கண்கட்டு வித்தைக்காரா 4
Kan4
4 கண்கட்டு வித்தைக்காரா
மகா போகும் ஆதியின் முதுகை வெறித்துக் நிற்க அவள் பக்கத்தில் வந்த ராஜ் அவள் தோள்களில் கை வைக்க திடுக்கிட்டு பின் திரும்பி பார்க்க
"வாம்மா பொண்ணு கொண்டு போய் வீட்டில். விடுறேன்.."
அது என்று அவள் திணற..
"ஆதி தம்பிய பத்தி உனக்கு தெரியாதில்ல.. அவர் இப்படித்தான் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே நாய் வாலை நிமிர்த்த முடியாது.. அவர் உன்னை என்ன சொல்லி ஏமாற்றி கல்யாணம் கட்டிகிட்டாருன்னு எனக்கு தெரியாது.. தம்பி இப்படி தான் யாருக்காகவும் நடிக்க தெரியாது.. தப்பு செஞ்சா செஞ்சேன்னு தைரியமா ஒத்துக்குவார்.. மத்தபடி இந்த ஒரு விஷயத்தை தவிர அவரு ரொம்ப நல்ல தங்கமான மனுஷன் .. உனக்கு எந்த ஊரு தாயி "என்று கேட்க..(தங்கமா தகரமான்னு நாங்க சொல்றோம்)
"சிலுக்குவார்பட்டி அப்பா "என்று சொல்ல பெருமூச்சு விட்ட ராஜ் வா என்று கூட்டிக்கொண்டு அவளை ஆதியில் வீட்டில் கொண்டு விட ..
"என்னப்பா இந்த வீட்டுல யாருமே வேலையாட்கள் கூட இல்ல இன்னைக்கு லீவா ?சார் கிட்டயும் கேட்டேன் எதுவுமே சொல்லல "என்று சுத்தி பார்த்துக் கொண்டே கேட்க
"அவருக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது..அந்த மாதிரி பொண்ணுங்க கூட வருவாரு வேலையாட்கள் இருந்தா அவங்களுக்கு சங்கடமா இருக்கும்ல.. வேலைக்கு ஆட்கள் எல்லாம்வைக்க மாட்டார் ..ஒரு ஆயா வந்து காலையில வேலையை பார்த்துட்டு அவருடைய துணியை துவைச்சிட்டு போவாங்க மற்றபடி அவருடைய வேலைகளை ஆதி தம்பியே பார்த்துக்கொள்வார்" என்று ..
"சமையல் கூடவா !?" என்று மகா வாயைப் பிளந்து கேட்க
"ஹாஹா அவர் இங்கிலாந்துக்காரர் ஆண் பெண் ரெண்டு பேருமே. எல்லா வேலையும் சேர்ந்துதான்செய்வாங்க ..நம்ம ஊரு மாதிரியெல்லாம் ஆண்கள் சமையலடி போகக்கூடாது அப்படிங்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது ..அவருக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும் "(எங்களுக்கு சாப்பிட பிடிக்கும்)
"ஹான் இப்போதுதான் இப்படி ஆண்களை நான் கேள்விபடுறேன் அப்பா.."
"இனிமேதான் எல்லாமே கேள்விப்பட போற கல்யாணத்தை பத்தி எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னாரா.."
"ம்ம் ஏதோ அவருக்கு சொத்துகள் மாறணும்னு ஒரு வருஷம் என்ன பொண்டாட்டிய இருக்கணும்னு சொல்லிதான் கல்யாணம் கட்டிகிட்டார்.."
"ஏம்மா உனக்கு எதுவும் பணக் கஷ்டமா அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா.."
" இல்லப்பா பாதுகாப்பா தங்க ஒரு இடம் தேவை அதனாலதான் ஒரு வருஷம் வரைக்கும் பாதுகாப்பா இங்க தங்கலாம்.. அதுக்கு பிறகு ஏதாவது வேலை தேடி வேறு எங்கேயாவது போகலாம்னு "என்று தன் கதையை சொல்ல..
"ம்ம் பாதுகாப்புக்கு நல்ல இடம் பிடிச்ச போம்மா திருடன்கிட்ட புதையலை பத்திரமா வச்சிக்கன்னு சொன்ன மாதிரியிருக்கு உன் கதை.."
அவளுக்கு அவர் சொல்வது கொஞ்சம் புரிவதாக இருந்தாலும் ஆதி நீ எல்லாம் எனக்கு மட்டமான டேஸ்ட் என்று சொல்லியது கண்முன் வர அவன் இருக்கிற கலருக்கும் நிறத்துக்கும் நம்ம பக்கத்துல கண்டிப்பா வரமாட்டான் என்று மனதை தேற்றிக் கொண்டு..(நீயா நினைக்காத பூனைக்கண்ணன் அந்த விஷயத்தில வீக்)
அங்கே உள்ள வேலைகளை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள்.. ஆதி வேலை செய்வதற்கு மாதம் ஊதியம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான் வீட்டு வேலைகளை பார்த்தால்.. அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு கொஞ்சமாக சேமித்து வைத்து.. பாடுடிக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வேலைகளை வேகமாக செய்ய..
மகா கொஞ்சமாய் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்திருக்க ..
இரவு சரியான குடிபோதையில் கையில் ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு ஆதி உள்ளே வர இவளைப் பார்த்ததும் இளக்கமாக சிரித்தவன்
"சில்க் உன்னை கல்யாணம் கட்டிக்க சொன்ன ரூல்ஸ்தான் அதெல்லாம் மற்றபடி என்ன கடிவாளம் போட்டு நிப்பாட்ட முடியாதுடி.. நான் என் இஷ்டப்படி தான் வாழ்வேன் "என்று நினைத்துக்கொண்டு அந்த பெண்ணை அணைத்துக் கொண்டு தன் அறைக்கு போக போக..
மகா எதுவும் சொல்லாமல் அவனை பார்த்துகொண்டு இருந்தவள் வேகமாக தன் அறைக்குப் போய் தன் பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெளியே வர..
ஆதி புருவம் சுருங்கி என்ன என்று ஆதி பார்க்க..
"சார் கொஞ்சம் ராஜ் அப்பாவுக்கு ஒரு போன் போட்டு தந்துட்டு இந்த பொண்ண கூட்டிட்டு உள்ள போங்க "என்று சட்டமாக ஹாலில் அமர்ந்து கொள்ள..
எதற்கு என்று யோசித்துக்கொண்டே ராஜூக்கு போன் போட்டு மகா கையில் கொடுக்க
"அப்பா நான் தான் மகா பேசுறேன் ..சாரிப்பா தூங்கிட்டீங்களா? கொஞ்சம் என்ன பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு விடுரிங்களா.. நான் எங்க ஊருக்கு போகணும் .. இல்ல பரவாயில்ல ராத்திரி பஸ் ஸ்டாண்டில இருந்துட்டு காலையில் முதல் பஸ் ஏறி எங்க ஊருக்கு போய்டுவேன்" என்று சொல்ல (ஆப்பு கலர்கலரா அப்பளப் பொறி மாதிரி வருதே)
ஆதி திகைத்து நின்றான்.. இன்னும் தன் தாய் சொத்தை மாற்றி தன் பேரில் கொடுக்கவில்லை இப்பொழுது இவள் போய்விட்டால்.. சொத்து அரோகரா ஆகிவிடும் திருமணமாகிவிட்டது இனிமே நமக்கு அடி பணிந்து ஒருவருடம் இருப்பாள் என்று நினைத்திருக்க .. இவளோ இப்படி பெட்டியை தூக்கிக்கொண்டு பிளாக்மெயில் செய்ய ..
தன் அணைப்பிலிருந்த பெண்ணை விலக்கி விட்டவன் இவளிடம் வந்து இரண்டு இடுப்பிலும் கை வைத்துக்கொண்டு முறைத்துக் கொண்டு நிற்க அவள் போனை அவனிடம் நீட்டி
" நீங்க நான் சொன்ன ரூல்ஸ மதிக்காத போது நான் மட்டும் ..ஏன் சார் மதிக்கணும் ..மனுஷன்னா வாக்கு சுத்தம் வேணும்.. உங்கள எப்போதுமே இப்படி பொண்ணுங்க கூட இருக்க வேண்டாம்னு சொல்லல நான் இருக்கிற வரை இருக்காதீங்கன்னுதானே சொன்னேன்.. அப்படி உங்களுக்கு சுகம் தேவைபடுதுன்னா. அப்போ இதோ இந்த பொண்ணையே கல்யாணம் கட்டி உங்க சொத்துக்களை மீட்டிருக்க வேண்டியதுதானே" என்று சொல்ல..
அந்தப் பெண்ணை திருமணம் செய் என்று அவள் சொன்ன வார்த்தையே அவனுக்கு அருவருப்பாக இருந்தது எப்படி ஒரு இந்த பெண்ணை போய் திருமணம் செய்வது என்று முகத்தை சுளித்தவன்
"சில்க் யு ஆர் கிராஸிங் யுவர் லிமிட்..இப்போ என்ன பண்ணனும்."
"நீங்க இந்த பொண்ண இப்பவே அனுப்பணும் இல்லனா எங்க ஊருக்கு இந்த குளிரிலயே நடந்து போயிடுவேன்" என்று வழக்கமான டயலாக்கை சொல்ல ..
"சரி சரி இந்த பொண்ண அனுப்பி விடுறேன்" என்றவன்..மனதில் வீட்டில் இருந்தால் தானே இவள் கண்ணில் படும்.. நாளையிலிருந்து பெண்களை வெளியே ஏதாவது ரூம் போட்டு தன் தேவையை முடித்துக் கொள்ள வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டவன்..
அந்தப் பெண்ணிடம் இரவுக்கான பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வர ..
மகாலட்சுமி ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்..
அடம் பிடிச்ச கழுதை என்று முணங்கிக் கொண்டே தன் அறைக்கு சென்றான் ..
வீட்டிற்குள் அவனுடைய தவறுகளுக்கு தடைபோடும் இவளால் வெளியே முடியுமா..
காலையில் மகாலட்சுமியின் சாமி பாட்டில் எழும்பிய ஆதி ..கண்களை கசக்கி பார்க்க மகா மிக அருகில் அவன் பக்கத்தில் பூஜை தட்டை வைத்து கொண்டு கண்களால் ஒத்திக்கோங்க என்று காட்ட..
"சில்க் இன்னும் குளிக்கலையே .. "
"பத்து மணி வரை தூங்கினா நான் எப்போ பூஜை பண்ண சார் நாளையிலிருந்து காலையில எழும்பி பழகுங்க பாருங்க கண்டதையும் சாப்பிட்டு குட்டி தொப்ப வேறயிருக்கு..காலையில நடங்க அப்பத்தான் இது குறையும்" என்று அவன் தொப்பையை கண்காட்ட(அது பீர் குடிச்சி வந்த தொப்பை)
தொப்பையா என்று தன் வயிற்றை தொட்டு பார்க்க..அவளோ திருநீறு எடுத்து அவன் நெற்றியில் பூசி மூக்கின் மேல் கைகளை வைத்து ஊத..ஆதி கண்ணிமைக்காமல் அவளை பார்த்தான்..
எப்போதும் காலையில் அடித்த போதையில் தலைவலையில் எழும்பி தனக்கு அருகில் அரைகுறை ஆடையில் மப்பில் நெளிந்து கொண்டு கிடக்கும் பெண்களைப் பார்த்து எழும்பியவனுக்கு..இந்த காலை புதிதாக இருந்தது..
மகா குளித்து டவலில் கொண்டை கட்டி சேலைக்கு மேலே தாலியை போட்டு அதில் குங்குமம் வைத்து நெற்றி வகட்டு குங்குமத்தோடு மஞ்சள் மணம் கமகமக்க நிற்க..
நீல விழிகள் அவளிடம் ஏதையோ யாசித்து நின்றது.."ச்சை ராத்திரி செய்யாததால இவளப் பார்த்து மூட் வருது போல நைட் ரேஷ்மா ப்ரீயா இருக்காளான்னு பார்த்து ரூம் போடணும்" என்று நினைத்து குளிக்க சென்றான்..(போடு போடு நாங்க வந்து கட்டையப் போடுவோம்)
இதுவரை காமத்தை விதைத்த பெண்களிடமிருந்து இவள் வேறுபட்டவள் காதலை அவனுக்கு விதைப்பாள் என்று தெரியாமல் போனது இந்த ஆதி கேசவனுக்கு..