குரோதம்20
Kurotham20
20 குரோத கொள்முதல் அழகே !!
மயக்க மருந்தின் வீரியத்தால் கூட அவளை தூங்க வைக்க முடியவில்லை வயிற்றில் இருந்த காயமெல்லாம் அவ்வளவாக வலிக்கவில்லை மயக்கமருந்தே இல்லாமல் தினம் தினம் கழுத்தை அறுத்து கொல்வது போல அவனோடு வாழும் ஒரு வாழ்க்கை தரும் வலியை விடவா அவள் வயிற்றில் குத்தப்பட்டிருக்கும் அந்த அரை இன்ச் காயம் அவளுக்கு வலியை கொடுத்து விடப் போகிறது.. மன வருத்தம் ஒன்றே ஒன்றுதான். அலங்கோலத்தின் சின்னம் என்றாலும் அரக்கனின் உதிரம் என்றாலும் , ஒன்றுமறியா ஒரு உயிரை பறிகொடுத்த கசப்பு அவளுக்கு தொண்டையை அடைக்கச் செய்தது என்னதான் அவன் பிள்ளை அவனைப் போலத்தான் இருப்பான் என்று சமாதானம் செய்ய நினைத்தாலும் பெத்த மனம் எப்போதும் பித்து தானே பித்து பிடித்தது போல் இருந்தது...
பொக்கிஷா யாருமே இல்லாமல் அந்த மருத்துவமனை அறையில் ஒத்தையாக படுத்து கிடந்தாள் .. நாக்கெல்லாம் வறண்டு போயிருந்தது... ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லாத அளவா சாபம் பெற்று விட்டாள் சிறிது நேரத்திற்கு முன்புதான் அங்கிருந்த நர்சிடம் போனை வாங்கி தன் தகப்பனிடம் விஷயத்தைக் கூற...
வர்றிங்களாப்பா ஏனோ யாராவது பக்கம் வேண்டும் போல தோன்றியது ... அனாதையாக கிடந்தது போல உணர்வே அவளை இன்னும் சோர்வாக்கியது...
பெரிய காயமோம்மா
இல்லைப்பா பயப்படுற அளவு இல்லை தகப்பன் பயந்து விடுவாரே என்று மழுப்ப ...
ஓஓஓ அவையை ஒத்தையா விட்டுட்டு வரணுமே அதான் யோசிச்சேன்... அந்த நாரவாயனுக்கும் இவருக்கும் வித்யாசம் ஒன்றும் பெரிதாக இல்லை.. அவன் உன்ன எதுக்கடி நான் பாக்கணும் என்று நேராக சொல்லி வி்ட்டு போனான் , இவர் சுற்றி வளைத்தார் அவ்வளவே ....
இப்போதெல்லாம் தினமும் ஒரு நேரமாவது அழைக்கும் தகப்பன் வாரத்திற்கு ஒரு முறை கடமைக்கு அழைப்பது போலவும்.. இரண்டு மூன்று வார்த்தைகள் பேசிவிட்டு எப்போதடா வைப்போம் என்று போனை வைப்பது போலவே இருக்கிறது ... தங்கை சுத்தம் , அவள் பிறந்தநாளைக்கு இவளே அழைத்து பேச ...
பிரெண்ட்ஸ் கூட வெளியே போறேன் பிறகு பேசுறேன் என்றவளுக்கு ,அந்த பிறகு வரவே இல்லை ... நேரமின்மையில் அழைப்புகள் தவறுவது இல்லை பிரியமின்மையால் அழைப்புகள் துண்டிக்க படுகிறது....
சரிப்பா பார்த்துக்கிறேன் ...
ஏன் அவனை எங்க , ஆசைக்கு மட்டும் நீ வேணும் முடியலைன்னா பார்க்க மாட்டானா? அவன் என்ன அவளுக்கு தாலி கட்டி மூன்று முடிச்சு போட்டவனா கடைமை செய்ய ? எவளோடு எவள் நினைப்பில் சல்லாபத்தில் திளைத்து கிடக்கிறானோ?
வர முடியாதுன்னா வர முடியாதுன்னு சொல்லுங்கோப்பா, அந்த மனுசனை நியாபக படுத்தாதேள் .. ஒன்னும் பிரச்சனை இல்லை நானே பார்த்துக்கிறேன் என்று போனை கொடுத்து விட்டாள் ...
தூக்கம் வருவேனா என்றது மனம் அமைதியானால்தானே தூக்கம் வரும் ...அதுதான் சாந்தி அடைய மறுத்ததே, வெற்று வயிறை தடவி கொண்டே கிடந்தாள்...
பொக்கிஷா எப்படியோ கண் அசந்து விட , தகப்பன் சத்தம் காதில் கேட்கவும் பட்டென்று கண்களை திறந்தாள் ... பரந்தாமனும் அவன் தங்கை பொற்றவையும் நின்றனர் அத்தனை வலி நடுவேயும் தன் உறவுகள் பார்த்ததும் பளீர் என்று சூரியன் கண்ட கமலம் போலதொரு பார்வை பார்த்தாள் ....
"எப்படிம்மா இருக்க .... இன்னும் என்னவெல்லாம் நாம பார்க்கணும்னு இருக்கோ தெரிலையே எத்தனை நாளைக்கு தான் அந்த அரக்கன் உன்னை பாடா படுத்துவான்னு தெரிலையே... என்று பரந்தாமன் சற்று வருத்தமாகவே பேச... தான் சிரிக்க துணைக்கு ஆள் இருக்கோ இல்லையோ அழ ஆள் இருக்கு என்றதே நிம்மதி..
"விடுங்கோப்பா... அவா அவா கர்மாவ அவா அவா சுமந்தே தீரணும் ...
"அப்போ நீ என்ன கர்மா பண்ணினேன்னு இவனோட மாட்டிண்டு கிடக்கிற "என்ற தங்கை பேச்சில் சற்று எள்ளல் இருந்தது...
அவை சும்மா இரு என்ற தகப்பன் குரலில் அமைதியாக போய் அவை அமர்ந்து கொள்ள ...
இந்த ராத்திரியில அவள விட்டுட்டு வர முடியாதோன்னோ, அதான் கையோடவே கூட்டிண்டு வந்துட்டேன் நாளைக்கு எக்ஸாம் வேற இருக்குது போல எக்ஸாம் எழுத முடியாமல் போனதுல கொஞ்சம் அவளுக்கு கோபம்... வேற ஒன்னும் இல்ல நீ தப்பா நினைக்காத பொக்கிஷா...
"உன்னோட வாழ்க்கை தான் நாசம் ஆகிடுத்து என் வாழ்க்கையையும் ஏன் சேர்த்து நாசம் பண்ற செமஸ்டர் எக்ஸாம் தெரியுமா ,எழுத முடியாம போயிடுத்து எல்லாம் உன்னால" என்று பொற்றவை கடுகடுவென நிற்க...
"சாரிப்பா பார்க்கணும் போல இருந்தது அதான் வர சொல்லிட்டேன் நீங்க வேணும்னா கிளம்புங்கோ இப்போ கிளம்பினாதான் கடைசி பஸ் பிடிச்சு ஊர் போய் சேர்ந்துடலாமே.. இவள் எப்போதும் தாய் செல்லம் அவை தகப்பன் செல்லம் தாய் போனதோடு அவள் அனாதை ஆகி போனாள் ... என்னதான் இருந்தாலும் தகப்பனுக்கு பொற்றவைதான் முதலில் என்று தெரியுமே ..ஆனால் இவளை வெறுக்க எல்லாம் மாட்டார்...
"அது நீ இப்படி இருக்கும் போது என்று பரந்தாமன் இழுக்கும் போதே
"_____ பயலுகளை ராத்திரியோட ராத்தியா காலி பண்ணல நான் வஞ்சக மூர்த்தி இல்லை ... என் மேல கை வைக்க ஆள் அனுப்பி இருக்கானுகளா.... விடியும் முன்ன அத்தனை பேர் தலையும் மார்க்கெட்டுல கிடக்கும் எழுதி வச்சிக்க சொல்லு .... வெண்கல தொண்டையோன் நாரமூர்த்தி கதவை எட்டி உதைத்து கொண்டு பொக்கிசா இருந்த அறை உள்ளே வந்தான் ... போனை ஒரு கையில் வைத்தபடி அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் முகத்தை அய்ய என்பது போல சுளித்தான்...
"சாகமாத்தான் இருக்கியா பரவாயில்லையே?? நாலு மணிநேரத்துல முழிச்சு உட்கார்ந்து இருக்க... என்னவோய் சொட்டை இங்க இருக்கிற ஊர்ல இருந்து வர உமருக்கு நாலு மணி நேரமாவோய் ?? என்றவன் பார்வை பெஞ்சில் அழகு பதுமையாக இருந்த பொக்கிஷா தங்கையை கண்டுவிட
அட பொண்ணு ஊஊஊஊ என்றவன் டால் அடிச்ச பார்வை கண்ட பொக்கிசாவுக்கு பகீர் என்று ஆகிப்போக
"அவை வெளியே போ என்று அதட்டலாக பொக்கிசா கூற
"ஏன் ? என்று அவள் குதர்க்கமாக கேட்க வஞ்சகனோ பொக்கிஷாவை விட ஒரு சுற்று அழகாக இருந்த பொற்றவையை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் ...
"கொழுந்தியா இல்லாத இடத்தில பொண்ணு மட்டும் இல்லை வப்பாட்டி கூட வைக்க கூடாதுப்பா... எப்பா என்னா அழகு ... உனக்கு சரிக்கு சமமா இருக்கா குண்டூஸ் என்று எல்லாருக்கும் கேட்கவே வர்ணனை நடக்க ..
அவை வெளிய போறியா இல்லையா ?? என்று பொக்கிஷா கத்த ...
ப்ச் என்று சலித்தாள் அவள்
அப்பா நீங்க ஊருக்கு கிளம்புங்கோ நான் என்னை பாத்துக்கிறேன் ... என்று அவசரமாக அவர்களை வெளியேற்ற துடித்தாள் .. அவள் வாழ்க்கை நாசம் ஆனது போதாதா? அவளுக்கு அக்கா என்ற பாசம் இருக்கோ இல்லையோ , ஆனால் இவளுக்கு தங்கை என்ற பாசம் உண்டே ...வஞ்சமூர்ததி பற்றி தெரிந்தவளுக்கு நெருப்பை கொட்டிய உணர்வு இவன் கண்ணிலா விழ வேண்டும் என்று பயம் வேறு ....
சரிம்மா எதாவது வேணும்னா போன் போடு என்று தகப்பன் பொற்றவையோடு நகர போக
பாப்பா என்றான் அவள் அருகே போய் குறுக்காக நின்றபடி...
இந்தா செலவுக்கு வச்சிக்கோ என்று கட்டு பணத்தை வஞ்சமூர்ததி அவளிடம் நீட்ட ...
அது ஊஊஊ அவள் தயங்கிட
நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, அவ தந்தா என்ன நான் தந்தா என்ன ? வயசு புள்ளை செலவு இருக்கும்ல , சும்மா கூச்சப்படாத வச்சிக்க பாப்பா ... உனக்கு நான் செய்யாம யார் செய்வா புடி " சற்று நெளிந்து கொண்டே பொற்றவை பணத்தை வாங்கி கொண்டாள்...
பேர் என்ன பாப்பா என்றான் கடுக்கனை தடவி கொண்டே...
"பொற்றவை..
"அட அட கிழவன் ரசித்து ரசித்து பெத்து போட்டு ரசனையா பேரை வச்சி இப்படி அப்பாவி பயலை கொல்றானே என்று நெஞ்சை தடவியவன்
"பார்த்து போ பாப்பா , என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு உனக்கு நான் இருக்கேன் "என்று அவள் தலையை தடவ போக சட்டென அவள் கையை இழுத்து தன் பக்கம் விட்டு கொண்ட பொக்கிசா
"இந்த பக்கத்து வழியா கிளம்பு ,அப்பா கூட்டிண்டு போங்கோ இனிமே இங்க நான் கூப்பிட்டா கூட வராதேள் என்று தங்கையை பார்த்து கொண்டு நின்ற வஞ்சமூர்ததி பார்வையே கிலியை பரப்பியது... தங்கை வெளியே போன பின்னே அப்பாடா என்ற உணர்வு ...
"நீயும் இருக்கியே என்னவோ கோவிலுக்கு வெட்டக் கொண்டு போற ஆடு மாதிரி, எப்பவும் ஒரே மாதிரி பார்வை... பத்து நிமிஷத்துல எத்தனை விதமான பாவனை உன் தங்கச்சி காட்டுறா... அதுவும் கடைசியா வெளியே போகும்போது, ஒரு சிரிப்பு என்ன பார்த்து சிரிச்சா பாரு , அட அட இன்பமா இருக்குதப்பா அந்த நினைப்பிலேயே ராத்திரி தூக்கம் கோவிந்தா போல இருக்கு... பாப்பா படிச்சுக்கிட்டா இருக்கா? என்று பொக்கிஷா அருகே வந்து அமர்ந்தான் ... பொக்கிஷா அமைதியாக முகத்தை திருப்பிக் கொள்ள..
"இத்தனை நாள் ஆகுது என்னைக்காவது ஒரு சிரிப்பு என்ன பாத்து சிரிச்சு இருக்கியாடி... ஆசையா ஒரு பார்வை பார்த்து இருக்கியாடி.. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ? என்று வஞ்சமூர்ததி நாடியை சொரிந்து கொண்டே கேட்க..
சவத்த விடு அவ எங்க போயிட போறா பாத்துக்கலாம் என்றவன் பேச்சில் , இவளுக்கு இவன் எதுக்கு வந்து தொலைந்தான் என்பது போல் எரிச்சல் மண்டி கிடந்தது ...
மண்ட கிர் கிர்ன்னு இருந்தது எவகூடையாவது போகலாம்னுதான் போனேன்.. ஆனா பாரு எவளும் இல்ல அடிச்ச பந்து திரும்பி வந்த மாதிரி உன்கிட்டயே வந்தாச்சு... பொண்ணுங்களுக்கு ரொம்ப டிமாண்ட்டா இருக்கு குண்டூஸ்... நம்மள விட ஜாஸ்தி எவனாவது கொடுத்தா , அப்படியே தாவிடுகிறாளுக.. ஒரு நேர்மை இல்லை, உண்மையில்ல இதையெல்லாம் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு திட்டுறாங்க... என்னத்த சொல்ல நேர்மையா இருக்கிறவனுக்கு கடைசில பைத்தியக்காரன் பட்டம் தான் கிடைக்கும்" என்று தன் அருகே படுக்கையில் படுத்து இருந்த அவளை ஓரமாக தள்ளிப் போட்டுவிட்டு, இவன் ஒய்யாரமாக படுக்கையில் படுத்து காலை ஆட்ட ஆரம்பித்து விட்டான் , இவள் படுக்கை ஓரத்தில் கிடந்தாள் அவன் பப்பரப்ப என்று காலை கையை விரித்து போட்டு மல்லாக்க கிடந்தான்., நானதான்டா நோயாளி என்று கத்த வேண்டும் போல இருந்தது ...
"ஆனா இப்போ இங்க வந்ததும் நல்லதுதான குண்டூஸ் , அதனாலதான் உன் தங்கச்சியை பார்க்க முடிஞ்சது ... அவளை போல உனக்கு சிரிக்கவே வராதா உர்னா மூஞ்சி... என்ன எழவு இருக்குன்னு உன்னை தூக்கிட்டு வந்தேன்னு தெரியல... வர வர உன் கருமம் பிடிச்ச முகரை பார்த்தா எரிச்சல்தான் முட்டிட்டு வருது ... பிறகு என்ன கூந்தலுக்குடா நடு ராத்திரி வந்து இங்கேயும் தொல்லை பண்ணிட்டு இருக்க என்று இவளுக்கு தோணாது இல்லை ...
"அண்ணன் லேட்டா ஆகிடுச்சுல்ல எங்கேயும் சாப்பாடு இல்லை... நான்வேஜ் சுத்தம் ஐஞ்சு இட்லி மட்டும் தான் கிடைச்சது... என்று ஜீவா உள்ளே வர...
"என்னது நான்வேஜ் இல்லாம சாப்பாடா நான் பியூர் நான்வெஜிட்டெரியன்டா , சவத்தை நம்ம தலையில இப்படி எழுதி இருக்கே , அதை மனுசன் சாப்பிட முடியுமா ? பசிச்சு வேற தொலையுது கொண்டா .... என்று படுக்கை மீது சம்மணம் போட்டு அமர்ந்து பார்சல் பிரிக்க , எலும்பும் மீனும் கறியும் இல்லாத சாப்பாடு முகத்தை சுளிக்க வைக்க.... பொக்கிசாவுக்கோ இலை மணமும், கார சட்னி வாசமும், தாளித்த கறிவேப்பிலை வாசமும் தொண்டையில் எச்சில் ஊற வைத்தது .... அவளுக்கும் கொலைப்பசி இப்போதுதான் தெரிந்தது .... ரெண்டு இட்லி அவன் தொண்டைக்குள் விக்கி சிக்கி குறைபாடி குணட்டி குணட்டி போனது ...
"சாப்பிடுறியா என்று கேட்க கூட நாதி இல்லையே தொண்டை நனைக்க கூட ஆள் இல்லையே என்று பொக்கிஷா பசியோடு கண்ணை மூடப்போக அவள் உதட்டில் குத்தி திணித்து ஒரு கை எச்சில் கையாக நுழைந்தது.. பட்டென்று அவள் கண்களை திறந்து பார்க்க ..
"____ மாதிரி இருக்கு, ரெண்டே உள்ள போகல இது உனக்கு தான் லாயக்கு நீயே தின்னு" என்று அவள் உதட்டில் வைத்து குத்த ... அவன் எச்சில்தான் ஆனால் பசியும் வேறு கொன்றது... அவன் எச்சிலில் அவளே அழுக்காகி போன பின்னே, என்ன தூய்மை பற்றி அலசி ஆராய .. ஆட்டின் வாயில் தழையை வைத்து அமுக்குவது போல பெரிய பெரிய உருண்டையாக வைத்து திணிக்க... போதும்டா என்று சொல்ல கூட அவளுக்கு வாயில் இடம் இல்லை ... கையை கழுவி விட்டு வந்தவன் தன் ஈரக்கையால் அவள் உதட்டை வலிக்க துடைத்து விட்டு ....
"அந்த சோபா உனக்கு போதும் அதுல படு ... என்று பொக்கிஷாவை தூக்கி சோபாவில் போட்டு விட்டு இவன் மெத்தை மீது படுத்து கொள்ள ...
அண்ணன் நீங்க வேணும்னா வீட்டுக்கு போங்களேன் நான் பார்த்துக்கிறேன்...என்று ஜீவா கேட்க ..
அவளோட படுத்த பாவத்துக்கு இதையும் செஞ்சு தொலையுறேன், நீ கிளம்பு என்றவன் தூங்கியே போனான் ... வயிறு நிறைந்து போனதில் பொக்கிசாவும் மெல்லிய குறட்டையோடு தூங்கி இருந்தாள்...
தீராத மோகம் தான்
தெவிட்டாத காமம்தான் ,
இன்னும் ஏனோ அவள் மீது மயக்கம் தான் ...