அஃது 9

Akthu9

அஃது 9

9 அஃது !!

தொடரும் மர்மம் பிண்ணனி என்ன? 

காத்திருந்து கருவறுக்கிறதா அஃது? 

ஏன் எதற்கு, பிள்ளைகள் நிலை என்ன மொத்த தமிழ்நாடும் பதற வைத்த கடத்தல்காரனின் நோக்கம் தான் என்ன என்று மைக்கோடு அத்தனை பேரும் ஊருக்கு வெளியே குவிந்து நின்றனர்... 

அருண் ரவி கிருஷ் மூவரும் பீதியில் உறைந்து போயினர்..  

"மாமா மனச விட்டுறாதீங்க , ஒன்னும் நடக்காது நம்ம புள்ள கெடச்சிடும் என்று அம்சவேணி உடைந்து போய் உட்கார்ந்திருந்த அருண் தோளில் தட்டிக் கொடுக்க சட்டென அவள் மடியில் படுத்துக்கொண்டான் ...

பயமா இருக்கு அவங்க ரெண்டு பேருக்கும் ஆறுதல் சொன்ன, எனக்கு இப்ப ஆறுதல் தேவைப்படுது அம்சா , பிள்ளைகளை ஏதாவது பண்ணிடுவானோன்னு பயமா இருக்குடி ... ஏன் எதுக்கு எது எங்களை தொடர்ந்து வருது... யாரு அஃது ? எதுக்காக பண்றாங்க... நாங்க மூணு பேரும் அப்படி என்ன பண்ணினோம் யோசிச்சு யோசிச்சு எனக்கு பத்து நாளா, மண்டை வெடிக்குது அம்சா

"அதாங்க கேட்கிறேன் குழந்தையை திருடுறவன் எதுக்கு தேடித்தேடி உங்க மூணு பேர் குழந்தையையும் திருடணும் ... திருடுறது தான் அவனுடைய நோக்கமா? இல்ல உங்களோட பிள்ளைய கடத்துறது நோக்கமா

"தெரியலடி   

வாரியர் சார்கிட்ட சொன்னீங்களா..

வந்துட்டு இருக்கேன்னு சொன்னார் ... சிறுது நேரத்தில் , அர்ஜூன் வாரியர் சம்பவ இடத்திற்கு வந்து விட்டான்....

சார் வேணும்னா திருவிழாவை நிப்பாட்டி வச்சிடவா என்று கோவில் நிர்வாகி கூற

"தனிப்பட்ட பிரச்சனைக்காக எதையும் நிப்பாட்ட கூடாது திருவிழா நடந்துகிட்டு இருக்கட்டும் நான் பாத்துக்குறேன் "

"சார் மூணு குழந்தை காணாம போய் இருக்கு எங்களோட பங்களிப்பு இருக்கணும்னு நினைக்கிறேன் ; உங்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க நாங்க அதை செஞ்சுடுகிறோம்

"நீங்க இந்த விஷயத்தை வெளியே சொல்லாம அவரவர் வேலைய பாருங்க போதும், குற்றவாளியை கலைச்சு விடாதீங்க ,அதனால தான் பத்திரகக்கை துறையை ஊருக்குள்ள அலோ பண்ண விடல , நாம அசப்பு காட்டினா அவன் அலர்ட் ஆகிடுவான் , சோ அவன அப்படியே ப்ரீயா விட்டாதான் எங்களுக்கு பிடிக்க ஈசியா இருக்கும்..

சரிங்க சார் என்று அவன் போக்கில் விட்டு விட ... அதிக போலீஸ் இறக்காது அர்ஜூன் மட்டும் தான் அங்கே நின்றான் ..அவனுக்கு எடுபிடிக்கு நாராயணன் இருவரும் மப்டியில் தான் வந்திருந்தனர் 

டேய் எனக்கு இவர் மேல நம்பிக்கை இல்லைடா என்று ரவி கூற 

ஏன்டா ?

"பின்ன இருபது நாளாக போகுது கண்டுபிடிக்கிறேன்னு சொல்றார் ... ஆனா மூணு பிள்ளையும் காணாம போனது தான் மிச்சம் , ஒரு துருப்பு கூட அவர் கண்டுபிடிச்சது போல இல்லை 

"ம்ம் ரொம்ப மெத்தனமா இருக்காரோன்னு எனக்கும் தோணுது என்று கிருஷ் கூற .... 

"இல்லடா அவர் எதை கேண்டில் பண்ணினாலும் சஸ்ட் லைக் தட் போல தான் கேஷுவலா தான் இருப்பார்னு கேள்வி பட்டிருக்கேன் "

"சஸ்ட் லைக்குன்னு போக இது குட்டி விஷயமா அருண், மூணு பெண் குழந்தைக விஷயம் 

"என்ன பத்தி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று அர்ஜூன் வர கப்சிப் என மூவரும் வாயை பொத்தி கொள்ள 

"இல்லை சார் சும்மாதான் 

"என்னடா இந்த கேனப்பய வர்றான் போறான் பிள்ளைகளை கண்டுபிடிச்சுடுவானான்னு கெட்ட வார்த்தையில திட்டுட்டு இருக்கீங்க ரைட் 

"அய்யோ சார் கெட்ட வார்த்தை எல்லாம் போடல என்று ரவி பதற 

"அப்போ திட்டி இருக்கீங்க 

"அது 

"காணாம போனது என் பிள்ளையா பதற

"என்ன சார் இப்படி பேசுறீங்க என்று அருண் கேட்க 

"பின்ன என்ன குறை சொன்னா நான் இப்படிதான் பேசுவேன் ... ஏன் நீங்க இறங்கி கண்டுபிடிக்க வேண்டியதுதான முடியாதுல்ல, அப்போ தள்ளி நின்று வேடிக்கை தான் பார்க்கணும்... குழந்தைக்கு தகப்பன் நீங்க மூணு பேரும், பிள்ளைங்க என்ன செய்றாங்க ஏது செய்றாங்கன்னு பாக்குற வேலையை கூட ஒழுங்கா செஞ்சது போல இல்ல... நீங்க என்ன குறை பேசுறீங்களா? நான் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவன், இப்படித்தான் பார்ப்பேன் ... முடிஞ்சா அமைதியா இருங்க, இல்ல வேற எவனையாவது வச்சு பாத்துக்கோங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று வாரியன் எகத்தாளமாக தோளை உலுக்க அவனை விட்டால் வேறு வழி இல்லை என்று அறிந்த மூவரும் வியர்த்து வடிந்தனர்.. 

சாரி சார் ..

ம்ம் , சம்பவம் நடந்த இடத்துல இருந்தது யார் அருண் அவங்களை வர சொல்லுங்க விசாரிக்கணும் 

என் வொய்ப் தான் இருந்தா, பட் அ‌வளும் கவனிக்கல..."

"கூப்பிடுங்க உங்க மிஸஸ்ஸை

"அவ எதையும் பார்க்கலைன்னு சொல்றாளே சார் 

"ப்ச் கூப்பிடுங்க.. சிறு துரும்பும் கேஸூக்கு தேவைப்படலாம்....

"ம்ம் என்று உள்ளே போன அருண் 

"அம்சா சார் கொஞ்சம் வாய்க்கு வந்த மாதிரி பேசுற ஆள் பார்த்து பேசு பயப்படாத 

"உண்மையை சொல்ல போறேன் எதுக்கு பயப்படணும் அவரும் நம்மள போல மனுசன் தான நான் பார்த்துக்கிறேன் மாமா .... என்று அர்ஜூன் முன்னால் வந்து நின்றாள் 

வணக்கம் சார் என்ற அம்சாவுக்கு தலை அசைப்பை கொடுத்தவன்...  

"உங்க பொண்ணு வீட்டை விட்டு வெளியே வரும்போது இங்க யாரெல்லாம் நின்னாங்கன்னு பாத்தீங்களா??

"இல்ல சார் நான் மாமா கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன் என்றதும் அருண் அவள் தோள்பட்டையை இடிக்க , அர்ஜுன் வாரியர் கைநீட்டி அவனை தடுத்தவன்..

"அவுங்கள அவங்க ப்ளோவுல பேச விடுங்க அருண் .... நீங்க சொல்லுங்க..

"நான் மாமா கிட்ட சண்டை போடறதுல பசியா இருந்தேனா என்றதும் வாரியர் அருணை பார்க்க

"பிஸியா இருந்ததைதான் சார் பசியா இருந்ததுன்னு சொல்றா, கொஞ்சம் இங்கிலீஷ் மேடம்க்கு வராது 

"ஓஓ, உங்களுக்கு புரியுற அளவுக்கு பேசுறாங்கல்ல போதும்... நீங்க ட்ரான்ஸ்லேட் பண்ணுங்க, கலெக்டர் படிச்சா மட்டும் நீங்க எல்லாரும் அவங்கள வேலைக்கு அனுப்ப போறீங்களா, உங்க வீட்டோட உட்கார்ந்து உங்க அழுக்கு துணியை தானே துவைக்க விட போறீங்க, பிறகு என்னத்துக்கு படிப்பு வேணும் , இந்த படிப்பு போதும் நீங்க சொல்லுங்க ..

"அட அட , பரவாயில்லையே மாமா, இந்த போலீசு வெளுத்து வாங்குகிறாரே.. என் மனசுல உள்ள பாரமே நீங்கி போச்சு ....எப்படியும் நம்ம பிள்ளையை சார் கண்டுபிடிச்சு புடுவாக எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு

"சும்மா இருடி அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு என்று அருண் அமைதியாக மனைவியை கடிய..

ம்ம்

" நல்லா யோசிச்சு பதில் சொல்லணும் மிஸஸ் அருண் , நீங்க போன் பேசிக்கிட்டே இருக்கும் போது எப்படியும் திருவிழா கூட்டத்தை வேடிக்கை பார்த்திருப்பீங்க தானே என்றதும் அம்சவேணி நாடியை தட்டிக் கொண்டே 

"ம்ம் பார்த்தேன் ஆனா எதையுமே கவனிக்கலையே சார் 

"நீங்க கவனிக்காம இருந்திருந்தாலும் கண்ணு பார்த்து இருக்கும், அதை மூளை சேகரிச்சு இருக்கும் , அத இதயம் உள்வாங்கி இருக்கும் சம்திங் ஏதாவது ஏதாவது ஏதாவது, ஏதாவது நீங்க பார்த்த காட்சிகளை உங்க கண்ணு கலெக்ட் பண்ணி இருக்கும் யோசிச்சு பாருங்க, அப்படியே என்னன்ன நடந்தது சொல்லிட்டே வாங்க ... 

"ம்ம் நான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன், 

"ப்ச் அந்த சண்டைய விட்டுட்டு வேற எதையாவது யோசிங்க" என்ற வாரியர் குரலில் திடுக்கிட்டு போன அம்சவேணி.. தலையை தடவிக் கொண்டே

அப்படியே ரீவைண்ட் பண்ணி காட்சிகளை பின்னால் இழுத்தாள் ... புருஷனை திட்டிக்கொண்டே இருக்கும் பொழுது அவன் மகள் அம்மா நான் பலூன் வாங்கிக்கிறேன் என்று மறுபடியும் உள்ளே வந்தது ஞாபகம் வந்தது பாட்டிகிட்ட காசு வாங்கிட்டு போ என்று சொல்லிவிட்டு இவள் பேச்சை தொடர்ந்ததும் ஞாபகம் வந்தது... மகள் பலூனை கையில் வைத்துக்கொண்டு விளையாடிய காட்சி அப்படியே வந்து போக ...

"சார் என் பொண்ணு தான் பலூன் வாங்கப் போறேன்னு போனா, பலூன் வாங்கி விளையாடிகிட்டு இருந்தா என்றதும் அர்ஜூன் வாரியர் கண்ணைச் சுருக்கியபடி 

"வேற வேற 

"ம்ம் அப்பறம் கொஞ்ச நேரத்துல என்றவள் யோசனையாக மீண்டும் காட்சிகளை நினைவு படுத்த 

"அம்மா இந்த வளையல் வாங்கவா, இந்த கலர் வாங்கவா என்று இரண்டு வளையலை தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஞாபகம் வந்தது ...

"வளையல் வாங்கிக்கவா எது வாங்கன்னு வந்து கேட்டா ... 

"அப்பறம் 

"ஆனா அதுக்கு பிறகு இது வாங்கி இருக்கேன்னு வந்து சொல்லவே இல்ல சார்... நான் இவர்கிட்ட பேசி முடிச்சு குழந்தையை வந்து பார்க்கும்போது குழந்தை இல்ல அவ கையில வச்சிருந்த பலூன் இருந்தது..

"வளையல் இருந்ததா

"இல்ல சார் 

"ஓஓஓஓஓ எந்த இடத்தில உங்க மக நின்னா , அந்த இடத்தை வந்து காட்டுங்க என்றதும் அம்சவேணி தன் வீட்டிற்கு முன்னால் மணல் பாங்காக இருந்த இடத்தில் வந்து 

"இங்க தான் என சுட்டிக்காட்டியவள் 

"எங்க வீட்டு வாசல்ல இதுல தான் நின்னுகிட்டு இருந்தா சார் என்றதும் அர்ஜூன் வாரியர் கீழே உட்கார்ந்து அந்த மணலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் , அங்கே கிடந்த வண்டி தடங்களை கூர்மையாக பார்த்துவிட்டு 

"ரொம்ப நேரமா இந்த இடத்துல ஒரு வண்டி நின்னு இருக்கு, அதோட தடம் அழுந்தி மணல்ல பட்டிருக்கு கொஞ்ச நேரம் நின்னு இருந்த வண்டியா இருந்திருந்தா, அந்த வண்டியோட தடம் இவ்வளவு ஆழ பதிஞ்சிருக்காது ... நேத்து ராத்திரி பெஞ்ச மழையில அந்த வண்டி இங்க நின்னு இருக்கு அதோட தடம் மணலுக்குள்ள கிளீனா பதிஞ்சிருக்கு... சோ நேத்து ராத்திரியிலிருந்து இந்த பொண்ண இந்த வண்டியில இருந்து அவன் வேவு பாத்து இருக்கணும் என்ற அர்ஜூன் வாரியரை அத்தனை பேரும் வாயை பிளந்து பார்த்தனர்

"இங்க என்னென்ன வண்டி நின்னதுன்னு செக் பண்ணுவோமா சார், கார் பைக் எதையும் விட வேண்டாம்...

"நோ நோ இந்த வண்டித்தடம் காரோடதோ பைக்கோடதோ கிடையாது என்ற அர்ஜுனை அத்தனை பேரும் புரியாமல் பார்க்க 

"டயரோட அளவு ரொம்ப சின்னதா இருக்கு, லைக் பைக்கை விட சின்னது , சைக்கிளை விட பெருசு என்று தன் பேனாவை வைத்து அந்த தடத்தை வட்டம் போட்டு காட்டினான்

:நாராயணா 

"சார் இதோ வந்துட்டேன் என்று நாராயணன் வந்து அர்ஜுன் வாரியர் முன்னால் நிற்க 

"இங்க ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் கடை வைக்கிற வண்டி இல்ல பாணி பூரி வண்டி அந்த மாதிரி சின்ன சைஸ் வியாபார வண்டி ஏதாவது இருந்ததான்னு விசாரி

அந்த மாதிரி வண்டியில ஏதோ ஒன்னு தான் இங்க நின்னு இருக்கு 

"சார் அப்படியெல்லாம் எந்த வண்டியும் நிக்கல ஒரு வளையல் வண்டி மட்டும் தான் நின்னது என்று அம்சவேணி கூறவும் யோசனையாக அம்சவேணியை நோக்கி திரும்பிய அர்ஜூன் வாரியர் கண்ணில் அம்சவேணி கையில் கிடந்த சிவப்பு கயிறு பட்டுவிட... சட்டென அவள் அருகில் வந்தவன் தன் பேனாவை வைத்து அவள் சிவப்பு கயிறை தென்னி எடுக்க , அந்த சிவப்பு கயிறு அவன் கையோடு வர அதை தூக்கிப் பார்த்தான்..

"இந்த கயிறு எங்க உள்ளது, எப்படி இது உங்களுக்கு கிடைச்சது ?

"அது அந்த வளையல் கடையில தான் சார் வாங்கினேன் , பாக்க அழகா இருந்தது; இது என்ன கயிறு அண்ணான்னு கேட்டேன், சாமிக்கு நேம்சத்துக்கு கட்டுற கயிறும்மா, யாருக்காவது உடம்பு சரியில்ல இல்லன்னா, பிரிஞ்சவங்க சேரனும் , ஏதாவது கிடைக்கனும்னா இந்த கயிறுல பாதியை கடவுள் சன்னதியில் வச்சு மரத்தில கட்டிட்டு மீதியை கையில கட்டுனா நெனச்சது நடக்கும்னு ஒரு ஐதீகம் இருக்குன்னு அவர்தான் சொன்னார் நானும் ஒரு முழம் கொடுங்கன்னு கேட்டு வாங்கி என் மாமா கூட சேரனும்னு கோவிலுக்கு கட்டிட்டு மீதியை கையில கட்டிக்கிட்டேன் சார் ... ஆனா அந்த அண்ணன் எங்கிட்ட பேசினாலும் பார்வை எல்லாம் என் மக மேல தான இருந்துச்சு சார் இங்கேயே தான் பார்த்துட்டு இருந்தார்.... ஒருவேளை என்று அவள் நாடியை தட்டி யோசனையாக நிற்க 

"சார் ஒரு வளையல் வண்டிதான் நின்னிருக்கு போல இருக்குது ஏதோ வெளியூர்க்காரன் போல , ரெண்டு நாளா இங்க வளையல் கடை போட்டு உட்கார்ந்து இருந்ததா கேள்வி , இப்போ ஆளு மிஸ்ஸிங் என்று நாராயணன் ஓடி வர ..

"ஓஓஓ அன்னைக்கு பிள்ளையார் கோவில்ல ஒரு லிஸ்ட் எடுக்க கொடுத்தோம்ல அதை கொண்டு வா.. அந்த வளையல் காரன் தான் மூணு பேர் குழந்தையையும் கடத்துனது... அவன் வளையல்கடைக்காரனா, இல்ல வளையல்காரன் வேசத்துல வந்தானாங்கிறது தெரியல ... பிள்ளையார் கோவில்ல உள்ள லிஸ்ட்ல உள்ளவனும், இவனும் ஒன்னா இருந்தா நோ டவுட் இவன் தான் அவன் அவன்தான் இவன் என்று முடிக்க

சார் நமக்கு வந்திருக்க லிஸ்ட்ல கடைசியா அந்த கோவிலுக்கு வந்துட்டு போனது அதே வளையல் கடைக்காரன் தான் போல ரெகுலரா அங்க வர்றவன் தானாம் என்று நாராயணன் வாயை பிளக்க 

நோட் டவுட் அக்யூஸ்ட் அவன்தான் ஆனா நமக்கு ரிஸ்க் இங்கதான் இருக்கு , கண்டிப்பா அவன் அவனுடைய அடையாளத்தை நமக்கு காட்ட மாட்டான் ... மாறுவேடத்திலதான் இருப்பான், மிஸஸ் அருண் 

சொல்லுங்க சார் 

அவன் எப்படி இருந்தான் 

அது தாடி மீசைன்னு கண்ணு தவிர எதுவும் தெரிலையே சார் 

ப்ச் .... என்ற அர்ஜூன் இவ்வளவு பெரிய கூட்டத்துல அவனை கண்டு பிடிக்கிறது கஷ்டம்

சார் அந்த வண்டியை வச்சு 

ஹாஹா , இவ்வளவு நேரத்துல, அந்த வண்டியை அவன் எங்கேயாவது விட்டுட்டு கூட்டத்தோடு கூட்டமாக கலந்து இருப்பான்"

"அப்போ எப்படி சார் கண்டுபிடிக்கிறது

"ம்ம் பிடிப்போம் வேற வழி 

"நாங்க ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா சார் உங்களுக்கு சப்போர்ட்டுக்கு எத்தனை பேர் வேணும்னு சொல்லுங்க சார் "

" அர்ஜுன் வாரியருக்கு சப்போர்ட்டுக்கு ஆளா நான் ஒத்த ஆள் ஆயிரம் பேருக்கு சமம்... யாரும் வேண்டாம் நானே பாத்துக்கிறேன் "என்று சட்டையை முறுக்கிக்கொண்டு அர்ஜூன் வாரியார் கூட்டத்திற்குள் கூட்டமாக கலந்து நடக்க ஆரம்பித்தான் ...

நெஞ்சை தடவிக் கொண்டே நாராயணனை பார்த்த மூவரும் 

"அவர் மட்டும் எப்படி கண்டுபிடிப்பார், இப்படி அசால்டா சொல்லிட்டு போறார் ,, 

"அர்ஜூன் சார பத்தி உங்களுக்கு தெரியல அவர் அவர மட்டும்தான் நம்புவார், எதையுமே கண்டுக்காத மாதிரி தான் இருப்பார், பார்த்தீங்க தானே ஒரு வண்டி டயரை வச்சு எப்படி அக்யூஸ்டை கண்டுபிடித்தார்... ஆள் மூளைக்காரன் சார் நீங்க உங்க பாட்டுக்கு இருங்க , இந்த லட்சம் பேர்ல அக்யூஸ்ட் எவன்னு அவர் கண்ணுக்கு மட்டும் கரெக்ட்டா தெரியும் பீல் பண்ணாதீங்க.. பிள்ளைங்கள கண்டுபிடிச்சிடுவார் என்றதும்..

இவர்களுக்கும் இப்போதுதான் மூச்சு வந்தது போல் உணர்வு .. அத்தனை பேரும் அம்சவேணி வீட்டு வாசலில் உட்காந்து விட்டனர்...

இந்த கூட்டத்தில் நின்று திண்ணையில் உட்கார்ந்து கதறி கொண்டிருந்த அவர்களை சிரித்தபடி வேடிக்கை பார்த்தபடி கடந்து போனது அஃது??