அஃது 7
Akthu7
7 அஃது !!
கடற்கரை காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க,
கடற்கரையை விட்டு வெகு தூரம் தள்ளி உடைந்து போன கப்பல் ஒன்று சிதிலமடைந்து கேட்பாரற்று கடலுக்கு அருகில் ஒதுங்கிக் கிடக்க...
இருட்டில் அந்த கப்பல் மிரட்டி கொண்டிருந்தது... ஏதோ புயலில் சிக்கி , பல வருடங்களுக்கு முன்பு இங்கு கரை ஒதுங்கியதாகவும், அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இறந்து போனதாகவும், அவர்களின் ஆவி அந்த கப்பலிலேயே தங்கி விட்டதாகவும் ஒரு வதந்தி உண்டு... எனவே அக்கம் பக்கத்தில் உள்ள யாரும் அந்த கப்பலுக்குள் செல்ல கூட மாட்டார்கள்... மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த கப்பல் இருப்பதால் யாரும் அதை கண்டு கொள்ளவும் மாட்டார்கள்..
அந்த நடு இரவு வேளை மரப்பலகையில் ஒரு கால்களின் சத்தம் டக் டக் என்று கப்பலுக்குள் படியிறங்கி கீழ் உள்ள அடி வார பகுதிக்குள் அந்த கால்கள் போனது ...
உடல் முழுவதும் கருப்பு ஆடையால் தன்னை மூடி மறைத்து இருந்தது, அந்த காலடி சத்தத்தில் கப்பலுக்கு அடியில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் அரண்டு போய் மேலே எட்டிப் பார்க்க... கத்தினால் கூட யாருக்கும் கேட்காதபடி அடிவாரம் கடலுக்கு அடியில் இருந்தது ... பாதி கடலில் மூழ்கி இருந்த கப்பலின் அடிவாரம் அது, சுவாசத்திற்கும் வெளிச்சத்திற்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்தது...
இந்த உருவத்தை கண்டதும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு அந்த உருவத்தை பார்க்க , தன் கையில் இருந்த சாப்பாட்டை அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு தன் மீது இருந்த கருப்பு அங்கியை கழட்டி ஆணியில் மாட்டிய அவ்உருவத்தை எச்சில் விழுங்கி குழந்தைகள் பார்க்க ... அவ் உருவம் சாப்பாடு பார்சலையும் அவர்களையும் மாறி மாறி பார்க்க இரண்டு குழந்தைகள் வேகமாக அதை எடுத்து தின்ன ஆரம்பித்து விட்டனர்...
"சத்தம் இல்லாம இருந்தாங்களா? என்றது அந்த கடினமான பாறை குரல் ..
"ம்ம் நேற்று நீங்க போனதும் என் கைய கடிச்சு விட்டுட்டு இந்த குழந்தை ஓடிடுச்சு , நல்லவேளை உங்க கண்ணுல மாட்டிட்டா போல இருக்கு ...
"ம்ம ஆமா இவ மட்டும் கிடைச்சிருந்தா மொத்தமா மாட்டியிருப்போம் அழாம இருந்தாளா?
அம்மா கிட்ட போகணும்னு கொஞ்சம் அழுது ஒப்பாரி வச்சாங்க இன்னைக்கு சத்தமே வரல என்றது இன்னொரு உருவம் ..
சத்தம் இல்லாம இருந்தா தான் பிரச்சனை இல்லைன்னு சொல்லி வச்சிடு,
அதெல்லாம் சொல்லிடுறேன் அடுத்து நாம என்ன பண்ண போறோம் ?"
இந்த பொண்ணோட அப்பா இங்க வரைக்கும் வந்து தேடிட்டு போயிட்டான் , இனி இங்க இருக்கிறது பாதுகாப்பு கிடையாது ... அதோட நாம தூக்க வேண்டிய குழந்தை இன்னும் பாக்கி இருக்கு ... அதை எங்கேயோ கடத்திட்டாங்க அதையும் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வரணும்.. மூணு பேரையும் சேர்த்து தான் செய்யணும்" அஃது கத்தியை கூராக்கிக் கொண்டு கூற..
பிள்ளைகளை பார்த்தா பாவமா இருக்கு, ஏன் இதெல்லாம் ? என்றதும் தலையை தூக்கி ஒரு பார்வை எதிரே இருந்த நபரை பார்த்த அந்த உருவம்
இது எனக்காக இல்ல நமக்காக, அந்த குழந்தையும் கிடைச்சதும் நான் நெனச்சத பண்ணாம விட மாட்டேன் ....
யோசிக்க கூடாதா ?
"யோசிச்சு தான் பண்றேன், ஏன் பயமா இருக்கா?"
ம்ஹூம் உங்களுக்கு சரின்னு பட்டா சரிதான் "
"டாக்டரை போய் பார்த்தீங்களா என்ன சொன்னாங்க..
"இதயம் வேணுமாம்
ஓஓஓஓஓ ....
சாப்பாட்டை அள்ளி சாப்பிடும் ரெண்டு பிள்ளைகளையும் மாறி மாறி அஃது பார்த்தது ..
"நாளைக்கு வர இங்க இருப்போம் , அதுக்குள்ள மூணாவது குழந்தை இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சுடுறேன் அங்க போயிடலாம்
அப்போ இந்த குழந்தைங்க "
"இதையும் சேர்த்துதான் தூக்கிட்டு போகணும் கெடுபிடி அதிகமா இருந்தா; இதுகளை மட்டும் முடிச்சு விட வேண்டியதுதான் என்றதும் ..
"மாட்டிப்போமோன்னு பயமா இருக்கு
"பயந்தா வாழ முடியாது , என்ன போலீஸ் தான் கொஞ்சம் நெருங்கி வர்ற மாதிரி இருக்கு
"என்ன
"ம்ம் நான் போன கோவில் வர என்ன தேடி வந்துட்டாங்க
"அய்யோ?? கண்டுபிடிச்சுட்டாங்களா?
"ம்ஹூம் ஆனா சந்தேகம் வந்திடுச்சு, அதுக்குள்ளே நாம இடத்தை மாத்தியே ஆகணும் ..
"ம்ம்" பயம் இருந்தாலும் எதிரே இருக்கும் நபர் மீது உள்ள நம்பிக்கையில் தலையாட்டிட
அடுத்த நாள் இருட்டோடு இருட்டாக ரெண்டு குழந்தைகள் வாயை மட்டும் கட்டி இடம் மாற்ற அந்த வண்டி கடற்கரை விட்டு நகர ...
மூக்கு வியர்த்து விட்டதோ வாரியருக்கு..
செக் போஸ்டில் அர்ஜூன் வாரியர் வண்டி தடை போட்டு நின்றது
ஒரு வண்டி இதை தாண்டி போக கூடாது நாராயணா, செக் பண்ணு தன் கார் மீது உட்காந்து ஒவ்வொரு வண்டியாக அர்ஜூன் தேடுதல் வேட்டை நடத்த
"அய்யோ இப்ப என்ன செய்றது? வண்டியில் இருந்த உருவத்தின் ஒன்று பதற
ப்ச் , எப்ப வண்டியை திருப்புனா சந்தேகம் வரும்
"ம்ம் என்ன பண்ண போறோம்
"கையில கனம் இருந்தா தான வழியில பயம் என்ற உருவத்தின் கண்கள் சிவக்க ..... பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளையும் திரும்பி பார்த்த உருவம் அருகே இருந்த நபருக்கு மேம்பாலத்தை கண்ணை காட்ட , சிறுது வினாடியில் நீருக்குள் பொத்தென்று சத்தம் கேட்டது .... இருந்த ரெட்டை கனத்தை நீக்கி விட்டது அஃது..
"அந்த மர்ம கார் வந்து அர்ஜூன் முன்னே நிற்க
காரு எங்க போகுது ? என்று அர்ஜூன் வந்து உள்ளே தலையை விட்டு பார்க்க ,
கும்பகோண மார்க்கெட்டுக்கு சரக்கு கொண்டு போகுதுங்கய்யா ...
"ஓஓஓ , உன் வண்டியா
இல்லங்க சார் ஓனர் வண்டி
"ம்ம் நாராயணா வண்டியை செக் பண்ணு
"சரிங்க சார் என்று நாராயணன் வந்து காரில் உள்ள அட்டை பெட்டிகளை எல்லாம் செக் செய்து விட்டு
"எதுவும் இல்ல சார் ...
"ஓஓஓஓ ...
"இவனோட அட்ரெஸ் போன் நம்பர் எல்லாம் வாங்கி வச்சிட்டு அனுப்பு ... என்று அர்ஜூன் நகர... கார் அவனை தாண்டி மெல்ல ஊர்ந்து போக ஆரம்பிக்க.. திடீரென வாரியர் கண்ணை சுருக்கியபடி
"நாராயணா அந்த வண்டியை நிப்பாட்டு
"ஏன் சார் ?
"இந்த வண்டியை எங்கையோ பார்த்த நியாபகம் இருக்கு ஸ்டாப் தட் கார் ... என்று இருவரும் திரும்பும் முன் கார் அவ்விடம் விட்டு வெகு தூரம் போய்விட
"நாராயணா கும்பகோணம் லேப்ட் எடுத்து தான போகணும் "
"ஆமாங்க சார்
"இவன் ஏன் ரைட்ல போறான்
"தெரிலையே சார்
"ப்ச் யோவ் தெரிலைன்னு சொல்லவா உன்கிட்ட கேள்வி கேட்கிறேன் ... வண்டி நம்பர் எழுதினியா..
"ஆமா சார் என்று நம்பரை கூற
"அடுத்த செக் போஸ்ட்ல வண்டி நம்பரை சொல்லி ஸ்டாப் பண்ணி வைக்க சொல்லு நாராயணா, எனக்கு இந்த வண்டி மேல சந்தேகமாக இருக்கு ஏதோ சம்திங் ராங் .... என்று அர்ஜூன் அந்த வண்டி போன வழித்தடத்தையே பார்த்து கொண்டு நிற்க... இருட்டில் போய் கொண்டிருந்த அந்த வண்டி ஆற்றோரம் போய் நின்றது .... வெகு தூரத்தில் பரிசல் ஒன்று ஆற்றில் மிதந்து வர ...
எப்பா சரியா வந்து சேர்ததுடடேன், திக் திக்குன்னு ஆகி போச்சு என்று பரிசல் வந்து அவன் அருகே நின்றது ...
நல்லவேளை பரிசலை கொண்டு வந்தேன்.. இல்லை மாட்டி இருப்போம் என்று அவ்வுருவம் மீண்டும் பரிசலில் கிடந்த பிள்ளைகளை தூக்கி காரில் போட்டு கொள்ள
உங்கள அடையாளம் கண்டு பிடிக்கலையே "
ம்ஹூம் தெரில என்று தன் முகத்தில் அடையாளம் மறைக்க ஒட்டி இருந்த மீசை தலைப்பாகை ஒட்டுத்தாடி எல்லாவற்றையும் கழட்டி சீட்டில் போட்டது அவஉருவம்...
இனிமே என்ன செய்ய போறோம் ?
"முடிச்சிடலாம்
இப்பவா
"ம்ம் என்று கண்ணை மூடி திறக்க ஆற்று நீர் சிவப்பு நிறத்தில் மாறி போக ..... சுற்றி வந்து காரில் முன்னே பின்னே மாட்டி இருந்த ட்யூப்பிலிகேட் நம்பர் ப்ளேட்டை கழட்டி ஆற்றில் வீசி விட்டு இன்னொரு நம்பர் ப்ளைட்டை மாற்றி கொண்டு வண்டி கயத்தாறு நோக்கி போனது .....
வைகை ஆற்றில் இரண்டு சிறுமிகளின் ஆடை மற்றும் அவர்கள் பொருட்கள் ரத்தமாக கண்டறிய பட்டுள்ளது , கொலை செய்ய பட்டுள்ளனரா , அப்படி எனில் உடல் எங்கே ?? வன்புணர்வு செய்ய பட்டு கொடுர கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று ஆற்றிலும் அதை சுற்றியுள்ள காடுகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் குற்றவாளிகளை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அடுத்த நாள் காலை ப்ளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது...
"இல்ல நான் வரமாட்டேன் , அது என் குழந்தையோடதான் இருக்காது... நான் வரமாட்டேன் என்று ரூபி ரவியின் கையைப் பிடித்துக் கொண்டு அழ ...
கிரிஷ் தூரத்திலேயே நின்று கொண்டான் ....
"எனக்கு பயமா இருக்கு , அது நம்ம குழந்தையா இருக்காதுல்ல சொல்லுங்க... கிரிஷ் நம்ம பாப்பா சேஃபா இருப்பா இல்ல , இது வேற யாரோ தானே? என்று நான்சி மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட..
"சொன்னா கேளுங்க, ரெண்டு பேரும் வந்து பார்த்துட்டு அது உங்க குழந்தைகளோடதுதானா இல்லையான்னு சொன்னாதான் நான் ஃபர்தரா அடுத்தது என்ன பண்ணனும்னு பார்க்க முடியும் என்று அர்ஜூன் வாரியர் தலையை தடவ
"சார் எங்களுக்கு இதெல்லாம் பார்க்கக் கூடிய அளவுக்கு உடம்புல மனசுல வலு இல்ல என்று ரவி நடுங்கிய குரலில் அர்ஜூனை கெஞ்சுதலாக பார்க்க
"ப்ச் ப்ளீஸ் ரவி அண்ட் கிருஷ் உங்க புள்ளைங்க கடத்தப்பட்டது தமிழ்நாட்டில வைரல் ஆயிடுச்சு... இது பணத்துக்காக கடத்தினதா, இல்ல வேற எதுக்குமான்னு அடுத்தது யோசிக்கணும்னா இது எல்லாம் நாம செஞ்சுதான் ஆகணும்... இது உங்க குழந்தைகளுக்கு உள்ளதுதான்னு நான் சொல்லல... இருக்கலாம் என்கிற யோசனையிலதான் உங்கள கூப்பிட்டு விட்டு இருக்கு.. சோ, பயப்படாம வந்து பாருங்க என்றதும் தளர்ந்து போன நடையோடு நால்வரையும் அருண் அழைத்துக் கொண்டு வந்து ஆற்றங்கரையில் சேகரித்து வைத்திருந்த குழந்தைகளின் ஆடைகள் செருப்பு எல்லாவற்றையும் பார்த்த மாத்திரத்தில் தலையில் அடித்துக் கொண்டு நால்வரும் அழ ஆரம்பித்து விட்டனர்..
"அய்யய்யோ என் புள்ள போச்சே, நாசமாக்கி கொன்னு போட்டுட்டாங்களே என்று நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பெற்றவர் கதற
அருண் யாரை தேற்ற என்று தெரியாமல் உடைந்து போய் நின்றான்
"சார் குழந்தைங்க பாடி எதுவும் கிடைக்கலையே
"ஆறு முழுக்க மீட்பு குழு பிணத்தை தேடிக்கிட்டு இருக்கு.. ஒருவேளை கொன்னு தான் போட்டு இருக்காங்களா... இல்ல நம்மள திசை திருப்புவதற்காக அவங்களுடைய பொருட்களை இங்க போட்டுட்டு போய் இருக்காங்கலாங்கிறது இன்னும் நமக்கு தெரியல.. கொன்னு இருந்தா எப்படியும் இந்த ஆத்தங்கரையில் தான் பிணம் இருக்கும்
"அய்யய்யோ என் பிள்ளைகளை பிணம்னு சொல்லாதீங்க சார் என்று நான்சி அழுது கொண்டே கூற... அருண் பெருமூச்சு விட்டு
"சார் ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு ,
" அருண் ஏன் உங்க மூணு பேரோட பிள்ளைங்கள மட்டும் குறி வச்சு தூக்க ட்ரை பண்றாங்க
என் புள்ள சேஃபா தான் இருக்கு....
உங்க புள்ள எந்த ஊர்ல இருக்குன்னு சொன்னீங்க
"கயித்தாறு சார் என் மாமியார் ஊர் திருநெல்வேலி பக்கத்துல இருக்கிற கயத்தாறு என்றதும் அர்ஜூன் சிரித்துக் கொண்டே
"அவனோட அடுத்த டார்கெட் கயித்தாறுல தான் "
"சார் ....
யாரும் தப்பிக்க முடியாது பாப்போம் அஃது எது வரை போகுதுன்னு "
காலையிலிருந்து இரவு வரை ஆற்றில் குழந்தைகளை தேடி தேடி ஓய்ந்து போனது மீட்டு குழு ....
அர்ஜூன் யோசனையாக நின்றான் ...
சார் என்ன சார் யோசிக்கறீங்க
அப்படி இந்த மூணு பேருக்கும் அவனுக்கும் என்ன முன் விரதோம் ....
சாப்பிடாது கொள்ளாது தளர்ந்து போயா மயக்க நிலையில் தம்பதிகள் உட்கார்ந்து இருந்தனர் பிள்ளைகள் ஆடைகளை நெஞ்சோடு கட்டி கொண்டு
என் பிள்ளைங்களுக்கு என்ன ஆயிருந்தாலும் பரவாயில்லை உயிரோட கிடைச்சா போதும் என்று சொல்லும் நிலையில் தான் இருந்தனர்..
கடத்தினவனோடு எண்ணம் அந்த குழந்தைக இல்லை அருண்
என்ன சொல்றீங்க சார் ?
அந்த குழந்தைகளை வச்சி உங்களை பதற வச்சி நாயா அலைய வைக்கணும் , ஐ திங்க் அவனோட டார்கெட் நீங்க மூணு பேரும்
"நாங்களா ?
"ம்ம்
"நீங்க அழணும் அதுக்காக உங்க குழந்தைகளை எதுவும் செய்ய அவன் தயார் "
"அய்யோ அப்படி யாருக்கும் நாங்க எதுவும் செஞ்சது இல்லையே சார் என்று ரவி பதற
யோசிங்க எங்க யார எதுக்காக என்ன பண்ணினோம்னு யோசிங்க
"சார் நாங்க மனசு அறிஞ்சு, யாருக்கும் தப்பு பண்ணினது இல்லை சார் "
"நோ நோ சம்திங்க் நடந்து இருக்கணும் இது ரிவஞ்ச் போலத்தான் தோணுது .... அஃது பணம் கேட்கல , மிரட்டல, தன்னை வெளிக்காட்டல ... ஆனா, உங்க அலற விடுது , ஊமையாக உங்கள சாவடிக்குது அதுவும் சொல்லி வச்சது போல உங்க மூணு பேரையும் மட்டும் தான் ... என்கிட்ட எதாவது மறைக்க ட்ரை பண்ணிறீங்களா
எதுவுமே இல்லை சார் என்று மீண்டும் மீண்டும் நண்பர்கள் அதையே சொல்ல .... அர்ஜூன் நம்பாது பார்த்தான்... இத்தனை வருட அவன் காக்கி சட்டை அனுபவத்தில் எந்த கணிப்பும் தோற்றது இல்லை
சார் எங்க பிள்ளைங்க...
கயித்தாறு வரை போய் பார்த்துடலாம்
அங்க எதுக்கு சார் இங்க தான் பிள்ளைங்க துணி இருக்கு
ம்ஹூம் நம்மள இங்க திசை திருப்பிட்டு மூணாவது பிள்ளையை கடத்த அவன் கயித்தாறு போயிட்டான்...
சார் மூவரும் மரணபீதியாக நின்றனர் ..
அஃது அவன் சொன்னது போல கயித்தாறு உள்ளே நுழைந்தது ..