குரோத கொள்முதல் அழகே 15
Kurotham
15 குரோத கொள்முதல் அழகே !!
அண்ணன் என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கார் யாரையும் உள்ள விட மாட்டேன் ... என்று பொக்கிஷா வீட்டு வாசலில் ஜீவா இரவெல்லாம் காவலுக்கு இருந்தான்... அது வஞ்சமூர்ததி சொன்னான் என்பதற்காக அல்ல ....
டேய், மூர்த்தி அண்ணன் இல்ல எப்படியாவது அவளை உசார் பண்ணி ஆளுக்கு ஒரு நாள் பதம் பார்த்துடுவோம் .... அவர்கள் பழக்கம் அதுதான் இவன் பழகிய பாயில் அவன் இல்லாத நேரம் இவர்கள் பழகியே பழக்கம் இவளையும் கொள்ளை எடுக்க ஆவல் மிகுதியாய் சுற்றினார்கள்.. அதை கேட்ட ஜீவாவுக்கு இவர்கள் தரம் புரிந்து மலைத்தான்.. பாவமாக பார்க்கும் அந்த அப்பாவி பெண்ணை ஆள் ஆளாக பிடித்து பிய்த்து தின்ன பார்க்கிறார்களே என்று பரிதாபம் வந்தது ...
"அப்போ இந்த புதுப்பயலை என்ன செய்றது அண்ணன் கிட்ட போட்டு கொடுத்துட்டா என்ன பண்ண....
"ஆறு மணிக்கு மேல ஆளு எப்படியும் குவாட்டருக்கு கை நடுங்குவான் ஊத்தி கொடுத்துட்டா நாம போறது வர்றது தெரியவா போகுது" மரத்தின் பின்னே நின்ற ஜீவாவுக்கு இது கேட்டுவிட ...
"என் வாழ்க்கையில் இதுவரை யாருக்கும் நான் உதவிகரமா இருந்தது இல்லை இந்த பெண்ணை எப்படியாவது காப்பாத்தணும்.... என்று போதைக்கு நடுங்கிய கைகளை பல்லை கடித்து இறுக்கி கொண்டு அவள் வீட்டு வாசலில் வந்து அமர்ந்து கொண்டான் ...
"ஜீவா பாரின் சரக்கு இந்தா" என்று பல்லை காட்டிய மூர்த்தி ஆட்களை எதிர்த்து சண்டை போடத்தான் வலு இல்லை ... ஆனால் வேண்டாம் என்று சொல்ல வீரம் வந்தது பெரிய விஷயமே
"வேண்டாம் .... அண்ணன் வர்ற வரை அவங்களை பாதுக்காக்க வேண்டியது என் பொறுப்பு இதை குடிச்சா சரியா வராது நீங்க குடிங்க என்று விட்டு குளிரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு கொட்ட கொட்ட இரவெல்லாம் முழித்து கிடந்தான்....
ஜெயிலில் மரத்தடியில் காலுக்கு மேல் கால் போட்டு அதை ஆட்டியபடி விசிலில் ஒரு பாடலை ஹம் பண்ணிக்கொண்டு தோரணையாக படுத்திருந்தான் வஞ்சகமூர்த்தி...
மாமியார் வீடு என்பது அவனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் ... எப்போதும் வந்து போகும் இடம், வரவேற்பு அதிகமாகவே இருக்கும்... விசாரணை கைதியாக அடிக்கடி உள்ளே வந்துவிட்டு அப்படியே ஜெயிலை சுற்றிப் பார்த்துவிட்டு ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு போவான்... கீழ் அதிகாரிகளில் இருந்து மேலதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் மாமூல் போகிறது , பணமா வேணுமா பணத்த வாங்கிக்க நகையா வேணுமா? நகையை வாங்கிக்க பொண்ணு வேணுமா? ரிசார்ட் பக்கம் அனுப்பி வைக்கிறேன் என்று யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து பார்த்து செய்வதில் வஞ்சக மூர்த்தியை அடித்துக் கொள்ள முடியாது...
இவனைப் போல கெட்டவனாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை... அப்ரூவராக மாற விரும்பினாலோ, நல்லவனாக மாற நினைத்தாலோ அப்போதுதான் இவன் சுயரூபம் தெரியும்.... புதுசா இளசா பொண்ணு வேணும்னு கேட்டல்ல ரிசார்ட்ல அன்டர்வியரோட ஆட்டம் போட்ட அத்தனையும் பெண் டிரைவ்ல இருக்கு, ஒழுங்கா நான் சொல்றபடி கேட்டா பென்டிரைவ் பத்திரமா என்கிட்ட இருக்கும்... இல்ல இளம் பெண்ணோடு டிஐஜி குட்டை பாவாடை டான்ஸ் ஆடினார்ன்னு நாளைக்கு வீடியோ சுட சுட ஊரெல்லாம் பரவிடும் என்று மிரட்டியே காரியத்தை சாதித்து விடுவான்.... கொடுப்பதில் மன்னன் அதை சாட்சிகளாக மாற்றி வைப்பதில் மாமன்னன் !! அதனால் தான் கொலை கேஸ் விசாரணைக்கு வந்த இடத்தில் பந்தவஸ்தோட பகட்டாக சுற்றி வருகிறான் ..,
"வாஞ்சி அண்ணே வீட்ல இருந்து உங்களுக்கு சாப்பாடு வந்து இருக்கு என்று கான்ஸ்டபிள் வந்து சொல்லவும்... படுத்து கிடந்து பாடிக்கொண்டு இருந்தவன் பாடலை நிறுத்திவிட்டு எழும்பி அமர்ந்தான்,. தினமும் வீட்டிலிருந்து சுடச்சுட சாப்பாடு வந்து கொண்டிருக்கிறது.... கொடுத்து வைத்த மகாராஜா என்று மற்ற கைதிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறான்
சொத்துல பங்கு கேளு அதை கூட கொடுக்குறேன் ஆனா சோத்துல பங்கு கேட்காத என்ற கேட்டகிரி ஒத்தையாக அமுக்கிவிட்டு ஜெயிலே அலறும்படி ஒரு ஏப்பமும் விட்டுவிட்டு படுத்து தூங்கி விடுவான் ஜெயிலில் இருக்கும் இந்த நாட்கள் தான் அவனுக்கு சுகமான நாட்கள் திங்கணும் தூங்கணும் என்று சுகபோகமாக வாழ்வான்.. இன்னைக்கு எக்ஸ்ட்ரா உற்சாகம் வேறு... நேத்தே ஜீவாவிடம் மாமியை நாளைக்கு சோறு கொண்டு வர சொல்லு அவ கையால சமைச்சு எடுத்துட்டு வர சொல்லு என்று கட்டளை போட்டடாச்சு
"குண்டூஸை பார்த்து நாலு நாள் ஆகி போச்சா ? நெட்டி முறித்தான் .... அவன் பார்த்து ரசித்த பெண்களில் அலுக்காத ஒருத்தி இவளே ஜெயிலில் சும்மா இருந்த நேரங்களில் அவளோடு கூடிய கூடலை யோசிக்க பிடித்தது,.
எந்த பெண்ணும் மஞ்சத்தில் அவனிடம் முரண்டு பிடித்தது இல்லை... அவன் கொட்டி கொடுக்கும் பணமா? இல்லை பதவி உயர்வா, இல்லை அவன் கொடுக்கும் சுகமா ஏதோ ஒன்று விரும்பியே அவனோடு பொழுதுகளை கழிக்கும் பெண்கள் முனங்கலை கேட்டு பழகியவன், முதல் முறை கண்ணீர் கசிந்து உதட்டை அழுகையில் கடித்த அவளின் கண்ணும் உதடும் அழுகைக்கு பதில் சுகத்தில் துடிக்க வேண்டும் என்ற ஆசை ...
சவத்தை போ எப்படியும் உன்னை என் வழிக்கு கொண்டு வந்து படுக்கையில என் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றத்தான் போறேன் .... உன்ன எல்லாம் பல மாசம் வச்சி செய்யணும் எப்பா என்னா எழவு கண்ணுடா சாமி அந்த கண்ணும் உப்பி கிடக்கிற உதடும் , எவளுக்கும் இல்லாத அழகு இவகிட்ட என்னவோ இருக்கு!! சும்மா அந்த கண்ணை பார்த்தாவே போதும் நாலு குவாட்டர் ராவா உள்ள தள்ளின பீல் வர வைக்கிறா குண்டூஸ்... இப்படி எப்ப எப்போன்னு காத்திருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு, அவ மூக்குத்திபோட்ட மூக்கு அச்சோ அப்படியே அவ தலைமுடியை இழுத்து வச்சி மோதணும் போல தோணுது "பொக்கிஷாவை நினைக்கும் போதே வஞ்சகமூர்த்தி உடலில் நரம்புகள் மின்னலாக வெடித்தது ,அவள் அழகு தந்த போதையில் தலையை உதறினான்..
க்ரீச் ஜெயில் கதவு திறக்கப்பட வஞ்சக மூர்த்தி ஆர்வமாக தலையை தூக்கி பார்க்க ஜீவாதான் கூடையோடு வந்தான் .... பின்னே தலையை தூக்கி பார்த்தான் பொக்கிஷாவை காணவில்லை முகம் இறுகி போனவன்
"மாமியை எங்க? இறுக்கம் குரலிலும் அப்படியே வெளிப்பட்டது
"உடம்பு சரியில்லையாம் அண்ணன் அதான் என்று ஜீவா தடுமாறி கூற ....
"செத்தாலும் நான் கூப்பிட்டா என் முன்னாடி வந்து நின்னுட்டுதான் அவ சாகணும் ... ஏன்னா கூப்பிட்டது நான், எப்படி வர மாட்டேன்னு சொன்னா? எனக்கு தெரியாது பத்தே நிமிடம் டைம் அவ வரல" பல்லை நரநரவென கடிக்க அவன் வைர கடுக்கன் கடகடவென ஆடியது ... ஜீவாவே இது குரங்கு கூட்டமா சிங்க கூட்டமா என்று தெரியாது தப்பிக்கவும் முடியாது இவர்களோடு ஒன்றவும் முடியாது விழி பிதுங்கி கொண்டிருந்தான்... பேசும் போதே போட்டு தள்ளும் வஞ்சகமூர்த்தி ஆட்கள் பேச்சிலேயே நெருப்பு கக்கும் வஞ்சகமூர்த்தி, இவர்களை கண்டால் ஈரக்கொலை நடுங்குறது முடிந்த மட்டும் சரி அண்ணன் என்று மண்டையை மண்டையை ஆட்டி விடுவான் ...
"போ அவளை கூட்டிட்டு வந்து சேர் ... பத்து நிமிசத்துல சாப்பாட்டு கூடையோட அவ என் தொடை மேல இருக்கணும்.. வக்காளி கொஞ்சம் அசந்தா குணட்டிருவாளுகளே" என்று கோவத்தை பல்லை கடித்து குறைத்தான்.. இவளுக்கு மட்டும் தனி அழைப்பு அப்போ இதுகாதல் தான ? அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடப்படாது... அய்யா எங்கு போனாலும் குட்டியோடும் புட்டியோடும் தான் இருப்பார் ... என்ன மத்தவளுக வா என்று கண்ணைசத்து விட்டால் வந்து விடுவார்கள் இவள் வர வில்லை அவ்வளவே !! மத்தபடி ஆள் எப்பவும் ஜல்சா சாமியே !!
ஜீவா வெளியே வந்து காரில் உட்கார்ந்து இருந்த பொக்கிஷாவிடம் தயங்கியபடி...
சாரிங்க நான் மழுப்பி பார்த்தேன் ஆனா மசிய மாட்டைக்கிறார் நீங்க வந்தே ஆகணும்னு கத்துறார்... தான்தோன்றித் தனமாக சுற்றிய ஜீவாவுக்கே பொக்கிஷாவை பார்தால் பாவமாக இருந்தது ,..
பொக்கிஷா அவன் தொந்தரவு இல்லாது நாலு நாள் நிம்மதியாக இருந்தாள்.. அண்ணன் உங்கள சாப்பாடு செஞ்சு கொண்டு வர சொன்னார் என்ற அழைப்பே வேப்பங்காய் கசப்பை தந்தது ,.
நீங்க தான் போய் கொடுக்கணும்னு கத்துறார்... நான் என்ன பண்ணட்டும் என்று ஜீவா தயக்கமாக அவளை பார்க்க ....
ஓஓஓஓ அவ்வளவு தான் சொன்னாள்.. சாப்பாட்டை வாங்கி கொண்டு பெருமூச்சு விட்ட பொக்கிஷா வலது கால் வைத்து சிறைச்சாலை உள்ளே நுழைந்தாள்...
யாரும்மா நீ ? என்று ஜெயிலர் வாசலில் நிறுத்திவிட
"என் வப்பாட்டிதான் உள்ள விடு என்ற வஞ்சகன் குரல் மட்டும் வர
"அப்படியாப்பா ஆளு புதுசா இருந்ததா...
"இப்பதான் லிஸ்ட்ல புதுசுல சேர்ந்து இருக்கா .... அனுப்பி விடும்...
"நேரா போய் அந்த மரத்துக்கு பின்ன போ தம்பி அங்கதான் இருக்கும் ...
"ம்ம் தள்ளாடிய காலோடு அந்த மரம் நோக்கி பொக்கிஷா நடக்க ஆரம்பித்தாள் ...
"உனக்கு நாலு தடவை ஸ்பெஷல் அழைப்பு கொடுத்தாதான் வருவியோ குண்டூஸ் "என்ற வஞ்சகன் குரல் பக்கத்தில் கேட்டு பொக்கிஷா பதறி திரும்ப... அவளுக்கு பின்னே கைகளை கட்டிக்கொண்டு வஞ்சகமூர்த்தி நின்று கொண்டு இருந்தான்...
அவள் அங்கே இங்கே அரண்டு மிரண்டு முழித்துக் கொண்டு மெதுவாக நடந்து வர , அவ்வளவு நேரம் கூட அவனால் காத்திருக்க முடியவில்லை.. நாலே எட்டில் வந்து நின்றுவிட்டான்... எப்போதும் ஒரு பொருளின் மீது ஆர்வம் இருக்கும் வரை ஆசையும் இருக்கும் அதை அடைய வேண்டும் என்ற வேகமும் இருக்கும். அந்த ஆசை குறையும் பொழுது ஆர்வம் குறைந்து போகும் இவ்வளவு தானா ச்சீ பே என்ற எண்ணமும் வந்து விடும் அப்படித்தான் அவன் ஆசைப்படும் பொருளில் ஒன்று அவள்!! அவளை ஆசை தீர தின்று ஏப்பம் விட்ட பிறகு , அவளுக்கான மதிப்பு பூஜ்ஜியம் மட்டுமே ...
அது அது .... அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை ... அவனுக்காக ஆடை அலங்காரம் செய்து அவன் அழைத்ததும் ஆடையை நழுவ விட்டு வந்து நின்ற பெண்கள் வரிசையில் , முகத்தில் பவுடர் கூட இல்லாது வியர்த்து வடிந்து அவனை நேர்கொண்டு பார்க்காது தன் முன்னே நின்ற அவளை குனிந்து பார்த்தான்...
"நான் கூப்பிட்டும் ஏன் வரலைன்னு கேட்டேன் அவனுக்கு பதில் வந்தே ஆகணும் என்பது போல கண்டன பார்வை இருந்தது
"உடம்பு முடில ஆத்துக்கு விலக்கு வெட்டி வைத்த ஆரஞ்சு சுளை உதடு தந்தி அடிக்க அவள் காரணம் கூற
"ப்ச் அந்த கருமமா?? நான் மூடா இருக்கும் போது தான் வந்து தொலையுமா நாலு நாள் கழிச்சு வர சொல்ல கூடாது... வந்து சோத்தை கொட்டு .. இனி உன்னை வச்சி என்ன கிழிக்க, சவத்தை நாம ஒன்னு நினைச்சா கிரகம் ஒரு பக்கத்துல இழுத்துட்டு போகுது .. வண்டூர் வனரோஜாவை வர சொல்லி இருந்தா அப்படியே புதர் பக்கம் போய் ஒரு ஆட்டம் முடிக்கவே செஞ்சு இருப்பேன் .. நாலு நாளா உன் மேல இருந்த ஆசையில உடம்பு காஞ்சு போய் கிடந்தேன் இன்னைக்கும் போச்சா... உலகப்போரே வந்தது போல வஞ்சகமூர்த்தி வாய்விட்டு திட்டி கொண்டே முன்னால் நடக்க, அவளும் சேவலை தொடரும் கோழியாக அவன் பரந்த உள்ளங்கால் போட்ட தடம் பின்னே ஓடினாள் ...
மீன்தான ? தட்டை எடுத்து அவன் முன் வைத்த பொக்கிஷாவை தலையை தூக்கி பார்க்க ...
ம்ஹூம் மறுப்பாக தலையசைக்க...
எலும்புக்கறியா, நண்டு தொக்கு இருக்குல்ல, அது தினமும் தின்னா தான் நாலு ஆட்டத்துக்கு உடம்பு தாங்கும் , இளம் கறியா வாங்குனியா? கையை கழுவி கொண்டு வஞ்சகமூர்த்தி சாப்பிட தட்டை பார்க்க
கீரை பொறியல், பருப்பு கடைசல், நெய் , மோர்குழம்பு, வெண்டைக்காய் பொறியல் என்று பச்சை பசேல் என்று வயல்வெளியாக தட்டில் இருக்க
என்னடி இது? பல்லை நரநரவென அண்ணாந்து பார்த்து கடித்தான்.. அவள் கையை பிசைய
மீன் , கறி , கிடாவை எல்லாம் எங்க ?
நேக்கு அதெல்லாம் வைக்க தெரியாது... தட்டு பறந்து போய் சோத்தோடு அவள் முகத்தில் விழுந்தது ..
"______ட வைக்க தெரியாதுன்னா வைக்க தெரிஞ்சுக்கணும், படுக்க தெரியாதுன்னா படுக்க பழகணும், ஆம்பளைக்கு எப்படி வயித்து பசியையும் கட்டில் பசியையும் தீக்கணும்னு தெரியாது , ஆளும் முகரையும் இந்த எழவை தின்னதான் மூணு மணி வரை காத்து கிடந்தேனோ தூக்கிட்டு போடி "என்று வஞ்சகன் கூடையை எட்டி உதைத்தான்... அங்கே நின்ற அத்தனை பேரும் அவர்களை வேடிக்கை பார்க்க , பொக்கிஷா படபடவென குனிந்து தட்டு கேரியர் எல்லாவற்றையும் எடுத்து கூடை உள்ளே வைத்தவள் தலை எங்கும் சோற்று பருக்கை ... புஸ்புஸ் என்று மூச்சை விட்டபடி சிகரெட்டை இழுத்து ஊதி கொண்டு நிற்க ... அதற்குள் ஒருவர் வந்து
தம்பி வனரோஜாட்ட இருந்து மீனும், நல்லிக்கறி குழம்பும் வந்து இருக்கு கொடுத்துட்டு போயிருக்கா,
"ம்ம் வை ... அவ பொம்பள, நான் கூப்பிட்டா இங்கேயே அவுத்து போட்டு நிப்பா... இவளும் இருக்காளே கண்ணை கண்ணை அகல விரிச்சிக்கிட்டு ... இழுத்து மூடிட்டு வந்து இருக்கிற லட்சணத்தை பாரு "ஒரு இடம் தெரியாது ஆடையில் தன் அழகை மறைத்து வந்து நின்ற அவள் அழகில் எதையும் பார்க்க முடியாது காச்மூச் என்று கத்தினான்,., எல்லார் கண்களும் அவளை மொய்க்க விட்டால் போதும்டா சாமி என்ற நிலையில் பொக்கிஷா சாப்பாடு கூடைகளை தூக்கி கொண்டு ஓட ரெடியாக
"எங்க போற , இதை எடுத்து சாப்பிட வச்சிட்டு போ ... என்று அவன் ஏவுதல் வர ... மீண்டும் மீண்டுமா என்பது போல முழித்தபடி அவன் அருகே இருந்த கூடையை நுனி விரலில் தொட்டாள் ... பின்னே எப்படி பார்த்தாலும் சைவமும் அசைவமும் சேராதே.. சுடச்சுட மீனும் கறியும் என்று மிதிக்க, கை நடுங்க பொக்கிஷா அவனுக்கு பரிமாறியவள் கண்ணில் கூடை உள்ளே கிடந்த ஜரிகை பாக்கெட் பட அவனும் அதை பார்தவன்...
"ஏகப்பட்ட கனவோட வந்திருப்பா , ப்ச் நீ வருவேன்ன உடனே நான் அவளை வர வேண்டாம்னு அனுப்பிட்டேன் , எல்லாம் என் நேரம் , இதுக்கு வேலை இல்லாம போச்சு லாவண்டர் பாக்கெட் செமையா இருக்கும் குண்டுஸ், மார்க்கெட்டுக்கு இப்பதான் புதுசு... வந்ததும் ஒரு செட் வாங்கிட்டேன்ல நல்லா நின்னு விளையாடுதுடி.... எலும்பை உறிஞ்சு கொண்டே அவன் செய்த சாதனை பட்டியலை பச்சை பச்சையாக சொல்லி கொண்டு இருந்தான்
ஆனா உன்கிட்ட மட்டும் ராவாதான் பிடிச்சு இருக்கு ... எப்பவும் இதை போட்டு வதக் வதக்னு கருமம், அதுல ஒரு கிக் குறைதான் , சும்மா உன்கிட்ட ராவா இறங்கினா செமையா இருக்கும் தெரியுமா , உனக்கு போட்டா பிடிக்குமா போடாம பிடிக்குமா குண்டூஸ்... உன்கிட்ட தான்டி கேட்டுட்டு இருக்கேன் ....
நேக்கு இதை பத்தியெல்லாம் தெரியாது ....
தெரியாது வராது முடியாது வேற என்ன எழவுதான்டி வரும் , முதல்ல இது என்ன முகரை ஹான் சிரிச்ச மாதிரியே பார்க்க தெரியாதா? சிரிப்பே இல்லாத வேண்டாவெறுப்பான பாவனை கொண்ட அவள் முகத்தில் , இவனுக்கு எரிச்சல் வந்தது .. எச்சில் கையோடு அவள் கன்னத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தவன்...
வஞ்சகமூர்த்தி வப்பாட்டியா இருக்க கசக்குதாடி
வஞ்சகமூர்த்தி வப்பாட்டியா இருக்க நீ குடுத்து வச்சிருக்கணும்டி, இந்த ஆப்பர் மட்டும்
மத்தவளுகளுக்கு கிடைச்சு இருந்தது
கிடா வெட்டி விருந்து அமர்க்களம்
பண்ணி இருப்பாளுக ...
சவத்தை பொழைக்க தெரியாத
புள்ளையா இருக்கியே இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பத்தினி வேஷம்னு பார்க்க தான போறேன் என்று இடியென சிரித்த வஞ்சக மூர்த்தி ....
"இந்த மூணு நாளும் தான் உனக்கு நேரக்கெடு காரசாரமா கறியும் மீனுமா சமைக்க கத்துக்கிற அதே போல என்கூட எப்படி விதவிதமா படுக்கணும்னு கத்துக்கிற புரியுதா ..
"ம்ம் அவள் தலையாட்ட எச்சில் உதட்டோடு அவள் அழகிய உதட்டின் மீது முத்தம் வைத்தவன் ....
நாளைக்கும் நீதான் சமைச்சு எடுத்துட்டு வர்ற போ என்றதும் அடித்து பிடித்து வெளியே ஓடியவள்.. தன் உதட்டில் வந்த மீன் வாடையில் காரை பிடித்து கொண்டு உவாக் உவாக் என்று வாந்தி எடுத்தாள் ...
ஏங்க என்ற ஜீவா குரலில் பொக்கிஷா தளர்ந்து போய் திரும்பி பார்க்க
"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, நானும் இந்த கூட்டத்துல தெரியாம தான் வந்து மாட்டிக்கிட்டேன்... உங்ககிட்ட கேட்கலாமான்னு தெரியல ... தப்பா நினைச்சுக்காதீங்க,. என்கூட வர்றீங்களா எங்கையாவது கொண்டு போய் உங்களை பத்திரமா சேர்த்துடுறேன்... எனக்கு உங்களை பார்த்தா பாவமா இருக்கு, இவங்க கூட சண்டை போட்டு எல்லாம் என்னால ஜெயிக்க முடியாது மூர்த்தி அண்ணன் உள்ள இருக்கும் இந்த சமயத்துல உங்களை காப்பாத்த ஒரு வழி இருக்குன்னு சொல்றேன் ... யோசிச்சு சொல்லுங்க ஓகேன்னா ராத்திரி யாருக்கும் தெரியாம உங்களை கூட்டிட்டு போக வேண்டியது என் பொறுப்பு" என்ற ஜீவாவை அப்படியே பொக்கிஷா பார்த்து கொண்டு நிற்க ...
"யோசிச்சு சொல்லுங்க ஓகேன்னா நம்ம ஆட்கள் கண்ணுல படாம நைட் டவுன் பஸ்ஸ்டாப் வந்திடுங்க... நான் வெயிட் பண்றேன் என்று சொல்லியவன் அவளை வீட்டில் இறக்கி விட ....
தினம் தினம் நரகம் தரும் நரக அரசனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற ஆசையில் வஞ்சமூர்த்தி உள்ளே இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி தப்பித்துவிட நினைத்து அவளும் ஜீவா உதவியை நாடினாள்.. பொக்கிஷா, ஜீவா சொன்னது போல இரவோடு இரவாக தலையில் முக்காடு போட்டு கொண்டு அவன் சொன்ன இடத்தில் ஜீவா வர காத்து நின்றாள் ..
அவள் கடைசி நம்பிக்கை கை கொடுக்குமா??