அநாயகா-37
அநாயகா-37
மகேஷ்வரி சந்தோசமாக திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு வீல் சேரில் ஜெயச்சந்திரன் உக்காந்திருக்க, அந்த வீல் சேரை ஆதிரா தள்ளி கொண்டு வந்தாள்.
மகேஸ்வரி ஓடிப்போய் அவரது கையை பிடித்துக் கொண்டு “ஏங்க எப்போங்க கண்ணு மூழிச்சீங்க? நான் உங்ககூடவேதானே இருந்தேன். ஆதிரா உங்களை எப்படி கூட்டிட்டு வர்றா? இவளுக்கு எப்படி நீங்க கண்ணு முழிச்சது தெரியும்? இங்க இவ்வளவு பிரச்சனை நடக்குதே இவளைக் காணலையேன்னு யோசிச்சேன். அப்போ அவா உங்களைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாளா?” என்றவர் சந்தோஷத்தில் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
ஆதிராவை அவரது ரூமுக்குள் அனுப்பினதே இளந்தீரன்னு யாருக்குமே தெரியாது. அதனால் ஆதிரா ரகசியமா இளந்தீரனைப் பார்த்தாள்.
அவனுமே அவளைப் பார்த்துவிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரியே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றான்.
மகேஷவரிக்கோ ஜெயசந்திரன் கோமாவிலிருந்து மீண்டு வந்ததில் என்ன சொல்லவென்று தெரியாத ஆனந்த அதிர்ச்சி.
அவர் சந்தோசத்தில் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்பது கண்ணீர் வரவும், பேச முடியாது அழுதார்.அதைப் புரிந்துக் கொண்ட ஜெயச்சந்திரன் அவரது கையை பிடித்து தனது நெஞ்சில் வைத்தவர்.
“அதெல்லாம் நம்ம அப்புறம் பேசிக்கலாம். இங்க என்ன நடந்துட்டிருக்கு முதல்ல அதைச் சொல்லு? என்றவர் அப்படியே திரும்பி அங்கே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் நல்லபெருமாளைப் பார்த்து “என்ன இன்ஸு நீ இங்க என்ன பண்ணுற?அதுவும் இவ்வளவு போலீஸ்காரங்களைக் கூட்டிட்டு வந்து ஏதோ கலாட்ட பண்ணிட்டிருக்க மாதிரி இருக்கு. என்ன விசயம்?””என்று தனது கம்பீரமானகுரலில் கேட்டார்.
நல்ல பெருமாள் அவரது அந்தக் கேள்வியில் ஒரு செகண்ட் அப்படியே ஆடி போய்விட்டார்.
“அது வந்து சார் அது வந்து சார்” என்று அவர் ஏதோ பேச வருவதற்குள் ஜெயச்சந்திரன் இளந்தீரனைப் பார்த்தார்.
அவன் கையில விலங்கிபோட்டிருப்பதை பார்த்தும் அப்படியே கோபத்தில் கண்கள் சிவக்க “என்னையா இது என் தங்கச்சி மகன்னு தெரிஞ்சும் விலங்கு போட்டிருக்க?அவனை யாரை கேட்டு அரெஸ்ட் பண்ணின? என்ன விஷயத்துக்காக அரெஸ்ட் பண்ணின? என் வீட்டுக்குள்ளயே வந்து என் மருமகனையே நீ அரெஸ்ட் பண்றளவுக்குத் தைரியம் வந்திடுச்சா?இந்த ஜெயசந்திரன் யாருன்னு தெரிஞ்சும் கையைவைச்சிருக்கல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்” என்று கேட்டவரைப் பார்த்து மொத்த போலீஸ்காரர்களும் பயந்து அமைதியாக, பதில் சொல்லமுடியாது நின்றார்கள்.
ஜெயச்சந்திரனிடம் என்ன பதில் சொல்லிடமுடியும்?இந்த நல்லபெருமாளை நம்பி வந்து இப்படி மாட்டிக்கிட்டோமே. அடுத்து நம்மவேலைக்குத்தான் சாங்கு என்று நினைத்தவாறே ,பரிதாபமாக முழித்தார்கள்.
ஜெயசந்திரன் கிட்டதட்ட இருபத்தைஞ்சு வருஷத்துக்கு மேலாக இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். அவரைப்பற்றி எல்லாருக்கும் தெரியும். அவரது அதிகாரமும் பவரும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் தெரியும். அதனால்தான் அவர்கள் பயந்து என்ன பதில் சொல்லவென்று தெரியாது அப்படியே உறைந்து நின்றார்கள்.
ஜெயச்சந்திரன் மெதுவாக இளந்தீரனைத் தன் பக்கத்தில் கூப்பிட்டார்.
அவன் மெதுவாக ஜெயச்சந்திரன் பக்கத்தில் வந்து நின்றதும் அவனது கையில் விலங்கைத் தொட்டுப்பிடித்து தூக்கியவர் நல்லபெருமாளைப் பார்த்து “இப்போ இந்த நிமிஷம் இதை எடுத்திருக்கணும். இவன் என் மருமகன்னு உனக்குத் தெரியும்ல. அப்படியிருந்தும் வேணும்னே என் வீட்டுக்குள்ள வந்து இதைச் செய்திருக்க. இவன் என்னை அடிச்சான்னா அது என் குடும்ப விஷயம். அதுல தலையிட நீங்கெல்லாம் யாரு? ஆமா இதை யாருச்சொல்லி செய்த?என்ன நான் கோமாவுக்குப் போயிட்டேன்னு சிவானந்தன்கிட்ட காசுபார்க்க ஆரம்பிச்சிட்டியா?உன்னை தண்ணியில்லாத காட்டுக்குலாம் மாத்துவேன்னு சொல்லமாட்டேன். மொத்தமா இருக்கவேண்டிய இடத்தையே மாத்திருவேன்னு”மேலப்பார்த்துக் கையைக் காட்டினார்.
“அது வந்து சார் அது வந்து சார் நேத்து சிவானந்தன் மகள் மதுமதி பிரச்சாரத்தில் பேசினதை வைச்சித்தான் இங்கவந்தோம். உங்களை உங்க சின்ன மகள் ஆதிராவும் இளந்தீரனும் சேர்ந்துதான் அடிச்சு போட்டு கோமாக்கு கொண்டு வந்துட்டாங்கன்னும், அது ஒரு கொலை முயற்சின்னும் சொன்னாங்க. ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் காதலாம் அதை நீங்க எதிர்த்தீங்களாம். அதனால் இப்படி ப்ளான் பண்ணி பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்கக்கிட்ட ஆதாரமெல்லாம் இருக்காம். அதுதான் எஸ்.பிக்கிட்ட பேசி,ஆதிராவையும் இளந்தீரனையும் விசாரிக்கணும் அரஸ்ட்டுக்கு பெர்மிஷன் வாங்கிட்டு வந்தோம். அப்படி அவங்க இரண்டுபேரையும் விசாரிச்சா உண்மை வெளிய வந்துரும், உங்கள காப்பாத்தலாம்னு நினைச்சுத்தான் அரஸ்ட் பண்ண வந்தோம்” என்று அவரநல்லதுக்காக செய்தது போல நல்லபெருமாள் பேசினார்.
“அது எப்படி ஆதிராவும் இளந்தீரனும் சேர்ந்து என்னை கொல்ல முயற்சி பண்ணுனாங்கன்னு மதுமதிக்கு தெரியும்? மதுமதியா என்கூட வாழ்ந்தாளா என்ன?இல்லை மதுமதி வந்து என்னை ஹாஸ்பிட்டுக்கு தூக்கிட்டுப்போய் பார்த்தாளா? அவன் மேடையில் பேசுறதெல்லாத்தையும் கேட்டுட்டு நீ அரெஸ்ட் பண்ணவந்துட்ட அப்படித்தான?உனக்கு என் மருமகனை முன்னாடியே பிடிக்காது. இப்போ நேரம் பார்த்து பாழிவாங்கணும்னு அரஸ்ட் பண்ண வந்துட்ட? இப்படி நானும் வேணும்னே சிவானந்தனைப் பத்தி உண்மையை நிறைய பேசிறேன். நீ அவனை அரஸ்ட் பண்றியான்னு நானும் பார்க்கிறேன் நான்ஃஇல்லைன்னதும் அவன்கிட்ட பணத்தை வாங்கிட்டு என் வீட்டுப் பிள்ளைங்களையே அரெஸ்ட் பண்ண வந்திருக்க.ம்ம்ம்”
“அப்படியெல்லாம் இல்ல சார். அவரு எம்.எல்.ஏ கிடையாது. ஆனால் நீங்கள் இந்த தொகுதியில எம்.எல்.ஏ உங்களுக்கு ஏதாவது ஒண்ணனூ நாங்கதானே சார் இறங்கி வந்து செய்யணும் அதனாலதான் இளந்தீரனை அரஸ்பண்ணி விசாரிப்பதற்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்”
“அதுதான் நான் இப்ப உயிரோடு உன் முன்னாடி நிக்கிறனே. கோமாவுல இருந்து எழுந்து வந்துட்டனே அப்புறம் எதுக்கு நீ அவனை அரெஸ்ட் பண்ணனும் அவனுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நானே சொல்லுறேன் திரும்ப திரும்ப பைத்தியக்காரன் மாதிரி சொன்னதையே சொல்லிட்டிருக்காத. முதல்ல அவன் கையில் இருந்து விலங்க எடுத்து விடு.ஞ என் மகளையும் என் மருமகனையும் அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறளவுக்கு, ஒருத்தன் படுக்கையில சாவக்கிடக்குறான்னா எல்லாம் தலைகீழ மாறிடுதுல்ல சரிதான் இவன் எப்போடா கீழ விழுவான் இவன் குடும்பத்தை மொத்தமா அழிக்கலாம்னு நினைச்சிட்டுட்டிருக்காங்க. அவங்ககூட சேர்ந்து நீயும் இந்த வேலை பார்க்கிறியா நல்லபெருநாளு?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார் நாங்க உங்களை காப்பாத்தறதுக்குத்தான் முயற்சி பண்ணினோம்”
“என்ன ஒரு மயிராண்டியும் வந்து காப்பாத்த வேண்டாம். நான் இந்த அளவுக்கு கண்ணு முழிச்சு நினைவு திரும்பி வந்ததுக்குக் காரணமே என் மகள்தான். என் மகள் ஆதிராதான் என்னை இந்த அளவுக்கு காப்பாற்றி தேத்திக்கொண்டு வந்திருக்காள். அதைவிட முக்கிய பங்கு என் மனைவிக்குதான் உண்டு. என் கூடவே இருந்து நான் எழும்புறனா? எழும்பலையா?இப்படி எதுவுமே தெரியாமலே என்கூட பேசிக்கிட்டே இருந்தாள்.வீட்டில் நடந்த அத்தனை விஷயத்தையும் என் மூளைக்குள்ள ஏற்கனவே என் பொண்டாட்டி ஏத்திட்ட. இங்க வந்து என் மகளையும் என் மருமகனையும் அரஸ்ட் பண்றளவுக்கு உங்களுக்கு தைரியம் கொடுத்தது யாருன்னு எனக்கு தெரியும். இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த வீட்டிலிருந்து நீங்கெல்லாம் வெளியே போய் இருக்கணும். அப்படியில்லையா அடுத்த ஒரு மணி நேரத்துல இங்க இருக்கிற ஒத்த போலீஸ்காரனுக்குக்கூட வேலை இருக்காது. இந்த ஜெயச்சந்திரன் பத்தி தெரியும்”என்று அவர் எச்சரித்ததும் நல்லபெருமாள் இதற்கு மேலே இங்கே நின்னா பிரச்சினை ஆகிடும் என்று வேகமாக வெளியேறி விட்டார்.
அவர்கள் போனதும் மகேஸ்வரி சத்தமாக அழுதார். “நீங்க ஒரு ஆளு முடியாமல் கோமாவுல படுத்திட்டீங்க. அவ்வளவுதான் நம்ம மொத்த குடும்பத்தையும் எப்படி அழிக்கலாம்னு சுத்தி சுத்தி வர்றாங்க. இதுல இருந்தே தெரியலையா நம்முடைய எதிரிகளுக்கு நம்மமேல எவ்வளவு பழி வெறியும், கொலை வெறியும், அசைவிட அதிகமா பதவி வெறியும் இருக்குதுன்னு. இது எல்லாத்துக்கும் காரணம் அவங்களோட அந்த பதவி வெறிதானே இவனுங்க எல்லாம் மனுஷனுங்களா?”என்று சொன்னவருக்கு வேதனைத் தாங்க முடியாத புலம்பினார்.
அதைக்கேட்ட இளந்தீரனுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோன்று இருந்து. அவனது முகம் அப்படியே வெளிறிப்போனது.
மகேஷ்வரியின் தலையைத் தடவி கொடுத்த ஜெயச்சந்திரன் “அழாதடி, வேதனை படாத அதுதான் நான் திரும்பவும் எழுந்து வந்துட்டேனே. அப்படியெல்லாம்
உங்கள விட்டுட்டு நான் போக மாட்டேன்” என்றவர் ஆதிராவின் கையையும் பிடித்துக் கொண்டார்.
இளந்தீரனுக்குத்தான் ஒன்றுமே பேச முடியவில்லை அவருக்கு அவன் செய்தது பெரிய துரோகம் அல்லவா! நல்லா இருந்த மனுசனைக் கல்லால் அடிச்சு இரண்டு மாசம் படுக்க வைச்சுட்டானே. அந்த குற்ற உணர்வு அப்படியே அவர் முகத்தில் தெரிந்தது அவன் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கவியும் ரவியும் தங்களுடைய அதிர்ச்சி தெளிந்து ஓடி வந்து ஜெயச்சந்திரன் இரு பக்கமும் உட்கார்ந்து அவரது கையை பிடித்துக் கொண்டு அழுதார்கள்.
அவர்களது தலையையும் வருடி கொடுத்தவர்.
“எதுக்கு எல்லாரும் அழுதீங்க. அதுதான் நான் எழுந்து வந்துட்டேனா. நடந்தது நடந்து போச்சு அவ்வளவுதான். கடவுள் எனக்குத் திரும்பவும் ஒரு வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுத்திருக்கிறார். அதை எப்படி அமைச்சுக்கணும்னு பார்ப்போம். ஆனால் இந்த ஒன்றரை இரண்டு மாசத்துல நமக்கு செய்தவங்களுக்கு நாமும் திருப்பி கொடுக்கணும்னா நம்மளும் சில தந்திரங்கள் செய்யணும்” என்று சொன்னவர் நிமிர்ந்து இளந்தீரனின் முகத்தை பார்த்தார்.
அவனோ நீங்க என்ன சொன்னாலும் சரிதான் மாமா அதை நான் செய்து முடிக்கிறேன் என்ற ரீதியில் தலையை ஆட்டினான்.
உடனே மகேஷ்வரிதான் “ என்ன இரண்டு பேரும் இப்படி முழிச்சுட்டு நிக்கிறீக. அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க” என்று சொல்லவும் ஆதிராவும் இளந்தீனும்ம் உடனே ஜோடியாக சேர்ந்து அவரது காலில் விழுந்தார்கள்.
ஜெயச்சந்திரன் அவர்களின் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தார்.
“உங்க அம்மா பேசியதெல்லாம் என் காதுக்கு கேட்டுச்சு உங்க இரண்டு பேருகும் கல்யாணமானதையும், இப்போ என்ன நடந்துட்டு இருக்கிறது அப்படிங்கிறதையும் சொன்னா. எல்லாத்தையும் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் என்ன நினைச்சு ஆசைப்பட்டானோ அதுவே கடவுள் தந்துட்டாரு ரொம்ப சந்தோஷம். இரண்டு பேரும் இப்போ போல எபபவும் ஒத்துமையா சந்தோசமாக இருங்க”என்று சொன்னவருக்கு லேசாக மூச்சு வாங்கவும் ஆதிராவும் இளந்தீரனும் வேகமாக அவரது நெஞ்சை தடவி விட்டார்கள்.
அவர்கள் இழந்த சந்தோஷம் திரும்ப கிடைப்பது போன்று உணர்ந்தார்கள்.
ஆனால் இளந்தீரனுக்குதான் மனசுக்குள்ளே குறுகுறுவென்று ஒரும்திரி குற்ற உணர்வோடு இருந்தான். அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சங்கரி ஆத்தா கவிதாக்கு உடம்பு சரி இல்லை என்று அவரை பார்க்க போயிருந்தார். இப்பொழுது மகன் கண்முழித்து விட்டான் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் எல்லாரும் இங்கே ஓடி வந்து விட்டார்கள்.
அதற்குள் போலீசாரின் மூலமாக ஜெயச்சந்திரன் கண் முழித்து எழுந்து விட்டார் என்ற தகவல் எல்லோருக்கும் போய்விட்டது, குறிப்பாக சிவானந்தன் குடும்பத்திற்கு போய் சேர்ந்தது.
ஜெயச்சந்திரன் இத்தோடு ஒளிஞ்சான் என்று நினைத்திருந்த அவர்களுக்கு அந்த செய்தி பேருடியாக தலையில் விழுந்தது.
அப்பொழுது சிவனாந்தனத்திற்கு அவர்களது தோல்வி உறுதியாயிற்று. ஏனென்றால் ஜெயச்சந்திரன் கொஞ்சம் மக்களுக்கு நேர்மையாக உழைக்கக்கூடிய ஆள். அதனால்தான் அவர் இத்தனை வருஷமாக தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருந்தார்.
ரகுவரனுக்குதான் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எழுந்து வந்ததுனால மதுமதிக்கு தோல்வியாகிடும் என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் நினைத்த மாதிரிதான் நடந்தது. அவர்கள் என்னென்ன செய்தும், பணத்தைக் கொடுத்தும் பிரச்சாரம் செய்தும், மக்களிடம் அவர்களது செல்வாக்கும் பணமும் எந்த மாயத்தையும் செய்யவில்லை.
அரசியலில் எல்லா சக்கரவீயுகமும் தெரிந்த ஜெயசந்திரன் ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் பக்கபலமாக இருந்தார்.
இளந்தீரனும் ஆதிராவும் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மேடையிலும் ஜெயச்சந்திரனின் நேரடி வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அவர் பெட்டில் படுத்திருந்தவாறே தன் மருமகனுக்காக ஓட்டு கேட்டார்.
இது ஆதிராவுடைய யுக்தியாகவும் இருந்தது. அவள் தனது கணவன் எப்படியாவது ஜெயிச்சு அவனது முதுகில் குத்தியவர்களுக்கு முன்பாக நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று யோசித்து எல்லாவற்றையும் செய்தாள்.
அவர்களது அரசியல் அறிவு அவர்களை கைவிடவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் முடிந்து, அதன் முடிவு நாளும் வந்துவிட்டது.
ஆனாலும் இளந்தீரனுக்கு தன் மனசுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. நம்ம தப்பு பண்றோமோ? தப்பு பண்றோமோ? என்று யோசித்துக் கொண்டேயிருந்தான்!
அவன் என்னதான் குற்ற உணர்ச்சின்னு ஒருமாதிரியாக இருந்தாலும், ஆதிரா அவனை தேற்றி அவனுக்காக அவனோடு கைகோர்த்து நின்றாள்!