அஃது 10

Akthu

அஃது 10

10 அஃது  !!

திருவிழா கூட்டம் அலைமோதியது , மேளதாள சத்தங்கள் மயிலாட்டம் ஒயிலாட்டம் ஒரு பக்கம், ஊர்வலம் ,  இன்னொரு பக்கம் கச்சேரி சாலை ஒரு கடைகளில் ரகளை செய்து கொண்டிருக்கும் விடலை பசங்க ராட்டுகளில் கத்திக் கொண்டு சுற்றும் குழந்தைகள் பட்டுச் சேலையில் கலகலவென சிரித்துக்கொண்டு நடமாடும் இளம் பெண்கள்...  சறுக்கு மர விளையாட்டு ஆண் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என்று ஊர் முழுவதும் ஆங்காங்கே ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்க ...

திரண்டு இருந்த கூட்டத்தில் அந்த ஒருவன்,  யார் அஃது  என்று கண்டறிவது மிக மிக சவாலான ஒன்றுதான் 

அர்ஜூன் அந்த இருட்டு வேளையில் மின்னிக் கொண்டிருந்த திருவிழா கூட்டத்திற்குள் சகஜமாக நடந்து கொண்டிருந்தான்...  ஆனால் அவன் பார்வை கழுகின் பார்வைக்கு ஒத்ததாய் இருந்தது,  ஒவ்வொருவரின் கண்ணையும் அவன் கண்கள் ஸ்கேன் செய்து கொண்டிருந்தது...  தவறு செய்தவன் தடுமாறுவான் , அதுவும் இவன் யார் என்று குற்றவாளிக்கு தெரியாமல் இருக்கவே செய்யாது...  இவனை கண்டதும் அவன் கண்ணில் ஒரு மாற்றம் வந்தால் போதும் கொத்தாக தூக்கி விடுவான்... 

திருவிழாக்கிடையில் சுண்டல் வாங்கி அதை ஸ்டைலாக வாயில் தூக்கி போட்டு பிடித்து கொறித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக உலாவிக் கொண்டிருந்தான் அர்ஜூன் வாரியர்....  சிறிது நேரத்தில் நாராயணன் அவனை தேடி கண்டுபிடித்து வந்து அருகே உட்கார 

நாரயணா 

சார் "

அந்த பச்சை தாவணி அழகா இருக்குல்ல"

"சார் மேடமுக்கு  தெரிஞ்சா என்ன லாடம் கட்டிடுவாங்க

"ப்ச் யோவ் ,  நான் என்ன பச்சை தாவணி கட்டியிருக்கிற பொண்ணு அழகா இருக்குன்னா சொன்னேன்; அந்த பச்சை தாவணி அழகாக இருக்குன்னுதான் சொன்னேன். , நாராயணன் தலையை சொரிந்து கொண்டே 

எவ்வளவு பெரிய காரியம் நடந்து கொண்டிருக்கிறது கடலையை கொறித்துசைட் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று தொண்டை வரை அவருக்கு வார்த்தை வந்தாலும் அவ்வளவு பெரிய அதிகாரி அவனிடம் பேசி விட முடியுமா என்ன?

ஆனால் அவன் யாருக்கு ராஜாவாக இருந்தாலும் அவன் மனைவிக்கு கூஜாவே....  போன் அதிர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்

ப்ச்  சலித்து கட் செய்ய , நாராயணன் போனுக்கு அடுத்த போன் வந்தது 

யோவ் எடுக்காத" என்று முடிக்கும் முன் அவர் போனை எடுத்து 

மேடம் என்று விட 

போச்சு, இனி நிறுத்தாம பேசி தொலைவா "என்று கழுத்தை தடவினான்

அவர் எங்க அண்ணா?? 

இல்லைன்னு சொல்லு என்று அர்ஜூன் வாயசைக்க..

"இல்லன்னு சொல்ல சொல்றாரா ,கோவில் திருவிழாவுல கடலையை கொறிச்சுக்கிட்டு சைட் அடிச்சு கிட்டு இருக்காரோ" என்று சிசிடிவி கேமரா வைத்து அவனை பாலோ செய்வது போல அச்சு பிசகாமல் அவன் மனைவி சொல்ல .... தலையை கோதினான்

கேடி சோடா என்னை பாலோவ் பண்றாளா என்ன...  என்று அங்கும் இங்கும் அவன் தலையை திருப்பி பார்க்க ..

"நீங்க பெரிய அதிகாரியாக இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கள் ஜூஜூபி தான்,  கொண்டையை மறந்துட்டீங்க ஆபிசர் ,அந்த திருவிழா நடக்கிறத லைவ் டெலிகாஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க உங்களையே தான் நான் பாத்துட்டு இருக்கேன் என்று ஐஸ்வர்யா பல்லை கடிக்க ... 

"கல்யாணம் முடிஞ்சா சைட் அடிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் வச்சிருக்காங்களாடி,  அப்படியே வச்சிருந்தாலும் சட்டத்தை எல்லாம் இந்த அர்ஜூன் வாரியர் மதிக்க மாட்டான், 

" சட்டத்தை மதிக்க மாட்டீங்க ஆனா பொண்டாட்டி பேச்ச மதிச்சு தான் ஆகணும்

என்ன விஷயம் ?எதுக்கு போன் போட்டு வேலை செய்ய விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க

"நீங்க போன வேலையை செஞ்சா நான் ஏன் சார் ஃபோன் போட்டு டிஸ்டர்ப் பண்ண போறேன் , என்ன வேலைக்காக போனீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அர்ஜூன்???

ப்ச் 

இருபது நாள் ஆகுது புள்ளைங்க காணாம போய் இன்ன வரைக்கும் கண்டுபிடிக்கல  , வேலை செய்யலைன்னாலும் பரவாயில்லை,  உங்க வாலை  சுருட்டி வச்சுக்கிட்டு இருக்கலாம்ல ... நீங்க பண்ற சேட்டை எல்லாம் ஜூம் பண்ணி இவர் எங்க கண்டுபிடிக்க போறாருன்னு டிவியில விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க அர்ஜூன்... 

நான் என்ன ஜட்டியோடவா சுத்திட்டு இருக்கேன் உன் மானம்  போறதுக்கு "

"மூச் குதற்கமா பேசாதீங்க ,  நான் கேட்கிற கேள்விக்கு பதில் வரணும் ... அவனையே லெப்ட் ரைட் வாங்க ஒருத்தரால் முடியும் என்றால் அது அவன் மனைவியால் தான் சாத்தியம் ...

"டிவி ஃபுல்லா அந்த குழந்தைங்க மிஸ்ஸிங் ஆன நியூஸ் தான் வந்துட்டு இருக்கு,  நீங்க இப்படித்தான் அசால்டா இருப்பீங்கன்னு தெரியும் , அதனால தான் போன் போட்டேன் எனக்கு தெரியாது ஈவினிங்குள்ள அந்த பிள்ளைங்க திரும்பி வந்து இருக்கணும்,  அதுவும் ஒத்த கீறல் கூட இல்லாமல் கண்டுபிடிக்கலைன்னு வச்சுக்கோங்க

என்னடி பண்ணுவ ?

"நீங்க வீட்டுக்கு வரும்போது நானும் உங்க பிள்ளைகளும் இருக்க மாட்டோம் , விஷ்வா வீட்டுக்கு போயிடுவோம் ... அப்புறம் லோ லோன்னு வீட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் சுத்த வேண்டியதுதான் உங்க சேட்டை எல்லாம் வேற எவகிட்டயாவது வச்சுக்கோங்க ,இந்த ஐஸ்வர்யா கிட்ட வச்சுக்க முடியாது தெரியும் இல்ல..."

"எவன்  எதுக்கு கடத்தினானோ , நான் சாப்பிடாம தூங்காம கண்டுபிடிக்கணுமா ,   கண்டுபிடிக்க முடியாது போறியா போடி...

"ஓஓஓ நீங்க எதுவும் கண்டுபிடிக்கல அதை நான் நம்பணும் ... உங்க இன்விஸ்டிகேசன் பைல் என்கிட்ட தான் இருக்கு அர்ஜூன் "

"அதை ஏன் எடுத்த, உன்ன யார் என் பொருளை எல்லாம் எடுக்க சொன்னது ஹான் இடியட், அறிவு இல்லை ப்ளா ப்ளா என்று அவன் கத்த 

டேய் அர்ஜூன் ஊஊஊஊஊஊஊ சாப்பிட்டியா எப்ப வருவ ???என்று அவன் மனைவி குரல் ஏங்கி வர 

நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், பைலை எடுத்த இடத்துல வைடி

"உன்ன பார்க்கணும் போல இருக்குடா எப்ப கேஸை முடிச்சிட்டு வருவ அவள் குரல் குலைய, இவன் முகம் சடசடவென சாந்தமாவது  டிவியிலேயே அவளுக்கு தெரிந்தது ....

"நைட் கிளம்புறேன்..

"ம்ம் இச் மொச் நச் சீக்கரம் வாங்க ..

"ம்ம் 

"எனக்கு மாமூல் வரலையே ஆபிசர் 

"ப்ச் ஆளு இருக்கு 

"நாராயணன் அண்ணன் தான கண்டுக்க மாட்டார் கொடுங்க 

"பச்சக் இஇஇஇ  என்று சப்தம் வர; ஐஸ்வர்யா முகம் அழகாய் வெட்க புன்னகையால மின்ன இவனும்  வீட்டுக்கு போய் அவளை பார்க்கும் ஆசையில்  நெஞ்சை தடவினான் .... 

"வைக்கவா ? 

ம்ம் என்றதும் போனை அணைத்து வைத்த ஐஸ்வர்யா  பைலை புரட்ட... முதல் பக்கம் 

"அஃது" என்று இந்த கேஸூக்கு பெயர் வைத்திருந்தான் ..

இது ஆணா பெண்ணா ?என்ற கேள்விக்கு கீழ் 

கடத்தப்பட்ட குழந்தைகள் காணாது போன இடம் அருகே ஆணின் செருப்பு தடங்கள்  தான் இருந்தது ஆக அது ஆண் என்று வட்டம் போட்டு வைத்திருக்க கணவன் திறமையில் சபாஷ் போட்டாள்..

அடுத்த பக்கம் திருப்ப ..

ரவியின் மகள் காணாமல் போன அன்று அவள் கடைசியாக நின்ற அங்கே நின்ற  போட்டோவை ஒட்டி வைத்திருந்தான்..  அதில் முதுகுக்காட்டி ஒரு நபர் அவளிடம் பரிசு  நீட்டி கொண்டிருக்க அப்பெண்ணும் சிரித்தபடி அதை வாங்கி கொண்டாள் 

"சஸ்பெக்டட்" என்று முதுகு காட்டி நின்ற அந்த நபரை மட்டும் வட்டமிட்டு வைத்திருந்தான்

குழந்தை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல பட வில்லை..  கூட்டத்தில் இருந்து தனியாக அந்த பெண்ணை மட்டும் வர செய்து அழைத்து சென்றிருக்க கூடும் ...ஆக,  அஃது அவளிடம் நன்மதிப்பை பெற்ற ஏதோ ஒரு நபர் ... என்றதோடு இருட்டில்  ஒரு போட்டோ இருந்தது...  அதில் குட்டியாக குழந்தை அறை பால்கனி வழியாக ஒரு உருவம் ரவி மகளை மயக்க நிலையில் பின் வாசல் வழியாக தூக்கி கொண்டு போவது அத்தனையும் சேகரித்து வைத்திருக்க ....  

அடுத்த பக்கத்தில் கிருஷ் மகள் போட்டோ அதிலும் அதே போல பள்ளி முடிந்து அக்குழந்தை மரம் பின்னே நின்ற யாரோ ஒரு மர்ம நபரோடு சிரித்து பேசி கொண்டு நின்றது , சிறுது நேரத்தில் குழந்தை மயங்க அந்த உருவம் சத்தம் இல்லாது குழந்தையை தூக்கி காய்கறி லோட் வண்டியில் ஏற்றி கொண்டு மறைந்தது

பிள்ளைகளிடம் அன்பாக பழகி அவர்களை கடத்தியது தெரிந்தது 

ஏன் ?

அவனுக்கு தேவை உயிரோ உடலோ பணமோ இல்லை அப்படி எனில் என்ன தேவை ???  அந்த கேள்விக்கு கேள்விக்குறி போட்டு வைத்திருந்தான்..

அத்தோடு மார்வேடம் இல்லாது  அந்த நபர் இப்படி இருக்க கூடும் என்று ஒரு உருவத்தை ஸ்கெட்ச் பண்ணி வைத்திருந்தான்...

"ப்பா மனுசன் பின்னி இருக்காரே அத்தனையும் கண்டுபிடிச்சு வச்சிட்டு தான்  இவ்வளவு சேட்டை பண்றாரா என்றவளுக்கு புல்லரித்து போனது ..

"பின்ன பாம்பின் கால் பாம்பு அறியுமே; இவர் எவ்வளவு பெரிய போர்ஜரி என்ன வேலை எல்லாம் பார்த்து என்ன மடக்கினார், ஒரு கிரிமினல் இன்னொரு கிரிமினலை கண்டு பிடிக்கிறது ஈசிதான் என்று சிரித்து கொண்டாள்  ...தீடீரென ஏதோ தோன்றி ஐஸ்வர்யா அந்த படத்தை எடுத்து உற்று பார்த்தவள் 

"இவனை எங்கேயோ பார்த்து இருக்கேனே இதே போல ஒருத்தரை எங்க பார்த்தேன் என்று தலையை தடவி கொண்டே யோசிக்க ம்ஹூம் நியாபகம் வரவில்லை ....

"நான் இவரை பார்த்து இருக்கேன் பேசியும் இருக்கேன் பட் எங்க எங்க ??? என்று யோசித்து யோசித்து தலைவலி எடுக்க 

நம்மாளே கண்டுபிடிச்சிடும் எதுக்கு இவ்வளவு குழம்பணும் என்று தோளை உலுக்கி பைலை  அலமாரி உள்ளே வைத்து விட்டு போனாள்...