அஃது 2
Akthu2
2 அஃது!!
ரூபியை கை தாங்கலாக கொண்டு வந்து அமர வைத்தான் ரவி ... தாடி அடர்ந்த முகத்தோடு அவனும் தன் மனைவி அருகில் உட்கார்ந்தான் ..
பிள்ளை காணாது போன பின்பே அய்யோ என்று ரவிக்கு இருந்தது ... மகள் அருகே இருக்கும் போது ஒரு நிமிடம் கூட அருகே உட்கார்ந்து கொஞ்ச தோன்றியது இல்லை இன்று வீடே மகள் சப்தம் இல்லாது வெறுமையாக கிடந்தது
வாங்க காப்பி தரவா என்று சிரித்த முகமாக எதிர்கொள்ளும் மனைவி அழுது பேச திராணி இல்லாது இருக்க, இத்தனை நாள் இந்த வீட்டில் இருந்த அழகு அவன் கட்டி வைத்த மாடமாளிகை, பளிங்கு அறை ஆடம்பரத்தில் இருந்தது என்று நினைத்தான் ஆனால் இப்போது தான் புரிந்தது இந்த வீட்டின் பேரழகு அவன் மனைவி பிள்ளை சிரிப்பில் இருந்தது என்று
புரிந்து என்ன பயன் ?அஃது இவனை தேடி வந்து சூறையாடி விட்டதே...
ரவி கமிஷனர் வாரியர் வந்திருக்கார் இன்வெஸ்டிகேசன் பண்ணணுமாம் என்று ரவிக்கு தகவல் சொல்ல
ம்ம் வர சொல்லு என்றதும் அர்ஜூன் வாரியர் தன் மிடுக்கான நடையோடு வந்து அவர்கள் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தவன்...
"நான்தான் இந்த கேச இன்வெஸ்டிகேஷன் பண்ண போற ஆபிஸர் அர்ஜூன் வாரியர்..
"சொன்னாங்க சார் போன் போட்டு நீங்க வர்றதா சொன்னாங்க ஏதாவது குடிக்கிறீங்களா
"நோ தேங்க்ஸ் நேரா கேஸ் விவரம் பேச போயிடுவோமா ??
"ம்ம்
"உங்க குழந்தை காணாம போய் ஒரு வாரம் ஆகுது இதுவரைக்கும் எந்த க்ளுவும் நம்ம டிபார்ட்மெண்டுக்கு கிடைக்கல ... சோ குழந்தை இருக்கா இல்லையா என்பது டவுட்
"அய்யோ என் குழந்தை இஇஇஇஇ" என்று ரூபி அழ ஆரம்பிக்க
"இங்க பாருங்க மிஸஸ் ரவி, இனி அழுது பிரயோஜனம் இல்ல .... வாட் நெக்ஸ்ட் அதுதான் நாம பண்ண வேண்டியது ஒன்னு குழந்தையை காப்பாத்தணும்... இல்ல குழந்தைக்கு என்ன ஆயிருக்குங்கிறத கண்டுபிடிக்கணும் ... இந்த ரெண்டு தான் நமக்கு இருக்கிற வழி...
"என்ன செய்யணும் சார்?? என்று ரவி திணற
"எனக்கு என் குழந்தை வேண்டும் என்று தாயும் தகப்பனும் அர்ஜூன் வாரியர் முகத்தை பார்க்க
சில நொடிகள் அமைதியாக வீட்டை ஒவ்வொரு இடமாக பார்க்க ஆரம்பித்தவன் , அங்கு வேலை பார்க்கும் நபர்களையும் கூர்ந்து உற்று நோக்கினான்...
"உங்க மகள் பர்த்டே பங்க்ஷன் வீடியோவை பார்க்கலாமா??
"ஆல்ரெடி உங்க ஆபீஸர் அதை பல தடவை பாத்துட்டாங்க சார் , அதுல எந்த க்ளூவுமே கிடைக்கலைன்னு சொன்னாங்களே என்று ரவி கூற
"மே பி என் கண்ணுக்கு கிடைக்கலாம் கொண்டு வர சொல்லுங்க என்றதும் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஓட ஆரம்பித்தது.. அர்ஜூன் வாரியர் கூர்மையான கண்ணோடு அந்த வீடியோவை முழுக்க முழுக்க பார்த்துக் கொண்டிருந்தவன்... பாஸ் பண்ணுங்க என்று சொல்லவும் வீடியோ நிறுத்தப்பட்டது அதன் அருகே போய் குத்த வைத்து உட்கார்ந்து ஸ்கிரீனை வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்..
"100% உங்க பொண்ணு கடத்தப்பட்டு இருக்கா..
"எப்படி சார் சொல்றீங்க
"அதை பிறகு சொல்றேன் இப்போ உங்க பிரெண்ட்ஸ் ஐ மீன் உங்க மனைவியோட அண்ணன் அப்புறம் உங்க டாக்டர் ஃபிரெண்ட் எல்லாரும் வித் இன் டென் மினிட்ஸ்ல இங்க இருக்கணும். நான் போன் பேசிட்டு வரேன் என்று அர்ஜூன் வாரியர் போனை தூக்கிக்கொண்டு வெளியே போய் விட்டான்
சிறிது நேரத்தில் அருண், கிருஷ் இருவரும் ஹாலில் வந்து நின்றனர்... அர்ஜூன் வாரியர் இருவரையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டே இருந்தவன்...
"கிருஷ், உங்க நண்பனோட குழந்தை காணாம போய் இருக்கு ஆனா கரெக்டா ஆபீஸ்க்கு போறீங்க போல இருக்கு...
"அது
"அதோட நேத்து பல கோடி ரூபாய் டீலிங் சைன் பண்ணுனதா வேற தகவல் வருது" என்று கிருஷை கேள்வியாக பார்க்க ... ரவி தலையை தூக்கி கிருஷ்ஷை அப்படியா என்பது போல் பார்த்தான்..
"இல்ல சார் அவன் சிச்சுவேஷனுக்கு இப்போ ஆபீஸ்க்கு வர முடியாது ,பெரிய பிசினஸ் அதை அப்படியே விடவும் முடியாது அதான் நான் போக வேண்டியிருந்தது எங்க ரெண்டு பேருக்குமே அதுல ஷேர் வரும் சார்.. மத்தபடி குழந்தை காணாம போனதுல எனக்கும் வருத்தம் உண்டு சார் "என்றான் கரகரப்பான குரலில் தன் நண்பனை பார்த்தபடி
"ஓஓஓ உங்க மனைவி நேத்து ஷாப்பிங் போனது கூட வருத்தத்துல ஒரு பகுதிதானோ
"அது அவளுக்கு எங்க நட்போட ஆழம் தெரியாதே சார் ....
ஒருவேளை உங்க மனைவி குழந்தையை கடத்தி இருக்கலாம்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு நீங்க என்ன சொல்றீங்க மிஸ்டர் "
"அய்யய்யோ அவ பேச்சு தான் ஒரு மாதிரி இருக்கும் சார் மத்தபடி இவ்வளவு துணிஞ்சு எல்லாம் செய்ய மாட்டா...
"இல்ல உங்க மக வயசு குழந்தை காணாம போய் இருக்கு, அதுவும் தன் புருஷனோட தங்கச்சி பொண்ணு காணாம போயிருக்கும் போது ஷாப்பிங் போய் ஜாலியா சுத்திட்டு வர்றாங்கன்னா டவுட் வரும் இல்ல கிருஷ் , கொஞ்சம் உங்க மனைவி கிட்ட சொல்லி வைங்க... நீங்க போகலாம்..
"ம்ம் எப்போ விசாரிக்க கூப்பிட்டாலும் நீங்களும் உங்க மனைவியும் வர வேண்டியது இருக்கும் என்றதும் கிருஷ் தலையாட்டி விட்டு நகர்ந்தான்....
"மிஸ்டர் அருண்
"எதுக்கு சார் கூப்பிட்டு விட்டீங்க என்று அருண் சற்று பதட்டமாக அர்ஜூனை பார்க்க
"என்ன சார் ஹாஸ்பிட்டல் கூட்டம் அலைமோதுதோ?
பத்து நிமிஷம் நண்பனுக்காக வந்துட்டு போக முடியவிலையோ உக்காருங்க பொறுமையா பேசலாம்... "
"இல்ல சார் ஒரு முக்கியமான ஆபரேஷன் இருந்தது அதனாலதான்... நேத்து வரைக்கும் நான் இங்கதான் இருந்தேன் ரவி கூடவே தான் இருந்தேன் ரவி சொல்லுடா.."
"ஆமா சார் அவன் என் கூடவே தான் இருந்தான்..
எதுக்கு அவங்க ரெண்டு பேரையும் வர வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்.
"சும்மா நேரம் போகல உங்க பிரெண்ட்ஸ பாக்கணும் போல இருந்தது, அதான் கூப்பிட்டு விட்டேன்... அருண் நாம அப்படியே நடந்து கிட்டே பேசுவோமா என்றதும் அருண் திருதிருவென முழித்துக் கொண்டு அர்ஜூன் அருகே வர ... அவன் தோளில் கையை போட்ட அர்ஜூன்
"வாங்க அப்படியே தோட்டத்து பக்கம் போய் பேசிட்டு இருக்கலாம் டாக்டர்
என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா? என்று ரவி அவனை பார்க்க..
இப்போ நான் சொல்றத எல்லாம் கேட்கிற மனநிலையில் நீங்க இருக்க மாட்டீங்க சோ இவர் தான் கொஞ்சம் தெளிவான ஆள் மாதிரி இருக்கு... அவர்கிட்ட கொஞ்சம் கிளரிஃபிகேஷன் கேட்க வேண்டியது இருக்கு , பேசி தகவலை சேகரிச்சுட்டு போறேன் என்றதும் ரவி தலையாட்டி தன் மனைவி அருகையே தலை சாய்த்து அமர்ந்து விட்டான்
"அப்புறம் அன்னைக்கு நைட் பார்ட்டி நடந்துட்டு இருக்கும்போது பின்பக்கமா எங்கேயோ போன மாதிரி இருந்ததே அருண்...
"நான் எங்கேயும் போகல ...
"அப்போ வீடியோ பொய் சொல்லுதா , கேக் கட்டிங் முடிஞ்சதும் நீங்க நழுவி போனதுபடம் ஆகி இருக்கு அது அருண் ஆவியோ??
"சார் இஇஇ
"ம்ம்
"பார்ட்டி முடிஞ்சதும் சரக்கு அடிக்கலாம்னு ரவி சொன்னான், அதனால சரக்கு வாங்க என்றவன் கையில் கர்சிப்பை நீட்டிய அர்ஜூன்
"ரொம்ப வியர்க்குது துடைச்சுக்கோங்க மிஸ்டர் அருண்...
"சார் என்னை சந்தேகப்படுறீங்களா?நான் கெளரவமான டாக்ட்டர், பிள்ளையை கடத்த வேண்டிய அவசியம் என்ன ??
" கூல் கூல் என்னோட தொழில் அது மிஸ்டர், என் கூட இருக்குறவங்கள கூட தொழில்னு வந்துட்டா நான் சந்தேகப்படுவேன்...
"க்ரிஷ் கூட தான் இடையிலேயே போனான்
"அவரை நான் தனியா டீல் பண்ணிக்கிறேன் .. அப்பறம் ரவி மனைவிக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்... அவன் அமைதியாக நிற்க
"ஒரு கேஸ் எடுத்தா அடி வரை அலசிட்டு தான் வீட்டுக்குள்ள வருவேன் அருண் ,
நீங்க ரெண்டு பேரும் காதலிச்சதா ஒரு தகவல் வந்தது ..
"இல்ல சார் நான் தான் ரூபியை லவ் பண்ணுனேன் அவங்க ரவியைதான் லவ் பண்ணாங்க... நான் மேல் படிப்பு முடிச்சுட்டு வரும்போது அவனுக்கு கல்யாணம் கமிட் ஆயிடுச்சு, சோ அதுக்கு மேல நான் அதுல எதுவுமே தலையிடல.. எனக்கு என் அத்தை மக கூட கல்யாணம் ஆகி நான் செட்டில் ஆயிட்டேன் சார்.... அதோட எனக்கும் குழந்தை இருக்கு அதுவும் பெண் குழந்தை... நான் இந்த மாதிரி அல்பத்தனமான காரியத்துல ஈடுபட மாட்டேன் ...
வெரி குட் , ஆனா அல்பத்தனமா இன்னொரு பிரெண்டை இந்த கடத்தல் கேஸ்ல மாட்டிவிட நினைக்கிறீங்களே அது தப்பில்லையா மிஸ்டர் அருண் .. ரவி கிட்ட கிருஷ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க போல இருக்கு...
"எனக்கு தோணுதுன்னு சொன்னேன் மத்தபடி அவனுக்கும் இவனையும் பிரிச்சு எனக்கு என்ன ஆகப்போகுது சார் ...
"ஓகே அருண் வேற ஏதாவது தேவைப்பட்டா உங்கள கூப்பிடுறேன்...
"சார் நான் எதுவும் பண்ணல,
"நீங்க எதுவும் பண்ணுனீங்களான்னு நான் கேட்கவே இல்லையே , போயிட்டு வாங்க" என்றதும் அருண் கையை பிசைந்து கொண்டே தன் காரை போய் திறந்தவன் அங்கிருந்து அர்ஜூன் வாரியரை பார்க்க அவனும் அருணைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்
சார் என்ற ரவியின் குரலில் தலையை திருப்பியன்
"கடத்தல் நடந்தது உண்மை, ஆனா எதுக்காக இந்த கடத்தல் நடந்தது அது தெரியல... நான் யூகிக்கிறது சரின்னா அந்த கடத்தல் காரனுடைய டார்கெட் இத்தோட முடியாது
"என்ன சார் சொல்றீங்க வீடியோவை ஜூம் பண்ணி காட்டிய அர்ஜுன் வாரியர் இது யாரோட குழந்தை என்று கேட்க...
"கிருஷ் பொண்ணு...
"ம்ம் ஐ திங்க் அடுத்து இந்த பொண்ணு காணாம போக வாய்ப்பு இருக்கு ...
"அய்யோ , எப்படி சார் சொல்றீங்க?
"கடத்தல்காரன் நமக்கு க்ளு கொடுத்துட்டுதான் போயிருக்கான் , பொண்ண கடத்தியவன் பொண்ணு கையில இருந்த, டெடி பியர இந்த பொண்ணு காலடியில் போட்டுட்டு போயிருக்கான்.... ஐ திங்க் இந்த பொண்ணுதான் அடுத்த டார்கெட் என்று அர்ஜூன் முடிக்கும் முன்
என்னங்க என்று ரூபி பதறி கொண்டு ஓடி வந்தாள்
"என்னாச்சு ரூபி ?
"கிருஷ் அண்ணன் மக பள்ளிக்கூடத்துக்கு போன இடத்துல காணலையாம் எங்க தேடியும் கிடைக்கல போல" என்றதும் அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க அர்ஜூன் சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டு நிற்க விசயம் பெரிதாக ஆரம்பிப்பது புரிந்தது
சார் இஇஇ என்ன பண்றது ... ஏன் ஏன் ?
"உங்க மக கேஸை ஹேண்டில் பண்றதுதான் என் வேலை இதுக்கு எனக்கு பொறுப்பு தந்தா பார்கிறேன், இப்போதைக்கு இது எனக்கு தேவையில்லாத ஆணி , என்று சட்டை செய்யாத பார்வையோடு நின்ற அர்ஜூனை அத்தனை பேரும் அமைதியாக தான் பார்க்க முடிந்தது ...
ரவி வீட்டிலிருந்து ஆதாரங்களை திரட்டி கொண்டு அர்ஜூன் கிருஷ் மகள் காணாது போன பள்ளிக்குள் நுழைய , கருப்பு நிழல் ஒன்று காருக்கு பின் இருந்து அர்ஜூன் வாரியை வெறித்து பார்த்தது .... அர்ஜூன் யோசனையாக சட்டென அந்த நிழல் நின்ற பகுதியை நோக்கி திரும்ப காற்று பலமாக அடித்து மரம் மட்டும் அங்கே அசைந்து கொண்டு நிற்க ,
ப்ச் தோளை உலுக்கி கொண்டு அர்ஜூன் பள்ளிக்குள் நுழைந்து விட்டான்....
தொடரும் அஃது எது??