அஃது 3

Akthu3

அஃது 3

3 அஃது !! 

ஐயோ ஐயோ இவங்க கூட சேர்ந்து , என் புள்ளையும் காணாம போயிடுச்சு .. இதுக்கு தான் சொன்னேன் இவங்க கூட இருக்கிற பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டு சொத்தை எல்லாம் பிரிஞ்சு வாங்கிட்டு வெளிய வாங்கன்னு  போச்சே போச்சே என்று பள்ளிக்கூட வாசலில் உட்கார்ந்து கிருஷ்  மனைவி நான்சி தலையில் அடித்துக் கொண்டு அழ 

"சும்மா இருடி நம்மள போல தான் அவனுக்கும் குழந்தை காணாம  போய் இருக்கு , 

"ம்க்கும்,  அந்த குழந்தையையே கடத்துனது நீங்கதான்னு  நினைச்சு தான் நம்ம குழந்தையை அவர்  கடத்திட்டார்,   அதுகூட தெரியாம இன்னும் உங்க நண்பனுக்கு கொடி தூக்கிகிட்டு நிக்கிறீங்க அறிவு இல்ல உங்களுக்கு ... உங்க குழந்தை செத்தா என் பிள்ளையையும் கொல்லணுமா என் பிள்ளை எங்க? என்று ரவி சட்டையை நான்சி பிடிக்க போக ...  மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை கிருஷ் விட .... தன் கணவனின் அறையில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு நான்சி நிற்க

"இன்னொரு வார்த்தை என் நண்பன பத்தி ஏதாவது பேசுன இந்த இடத்திலேயே வெட்டி முக்கிடுவேன் பாத்துக்கோ உன் பேராசை தாண்டி இன்னைக்கு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சது,  இன்னைக்கு என் புள்ளைய தொலைச்சதுக்கும் காரணம் நீதான்.? 

"நானா "

"வீட்ல அப்படி உனக்கு என்னடி வெட்டி முறிக்கிற வேலை,  வேளா வேளைக்கு தின்னுட்டு சும்மா தானே இருக்க ,  பிள்ளைய கொண்டு வந்து பள்ளிக்கூடத்துல விட்டுட்டு கூட்டிட்டு போக கூட உன்னால முடியாதோ....   தனியாக விட்டிருக்க....  எவனோ ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டான்...  ஒரு பத்து நாள் குழந்தையை உன்னால ஒழுங்கா பாத்துக்க முடியல நீ எல்லாம் ஒரு  தாய் வாயை கிழிக்காத.... தன் கணவனை அழுது கொண்டே பார்த்தாள் நான்சி அவனை குறை சொல்லும் அளவு அவன் யோக்கியன் இல்லையே ...  

"உடம்பு முடியல கிருஷ் ரெண்டு நாள் பாப்பாவை விட்டிட்டு கூட்டிட்டு வர முடியுமா 

என்ன செய்யுது ??

பீரியட் 

"உலகத்துல எல்லாருக்கும் தான் வருது ... அவங்க எல்லாம் செய்யல எனக்கு மீட்டிங் இருக்கு ...

"முடியலைன்னு தான கேட்கிறேன் கிருஷ் 

ஏன் நேத்து ஷாப்பிங் போகும் போது தெரில என் பிரெண்ட் என் தங்கச்சி மக காணாம போயிருக்கா நீ பாட்டுக்கு ஷாப்பிங் போயிருக்க..

தெரியாம பேசாதீங்க கிருஷ் மளிகை சாமான் வாங்கத்தான்  போனேன்...  அவ காணாம போயிட்டான்னு திங்காம கிடக்கிறீங்களா ,  சமைக்க பொருள் வேணும்ல அதான் போனேன்...  சும்மா எல்லாத்துக்கும் குறை கண்டுபிடிகாதீங்க என்று காலையிலேயே சண்டை தான் போட்டு கொண்டனர் 

"அம்மா நானே போயிக்கிறேன் பக்கத்துல தான ஸ்கூல் இருக்கு என்று மகள் இருவர் போட்ட சண்டையில் தனியாக நடந்து போய் விட்டாள்... 

உன்னால 

உங்களால 

உன்னாதான் 

"எப்போ எப்போன்னு காத்திருந்தீங்களோ?  தொலைஞ்ச்சு  போனது என் புள்ள , இன்னும் பத்து நிமிஷத்துல என் புள்ள வரல,  இந்த இடத்திலேயே தீய வச்சி கொளுத்திகிட்டு செத்துடுவேன்...  என் சாவுக்கு நீங்களும் உங்க நண்பர்களும்தான் காரணம்ன்னு எழுதி வச்சுட்டு தான் சாவேன்...  அடிக்கவா செய்யிர,  பிள்ளை தொலைச்ச ஒரு தாய் பேசக்கூட கூடாதா,  அப்படி என்னவிட உன் நண்பன் தான் பெருசுன்னா,  அவனை கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த வேண்டியதுதானே,  உனக்கு எதுக்குடா பிள்ளையும் பொண்டாட்டியும்... 

நான்சி வாயை மூடு "

"மூட முடியாதுடா,  கல்யாணம் முடிஞ்சு பிள்ளை பெக்க மட்டும் தான் உனக்கு பொண்டாட்டி மத்தததுக்கெல்லாம் பிரண்டுதான உனக்கு வேணும் .. பிரெண்டு பிரெண்டுன்னு  அவன்கூட தானே சுத்துன...  அப்போ அவனுக்கு வர்றது எல்லாம் உனக்கும் தானே வந்து தொலையும்....  இதையெல்லாம் கேட்டா,  நான் பஜாரி,  ஆகாதவ நாண்டுகிட்டு நிக்கிறேன்னு என்கிட்ட சண்டைக்கு வா,  அவன்கிட்ட எதுவும் பேசிடாத...  எனக்கு என் புள்ள வேணும் இல்ல நான் சொன்னதை செய்வேனாக்கும் என்று நான்சி தலைவிரி கோலமாக அழுது கொண்டு போய் நடுரோட்டில் உட்கார்ந்தாயிற்று....

"கிருஷ் என்று ரவி நண்பன் தோளை தொட  ..

"யாருக்கு என்னடா பண்ணினோம் இப்படி பிள்ளைகளை தொலைச்சிட்டு ரெண்டு பேரும் நிக்கிறோம்..

"அதான் எனக்கும் தெரியல..  ஒரு வாரமா என் மகளை கண்டுபிடிக்க முடியாம நான் சாகுறது பத்தாதுன்னு,  இன்னைக்கு உன் பிள்ளையும் காணல ... யாருடா நம்மள குறி வச்சு கன்னிங்கா பண்றது "என்று ரவி வேதனையில் தலையை பிடிக்க

"எனக்கு என்னவோ அருண் வேலையா இருக்குமோன்னு தோணுது மச்சான் 

"அவன் ஏன்டா

" இல்லடா நல்லா இருந்த  நான்சி கிட்ட உன் புருஷனை விட ரவிக்கு தான் கம்பெனில அதிகமாக மவுஸ் இருக்கு...  உன் புருஷனை ஏமாத்தி சம்பாதிக்கிறான்,  நீ கண்டுக்காம வீட்ல உக்காந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க , இதெல்லாம் கவனிக்கிறது இல்லையான்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னதா  என் மக மூலமா தகவல் வந்தது .... அதுல இருந்து தான் இவ வகை தொகை இல்லாம ஆடிட்டு இருக்கா,  ஷேர் பிரிச்சு வாங்க சொல்லுன்னு சொன்னதும்,  அவன் தான் போல இருக்கு...  நாம ரெண்டு பேரையும் பிரிச்சு இவனுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுதுன்னு நான் கூட யோசிச்சேன்...  ஆனா இப்போ இப்படி எல்லாம் நடக்கும் போது,  ஒருவேளை அவன் ஏதாவது சித்து விளையாட்டு விளையாடுறாங்கன்னு தோணுது ரவி என்றதும் கண்களை சுருக்கிய ரவி ..

"எனக்கும்தான் அப்படி தோணுதுடா,  கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்னோட நடவடிக்கை சரியில்ல ஆபீஸ்ல அதிகமா பணம் எடுக்குற மாதிரி தோணுது...  கொஞ்சம் கவனிச்சுக்கோன்னு என்கிட்ட அலர்ட் பண்ணுனான்...  உன்ன என்கிட்ட குறை சொல்லி அவனுக்கு என்ன கிடைக்கப் போகுது ...

"அதுதாண்டா எனக்கு தெரியல;  அவனாதான்  இருக்குமோ

"தெரியலடா,  ஆனா பொத்தம் பொதுவா அவன் மேல நாம பழியை  போட முடியாதுல்ல நம்ம ரெண்டு பேரும் குழந்தையையும் தூக்கிட்டு போய் அதுல அவனுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது சொல்லு

"ம்ம்  அதாண்டா யோசனையா இருக்கு ...

பயமா இருக்கு ரவி பச்ச குழந்தைக,  ஏதாவது ஆயிடுச்சின்னா டிவியில தினம் பாக்குற நியூஸ் எல்லாம் பார்க்கும்போது பதறுதுடா..

இருவரும் நடுங்கி போய் நிற்க அடுத்த ஐந்தாவது நிமிடம் அருண் ஓடி வந்து விட்டான் 

"என்ன அருண் சார்,  கூப்பிட்டு விட்டு பத்தே செகண்ட்ல வந்து நிக்கிறீங்க,  பக்கத்திலேயே ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு இருந்தீங்களோ??" என்று அர்ஜூன் ஃபோனை பார்த்தபடி கையை பிசைந்து கொண்டிருந்த அருணை தலை நிமிர்ந்து பார்க்க ... தன் நண்பர்களை பார்க்காமல் சட்டென தலையை குனிந்து கொண்டான் அருண் 

"இல்ல சார் பக்கத்துல தான் ஒரு ஹாஸ்பிட்டல் விசிட் வந்திருந்தேன்...

"பக்கத்திலன்னா ஸ்கூல் பக்கத்துலயோ

ஆம் என்று தலையாட்ட

ம்ம் ,  உங்க நண்பன் கிருஷ் மகளும் மிஸ் ஆயிடுச்சு கேள்விப்பட்டீங்களா? 

"கேள்விப்பட்டேன் சார் ,ரெண்டு பேர் குழந்தையையும் கடத்திட்டு போனது ஒரே ஆளுங்களா"

"அது எனக்கு எப்படி தெரியும் அருண்,  நீங்கதான் சொல்லணும்.."

"சார் நீங்க ராங்கா பேசுறீங்க,  என்னமோ நான் குழந்தைகளை கடத்திட்டு போன மாதிரி நீங்க என்ன சந்தேகப்படுறதா தோணுது "

"நான் சந்தேகப்படலை அருண்,  உங்க பிரெண்ட்ஸ் ரெண்டு பேருமே சந்தேகப்படுறாங்க...  அவங்க ரெண்டு பேருக்கும் இடையில சண்டையை மூட்டிவிட்டது சொத்துக்களை பிரிக்க வைக்கிறதுக்கு பிளான் போட்டது...  இப்படி ஏகப்பட்ட அலிகேசன் உங்க மேல சொல்றாங்களே,  நீங்க தான் குழந்தையை திருடி இருக்கலாம்னு அவங்க நினைக்கிறாங்க .. நீங்க என்ன நினைக்கிறீங்க என்று அர்ஜூன் அருணை கூர்ந்து பார்க்க...

"நோ நோ நோ , 

"எஸ் எஸ் எஸ்

"இல்லை 

"ஆமா ஆமா ரெண்டு பேரையும் பிரிக்க பார்த்தீங்க முடியல.. சோ , பிள்ளைங்க மேல கை வச்சிடீங்க  பிள்ளைங்க உயிரோட இருக்கா இல்லையா? 

"அய்யோ சார் இல்ல நான் எதுவும் பண்ணல ... 

என்ன விட அவங்க ரெண்டு பேரும் நகமும் சதையுமா சேர்ந்து இருந்தது எனக்கு பிடிக்கல.... 

"புரியும் படி சொல்லுங்க 

"அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் விரிசல் வரணும்னு கண்டதையும் செஞ்சது உண்மைதான் ஆனா,  இந்த குழந்தையை திருடுற அளவுக்கு என் மனசுல வஞ்சம் இல்லை...  ரெண்டு பேருக்கும் முதல் பிரெண்டா நான் இருக்கணும்னு  நினைச்சேனே தவிர .... அவங்க கஷ்டப்பட்டு நான் அதுல குளிர் காயணும்னு நினைக்கவே இல்ல சார் என்ற நண்பனின் பேச்சை ரவியும் கிருஷூம் ஏண்டா இப்படி என்பது போல் பார்க்க...

"பின்ன என்னடா எதுக்கு எடுத்தாலும் அருண் அருண்னு கூப்பிடுற,  நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம பிசினஸ் தொடங்கினீங்க கல்யாணத்துக்கு  கூட என்கிட்ட சொல்லல...  கேட்டா நீ எங்கேயோ படிச்சுக்கிட்டு இருந்த வந்ததும் சொல்லிக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்  ,  அப்போ உங்களுக்கு நான் வேண்டா வெறுப்பு தானே அந்த கோபத்துல ஏதோ பண்ணிட்டேன் உங்க பிள்ளைகளை கடத்துற அளவுக்கு நான் கல்நெஞ்சகாரன்  இல்லை  நீங்க ரெண்டு பேரும் என்ன ஒதுக்கினது போல பீல், அதான் இப்படி என்ற அருண்  தோளை  இரு பக்கமும் தட்டிக் கொடுத்த நண்பர்கள்...

டேய் நீ வேற  ப்ரபஷம்.  நாங்க வேற ... சோ நிறைய மிங்கிள் ஆகல அதுக்காக நீ நண்பன் இல்லைன்னு ஆகிடுமாடா,  அவன் மச்சான்னா நீயும் மச்சான்தானடா என்று ரவி அவனை வலியோடு பார்க்க 

"என் புத்திக்கு புரியலடா  நான் என்ன செய்ய ?

சாரிடா என்று அருண் இருவரையும் மாறி மாறி பார்க்க 

"ப்ச்  விடு இப்போ மிச்சம் இருக்கிறது உன் பொண்ணு மட்டும்தான்,  உன் பொண்ணையாவது காப்பாத்தி ஆகணும் ... கடத்தப்பட்டிருக்க நம்ம குழந்தைகளை எப்படியாவது மீட்டு ஆகணும்..

ம்ம் 

"தனித்தனியா இருந்தா பலமும் குறைவு பலவீனமும் அதிகம் சேர்ந்து நின்னு எதிராளியை கண்டுபிடிப்போம்டா மூவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டனர்.. 

அர்ஜூன் சார் எதாவது செய்யுங்க ??

என்ன செய்ய சொல்றீங்க காலையில வந்தவன் இன்னும் மதிய லஞ்ச் சாப்பிடல...  சாப்பிடுட்டு வந்து பொறுமையா டீல் பண்றேன்..  என்ற அர்ஜூனை மூவரும் அதிர்ந்து பார்க்க

"ஒத்த க்ளு  கூட எனக்கு கடத்தல்காரன் கொடுக்கல, க்ளு  கிடைச்சா தான் அதை வச்சி  என்னால கடத்தல் காரன் யாருன்னு கண்டுபிடிக்க முடியும் ...

"சார் 

"ஐ திங்க் அடுத்தது அருணோட புள்ளையா இருக்கலாம் ... ஒருவேளை அப்படி அருணோட புள்ளைய கடத்த வரும்போது புடிக்கலாம் 

"என்ன சார் ரெஸ்பான்சிபுள் இல்லாம பேசுறீங்க

"எனக்கு எதுக்கு ரெஸ்பான்சிபுள்,  உங்கள மாதிரி ஆயிரம் குழந்தைகளோட கேஸை நான் ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்கேன்...  எல்லாத்துக்கும் நான் பதற முடியாது , உங்கள மாதிரி நான் பதறி நின்னா எந்த கேசையும் என்னால கரெக்டா ஹேண்டில் பண்ண முடியாது இன்னைக்கு தான கேஸை டேக் ஓவர் பண்ணி இருக்கேன் புடிச்சுடலாம்...

"சார் எங்க சைடுல இருந்து என்ன வேணும்னாலும் செய்ய நாங்க காத்திருக்கோம்..

"யூ மீன் லஞ்சம் தர்றத பத்தியா பேசுறீங்க,,

"சார் தேவைப்பட்டா  என்ற அருணை மேலும் கீழும் பார்த்த அர்ஜூன் விரலை நெட்டி முறித்துக் கொண்டே

"குட் அப்ரோச்,  நான் கொஞ்சம் பேராசைக்காரன்  அது என்ன சுத்தி இருக்கிறவங்களுக்கும் என்ன பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கும் தெரியும்

"சார் எத்தனை கோடினாலும் கைமாத்திடலாம்

எங்களுக்கு தேவை குழந்தை எந்த பாதிப்பும் இல்லாம மறுபடியும் வந்து சேரனும்...

"கோடியா அது எந்த மூலைக்கு காணும் 

"சார்

"நான் ரொம்ப மோசமானவன் மூணு பேர் சொத்தையும் எழுதி வையுங்கடான்னு கேட்டாலும் கேட்பேன் என்று அவன் மீசையை முறுக்க , மூவரும் அதிர்ந்து போய் அர்ஜூனை பார்க்க ... 

"அதோட கொஞ்சம் கோவக்காரன் வேற, இப்படி இன்னொருவாட்டி பணத்தை கொண்டு வந்து என் முன்னாடி நின்னீங்கன்னு வையுங்க,  உங்க புள்ளைங்கள நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்கடான்னு,  எப்படி டான்னு போயிட்டே இருப்பேன் புரியுதா? என்று விரலை  நீட்டி எச்சரிக்க...  மூவரும் எச்சில் விழுங்கி அர்ஜூன் வாரியரை பார்த்தனர் ... 

சாரி சார் ...  என்று முடியும் முன் பள்ளி வளாகத்தை சுற்றி கண்களை அலைய விட்டவன்.... அங்கே உள்ள காட்சிகளையும் சேகரித்து கொண்டு விசிலடித்து கொண்டே காரில் ஏற 

என்ன அருண்,  அர்ஜூன் வாரியர் கேஸ் எடுத்தா ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சிருவார்னு  சொல்லுவாங்க...  இவர் பேச்சு  நடவடிக்கை எல்லாமே தினுசா  இருக்கு .. கண்டுபிடிச்சிடுவாராடா ? இவரை நம்பி நம்ம சும்மா இருக்கலாமா,  இல்ல வேற ஏதாவது ட்ரை பண்ணுவோமா என்று பிள்ளையை தொலைத்தவர்கள் வேதனையில் அசால்டாக போகும் அர்ஜூன் வாரியரை பார்க்க..

"ஆளு  கொஞ்சம் குண்டக்க மண்டக்க தான்டா பேசுவாரு ... ஆனா மண்ட ரொம்ப ஷார்ப்புன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன்...  ரெண்டு நாள் பார்ப்போம்டா ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு பாத்துட்டு அதுக்கு பிறகு பண்ணலாம் என்ற அருணுக்கு ஆமோதிப்பாக தலையாட்டினர்...

காரில் போய் கொண்டிருந்த அர்ஜூனோ காணாது போன க்ரிஷ் மகள் புத்தக பையிலிருந்து எடுத்த மஞ்சள் கயிறை வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தான்.. 

ம்ம் கடத்தல்காரன் பயபக்தியானவன் போல கடத்துனது சாமியா இல்ல  ஆசாமியா?  

கண்டுபிடிச்சிடுவோம் என்று விசில்அடித்தவன் பார்வையில் இருந்து சிறு துரும்பும் மறையாது 

அஃது மறைந்து விடுமா??