அஃது 5

Akthu5

அஃது 5

5 அஃது !!

திக் திக் நிமிடங்களாக ஒவ்வொரு நொடியும் சென்றது நண்பர்கள் மூவருக்கும் .. அர்ஜூன் வாயிலிருந்து ஏதாவது ஒரு நல்ல வார்த்தை வந்து விடாதா என்று காத்திருக்க .. அவன் ஏதோ பிக்னிக் வந்தது போல வருவதும் போவதும் என்று இருக்க இவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. 

"சார் அவங்களை பார்க்க பாவமா இருக்கு , இந்த கேஸ்ல உண்மையாவே உங்களுக்கு எந்த க்ளுவும் கிடைக்கலையா சார்? காரை ஓட்டிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் தலையை திருப்பி அர்ஜூனை பார்க்க 

"சாதாரண கான்ஸ்டபிள் உனக்கு எல்லாம் பதில் சொல்லனுமா என்ன , அப்படின்னு கேட்டா என்ன செய்வ நாராயணா?"

"சார் நீங்க எனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல... ஆனாலும் மாட்டிக்கிட்டது பச்ச புள்ளக, எனக்கே ஒரு மாதிரி பயமா இருக்கு, அந்த கியூரியாசிட்டில கேட்டுட்டேன் சாரி சார்" என்று அவர் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட

:நாராயணா என்று அவர் தோளில் கை போட்ட அர்ஜூனை நாராயணன் திரும்பி பார்த்த

இத்தனை வருடம் அவனோடு வேலை பார்த்த அனுபவத்தில் ஒரு நாள் கூட நீ கான்ஸ்டபிள் என்று தள்ளி நிறுத்தியதே இல்லை... காபி குடிக்க வர்றியா நாராயணா என்று கமிஷனரும் கான்ஸ்டபிளும் ஒரே மேஜையில் உட்கார்ந்து காபி குடிப்பார்கள் அதில் அவனுக்கு நல்லதும் இருக்கிறது.. தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற காவலர்களைப் பற்றிய செய்திகளை காப்பியை குடித்துக்கொண்டே இவரிடம் கரந்து விடுவான்.... ஆதாயம் இல்லாமல் அர்ஜூன் வாரியர் கண்ணை கூட அசைக்க மாட்டானே

"நீ அழுது கேக்கறதுனால உன்கிட்ட சொல்றேன்.. நீ அந்த முக்குல இருக்குமே அது எந்த கோவில்..ஹான் தாயைப் போலவே பொண்ணு இருந்தா தான் கட்டுவேன்னு அடம்பிடிப்பாரே அந்த காட் பெயர் என்ன?

"பிள்ளையார் சார் 

"ம்ம அந்த கோவிலுக்கு போ ...

"கோவிலுக்கெல்லாம் இவரு போக மாட்டாரே, மேடம் எப்பவாவது வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போனாலும் கோவில் வாசலிலேயே உட்கார்ந்து தேங்காய் உடைச்சு திங்கிறவர் , இன்னைக்கு கோவிலுக்கு போகலாம்னு சொல்றாரு" என்று யோசனையாக நாராயணன் வண்டியை அவன் சொன்ன கோவிலுக்கு திரும்ப ..

"பொண்டாட்டிக்கு பயந்து எல்லாம் கோவிலுக்கு போற ஆள் நான் இல்ல நாராயணா , அங்க கொடுக்கிற தேங்காய் இளசா இருக்கும் , அதோட வர்ற பொண்ணுங்களும் இளசா இருக்கும் சைட் அடிச்சிட்டு அப்படியே தேங்காய் தின்னுட்டு வரலாம்னு போறது தான் ... உங்க மேடம் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கா போல இருக்கு... சார் இதுக்காகத்தான் கோவிலுக்கு வர்றாருன்னு அவளை எப்பவாவது பார்க்கும்போது சொல்லிடு" என்றதும் நாராயணன் பே என்று அர்ஜூன் வாரியரை பார்த்தான்..  

இந்த அர்ஜூன் வாரியர் வாலை ஒட்ட நறுக்குவது அவன் மனைவி ஐஸ்வர்யா மட்டும்தான்... மற்றவர்களிடமெல்லாம் எகிறி எகிறி பேசும் அர்ஜூன் வாரியர் மனைவியிடம் இருந்து போன் வந்தால் மட்டும் ம்ம் ம்ம் வருவேன் , மாட்டேன் , தெரில ஒரு வரி பதில் சரியா போகும் ... இல்லை அங்கே காச் மூச் என்று ஐஸ்வர்யா கத்தும் குரல் கேட்கும் இவன் காதை விட்டு போனை நகர்த்தி வைத்து கொண்டே..

"இவதான் வேணும்னு தலைகீழா நின்னேன் நாராயணா இப்ப வருத்த படுறேன் "

"ஏன் சார் 

"இவளை முதல் நாளே கொன்னிருக்கலாம் பேசியே சாவடிக்கிறா, உன் பொண்டாட்டியும் இப்படிதானா நாராயணா ...

"சார் மேடம் எதோ கேட்கிறாங்க அங்க பேசுங்க இல்லை ஆபீஸ்க்கு நேரா வந்திருவாங்க

"ப்ச் என் பிள்ளைக்கு அம்மா ஆகிட்டா இல்லை இவளை என்று பல்லை கடித்து கொண்டே போனை பேசுவான் ... 

"கோவில் நடை சாத்த போற நேரம் வந்து இருக்கீங்களே" சார் பூசாரி நெளிய 

"எனக்கு என்ன வேண்டுதலா, ராத்திரி இங்க வந்து உருண்டு பிரண்டுட்டு போகணும்னு , ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக வந்திருக்கேன்வோய், உங்க சாமியை கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லிட்டு வாரும்" என்று பூஜாரியை மிரட்டி விட்டு அர்ஜூன் வாரியர் கோவில் வாசலில் போய் அமர்ந்தான் ....

அவன் கண்கள் ஒவ்வொரு இண்டு இடுக்காக கோவிலை அலசி ஆராய்ந்தது... அங்கே இருந்த அரச மரத்தில் ஏகப்பட்ட சிவப்பு கயிறுகள் தொங்கவிடப்பட்டிருக்க ....  

சொல்லுங்க சார் என்று பூஜாரி வந்து அவன் முன்னே கையை கட்டிக் கொண்டு நிற்க

தன் பாக்கெட்டில் இருந்து சிவப்பு கயிறை எடுத்து நீட்டியவன்

"இது உங்க கோவில் கயிறு தானே ??

"சார் அது எப்படி எனக்கு தெரியும் , எல்லா கோவில்லையும் இத மாதிரி தான் கயிறு கொடுப்பாங்க

"எல்லா கோவில்லையும் கொடுப்பாங்கவோய்.. ஆனா உங்க கோவில்ல மட்டும் தான் சிவப்பு கயிறுக்குள்ள ஒரு கோல்டன் நூல் போகும் .... இந்த கயிறும் அதோ அங்க தொங்குதே அந்த கயிறும் ஒண்ணா இருக்கு அதான் கேட்கிறேன் :

"குழந்தை இல்லாதவங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லாதவங்க இல்ல , கல்யாணம் முடியாதவங்க இப்படி நேம்சத்துக்காக இந்த கயிற கோவில் வாசல்ல வாங்கிட்டு வந்து கட்டுவாங்க, மரத்தில கட்டிட்டு பாதிய சாமி காலடியில வச்சி பூஜை பண்ணி அவங்க கையிலயும் கட்டிக்குவாங்க என்றதும் 

ஓஓஓஓஓ என யோசனையாக புருவத்தை சுருக்கியவன் ...

என்ன சார் சாதாரண கயிறு வச்சு கோவில்ல தேடுனா எப்படி கிடைக்கும்... அதுவும் இதே மாதிரி கயிறு எத்தனையோ பேர் கட்டி இருப்பாங்களே என்று நாராயணன் யோசனையாக அர்ஜூன் வாரியரை பார்க்க...

"பூசாரி 

"சொல்லுங்க சார் 

"எனக்கும் ஒரு கயிறு அன் காட் காலடியில பூஜை செஞ்சு எடுத்துட்டு வாரும் 

சார் உங்களுக்கு சாமி நம்பிக்கை கிடையாதே என்று நாராயணன் ஓவர் டியூட்டி பார்த்துவிட 

 "ஆறு புல்லட்டுல ஒன்னு உமரு வாய்க்குள்ள லேண்ட் ஆகிடும் நாராயணா, 

சாரி சார் ... 

"இந்தாங்க சார் பூஜை பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன் என்று அவன் சிவப்பு கயிறை மஞ்சள் குங்குமம் பூசி கொண்டு வந்து அர்ஜூன் கையில் கொடுக்க... அவன் இதையும் அதையும் வைத்து வெகு நேரம் பார்த்தவன் உதட்டை வளைத்து சிரித்தான் ..

"கயிறு புத்தம் புதுசா இருக்கு நாராயணா "அவர் வாயை பொத்தி கொண்டு நிற்க 

"எனக்கு ம்ம் போட்டா தான் கதை சொல்ல பிடிக்கும் ம்ம் வரலைன்னாலும் புல்லட் பாயும் 

"சார் புள்ளைக்குட்டி காரன் ...

"புள்ளைக்கு தகப்பன் வேணும்ல நான் மூடா பேசும் போது ம்ம் போடும் 

"சரிங்க சார்  

"கயிறு புதுசு , இதுல வச்சிருக்க குங்குமம் சந்தனம் கூட இந்த கயிறை விட்டு இன்னும் போகல சோ ஓஓஓ அதான நாராயணா ?

ஆமா சார் 

என்ன ஆமா என்று அர்ஜூன் முறைக்க

"நீங்களே சொல்லிடுங்க சார் ... உங்க அளவுக்கு அறிவு இருந்தா நான் ஏன் சார் கான்ஸ்டபிளா இருக்க போறேன் 

"ஓஹோ கமிஷனர் ஆகி எனக்கு போட்டிக்கு வர பார்க்கிறியா??

அய்யோ சார் .... 

இதுல வச்ச மஞ்சள் குங்குமம் இன்னும் காயல.. சோ இன்னைக்கோ நேற்றோதான் குற்றவாளி இந்த கோவில் வந்து கயிறை மரத்துல கட்டிட்டு அதை பூஜை பண்ணி தன் கையிலேயும் கட்டிட்டு போயிருக்கணும் அப்புறம் தான் கிருஷ் மகளை கடத்த போயிருக்கான்... அவன் கெட்ட நேரம் கயிறு பேக்குல மாட்டி கழண்டுருச்சு என் நல்ல நேரம் அது என் கையில மாட்டி இருக்கு "

சார் இஇஇஇஇஇ எப்படி சார் ??

அதான் நான் கமிஷனர், நீ கான்ஸ்டபிளா இருக்க பூசாரி 

சார் என்று அவர் ஓடி வர ...

இன்னைக்கோ நேற்றோ எதாவது புது ஆள் வந்து இந்த கயிறை கட்டினாங்களா ?நல்லா யோசிச்சு சொல்லும்வோய் "அவர் வந்தவர்கள் போனவர்கள் எல்லாரையும் மனக்கண் முன்னே கொண்டு வந்து பார்த்து விட்டு 

"புதுமுகம் எதுவும் வந்தது போலவே இல்லையே சார் 

"ப்ச் ஷார்ப்பா சொல்லும்வோய் 

"இல்ல இல்ல புதுசா யாரும் வரல சார் 

"பெர்பெக்ட் அப்போ குற்றவாளி இந்த சரோண்டிங், இல்லை ரெகுலரா இந்த கோவிலுக்கு வர்றவனா தான் இருக்கணும்... நேத்தும் இன்னைக்கும் வந்த அத்தனை பேர் பத்தியும் எனக்கு நைட்டுக்குள்ள ரிப்போர்ட் வரணும் ...

சார் நடை சாத்தியாச்சு நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன் காலையில ரெடி பண்ணி தரவா என்று பூசாரி தலையை சொரிய 

"ஒரு நாள் பொண்டாட்டி கூட குஜாலா இருக்கலைன்னா , பொண்டாட்டி ஓடி போயிட மாட்டா நைட் எனக்கு யார் யாரெல்லாம் வந்தாங்க அதுல கயிறு கட்டிட்டு போனது எத்தனை பேர்னு அத்தனையும் வந்திருக்கணும்..

சரிங்க சார் ...

ம்ம் என்று அர்ஜூன் வாரியர் படியிறங்கி வந்தவன் ஏதோ தோன்றி சட்டென தலையை திருப்ப ஏதோ ஒரு கருப்பு நிழல் மரத்திற்கு பின்னே தெரிய வேகமாக தாவி அங்கே ஓடி போய் பார்க்க .... பழைய துணி ஒன்று காற்றில் பறக்க.... 

ஐ திங்க் அவன் என்னையும் வாட்ச் பண்ற மாதிரி தோணுதே , என்று கண்களை சுழல விட்டவனை மரத்தின் மேலிருந்து இரண்டு கண்கள் குரூரமாக பார்த்தது...

சுற்றி சுற்றி பார்த்த அர்ஜூன் மரத்துக்கு மேல பார்க்க போகும் நேரம் ... ஏன் பெண் என்று பிறந்தாய் என்ற பாடலில் உதட்டில் குறுநகை தோன்ற 

பத்து மணி ஆனா போதுமே எங்கடா இருக்க வீட்டுக்கு எப்போ வருவேன்னு போன் போட்டுருவா என்று போனை ஆன் செய்து காதில் வைக்க 

எங்க போனீங்க எப்ப வருவீங்க ...

வர்ற ஐடியாவுல இல்ல ட்யூட்டில இருக்கேன் போனை வை ....டொக் என போனை வைத்து விட 

அத்தனை பேர் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டுவேன் இவ மட்டும் மனுசனாவே நம்மள மதிக்க மாட்டாளே, என்று அந்த இடத்தை விட்டு வாரியர் நகர மரத்துக்கு மேலிருந்த கருப்பு நிழல் மெல்ல மறைந்து கொண்டது...