அஃது 6

Akthu6

அஃது 6

6 அஃது !!

கிருஷ் கமிஷனர் ஆபீஸ் போய் தன் மகளை கடத்தியதாக முறைப்படி கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் செய்துவிட்டு வீட்டிற்கு வர, வீடு இருட்டாக கிடந்தது.. 

எங்க போனா? இப்போதுதான் மனைவி பற்றிய அவனுக்கு யோசனை வந்தது ... 

நான்சி நான்சி மனைவியை அழைக்க சத்தம் இல்லை... 

ஒருவேளை குழந்தை காணாமல் போய்விட்டது என பயந்து சொன்னது போல ஏதாவது செய்து விட்டாளோ? என்று இவனுக்கு திக்கென ஆகி போக, கிருஷ் வேகமாக வீட்டிற்குள் வந்து விளக்கை ஆன் செய்யப் போக, காலில் ஏதோ தட்டுப்பட்டு பயந்து போய் விளக்கை ஆன் செய்துவிட்டு பார்க்க.. அவன் மனைவி ஹாலில் அவன் காலடியில் சுருண்டு கிடந்தாள்... அவ்வளவுதான் இவனுக்கு உயிர் ஒரு நிமிடம் ஆடி நின்றுவிட்டது...

நான்சி இஇஇஇ என்று பயந்து அவள் அருகே கிருஷ் குத்த வைத்து உட்கார்ந்து , அவளை உருட்டி மல்லாக்க போட , கண்களை உருட்டி அவனை நான்சி ஒரு பார்வை பார்க்க ... அதன் பிறகு தான் இவனுக்கு உயிர் வந்தது... எங்கே விஷத்தை குடித்து செத்து மலந்து விட்டாளோ என்று ஒரு நிமிடத்தில் பீதியாகிப்போனது..

"அப்பாடி!! உனக்கு ஒன்னும் இல்லையே..

"ஏன் பொண்டாட்டி செத்துப் போயிட்டா , பிள்ளையும் காணாம போயிட்டு, தொல்லையா இருந்த ரெண்டு பேரும் போயிடுவாங்க, உங்களுக்கு புடிச்ச மாதிரி இன்னொரு கல்யாணம் கட்டிக்கலாம்னு ஆசையா வந்தீங்களோ... உங்க ஆசையில மண்ணள்ளி போட்டுட்டேனா கிருஷ்" என்ற மனைவி புரிதலற்ற பேச்சில்  

ஏய் இஇஇஇஇஇ என்று அவளை அடிக்க கைநீடிய கிருஷ் சட்டென தன் கையை தொடையில் குத்திக் கொண்டான் ...

அவளுக்கும் பிள்ளை காணாமல் போனதில் வருத்தம் இருக்குமே, 

"அடிங்க கிருஷ், அடிங்க ஏன் நிறுத்திட்டீங்க? உங்க ஆசை தீர என்ன அடிச்சே கொன்னுடுங்க.... எப்படி எப்படி அழகா இருக்கேன்னு, அகம் புடிச்ச கழுதையை ஆசைப்பட்டு கட்டிக்கிட்டதுக்கு கஷ்டப்படுறீங்களா ? அத்தனை பேரும் முன்னாடியும் வச்சு ஏதோ நான் பிள்ளை ஒழுங்கா வளக்காத மாதிரி, என்னை எவ்வளவு அசிங்கமா பேசினீங்க.. என்ன எல்லாரும் என்னவோ நான் திமிரு புடிச்சவ மாதிரியும் , வீட்டில் தின்னுட்டு தின்னுட்டு மல்லாக்க படுத்து கிடந்தவ மாதிரியும் எல்லாரும் குறை பேசினாங்க தெரியுமா? 

உங்களுக்கு அதெல்லாம் எங்க காதுல கேட்க போகுது கல்யாணம் முடியுற வரைக்கும் மானே தேனே கல்யாணம் முடிஞ்சு பத்து வருஷம் ஆயிட்டா கழுதை எருமை ஆகாதவ அப்படித்தானே கிருஷ்??" என்று அவள் ஆற்றாமையில் அழுகையை விழுங்கினாள்

கிறுக்கு புடிச்சு போய் இருக்கேன் நான்சி, நீ வேற என்ன டார்ச்சர் பண்ணாத "

"ஓ நான் பேசுறது எல்லாம் டார்ச்சரா இருக்கா, கல்யாணத்துக்கு முன்னாடி பேசுடி உன் பேச்சு எல்லாம் எனக்கு இனிக்குதுன்னு சொன்னீங்க..

ப்ச் இப்போ உன் பிரச்சனையை பாக்கவா இல்ல காணாம போன நம்ம புள்ளைய தேடவா?

"என் புள்ள காணாம போனதுக்கு நீங்க தான் காரணம் அவங்க கூடெல்லாம் சேர்ந்து சுத்தாம இருந்திருந்தா, இன்னிக்கு என் புள்ள காணாம போயிருக்காது... என்னவோ அந்த வருத்தம் வலி எனக்கு இல்லாத மாதிரி பேசுறீங்க, அந்த குழந்தையை பத்து மாசம் வயிற்றில வச்சு சுமந்தது நான்.... எனக்கு இல்லாத வலியும் வேதனையும் உங்களுக்கு வந்துருச்சா? அப்படி அந்த பிள்ளைக்காக நீங்க என்ன பண்ணுனீங்க? என்ற மனைவியை அவன் பல்லை கடித்துப் பார்க்க

"குழந்தையை கொடுக்கறதுக்காக கஷ்டப்பட்டிங்க அவ்வளவுதான், நீங்க செஞ்ச தியாகம் ... அதுக்கு பிறகு ராத்திரி பகலா வளர்த்தது நான், அந்த குழந்தையை படிக்க வச்சது நான், அந்த குழந்தைக்கு தேவையானது எல்லாத்தையும் செஞ்சது நான் , அந்த குழந்தை அப்பா எப்பம்மா வருவார், அப்பா எப்ப அம்மா என்கூட விளையாடுவார்னு ஏக்கமா கேட்கும்போதெல்லாம் அப்பாவாவும் அம்மாவாவும் அந்த குழந்தையை பார்த்துக்கிட்டது நான் , ஏன்னா உங்களுக்குதான் உங்க பிரெண்ட்ஸ தாண்டி இந்த வீட்ல வேற எதுவுமே கண்ணுக்கு தெரியாதே கிருஷ் "

நான்சி 

கொஞ்சம் நேரம் டைம் கிடைச்சாலும் பிரண்ட்ஸோட வாலை புடிச்சுக்கிட்டே போயிடுவீங்க , போயிட்டு வரும்போது நிதானமாவா வருவீங்க, முழுக்க குடிச்சிட்டு வந்து சத்தமே இல்லாம கமுக்கமா பெட்டில படுத்துக்குவீங்க, நான் இதுக்கு எல்லாத்துக்கும் பூசி மொழுகி பல கதை சொல்லி, வீட்ல உள்ள ஆட்களை எல்லாம் அனுப்பி வைக்கணும்...ஏன்னா உங்க மானம் போக கூடாதுன்னு பார்த்தேன் பாருங்க , இப்ப உங்களுக்கு நான் இப்போ அசிங்கமா தான் தெரியும் ... பணக்காரி திமிரு புடிச்சவ இப்படி எல்லாம் சொல்லி வச்சிருக்கீங்க போல இருக்கு.... என்னமோ என்ன கட்டினதனால தான் உங்க வாழ்க்கையே கேள்விக்குறியாயிடுச்சு, நண்பர்களையெல்லாம் நான் பிரிச்சுட்டேங்குற அளவுக்கு என்னை சதிகாரி மாதிரி பேசி வச்சிருக்கீங்க... "

"நான்சி போதும் ஊஊஊஊஊ நீ வாய தொறந்தாலே எரிச்சலா இருக்க , கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு உள்ள போய் ரெஸ்ட் எடு 

"ஹான் வாயை திறக்க கூடாதா.... உங்கள இப்ப வரை புருஷன்னு நினைச்சதனாலதான் இன்னைக்கு நான் பழியை சுமந்துகிட்டு நிக்கிறேன் எனக்கு பதில் சொல்லுங்க கிரிஷ், என்னைக்காவது உங்க பொண்டாட்டிங்கிற இடத்துல இருந்து நான் தவறி இருக்கேனா என்று நான்சி அவன் சட்டையை பிடித்து இழுத்தாள்.... கிருஷ்க்கு பேச வார்த்தை வரவில்லை...

எப்படி வரும் ?

இவனை விட நான்கு மடங்கு பணக்காரி நான்சி, இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள் இவனுக்காக இங்கே வந்த பிறகு எவ்வளவு மாற முடியுமோ அவ்வளவு மாறிக்கொண்டாள்.. சேலை தான் உடுத்த வேண்டும் என்றான்.. சேலைக்கு மாறிக்கொண்டாள், வேலைக்கு போகக்கூடாது எனக்கு மனைவியாக என் பிள்ளைக்கு தாயாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றான் தனிமைக்கும் பழகிக் கொண்டாள்.. நண்பர்கள் பார்ட்டி கொண்டாட்டம் என்று ஜாலியாக சுத்திப் பழகியவள், இந்த வீட்டில் அவனுக்காக அவன் மனைவியாக மாறிக்கொள்ள அவள் பட்டபாடுகள் அவளுக்கு மட்டும் தான் தெரியும் ... இலகுவாக நீ எனக்காக என்ன செய்தாய் என்று இவன் ஒரு கேள்வியை கேட்டு விட்டான் .... ஆனால் மொத்தமாக அவள் மனம் ஆடிப் போனது... 

  "நான் பண்ணுன தியாகம் எல்லாம் உங்களுக்கு தெரியலனாலும் பரவாயில்லை பத்து பேர் முன்னாடி என்ன காட்டிக் கொடுக்காம, பத்து பேர் முன்னாடி என்னை விட்டுக் கொடுக்காம இருந்திருக்கலாமே கிருஷ்...  

"சரி விடு நான்சி அப்போ இருந்த கோவத்துல

"கோவத்துல வார்த்தை வரல கிருஷ், இப்ப எல்லாம் உங்க மனசுக்குள்ள இருந்து தான் இந்த வார்த்தை வருது ... ஏன் உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் பிரிச்சுட்டேங்குற கோபமா? அவங்களுக்கு அறிவில்லை , உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு பிள்ளை இருக்குன்னு கொஞ்சமாவது யோசித்து பார்த்து இருக்காங்களா? அதனாலதான் உங்க எல்லாரையும் பிரிச்சேன் ... ஒரு புருஷனுடைய முதல் பீரியாரிட்டி அவன் குடும்பமா இருந்தா மட்டும்தான் குடும்ப வாழ்க்கையை காப்பாத்திக்க முடியும் கிருஷ் ..."

குழந்தை காணாம போனதுக்கும், இதுக்கும் என்னடி சம்மந்தம் என்று அவன் பல்லை கடிக்க 

"இருக்கு குழந்தையை கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விட்டுருக்கலாம்ல நீ என்ன புடிங்கிகிட்டா இருந்தன்னு கேட்டீங்களே... அதே கேள்வியை நான் உங்ககிட்ட கேட்டா என்ன செய்வீங்க ?? ஒரு நண்பனோட குழந்தை காணாம போய் இருக்கு , ஒரு பத்து நாள் நம்ம குழந்தையை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு உங்களுக்கு வலி எடுத்ததா? பத்து நாளா எனக்கு ஓவர் பீரியட் உங்களுக்கு நல்லாவே தெரியும் , எழும்ப கூட முடியாது, உங்களுக்கும் சமைச்சு குழந்தையையும் பார்த்து எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு நீங்க கண்கூடா பார்த்தும், எப்படி இப்படி எல்லாம் என்ன பேச முடியுது கிருஷ்??

"ஏன் குழந்தை கிடைச்சிடும் , எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு , அப்படி கிடைக்கலன்னா என் குழந்தையோட சேர்ந்து நானும் போயிடுவேன்.... ஆனா என் பொண்டாட்டி பிள்ளை சாகறதுக்கு காரணம் நான் தான்னு உங்களுக்கு தெரியணும்ல... அதுக்காக தான், நான் இன்னைக்கு பேசிட்டு இருக்கேன்... பிடிக்காத பொண்டாட்டி பேசுறது ,பார்க்கிறது எல்லாம் திமிரா தான் இருக்கும்.. உங்களுக்கு நான் தெவிடிட்டேன்ல, என்னை புடிக்கலல்ல... அவன் அமைதியாக அவளை பார்க்க 

இந்த உலகத்திலேயே உன்னை தாண்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லி சொல்லி காதலிச்சீங்களே "என்றவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது...

 காதல் காணாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவள் மீது பொட்டு நேசம் கூட இல்லாது மொத்தமாக வெறுத்து விட்டானோ வெறுப்பின் உச்சம் தான் அவன் பேசும் வார்த்தைகளோ?? குழந்தை காணாமல் போனதற்கு நீ தான் காரணம் என்று ஒரு பழியை சர்வசாதாரணமாக தன் கணவன் போட , அவனோடு வாழ்ந்த வாழ்க்கையே அவளுக்கு வெறுத்துப் போனது போல் உணர்வு ... குழந்தையை பறிகொடுத்த வலி , கணவன் பேசிய வலி என்று எல்லாம் சேர்ந்து அவளை பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது....  

காலையில் போனவன் , தன் மனைவி இருக்கிறாளா செத்தாளா குழந்தையை நினைத்து அழுதிருப்பாளே அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு இப்படி ஆகிவிட்டது , இப்படி செய்திருக்கிறேன் என்று ஒரு அப்டேட் சொல்வோம் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் மனைவிதானே, என் காலை சுற்றியே கிடக்கும் நாய்க்குட்டிதானே என்ற நினைப்பில் இருக்கிறானோ என்ற வருத்தம் வெடித்து விட்டது .... 

அவள் பேசப் பேச கிருஷூக்கு பதில் பேச முடியவில்லை ஏனென்றால் அவள் பொய் பேசவில்லையே , அவள் பேசியது அத்தனையும் உண்மை .... தன் தவறை மறைக்க அவளைத் தவறாக சித்தரித்து விட்டானோ?? நண்பர்களுக்காக ஒதுக்கிய நேரத்தை மனைவிக்கு ஒதுக்கியது இல்லை.. மகள் எத்தனாவது வகுப்பு படிக்கிறாள் என்று தெரியாது... மகளை மனைவியை நேசிக்கிறான்.. ஆனால், அவர்களுக்காக கடமையை மட்டுமே செய்து இருக்கிறானே தவிர நேசத்தில் பெரும்பிழையை தான் செய்து கொண்டிருந்தான்..

பிள்ளை காணாமல் போன பிறகுதான் ஐயோ என் பிள்ளை என்று பதறியது, மனைவி மருகி அழும் பொழுது தான் அவளை அணைத்து தூக்க ஆசை ஆனால் அவளோ திமிறி அவனை விட்டு எழும்பி படுக்கையறையில் போய் படுத்துக்கொள்ள இவனுக்கு விக்கி கொண்டு வந்தது 

தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் என் கண்ணு முன்னாடி சந்தோஷமா சிரிச்சு, அப்பா கிருஷ்னு சுத்தும் போது அவங்களையெல்லாம் விட்டுட்டு இப்போ தவிச்சு நிக்கிறேன்.. என்ன விட்டு ரெண்டு பேரும் விலகி நிற்கிறாங்க, நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லா பாத்து இருக்கணும் பாக்க தவறிட்டேன், எனக்காக தானே ரெண்டு பேரும் வாழ்றாங்க, இவங்களை விட்டுட்டு எனக்கு இந்த உலகத்துல வேற என்ன இருக்கு ... புரியாம பண்ணிட்டேனோ? என்று தன் நெஞ்சை தடவிக் கொண்டு நான்சி போன அறைக்குள் அவனும் போனான்..

இவ்வளவு நேரம் இறுகி பிடித்து இருந்த நான்சி ஓ என்று கதறி அழ ஆரம்பிக்க... கிருஷ் அவள் அருகே போய் படுத்து மெல்ல அவளை இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டவன்

சாரி நான்சி , உனக்கு நான் மட்டும் தான் எப்பவும் தேவைப்பட்டு இருக்கேன்.. அது எனக்கு தெரிஞ்சும் உன்னை உதாசீனப்படுத்திட்டேன் ஐயம் சோ சாரி இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்டி , ஒரு வாய்ப்பு தாயேன் என்ற கணவனை திரும்பிப் பார்த்த நான்சி 

"வாழ கூட வாய்ப்பு கேக்குறீங்க பாத்திங்களா?? கெடச்ச வாய்ப்பெல்லாம் விட்டுட்டீங்களே பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆனா இனி நம்ம வாழ்ந்து எதுக்கு கிருஷ், நான் கோபக்காரிதான் உங்களை எரிச்சல் படுத்துற மாதிரி பேசுவேன்தான் .. ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் கிருஷ் , அதனாலதான் மருமகனை விட்டுட்டு இங்க வந்துடுடி, அங்க வேலைக்காரி மாதிரி எதுக்கு கிடக்குற, புருஷனுக்கும் சேவை செய்கிற வேலைக்காரியா நீ இங்க வந்துடு, இங்க மகாராணி மாதிரி நீ இருக்கலாம்ன்னு எங்க அம்மா பிரைன் வாஷ் பண்ணும் போது கூட .

 எங்க என்ன புருஷன் கிட்ட இருந்து பிரிச்சுடுவாங்களோன்னு பயந்து அம்மா கூட பேசறது கூட நான் நிறுத்திட்டேன் தெரியுமா? "என்ற அவள் உதடு துடிக்க அவனை பார்க்க .... சட்டென மனைவி உதட்டில் உதட்டை வைத்து அவள் அழுகையை நிறுத்தி விட்டான்..

வலிக்கும் நேரத்தில் உதட்டு முத்தம் வலியை குறைக்கும் இருவரின் இந்த முத்த பரிமாற்றம் அவர்கள் இருவரின் வலியையும் குறைக்க மெல்ல அவள் தலையை தடவி கொடுத்த கிரிஷ்

எப்படியாவது குழந்தையை கண்டுபிடிச்சுடுறேன் என்னை நம்புடி "

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததுனால தான் இன்ன வரைக்கும் உயிரோட இருக்கேன்... ஆனா என் பொண்டாட்டி தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு நம்பிக்கை உங்களுக்கு இல்லாம போயிடுச்சுல்ல

மாத்தி மாத்தி குறை சொல்லிட்டு இருந்தா குறை சொல்லிக்கிட்டே தாண்டி இருக்கணும் .. இப்போ நடக்கிறத பாப்போமே , இனிமே உன்ன அப்படி பேச மாட்டேன்டா என்று கெஞ்சுதலாக க்ரிஷ் அவளைப் பார்க்க ம்ம் என்று ஆமோதிக்க ... இருவருமாக மகளை தேடி அந்த இரவில் காரில் ஒவ்வொரு இடமாக சுற்றினர்... 

நான்சி இந்த கடற்கரை பக்கம் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு வர்றேன் என்று கிருஷ் நடக்க நான்சி ஒரு பக்கமாக மகளை தேட... 

ம்மாஆஆஆஆ என்று ஏதோ குரல் கேட்டு நான்சி திரும்ப கட்டுமரம் காற்றில் அசைந்து கொண்டிருந்தது 

என்ன நான்சி அங்கேயே பார்த்துட்டு இருக்க" 

இல்ல கிருஷ் ,நம்ம பாப்பா சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு .... 

எங்க?

அதோ அந்த கட்டுமரம் பக்கம் 

அவ நியாபகமாகவே இருக்கோம்ல அதான் அப்படி தோணி இருக்கும் நான் அந்த பக்கம் இருந்து தான் வர்றேன் அங்க யாரும் இல்ல "

"ஓஓஓஓஓ பாப்பா கிடைச்சிடும்ல கிருஷ் 

:ம்ம் என்றவனுக்கே பயம்தான் ...இருவரும் காரில் ஏற பிஞ்சு கைகள் தன் தாய் தகப்பனை பரிதவிக்க அழைக்க அக்குழந்தை வாயை உறை அணிந்த கைகள் மூடி சத்தம் இல்லாமல் வைத்திருக்க ... 

கட்டுமரம் பின்னே கிருஷ் மகளை வாயை பொத்தி மறைத்து வைத்திருந்தது அஃது ...