கண்கட்டு வித்தைக்காரா3

Kan3

கண்கட்டு வித்தைக்காரா3

3 கண்கட்டு வித்தைக்காரா !!

ஆதி மகா வைத்துவிட்டு போன ரூபாயை கைகளில் எடுத்தவன் 

"ராஜ் பொண்ணு கிடச்சிடுச்சி நீ போய் கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க நான் பொண்ணோட வர்றேன் .."

அந்த மனிதர் இரண்டு பெண்ணை பெற்றவர்.. இந்த மலைப்பாம்பிடம் மாட்ட போகும் கோழிக்குஞ்சை நினைத்து வருந்தினார்..

அவரும் வந்ததிலிருந்து பார்க்கத்தானே செய்கிறார்.. காலையில் வேலையில் வேங்கையாக இருப்பவன் இரவில் படுக்கையில் வேங்கையாக மாறி விடுகிறான்.. இவனுக்காககவே பெண்கள் வேறு வேறு இடங்களிலிருந்து வந்துவரிசைக் கட்டுகின்றனர்..

காதலாக கட்டிலில் சுகிக்காமல் காமமாக பணத்துக்காக கட்டிலில் விழுகின்றனர்..எப்போது மாறுமோ இந்த நிலமை என்று பெருமூச்சிவிட.

"என்ன ராஜ் எனிதிங்க் ராங்க்.."

"நோ சார் பொண்ணு பேரு சொன்னா கொடுக்க வசதியா இருக்கும்.."

"ஹான்..அது..சில்க் ..நோ நோ ஐ திங்க் மகா..லெட்சுமி.."

"கடவுளே எந்த மகாலட்சுமி இவனிடம் மாட்டியதோ தெரியலையே" என்று புலம்பி கொண்டே வெளியே போக..

தன் புருவத்தை நீவி விட்டவன் நீல விழிகள் சிரிக்க வேட்டையாட இரையை கண்டுபிடித்தது போல் துள்ளல் நடையோடு வெளியே சென்று வண்டியை ஓட்டி கொண்டே மகாவை தேட..

சிறிது தூரம் சென்றதும் அவன் கண்களில் மாட்டினாள் மகா.. கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு ஒத்தையாக கடவுளிடம் புலம்பி கொண்டிருந்தாள்..

"ஆத்தா உனக்கு நான் என்ன குறை வச்சேன் எங்க பாட்டி என்ன விரட்டினதாலதான உன் திருவிழாவுக்கு இல்லாம இங்க வந்தேன் இருந்த ஒத்த கடுதாசி போச்சி பணம் போச்சி பாட்டிக்கு போன் பேச வச்சிருந்த நம்பர் போச்சி நான் என்ன பண்ணுவேன் இந்த பூனைக்கண்ணன் வேற வேலை தர மாட்டேன்னு விரட்டிவிட்டுட்டான்..அவ்வளவு பெரிய வீட்டில ஒரு வேலை தந்தாதான் என்னவாம்.. கண்ணையும் முழியையும் பாரு "என்று திட்டிவிட்டு எதிரில் பார்க்க(பக்கம் பார்த்து பேச மாட்டியா)

மரத்தில் தன் ஒற்றைக்காலை மடக்கி கூலர்ஸை தன் உதடு இடுக்கில் வைத்து கடித்து கொண்டு பூனைகண்களால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்..

"அய்யய்யோ பூனைக்கண்ணன் ..செத்தோம் இவன் எப்போ வந்தான் தெரியலையே" என்று ஈ என்று நெளிந்து கொண்டு எழும்பி நிற்க..

"சே அகெய்ன்" என்றான்.. 

"என்ன சார்.."

"ஏதோ என்ன பேர் சொன்னீயே சொல்லு.."

"ஹிஹிஇல்லை சார் இங்க ஒரு பூனைக்குட்டி அழகா வெள்ளையா இருந்துச்...சா அ..தான் சொன்னேன்.."

"ஆஹான்..அப்படியா?"

"ஆமாசார் வேணும்னா அந்த பூனைக்குட்டிக்கிட்ட கேட்டு பாருங்க.எங்க போச்சி இவ்வளவு நேரம் இங்கதானே இருந்தது ..உங்கள பார்த்து பயம் வந்து ஓடிடுச்சி போலைங்க சார்.. சார் இங்க தூரமா? " என்று அவனையே குசலம் விசாரிக்க..(இனி உனக்கு பக்கம்தான்)

"இல்ல பக்கம்தான் நீதான் இந்த ஊருக்கு தூரம் இன்னும் போகாம இங்க என்ன பண்ற.."

"எங்க சார் போக.. கையில காசில்லை ஊருக்கு போகவும் முடியாது அதான் யாராவது உங்களை மாதிரி கருணை உள்ளங்கள் வேலை தந்தா நல்லாயிருக்குமேன்னு வழி மேல் விழி வைத்து காத்திருக்கேன்.."(பூனையை மடியில கட்டிக்கிட்டு என்னத்த நல்ல காலம் உனக்கு)

"ஆஹான் .. நான் கருணை உள்ளமா அப்போ பூனைக்கண்ணன்.."

"அதிலேயே பிடிச்சி தொங்கிறானே கேட்டுடிச்சில்ல பொத்திக்கிட்டு போக வேண்டியதுதானே" என்று நினைத்தவள்..

"ஹிஹி சா..ரி .."

"ஓகே லிவ் இட் உனக்கு வேலை தர்றேன்.."

"ஐ சார் உண்மையாவா "என்று துள்ளி குதித்தவள்..

"என்ன வேலை சார்.."

"என் பொண்டாட்டி வேலை.."

"பொண்..டாட்..டி வேலை..யா அப்படின்னா?"

"அப்படின்னா என்ன கல்யாணம் பண்ணிக்கணும் .. ஒரு வருஷம் எங்கிட்ட பொண்டாட்டியா இருக்கணும் அதுக்கு சம்பளம் தந்திடுவேன்.." 

"ஒரு வருஷம் கழிச்சிங்க சார்.."(பிள்ளை தருவான் எருமை)

"உன் வழியே நீ போ என் வழியே நான் போறேன்"..(நாங்க எந்த வழியாக போவ)

"ஹான் இதுக்கு வேற ஆள பாருங்க போங்க சார்.. பொண்டாட்டியா ஒருவருஷம் குத்தகைக்கு எடுப்பாராம் பிறகு தூக்கி போட்டுட்டு போவாறாம் நான் என்ன குழம்புல கிடக்கிற கருவேப்பிலையா வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போக".. என்று தன் பையை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பிக்க..

"ஃபுல் சொன்னா கேளு எனக்கு அந்த கல்யாண கமிட்மென்ட் பிடிக்காது.."

"அப்ப கல்யாணம் கட்டாம எப்படி பிள்ளை பெத்து போடுவீங்க.."

"அதுல எனக்கு விருப்பமில்லை .."

"அவனா நீ "என்பது போல் அவள் திரும்பி ஆதியை லுக்கு விட..

"கொழுப்பு பிடிச்சவ பார்க்கிறத பாரு.. ஏய் கல்யாணம் தான் பண்ணமாட்டேன்.. ஆனா ராத்திரி தேவைப்பட்டா பொண்ணுங்ககூட அப்படி இப்படி இருப்பேன்" என்று தன் தவறை மறைக்காமல் சொல்ல..(உன் வாய்தான் உனக்கு எமன்)

"அய்ய சீ அசிங்கம்.."

"இதுல என்ன அசிங்கத்தை கண்ட இது எங்க ஊர்ல சகஜம்.."

"உங்ககிட்ட நின்னு பேசிறதே தப்பு போங்க போங்க" என்று சொல்லிவிட்டு வேகமாக எட்டி நடைபோட..

"சில்க் நில்லு.."

"முடியாது நான் நடந்தே வீடு போய் சேருறேன்.."

"ஓ காட் எனக்கு இப்போ ஒரு பொண்ணு தேவை..."

"கடவுளே அபச்சாரம், எப்படி நடுரோட்ல நின்னு கேட்கிறான் பொண்ணு வேணும்னு "

"அடச்சீ கல்யாணம் பண்ண பொண்ணு வேணும்..இங்கப் பாரு ஒரு வருஷம் என் வீட்ல இருக்கலாம் உங்க பாட்டிகிட்ட திட்டும் இல்லை நீ வீட்ல செய்யிற வேலைக்கி பணம் தந்திடுவேன்.. இங்க தனியா சுத்தினா கடத்தல் காரங்க ஜாஸ்தி கடத்தி கொண்டு போய் கண்ணு, கிட்னிய எடுத்திடுவாங்க அவ்வளவுதான் சொல்லுவேன் பார்த்துக்க சில்க்.."

கடத்தல்காரங்களா? என்று நின்றவள்..

"ஆனா உங்கூட வந்தா கற்பு போயிடுமே?"

"இவள .. எனக்கு இவ்வளவு மட்டமான டெஸ்ட் கிடையாது ஒப்பந்த கல்யாணத்துக்கு எவளும் ஒத்துக்கலை அதான் உங்ககிட்ட இப்படி கெஞ்ச வேண்டியிருக்கு.."(உன்ற டெஸ்ட்ட பார்க்கத்தான கண்ணு போறோம்) 

சிறிது நேரம் குறுக்கும் மறுக்காக நடந்து யோசித்தாள்..

"சும்மா ஒரு கையெழுத்து அப்புறம் ஒருவருஷம் கழிச்சி நம்ம வழியே போக போறோம் அதுக்கு முன்ன நம்ம ராசியே இவன கொன்னாலும் கொன்னுரும்" ஹாஹா என்று நினைத்தவள்..(அட கொலைகாரி)

"எல்லாம் சரிதான் ஆனா ..என் மேல உன் கை படக் கூடாது.."(கையை தவிர எல்லாம் படும்)

சரி.. 

"இன்னொன்னு எனக்கு சுத்தமில்லாதவுங்கள பிடிக்காது நீ உடம்பால அசுத்தமா இருக்க..உன் வீட்ல இருக்கிற வர நீ வேற பொண்ணு தேடி போக கூடாது.."(அவன்தான் உன்னையே சுத்தி வந்து ஆராய்ச்சி பண்ண போறானே)

"வாட் எனக்கே ரூல்ஸ் போடுறியா.."

"இதுக்கு சரின்னா கல்யாணம் பண்ண ஒத்துக்கிறேன் இல்லையா இடத்தை காலி பண்ணுங்க.. நான் நடைபயணத்தை தொடருறேன்.."என்று அவள் நடக்க ஆரம்பிக்க..

பெண் சுகமா பிஸ்னஸா?என்று நொடியில் கணக்கிட்டவன் ஒரு வருடம் என் உடலை அடக்க முடியாதா ? முடியும் என்று நினைத்தவன்..

"சரி போகலை.." 

"என்னையும் பொண்டாட்டிதானேன்னு வந்து தொட கூடாது.."

"அதான் சொன்னேனே நீயா கூப்பிட்டா கூட நான் வர மாட்டேன்.."(உத்தமன் பாஞ்சி பிராண்ட போறாரு) 

"அது என்ன எப்போ பார்த்தாலும் மட்டமா என்ன பார்த்து முகத்தை சுளிக்கிறிங்க கருப்புன்னா? "..

"உங்க தோல் ஒரு காய்ச்சல் தாங்காது ஆனா கருப்பு நிறமுள்ளவுங்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாக்கும்".. என்று முகத்தை கோணி காட்ட,.

"நோ சில்க் நான் உன் நிறத்தை சொல்வே இல்லையே..பிடிக்காத பொண்ண அதுக்கு கட்டாயப்படுத்த மாட்டேன்.."(நாளைக்கி இந்த சத்தியம் காத்து வாங்கும் மக்களே)

"இதுக்கு பிடிச்சி வருவாங்களா? "

"ஆமா பணத்துக்கு சுகத்துக்கு ஆசைப்பட்டு வருவாங்க.."

"இப்படிபட்ட பொண்ணுங்கள நான் கேள்விபட்டதே இல்லையே" என்று அவனோடு பேசி கொண்டே நடக்க..

அவனும் இயல்பாக பேசி கொண்டே நடக்க.. காரில் முன்னாடி கதவை ஆதி திறக்க..

"வேண்டாம் இதுல எத்தனை பொண்ணுங்களை ஏத்துனியோ காரை நல்லா கழுவிட்டு சொல்லுங்க அங்க வர்றேன் "என்று சொல்லிவிட்டு பின்னிருக்கையில் ஏறி உட்கார ..(அவன அப்போ அசிட்லதான் கழுவணும்) 

"இவளால ஆதாயம் ஆக வேண்டியிருக்கு இல்லை இவ பேசுற பேச்சுக்கு அடி வாங்கிடுவா.. கன்ட்ரி இடியட் "என்று காரை எடுத்தவன்..

ரிஜிஸ்டர் ஆபிஸில் அவளை கூட்டி கொண்டு செல்ல ராஜ் பாவமாக மகா முகத்தைப் பார்க்க..

மகாவுக்கு தான் செய்வது சரியா தவறா தெரியவில்லை ஒரு வருடம் அவளுக்கு தன் ஊரார் பேச்சிலிருந்து சுடு சொற்களிலிருந்து விடுதலையாகவே இந்த திருமணத்தை நினைத்தவள்..அவன் பின்னாடி சென்று கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்து போட்டவள்..

அவனிடம் நிற்க..

அலுவலகர் "சார் மாலை மாத்தப்போறிங்களா தாலியா ?"என்று கேட்க ஆதி ராஜ்ஜை பார்க்க..தன் பாக்கெட்டிலிருந்து தாலியை எடுத்து ஆதி கையில் கொடுத்தவர்..

"சாரி சார் மோதிரம் வாங்கதான் போனேன் பொண்ணு பேரு மகாலெட்சுமி சொன்னிங்களா அதான் "என்று தலையை சொரிய..

"ஓகே தாங்க" என்று அதை வாங்க அதில் டாலரில் சிவன் பார்வதி ஓட்டியிருக்க..பெருமூச்சு விட்டவன் அவள் பக்கத்தில் போய் 

"சாரி இதுவும் ஒரு வருஷம் வரை வரைதான் கஷ்டப்பட்டாலும் கழுத்தில போட்டுக்கோ" என்று அவள் கழுத்தில் கட்ட போக..

"சார் என் மேல விரல் படாம கட்டுங்க" என்று அவன் முகம் பார்க்க..

"உன்ன கொல்லப் போறேன்டி நான் ..எல்லாம் முடியட்டும் இருக்கு உனக்கு" என்று அவள் மேனி தொடாமல் தங்க தாலியை கட்டிவிட அது அவள் நெஞ்சில் வந்து விழுந்து..அவனை தொடகூடாது என்கிறாயே அவன் பேரோடு உன் பெயர் ஒட்டி கொண்டதே என்று சொன்னது வெறும் மகாலெட்சுமி

திருமதி மகாலட்சுமி ஆதி கேசவன் ஆனாள்..

இந்த மகா ஆதிக்காக படைக்கப்ப்டிருக்க எப்படி மற்றவன் கொள்ளையிட்டு கவர்ந்து செல்ல முடியும்..

அவளை ராஜ்ஜிடம் ஒப்படைத்தவன்.. "வீட்ல கொண்டு போய் விடுங்க எனக்கு வேலையிருக்கு" என்றவன்..போனை எடுத்து

"ஹாய் ஹனி நைட் ஆர் யூ பிரீ எ"ன்று கேட்டு கொண்டே வெளியே சென்றான்..

மகா திருதிருவென முழித்தாள்.. அப்போ பண்ணிய சத்தியம் என்று வாய்திறந்து நின்றாள்..

அவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவானா?