அஃது 13
Akthu13
13 அஃது!!
நான் கருப்பன் அய்யா என்று தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான்
கருப்பன் ஆகா ஓஹோ அழகன், கதாநாயகன் என்றெல்லாம் சொல்ல முடியாது , அன்றாட காட்சி சாலையோரம் திருவிழா கடைகளில் வளையல் கடை போடும் ஒரு அப்பாவி குடிமகன்... அவ்வளவுதான்,
அவன் மனைவி செண்பகம், இவன் வளையல் கடை போட்டால், அவன் அருகே பூக்கடை போட்டு இருவருமாக யாருக்கும் தொல்லை இல்லாமல் வாழும் தம்பதிகள்.. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள்.. 3 வேளை சாப்பாடு இருந்தால் போதும் அங்கங்கே திருவிழா போடும் இடங்களில் தம்பதிகள் போய் அங்கேயே இரவு தங்கிக் கொண்டு கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வார்கள்...பொருட்களை எடுத்து போக கனபாடு பட்டு ஒரு பழைய ஜீப்பை வாங்கி அதில் பொருட்களை ஏற்றி ஒவ்வொரு ஊராக வியாபாரம் செய்யும் எளிய வியாபாரி அவன்
இப்படி போன அவர்கள் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ , வேற யார் கண்கள் , இந்த மூன்று நண்பர்கள் கண்ணும் பட்டுவிட்டது போல..
நண்பர்களாக வாரத்தில் ஒரு நாள் வேலையில்லாத நாள் எங்கையாவது குடித்துவிட்டு கும்மாளம் அடித்து விட்டு இரவு வீடு வந்து சேரும் நண்பர்கள் மூவரும் குற்றாலத்தில் இரண்டு நாட்கள் கும்மாளம் அடித்து விட்டு , வயிறு முட்ட குடித்து நிதானம் இல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்..
இதே கயத்தாறு ஊர் திருவிழாவில் வளையல் கடை போடுவதற்காக வந்து இறங்கி அவனும் மனைவியும் வேலை செய்து கொண்டிருக்க
"செம்பா
"என்ன மச்சான் ?
"அசதியா இருந்த மாதிரி இருக்கியே புள்ள
"தெரில மச்சான் கொஞ்சம் தூக்கம் வந்தாப்ல இருக்கு "
"பிள்ளையை பக்கத்துல போட்டு கொஞ்சம் நேரம் படு .. நான் மீதி வேலையை முடிச்சுடுறேன்...
காதல் எங்கேயும் உண்டு, அரண்மனையில் தோன்றுவது மட்டும் காதல் இல்லையே, மண் குடிசையில் கூட மெய்க்காதல் தோன்றுமே.... பெற்றோர்கள் செய்து வைத்த திருமணம் தான் ... அவனோடு ஊர் ஊராக வளையல் கடை போடும் போதும் சரி , பட்டினி கிடக்கும் போதும் சரி அழகாய் சிரிப்பாள்....
"வருத்தமா இருக்கா புள்ள ...
"அட போ மச்சான், உன் கூட இருந்தா போதும் , என்று அவன் தோள் சாயும் மனைவிக்கு எந்த கேடும் வந்து விட கூடாது என்பது மட்டுமே அவன் காதல் ... அதற்க்கு கேடு விளைவிக்கவே ஹை ஸீபிடில் காரை ஓட்டி கொண்டு குடிபோதையில் நிதானம் இழந்து வந்து கொண்டிருந்தனர் நண்பர்கள்...
நீ தூங்கு புள்ள "
"நீங்க
"நான் பின்னாடியே வர்றேன் நீ முன்னாடி போ
"அப்போ நான் போறேன் கண்ணு கட்டுது" என்று செண்பா மரத்துக்கு அடியில் ஒரு பாயை விரித்து மகளையும் அருகே போட்டு படுக்க... கருப்பன் போர்வையை மனைவிக்கு போர்த்திவிட்டு வந்து மீதி வேலையை பார்த்து கொண்டிருந்த வேளை
டமார் டம் என்ற பெரும் ஒலியில் கருப்பன் பதறி திரும்ப ஒரு கார் அவனை தாண்டி போய் காரில் உரசி நிற்க
புள்ள ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அலறி கொண்டு கருப்பன் மனைவி பிள்ளையை நோக்கி ஓட ....
"டேய் ரவி யார் மேலேயோ இடிச்சிட்டோம்டா...
"அருண் கீழ இறங்கி என்னன்னு பாரு என்றதும் அருண் கீழே இறங்க போக அவன் கையை தடுத்த கிருஷ்
"மச்சான் வீண் பிரச்சனை செத்து கித்து தொலைச்சிருந்தா மாட்டிப்போம், ஆள் நடமாட்டம் இல்லை பேசாம போயிடலாம்" அதுதான் சரி என்று தோன்ற ஒரு பணக்கட்டை எடுத்து தூக்கி வீசிவிட்டு கார் வேகமாக மறைந்து போக
தன் முகத்தில் வந்து விழுந்த பணக்கட்டில் தான் கருப்பன் அதிர்வில் இருந்து மீண்டான்
"புள்ள புள்ள
"மக மக என்று அவள் வலியில் அனத்த .. கருப்பன் அவள் மீது கிடந்த போர்வையை விலக்கிட செம்பா இடுப்புக்கு கீழே சிதைந்து ரத்த சகதியாக கிடக்க ...
அய்யோ புள்ள இஇஇஇஇஇஇஇஇஇஇ என்று கருப்பன் தலையில் அடித்து கொண்டு அழ பிள்ளையை பார்க்க... கார் மோதிய வேகத்தில் அருகே இருந்த கம்பி பிள்ளை விலா எலும்பில் குத்தி கிழித்து போயிருக்க ....
அய்யோ அய்யோ அய்யோ என்ன செய்ய என்று தெரியாது கதறியவன் வாழ்க்கை ஒரு நொடியில் இவர்கள் செய்த செயலில் தலைகீழாக மாறி போனது ... அந்த வண்டி போன திசையை கருப்பன் பார்க்க
டேய் மச்சான் வண்டியை ஏடுறா மாட்டிக்க போறோம் சகதியில் மாட்டி வண்டி சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தது
ப்ச் சகுதிக்குள்ள டயர் மாட்டிக்கிச்சுடா
"இரு இறங்கி தள்ளுறோம்" என்று இருவர் கீழே இறங்கி தள்ளி ஒருவன் வண்டியை ஓட்ட.... கருப்பனுக்காக கண்ணீர் விட்ட மழையில் மின்னல் விட்டு விட்டு அடிக்க அதன் ஒளியில் திரும்பி பார்த்த மூவர் முகமும் கருப்பன் கண்ணில் மட்டும் அல்ல நெஞ்சிலும் ஆழ பதிந்து போனது .... கார் நம்பரை எப்படியோ அந்த நிலையிலும் மனதில் பதிந்து கொண்டான் .... மனைவி பிள்ளையை அருகே இருந்தவர்கள் துணையோடு தூக்கி கொண்டு அரசு ஆஸ்பத்திரி கொண்டு போக
உங்க பொண்டாட்டி இடுப்புக்கு கீழே வேலை செய்யாது கருப்பன் என்று டாக்ட்டர் கூற
"கடைசி வர அவங்களை தூக்கிதான் சுமக்கணும்
உயிரோட இருப்பாள்ள டாக்டரம்மா"
""உயிருக்கு பிரச்சனை இல்லை ஆனா
என்ன டாக்டரம்மா ??
"மனைவியா அவங்களை நீங்க என்று டாக்டர் தயங்க
"என் காதல் அவ தொடைக்கு நடுவுல இல்லை டாக்டரம்மா; என் காதல் இதயத்துல இருக்கு அது பத்திரமாக இருக்குல்ல, அது போதும்" என்றவனை பெருமூச்சு விட்டு பார்த்த டாக்டர் ...
"உங்க மகதான்
"அய்யோ உசுரோட இல்லையாம்மா
"கம்பி இருதயத்தில் உரசி போயிருக்கு அதுல ஒரு வால்வு லைட்டா டேமேஜ் ஆகி இருக்கு, கை வைச்சா எதுவும் ஆகிடும் எதாவது பெரிய இருதய டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் பார்த்தா பிழைக்க வாய்ப்பு இருக்கு
"ஹான் அப்படின்னா?? புரியாது பார்த்த கருப்பனை எப்படி தேற்ற புரியவில்லை
"சீக்கிரமா பெரிய டாக்டர் போய் பாருங்க இல்லை பிள்ளையை காப்பாத்த முடியாது கருப்பன்... திகைத்து பார்த்தான்... இடுப்பு கீழ் செயல் இல்லாத மனைவி ஒரு பக்கம் , இதயம் பலகீனம் ஆன மகள் ஒரு பக்கம் என்று ஒவ்வொரு நாளும் அவன் வாழ்க்கை நரகம் தான் ...
அவன் நல்லவன் தான் ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் மனைவியை மகளை பார்க்கும் போது உள்ளே இருந்த மிருகம் ஒன்று உறங்க மறுத்தது ....
மாமா மாமா என்று அவனையே சாமி போல சுற்றிய மனைவியை முடமாக பார்க்க முடியவில்லை... முதுகில் வைத்து சுற்றி கட்டி கொண்டான்...
எத்தனை நாள் துக்கம் கொண்டாட சாப்பிட்டு ஆகணுமே, வயிற்றை நிறைக்க ஓடியாகணுமே.... பசியில் அகோரம் பலவீனமாக கிடந்த இருவரையும் கண்டு நெஞ்சு கனக்க பெருமூச்சு விட்டவன்
"எனக்கு கால் இருக்குல்ல , என் உசுர் உள்ள வரை உன்ன சுமக்கிறேன் புள்ள என்று கருப்பன் முன் நெஞ்சில் மகளை தூக்கி கட்டினான், வளையல் வளையல் என்று மீண்டும் தெருத்தெருவாக விற்க ஆரம்பித்தான்....தன் உடைந்த சிறகுகளை மனைவிக்கு மகளுக்கு காட்டாது சிரித்த முகத்துக்குள் மறைத்து கொண்டாலும் ... உள்ளே உழண்டு கொண்டிருந்த தீப்பொறி அணைய மறைத்து நின்றது ....
இல்லாதப்பட்டவன் தானே என்ன செஞ்சிடுவான்னு பணத்தை தூக்கி போட்டுட்டு போறீங்களாடா , இல்லாத பட்டவனுக்கு இழக்க எதுவுமே இல்லை ... அவன் எதிர்த்து நின்று அடிச்சா அடி ஆழம் வரை தோண்டி எடுத்துடுவான்னு காட்டுறேன்" என்று பற்றிய நெருப்பை அணைய விடாது பார்த்து கொண்டான்.... மூவரையும் தேடி அலைந்தான் .. ஐந்து வருடம் கழித்து தான் கண்டுபிடித்தான் ... அன்றிலிருந்து அவர்களை கதற வைக்க சிதறடிக்க ஆயுதத்தை தீட்டி இதோ கதி கலங்க வைத்து விட்டான் ....
மூன்று பிள்ளைகளும் கோவிலுக்கு வரும் போது அந்த கோவிலில் வாசலில் கடை போட்டிருக்கும் கருப்பனிடம் பேசுவது வழக்கம் ... நல் மதிப்பை பெற்று விட்டான்
வளையல் ஆங்கிள் என்று எங்கு கண்டாலும் அன்பாக அழைக்கும் அளவு நெருங்கி விட்டான் ,
"ஆங்கிள் என் பெர்த்டே நாளைக்கு வருவீங்களா...
அது
அம்மா அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன் அங்கிள் கூட்டிட்டு வர சொன்னாங்க வாங்க ப்ளீஸ் என்று ரவி மகள் அழைக்க கடைசி ஆளாக தான் வந்தான்... யாரும் அவனை கண்டுகொள்ள வில்லை அவளுக்கு பரிசை கொடுத்தவன் ...
"மேல ஜூஸ் கொட்டிருச்சு பாப்பா கழுவணுமே
"மேல ரூம் இருக்கு போங்க ஆங்கிள்
"சரி பாப்பா எந்த பக்கம் போகணும்
"நான் இதை வச்சிட்டு கூட்டிட்டு போறேன் என்று பொருட்களை தாய் மடியில் வைத்தவள் முன்னே நடக்க டெடி பியரை தூக்கி கிருஷ் மகள் காலடியில் போட்ட கருப்பன்
இன்னைக்கு இவ அடுத்து நீ , இதுதாண்டா உங்க மூணு பேருக்கும் கடைசி சிரிப்பு என்று என்று மெளனமாக சிரித்து கொண்டு வீடியோ எடுப்பவர் சாப்பிட போன நேரம் பார்த்து, குழந்தைக்கு பின்னே வெகு நேரம் கழித்து தான் உள்ளே போனான் ... எனவே அவன் வந்ததும் யாருக்கும் தெரியாது போனதும் யாருக்கும் தெரியாது ..
அவன் அன்பாக நீட்டிய ஸ்வீட்டை குழந்தை தின்றிருக்க சிறுது நேரத்தில் மயங்கிய பிள்ளையை பைப் வழியாக தூக்கி கொண்டு மறைந்து விட்டான்... இப்படியே மூவரையும் அதை இதை சொல்லி தூக்கி கொண்டு போய் விட்டான்.. முதலில் அவன் மார்வேடம் கண்டு பயந்து அலறிய குழந்தைகள் மார்வேடம் இல்லாது நின்ற கருப்பனை கண்டு
ஆங்கிள் நீங்களா என்று பயம் போய் கேட்க
"பத்து நாள்ல கொண்டு போய் விட்டுடுறேன்
"ஏன் கடத்தி இருக்கீங்க
"என் பாப்பாவுக்கு இருதயத்துல பிரச்சனை செலவுக்கு பணம் இல்லை உங்கள கடத்தி தான் உங்க அம்மா அப்பாகிட்ட பணம் வாங்கணும் என்ற கருப்பனை பாவமாக பார்த்து வைத்தது குழந்தைகள் ... அவர்கள் அனுதாபம் அவனுக்கு போதுமானதாக இருந்தது ...
ஓகே ஆங்கிள் சொன்னபடி பத்து நாள்ல அனுப்பி விட்டிருவீங்கதான ? ஆன்டி எங்க கூட தான இருப்பாங்க
"ம்ம்
"அப்போ ஓகே ரிஸ்க் இல்லாது பிள்ளைகளை இடம் விட்டு இடம் மாற்ற வசதியாகி போனது ...
இப்போ சொல்லுங்க சாமிகளா !!! நான் செஞ்சது தப்புன்னா தூக்குல போடுங்க , இல்லை சுட்டு தள்ளுங்க எதுக்கும் நான் தயாராதான் வந்திருக்கேன் .. என் மகளையும் மனைவியையும் மட்டும் எதுவும் செஞ்சிடாதீங்க அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றவனை மூன்று நண்பர்களும் அரண்டு போய் பார்த்தனர்...
என்றோ செய்த கர்மா, இன்று நிற்க விட்டு அடிக்கும் என்று அறியவில்லை.... அவர்கள் மடியில் இருந்து பிள்ளைகள் சட்டென எழும்பி தகப்பன்களை பார்த்த பார்வையிலேயே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் .... மனைவிகள் பார்த்த பார்வையில் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடந்திருக்கும்.... யார் முகத்தையும் நேர்கொண்டு பார்க்க முடியாது மூவரும் தலை கவிழ்ந்து உட்கார்ந்து இருந்தனர் ...
எளியவன் வலியவன் ஆனால் எதிர்நிற்க எவனாலும் முடியாது ... எளியவர் முன் வீரத்தை பணத்தை காட்டாதே என்ற அடிப்படை அறம் தெரியாது போயினர்..