குட்டி மாதிரி பெத்து போடாம இருந்ததா சரித்திரமே இல்லை)
"டேய் உங்க அப்பா கல்யாணம் கட்டி ஜெயிக்கலையா.."
"கட்டாம இருந்திருந்தா இன்னும் பெரிய இடத்துக்கு போயிருப்பாரு கல்யாணம்தான் பொறுப்புகளைக் கொடுத்து ஒரு மனுஷனை தேக்கிடுது சோ அந்த கமிட்மெண்ட்குள்ள நான் போக மாட்டேன்.. என்ன வாச் பண்ணாம உங்க ஹெல்த்த பாருங்க"..
"ஆதி உனக்கு ... ஏதாவது..."
ஹாஹா புரியுதுமா நோய் ஏதாவது வரும்னுதானே பயப்படுறிங்க.. பிரெஸ் பீஸ் எல்லாம்..பாதுகாப்பு இல்லாம நோ வே "
ஒரு அம்மாக்கிட்ட பேசுற பேச்சா இது..
"ஓ மாம் இங்கிலாந்துல இப்படி இருக்கிறது சகஜம் இதுக்கு போய் ஏன் வொர்ரி பண்றிங்க லிவ் இட்.." என்று சென்றுவிட..
ஜானகி சொன்னால் கேட்டு திருந்திவிடுவான் என்று நினைத்திருக்க இப்படி என் சுதந்திரத்தில் தலையிடாதீங்க என்று போய்விட..
"உன் உடம்புல ஓடுறது என்னோட இரத்தம் உனக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும் நான் உன் அம்மாடா "என்று நினைத்த ஜானகி..
சொத்துக்கள் அனைத்தும் ஜானகி பேரில் தகப்பனும் மகனும் வாங்கி குவித்திருக்க அவன் கனவு தொழில் எனவே அதில் கைவைத்தார் அவன் எங்கே சென்றாலும் ஜானகியை தாண்டி செல்ல முடியாதபடி முடிவுகள் அவரின்றி எடுக்க முடியாதபடி தான் விருப்பத்திற்கு தொழில் செய்ய முடியாதபடி கடிவாளம் கட்ட.. ஒருநாள் கோபத்தில் ஜானகியிடம் கத்த..
"இப்போ என்னதான் உங்க பிரச்சனை மாம் எதுக்கு என்ன லாக் பண்றிங்க.. நான் என்ன பண்ணனும்னு இப்படி பிளே பண்றிங்க"..
"கல்யாணம் பண்ணனும்.. அதுவும் இந்திய பொண்ண.."
"வாட் கல்யாணமா?"
"ஆமா மேரேஜ் கல்யாணம் விவாஹம் அத பண்ணனும் .."
"முடியாதுன்னா.."
"என் பேர்லயிருக்கிற நீ சம்பாதிச்ச உன் சொத்துகூட உனக்கு கிடைக்காது.. இல்லை நான் புதுசா தொழில் தொடங்குறேன்னா அதுக்கும் ஒத்த பைசா நானும் அப்பாவும் தரமாட்டோம்.."
"மாம் இட்ஸ் டூ மச்.."
"நோ மை சன் இது உனக்கும் எனக்குமுள்ள மேட்ச்..கல்யாணம் பண்ண ஒத்துக்க..இல்ல சொத்து இல்லாம வாழ பழகிக்க.."
தன் தாய் ராசியானவரென்று அத்தனை சொத்தையும் அவர் பெயரில் வாங்கியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் ..
அவன் தோளில் கைவைத்த ஜானகி.. "மருந்து கசக்கதான்டா செய்யும் ஆனா உடம்புக்கு நல்லது.. அறிவுரையும் அதே மாதிரிதான் .. இப்போ உனக்கு தப்பா தெரிகிற விஷயம் இன்னும் கொஞ்ச நாள்ல சரியா தெரியும் என் கண் முன்ன சீரழிஞ்சி போறதுக்கு என் கையாள அடி வாங்கி திருந்திடு" ..
இனி ஆரம்பப்புள்ளியிலிருந்து தொழிலை ஆரம்பிக்க முடியாது காலவிரயம் தன் தந்தையை துணைக்கு நாட.. அம்மா சொன்னா சொன்னதுதான் என்றுவிட..
"சரிம்மா உங்க இஷ்டப்படி கல்யாணம் கண்டிக்கிறேன் அதுக்கு எதுக்கு தமிழ்நாட்டு பொண்ணு பார்க்கணும் இங்க எதாவது"..
ஏன் ஆசை தீர்ந்ததும் டைவர்ஸ் பண்ணிட்டு போகவா முடியாது தமிழ்நாட்டு பொண்ண முறைப்படி கல்யாணம் கட்டி கூட்டிட்டு வா உன் சொத்தை உன் பேர்ல எழுதி வைக்கிறேன்"..
"ஓ மாம் ஏன் இப்படி டார்ச்சர் பண்றிக்க பொண்ணு அப்ப நீங்க பாருங்க."
"முடியாது பிறகு அவ சரியில்லை நீங்கதான பார்த்து கட்டி வச்சிங்கன்னு பழியை என் மேல போடுவ.. நீயே உனக்கு ஏத்த பொண்ணா பார்த்து கூட்டிட்டு வா..."
"அதுக்காக என்ன இந்தியா போக சொல்றிங்களா?"
"ஒன்னு கிடைக்கணும்னா தேடி போறதுல தப்பில்லை "என்று முடித்துவிட..
இரண்டு மாதமாக தங்கள் கொடைக்கானல் தேயிலை தோட்டத்தில் அதன் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டு ஏதாவது ஒரு பெண்ணை ஒருவருட ஒப்பந்தத்தில் திருமணம் செய்து சொத்து திரும்பி வந்ததும் அவளுக்கு பணத்தை கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்து தன் பிஏ மூலம் பெண் தேட சொல்ல இப்போது ஒரு பெண்ணும் கிடைத்திருக்கிறாள் தன் குடும்ப வறுமையில் இந்த ஒப்பந்த திருமணத்துக்கு சரியென்று தலையாட்ட.. இன்று அந்த பெண்ணோடு ரிஜிஸ்ட்டர் மேரேஜ் .. கிளம்பி படிகளில் இறங்கி ஆதி வர...
மகா அவன் வீட்டுக்குள் காலடி வைக்க.. இவள் யாரென்று புருவம் சுருக்கி பார்த்தவன்..
"ஹூ ஆர் யூ" என்று ஆதி போட்ட சத்தத்தில் மகா கையிலிருந்த பை கீழே விழ சத்தம் வந்த திசை நோக்கி எட்டிப் பார்க்க சூரிய ஒளி அவன் கண்களில் பட்டுத் தெறிக்க.. நீலநிற கண்கள் இந்திய இங்கிலாந்து கலவையில் ஆறடி உயர சிவந்த மேனியில் தொட்டால் சிவந்துவிடும் நிறத்தில் .. இந்திய தாயின் பிரதிபலிப்பாக கருமை நிற கார்குழல் காற்றிலாட தன் அடர்நீல முழுக்கை சட்டையை மடக்கிவிட்டு கொண்டு ஆதி படிகளில் இறங்க வர...
அவன் நீலநிற கண்களில் பயந்து வாயைப் பிளந்து மகா நிற்க..
அவள் அருகில் வந்தவன் ..
"ஐயம் ஆஸ்கிங் யூ.. ஹூ ஆர் யூ?"
"அ..து.. சி..லு..க்..கு "என்று தன் ஊர் பெயரை சொல்லப் போக..
"ஓ சில்க் யுவர் நேம் ரைட்" என்று சொல்ல..
"நோ.. நோ என் பேரு மகா லெட்சுமி ஊரு சிலுக்குவார்பட்டி.."
"ஓகே.. ஓகே யு வாண்ட் எனி டொனேஷன்? நவ் ஐயம் பிசி .."
அவன் வேகமாக பேசும் ஆங்கிலம் புரியாமல் மெதுவாக அவன் சொன்னதை ரிவைன் செய்து பார்த்தவள்..
"அய்யோ அதெல்லாம் வேண்டாம் உங்ககிட்ட வேலை கேட்டா தருவீங்கன்னு பாட்டி சொன்னாங்க.."
"வாட் பாட்டி.."
"எங்க பாட்டி.."
"ஓ வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் ஐயம் கெட்டிங் லேட் கை அவுட் "என்று அவளை போக சொல்ல..
"ஏது திரும்பியும் தன் ஊருக்கா பாட்டி வரக்கூடாது என்று தீர்க்கமாக சொல்லியிருக்க போனால் திட்டுவார் "என்று பயந்தவள்..
"சார் உங்க அப்பா இல்லையா?"
"அப்பா இல்லாம பிறக்க முடியுமா? "என்று தமிழில் கேட்க..
"சாருக்கு தமிழ் தெரியுமா நல்லவேளை உங்களுக்கு இங்கிலீஸ் மட்டும்தான் வரும்ன்னு பயந்திட்டேன்.. உங்க அப்பாவும் என் அப்பாவும் பிரெண்ட்.."
"ஹான் எங்க அப்பா உங்க அப்பாவுக்கு பிரெண்டா.."
"ஆமா சார் பத்தாப்பு வரை எங்கூரு பள்ளிக்கூடத்திலதான் படிச்சிருக்காக.."
"இங்கிலாந்திலிருந்து வந்து இங்க படிச்சாரா .. இத நம்ப சொல்றியா?"
"இங்கிலாந்தா ?"
"எஸ் மை டேட் இங்கிலாந்துல பிறந்து வளர்ந்தவர் ..மாம் இங்க உள்ளவுங்க.. என்ன தனியா இருக்கேன் ஏமாத்தி காசு அடிச்சிட்டு போக பார்க்கிறியா.."
"ஐயோ இலலை சார் ஒரு நிமிஷம் உங்க அப்பா எங்க பாட்டிக்கு கடுதாசி எழுதியிருக்கார் அதை பார்த்தா உங்களுக்கு நான் ஏமாத்தலன்னு புரியும்" என்று பையில் லெட்டரை தேட அந்தோ பரிதாபம் அவள் பர்ஸை குடிகாரன் ஒருவன் அவள் ஆட்டோவிலிருந்து இறங்கி பராக் பார்த்து கொண்டு நடந்த போது ஆட்டையைப் போட்டிருந்தான்.
கையில் பணமும் இல்லை விலாசமுள்ள கடிதமும் இல்லை..
திடுக்கிட்டு போனவள் பையை கவுத்து போட்டு தேடிவிட்டு நிமிர..
இவளிடம் நேரத்தை கடத்த விரும்பாத ஆதி எப்போதோ ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்து பேப்பர் வாசித்து கொண்டிருக்க...
எச்சில் விழுங்கி அவனிடம் சென்றவள்..சார் அந்த லெட்டரை காணல..
"ஹாஹா ம்ம் அடுத்த என்ன பொய் சொல்ல போற.. யாரோ திருடிட்டாங்க பணமும் இல்லைன்னு சொல்ல போறியா.."
"ஆமா.. சார் அதுதான் உண்மை .."
"யு பிளடி சீட்டட் உங்கிட்ட பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பல கெட்டவுட் "என்று கத்த..
"சார் ப்ளீஸ் சார் கத்தாதீங்க ஒரு இரண்டு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க"..என்று கெஞ்ச..
" என் பிஏ வர்ற வர நேரம் போகணும் சரி சொல்லு.."
தான் இங்கே வந்த கதையை சொல்ல.அதுல ஆதி எஸ்டேட்னுதான் போட்டிருந்து சார்..
"ஹாஹா ஜோக் இங்க பாதி எஸ்டேட் ஆதி பேரில்தான் இருக்கும் அதுக்கு பின்னாடி என்ன பேர் இருந்தது அத சொல்லு.."
ஹான் என்று தலையை சொரிந்தவள் ..
" ஏதோ இருந்தேச்சே "என்று குழம்ப..
வெளிய போய் நிதானமா யோசி .. என்று அவளை வெளியே போக சொல்ல..
மகா கண்கள் கண்ணீரை சொரிய..
"ஏய் அட்ரஸ் தெரிஞ்சாலாவது அங்க கொண்டு விடலாம் மொட்டையா ஆதின்னு சொன்னா நான் என்ன பண்றது.. இந்தா இதுல பணமிருக்கு ஒழுங்கா வந்த வழியே திரும்பி போ" என்று அவள் கையில் பணத்தை திணிக்க,.
"எங்க பாட்டி திட்டுமே ஏற்கனவே உனக்கு கூறு இல்லைன்னு திட்டும் "என்று தன் சேலையில் மூக்கை துடைக்க..
"அதுக்காக இங்க தேடி அலைய போறியா"?
அது முடியாது என்று அறிந்தவள்," சார் ஒரு வேலை போட்டு தாங்களேன் "..
"ஏது வேலையா.."
"ம்ம் இவ்வளவு பெரிய வீட்ல வேலைக்கு ஆள் இருந்தது போல தெரியலை எனக்கு எல்லா வேலையும் தெரியும் சம்பளம் குறைவா தந்தாகூட போதும்" என்று கைகளை பிசைய..
"இங்க பாரு சில்க் உங்கிட்ட நின்னு பேசிட்டிருக்கிறதால உனக்கு பயமில்லை போல .. ஒழுங்கா சொல்லும் போதே ஓடிரு.. எங்வீட்ல வேலைக்கு ஆள் வைக்கணுமா வேண்டாமான்னு நான்தான் யோசிக்கணும் அய்யோ பாவமேன்னு நின்னு பேசினா ஓவரா போற வெளிய போ.."
"சார்.. ப்ளீஸ்" என்று மீண்டும் கத்த..
அழுதுகொண்டே அவன் கொடுத்த பணத்தை அவன் மேஜை மேல் வைத்துவிட்டு வெளிய நடக்க ஆரம்பித்தாள்..
"திமிர பாரேன் பணத்தை எடுக்காம போறா.. போக வழியில்லாமல் பிச்சை எடுக்கட்டும் அப்பதான் புத்தி வரும் "என்று நினைத்து கிளம்ப..
பிஏ சிறிது நேரத்தில் வந்து கைகளை பிசைய..
"என்ன ராஜ் கல்யாணத்துக்கு எல்லாம் ரெடியா?"
"சாரி சார் ஒரு தப்பு நடந்து போச்சி அந்த பொண்ண ஒருதலையாக காதலிச்ச பையன் உன் பிரச்சனையை நான் சால்வ் பண்றேன்னு அவள கல்யாணம் கட்டிக்கிட்டான்.. "
"ஷேட்.. எப்ப.."
"இப்பதான் முருகன் கோயில்ல.."
"சரி வேற பொண்ணு தேடுங்க.."
"ஆனா உங்க அம்மா நாளைக்கு வரத்தான் உங்களுக்கு டைம் கொடுத்திருக்காங்க "என்று பயத்தில் சொல்..
"ஓ காட் இப்போ பொண்ணுக்கு எங்க போவேன்" என்று திரும்பியவன் கண்களில் மகா வைத்துவிட்டு போன பணம் தென்பட..
அவன் நீலவிழிகள் சிரித்தது..
ஆதி கேசவன் சிரிப்பில் சிதைய போவது சீதையோ?