குரோதம் 26

Kurotham26

குரோதம் 26

16 குரோத கொள்முதல் அழகா !!

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பொக்கிஷா கிளம்பிவிட்டாள் , இந்த நரகத்திலிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணம் தான் அவளுக்கு மேலோங்கி இருந்தது.. அதுவும் வஞ்சகமூர்த்தி உள்ளே இருக்க இந்த வாய்ப்பை தவற விட்டால் இனி வாய்ப்பு அமையுமா தெரியவில்லை... அவன் இல்லாத நேரம் அவளை தன் படுக்கையில் பங்கிட நினைத்த மற்றவர்களையும் கண்டால்... அவள் பாதுகாப்புக்காக வாடை காற்றில் காவல் காத்த ஜீவாவையும் காணத்தான் செய்தாள் .... 

துணை இல்லாத பெண்ணை தும்பை செடியாக புடுங்கி எறிந்து விடுவார்கள் பாதுகாப்புக்காகவாவது ஜீவா கூட வருவான் என்று நம்பிக்கையில் பெட்டியோடு அவள் தன்னை அடையாளம் தெரியாத அளவு மூடி கொண்டு நிற்க ...நேரம் கடந்து கொண்டே இருந்தது ஒவ்வொரு பஸ்ஸாக போய் பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோட ஆரம்பித்தது.... நேரம் வேறு 11 ஆக ... ஜீவா வரும் மார்க்கம் இல்லை ... இவ்வளவு தூரம் வந்து விட்டு மறுபடியும் வீட்டுக்கு போவதா? என்ன ஆனாலும் பரவாயில்லை கிடைத்த பேருந்தில் ஏறி விடுவோம் என்று நினைத்து பொக்கிசா பெட்டியை தூக்கி கொண்டு கடைசியாக கிளம்ப ரெடியாக நின்ற பஸ்ஸை நோக்கி நடக்க, அவள் மணிக்கட்டை வலுவான கரம் தடுத்து நிறுத்திட  

"இங்க என்ன பண்ணிட்டு இருக்க? என்ற குரலில் பதறி போய் பொக்கிஷா திரும்ப, வஞ்சமூர்த்தி தான் அவளை குரூர பார்வை பார்த்து கொண்டிருந்தான் ..  

பகவானே!! நெஞ்சு அடைத்து விட்டது 

தன் முன்னே வந்து நின்ற வஞ்சக மூர்த்தியை கண்டு , மூச்சு அடைத்து போய் , நெஞ்சுக்குள் டமடம என்று எரிமலை வெடித்து சிதறுவது போல் வெப்பம் பரவியது... கையும் காலமாக பிடிபட்டது போல் வெடவெட என்று பொக்கிஷாவுக்கு வியர்த்து வடிந்து, பேச வலு இல்லாமல் நின்றவளை மேலிருந்து கீழ் வரை அவன் ஒரு பார்வை பார்த்தான்... வஞ்சகமூர்த்தி ஜெயிலில் இருந்து வெளியே வந்து நேரே பொக்கிஷா வீட்டுக்கு தான் போனான் .. அங்கே அவள் இல்லை என்றதும் புருவம் முடிச்சிட ஜீவாவுக்கு போனை போட அவனோ இவன் எப்ப வெளிய வந்தான் அய்யய்யோ என்று மனம் பதறிட .. 

"அண்ணன் நீங்க ஏன் வெளிய வந்தீங்க ? என்று கேட்டு வைக்க 

"என்னடா கேள்வி இது எங்க போன , மாமியை எங்க ? ஆளை காணல , அப்போது தான் ஜீவாவுக்கு புரிந்தது பொக்கிஷாவும் ஊரை விட்டு போக கிளம்பி காத்திருக்கிறாள் என்று ... 

"இப்போ எதுக்கு அண்ணன் இவ்வளவு அவசரமா வந்தீங்க , ரெஸ்ட் எடுத்துட்டு ரெண்டு நாள் கழிச்சு வந்திருக்க கூடாதா? என்று உளற... 

"இல்ல நீ எதுவும் மப்புலேயே சுத்துறியா... நான் வந்ததுல உனக்கு என்னடா வருத்தம், நானே எப்போ எப்போன்னு மண்டை காஞ்சு போய் மாமியை தேடி போனா ஆளை காணல... நீ எங்க இருக்க அவளை எங்க? ... அடுக்கடுக்கான வினா சரமாரியாக வந்தது... 

"அது அது டவுன் போயிருக்காங்க 

டவுனா ? 

"இல்ல இல்ல அங்க உள்ள பஸ் ஸ்டாண்ட் எல்லாம் போகல அண்ணன் , நம்ம ஊர் சந்தைக்கு போயிருக்காங்க , இல்ல இல்ல கோவிலுக்கு கோவிலுக்கு ஹான் கோவிலுக்கு அதான் சரி ... ஜீவா உதடு இஷ்டம் போல உளறி கொட்ட ....  

"அவ எங்கேயாவது காணாம போயிருக்கட்டும் உன் கிட்னில ஒன்னை வாய்க்குள்ள கையை விட்டே புடுங்கி எடுத்து பாதி விலைக்கு வித்திடுறேன், அரை மணிநேரத்துல டவுன் வந்து சேரு ... என்று வைத்தவன் பேச்சில் ஜீவாவுக்கு நாளமில்லாசுரப்பி நார்வேக்கு பார்சல் ஆகி விட்டது ... 

"அய்யய்யோ எப்படி கரெக்டா டவுன்னு கண்டுபிடிச்சார்... நான்தான் அவங்களை வர சொன்னேன்னு அவங்க சொல்லிட்டா , எம்மே ஹெல்த் இன்சுரன்ஸ் வேற போட்டு வைக்கலையே வரும் போது ரெண்டு கிட்னியோட வருவேனா இல்லை கிட்னி தானம் பண்ண வச்சிடுவாரா... என்று புலம்பி கொண்டே வந்தவன் எதிரே மூர்த்தி ஆட்கள் மறைத்து நிற்க ..

"ப்ச் இவனுக வேற , பொண்ணை பார்க்காதவனுக போல நாக்கை தொங்க போட்டுட்டே அவங்க வீட்டை சுத்திக்கிட்டு... அதுவே பாவம் அவருகிட்ட கிடந்து அடிப்பட்டு மிதிப்பட்டு சாகுது .... மனசாட்சியே இல்லாத நாய்களா இருக்கானுக என்று வந்த எரிச்சலை மறைத்து கொண்டு ...

"எங்க ஜீவா கிளம்பிட்ட அந்த மாமி வீட்டுக்கா...என்று இளித்த நால்வருக்கும் மெளனமாக சிரிப்பை பதிலாக கொடுத்தான்... 

"எத்தனை நாளைக்கு தான் காவல் காக்கிறன்னு பாக்கிறோமே, மூர்த்தி அண்ணன் புழங்குற அத்தனை வீட்டுலையும் நாங்களும் போயிட்டு தான் வருவோம்.. இவ மட்டும் என்ன உசத்தின்னு அவளுக்கு கார், பந்தவஸ்து காவல், அது என்ன ஸ்பெஷல் கவனிப்பு .. அப்படி என்ற கொக்குப் பொடி போட்டு வச்சிருக்கான்னு நாங்க பாக்காம விட மாட்டோம் என்றவர்கள் பேச்சில் ஓங்கி குத்த தோன்றியது.... பெண், காதல், காமம் இதையெல்லாம் பத்தி அவனுக்கு ஒன்றும் தெரியாது .. தெரிந்து கொள்ள ஆசை கொண்டதும் இல்லை ஆனால் இந்த ஊரும் இவர்களும் சிலதை கற்று கொடுத்து கொண்டு தான் இருந்தார்கள் .. 

ஜீவா பதில் சொல்லாது போய் காரை எடுத்தான்... ஆனால் அவர்கள் ஏதோ இன்று இரவு திட்டம் தீட்டி வைத்திருப்பது மட்டும் புரிந்தது என்ன என்று தான் தெரியவில்லை ..

வஞ்சகமூர்த்தியை சுற்றி எவனும் உண்மையானவன் இல்லை ... அவன் அசந்தால் முதல் வெட்டு கூட இருக்கிற இவர்களாலே விழும் துரோகம் பொய்மை நடுவேதான் காட்டு சிங்கம் போல வலம் வருகிறான்.. அவன் தளரும்போது தாங்க ஒற்றை கரம் கிடையாது... 

வஞ்சமூர்ததி இன்னும் பொக்கிஷாவை வைத்த கண் வாங்காது பார்க்க .. அவளோ தன் உதடு உலர்ந்து மெல்ல இதழை பிரித்து ... 

எப்போ வந்தேள் ? 

எப்போ வந்தேன்னு கேட்கிறியா , ஏன் வந்தேன்னு கேட்கிறியா அவன் குரலில் ரோமம் சில்லிட்டு போனது ...

"உன்ன தான் கேட்டேன்டி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க

"அது வந்து காய்கறி வாங்க வந்தேன் காய்கறி வாங்க வந்தியா அவன் சந்தேகமாக தலையை சரிக்க.. 

"இல்ல நாளைக்கு மீன் கறி வச்சுண்டு வர சொன்னேளே , அதான் இங்க மார்க்கெட்டில மீன் பிரஷ்ஷா கிடைக்கும்னு சொன்னாள், வாங்கிண்டு போக வந்தேன் ....

"சூட்கேஸ்ல தான் மீன் வாங்குவியோ? என்றான் மீசையை முறுக்கியபடி .... 

"இல்ல இது அதோ அந்த அக்கா ரெஸ்ட் ரூம் போறதுக்கு என்கிட்ட கொடுத்துண்டு போனா, என்று பொக்கிஷா குடுகுடுவென ஓடிப்போய் அங்கே நின்ற பாதசாரி பெண் கையில் தன் பெட்டியை தூக்கி கொடுத்துவிட்டு ,

"இவ்வளவு நாழி ஆக்கிட்டேளே , புடுங்கோ உங்க பெட்டியை என்று கடகடவென சொல்லிவிட்டு .. அந்த பெண் புரியாது முழிக்கும் நேரத்துக்குள் மறுபடியும் ஓடி வந்து வஞ்சகமூர்த்தி முன்னால் நின்ற பொக்கிஷா..

"வாங்கோ வீட்டுக்கு போகலாம் என்று அவன் மணிக்கட்டை பிடித்துக் கொண்டாள்.. பயத்தில் வடக்குக்கும் தெற்கிற்கும் வித்தியாசம் தெரியாத அளவு படபடப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது ... அவள் தன் கையைப் பிடித்து இருப்பதை குனிந்து பார்த்தவன்... 

மீன் வாங்கிட்டியா? 

ம்ஹூம் இல்ல..

வந்தது வந்துட்ட மீன் வாங்கிட்டு போயிடலாம் வா என்று வஞ்சகமூர்த்தி பக்கத்தில் இருந்த இரவு மீன் சந்தைக்குள் நுழைய... இவளும் சேலையில் தன் மூக்கை பொத்திக் கொண்டே அவன் பின்னால் குடுகுடுவென்று ஓடினாள் 

"வாங்க மூர்த்தி அண்ணே, என்ன நீங்க மீன் கடைக்கு வந்து இருக்கீங்க...

"என் வப்பாட்டி மீன் வாங்கணும்னு சொன்னா சரி ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்...  

"அண்ணே உங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அவங்களையே மீன் வாங்கி வச்சுட்டீங்களே என்றதும் கெத்தாக மீசையை முறுக்கி கொண்டவன்... 

 "உடம்பெல்லாம் மச்சம் தாண்டா இருக்கு அதனாலதான் இப்படி ஆகா ஓகோன்னு வாழ்ந்துட்டு இருக்கேன் .. நல்ல மீனா எடுத்து போடு இது எடுக்கவாடி குண்டூஸ் என்று வஞ்சகமூர்த்தி குத்தவைத்து உட்கார்ந்து மீனை பதம் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி பொக்கிஷாவை பார்க்க அவளோ மயங்கி விழுவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் என்பது போல் கண்கள் கிறங்க நிற்க 

என்னடி?

வாடை குமட்டுறது... ப்ளீஸ் போவோமே என்றாள் பாவமாக அவள் கைகள் அவன் தோளில் பிடித்திருந்தது... எங்கே மயங்கி விழுவோமோ என்று பயந்து அவன் தோளை இறுக்கி பிடித்து இருக்க ... 

ப்ச் வா ...என்று அவளை இழுத்து கொண்டு அவன் நடக்க .... அவளை அவன் தோளில் கைபோட்டு அணைத்து பிடித்திருக்க பொக்கிஷா குதங்கி போய் அவன் அணைப்பில் அடங்கியே நடக்க பஸ்ஸ்டாப் போய் தேடிய ஜீவா அவள் இல்லை என்றதும் 

அப்பாடா தப்பிச்சு போயிட்டாங்க போல ... நான் மாட்டினாலும் அவங்க தப்பிச்சுட்டாங்க அது போதும் .... என்று பெருமூச்சு விட எதிரே இருந்த மார்க்கெட்டில் இருந்து வஞ்சகமூர்த்தியை கட்டி அணைத்தபடி பொக்கிஷா வர 

போச்சு மறுபடியுமா மாட்டிகிட்டாங்க... ஊப்ஸ் என்று தலையில் கை வைத்தவன்... தன்னை மாட்டி கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் எச்சில் விழுங்க....

எங்கடா அவளை தனியா விட்டுட்டு போன ? காரை திற ...ஜீவாவை கண்டு விட்டு எரிச்சலில் கத்தினான்...  

என்ன ஆச்சு அண்ணன் ?

இவளை வச்சிட்டு மாரடிக்க தான் வேண்டி இருக்கு , ராத்திரி தர்ற ஐஞ்சு நிமிச சுகத்துக்கு மத்த நேரம் முழுக்க பாடு பார்க்க வேண்டி இருக்கு... ஏய் இந்தாடி ஏறி உட்காரு ... 

தண்ணீ இஇஇஇ 

தண்ணீ இஇஇஇ என்று பொக்கிசா முனக 

இந்தாங்கங்க தண்ணீ என்று ஜீவா காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி கொண்டு வந்து கொடுக்க .... பொக்கிசா அதை வாங்கி கடக்முடக் என்று குடிக்க 

ஏய் இஇஇஇஇஇ என்று வஞ்சமூர்ததி தண்ணீர் பாட்டிலை புடுங்கும் முன் பொக்கிசா பாதி நீரை குடித்து விட்டாள்.... அதை வாங்கி மோர்ந்து பார்த்தவன் 

ஊப்ஸ் என்று தலையை தடவி கொண்டு 

சரிசரி நீ கிளம்பு நான்,வண்டியை எடுத்துட்டு போறேன் ....

இல்லை அண்ணன் நானே கொண்டு போய் விடவா? 

போன்னு சொன்னேன்... 

ம்ம் 

இன்னைக்கு காரை யூஸ் பண்ணினது யார் ?

ரகு ... 

ம்ம் கிளம்பு .... 

சரி அண்ணன் என்றவன் பொக்கிஷாவை பார்த்தபடியே நடந்தான்... 

எப்படியும் ஜீவா ____ கின் போட்ட தண்ணீயை குடிப்பான் டா என்று நால்வரும் ஜீவா போகும் காரில் வைத்த மேற்படி கலந்த தண்ணீரை பற்றி பேசி சிரித்தனர் ?. 

குடிகக்கணும் , நம்மளும் இத்தனை நாளா குவாட்டர் ஊத்தி கொடுத்து அவனை கவுத்துடலாம்னு பார்த்தோம்.. முடியல பெரிய வீராப்பு காட்டுறான் அதான் இன்னைக்கு தண்ணியில கொக்_____ கலந்தாச்சு.. அவனுக்கு சரக்கு வாசம் தான தெரியும் இதோட வாசம் தெரியாம தண்ணின்னு நினைச்சு குடிப்பான் கடைசில போதை ஏறி கிடக்கும் போது நாம மாமி வீட்டுக்குள்ள புகுந்துடலாம்...

சூப்பர் சூப்பர் 

"அப்படியே இவனும் போதை தாங்க முடியாம பொண்ணு தேடும் போது. நம்ம கூட்டத்துல இவனையும் சேர்த்து மாமிய பங்கு போட வச்சுட்டோம்னு வை , மூர்த்தி அண்ணன் கிட்ட போட்டு கொடுக்க முடியாது , ஏன்னா அவளை சீரழிச்ச கூட்டத்துல இவனும் ஒருத்தன் ஆகிடுவான்ல வாயை திறக்க மாட்டான் ... 

வாங்கடா மாமி வீட்டுக்கு கிளம்பலாம் இன்னைக்கு ஒரு பிடி பிடிச்சுடுவோம் இவளை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் என்று ஆசை கனவில் அவர்கள் கிளம்பிட.. 

வஞ்சமூர்ததி காரை ஓட்டி கொண்டிருக்க அருகே இருந்த பொக்கிஷா நிலையோ வார்த்தையில் சொல்ல முடியாது ... கையால் சேலையை கசக்கினாள்.. உடல் எங்கும் விறுவிறுவென என்று வந்தது ... நாவு வரண்டது , அவன் காயம் செய்தே பழகிய இடத்தில் தீடீரென வெட்டி வெட்டி நரம்பு இழுக்க ... 

ம்மா என்னவோ செய்யுதே" தலையை பிடித்தாள்... உதட்டை கடித்து உண்டான உணர்வை குறைக்க முயன்றாள்.... உடல் அங்கங்களின் தேவை மட்டும் கூடியது குடிபோதை போல இல்லை, தனக்கு நடப்பது புரிந்தது தன் அருகே இருப்பவனையும் தெரிந்தது, சுயநினைவு இருந்தது , தெளிவாக இருந்தாள் ... ஆனால் உடல் மட்டும் அதன் உணர்வை வெளிப்படுத்தியது... 

அவன் தேடிய காமம் அவளிடம் கிடைத்தால் போதும் வேறெதுவும் அவனுக்கு தேவையில்லை..  

மலிந்து கிடக்கும் காமம் தேடி உலகம் ரகசியமாக அலையும் போது அவன் மட்டும் வெளிப்படையாக அதை தேடி கொண்டிருந்தான் ...

காதலுக்கு எல்லைக்கோடு உண்டு 

காமம் எல்லைகள் அற்றது ...

காதல் கண்ணியம் ஆனது 

அதை கடைபிடிக்க கடினம் 

காமத்தில் கண்ணியமோ கட்டுப்பாடோ இல்லை 

பின்னே ஏன் காதலை தேடி சாதல் ஆக வேண்டும் ..

காதல் என்று பிதற்றாது காமம் என்றே நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் நேர்மை ஆனவன்தானோ!?