அஃது11

Akthu11

அஃது11

11 அஃது !!

நடு இரவு வேளை தொடங்கியது கடைசி நாள் திருவிழா என்பதால் கூட்டம் ஜெஜெ என்று ஆர்ப்பரித்தது ...

"இங்க உள்ள புரோட்டா நல்லா இருக்குமாமே இரண்டு பார்சல் வாங்கி வையுங்க அருண் என்று சொல்லி அதையும் போய் மொக்கி விட்டு வந்து மறுபடியும் சுற்றிக்கொண்டு இருந்தான் அர்ஜூன் 

"டேய் பேசாம நாமளே களத்துல இறங்கிட வேண்டியதுதான்... இனிமே இப்படி உட்கார்ந்துட்டு இருக்கிறது வேஸ்ட் என்று ரவி எழும்ப கிருஷூம் அவன் பின்னால் நடக்க... திடீரென்று ரவியின் போனுக்கு அர்ஜூன் வாரியரிடம் இருந்து போன் வந்தது... வேகமாக போனை எடுத்து அவன் காதில் வைத்து 

சார் 

"ரவி நான் சொல்றத கேளுங்க ஆள கண்டு புடிச்சிட்டேன் 

சார் நிஜமாவா?

" எஸ் இந்த கூட்டத்துக்குள்ள தான் அவன் இருக்கான் வெளியே போக வழி இல்லாம உள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கான், பிள்ளைகளும் இங்க தான் இருக்கு , சேஃபா இருக்கு.... ஆனா நான் சொல்றத சொல்றபடி செய்யணும்..ஏன் எதுக்கு எங்க இப்படி கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்க கூடாது 

"சார் எங்களுக்கு எங்க பிள்ளைங்க மறுபடி வந்தா போதும் சார் ,

"இப்போ இப்படி சொல்லிட்ட பிறகு என்கிட்ட கேள்வி கேட்டிங்கன்னா, எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்

"சார் எங்களோட குழந்தைங்க வேணும் அவ்வளவுதான் நீங்க என்ன வேணுனாலும் பண்ணுங்க

ம்ம் ரைட் நான் சொல்லும்போது ஊர்ல உள்ள அத்தனை லைட்டையும் ஆஃப் பண்ண சொல்லுங்க ஒரு குட்டி வெளிச்சம் கூட ஊருக்குள்ள வரக்கூடாது

ஏன் சார் ?

"இப்பதானே சொன்னேன், ஏன் எதுக்குன்னு என்கிட்ட கேள்வி கேக்க கூடாதுன்னு..

சரி சார்.. நீங்க சொல்ற மாதிரி ஊர் பஞ்சாயத்து தலைவர் கிட்ட சொல்லி நீங்க சொல்ற நேரம் ஊர் மொத்தத்தையும் இருட்டா மாத்திடுறேன்..

ஓகே அடுத்து இந்த ஊர்ல திருவிழாவுக்குள்ள நிக்கிற அத்தனை பேருக்கும் நான் சொல்ற மெசேஜ் எப்படி போகும் எப்படி சொல்லுவீங்கன்னு ஐ டோன்ட் கேர் ... ஆனா சொல்லி இருக்கணும்... கரெண்ட் கட் ஆகும் போது, அத்தனை பேரும் ஒரு பின்ச் சத்தம் கொடுக்கக் கூடாது அப்படியே நின்ன இடத்தில் நிலத்துல படுத்திடனும் புரியுதா... பத்து நிமிஷம் போதும் அதுக்கு பிறகு லைட்டை ஆன் பண்ண சொல்லுங்க.. 

"சார் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு எப்படி மெசேஜ் பாஸ் பண்றது

"அது உங்க சாமத்தியம் ஒவ்வொருத்தர்கிட்டேயா போய் சொல்லுவீங்களோ ? இல்ல ஒட்டுமொத்தமாக கூப்பிட்டு வைத்து சொல்லுவீங்களோ, கரண்ட் கட் ஆகும் போது அந்த இடத்துல நான் மட்டும் தான் ஸ்டாண்டிங் பொசிஷன்ல நிக்கணும் .... மத்த அத்தனை பேரும் நிலத்துல தரையோடு தரையா படுத்து இருக்கணும்... இங்க இருக்கிறவங்க எல்லாரும் ஊர் காரங்கதானே, ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல் பரிமாறிக்க அவ்வளவு கஷ்டம் ஒன்னும் இல்லையே ரவி... வெளியூர் காரனா இருந்தா மட்டும்தான் இந்த நியூஸ் அவனுக்கு போகாது... அவன் சொல்ல வருவது ஏதோ புரிவது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது 

சரி சார் என்று ரவி தலையாட்டி உடனே அருணை பஞ்சாயத்து தலைவரிடம் பேசி அத்தனை பேருக்கும் ஊர் வாட்சப் குரூப் மூலமாக தகவலை பரிமாற சொல்ல அவர்களும் அதை அச்சு பிசகாமல் செய்தனர்..

ஊர் மொத்தமும் விஷயத்தை காதில் வாங்கி வைத்துக் கொண்டது, ஆனால் ஒருவரும் ஒருவரிடமும் அதைப்பற்றி மூச்சு விடவில்லை பிள்ளைகளை காப்பாற்ற அவர்களால் முடிந்த பங்கை அமைதியாக இருந்து அவர்களும் செய்தனர்... 

"சார் உண்மையாவே ஆள கண்டுபிடிச்சிட்டீங்களா போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் போட்ட அர்ஜூன் வாரியரை நாராயணன் வாயை பிளந்து பார்க்க

"எங்க நாராயணா, காலையில இருந்து இங்க எத்தனை பிகர் நல்லா இருக்கு, எத்தனை பேரும் தேறாதுன்னு லிஸ்ட் போடுறேனே தவிர குற்றவாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியல 

"பின்ன எதுக்கு சார் அப்படி எல்லாம் சொல்லி அவங்களையும் குழப்பி விட்டீங்க

" எல்லாம் குற்றவாளியா கண்டுபிடிக்கிறதுக்கு தான் "

"புரியலையே சார்

" குற்றவாளி இந்த கூட்டத்துக்குள்ள இருக்கான் ..அவன் என்னை பார்த்துட்டே இருக்கான் .. அவர் மார்வேடத்துல இருக்கான். அதுவும் ஷியர் , குழந்தைங்க இங்கதான் இருக்கு அதுவும் எனக்கு தெரியும்... ஆனா அஃது யாரு அதான் எனக்கு தெரியாது என்று தோளை உலுக்கினான் ... 

ஆனா ஒன்னு தெரியும் வெளிச்சம் போற அந்த செகண்ட்ல குற்றவாளி என் கண்ண விட்டு தப்பிச்சு ஓட ட்ரை பண்ணுவான்... ஐ திங்க் கரண்ட் போற அந்த சமயத்துல இந்த இடத்தை விட்டு நகர ட்ரை பண்ணுவான் .... அது போதும் , அவன் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு.. ஊருக்கே தெரிஞ்ச விஷயம் அவனுக்கு தெரியாது, அது நமக்கு பிளஸ், அவனுக்கு மைனஸ்... ஊரே தரையில் படுக்கும் போது, ஒருத்தன் மட்டும் சோலோவா நின்னா அந்த ஒருத்தன் யாரா இருக்கும் என்று அர்ஜூன் வாரியர் உதட்டைப் பிதுக்க

"சார் அவன் தான் அக்யூஸ்ட்டா இருப்பான்

ம்ம் அதுக்குத்தான் இவ்வளவு நேரமா பொறுமையா காத்திருந்தது... எதுக்கும் பொறுமை முக்கியம் பிகிலு, அவசரப்பட்ட அண்டாக்குள்ள கைவிட்டா ஒன்னும் தேறாது புரியுதா நாராயணா? 

"எங்கேயோ போயிட்டீங்க சார் "என்று அவன் மெச்சினான் .. 

"சரியாக பனிரெண்டு மணிக்கு சாமி வேட்டைக்கு செல்ல இருப்பதால் கரெண்ட் கட் ஆகும் எல்லாரும் பத்திரமாக நின்று கொள்ளுமாறு விழா கமிட்டி சார்பாக கேட்டு கொள்கிறது என்று ஒலிப்பெருக்கியில் ஊருக்கு தகவல் வர ....

திருவிழா கூட்டத்தோடு கூட்டமாக கலர் கோழிக்குஞ்சுகளை விற்று கொண்டிருந்த வயதான நபர் தூரத்தில் இருக்கும் யாருக்கோ சமிக்ஞை செய்ய .... அந்த நபரும் கட்டை விரலை தூக்கி காட்டிட அர்ஜூன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து மறைவாக வைத்து கொண்டு மணியை பார்த்தான்....

11.58

11.59

12 

டப் டூப் டமார் டூமில் என்று துப்பாக்கி குண்டு பாயும் சத்தம் தான் கேட்டது... ஊரே தரையில் படுத்து கிடக்க ஒரு உருவம் மட்டும் அங்கும் இங்கும் தாவி குதித்து ஓட முயற்சி செய்ய, அர்ஜூன் வாரியர் பின்னால் வளைத்து பிடித்து துப்பாக்கி முனையில் அந்த நபரை தன் வசப்படுத்தி இருந்தான் ... 

அவன் கேட்ட பத்து நிமிடத்தில் குற்றவாளியை குண்டுகட்டாக தூக்கி விட்டான் வெளிச்சம் பளீர் என்று வர ... போலீஸ் வாகனத்தில் ஒரு உருவத்தை கருப்பு துணியால் முகத்தை மறைத்து கட்டி போட்டிருந்தான் 

ரவி இந்தாங்க உங்க பிள்ளைங்க என்று மூன்று குழந்தைகளையும் கோழிக்குஞ்சுகள் அடைத்து வைப்பது போல ஒரு விஸ்தார பெட்டியில் திறந்து காட்ட 

உள்ளே திருட்டு முழி முழித்த படி மூன்றும் உட்கார்ந்து இருந்தது 

அம்மா 

அம்மா 

அம்மா என்று குழந்தைகள் ஓடி வந்து தாயை கட்டி கொண்டது 

சார் அவனை கொல்லாம விட மாட்டோம் என்று மூவரும் அந்த நபரை நெருங்க 

"அப்பவே சொன்னேன் குற்றவாளியை கண்டுபிடிக்கிறது என் வேலை , அவன கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்றது என்னோட வேலை ... உங்க குழந்தைங்க உங்களுக்கு கிடைச்சிருச்சு இல்ல... குழந்தைகளுக்கு கூட்டிட்டு போற வேலையை பாருங்க 

"சார் மூணு பிள்ளைங்கள பாடா படுத்து இருக்கான் அவன விட சொல்றீங்களா.

"அதை பாத்துக்க சட்டம் இருக்கு.. நான் இருக்கேன் ஆர் யூ ஆல்ரைட் "என்று குழந்தைகளை பார்த்து அவன் கேட்க.. ஆம் என்று தலையாட்டியது 

"அவன் உங்களை ஏதாவது பண்ணினானா இல்லை என்று பிள்ளைகள் மறுத்து தலையாட்ட..

"சேஃபா இருந்தீங்களா ஆம் என்றது

"பின்னென்ன உங்க பிள்ளைங்க சேஃபா உங்க கிட்ட வந்து சேர்ந்துடுச்சுல்ல கூட்டிட்டு போங்க என்ற அர்ஜுன் வாரியர் அந்த குழந்தைகளை அடைத்து வைத்த பெட்டியை ஒரு முறை திரும்பிப் பார்த்தான்

உள்ளே பஞ்சு தலையணை சாப்பாட்டு பொருள் பலுன்கள் தின்பண்டங்கள் பிள்ளைகள் விளையாட விளையாட்டு சாமான்கள் என அத்தனையும் இருந்தது, அத்தோடு பிள்ளைகள் வேடிக்கை பார்ப்பதற்காக அந்த மரப்பெட்டியில் பல குட்டி ஓட்டைகள் அதன் வழியாக சுவாசம் தடையில்லாமல் உள்ளே போவதற்கான வழிமுறைகள் என்று அத்தனையும் செய்து வைத்திருந்தது .....

அக்யூஸ்ட் ரெண்டு பேர்னு சொன்னீங்க ஒருத்தர் தான் கண்டுபிடிச்சு இருக்கீங்க என்று மேலிடத்தில் இருந்து அவனிடம் கேள்வி வர

ஒருத்தன் எஸ்கேப் ஆயிட்டான் இவனை மட்டும் தான் பிடிக்க முடிஞ்சது , கூட்டிட்டு வரவா இல்லை இங்கேயே இவனையும் விட்டுட்டு வரவா

"எதுவும் சொல்லல கூட்டிட்டு வாங்க சாமி, இல்ல நாளைக்கு மீடியா முன்னாடி நாம பேச முடியாது, எனிவே கங்கிராஜுலேசன் அர்ஜூன் வாரியர், உங்க கையில ஒரு கேஸ் கொடுத்தா அதை பக்காவா ஸ்கெட்ச் போட்டு முடிப்பீங்கன்னு இன்னொரு வாட்டி நிரூபிச்சிட்டீங்க "என்று முடிப்பதற்கு முன் போன் கட் ஆகிவிட்டது

" திறமை இருக்கிற இடத்தில கொஞ்சம் திமிர் ஜாஸ்தியா தான் இருக்கும் என்பதற்கு இவன்தான் சாட்சி என்று மேல் அதிகாரி முணுமுணுத்தார்... 

ஊரை விட்டு நகரும் வண்டியில் பின் இருக்கையில் கைக்கு விலக்கிடப்பட்டு மரத்துக்கு பின் இருந்த உருவத்தை கண்ணீர் நிறைந்த கண்ணோடு அவன் பார்த்து கொண்டே போக ... 

அவன் கோலம் கண்டு இவ்வுருவம் அழுகையை உதடு கடித்து அடக்கியது .... கையில் அவன் குழந்தையை அணைத்துபிடித்தபடி ஆதரவற்று வேர் அறுந்து நின்றது .. அர்ஜூன் வாரியர் தன் கார் கண்ணாடியில் இந்த காட்சியை காணாது கடந்து போவானோ?? நாராயணன் வந்து மரத்தின் பின்னே இருந்த அந்த உருவம் முன்னே நிற்க ... பயந்து போய் போலீசை கண்டு பிள்ளையை அணைத்து கொண்டு அண்ணாந்து பார்க்க 

"வாரியர் சார் உங்களை பத்திரமா வீட்டுல விட சொன்னாங்க 

"அவர் என்று மெலிதாக பயந்து கேட்க 

"அது தெரில நீங்க வாங்க ...

"என்னையும் அவர் கூடயே தூக்குல போட்டுடுவீங்களா... எனக்கு அவரை விட்டா யாரும் இல்லை சார் ....

"அது கோர்ட்தான் முடிவு பண்ணணும், சார் உங்களை விட சொல்லி இருக்கார் , நான் விட்டுடுறேன் என்று அவரை பாத்திரமாக கார் ஏற்றி கொண்டு அந்த ஊரை விட்டு இரண்டு வாகனமும் சென்னை நோக்கி பறந்தது .. 

குழந்தைகள் நலமாக உள்ளார்களா என்று பெற்றவர்கள் பதறிப் போய் குழந்தைகளை பார்க்க நன்றாகத்தான் இருந்தார்கள்..

யார் கடத்திட்டு போனது உங்களுக்கு தெஞ்சவர் தானா 

 ம்ம் 

"யாரு?  

"அர்ஜூன் அங்கிள் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கார் 

"எங்ககிட்ட கூடவா ? 

குறிப்பா உங்க அம்மா அப்பாகிட்ட என்ன ஏதுன்னு சொல்லக்கூடாது, இந்த கேஸ் முடியுற வரைக்கும் வாயை திறக்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிருக்கார்.. என்று குழந்தைகள் மூவரும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல.. அர்ஜூன் வாரியரிடம் கேட்டால்

கேள்வி கேட்காதன்னு சொல்லி இருக்கேன்ல என்று திமிராக பதில் சொல்வான்

சரி எப்படியாக இருந்தாலும் இன்வெஸ்டிகேஷன் முடிந்து கோர்ட்டுக்கு அவன் வரும்பொழுது என்ன ஏது என்று தெரிய தானே போகிறது, 

அவனுக்கு கடுமையான தண்டனையை அதுவும் மரண தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மூன்று நண்பர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருந்தனர்...