அஃது 1
Akthu1
இது என்னுடைய முதல் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை
1 அஃது !!
சனிக்கிழமை இரவு அந்த பிரபல பாரில் நண்பர்கள் வண்ண குடுவையை வைத்து உருட்டி கொண்டிருந்தனர் ...
"டேய் எனக்கு ஒரு லாஞ்ச் என்று இன்னொருவன் வந்து அவர்களை இடித்து கொண்டு அமர
"ஏன்டா லேட் ?
"வழக்கம் போல என் பொண்டாட்டி உங்க கூட சேர கூடாதுன்னு சண்டை அவளை அதை இதை சொல்லி ஏமாத்திட்டு வர்றேன் .. என்றான் கிருஷ்
"நீ ஏன்டா உர்னு இருக்க... நாங்க தான் பிசினஸ் பேமிலின்னு சாகணும், நீதான் டாக்ட்டர் ஆச்சே மாசம் ஆனா சம்பளம், அதோட மாமா மாமான்னு உருகிற பட்டிக்காட்டு பொண்டாட்டி எங்களுக்கு அப்படியா ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேட்டு குடைச்சல்..." என்றான் ரவி ...
"ப்ச் இதுவாவது பரவாயில்லை , நான் ஐஞ்சாப்பு படிச்சவளை வச்சி ஒன்னும் ஒன்னும் விளக்கி வேலைக்கு போய் சேரும் முன்ன கிட்னி பிதுங்கி போகுதுடா என்றவன் டாக்டர் அருண்
"வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லைன்னு தானடா வேலை முடிஞ்சதும் இப்படி சுத்திட்டு பிள்ளை பொண்டாட்டி தூங்கினதும் வீட்டுக்கு போறோம் .... அப்படியும் பிரச்சனையா? இந்த இடைப்பட்ட நேரத்தில எங்கடா உன் பொண்டாடிகிடட் பேச நேரம் இருந்துச்சு,என்னத்த விளக்கின... அவன் திருதிருக்க..
"ஆக டாக்ட்டர் நைட் ஷிப்ட் கரெக்ட்டா பார்கிறான் போலடா , நாம தான் இவன் பேச்சை கேட்டு நாசமா போறோம் போல என்று கிருஷ் கிண்டல் பண்ண
"ம்க்கும் இவனுக பொண்டாட்டி பக்கத்துல சும்மா தான் படுத்து கிட்டப்பானுக, எப்பா டேய் நீங்க ரெண்டு பேரும் பிள்ளை பெக்குறதுல எனக்கு சீனியர் அதை மனசுல வச்சி பேசுங்கடா ...என்று அருண் முறைக்க
எல்லாரும் ஒரே குட்டையில உள்ளவனுக தான் , பொண்டாட்டிக பேசினா ரசிச்சு கேட்டது எல்லாம் அப்படா .. இப்ப கல்யாணம் முடிஞ்சு பத்து வருசம் ஆகுது, என்னத்த பேச , வீட்டுக்குள்ள போனாளே இன்டர்வி நடந்த மாதிரி தான் இருக்குது
எங்க போன
ஏன் லேட்
இன்னைக்கு பாப்பா இது செஞ்சா, அது செஞ்சா என்ன சமைக்க
எங்கயாவது கூட்டடிட்டு போங்க ரிப்பீட் மோட் கேள்வி என்று கிருஷ் சலிக்க
"அதேதான்டா இங்கேயும் , அவளுகளுக்கு அலுக்கவே செய்யாதா மச்சான் , இதையே கேட்டு கேட்டு போர் அடிக்குதுடா , சேம் பொண்டாட்டி சேம் வீடு போரிங்கா போகுது என்னடா கூந்தல் வாழ்க்கைன்னு இருக்கு என்று ரவி மிடறு விழுங்க ....
"டாக்டரே நீ என்னடா வாயை திறக்க மாட்டைக்கிற
"என் பொண்டாட்டி வேற மாதிரிடா மாமா மாமான்னு கைக்குள்ள காலுக்குள்ள வந்து விழுவா நச்சரிப்பு ,அன்பு தொல்லை தாங்காமலே வெளியே ஓடி வந்திடுவேன்.... புது கல்யாணம் முடிஞ்ச பீல்லேயே சுத்துவா நமக்கு செட் ஆகாது" என்று ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வாழ்க்கையை அலசி ஆராய... இவர்களை கண்டிக்க தண்டிக்க வேண்டிய மனைவியர் கத்தி கத்தி எப்படியோ போய் தொலைங்கடா என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டனர்... இதுதான் இவர்கள்...
வாரத்தில் ஏழு நாலும் பிசி இல்லை என்றாலும் பிசியாக சுற்றுவதை வழக்க படுத்தி கொண்டனர்... வீட்டுல இருந்தா தான மனைவி பிள்ளை என்று கடமையே சுமக்கணும், பணம் இருக்கு அதை வச்சி குடும்பத்தை பாரு எங்களை தொல்லை பண்ணாத என்ற கோட்பாடு கொண்ட சராசரி மூவர் ...
மூவரும் நடு ராத்திரி வரை ரகளை செய்து விட்டு விடியும் நேரம் வீடு போய் சேர்ந்தனர்...
குடும்பம் கெளரவத்திற்கு மட்டும் என்ற எண்ணம் கொண்ட மூவரின் கெளரவமும் நிம்மதியும் காணாது போக வைக்க போகிறதோ அஃது??
சில நாட்களுக்கு பின்பு
பிரபல தொழிலதிபர் ரவிபிரகாஷின் பத்து வயது மகள் மாயம் என்று தலைப்பு செய்தியில் குழந்தை படம் ப்ளாஷ் ஆகி கொண்டிருந்தது
"அய்யோ கடவுளே என் பிள்ளையை தொலைச்சிட்டேனே" என்று அந்த வீட்டில் தலையில் அடித்து கொண்டு டிவியில யூனிபார்மில் வரும் தன் மகள் போட்டோவை பார்த்து கதறி அழும் மனைவி ரூபி அருகே உடைந்து போய் உட்கார்ந்து இருந்தான் ரவி பிரகாஷ்....
நேற்று இரவு மகள் பத்து வயது பிறந்த நாளைக்கு நண்பர்கள் , உறவினர்கள் என அழைத்து பல லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து உறவினர்களை வழி அனுப்பி வைத்து விட்டு மகளை தேடினால் அவள் கையில் வைத்திருந்த டெடி பொம்மை மட்டும் தான் மணலில் கிடந்தது பிள்ளையை காணவில்லை...
"என்னங்க என் பிள்ளை கிடைச்சுருமா" என்று ஓடி வந்து கணவன் மடியில் முகத்தை புதைத்த மனைவிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாது ரவி எச்சில் விழுங்கினான் ஒற்றைக்கு ஒரு குழந்தை இளவரசி என்ன ஆனாள் யோசித்து பாக்கவே பதறியது....
"கிடைச்சிடும் ரூபி...
"போன வாரம் பக்கத்து தெரு பிள்ளையை கடத்திட்டு போய் கண்டதும் பண்ணி கொன்னுட்டாங்களாம் செய்தியில போட்டான்ல, அப்படி அப்படி எதாவது ஆகிடுமோங்க "என்று ரூபி பயந்து கணவனை பார்க்க
"ரூபி ப்ளீஸ் அப்படி எல்லாம் எதுவும்
"ஆயிருக்காதுல்ல
"ம்ம்
"ஒருவேளை பணத்துக்காக கடத்தி இருப்பாங்களோ நம்ம சொத்து முழுக்க வேணும்னாலும் கொடுத்துடுங்க , எனக்கு என் பிள்ளை வேணும் என்று அழும் அவளை சமாளிக்க முடியாது ரவிபிரகாஷ் தன் மருத்துவ நண்பன் அருணுக்கு கண்ணை காட்ட
"பாப்பா கிடைச்சிடும் ரூபி இதுல உட்கார் என்று அருண் அவளை அமர வைக்க
"அருண் அண்ணா உங்கள மாமா மாமான்னு கூப்பிடுவாள்ல பாப்பா காணல , சாப்பிட்டு இருக்குமா, பசி தாங்க மாட்டா அண்ணாஆஆஆஆஆ என்றவள் அவன் குத்திய வீரிய தூக்க மருந்தில் சார, ரவிபிரகாஷ் ஓடி வந்து சாய்ந்த மனைவியை தூக்கி கொண்டு போய் படுக்கையில் கிடத்தி விட்டு தலையில் கை வைத்து அமர .... அவன்,நண்பன் மெலல வந்து நண்பன் தோளில் கை வைத்து
"போலீஸ்ல முழுசா போர்ஸ் பண்ணுறதுதான் நல்லது ரவி நம்ம கையை மீறி போயிடுச்சு ;நைட் முழுக்க தேடியாச்சு இனி அவங்க இறக்கினாதான் சரியா இருக்கும் டா
"ம்ம் , கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு அருண், ஆனா பயமா இருக்கு எத்தனை நாள் இவளை சமாளிக்கன்னு தெரில ....
"காணாம போயிருக்க வாய்ப்பு இருக்கலாமே ரவி கடத்தி இருப்பாங்கன்னு எப்படி உர்ச்சிதமா சொல்ற?
"சிசிடிவி புட்டேஜ்ல அவ வெளிய போனது போல இல்ல அருண்.. பாப்பா காணாம போயிருந்தா இந்த கேட்டை தாண்டி போயிருக்கணுமே அருண்
"ம்ம் ... அப்போ வித்தியாசமா வந்தவங்ககளை தான் விசாரிக்கணும்....
"ம்ம்
"ரவி எனக்கு ஒரு சந்தேகம் என்று அருண் நாடியை தடவ
::என்ன ?
"இல்லை ஏன் நம்ம கிரிஷ் கடத்தி இருக்க கூடாது...
"என்ன சொல்ற அவன் நம்ம பிரெண்ட் டா , அதோட என் மனைவியோட அண்ணன் அவனை போய்
"நண்பனா மச்சானா பார்க்காத , அவன் உன் பிசினஸ் பாட்னர் அந்த கோணத்துல யோசி ரவி யோசனையாக கண்ணை சுருக்கினான்...
சில நாளாக அவனுக்கும் பாட்னர் மற்றும் இவர்கள் நண்பன் கிரிஷூக்கும் புகைச்சல் போகிறது .... கம்பெனி லாபங்களில் கை வைத்ததில் பல முறை ரவியும் கிரீஸூம் தீடீரென்று மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர் ... அருண் தான் இருவர் வழக்கையும் தீர்த்து வைத்தான் ...
:அந்த அளவு எல்லாம் அவன் பண்ண மாட்டான்டா ரவி நம்பிக்கையாக சொன்னாலும் சற்று சந்தேகம் அவன் கண்ணில் இருந்தது ...
"நேத்து கவனிச்சியா , பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்துட்டு பரிசை கொடுத்ததும் கிளம்பினான் .... அவன் பொண்டாட்டி வரவே இல்லை இவனும் யாரோ போல வந்திட்டு ஓடிட்டான்..சம்திங்க் ராங்க் போல தோணுது
"அதான் கிளம்பிட்டானே
"அங்க தான் டவுட்டா இருக்கு ரவி அப்பவே கிளம்பிட்டான் ஆனா நான் போகும் போது அவன் கார் உன் தெரு முக்குல நின்னுச்சுன்னு சொன்னேன் கவனிச்சியா...
"ம்ம் அப்போ அவன்தான் என் பிள்ளையை
"ப்ச் சொல்ல முடியாது ரவி , பட் இப்படியும் இருக்கலாம்னு தான் சொல்றேன்....
"நேரா போய் கேட்டிரவா ?
"ஒருவேளை உன் பிள்ளையை எதாவது செஞ்சிட்டா...
"அவன் ஏன்டா என் பிள்ளையை கடத்தணும்
" அவளை வச்சி உன் கம்பெனி ஃசேரை அவன் வாங்க நினைச்சா... இப்படி இருக்குமோன்னுதான் சொன்னேன் ரவி, நாட் ஷூயர் , போலீஸ் கிட்ட சொல்லு, இந்த வ்யூலையும் விசாரிக்கட்டும் ரூபியை பார்த்துக்க நான் ஈவினிங் வர்றேன் ...
ம்ம்
"ஒன்னும் ஆகாது ரவி பார்த்துக்கலாம் "என்ற அருண் தலை தொங்கி கண்ணீர் கசிய உட்கார்ந்து இருந்த நண்பனை கண்களை சுருக்கி பார்த்து கொண்டே வெளியே போனான்...
"கிருஷ், உங்க பிரெண்ட் ரவி அண்ணாவோட குழந்தையை காணலையாம் " என்று உள்ளே நுழைந்த கிருஷ்ஷிடம் அவன் மனைவி நான்சி நகத்துக்கு நெயில் பாலிஷ் போட்டு கொண்டே கூற
"ம்ம் கேள்வி பட்டேன்,
"போய் ஆறுதல் சொல்லலை
"என்னத்த சொல்ல சொல்ற இதுதான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டுலையும் ஆட்டுறதோ
"என்ன என்ன குறை சொல்ல வந்த மாதிரி இருக்கு
"பின்ன பணம் பணம்னு செத்த,உன் எழவு தாங்காம தான் கம்பெனி பணத்தை எடுத்து கொண்டு வந்து கொட்டி என் நட்பை இழந்தேன், இப்ப கம்பெனி சேரை வாங்குங்கன்னு நிக்கிற ....
"நான் எனக்கா கேட்டேன், நீங்க அந்த கம்பெனியில எப்பவும் ரெண்டாவதா இருக்கீங்க.... ரவி அண்ணா தான் எல்லாத்தையும் பஸ்ட்டா இருக்கார்.. ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிச்ச பிசினஸ்தானே பாட்னர்னா பாதி பாதி வரணும்ல அதுக்குதான் கேட்டேன் என்ன குறை சொல்றீங்க? நான்சி கணவனை முறைத்தாள்..
"உன்ன குறை சொல்லல தாயே, அழகா இருக்கேன்னு கண்ணை மூடிட்டு தாலியை கட்டினேன் பாரு என்ன செருப்பால அடிச்சிக்கிறேன் உன்ன கட்டுன அன்னைக்கே எனக்கு சனி திசை ஆரம்பிச்சுடுச்சு மிஞ்சி இருந்தது ப்ரெண்ட்ஸ் மட்டும் தான் இப்ப அதுவும் போச்சு நிம்மதியா இரு என்று கிருஷ் கத்திவிட்டு , எதிரே ஓடி வந்த தன் பத்து வயது மகளை பார்த்து எப்போதும் போல மெலிதாக சிரித்து விட்டு அறைக்குள் நுழைய
"ம்க்கும் பெரிய நட்பு ,இவர் பீல்ட் வொர்க் போகணுமாம், அவர் மட்டும் ஆபிஸ்ல ஏசி காத்துல உட்கார்ந்து இருப்பாரம் ஒரு பொண்டாட்டி இதை எல்லாம் கேட்க கூடாதா?? என் புருசன் எம்டியா இருக்கணும்னு பொண்டாட்டி ஆசை பட கூடாதா ரொம்ப தான் ... பாவம் அந்த பிள்ளை காணாம போயிடுச்சேன்னு வருத்தத்துல கேட்டா ரொம்ப தான் ஆடுறார் ....
"வாயை மூடு நான்சி உனக்கும் பிள்ளை இருக்கு குடும்பம் இருக்கு , உறுத்தல் இல்லாம பேசாத , நமக்கும் பெண் குழந்தை இருக்கு அதை நினைவுல வச்சிட்டு பேசு" என்று உள்ளிருந்து கிருஷ் கோவக்குரல் வர
"ஓஓஓ அவங்களுக்கு நடந்த மாதிரி நமக்கும் நடக்கணும்னு ஆசை படுறீங்களா ???பதில் இல்லை
"சொல்லுங்க கிருஷ்
"மனச்சாட்சி இல்லாம பேசினா அதுதான் நடக்கும் என்றுவிட்டு கதவை அடைத்து கொள்ள கிருஷ் போனுக்கு அருண் போன் போட்டான்
"ரவி குழந்தை கிடைச்சுதா அருண்?
"தாய்மாமன் கேட்கிற கேள்வியா கிருஷ்
"ப்ச் கிடைச்சதா இல்லையா?
"கடத்தி வச்சதே நீதானடா பின்ன எப்படி கிடைக்கும்
"வாட் , நானா ? என்னடா புது பழியாக இருக்கு
"ரவி அப்படித்தான் நினைக்கிறான் கிருஷ் , நீதான் சேரை எழுதி வாங்க அவன் பிள்ளையை கடத்திட்டேன்னு நினைக்கிறான் போல ....
"டேய் நான் போய் அதுவும் என் பிள்ளைதானடா
"ம்ம் எனக்கு தெரியுது ,அவனுக்கு தெரிலையே... சரிடா பார்த்து இரு ...வைக்கிறேன்" என்று அருண் போனை வைக்க... அருண் மனைவி அம்சவேணி நங்கென காப்பி கப்பை அருண் அருகே வைத்தவள்
"பேர்தான் டாக்டர் பண்றது எல்லாம் ஊமை குசும்பு வேலையால்ல இருக்கு ... அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட நீங்கதான் குழந்தையை கடத்தி இருப்பீங்களோன்னு தோணுது .... ஏன்னா உங்களுக்கு தான் அவங்க ரெண்டு பேரும் மாமா மச்சான் ஆனதுல வயித்தெரிச்சல் ...அதை எப்போடா தீர்த்துக்கலாம்னு இருந்தீங்க இப்ப செஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறேன் ...
"அப்படின்னா நான்தான் கடத்தினேன்னு சொல்லி இருப்பேன்டி ; பெரியவங்க பிரச்சனைக்கு சின்னதுகள கடத்தி என்ன செய்ய போறேன் ... அடுத்தவன் பொண்டாடிக்கு அசை படுற ஆள் நான் இல்லை" என்று அருண் எழும்பி போக எரிச்சலாக புருசன் முதுகை வெறித்தாள் அம்சவேணி ...
ரவி, அருண் , கிருஷ் மூவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் ... அருண் டாக்டர் படிக்க வந்த காலத்தில் அவர்கள் இருவர் நட்பு ஒருபடி கூடி போனது ... கிருஷ் தங்கை ரூபியை அருண், ரவி இருவருமே காதலிக்க .... அருண் ஃபாரினில் மேற்படிப்பு படித்து வருவதற்கு முன் ரவி தன் காதலை சொல்லி திருமணத்தை முடிவு செய்துவிட வந்து நின்றவனுக்கு அதிர்வு தான்.. மனதிற்குள் புகைந்து கொண்டே இருந்தவனுக்கு , அவன் அத்தை மகள் அம்சவேணியோடு திருமணமும் முடிந்து வாழ ஆரம்பித்து விட்டாலும், ஏதோ நண்பர்கள் இருவருக்கும் தான் இரண்டாம் பட்சம் என்ற புகைச்சல் அருணுக்கு இப்போது வரை தீரவில்லை .... அவ்வப்போது இருவரையும் குத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது வழமையே...
"ஊர் ரெண்டு பட்டடா கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல அவங்க ரெண்டு பேரும் எப்போ பிரிவாங்கன்னு காத்தே இருப்பார் போல, கல்யாணம் கட்டி பத்து வருசம் ஆகுது இன்னும் அவர் காதல் கைகூடலைன்னு வருத்தம் போல அப்போ எதுக்கு என்ன கட்டி பிள்ளை தந்தாராம் என்று அம்சவேணி புசுபுசுத்துகொண்டே கணவனை திட்ட முடியாது முனங்கினாள்...
இதுதான் உன் மாமா பையன் அருண் என்று பெண் பார்க்க வந்த அன்றே அருண் மீது காதலில் விழுந்து விட்டாள்..
முதலிரவில் தான் நண்பன் தங்கையை காதலித்தேன் சோ கொஞ்சம் டைம் கொடு என்று அருண் நேர அவகாசம் வாங்கி கொண்டு , ஆறு மாதம் கழித்து வாழ ஆரம்பித்தான்.. ஆனாலும் இவளுக்கு புருசனுக்கு இன்னும் தன்னை பிடிக்கலையோ என்ற சந்தேகம் எப்போதும் உண்டு ..
அம்மா யாரை திட்டுற என்று அருணின் எட்டு வயது மகள் தாயிடம் வர
"வேற யாரை உன் அப்பனைதான் எனக்கு என்னவோ இவர் மேல தான் சந்தேகமா இருக்கு
"என்னம்மா ஆச்சு ?
"ஒன்னும் இல்லை ஸ்கூலுக்கு பார்த்து போ, யாரு கூப்பிட்டாலும் போயிடாத அம்மா அப்பா தவிர யார் கூடையும் போக கூடாது சரியா?? என்று பயத்தை மறைத்து கொண்டு அம்சா மகளுக்கு சொல்லி கொடுத்து பள்ளிக்கு அனுப்பினாள்...
இதோ ரவிபிரகாஷ் மகள் காணாமல் போய் ஒரு வாரம் ஆகி போனது
அவன் வீட்டில் அழுகை கூக்குரல் ஓய்ந்தபாடில்லை பிள்ளை உயிரோடு வந்தால் போதும் என்ற நிலையில் இருவரும் உடைந்து போய் நின்றனர்....
ரவிபிரகாஷ் மகள் காணாது போய் ஒரு வாரம் ஆன நிலையிலும் அதை பத்திய தகவல் சரிவர வராததால் வழக்கை உயர் அதிகாரிகள் கவனிக்க உத்தரவிட பட்டுள்ளது... என்று செய்தியில் வந்து கொண்டிருந்தது ...
யார் சார் கேஸ் ஹேண்டில் பண்ண போறா?
மிஸ்டர் அர்ஜூன் வாரியர்
அவரா ?
ம்ம்
"அப்போ கண்டிப்பா ஆளை கொத்தா தூக்கிடுவாங்க" என்று நம்பிக்கை கொடுத்தது அந்த ஒற்றை பெயர் ...
சீறி வந்த அரசு சைரன் வைத்த வாகனத்தில் இருந்து காக்கி சட்டையில் மீசையை முறுக்கி விட்டபடி குதித்து இறங்கினான்
அர்ஜூன் வாரியர் கமிஷ்னர் ஆப் போலீஸ்!!
(மருங்காரத்தில் மலர்ந்த முளரி ஹீரோ, யமகன் மகன் அர்ஜூன்வாரியர் )
மிரட்டும் அஃது எதுவென இந்த வேங்கை துப்பறிந்து விடுமா ?