பொய் 8
Poi8

8 பொய்யில் ஒரு மெய் !!
கையும் காலுமாக பிடிபட்ட நிலையில் அரவிந்த் வெடவெடத்து போய் நின்றான்..
என்ன இது ராம்?
சீதா
என்னன்னு கேட்டேன் பதில் பதில் வேணும் .. பதில் இல்லேயே தலையை குனிந்தான் ..
"சொல்லுங்க ராம், உங்களுக்கு நான் என்ன குறை வச்சேன்னு இப்படி இன்னொரு பொண்ணு தேடி போய் இருக்கீங்க... அரவிந்த் தன் எதிரே கண்ணீரும் வெறுப்பும் சேர்ந்து சீதா அவனைப் பார்த்து பார்வையில் கூசி குறுகிப் போனான்..
"இதோ இது உங்க செல் போன் வாட்ஸ் அப்ல வந்த மெசேஜஸ்...அவ்வளவு ஆபாசமா காதலா கன்றாவியா என்ன இதெல்லாம்????...
"சீதா "
"ஒரு மனைவியா அந்த இடத்திலேயே செத்துட்டேன் என்ன சாவடிச்சிட்டீங்களே , உங்களுக்கு உண்மையா இந்த நிமிஷம் வரைக்கும் இருந்ததுக்கு நீங்க எனக்கு கொடுத்த பரிசா இது?? நீங்க நம்ம குழந்தைங்க இத தாண்டி , நான் எதையுமே யோசிச்சதில்லை.. ஆனா உங்களால எப்படி எனக்கு இப்படி ஒரு பெரிய துரோகத்தை பண்ண முடிஞ்சது.... அதுவும் என்கிட்டேயும் நல்லவன் போலவே நடிச்சுக்கிட்டு இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்துட்டு இருந்து இருக்கீங்க அப்படித்தானே?? அவன் எச்சில் விழுங்கிட..
" அப்படி இல்லைன்னு தான் உங்களால சொல்ல முடியாதே, கையில ஆதாரம் மொத்தமும் இருக்கே மணிக்கணக்கா அவ கூட மெசேஜ்ல பேசி இருக்கீங்க... தேன் ஒழுக ஒழுக அவளும் காதல காமத்தன்னு உங்களுக்கு தந்திருக்காளே.. பின்ன எப்படி பொண்டாட்டி, புள்ள இருக்கிறது உங்களுக்கு கண்ணுக்கு தெரியும்.. தெரியாது அதான் நீங்க அவ அழகுல மயங்கி அப்படியே எழும்ப முடியாத பாதாளத்தில் விழுந்து கிடக்குறீங்க...
"உங்களுக்கு நான் என்ன குறை வச்சேன்னு என்னை இப்படி ஏமாத்திட்டீங்க ராம் ... சொல்லுங்க என்று அவன் சட்டையை இழுத்து அவள் விம்மி வெடிக்க, பேச அவனுக்கு எதுவுமே இல்லை..
"என்ன டைவர்ஸ் பண்ணிட்டு அவளை கல்யாணம் கட்டிக்கணும்னு நினைச்சீங்களா? இல்ல என்னையும் என் குழந்தைகளையும் கொன்னுட்டு அவளை இதே வீட்டுல அவள வச்சு குடும்ப நடத்தணும்னு நினைச்சீங்களா
சீதாஆஆஆஆஆ என்று அவன் தன்னை மீறி கத்திவிட
"ஓஓஓ கோபம் வருதா ? ஆத்திரம் வருதா, இல்ல உண்மைய கண்டுபிடிச்சிட்டாளேன்னு பயம் வருதா? உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில இந்த மாதிரி அசிங்கம் நடந்தாலே ஐயோன்னு எனக்கெல்லாம் பதறும் ... ஆனா என் வீட்டுக்குள்ள, என் புருஷன் கண்டவன் கூட போயிட்டு வந்திருக்கான்னு நினைக்கும்போது என்னால முடியல ,செத்திடுலாம் போல தோணுது..அவள தொட்ட கையால என்னையும் அய்யோ அருவருப்பா இருக்கே. கடவுளே !!இதை பார்க்கவா என்ன உசுரோட விட்டு வச்சிருக்க என்ன எடுத்துக்க என்று சீதா சுவற்றில் முட்ட நெற்றி பிளந்தது ராம் ஓடி வந்து அவளை பதறி விலக்கி
"என்ன தொடாத தொடாத உன் கேவலமான கையால என்ன தொடாத..
சீதா அரண்டு போனான்..
"தொடாதீங்க ... நான் சாக மாட்டேன்.. என்ன நம்பி இரண்டு குழந்தைகள் இருக்குன்னு நினைக்கும் போது சாக கூட எனக்கு சுதந்திரம் இல்லாம போச்சு இல்ல.. இதுக்கு நீங்க என்ன சங்க அறுத்து கொன்னு இருக்கலாம் தெரியுமா?? ....
எந்த மனைவி இதை தாங்குவாள் கையில் இன்னொருத்தி போதையில் பேசி பேசி அவனை ஆட்டி வைத்திருக்கும் உரையாடல், இதை கேட்ட பின்னும் அவள் உயிரோடு இருப்பதே பெரிது... அதையும் விட அவன் போனில் இருந்த வீடியோ அசிங்கம் என்று உடலே கூசி போனாள்..
என் ராமா இப்படி, பேருக்கு ஏற்ப ராமனா இருப்பான் என்று நம்பிக்கை வைத்திருந்தாளே, நம்பிக்கையை கெடுத்து விட்டு நிற்கும் அவனை ஆத்திரம் தீர அடித்து கொல்ல தோன்றியது..
"உன்னால எனக்கு சுகம் இல்லடி, நீ எனக்கு சுமையாக தான் இந்த வீட்ல இருக்க.. எனக்கு சுகம் தேவை நீ வெளியே போன்னு அனுப்பி இருந்தா கூட, நேர்மையான மனுஷன்னு என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வெளியே போய் இருப்பேன் .. ஆனா என்கிட்ட அன்யோனியமா இருக்கிற மாதிரி நடிச்சிட்டு... அதே கையால இன்னொருத்தியை ச்சை , சொல்லகூட கூசுது.. எப்படி நான் உங்களால என் இடத்துல இன்னொருத்தி கூட அசிங்கமாக இருக்க முடிஞ்சது அவ்வளவுதான், நீங்க என் மேல வச்சிருந்தா லவ்வா?? வாயை திறங்க ராம் ..
சீதா ..
"நான் உங்களோட சந்தோஷத்துல குறுக்க வர விரும்பல ராம்... எப்போ எனக்கு துரோகம் பண்ணுனீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே நமக்கு இடையில் இருக்கிறது என்ன யோசிச்சு பார்த்தா எதுவுமே இல்லையே.. உங்க கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன தெரியல .... இப்படி ஒரு துரோகத்தை சந்தித்த பிறகு இனிமேல் உங்க கூட வாழ வேண்டாம்.. ஒரு நாள் என்னோட மன அழுத்தம் கூடி உங்கள கொன்னாலும் கொன்னுடுவேன்... இல்ல என்னையே நான் மாச்சிக்கிட்டாலும் மாச்சுக்குவேன்..
இப்படியெல்லாம் பேசாத சீதா, நான் தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்குறேன், இனிமே தப்பு பண்ண மாட்டேன்டி என்று அரவிந்த் பதற
"இப்ப கூட தப்பு பண்ணலடி, உனக்கு உண்மையா தான் இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லவீங்கன்னு நெனச்சேன்.. எல்லாம் பொய்யா போச்சே ராம் .. சந்தோஷம் நீங்க உங்க இஷ்டம் போல இருங்க... உங்க வாழ்க்கையில இந்த அசிங்கத்துக்குள்ள என்னால வாழ முடியாது, எவளையோ தொட்ட கையால என்ன இனிமே நீங்க தொடலாம்னு மட்டும் நினைக்காதீங்க ... எவ கூடையோ வாழ்ந்த வாழ்க்கையை என் கூட வாழலாம்னு மட்டும் நினைக்காதீங்க .. நீங்க சாக்கடையாக இருக்கலாம், ஆனா நான் சாக்கடையாக விரும்பல.. உங்க கூட இனிமே என்னால வாழ முடியாது, என்ன விட்டுருங்க..
சீதா ஆஆஆ
"என்ன விட்ருங்க இல்ல என்னை பிடிக்க முடியாத இடத்துக்கு நான் போயிடுவேன் "என்று தலை மேல் கும்பிடு போட்டவள் விறு விறுவென்று அறைக்குள் போய்விட்டாள்.. அரவிந்த் உடைந்து போய் சோபாவில் உட்கார்ந்தான்.... ஈரக்கொலை படபடவென்று அடித்துக் கொண்டது... கை நடுங்கியது .... கண்ணை கட்டி கொண்டு வந்தது ...
காலம் கடந்த ஞானோதயமோ?? அது எதற்கும் உதவாதே!!
மகளோடு தனி படுக்கையில் படுத்து கொண்ட மனைவியை ஏக்கமாக திரும்பிப் பார்த்தான்.. அவள் குலுங்கி குலுங்கி பிள்ளைகளுக்கு தெரியாமல் அழுவது தெரிந்தது..
என்ன சொல்லி சமாதானம் செய்ய?? என்ன சொல்லி இந்த பாதாளப்பிளவை ஒட்ட வைக்க ஒன்றும் புரியவில்லை.. அப்படியே மனம் மரக்கட்டையாகி நின்றது போல் உணர்வு.. ஏதும் விபரீத முடிவு எடுத்து விடுவாளா?? என்று பதைத்ததுஅவன் இரவும் .. கொட்ட கொட்ட விழித்தே முடிந்து போனது . அவன் பயந்தது போல் விபரீத முடிவுதான் எடுத்திருந்தாள்
காலை விவாகரத்து நோட்டீஸ் அவன் ஆபீஸ் பை அருகே காலையில் பளிச்சென்று உட்கார்ந்து இருந்தது ...இவன் அதிர்ந்து போய் மனைவியை தேட, அதற்குள் சீதாலட்சுமியின் தாயும் தகப்பனும் படபடப்பாக உள்ளே வர ... மொத்தமாக குடியை கெடுத்து விட்டாளே என்று தலையில் கை வைத்து விட்டான்..
வாங்கம்மா வாங்கப்பா போன்ல உங்ககிட்ட சொல்லி இருந்தேனே?
"என்னடி இதெல்லாம் ,எதுக்கு திடீர்னு விவாகரத்து எல்லாம் பண்ண போறேன்னு எதை எதையோ சொல்லுற என்ற தாய் பதற
"நல்லா முடிவெடுத்து , விவாகரத்துக்கு ரெடி பண்ணி இருக்கேன் ,அவருக்கும் இதுல ஓகே தான்" என்றதும் அனைவரும் அரவிந்தை பார்க்க... அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் எச்சில் முழுங்கி மனைவியை பார்த்தான்
'என்னடி பிரச்சனை..
"என் உடம்புல ஏகப்பட்ட கோளாறு அதோட மன அழுத்தம் வேற ,திடீர் திடீர்னு பைத்தியம் மாதிரி எதையாவது செய்ய ஆரம்பிச்சுடுறேன். இப்படிப்பட்ட ஒரு பொண்டாட்டி கூட எத்தனை நாள் தான் புருஷன் சகிச்சுக்கிட்டு வாழ முடியும்.. அதான் அவருக்கு விடுதலை கொடுத்துடலாம்னு நினைத்தேன்..
"ஏண்டி ரெண்டு பிள்ளை பெத்த பிறகு உடம்பு சுகம் இல்லைன்னு ஒரு காரணத்தை சொல்ற.. ஊர்ல உலகத்துல எவளுமே சேர்ந்து வாழலையா??
"என்னால சேர்ந்து வாழ முடியாதும்மா.. அவர் கூட சேர்ந்து வாழ்ந்தா, தேவையில்லாத டார்ச்சர் தான் பண்ணுவேன் அவர் மன நிம்மதியும் கெட்டுப் போகும் ,எல்லார் நிம்மதியையும் கெடுத்துடுவேன் அதுதான் வேணுமா
"நீதானடி அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணின
"அப்போ லவ் இருந்தது இப்ப இல்லை ... அப்போ வேணும்னு அடம் பண்ணினேன்.. இப்போ வேண்டாம்.. அன்னைக்கு எப்படியோ போன்னு விட்டீங்கல்ல.. இப்பவும் எப்படியோ நாசமா போன்னு விடுங்க .
"அன்னைக்கே நாங்க சொன்னத நீ கேட்டிருந்தேன்னா இன்னைக்கு இந்த நிலைமை உனக்கு வந்து இருக்குமா?? இப்போ ரெண்டு பிள்ளை ஆன பிறகு விவாகரத்தாகி, எங்க வீட்ல வந்து உட்கார்ந்தா நாங்க என்னடி செய்வோம் நாங்க சாவ போற வயசு .. காடு வா வாங்குது இந்த வயசுல எங்கள வெச்சி உனக்கு என்ன பயன் உண்டு சொல்லு"
"என்ன யாரும் பார்க்க வேண்டாம், நான் படிச்ச படிப்பு இருக்கு என் புள்ளைங்கள நான் பாத்துப்பேன், யாரையும் நம்பி என் குழந்தைகளை நான் பெத்துக்கல... உங்களுக்கு இதை தகவலா தான் சொல்றேன்" என்றவள் பார்வை அரவிந்தில் போய் நின்றது ...
"நாளைக்கு வக்கீல் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன்.. அவர வந்து மியூச்சுவல் டைவர்ஸ் கையெழுத்து போட்டு தர சொல்லுங்க .. அதோட குழந்தைங்க ரெண்டுக்கும் நான்தான் வளர்ப்பேன்.. மாசத்துல ஒரு நாள் அவருக்கு தேவைப்பட்டா , நேரம் இருந்தா நினைப்பு வந்தா , வந்து பார்க்க சொல்லுங்க ,இல்லையா அதுவும் வேண்டாம் .. நானே பாத்துக்கிறேன் ... இது தான் என் முடிவு இந்த முடிவுல ஏதாவது மாற்றுக் கருத்து உண்டான்னு உங்க மருமகன் கிட்ட கேட்டு சொல்லுங்க" என்று அரவிந்தை அவள் ஒரு பார்வை தீயாக முறைத்து பார்க்க..
உன் வண்டவாளத்தை நீயே உன் வாயால சொல்லு.. இல்லையா, நான் சொல்ற பொய்க்கு உடன்படு என்பது போல் அவள் பார்வை இருக்க ..அரவிந்த் அமைதியாக அந்த விவாகரத்து பத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்தனை பேர் தலையிலும் இடியை இறக்கி விட்டான்...
சொல்ல முடியுமா ??நான்தான் தவறு செய்தேன் என்று ,நான் தான் உங்கள் மகளுக்கு துரோகம் செய்தேன் என்று சொல்ல முடியுமா? சொன்னால் உலகம் அவனை காரி துப்பாது , பிள்ளைகள் அவனை கேவலமாக பார்த்து போகாது...
அடுத்த நாள் அத்தனை பேருக்கும் இருட்டாகத்தான் விடியல் இருந்தது... காலையிலேயே சீதாலட்சுமி கிளம்பி ஹாலுக்கு வந்தவள் , கண்கள் சிவந்து ஹாலில் அமர்ந்திருந்த அரவிந்த் முன்னே வந்து நின்றாள்.. அவன் முன்னே அவள் போட்டு வைத்திருந்த காப்பி ஆறி ஈ மொய்த்து கொண்டிருந்தது..
நான் ஆட்டோல வக்கீல் சார் ஆபீஸ்க்கு போயிடுறேன் .. நீங்க உங்க பைக்ல வந்துடுங்க அவன் நிழல் படாது ஒதுங்கி சென்ற மனைவியை தொடர்ந்து அவனும் நடக்க ஆரம்பித்தான் ..
வேறு வழியும் இல்லை .. பேச அவனிடம் வார்த்தைகளும் இல்லை..
கண்ணும் காலும் தவறான பாதையில் சென்றால் வாழ்க்கையும் தவறான பாதையில் தானே செல்லும் ..