வெள்ளி இரவு முதல் பாகம் நீக்கிவிடுவேன் குரோதம் 11
குரோதம்11
11 குரோத கொளமுதல் அழகே !!
"தங்கச்சி பத்திரமா வீட்ல கொண்டு கூட சொல்லுவீங்களா??" என்றவள் சேலை நடுவில் அவள் இடையை இறுக பிடித்து பொக்கிஷாவை நகர விடாதே அவள் தந்த அணைப்பை இவன் கொடுத்தபடி .... அவள் வைத்திருந்த மல்லிகை மலரை நுகர்ந்து கொண்டே
"ஆனா பாரு உண்மை சொல்லியே பழகுன வாயா, பொய் சொல்ல வரல, உன் தங்கச்சியை நான் கடத்தல" என்று சிரித்தவன் அவள் அரண்ட பார்வையில் இன்னும் எஃகு உருண்டைகளை கண்ணாடி பரப்பில் உருட்டி விட்டது போல சிரித்து கொண்டே
"எனக்கு இந்த ஐடியா இல்லாம போயிடுச்சு பாரேன் இது தெரிஞ்சு இருந்தா ரெண்டு நாளைக்கு முன்னாடியே அவளுக்கு ஸ்கெட்ச் போட்டு ஆளை தூக்கி இருப்பேன் போச்சே... எவன் முந்தினான்னு தெரியலையே
"அய்யோ அப்போ என் தங்கச்சி" அழுகை முனுக்கென்று வர அவள் இமை நனைய போக
"ப்ச் இப்ப என்ன உன் தங்கச்சி பத்திரமா வேணும் அதான ?
"ம்ம்
"பத்திரமா பார்த்துக்கலாம் உன் தங்கச்சி உனக்கு மட்டுமா தங்கச்சி இனி எனக்கும் கொழுந்தியா மாதிரில்ல, அரை மணி நேரத்துல அவளை கண்டுபிடிக்கிறது என் வேலை.. இந்த நெருக்கத்துல கொஞ்சம் குறைஞ்சாலும் அவளை கண்டுபிடிக்க தாமதம் ஆகும் என்று இடையும் இடையும் உரசி நிற்பதை வஞ்சக மூர்த்தி சுட்டி காட்டிட... அவன் நெஞ்சுக்குள்ளேயே அவள் தஞ்சம் ஆகி நின்று கொள்ள .... போனை எடுத்து காதில் வைத்தவன்
:டேய் நம்ம ஆளுகளை விட்டு மாமி தங்கச்சியை தேட சொல்லு என்ன பண்ணுவியலோ தெரியாது அரை மணிநேரத்துல ஆளு நம்ம கட்டுப்பாட்டுல இருக்கணும்...
"குண்டூஸ் அவ பேர் என்ன ?
"பொற்றவை....
"காலேஜ்...
"_____. காலேஜ்
"வருடம்
"முதல் வருடம்.... தகவலை கொடுத்து கொண்டே இருந்தாலும் அவள் இடையில் அவன் கை தடவி கொண்டே இருந்தது .. அவள் தரும் விலைக்கு தானே அவன் வேலை செய்வான் ..
"அரை மணிநேரத்துல ஆளு கிடைச்சிடும்... நம்பி வரலாமா இல்லை கண்ணீர் தாரை தாரையா வடிச்சு மூட் ஸ்பாயில் பண்ணுவியா??
"தங்கச்சி கிடைச்சிடுவாள்ல" அவள் கவனம் அதில்தான் இருந்தது..
"நான்தான் சொல்லி இருக்கேனே, பொண்ணுங்க எனக்கு ஏதாவது தந்தா, நான் உங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறதுல தாராள பிரபு... உனக்கு என்ன வேணும் உன் தங்கச்சி சேப்பா வீட்டுக்கு போகணும் அவ்வளவு தானே...
"ம்ம்
"அது நீ எனக்கு தர்றதுல இருக்கு... பொக்கிஷா இடுப்போடு தன் முரட்டு கைபோட்டு கடைத்தெரு முழுக்க அவர்களை வேடிக்கை பார்க்க இடித்து கொண்டே நடந்து போய் காரின் முன் இருக்கையில் ஏற்றினான்..
பார்த்தியா அழகான பொண்ணு எனக்கு மயங்கி கிடக்கு என்று சொல்வதில் அவனுக்கு ஒரு பெருமை... பெண்கள் அவனை சுற்றி வந்தால் அவனுக்கு ஊரில் மதிப்பு என்று நினைப்பு. மேய்ப்பது எருமை அதில் பெருமை வேறு இந்த காட்டெருமைக்கு.... அவன் தன் ஆட்களுக்கு ஏவி கொண்டே ஒற்றை கையில் காரை ஓட்டியவன் தோளை பொக்கிஷா மெல்ல சுரண்டினாள்...
"என்னடி?
"கோவிலுக்கு போகணும் போல இருக்கு, போயிட்டு ஆத்துக்கு போவோமா ? அவள் மனம் அலைக்கழிந்தது.... சற்றே அமைதி தேவைப்பட்டது இல்லை செத்து விடுவாள் போல மூச்சு அடைத்தது, அவள் வயதுக்கும் குணத்துக்கும் நடப்பது எல்லாம் தாங்க வலு இல்லாது தள்ளாடினாள்.... கண்ணை சுருக்கி வஞ்சகன் அவளை ஒரு பார்வை பாரத்தவன்...
"மாமி ஃபேக் அடிச்ச மாதிரி தெரியுது நாளைக்கு காலையில அவளை பொறுமையா தேடிக்கலாம் திரும்பி வந்திடுங்கடா என்றவன் உதட்டில் விரலை வைத்து
ப்ளீஸ் அவாள வர சொல்லாதேள் சத்தியமா நான் ஏமாத்த மாட்டேன் நம்புங்கோ....
"எப்படி நம்ப சொல்ற நான் பெட்டுக்கு போகலாமான்னு கேட்டா நீ கோவிலுக்கு போகணும்னு சொல்ற என்ன வச்சி விளையாடிட்டு இருக்கியாஇஇஇஇஇஇஇஇ என்ற வஞ்சகமூர்த்தியின் முரட்டு உதடுகள் அவள் பிஞ்சு உதட்டில் வதைபட வார்த்தை தடைபட., போன் நழுவி சீட்டில் விழ மெல்ல தன் தலையை அவள் இதழுக்கு ஏற்ப சாய்த்து கொடுக்க ... அவன் பேச்சை நிறுத்த கொடுத்த முத்தம் போதுமானதாகி போனது முரட்டு ஆணை மயக்க,.,
அவன் பருத்த இதழுக்கு இவ்விதழ் எப்படி போதும்?? குட்டி இதழை கடித்து லபெக் லபெக் என்று உள்ளே உறிஞ்சி எடுத்தான், ஆஹா மலைத்தேன் சுவை அவை , துளசி வாசத்தில் அவள் உதடு எதை எதையோ துளிர்க்க வைக்க .... இவளுக்கோ அழுது காரியத்தை கெடுத்து விட கூடாது என்று அவன் உதடு இவள் உதட்டை கடித்து சவைத்து இழுக்க இழுக்க வலியோடு வன்முத்தம் வாங்க தன் மென் இதழை கொடுத்து கொண்டிருந்தாள்.... அவள் பின்னலோடு பூ அவன் கையில் கசங்கிட , அவள் கைகள் அவன் சட்டை காலரை கசக்கி பிடித்திருக்க முதலை இரை தின்பது போல ,லபக் லபக் சத்தம் போட்டு இரண்டு இதழையும் மாறி மாறி உறிஞ்சி தின்றவன் மூச்சு திணறிய அவளுக்குள் தன் காற்றை நிரப்பி உப்பி ஊதினானே தவிர விடும் மார்க்கம் கொஞ்சத்தேனும் இல்லை... முத்தம் கொடுத்தால் அந்த அசைவ முதலைக்கு போதுமா? அவன் கைகள் பரபரவென்று பொக்கிஷா சேலை உள்ளே இடம் தேட சட்டென அவன் கையை பிடித்து தடுத்தாள்,... அவன் நெருப்பு கண்கள் அவளை குனிந்து பார்க்க கெஞ்சுதலாக பார்த்தவள் இதழை விட்டு தன் இதழை அவன் எடுத்துவிட்டு வாயை திறக்க போக இதழ் மீது கை வைத்து மூடியவள்
கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்திடுறேனே... அப்பறம் உங்க இஷ்டம் போல செய்றேன்....
சீக்கிரம் வா .... என்று உடலை நெட்டி வளைத்தான் நல்ல முத்தம் ... ஊறல் எடுத்த உடலுக்கு ஒற்றை முத்தமே சுகத்தை அள்ளி வீசிய உணர்வு ... அவள் பிடித்த தன் பிடறி மயிரை கையால் கோதி கலைந்த முடியை கண்ணாடி பார்த்து வஞ்சகமூர்த்தி சரி செய்தான் , சட்டை எங்கும் அவள் மல்லிகை மலர் உதிர்ந்து கிடந்தது ...அவளை கோவில் முன்னே இறக்கிவிட்டவன்.. கார் பேனட்டில் ஏறி அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தவன் ...போன் அடிக்கவும் பொக்கிஷா எதிர்பாப்போடு போனையும் அவனையும் மாறி மாறி பார்க்க ... போனை காதில் இடுக்கினான்,.,புகை ஒரு பக்கம் போக... ம்ம் ம்ம் போட்டவன்
"உன் தங்கச்சி ஏதோ ப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி போயிருக்காளாம் பத்திரமா இருக்காளாம், " என்றதும் பொக்கிஷா நிம்மதி பெருமூச்சு விட்டு முடிக்கவில்லை
"கொழுந்தியாவை பத்திரமா கடத்தி நம்ம எடத்துல வச்சிக்கோங்கடா , மாமிக்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு, காலையில நான் சொன்ன பிறகு அவளை ஆத்துக்கோ குளத்துக்கோ அனுப்பி விட்டா போதும்... என்றவன் குசும்பாக பொக்கிஷாவை பார்த்து கண்ணடித்து சிரித்தான்..
"இந்த ப்ளான் நான் போட்டது இல்லம்மா, நீயா போட்டது ..நீ போட்ட கோட்டுல நான் ரோடு போட்டுட்டேன் அவ்வளவுதான்... ஒன்னும் பயப்படாத குண்டூஸ் நான் எது செஞ்சாலும் சொல்லிட்டு தான் செய்வேன் ... அவளை பத்திரமா பார்க்க வேண்டியது என் பொறுப்பு... அது உன் கையில இருக்கு ...
"டேய் என் குண்டூஸ் தங்கச்சி மேல , எவன் நிழலாவது பட்டது தொலைஞ்சீங்க.. நைட் முழுக்க அவ பத்திரமா இருக்கணும் , பாத்துக்கங்க, வை என்றவன் இன்னும் அவனை பார்த்தபடி நின்ற பொக்கிஷாவை ஒரு விரல் நீட்டி அழைக்க பூனைக்குட்டி போல ஓடி வந்து அவன் அருகே நிற்க அவள் தோள் மீது கை போட்டு கொண்டவன்..
"தெய்வமே கதின்னு கிடக்காதடி,. பின்ன உன் தெய்வத்தையும் கடத்த வேண்டி இருக்கும் சீக்கிரம் வந்திடு உன்னோட கோ ஆபரேசன் பார்த்து தான் உன் தங்கச்சியை பரோல்ல விடணுமா, ஜாமீன்ல விடணுமான்னு யோசிக்கணும் புரியுதா?
"ம்ம்....
"வெறும் கையோடவா கடவுளை பார்க்க போற ... இந்தா பழம் பூ வாங்கிட்டு போ என்று வஞ்சக
மூர்த்தி பணத்தை அவள் கையில் திணித்து விட்டு மீதி புகையை ஊதி தள்ள ஆரம்பித்து விட்டான்...
"பொக்கிஷாவை விடவும் அழகான பெண்கள் அங்கே சுற்றி வர அவன் பார்வை என்னவோ தன் இரை மீதே இருந்தது,., பொக்கிஷா கடைக்கு ஓடுவதும் பதட்டம் பயம் பக்தி சேர தன் முகத்தை நீரில் கழுவி துடைத்து கொண்டு பூவும் பழமும் வாங்கியபடி கோவிலுக்கு ஓடியவளை பார்த்தபடியே புகை விட்டான்.... சிறுதே நொடியில் தலை தொங்கி போய் பொக்கிஷா வந்தாள் ....
மனம் பாரமாகி தான் கடவுள் சன்னதி போனது ஆனால் அங்கே உள்ளவரோ
"ஆச்சாரமான எடத்துக்கு அபச்சாரமான நீ வர்றதா சீசீ வெளியே போ" .... என்று விரட்டி அடிக்க ... அவளுக்கே அவள் செய்த பாவம் என்ன என்று புரியவில்லை... கடவுள் கூட அவளை நிராகரித்தால் என்னதான் செய்வாள்... வலியும் வேதனையும் கூடிக்கொள்ள மீண்டும் இறங்கி வந்த அவளை போனை பார்த்து கொண்டு நின்ற வஞ்சமூர்த்தி திரும்பி பார்த்தான் ..
"என்ன குண்டூஸ் முடிஞ்சா போகலாமா ??என்றவன் பார்வையில் கொண்டு போன பூவும் பழமும் பட்டுவிட ...
"என்னாச்சு பூஜை பண்ணல "
"ம்ஹூம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாள்"
ஏன் ??
அது இவனாலதான இந்த நிலமை இவனிடம் சொல்லி என்ன ஆக போகுது என்று நினைத்து பொக்கிஷா கார் கதவை திறக்க போக அவள் கை மீது கை வைத்து காரை திறக்க விடாது இறுக்கி பிடித்தவன்
ஏன் பூஜை பண்ணலைன்னு கேட்டேன் ... பதில் வராம கார்ல ஏறின கொண்டை முடியை ஆஞ்சிடுவேன் ஏன்டி போன மாதிரி திரும்பி வந்த .... அவள் அமைதியாக நிற்க...
.
"இந்த மாதிரி பொம்மணாட்டி எல்லாம் கோவிலுக்கு வந்தா கோவில் கோவிலா இருக்குமா, இனிமே இவ கோவில் உள்ள வந்தா உள்ள விடாதீங்கோ என்று அங்கே சிலர் கூறும் சத்தம் இங்கே நின்ற இருவருக்கும் கேட்க ...
உன்ன என்ன சொன்னான்?
வேற கோவிலுக்கு போய்க்கிலாம் வாங்கோ"என்றாள் நலிந்த குரலோடு.... அவள் மணிக்கட்டை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு போனவன் முதல் முறை இன்றுதான் கோவில் உள்ளேயே நுழைகிறான்.... பேச்சே இல்லை காது வாக்கில் அவளை உதாசீனம் செய்தவனுக்கு அறை விழுந்தது ...
"நீ யாருடா அவளுக்கு அனுமதி கொடுக்க ...
"அய்யோ என்ன பண்றேள் "என்று அவள் பதற
"சாமியை தான பார்க்கணும் , என் வப்பாட்டியை உள்ள வர கூடாதுன்னு சொல்ல இனி எவனுக்கு தைரியம் வருதுன்னு பார்க்கிறேன்... நீ ஏன்டி சாமியை பார்க்க இங்க வரணும் ... நான் அந்த சாமியையே உனக்கு தர்றேன் வச்சிக்க" என்று வஞ்சமூர்ததி நேரே போய் சாமி சிலையை அலேக்காக தூக்கி கொண்டு பொக்கிஷா கையில் கொடுக்க ...
கடவுளே "
தெய்வமே "
"போதுமா அவன் கிடக்கான் கூந்தலாண்டி, நீ வாடி குண்டூஸ் என்றவன் முரட்டுத்தனமான வேலையில் இவள்தான் அய்யடா என்று அயர்ந்து போய் நின்றாள்...
சாரி தம்பி இனிமே இப்படி நடக்காது சிலையை கொடுங்க என்று அவர் கெஞ்சாத குறையாக கெஞ்ச இவன் மசியும் ஆளா...
உன் சாமிக்கு பூஜை பண்ணணும்னா இனி மாமி வீட்டுல போய் பண்ணு ., அவ மனசு வச்சாதான் இனிமே யாரும் சாமியை பார்க்க முடியும் இது அங்கதான் இருக்கும் .. வா என்று அவளை இழுக்க...
"ப்ளீஸ் விடுங்கோ , இதெல்லாம் நேக்கு வேணடாமே,. "கோவிலுக்கு போனா அங்க ரெண்டு பூதம் டங்கு டங்கு என்று ஆடிச்சாம் கதையாக ஆகி போக மலையாட்டை முதுகோடு கட்டி அணைத்து தள்ளி கொண்டு வந்து காரில் போடும் முன்னே பிறருக்கு விழுந்த கெட்டவார்த்தையில் நாலு இவளுக்கும் விழ ...
இவன் பண்ற அக்கிரமத்துக்கு ஒருநாள் நாதி இல்லாம நடு ரோட்டுல செத்து கிடக்க போறான் என்று பிறர் வாய்விட்டு சொல்ல பொக்கிஷாவோ மனதுக்குள் சொல்லி கொண்டாள் .....
சுயதேவைக்காக சிலவற்றை அவளுக்கு செய்கிறான் அதில் காதலும் இல்லை, நேசமும் இல்லை ...நேசம் கொண்டால் காயப்படுத்த வரவே செய்யாது .... சுயநலம் மட்டுமே யாரை கொடுமை படுத்தியாவது தன் தேவையை தீர்க்க சொல்லும்...