குரோத கொள்முதல் அழகே 18
Kurotham18
18 குரோத கொள்முதல் அழகே !!
இதோ மஞ்சத்தில் அவள் மலராக மலர்ந்து அவனிடம் கசங்கி வாழப்பழகி ஆறு மாதங்கள் கடந்து விட்டது....
நான் அவனுக்கு சலித்து விட வேண்டும், என் அழகு அவனுக்கு கசந்து விட வேண்டும் , என் தேவை அவனுக்கு தீர்ந்து விட வேண்டும் , என்னை விட்டு விட வேண்டும் என்று விடுதலைக்காக ஒவ்வொரு நாளும் கையேந்தி கடவுளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் அவளை விடும் எண்ணம் வஞ்சமூர்த்திக்கு இல்லை போலும் டான் என்று நிலவு வந்ததும் அவள் வாசல் தேடி வந்து நின்றான்...
என்னவோ ரெண்டு நாளாக உடல் கொதித்தது மாத்திரை வாங்கி கொடுக்க கூட ஆள் இல்லாது அயர்ந்து போய் கிடந்தாள்...
காய்ச்சலா இருக்கு முடியல என்று நேற்றிரவு அவன் கையை போடும் போது பலகீனமாக தடுக்க ..
ஆமா முடிஞ்சா மட்டும் புடுங்கி தள்ளிடுவ , ஒரு நாள் அதுவும் போன சரக்குல கொஞ்சம் கிளுகிளுப்பா இருந்த அதுக்கு பிறகே அதே செத்த மூஞ்சு தான் .. இதுல இவுகளுக்கு லீவு வேற கொடுக்கணும் போல... என்று நாலு சிடுசிடுப்பு கொடுத்துவிட்டுதான் தள்ளி படுத்தான்...
இன்றும் வந்து சட்டையை கழட்டி விட்டு படுக்கை மீது படுத்து அவளுக்காக வஞ்சக மூர்த்தி காத்திருக்க.... பொக்கிஷா சோர்ந்த உடலோடு அவன் அருகே வந்து படுத்தவள்
நாலு நேரம் வாந்தி எடுத்தேன்
ப்ச் அதுக்கு என்ன என்ன செய்ய சொல்ற ?
இன்னைக்கும் முடியாது நீங்க வேணும்னா வேற யார் கிட்டயாவது போறேளா?? அவளுக்கு விலக்கு வரும் நாட்கள் வேறு வீட்டுக்கு போய் வருவான் என்று தெரியும் .... அவன் என்ன கணவனா கண்ணியம் காக்கவில்லையே என்று கலங்க, இல்லை காதலனா? தூரோகம் செய்கிறானே என்று அழ அவன் யாரோ அவள் யாரோ தானே ... அவர்கள் இடையே சரசம் ஆடுவது உடல் மட்டுமே ... மீண்டும் குமட்டி கொட்டு வர பொக்கிசா குளியலறை நோக்கி ஓட ... வஞ்சமூர்ததி கார் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது போய்விட்டான் என்று புரிய மெல்ல மெல்ல சுவரை தாங்கி பிடித்தபடி வந்து படுக்கையில் சுருண்டு கொண்டாள்... எக்கேடோ போ என்ன ரெண்டு நாள் விடு, என்றுதான் அவளுக்கு தோன்றியது ... தொடர்ந்து வாந்தி மயக்கம் என்று நாலு நாளாக படுத்த ...
"கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரை போகணும் வண்டியை எடுக்க முடியுமா ??வாசலில் நின்ற ஜீவாவிடம் கேட்க ....
"என்ன ஆச்சுங்க
"உடம்பு முடியல ...
"ஓஓஓ வாங்க என்று அழைத்து போனவன்
"சாரிங்க அன்னைக்கு அண்ணன் வந்துட்டார்...அதான் என்று இழுக்க
"கடவுளுக்கே கருணை இல்லை.. இதுல உங்கள சொல்லி என்ன ஆக போகிறது என்று சிரித்து விட்டு பொக்கிஷா டாக்ட்டர் பார்க்க போக, அங்கே சொன்ன செய்தி சற்று இடியாகத்தான் இருந்தது ...
கு.....ழ....ந்.....தை...யா???
தன் வாழ்க்கை போனதே என்ற வருத்தமே அவளை விட்டு போக வில்லை அடித்து அவன் உதிரம் வேறு உற்பத்தி ஆகி இருக்கிறதா?? .. என்ன செய்ய என்று சத்தியமாக தெரியவில்லை
பார்த்தாச்சாங்க என்ன சொன்னாங்க என்று ஜீவா கேட்க
சும்மா மயக்கம் தான் அவா எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா?
அது என்று அவன் தயங்கி நேத்து ராத்திரி நல்ல போதை ருக்கு அக்கா வீட்டுல போய் விட்டேன் ...
ஓஓஓ கூட்டிட்டு போறேளா
அங்கேயா??
கொஞ்சம் பேசணும்....
ம்ம் தன்னால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லையே என்று வருந்தாத நாளில்லை ... (நீ செஞ்ச வரைக்கும் போதும் ராசா)
நேரா போய் வலது பக்கம் அவங்க வீடு இருக்கும், கார் பார்க் பண்ணிட்டு வர்றேங்க பாத்து போங்க
ம்ம் என்று தங்க நிற சேலை கட்டி இருந்த அழகிய சிலை போன்றவள் இன்னும் உலகில் காண, பட எதுவும் இல்லை..
ருக்கு , தன் வீட்டு வாசலில் பாத்திரத்தை போட்டு விளக்கி கொண்டிருக்க அவள் கண் முன்னே தங்க கொலுசு பாதங்கள் இரண்டு பளீர் என்று அசைந்து வரவும் தலையை தூக்கி பார்க்க கையை பிசைந்தபடி பொக்கிஷா நின்றாள் ...
யாரும்மா நீ ?? அவள் பார்வையோ ருக்கு வீட்டு கட்டிலில் குப்புற கிடந்த வஞ்சகமூர்த்தியை நோக்கி இருக்க
ஓஓஓஓ நீதான் அந்த அழகு மாமியா?? ராத்திரி இங்க தான் இருந்தார் , நேத்து என் ஷிப்ட் என்று அவள் முகத்தை கோண...
கொஞ்சம் அவரை எழுப்பிண்டு வர்றேளா "
"ம்க்கும் ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் என் நியாபகம் வந்து வந்தார் , பொறுக்காதே நல்லா பாலும் தேனுமா தின்னு எப்படி இருக்கா.. நானும் தான் அவர் வப்பாட்டி தான், எனக்கு வெள்ளி கொலுசு , அவளுக்கு மட்டும் தங்க கொலுசு, வைர மூக்குத்தியா? அது என்ன ஓர வஞ்சனை , எழும்பட்டும் கட் அன்ட் ரைட்டா இன்னைக்கு கேட்டு புடுறேன்" வாசலில் நின்ற பொக்கிஷா காதில் கேட்க புலம்பி கொண்டே ருக்கு அறைக்குள் போய் கட்டில் நுனியில் அமர்ந்து வஞ்சக மூர்த்தி முதுகை தொட, ஒற்றை கண்ணை திறந்து பார்த்தவன் பார்வையில் பொக்கிஷா பட்டுவிட,
அட அட காலையிலேயே குண்டூஸ் தரிசனமா என்னை தேடி வந்து இருக்காளா நம்பவே முடியலையே, அமோகமாக இருக்குமே இன்னைக்கு நாள் என்று துள்ளி எழும்பிய வஞ்சகமூர்த்தி...
என்னடி ருக்கு உன் தங்கச்சி வந்திருக்கா, உள்ள உட்கார வச்சி காப்பி தண்ணீ கொடுக்க மாட்டியா...
ம்க்கும் அவ என் சக்களத்தி" என்ற ருக்கு கன்னத்தில் செல்லமாக கிள்ளியவன்
அப்படி பிரிச்சு பார்க்க கூடாதுடி பட்டுகளா, மாமா எல்லாருக்கும் பொது , சக்களத்தி சண்டை வரவே கூடாது ஒன்னு மண்ணா இருக்கணும் சரியா ??
ம்க்கும் நீங்க மட்டும் பிரிச்சு பார்க்கலாமா அவளுக்கு மட்டும் வைர மூக்குத்தி , எனக்கு மட்டும் வெள்ளியா ?
கிழக்கு தெரு அம்சவேணிக்கு அது கூட வாங்கி கொடுக்கல , தகுதிக்கு ஏற்ப, தர்ற சுகத்துக்கு ஏற்ப கொடுக்கிற கூலி கூடும் குறையும் , நல்லா பேசுறானேன்னு நினைச்சு குலுக்காத , அறுத்து போட்டிருவேன் குலுக்க இருக்காது .. அவ ரேஞ்ச் என்ன தெரியுமா ஒத்த பார்வைக்கு ஒரு வைரம் கொடுக்கலாம் என்று தன் வைர கடுக்கனை தேய்த்து கொண்டு எழும்பி பொக்கிஷா முன்னே வந்து நின்றவன்
"என்ன குண்டூஸ் காலையிலேயே என்னை தேடி வந்திருக்க.. ஆச்சர்யமா இருக்கு "என்று முகத்தை கழுவி அவள் முந்தானை பிடித்து முகத்தை துடைத்து விட்டு நிமிர , அவன் கண் முன்னே ரெட்டை கோட்டு கருவி பளீர் என்று அவன் தகப்பன் ஆனதை கூற ...
"என்ன பண்றதுன்னு நேக்கு தெரில , அதான் கேட்டுண்டு போகலாம்னு வந்தேன்" என்று பொக்கிஷா முனக ... இவன் முகத்தில் எந்த அதிர்வும் இல்லை
"ப்ச் குண்டு கழுதை கிடைச்சதும் கொஞ்சம் நேக்குவாக்கு இல்லாம ஏறிட்டேன்... சரி விடு குண்டுஸ் பீல் பண்ணாத , இந்தா பணம், போய் ______ழிச்சிட்டு வந்திடு" என்று பணக்கட்டை தூக்கி பொக்கிஷா கையில் வஞ்சகமூர்த்தி திணிக்க அவனையே பார்த்து கொண்டு நின்றாள்
"இங்க பாரு ஊருக்கே புருஷன் ஆகலாம் , அத்தனை பிள்ளைக்கும் தகப்பன் எல்லாம் ஆக முடியாது போய் ___ழிச்சிடு, பிள்ளை பெத்து கிழவி ஆகலாம்னு பார்க்கிறியா குண்டூஸ்.. ஏற்கனவே டயர் போல நாலு மடிப்பு இடுப்புல கிடக்கு, இதுல பிள்ளை குட்டி வேற உவாக் ...கூட ஜீவா வருவான் கையோட போய் முடிச்சு விட்டுட்டு வந்திடு .. என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன்
நீ என்னடி மாமாவை முறைச்சிட்டு நிக்கிற, ராத்திரி கழட்டி போட்ட அன்டர்வியரை காணலை எங்கன்னு தேடி எடுத்துட்டு வா என்று ருக்குவோடு பேசி கொண்டே வஞ்சகமூர்த்தி உள்ளே போக ...
ஒரு கையில் குழந்தை பேற்று அட்டை இன்னொரு கையில் அதை இல்லாது ஆக்க அவன் கொடுத்த பணத்தோடு பொக்கிஷா நின்று கொண்டிருந்தாள்...
கடவுள் கடைசி வாய்ப்பு அவனுக்கு கொடுத்து பார்த்தார். பெண்ணை மதிக்காதவன் தன் மகவை மதிப்பான் என்று மகவை கொடுத்து பார்த்தார்.. ஆனால் அவன் அதற்கு மதிப்பு கொடுக்காமல் உதாசீனம் செய்தான்..
சட்டையை மாட்டிக் கொண்டு வந்த வஞ்சகமூர்த்தி நோக்கி சடசடவென்று பத்து பேர் அருவாளை தூக்கிக் கொண்டு ஓடி வர கூட்டம் பதறி , சிதறி ஓடியது .... அவனோ ஓடி வந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ருக்குவை திரும்பிப் பார்க்க... அவள் எச்சில் விழுங்கி குடிசை உள்ளே ஓடிப் போய்விட
"கூடவும் படுத்துட்டு , போட்டு கொடுக்கிறியா அவனுகளை போட்டு தள்ளிட்டு உனக்கு இருக்குடி என்றவன் அங்கே இருந்த அடிபம்பின் கைப்பிடியை ஒரே இழுவையில் பிடுங்கி எடுத்து கொண்டவன் அவர்களை நோக்கி வர
ஏதோ பிரச்சனை என்று பொக்கிஷாவுக்கு புரிந்தது நகர்ந்து அந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்று அவள் திரும்பும் முன்னாக கூட்டம் அவள் அருகே வந்துவிட .... செய்வதறியாமல் திகைத்து கொண்டு இருந்தவள் கழுத்தில் வந்து கத்தி விழ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அவள் பயந்து கண்களை மூட ... சட்டென உள்ளங்கை ஒன்று அதை தடுத்து நிறுத்தி இருந்தது ... தன் உள்ளங்கையில் ரத்தம் ஓட, அவள் கழுத்திற்கு வந்த கத்தியை வஞ்சகமூர்த்தி தடுத்து நிறுத்தி இருந்தவன் ...
ப்ச் கிளம்பு
ஹான்
ப்ச் கிளம்புடி... ஜீவா அவன் இவளுக்கு மேல் நடுங்கி போய் நிற்க அவளை இழுத்து தன் பறந்த முதுகுக்கு பின்னால் விட்டுக் கொண்டவன்... தன்னை கொல்ல வந்த அவர்களை நரபலி கொடுக்க... இவள் மூளை அதிர்விலும் பயத்திலும் அப்படியே நின்றது ..... ஜீவா தன்னிலை வந்து விஷயம் அறிந்து ஓடி வந்து அவளை காப்பாற்றி அழைத்து போக நினைத்து பொக்கிஷா அருகே வந்து அவள் கையை இழுத்து
வாங்க பின்னாடியோடி கூட்டிட்டு போயிடுறேன் என்று இழுக்க வஞ்சமூர்த்தி முதுகை பிடித்திருந்த பொக்கிஷா கைகளை ஜீவா பிடித்து வஞ்சமூர்ததி முதுகை விட்டு நகர்த்திய வேளை, எங்கிருந்தோ சீறிய கத்தி அவள் அடிவயிற்றை துளைத்து போயிருந்தது...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அலறிய பொக்கிஷா குரலில் சட்டென திரும்பி பார்த்த வஞ்சகமூர்த்தி....
ப்ச் அல்ப ஆயுசு போல என்றவன் உண்மையாக மனிதன் தானா??