குரோதம் 21 நாளை இரவு முதல் பகுதி நீக்கப்படும்
Kurotham21
21 குரோத கொள்முதல் அழகே !!
நாளை இரவு முதல் பகுதி நீக்கப்படும்
சூறாவளி காற்று போல போவான் வருவான் அவன் எப்போது வருவான் எப்போது போவான் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது .. ஆனால் பொக்கிஷா மருத்துவமனையில் இருந்த 20 நாளும் கூடவே இரண்டு நர்ஸ் இருந்தார்கள்..
உன்னைய வச்சு இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை... தர்மாஸ்பத்திரியில கொண்டு போயி போட்டுட்டு போகலாம்னுதான் நினைச்சேன்.. இந்த அழகான முகத்தில் கொசு கடிச்சு அசிங்கமாகி போனா என்ன செய்ய? இதுதான் சாக்குன்னு இங்கேயே கிடந்திடாதடி? சீக்கிரம் சுகமாகி வந்து எனக்கு வப்பாட்டி வேலைக்கு தயாராகு... கிட்டத்தட்ட 20 நாள் ஆகுது 20 நாளுக்கும் ஓவர் டியூட்டி போட்டு உன்ன கொல்லாம விட மாட்டேன்டி குண்டூஸ் என்று நேத்து ராத்திரி வந்தவன் சொல்லி விட்டுப் போனான்..
எப்போதாவது வருவான் வந்தால் நயநய என்று பேசி தீர்த்து விட்டு போவான்.. அவன் போன பின்பும் அந்த அறையில் சிகரெட் வாடையும், ஜவ்வாது வாடையும் இவளுக்கு குமட்டிக் கொண்டு வரும்.. ஜீவா மட்டும் தினமும் வந்து விடுவான் ஏதாவது வேணுமா வாங்கி தரவாங்க என்று கேட்பான்... அவளை சுற்றி யாரும் இல்லாமல் இருந்தாலும் அவளுக்கு என்ன தேவையோ எல்லாம் அவளை சுற்றி இருந்தது...
இது உன் உடம்புக்கு நான் தர்ற கூலி என்றவன் சொல்லில்தான் எத்தனை வக்கிரம்...
"யோவ் லோல்பட்டு லொங்கு பட்டு சம்பாதிச்ச பணம்யா, இப்படி ஹாஸ்பிட்டல்ல கொண்டுவந்து எல்லாத்தையும் போடணும்னு, என் தலையில எழுதி இருக்கே ... இதையே எவளுக்காவது போட்டு இருந்தா நாலு நாளைக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சுகத்தை அள்ளி தந்து இருப்பாளுகய்யா... இவள தொட்ட பாவத்துக்கு என் பணமெல்லாம் வீணா போகுதே.. 10 லட்சம் போச்சு பத்தே நிமிஷத்துல எல்லாம் போச்சு என்று சலித்து கொண்டே உள்ளே வந்தான் வஞ்சகமூர்த்தி... 365 நாளும் புது மாப்பிள்ளை தோரணையில் தான் சுற்றி வருகிறான்... ஜவ்வாது மணம் அந்த மருத்துவமனையை அதிர வைக்க உள்ளே வந்தவன் பின்னே மருத்துவர் தலையை சொரிந்து கொண்டே வந்தார்
"சார் அவங்க ட்ரீட்மென்ட் பார்த்ததுக்கு தான் அவளோ பணம், எக்ஸ்ட்ரா நர்ஸ் போட சொன்னதுக்கு இன்னும் பேமென்ட் கொடுக்கல சார்
"என்னது அது வேறயா , மொத்தமா போட்டு கொண்டு வந்து கொடு... அவளை அலங்கரிக்க கோடி செலவழிச்சு ரசிக்கலாம் இழுத்துட்டு கிடக்கிறதுக்கு எல்லாம் கொடுக்க முடியுமா ? அதிகமாக அவன் உள்ளே வந்தாலே இவள் தூங்குவது போல கண்ணை மூடி கொள்வாள்...
"எப்படி இருக்கா?
"இப்ப நல்லா இருக்காங்க சார் ...
"ஓஓஓ என் கனத்தை எல்லாம் தாங்கலாமா எப்படி... தாங்குவாளா வலி எதுவும் எடுக்குமா? அவன் பேச்சில் டாக்டர் முகத்தை சுளித்து..
"எதுக்கு முகத்தை சுளிக்கிற, டாக்ட்டர்கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்ல கூடாதுன்னு நீங்க தானய்யா சொல்லி இருக்கீங்க , அவளுக்கு டிரிட்மெண்ட் பார்த்த டாக்ட்டர் நீதான அப்போ விவரம் உங்கிட்ட தான கேட்பேன் ..
மேல் காயம் தான் ஆறி இருக்கு, இன்னும் உள்ள பச்சை புண்ணா தான் இருக்கும் ... அடுத்த செக்கப் பார்த்துட்டு சொல்றேன்...
"ஓஓஓ "
"இது அவங்க கேஸ் ஹிஸ்டரி ... குழந்தையைத்தான் காப்பாத்த முடியல ..."என்று பைலை அவன் கையில் கொடுக்க ..
"ஆமால்ல அன்னைக்கு என்னவோ சொல்லிக்கிட்டு இருந்தால்ல... அவ்வளவுதான் அதுக்கு அல்பாபுசு இருந்திருக்கு குண்டூஸ் .. அதுக்கு என்ன செய்ய முடியும்? போனது பின்னாடி போக முடியுமா இல்ல , இருக்கிற நம்ம கூட தான் அது இருக்க முடியுமா? ஆறுலையும் சாவு , நூறிலும் சாவு அது உலகத்தை பார்க்காமலே போயிடுச்சு விடு விடு ... இந்த வயசிலேயே பிள்ளையை பெத்து என்னத்த செய்யப் போற , பிள்ள ஒரு கரைக்கு நச நசன்னு அழும் ... எனக்கு குழந்தை சத்தம் எல்லாம் ஆகாது ... உலகில் மழலை அழகு இல்லை என்றது இவனாகத்தான் இருக்கும்..பின்னே பாரிஜாதம் பிறந்து கிடக்கும் போது வேண்டுமென கிள்ளி அழ வைத்து விட்டு போகும் நல்லவன் ஆயிற்றே... அப்போதும் இந்த மலைக்குரங்கு இப்படிதான்... இப்படி நாராசமாக ஆறுதல் செய்தவனுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யலாம் ....
முதல்ல தப்பு உன் மேல குண்டூஸ் என்றவனை கண்ணை திறந்து பார்க்க .. நகை கூட இல்லாமல் மொட்ட கழுத்தில் ஏனோ தானோ உடையில் பாவமாக பொக்கிஷா உட்கார்ந்து இருந்தாள்... இந்த அழகுக்காக அழகுக்காக என்றானே முன்னே தெரிந்த கண்ணாடியில் அவளை பார்க்க அவளுக்கே சகிக்கவில்லை.... அவள் அழகு தேய தேய அவளுக்கு மகிழ்ச்சியே ... சதைவெறி அடங்கி போகுமே....
"நான் அப்படி இப்படி அவசரத்துல பாதுகாப்பு இல்லாம தான் இருப்பேன், நீ தாண்டி கவனமா இருந்து இருக்கணும், இத்தனை தடவை ஏறி விழுந்துட்டு போறானே... பிள்ளை வந்தா என்ன செய்யுறதுன்னு நீதான் யோசிச்சிருக்கணும்... என்னைய குற்றவாளி மாதிரி பார்க்காத ,நான் இதுக்கு காரணமே கிடையாது ... இனிமே இப்படி அஜாக்கிரதையா இருக்காத... மாத்திரை போடுவியா ஊசி போடுவியோ, எதையோ ஒன்ன போட்டு தடுத்து வைக்கிறது உன் கடமை ... இனி குழந்தை அது இதுன்னு உண்டாகி தொலைக்காத புரியுதா...
சரி சரி கிளம்பி வா வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு பைனான்ஸ் கம்பெனி வரை போகணும் ,
அண்ணன் லிப்ட் வேலை செய்யல, நாலு மாடி இறங்கணும்... என்று ஜீவா பில்லை கட்டி விட்டு வர ...
நாலு மாடி தான நல்லா சத்து டானிக் குடிச்சு கொழுக் மொழுக்குன்னு இருக்காதான அதெல்லாம் வருவா என்று சொல்லி கொண்டே போனில் பேச ஆரம்பித்து விட்டான் ...
ம்ம் நாலு மாடி கீழே இறங்கி போகணுமே என்று பொக்கிசாவுக்கு அல்லுவிட்டது , காயம் வலிக்குமோ அவளை கை தாங்கலாக யாராவது அழைத்து போனால் நன்றாக இருக்குமே .. என்று பெட்டை வீட்டு இறங்கிவளுக்கு தலை கீர் என்று சுற்ற
ம்மா என்று படுக்கையை பயந்து பிடித்து கொண்டவள் நாலு மாடி சாத்தியமே இல்லை இந்த நாரமூர்த்தி கிட்ட சொன்னா கேட்கவா செய்வான் என்று நினைத்தவள் எண்ணம் புரிந்தானோ ஜீவா ...
"கையை பிடிங்க நான் வேணும்னா கூட்டிட்டு போறேன்" என்று ஜீவா அவளுக்கு கையை நீட்ட அவள் யோசித்த ரெண்டு நொடி கேப்பில் , போனை காதில் இடுக்கி பேசி கொண்டே வந்த வஞ்சகமூர்ர்தி..
ம்ம் சரி , நான் பார்த்துக்கிறேன் அங்கே பதில் சொல்லி கொண்டே குனிந்து பொக்கிஷாவை தூக்கி தன் ரெட்டை கையில் போட்டவன் போன் பேசியபடியே விறுவிறுவென மாடிபடிகளில் அதிரும் அலையாக துள்ளி துள்ளி இறங்கி நடக்க ஆரம்பித்து விடு...
ஆவ்ஊஊஊஊஊ தடுமாறி போய் அவன் நெஞ்சில் முாகத்தை புதைத்து கொண்ட பொக்கிஷா கைகள் அவன் காலரை பிடித்து வைத்திருக்க நாலு மாடியும் அசராது தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டவன் ... அதன் பின்னே ஒரு மாசம் கழித்து தான் அந்த வீட்டுக்குள் வந்தான் .... அவன் நெட்டி முறித்த ஜாடையே இன்று அவளை முறித்து விடுவான் என்று பொக்கிஷாவுக்கு அல்லு விட... அவன் மேலே பந்தல் கட்டி ஆட பழகி கொடுத்தவன் ... அவனை பார்க்காது முகத்தை திருப்பி கொண்டே அவனை திருப்தி படுத்தி அனுப்பினாள்...
யாரும் இல்லாத தனி தீவில் வாழ்ந்தது போல ஒரு வாழ்க்கை ..அவள் பெயர் மறந்து போனது வஞ்சமூர்ததி வப்பாட்டி என்ற பெயர் நிலையானது
நண்பர்கள் மறந்து போனார்கள் , அவளோடு பேசினால் தனக்கு அவப்பெயர் என்று ஒதுங்கியே கொண்டார்கள்... சிரிப்பு மறந்து போனது அவள் சிரிப்பையும் அவன் எடுத்து கொண்டான்... கேளிக்கை மறந்து போனது இந்த கோணமண்டயனை தூக்கி சுமந்தே பழகி போனது... அவள் வாழ்க்கை எது என்று மறந்து போனது அவன் வாழ்க்கை உள்ளே இவள் ... துளசி குருதியில் மலரவும் முடியாது காயவும் முடியாது தள்ளாடியது....
இதோ ரெண்டு வருடம் முடிய போகிறது .. இன்னுமா இவள் பூவுடல் சலிக்கவில்லை ... இன்னுமா அவள் மீது வந்த காம ஆசை தணியவில்லை... எத்தனை எத்தனை கோணம் உண்டோ அத்தனையும் அவளிடம் வாங்கி சுகித்துவிட்டான் ... காமத்தில் எத்தனை உண்டோ அத்தனையும் அனுபவித்து தீர்ந்தாயிற்று.. அவனின் நாராசமான வார்த்தைகளுக்கு பழகியும் விட்டாச்சு., விடுதலைக்காக காத்து இருக்கும் கைதி போல தினமும் காத்திருந்தாள்.. ஆனால் மீண்டும் சந்திக்க கூடாத ஒரு சூழ்நிலையை சந்திப்பாள் என்று கனவிலும் அவள் நினைக்க வில்லையே ... இத்தனை நாள் இல்லாத கூத்தாக பொற்றவையிடம் இருந்து அழைப்பு வந்தது ....
யாரு?
அக்கா என்ற அவையின் அழத குரல்...
அவை என்னாச்சு? அவளுக்கு தசை ஆடாது எனிலும் , இவளுக்கு ஆடுமே ....
ரெண்டு நாளைக்கு முன்னாடி , அந்த வஞ்சகமூர்த்தி என்னை தேடி நம்ம ஊருக்கு வந்திருந்தான் அக்கா இவளுக்கு பகீர் என்று ஆகிப்போனது ....
என்...ன சொல்ற ?
ம்ம் உன் அக்கா போர் அடிச்சு போனா , அவ மேல இருந்த ஆசை எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி இப்போ சுத்தமா அவ மேல எனக்கு ஆசை இல்ல... உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு , எவ்வளவு காசு வேணும்னாலும் கேளு தர்றேன்.... என்கூட வந்துடு அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் சேர்த்து வப்பாடடியா வச்சுக்கிறேன்... அவளுக்கு துணையா நீயும் உனக்கு துணையா அவளும் இருந்துட்டு போகட்டும் ... உங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் நான் செய்றேன் ... நீ மட்டும் ரெண்டு நாள்ல முடிவு சொல்லன்னா, உன் அக்காவுக்கு நடந்த அதே நிலைமைதான் உனக்கும் நடக்கும்னு பகிரங்கமா மிரட்டிட்டு போறாரு எனக்கு பயமா இருக்கு ....
கடவுளே எது நடக்க கூடாது என்று பயந்தாளோ அது நடந்து விட்டதே.. அடிக்கடி உன் தங்கை உன்னை விட அழகு , இருபது வயசு ஆனா இன்னும் அழகா இருப்பா எப்போ படிப்பு முடியுது என்று கேட்கும் போதே இவளுக்கு பயமாக இருக்கும் ... கட்டையில போறவன் கண்ணுல என்னத்தான் விழ வச்ச அவளையும் விழ வச்சிடாத காப்பாத்திடு என்று வேண்டி கொள்ள அது என்னவோ அவள் வேண்டுதல் மட்டும் புட்பால் போல தூக்கி கிடாச பட்டு விடுகிறது..
நீ சொல்றது...
கட்டு கட்டா பணம் வச்சிண்டு போயிருக்கார் என்,உடம்புக்கு விலை பேசிட்டு போயிருக்கார் வேணும்னா தோப்பனார் கிட்ட கேளு ...
அய்யோ நான் என்ன பாவம் பண்ணினேன் என் புள்ளைங்க வாழ்க்கை என் கண்ணு முன்னாடி இப்படி சீரழியுதே என்று பரந்தாமன் அழ ...
அப்பா அழாதீங்கோ என் வாழ்க்கை சீரழிஞ்ச மாதிரி அவளோட வாழ்க்கையை சீரழிக்க நான் விடமாட்டேன்... அந்த அரக்கன்கிட்ட நான் மாட்டிண்டு சாகுற மாதிரி , அவளும் மாட்ட நான் அனுமதிக்க மாட்டேன் .... ஊரெல்லாம் வஞ்சக மூர்த்தி வப்பாட்டின்னு அசிங்கப்பட்டு போன எனக்கு இனி என்ன புதுப்பேர் வச்சிட போறாள், இல்ல இனி என்ன தனியா எனக்கு நரகம் எழுதி இருக்க போகுறது.... என் வாழ்க்கை போனது போனதுதான் உங்களுக்காக அன்னைக்கு என் உடம்ப கொடுத்தேன், இன்னைக்கும் உங்களுக்காக இதையும் செஞ்சிட்டு போறேன்... பயப்படாதீங்கோ அந்த அரக்கன் உங்க வாழ்க்கையில வரமாட்டான்... இனிமே இதே மாதிரி எந்த பொண்ணு வாழ்க்கையிலையும் அந்த அரக்கனால விளையாட முடியாது .... இழப்பு வலி, அசிங்கம் , அவமானம் அருவருப்பு எல்லாம் இத்தனை நாள் என்னை மட்டும் சார்ந்ததா இருந்ததுனால, அதையெல்லாம் விழுங்கிண்டேன் , ஆனா அது எப்போ என்ன சார்ந்த உங்களையும் தாக்குதோ.... இனியும் நான் பொருத்துண்டு போக மாட்டேன்... நீங்க கலங்காதேள் .. என்று போனை வைத்து விட்டவள் ரத்தம் கொதித்தது.... அவன் போன் நம்பர் என்றோ காலண்டரில் எழுதி போட்டுவிட்டு போயிருக்க... இதுவரை அவனுக்கு எதற்காகவும் அழைத்தது இல்லை இன்று அந்த போன் நம்பரை வெறிக்க வெறிக்க பார்த்தவள்.... போன் நம்பரை அழுத்த .. அங்கே பல அழைப்பு போய்தான் போன் எடுக்கப்பட்டது
என்னடி குண்டூஸ் அதிசயமாக இருக்கு போன் போட்டு இருக்க..
ஊருக்கு என்னோட தோப்பனார் பார்க்க போனேளா...
"அந்த சொட்டையை பார்த்து நான் என்னடி பண்ண போறேன் ... என்ன அவ்வளவு மட்டமானவன்னு நினைச்சியா ஒன்லி லேடீஸ் பக்கம் தான் என் கண்ணு போகும் ...உன் தங்கச்சியை பார்க்க போனேன் ....
"எதுக்கு ?
""ஆமா , உன் அக்கா கூட வந்து இரு ரெண்டு பேரையும் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்... என்ன என்கிட்ட கேள்வி எல்லாம் கேட்கிற அளவு தைரியம் வந்துடுச்சா... எதுக்கு போன் போட்ட...
"சும்மாதான் நீங்க வந்தீங்கன்னு சொன்னா விவரம் சொல்லல அதான் சும்மா கேட்டேன் ..
தங்கையை நம்பவும் முடியவில்லை இவன் நாரவாயன் தான் ஆனால் பொய்யும் சொல்லி தொலைய மாட்டானே... ஆக அடுத்த பாவம் செய்ய எத்தனித்து விட்டான், இப்படியேவிட்டால் எத்தனை பெண் வாழ்க்கையை அழிப்பான் என்று தெரியாது அவன் காமபசிக்கு கடைசி பலி நானாகி விட்டு போய் விடுகிறேன் என்று நினைத்தவள்...
இன்னைக்கு வருவேளா? என்றவள் குரலில் சற்று பாலீஸ் கூடி இருந்தது ..
இல்லை ..
ஓஓஓ ....
என்ன...
இல்லை ஆத்துக்கு வர்றேளா?
அதே உடம்பு தான சலிச்சு போச்சு , நீ கேட்ட மாதிரி உனக்கு விடுதலை கொடுத்திடலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்... அந்த வாசு பய வேற கோமால இருந்து முழிச்சுட்டானாம் ... வந்து கேட்டா இந்தா ராசா கூட்டிட்டு போன்னு அனுப்பி விட்டுட்டு.. நான் அடுத்த ஆளை கான்ட்ராக்ட் போட போறேன் .. இனிமே அவு____ க , வீட்டுக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்
, ஒன்லி உன்ன மாதிரி குடும்ப பொண்ணுங்க பார்த்து காசு கொடுத்தோ, இல்ல மிரட்டியோ ஒரு வருஷம் ஒரு வருஷம் வச்சிட்டு பழசானதும் அப்படியே தள்ளி விட்டுறனும் .... எதுக்கு போன் போட்ட ?
"இல்லை உங்களை பார்க்கணும் போல இருந்தது , அதான் சும்மா கூப்பிட்டேன்..
"ஐயம் சோ பிசி , வப்பாட்டி கூப்பிட்டதும் ஓடி வருவேன்னு நினைச்சியா... நீங்கதான்டி என் அடிமை, நான் இல்லை வரும் போது தான் வருவேன் வை" என்று போனை வைத்து விட்டான் ...
பொக்கிஷா யாருக்கும் தெரியாமல் மெடிக்கல் ஷாப் போய் மயக்க மருந்து கேட்க... அவர்களோ டாக்டர் பரிந்துரை இல்லாமல் தர முடியாது என்று விட..
"நான் வஞ்சகமூர்த்தி வப்பாட்டி, இருங்கோ நான் அவர்கிட்ட போன் போட்டு பேச சொல்றேன் என்று போனை எடுக்க
"எம்மா எம்மா மாத்திரை தானே வேணும், தரேன் எதுக்கு எமன்கிட்ட போன் போட்டு கூப்பிடுறேன்னு சொல்ற என்று அவர் பயந்து மாத்திரையை அவள் கையில் கொடுத்துவிட .... அதை வாங்கிக் கொண்டு வேக வேகமாக வீட்டிற்கு வந்தவள் ... குளித்து கிளம்பி பொட்டு வைத்து பூ வைத்து, பட்டு சேலையில் முதல் முறையாக அவனுக்காக தயாராகி காத்திருந்தாள் பொக்கிஷா
வருவானா வரமாட்டானா என்ற பதட்டத்தோடு நேரம் கடந்து கொண்டிருந்தது ..
அவனுக்கான நேரம் அருகில் வந்து கொண்டிருந்தது...