குரோத கொள்முதல் அழகே 10
Kurotham10
10 குரோத கொள்முதல் அழகே !!
இன்று தன்னை காப்பாற்றிக் கொண்டோம் என்று நிம்மதி படவா, இல்லை இந்த தற்காலிக இன்பம் உனக்கு சொந்தமில்லை என்று துன்பப்படவா? அவன் போய்விட்டான் என்று சிரிக்கவா , இல்லை அவன் போனால் மீண்டும் உனக்கு தான் ஆபத்து என்று அழவா... கற்பு தப்பித்து விட்டது என்று பெருமூச்சு விடவா? இல்லை இந்த கற்பு அவனால் தீட்டுப்பட்டால் தான் தன்னை சுற்றி இருப்பவர்களை காப்பாற்ற முடியும் என்று அதை தாரா வார்க்கவா பொக்கிஷா மனப்போராட்டம் தாளாது அப்படியே குளிர் காற்றில் வாசலில் உட்கார்ந்தாள்.. சேலை உள்ளே அவன் கழட்டி விட்டு போயிருந்த ஜாக்கெட் தேடி காற்று நுழைந்து உடல் முழுவதும் குளிரச் செய்தது... அவன் தொட்ட போது இருந்த அருவருப்பு இப்போது இல்லை., அப்படியே அந்தக் குளிர் காற்றில் கண் அசந்து தூங்கிவிட்டாள் ..
மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா காலையில முதல் வியாபாரம் உன் கையில பார்த்தாதான் வியாபாரம் கொட்டு கொட்டுன்னு கொட்டுது என்று சில நாள் முன் வரை சொன்ன காய்கறி கடைக்காரர் எக்ஸ்ட்ராவாக இன்று ஒரு கட்டு கீரையை போட்டு விட்டு ..
"மூர்த்தி கிட்ட எவ்வளவு வாங்குற எனக்கு அந்த அளவுக்கு தர முடியலனாலும் , ஓரளவுக்கு தருவேன் மூர்த்தி இல்லாத நேரம் பார்த்து போன் போடு என்று கீரை கட்டின் நடுவே நம்பரை சொருகி கொடுக்க...
"என்னம்மா மார்க்கெட் போயிட்டு வர காய்கறி எல்லாம் பிரஷ்ஷா இருக்கு போல இருக்கு" என்று பாப்பா பாப்பா என்று அன்பாக பார்த்தவன் அவளை இடித்தது போல் நடக்கும் நடுவயது காரனை முகம் சுளித்து தள்ளி நிறுத்த...
"அந்த ரவுடி பய மூர்த்தி இடிச்சா மட்டும் உனக்கு சுகமா இருக்கோ என்று சுருக்கென அவர் கேட்க பதில் எதுவும் சொல்லாமல் தன் வீட்டை நோக்கி நடக்க... தன் பிறந்த குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் இவளை பார்த்துக் கொண்டே அந்த குழந்தையின் கன்னத்தில் இச்சு என்று முத்தம் கொடுத்து
"சித்திக்கு டாட்டா சொல்லு "என்று இவள் காது படக் கூற மெலிதாக சிரிப்பு வந்தது அவளுக்கு ...
வாய்ப்பு கிடைப்பதற்காக எல்லோரும் நல்லவர் வேஷம் போட்டு இருக்கிறார்களா? இல்லை கேடு கெட்டவர்களை எல்லாரையும் நல்லவர்கள் என்று நம்பி பழகி இருக்கிறோமா, பொக்கிஷாவுக்கு தன்னை சுற்றி உள்ளவர்கள் மாற்றத்தை எல்லாம் பார்த்து சிரிப்புதான் வந்தது ....
புடவையை இழுத்து கட்டிக்கொண்டு இருந்தபோது அவளை நல்லவர்கள் என்றார்கள் அவர்களும் நல்லவர்களாக இருந்தார்கள், என்று புடவைக்கு ஒரு கறைப்பட்டதும் நல்லவர்கள் எல்லாம் சீன தேசத்து பொருட்கள் போல நிறம் மாறி அகோரமாக அவள் முன்னால் காட்சி கொடுத்தனர்... ஆண்கள் இப்படி என்றால் பெண்கள் அவள் வரும்போதும் போகும் போதும் காரி துப்புவதும் சாடை பேச்சுகளில் அவளை அவமானப்படுத்துவதும் ஐயையோ அந்த காதுகள் இரண்டுக்கும் வாயிருந்தால் கதறி கதறி அழுதிருக்கும் ஆனால் இதையெல்லாம் கேட்டுவிட்டு பொக்கிஷாவோ தன் வேலைகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்...
ரெண்டு நாள் இரவும் எவன் எவனோ வந்து கதவை தட்டினான் .... காலை வாசலில் புடவை இருந்தது , பணம் இருந்தது , கண்ட கண்ட படம் கொண்ட போட்டோ இருந்தது வக்கிர உலகம் அவளுக்கு பல பரிசுகளை வைத்து விட்டு போயிருக்க.. காலை அதை எல்லாம் குப்பையில் போடுவதே பெரிய வேலையாகி போனது ... ஆனால் வஞ்சகன் வர வில்லை .... இல்லையே இவன் அமைதியாக இருக்கும் ரகம் இல்லையே என்றுதான் ரெண்டு நாளும் யோசனை ... வில்லங்கம் பண்ண வந்தானே , தகப்பனிடம் இருந்து போன் வந்தது ... தங்கச்சி காலேஜ் போயிட்டு இன்னும் வீட்டுக்கு வரல .... என்னு பரந்தாமன் அழ இதோ எங்கே போய் இவளுக்கு தூக்கு கயிறு வாங்க வேண்டுமோ வாங்கி விட்டான் அல்லவா ?
"வந்துடுவா ப்பா...
"ரெண்டு மணிநேரமா வந்துடுவான்னு தான் காத்துட்டு இருந்தேன் ஆனா இன்னும் வரலையே பயமா இருக்கு....
"எவா தூக்கிட்டு போனாளோ, அவாக்கிட்ட போனா அரை மணி நேரத்துல வீட்ல இருப்பா...
"அய்யய்யோ அவளையுமா?
"பதறாதேள் நான் பார்த்துக்கிறேன் என்ற பொக்கிஷா வாசலில் நின்ற காரை நோக்கி நடந்தாள் அது அவள் பெண்மைக்கு கிடைத்த பரிசில் ஒன்று அல்லவா!! ஜீவா சீட்டில் தூங்கி கொண்டிருக்க...
டொக் டொக் என்று ஜன்னலை தட்ட பட்டென்று கண்ணை திறந்தான்...
"அவராண்ட அழைச்சிண்டு போங்கோ... என்று பொக்கிஷா , சீட்டில் ஏறி அமர ரெண்டு நாளாக ஜீவாவுக்கு பயத்தில் காய்ச்சல் நூறு டிகிரி தாண்டி அடித்தது ... கொலையை பார்த்ததில் இருந்து பீதியாக சுற்றி கொண்டிருந்தான்...
பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த பொக்கிஷா கண்ணீரை துடைத்துக்கொண்டே இருக்க காரை ஓட்டிக் கொண்டிருந்த ஜீவாவுக்கு தன் கஷ்டத்தை விட , இவள் கஷ்டம் பெரியது போல் தோன்றியது.. உலகில் அவன் எவ்வளவு பத்திரமான இடத்தில் இருந்திருக்கிறான் மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்று வந்த சில நாட்களிலேயே கண்கூடாக பார்த்து விட்டான்...
சென்னையில எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க இருக்காங்க , அவங்களுக்கு மேல் இடத்துல நல்ல பவர் இருக்கு கண்டிப்பா உங்கள காப்பாத்த முடியும்னு நினைக்கிறேன் , வேணும்னா அங்க போறீங்களா? அவனே பேச்சை தொடங்கினான்... அவன் சொன்னதை அவள் காதுகள் கேட்டு இருந்தால் கண்டிப்பாக இந்த பாதாள அரக்கனிடம் இருந்து விடுதலை பெற்று இருப்பாள் .. இப்படித்தான் பலரின் வாழ்க்கையும் பிரச்சனையை பெரிதாக பார்க்கும் மனம் அதிலிருந்து விடுபடும் சின்ன வழியை விட்டுவிடுகிறது...
என்ன செய்ய? அவள் காதுகளும் அல்லவா அவளை மோசம் செய்தது... ஜீவா பேசியது அவள் காதிலேயே கேட்கவில்லை.... இந்த ரெண்டு நாளில் ஜீவா மூர்த்தி யார் அவன் வாழ்க்கை என்ன என்று கண்டுவிட்டு அரண்டே விட்டான்..... தன் குடும்பத்தை சிதற வைத்த சிந்தாமணி மகன்தான் வஞ்சகமூர்த்தி, இவனிடம் ஏன் தன்னை யட்சன் அனுப்பி வைத்தான் புரியவே இல்லை ,.. இவள் நிலை பார்த்தாலும் பரிதாபமாக இருந்தது தன்னால் எதாவது செய்ய முடியுமா என்று யோசித்தான் ... அவன் வாழ்நாள் சாதனையே ரேஸூம் குடியும்தான் அதை தாண்டி எதுவும் யோசிக்க தெரியவில்லை.. யட்சன் கண்டிப்பாக அவளுக்கு உதவ முடியும் என்று நினைத்து இவளிடம் பேச பொக்கிஷா வாயே திறக்க வில்லை என்றதும் அவள் ஏதோ சூழ்நிலை கைதியாக சிக்கி இருக்கிறாள் என்று புரிய ,. அவனும் அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை...
மிகப்பெரிய மார்கெட் உள்ளே கார் போனது ..... நகை சொத்துக்களை வட்டிக்கு வைத்து பணம் வாங்கும் பைனான்ஸ் கடை ... வஞ்சமூர்ததி பைனாஸ் என்ற பெயர் கொட்டை எழுத்தில் மின்னியது அந்த இருட்டில் அவன் கடை மட்டும் பளபளவென லைட் போட்டு அலங்காரமாய் மின்னியது.. பின்னே பாவப்பட்ட மனிதர்களின் பணமே மின்மினிப்பூச்சி போல அழகாகத்தான் இருக்கும் ...
இதுதாங்க... அவர் இங்க தான் இருக்கார் நான் வெயிட் பண்ணவாங்க..
ம்ஹூம் அவரோட போயிக்கிறேன் பெருமூச்சு விட்டவன் வந்து கதவை திறந்து விட .,
பொக்கிஷா தன் சேலையை தோளோடு போட்டு தன்னை மூடி கொண்டவள்... தள்ளாடிய நடையோடு வஞ்சமூரததி பைனான்ஸ் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்... விடியும் முன் தன் தங்கையை காப்பாற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே என்ற சிந்தை மட்டும் தான் அவளுக்கு இருந்தது
"ரெண்டு வருடமா வட்டியும் வரல முதலும் வரல ... நகை மூழ்கி போச்சும்மா.. போ போ "சாய்வு நாற்காலியில் கால் மேல் கால் உட்கார்ந்து எதிரே நின்ற பெண்ணை விரட்டி கொண்டிருந்தான்
"அய்யா அது மட்டும் தான் என் புருஷன் விட்டு வச்சிட்டு போன ஒரே சொத்து தயவு பண்ணி அதை தாங்கய்யா...
"ஏன் உன் புருசன் பிள்ளை தந்துட்டு போகல, அதை வச்சி பொழப்பு நடத்து.. நான் என்ன கோவில் குளமா நடந்துறேன், பாவ புண்ணியம் கருணை பார்க்க... சொல்லித்தான பணம் தந்தேன் ... சரியா வட்டி வரலைன்னா ப்ராப்பர்ட்டி எனக்கு சொந்தம்னு
"அய்யா இந்த ஒரு தடவை" என்று அப்பெண் வஞ்சகமூர்த்தி காலில் போய் விழ , எட்டி மிதித்தான் மனசாட்சி இல்லாத மிருகமாய்.. அப்பெண் வந்து பொக்கிஷா காலடியில் அழுதபடி விழ ....
"யார் காலை யார் தொடுறது வஞ்சமூர்ததி காலை தொட கூட ஒரு தகுதி வேணும் .. டேய் இனிமே இவ உள்ள வந்தா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளு" என்று சாய்வு நாற்காலியை சுற்றியவன் வாசலில் நின்ற பொக்கிஷாவை ஒரு பார்வை பார்த்தான் ...
மயில் வண்ண மென் பட்டு உடுத்தி இருந்தாள் .. மல்லிகை மொட்டாக தொடுத்து வைத்திருந்தாள்.. அது விரிய விரிய வாசம் வந்து கொண்டிருந்தது.. தூரம் இருந்தே அவள் வைர மூக்குத்தி மினுங்குவது தெரிந்தது... கண் மை சற்று கலைந்து அழகோவியம் போல நின்றாள்.. அவன் கண் ரசிக்கத்தான் செய்தது ஆனால் முகம் இறுகியே இருக்க
"என்ன ? தொழில் நடக்கிற இடத்துக்கு வந்து இருக்க? இதே இடத்தில் வேறு எவளாவது வந்திருந்தாள் வண்ண வண்ணமாகத்தான் திட்டு விழுந்து இருக்கும் ...
ஏன் அவ்வளவு அரிப்பா தேடி வந்து இருக்க, இல்லை காசு வேணுமா தொழில் பண்ற இடத்துக்கு வேசி வந்தா விளங்கிடும் என்று கத்தி மானபங்கம் படுத்தித்தான் இருப்பான் ... இன்று இவள் தேடி வந்ததால் தானாக விசில் வந்தது, பொக்கிஷா எல்லாரிலும் தனிச்சிறப்பு பெற்றது மெய்!!
கைகள் கட்டு பணங்களை எண்ணி மேஜை டிராயர் உள்ளே வீசி கொண்டிருந்தது .. கண் அங்கே வேலை செய்யும் வேலையாட்கள் வேலை சரியாக செய்கின்றனரா என பார்வையிட்டு கொண்டிருந்தது... அதே சமயம் அவளையும் ஒரு பார்வை பார்த்தான்
"என்னன்னு கேட்டேன் .. மாமி என்னை தேடி இங்க வர வந்திருக்கீங்க ? "
"தங்கச்சி இன்னும் ஆத்துக்கு போய் சேரல ....
"ஓஓஓ இருக்கட்டும் இருக்கட்டும் அதுக்கு நான் என்ன செய்யட்டும்....
"நாலு மணிநேரம் ஆகிடுத்து தோப்பனார் பயப்படுறார்... "
"அவ என்ன சின்ன குழந்தையா? காணாம போக இல்லை சப்பி மிட்டாய் கொடுத்து தூக்கிட்டு போக எவன் கூட சுத்திட்டு இருக்காளோ??".... எல்லா பணத்தையும் மூட்டையாக கட்டி தூக்கி கொண்டு எழும்பினான்...
அவ அப்படி பட்ட பொண்ணு இல்லை
சரி அதுக்கு நான் என்னடி பண்ணணும்னு சொல்ற... என்றவன் வேலையாள் நோக்கி
:கடையை அடைச்சிட்டு சாவியை சுப்பையாகிட்ட கொடுத்துடு எதாவதுன்னா புதுசா ___ ரோடு பக்கம் ஒருத்தி கடையை போட்டு இருக்காளே டிஸ்கோராணி அவ வீட்டுல தான் இன்னைக்கு இருப்பேன் அங்க வா.... மாமி வேசம் அவளுக்கு தான் பொருத்தமா இருக்கு ... மல்லிகைக்பூவை இலையில் சுருட்டி தூக்கி கொண்டு வெளியே வர.. பொக்கிஷா இன்னும் கையை பிசைந்து கொண்டு அங்கேயே நிற்க...
"ப்ச் என்னடி இன்னும் முறைச்சு முறைச்சு என்ன பாத்துட்டு நிக்கிற ? வேலை கிடக்கு தள்ளுஊஊஊஊஊஊ " என்றவன் ஆறடி உடலை அசைய விடாது பண்ணி விட்டாளே.. நச்சென்று நளத உருண்டைகள் இடிக்க பொக்கிஷா அவனை கூச்சம் மறந்து, பெண்மை மறந்து , வெட்கம் விட்டு அணைத்து கொண்டவள் அவனை இடையோடு கட்டி கொள்ள .... வஞ்சக மூர்த்தி அசைய மறந்து குனிந்து அவளை பார்த்தான்...
"என் தங்கச்சியை வீட்டுல விட சொல்றேளா? அவன் முடி அடர்ந்த நெஞ்சு நடுவே அவள் இதழ் மெல்ல உரசிட...
அதுக்கு என்ன கூலி தருவ ? அவன் கை அவள் மீது படவே இல்லை, இவளோ இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்...
ராத்திரி யாரு ஆத்துக்கும் போக வேண்...டாம் நானே தர்றேனே ... சற்று தயக்கம் பயம் இருந்தாலும் அவனை ஒட்டி கொண்டு வஞ்சமூர்த்தி முகத்தை அண்ணாந்து பார்க்க
எப்படி நம்ப சொல்ற ?
அது ...
நம்புற மாதிரி எதாவது பண்ணு உன் தங்கச்சி அரை மணிநேரத்துல உன் வீட்டுல இருப்பா ... என்று அவன் முடிக்கும் முன் , கால் பெருவிரல் வைத்து எக்கி அவன் உயரம் வந்த பொக்கிஷா நச்சென்று அவன் கருத்த உதட்டில் முத்தம் வைத்துவிட....
எரிமலை நெருப்பு அணைவது போல அவள் மீது வந்த எரிச்சல் பனியாக போனது என்ன ஒரு விந்தை !!
தேகங்கள் இணைந்து விட்டால் தேடியது கிடைத்து விடுமோ ?
நினைத்தது கிடைத்து விட்டால் நிம்மதி கிடைத்து விடுமோ?
எல்லா இன்பமும் நிம்மதி தராது !!
மாறாக நிம்மதியை எடுத்தே போகும் !!