கண்கட்டு வித்தைக்காரா 1
Kan1
கண்கட்டு வித்தைக்காரா !!!
ஆசிரியர்: சுஜா சந்திரன்
வெளியீடான ஆண்டு :2021 ஜனவரி 17
இன்னும் சில நாளில் புது கதையோடு ஆஜர் ஆகிடுவேன் , அதுவரை ரீரன் கதே வந்துட்டு இருக்கும் , புதுக்கதைக்கான அறிவிப்பு இன்னும் சில நாளில் வெளியாகும்
1. கண்கட்டு வித்தைக்காரா !!
வெற்றி! வெற்றி!
வெற்றிகரமாக இது பத்தாவது மாப்பிள்ளை ஓட்டம் விடிந்தால் கல்யாணம் மணமகன் தன்கூட படித்த பெண்ணோடு ஓடி விட்டான் ..ஆனால் இதற்கு கவலை பட வேண்டிய மணமகள் அழுது உருண்டு பிரண்டிருப்பாள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.. அவளுக்கு இது பத்தோடு பதினொன்று.. ஏற்கனவே ஐந்து முறை வந்த மணமகன்கள் ஏதாவது ஆக்சிடென்ட் இல்லது சகுன குறைச்சல் காரணமாக ஓடிவிட..மீதி பேர் இவளை பரிசம் போட்டு விட்டு சென்ற பிறகு வேலை இழந்து அல்லது ஏதாவது அவர்கள் வீட்டிற்கு தூர்க்காரியம் நடந்து என்று ஐந்து பேர் ஓடியிருக்க ..(எவன் வந்து மாட்ட போறானோ)
அவளுக்கு இதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை என்று பழகி விட்டது .. இவனோடு தான் திருமணம் என்று யாரையாவது ஒருவரை காட்டுவார்கள்.. தலையை அசைத்துக் கொள்வாள்.. அடுத்து அவன் கிடையாது இவனென்று காட்டுவார்கள் அதற்கும் தலையசைத்துக் கொள்வாள் பெண்ணானவள்..
அந்த ஊரின் அவள் பெயர் ராசி இல்லாதவள் பிறந்தவுடன் தாயை பறி கொடுத்தவள்.. வளரும்போது தந்தை பழிகொடுத்தவள்.. தன்னோடு பிறந்த தன் அண்ணன் 15 வயதில் இவள் சடங்கான நாளன்று பாம்பு கடித்து இறந்துவிட இவளுக்கு ஊரார் கொடுத்த இலவச பட்டம் ராசி இல்லாதவள் .. ஒதுங்கிப் போ என்று விரட்டிவிட சிரிப்பையே அவர்களுக்கு பரிசாக கொடுப்பாள் பாவை..
தன் தகப்பனின் அன்னையிடம் வளர்கிறாள் அவரும் முதுமை காரணமாக கரைந்துவிட அதைவிட அவர் மனமோ சோர்ந்து விட்டது.. தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரே பேத்தியை தன் கண் மூடும் முன் அவளுக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து பாதுகாப்பாய் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும் என்று தவமாய் தவமிருக்க.. இவள் விதி இடைவிடாத கருப்பாக தொடர்ந்து வரும் மணமகனை எல்லாம் அலறவிட தன் பேத்தியை பெருமூச்சு விட்டு பார்த்தார் ..(அவளுக்கு சீமதூரை வருவான்)
அவளோ அந்த வீட்டிலிருந்த கருப்பு-வெள்ளை டிவியில் நிலக்கடலையை வாயில் போட்டுக் கொண்டே குக் வித் கோமாளி பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்..
மகாலட்சுமி
லட்சுமி என்னும் பெயருக்கேற்ப லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தது அவள் முகத்தில். பார்க்க கருமை நிறம் என்றும் சொல்ல முடியாது புதுநிறம் என்றும் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு கலவையான சாக்லேட் நிறம்.. அது அவளுக்கு குறையாக தெரியாத அளவிற்கு முகம் முழுவதும் லட்சணமாக பார்ப்பவரை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அழகோடு இருந்தாள்.. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என்று நினைக்கும் மக்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு கொள்ளை அழகுக்கு சொந்தக்காரி..
தமிழகத்தின் தென்கோடியில் யாருக்கும் சிலுக்குவார்பட்டி என்ற குக்கிராமம் இவர்களது ஊர் ஊரில் இருந்த பள்ளியில் 12 வரை பயின்றவள் அத்தோடு தனது படிப்பை விட்டுவிட்டு பக்கத்திலுள்ள பால்வாடியில் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறாள்.. மாதம் அதில் ஒரு 2000 ரூபாய் கிடைக்கும் அதையே கோடிரூபாய் பெற்றது போல சந்தோசமாக திருத்தியாக வாங்கிக்கொண்டு தன் பாட்டியிடம் கொடுத்து தங்கள் வீட்டுத் தேவைகளைப் பார்த்துக்கொள்வர்.. தன் தாயின் நகைகள் பாட்டியின் பூர்வீக நகைகள் என்று ஒரு 20 பவுன் இருக்க வரும் மணமகன்கள் பெண் கருப்பாக இருப்பதால் கூட பத்து போன் போடுங்க என்று கறாராகச் சொல்ல..(பத்து பைசா செலவில்லாம கட்ட இளிச்சவாயன் கம்மிங்)
பாட்டி பால் மாடு வைத்து அதில் பால் விற்று அதில் வரும் காசை அவள் திருமண செலவிற்காக நகைகளுக்கும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் தங்கள் பக்கத்து ஊரில் உள்ள வங்கியில்..
இப்படி அருமை பெருமையாக வளர்த்த தன் பேத்திக்கு ஒரு நல்ல காரியம் செய்ய முடியாமல் அந்த வீட்டில் அந்து தொங்கிய தோரணங்களை பார்த்துக்கொண்டே பாட்டி இருக்க.. இதற்கு கவலைப்பட வேண்டிய மகாவோ மிகவும் சுவாரசியமாக டிவியில் மூழ்கியிருந்தாள்..(டிவுக்குள்ள போயிடாத)
ஏற்கனவே அவளை காயப்படுத்தும் நாவில் விஷமுள்ள மனித ஜந்துகள் இன்று இந்த கல்யாணம் நின்றவுடன் பாட்டி பேத்தி இருவரையும் ஜாடை பேசவும் ஐடியா சொல்கிறேன் இதப்பண்ணு அதப்பணணு என்று வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்ச அந்த முதிய பெண்மணி நொந்துவிட்டார்..மகாவுக்கு இது பழக்கப்பட்டதுதானே சிரிப்போடு கடக்க.. பாட்டிக்கு இவள் எதிர்காலத்தை நினைத்து பயம் கவ்வி கொண்டது இரவு டிவியில் கவனமாக இருந்த பேத்தி கைகளை பிடிக்க..
"என்ன பாட்டி எதுவும் வேணுமா?"
"இல்ல மகா பாட்டி சொன்னா கேட்பியா"..
"என்ன சொல்லுங்க பாட்டி கேடாகிறேன்.. "
"அம்மாடி இன்னும் கொஞ்ச காலம்தான் நான் உயிரோட இருப்பேன்.. ஆனா உன்னை இப்படி யாரும் இல்லாம அனாதையாக விட்டுவிட்டு போயிடுவோம்னு பயமாயிருக்கு. ஆம்பள புள்ளையா இருந்தா கூட எங்கேயாவது வேல செஞ்சு பொழைச்சிக்குவன்னு நினைக்கலாம்.. ஆனா நீ பொட்ட பிள்ளையா போயிட்ட.. அதவிட உனக்கு ஒன்னும் தெரியல எல்லாரையும் வெள்ளந்தியா நம்புற .. உன்னை இந்த ஊர் நரிகளுக்கிடையே என்னால விட்டு போக முடியாது தாயி.. அந்த டிரங் பெட்டியை எடுத்துட்டு ஓடி வா" என்க . மகா ஓடிப்போய் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து தன் பாட்டியின் கைகளில் கொடுக்க ..(நரிக்கிட்ட கொடுத்தா கூட பரவாயில்லை ஆள்முழுங்கி கிட்ட கொடுக்க போற கிழவி)
அதை தட்டுத்தடுமாறி திறந்து அதிலிருந்து ஒரு பழைய கடிதத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தார்..
"இது உங்க அப்பா சிநேகிதர் விலாசம் . அவர் கொடைக்கானல்ல இப்போ பெரிய பண்ணையக்காரங்களா இருக்கிறதா கேள்விப்பட்டேன் .. பல தடவை எனக்கு கடுதாசி போட்டாக ஒத்தையா இங்க இருக்கிங்களே அங்க வாங்கன்னு ..கிராமத்துவாசி எனக்குத்தான் அங்க போக மனமில்ல ..அதோட உன்ன வளர்க்கும் கடமைன்னு என்னோட காலம் போயிடுச்சு.. இப்போ உனக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு .. நீ அங்க போகணும்.."
"சரி பாட்டி எப்போ போகலாம்.."
"சொன்னது கேட்கலையா மகா நீ மட்டும்தான் போற.."
"அய்யோ பாட்டி எனக்கு பயமாயிருக்கு நான் போகலை.."
"அப்படி சொல்லாத நான் சொன்னேன்னு சொல்லு எதாவது வேலை போட்டு தருவான் அப்படியே உன் பாட்டை பாரு .."
"அப்போ நீங்களும் வரலாம்ல பாட்டி..."
"இங்க பால்மாடு கிடக்குது தங்கம் அத யார்கிட்ட விட முடியும் அதோட அந்த குளிர் எனக்கு ஒத்துக்காது புள்ள.."
"எனக்கு இந்த ஊர தவிர எதுவுமே தெரியாதே பாட்டி "என்று அழும் குரலில் கூற.
"உனக்கு இந்த ஊர் வேண்டாம்தானே உன்ன அனுப்புறதே.. இவன்க உன்ன ராசியில்லாதவன்னு சொல்லி வாழ விட மாட்டாங்கடா.. உன் நல்லதுக்குதானே சொல்றேன் கொஞ்சம் தள்ளியிரு நல்லது நடக்கும் இது பாட்டி மேல சத்தியம்.."
"சரி பாட்டி ஒருமாசம் கழிச்சி போட்டுமா .. நம்ம கோவில் திருவிழா இருக்கில்ல.."
"அங்க போனாலும் உன்ன ஒதுக்கித்தான நிப்பாட்டப் போறாங்க, நீ போ ஒருநாள் அந்த திருவிழாவே உன் தலைமையில நடக்க கடவுள் அருள்புரிவார்..
பாட்டி சொன்னது புரியவில்லை என்றாலும் முதிய பெண்மணி சொல்லைக் கேட்டு கிளம்ப தயாரானாள்.
பாட்டி பத்திரமா இருங்க அங்கே போய் வேலையில சேர்ந்துட்டு பக்கத்து வீட்டு தேன் அக்காவுக்கு போன் போட்டு பேசுறேன்..
"சரிடா கவனமா இருக்கணும் யாரையும் நம்பாத.. பாதுகாப்பா இரு .."(என்னத்த கவனமா போய் மலைபுபாம்புகிட்ட சிக்க போறா)
சரி சரி என்று தலையாட்டிவிட்டு கொடைக்கானல் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள் விடியற்காலையில் கொடைக்கானல் வந்து சேர்ந்தவள்.. பொழுது விடியும் வரை பஸ்ஸ்டாப்பில் இருந்துவிட்டு .. பிறகு தன் கையிலிருந்த அட்ரஸை ஆட்டோ டிரைவரிடம் காட்டி அந்த எஸ்டேட் நோக்கி போக சொன்னாள்..
இவ்வளவு நாள் ஊர் ஆட்களால் அலச்சியப்பார்வை சுடுச்சொற்கள் என வாழ்ந்தவளுக்கு மனதால் இந்த பயணம் அவளுக்கு மிகவும் ரம்மியமாக அமைந்துவிட ஆசையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வந்தாள்..
ஒரு இடத்தில் வண்டியை நிற்பாட்ட கீழே இறங்கி தன் கைகளில் இருந்த பேப்பரில் உள்ள பெயரை வாசித்தாள்.. அங்கே இருந்த எஸ்டேட்டின் பெயரை வாசித்தாள் ஆதி கேசவன் தேயிலை தோட்டம்..
தன் கைகளில் இருந்த பேப்பரை பார்த்தாள் அதிலும் ஆதி தேயிலைத் தோட்டம் என்றிருந்தது நம்ம தேடி வந்த இடம் இதுதான் என்று மனதில் நிம்மதி அடைந்தவள்..(பின்னாடி ஒரு பேர் இருக்கே மூதேவி அதப் படி அவசரத்துக்கு பிறந்தவளே)
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இந்தாங்க "என்று அவர் கேட்டதற்கு மேலும் ஒரு 50 ரூபாய் அவர் கையில் கொடுத்தவள் அங்கே இருந்த மாளிகை போன்ற வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்..
அவள் தேடிவந்தது ஆதி எஸ்டேட் ஆனால் அவள் நுழைந்து இருப்பதோ ஆதிகேசவன் எஸ்டேட் தவறுதலாக இரண்டும் ஒரே நபர் என்று நினைத்து அறியாத மகா குழம்பி விட்டாள்..
அவள் தேடி வந்த ஆதி எஸ்டேட் இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தள்ளிவுள்ளது..
இது இந்திய தாய்க்கும் இங்கிலாந்து தகப்பனுக்கும் பிறந்த ஆதி கேசவன் என்ற வேட்டையாடும் புலிக்கு உரியது..
புலியின் கூண்டில் சிக்கிக்கொள்ளப் போகும் இந்த மகாலட்சுமியின் நிலை என்னவோ?