தினம் தினம் 19
Thi

19 தினம் தினம் !!
அம்மா ஏன் அந்த வீட்ல இல்லாம இந்த சின்ன வீட்டுக்கு வந்திருக்கோம் எனக்கு வீடே புடிக்கல என்று மகள் உதட்டை சுளிக்க..
"அடி படுவ யாழி, இந்த வீட்டுக்கு என்னடி அழகா ஒரு ஹால் ஒரு கிச்சன் ஒரு ரூம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ...டேய் விஷ்ணு உனக்கு
"மமா அந்த சூனியக்கார கிழவி இல்லாத இடம் எதுவா இருந்தாலும் நல்லா தான் இருக்கும்..
"அப்படி சொல்லுடா நான் பெத்த மகனே இப்பதாண்டா வயித்துல லிட்டர் கணக்குல பீர் வாத்து இருக்காரு உன் அப்பா.. ஏன்டா மறுபடியும் கால்ல கையில அந்த பொம்பள வந்து விழுந்து கூட சேர நினைச்சா என்னடா பண்ண??
"அம்மா கடவுள் ஒரு தடவ தான் ஆப்பர்ஷூனட்டி கொடுப்பார் அப்பாவுக்கு பல்க்கா கொடுத்திருக்கிறார்... இதுக்கு மேலயும் திருந்தலைன்னா ஒன்னும் செய்ய முடியாது..
சொல்ல முடியாதுடா மினி சரோஜாதேவி அந்த கிழவி தினுசு தினுசா பாவனை கொடுக்கும்... உன் அப்பன் சிவாஜி கணேசன் போல எழுதுங்கள் என் கல்லறையில் என் பொண்டாட்டி இரக்கம் இல்லாதவள் என்றுன்னு நெஞ்சை பிடிச்சுட்டு பதில் சீன் போட்டு நம்ம குட்டி ஞெஞ்சை ஃபர்ஸ்ட் ஆக்கிட கூடாதுடா
ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு உள்ளே நுழையப்போன சத்யா காதில் மகனும் தாயும் அடிக்கும் லூட்டி கேட்டது உதட்டில் அவள் பேசும் பேச்சில் நகை வந்நது..
அது எப்படி எல்லாம் சூழ்நிலைகளையும் ஒருத்தியால் சிரித்துக் கொண்டே கடக்க முடியும் அவனுக்கே இந்த வீடு பிடிக்கவில்லை , சத்தமும் சந்தடியுமாக உள்ளே வரும்போது முகத்தைத்தான் சுளித்தான்... ஒரே நாளில் பார்த்த வீடு நண்பனையும் குறை சொல்ல முடியாது... சரி சமாளிப்போம் வாடகையும் கம்மி கையில் இருக்கும் பணத்தை வைத்து இரண்டு மாதம் சமாளித்து விடலாம் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டு சத்யா இருக்க..
அவளுக்கு அதெல்லாம் இல்லை என் புருஷன் எனக்கு மட்டும் தான் , எப்படியோ நான் தப்பிச்சுட்டேன் என்ற ரீதியில் தான் இருந்தாள்..
"ம்மா எப்போ எப்போன்னு இருந்தீங்க போல இருக்கு முகம் முழுக்க ஒரே சிரிப்பா இருக்கு ...
"கத்தி சொல்லாதடா உங்க அப்பனுக்கு கேட்டு மறுபடியும் கொண்டு போயி அங்க ஜாயிண்ட் அடிக்க விட்டுடுவாரு , சொந்த புருஷன் கிட்ட யாரோ போல நிக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம்டா.. என் மகனுக்கு இது தான் பிடிக்கும் எங்க அண்ணனுக்கு இது தான் பிடிக்கும்னு ஆளுக்குகாள் ஆரத்தி எடுப்பாளுக. ஆனா அந்த மனுசனுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு மட்டும்தான் தெரியும் ... இப்ப மட்டும் உங்க அப்பா என்ன தூக்கி ஒய்யாரத்தில் வச்சிடுவாருன்னு நினைக்கிறியா, இது எல்லாத்துக்கும் காரணம் உன் நேரம் தாண்டி உன்னைய கட்டின நேரம் தான் என்னை இப்படி போட்டு பாடா படுத்துதுன்னு அதுக்கும் நம்ம கிட்ட தான் ஏறிகிட்டு வருவார் ... அது மேக்கிங் டிஃபெக்ட் ஒன்னும் பண்ண முடியாது ..
இப்பவாவது கொஞ்சம் மாறினாரேன்னு சந்தோசபடும்மா
"ப்ச் இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன, கோமா நோயாளி போல நான் எங்க இருக்கேன்னு அவர் ஒரு பார்வை பார்க்கும் போது திருவிழாவுல சொலைஞ்ச குழந்தையை பார்க்கிறது போலதான் இருக்கு ... ஆனா ஒரு பக்கம் வேணும்டி உனக்கு வேணும் அஞ்சு அஞ்சுன்னு மிரட்டவா செய்ற வாங்குடா பம்பரகட்டு தலையான்னு உள்ள கவுண்டர் என்னையும் மீறி வந்திடுதுடா...
"குறை சொல்லி முடிச்சாச்சுன்னா இந்த பாலை காய்ச்சி காபி போட்டு கொண்டு வா" என்ற சத்யா குரலில் விளக்குமாரை வைத்து வீட்டை கழுவி விட்டுக் கொண்டிருந்த அஞ்சலி திடுக்கிட்டு திரும்பிட சத்யா போனை பார்த்து கொண்டே பால் பாக்கெட் நீட்ட , அஞ்சலி வேகமாக பாலை வாங்கி கொண்டு உள்ளே ஓடினாள் ...
நாளையிலிருந்து வேலைக்கு வரேன் லதா... எவன் இருந்தா எனக்கு என்ன, நான் வருவது வேலைக்கு எனக்கு சம்பளம் சேர்மன் கொடுக்க போறாரு, இந்த வழுக்கு மண்டையை எல்லாம் பார்த்து பயந்தா என்னால வாழ முடியாது, பாத்துக்கலாம் .. எங்க போனாலும் இது மாதிரி நாலு பேர் இருக்க தானே செய்வான் ..
உன்னை வேலைக்கு போன்னு சொன்னேனா, உன் காசுல தான் குடும்பம் நடத்தணும்னு ஒன்னும் அவசியம் இல்லை , வேலைக்கு சொல்லி இருக்கேன் ரெண்டு நாள்ல வேலை கிடைச்சிரும். வீட்ல இருந்து பிள்ளைகளை பார்த்துக்க போதும் அஞ்சலி பேச்சு நடுவே சத்யா புகுந்து விட்டான்..
"நானும் வேலைக்கு போறேன்னு தானே சொல்றேன்
இனி இவன் லாய்க்கு வரமாட்டான் , நாம வேலைக்கு போனா தான் சரியா இருக்கும்னு நினைச்சுட்டே அப்படித்தானே...
"லதா உன் கிட்ட பிறகு பேசுறேன் என்று போனை வைத்தவள்
"ஏன் இப்படி பேசுறீங்க பிள்ளைங்க ரெண்டும் பள்ளிக்கூடத்துக்கு போன பிறகு நான் வீட்டில் சும்மாதான் இருக்கணும்... அதோட விஷ்ணு படிச்சு முடிக்கிற வரைக்குமாவது அதே ஸ்கூல்ல வேலை பாக்குறேனே,.
"என்னைக்கு நான் சொல்லி கேட்டு இருக்க இன்னைக்கு கேட்க , என்ன வேணாலும் பண்ணு...
இரவு சத்யா வீட்டிற்குள் வரும் பொழுது பிள்ளைகள் ரெண்டும் ஹாலில் பாயில் படுக்க வைத்து இருந்தாள்
வேலை ஏதாவது கிடைச்சதா என்று கேட்க பயம்... சாப்பிடும் போது அமைதியாக தட்டை பார்த்து கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்
"எனக்கு கத்தி பேசியே பழக்கமாயிடுச்சு , அடுத்தவங்க கிட்ட போய் கையை கட்டி நிக்க வரமாட்டேங்குது" சாப்பாடு அவன் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டு நின்றது....
"சாப்பிடுங்க
"போதும் என்று ஒதுக்கி வைத்து விட்டான்
"வேகமாக அஞ்சலி உள்ளே எழும்பி போனவள் பெட்டியை திறந்து அவன் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த நகை, கையில் கிடந்த வளையல் கழுத்தில் கிடந்த தாலியை பெருமூச்சுவிட்டு கழட்டியவள் ... மஞ்சள் கயிற்றில் தாலியில் முகப்பை மட்டும் மாட்டி கொண்டு வந்து அவன் கையில் கொடுத்து..
"கட்டி விடுங்க
"இப்ப எதுக்குடி இப்படி மூழியா வந்து நிக்கிற புருஷன் செத்தே போயிட்டான்னு நினைச்சிட்டியா
"ஆமா என் புருஷன் ரெண்டு நாளைக்கு முன்னாடி செத்துட்டான்.. இப்போ என் முன்னாடி இருக்கிறது புது புருஷன் , என் புது புருஷனுக்காக அந்த அர்த்தமில்லாம கழுத்துல கிடந்த தாலியை கொடுக்கறதுல எனக்கு ஒன்னும் வலியில்லை அந்த புருஷனை விட இந்த புருஷன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கட்டி விடுங்க ...
"ப்ச் நீயே கட்டிக்க ...
"முதல் முறை ஆசையாக உங்ககிட்ட கேட்கிறேன் கட்டி விடுங்களேன் என்றவள் ஆசைக்கு முதல் முறை மதிப்பு கொடுத்தானோ? மஞ்சள் கயிற்றை விரல் நடுங்க அவள் கழுத்தில் கட்டி விட்டான்..
கணவன் மனைவி சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பதற்கு பெயர் தாம்பத்தியம் கிடையாது ஒருவர் ஆன்மாவின் இன்னொருவர் சற்றேனும் இடம்பிடித்து வாழ்வதுதான் தாம்பத்தியம்... மகனாக அண்ணனாக தேர்ச்சி பெற்றவன் ஒரு கணவனாக பிள்ளைகளுக்கு தகப்பனாக படுதோல்வி அடைந்து விட்டான்.. அந்த தோல்வியின் பரிசாக தான் இந்த துரோகத்தையும் எச்சில் விழுங்கி தொண்டைக்குள் அடைத்துக் கொண்டான்...
இருவருமே தூங்காது பாயில் படுத்து கிடந்தனர்..
காலை கசகச என்ற சத்தத்தில் முகத்தில் சுள் வெயில் அடிக்க சத்யா கண்களை சுருக்கி
அஞ்சு காபி என்று நெடடி முறிக்க ...
இதோங்க டூ மினிட்ஸ் கமகமவென்று காபி வாசம் வந்தது கண்ணை திறந்தவனுக்கு அப்போதுதான் தோன்றியது தான் இருக்கும் இடம், இழந்து போனது அத்தனையும்
அஞ்சலி அரக்க பறக்க ஓடிக்கொண்டிருந்தாள் பாப்பா சாக்ஸ போடு, டேய் விஷ்ணு விளையாடிகிட்டு இருக்காத , சீக்கிரம் குளிச்சிட்டு வா அம்மா குளிக்க போகணும்...
குக்கர் விசில் அடிக்கும் சத்தம் இட்லி அவியும் வாசனை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மனைவியின் உருவம், அதற்கிடையில் குறுக்கும் நெடுக்கமாக இடையில் விழுந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ..
அம்மா அதை எங்க வச்ச , இத காணல என்று பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே அவள் கைகள் காய்களை அரிந்து கொண்டிருந்தது .... இதற்கிடையில் காபியையும் கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்து விட்டு ஓடினாள்
இத்தனை நாளும் சலிக்காது அவன் பார்த்த காட்சிகள் தான் இவை...
அன்று இவை அவனுக்கு வெறும் காட்சிகள்
ஆனால் இன்று இது எல்லாம் அவள் அவனுக்காக தன்னை மாற்றிக் கொண்டதின் சாட்சிகள்!!
"நேத்து நைட்டு உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் மூட் அவுட்டா இருந்தீங்களா , அதான் பேசல.. லதா மாப்பிளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருக்கு போல இருக்கு ... அதனால அவங்க வச்சிருந்த கார் ஒர்க் ஷாப்பை விலைக்கு கொடுக்க போறாங்களாம்... என்கிட்ட சொல்லிட்டு இருந்தா அண்ணனுக்கு வேணும்னா கேட்டு பாக்குறியான்னு கேட்டா ..ஆஹா ஓஹோன்னு லாபம் வரலைன்னாலும் மாசம் இருபதாயிரம் வருமாம் நான் ஒரு இருபது வருது நாற்பது போதும்லங்க, கண்ட செலவு நம்ம வீட்டுல கிடையாது மாசம் பத்தாயிரம் போதும் வீட்டு செலவுக்கு ...
பத்தாயிரம் போதுமா ? அந்த வீட்ல இருக்கும் போது ஐம்பது வரை ஆச்சு என்று வாயை பிளந்தான் ...
முந்திரி ஒரு கிலோ பாதாம் அரைக்கிலோ என்று தங்கச்சி வீட்டுக்கு பார்சல் போனா அம்பானி கூட நடுத்தெருவுல தான்டா லூசுபயலே நிக்கணும் என்று அவள் முனங்க சத்யாவுக்கு அது கேட்டு விட்டது ...
எத்தனை பொறுப்பற்ற தனம் ? என் சம்பாத்தியம் என் பிள்ளை பொண்டாட்டிக்கு உதவாது விழழுக்கு இறைத்த நீர் போல வீணாய் போய் இருக்கிறதே என்று கண்ணை கட்டியது ...
கண் இருக்கும் போதே காட்சிகளை ரசித்து கொள்ளுங்கள் கண் இழந்த பின்பு காட்சிகளும் மறைந்து போகும் காலங்களும் மறைந்து போகும் ...
"நானே எதுவும் முடிவு எடுக்க முடியாதுல்லங்க அதான் யோசிச்சிட்டு இருக்கேன்..
"போய் பாக்குறீங்களா ??தயக்கமாக பள்ளிக்கு கிளம்பி வந்த அஞ்சலி இன்னும் படுக்கையை விட்டு எழும்ப மனம் இல்லாது படுத்து கிடந்த புருஷன் அருகே வந்து நின்றாள்
"எப்ப வேலை முடிச்சு வருவ
"எப்பவும் போல அஞ்சு மணிக்கு
"ஓஓஓ 5 மணி வரைக்கும் நான் வீட்ல சும்மாவே இருக்கணுமோ... "
"அது
"சரி போயிட்டு வா...
"இல்ல அந்த லதா சொன்ன விஷயம்
"நீ வேலை முடிச்சு வா சேர்ந்து போய் பார்த்துட்டு வரலாம்
"உனக்கு என்ன தெரியும் ,நீ எதுக்கு , நீ வந்தா மட்டும் கிழிக்க போறியா நான் போறேன் போதும் , வீட்டுல இரு என்ற பதில் வரும் இதுதான் இயல்பு இன்று இயல்பை மீறி வந்த பதில் அவளை அப்படியே நிற்க வைத்தது
என்ன என்று எழும்பி சத்யா பனியனை தலைவழியாக போட முதுகோடு அவனை இறுக்கி கட்டி கொண்ட அஞ்சலி
எதுவும் பண்ணிக்க மாட்டீங்க தான? என்று பயந்து அவன் வயிற்றை கசக்கி பிடிக்க அதில் பயம் தெரிந்தது ..
"ப்ச் நான் செத்தாலும் நீ சமாளிச்சுடுவ.... என்றவன் வாயை பொத்தியவள்....
"சாமளிக்கிறதுக்கும் நேசிக்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குங்க இத்தனை நாள் சமாளிச்சது உங்கள நேசிச்சதால கூட இருக்கலாம் , இனிமேலும் நேசிப்பேன் , சமாளிப்பேன் ஆனா அதுக்கு நீங்க வேணும்...."
"சாக சொல்றியா இருக்க சொல்றியா ? விடு சட்டையை மாத்திட்டு கொண்டு போய் ஸ்கூல்ல விடுறேன் என்று அவள் கையை பிய்த்து எடுத்து விட்டவன் உள் அறை போய் சட்டையை எடுத்து மாட்டியவன் பைக் சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தான் ...
இந்த தெருவுல குண்டு குழி அதிகம் தோளை பிடிச்சிக்க விழுந்து வாரி வச்சிடாத கம்பியை பிடிக்க போன மனைவிக்கு சத்யா குரல் வர.. அஞ்சலி தயங்கி அவன் தோளை மெலிதாக பிடிக்க அவன் அழுத்தி போட்ட ப்ரெக்கில் அவள் விரல் அழுந்தி அவன் தோளை பிடிக்க, அந்த அழுத்தத்தில் எனக்காக இவள் மட்டுமே எந்த சூழ்நிலை ஆனாலும் இருப்பாள் என்ற உண்மை புரிந்தது..
நேசம் பழக ஆரம்பித்தான்...
அவள் காலுக்கு பாதை பூஜை செய்ய கேட்கவில்லை
ஏற்கனவே கிடக்கும் முள்ளை நீக்க கூட வேண்டாம்
நீயும் புதிதாக நாலு முள்ளை காலடியில் போடாதே அதுதான் அதீதம் வலிக்கிறது என்றுதான் சொல்கிறாள்....
அவன் கொடுத்த முள்ளில் இனி தேன் கசியும்!!