குரோத கொள்முதல் அழகே 4
Kurotham4kurotham4
4 குரோத கொள்முதல் அழகே!!
மருத்துவமனை கட்டில் மீது கால் கைகள் உடைந்த நிலையில் ஜீவா இன்பாதித்தன் படுத்து கிடந்தான், அவன் கண்களை திறக்கும் பொழுது பக்கத்தில் யாருமே இல்லை ... அவன் போனை தேட அது கூட இரவு நடந்த ஆக்சிடென்ட்டில் காணாமல் போய் இருந்தது , அவன் ஓட்டிய ரேஸ் கார் அப்பளமாக நொறுங்கி கிடந்தது. நல்லவேளை உயிர் தப்பித்தான்... நல்ல போதையில் ரேஸ் வைப்போம் என்று நண்பர்களோடு கார் ரேஸ் போய் எப்படியோ உயிர் தப்பித்து வந்திருக்கிறான்..
சண்முகம் அண்ணன் என் போன் எங்க, டேடி வந்து பார்த்தாரா? திட்டுனாரோ என்று தயக்கமாக உள்ளே நுழைந்த காரியதரிசி சண்முகத்தை ஜீவா பார்க்க
"என்ன தம்பி ஒரு நாள் வேதனைப்படுத்தினா பரவாயில்லை , இப்படி நிதம்நெதம் குடிச்சிட்டு ஏதாவது வேதனைப்படுத்துறீங்களே, அவர் எவ்வளவுதான் பொறுத்து போவார்.. ராத்திரி மனுஷன் உங்கள பாத்து ஒடைஞ்சு போயிட்டார்.. அந்த ஆக்சிடென்ட்டை நேர்ல பார்த்தவங்க நூலிலிழையில நீங்க தப்பிச்சதா சொன்னாங்க அந்த மனுஷன் மனசு எப்படி கனத்து போய் இருக்கும் சொல்லுங்க ஜீவா தலையை குனிந்தபடி இருந்தான் ராத்திரி அடித்த போதை இன்னும் இருக்கிறது என்றால் எந்த நிலையில் அவன் இருந்துஇருப்பான்...
"என்ன சண்முகம் அண்ணன் பண்றது, குடிகாரன் ஏழு மணி வரைக்கும் இன்னிக்கு நான் யோக்கியமா இருக்கணும்னு நெனச்சு தான் வெளிய போறான்.. ஆனா 7:00 மணிக்கு மேல அவன் பேச்சை அவனே கேட்க மாட்டேங்கிறான் மாதிரி, காலு தானா சரக்கு கடை நோக்கி போற மாதிரி , என் மூளையும் இந்த சரக்கு , ரேஸ் இந்த ரெண்டு தவிர வேற எதையுமே யோசிக்க மாட்டேங்குது... அவர் மனச வருத்தப்படுத்தக் கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் காலையில முழிக்கும்போது நெனச்சுக்கிட்டு தான் ஆபீஸ் போறேன்... ஆனா ஒரு மணி நேரம் கூட என்னால இருக்க முடியல சண்முகம் அண்ணே.. டாடிக்கு ஒரு போன் போட்டு கொடுங்களேன்
என்று ஜீவா கெஞ்சுதலாக கேட்க .. சண்முகம் தன் போனிலிருந்து போன் போட்டு கொடுக்க...
ஆபீஸ் சேர் மீது சாய்ந்து அமர்ந்திருந்த யட்சன் கதவு திறக்கப்படவும் கண்களை திறந்து பார்க்க தேனிசை இரண்டு பிள்ளைகளையும் தோளுக்கு ஒன்றாக சுமந்து கொண்டு சாப்பாட்டுக் கூடையையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்...
"காலையிலேயே உன்னை சாப்பாடு எல்லாம் வேண்டாம், தொல்லை பண்ணாதன்னு சொல்லிட்டு தானடி வந்தேன் தூங்கும் குழந்தைகள் கன்னம் மீது பட்டாடையை தடவுவது போல தடவி முத்தம் வைத்தான்,,,
"ம்ம் , ஆனா நீங்க சொன்னது உங்க பொண்டாட்டி தேனிசை கிட்ட கிழவா, இப்ப வந்திருக்கிறது உங்கள் சுகர் பேபி" என்று கண்ணை சிமிட்டிவிட்டு தூங்கும் குழந்தைகளை சோபாவில் போட்டவள் அவன் அருகே வர
"உங்களுக்கு லோ சுகர் ஆகி போச்சாம் அதனால அப்பப்ப இப்படித்தான் மூட் அவுட் ஆயிடுவீங்கன்னு பட்சி சொல்லுது ... சோ உங்களுக்கு சுகர் ஏத்த வந்திருக்கேன் கிழவா" என்று அவன் மடியில் வந்து தேனிசை அமர போக அவளை தட்டி விட்டவன்
"மண்டை கிறுக்கு புடிச்சு உட்கார்ந்து இருக்கேன் ஓடிப் போயிரு
"உங்க பொண்டாட்டியா இருந்தா ஓடிப் போயிருப்பேன் .. இது சுகர் பேபியாச்சே" என்றவள் கைகள் விஷனமாக அவன் தொடையை சுரண்ட அவன் போதையும் அவன் பரிகாரமும் அவன் பரிதவிப்பை அடக்கும் அருமருந்தும் அவள் ஒருத்தி தானே தெரியாத என்ன??
யட்சன் இரவு ஒரு நேரம் தூங்காமல் அப்படியே படுக்கையில் கிடந்த ஜீவாவை கண்கள் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி இருந்தது...
இதற்கு மேல் அவனை சரி செய்ய என்னதான் செய்ய , அடம் பிடிக்கும் குழந்தையாக இருந்தால் பரவாயில்லை... இவன் என்ன சொன்னாலும் சரி சரி சரி டேடி என்று சொல்வான், ஆனால் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் மறுபடியும் முட்டுச்சந்து, மூத்திரச்சந்து என்று போய் முட்டிக்கொண்டு நிற்கும் அவனை எப்படி மூக்கணாங்கயிறு போட்டு இழுக்க ... இன்னும் எத்தனை நாள் இவனை தன் நெஞ்சில் சுமந்து கொண்டே திரிய உண்மையாகவே வருத்தம் நெஞ்சை அடைத்தது....
"சண்முகம் அண்ணே அவனுக்கு உறவுகளோட முக்கியத்துவம் தெரியல , உயிரோடு முக்கியத்துவமும் தெரியல, எப்படியும் முழிச்சு என்னை தேடுவான், தேடட்டும் அவன் கார் சாவி போன் எதையும் கொடுக்காதீங்க" என்று விட்டு இப்போதுதான் கிளம்பி ஆபிஸ் வந்தான்... பின்னாடியே வால் பிடித்துக் கொண்டு அவன் மனைவியும் வந்து விட்டாள் .. அவன் முகம் சுருங்கினால் அவளுக்கு ஆகுமா??
"கிழவா
"வந்துட்டல்ல வந்த வேலையை ஆரம்பி என்று அவன் சேரில் சாய
"யோவ் ஒரு பேச்சுக்கு வேண்டாம்டி நீ வீட்டுக்கு போன்னு சொல்லுவேன்னு பார்த்தா, வா வந்த வேலையை பாருங்கிற, அல்ப புத்திய்யா உனக்கு,
"ஓசியா கிடைக்கிறது எதா இருந்தாலும் விடுறதா இல்ல ம்ம் நான் ரெடி "என்று யட்சன் சாய்ந்து அமர சகலமும் மறந்து நெட்டி முறித்தவன் நோக்கி தேனிசை ஒரு விரல் நீட்டி ..
நானும் நைட் பீலிங்ல தான் சுத்துனேன் கிழவா, சோ எனக்கும் வேணும் ம்ம் என்றவள் சேலை நெகிழ.. அவள் பாதம் தொட்ட கிழவன் உச்சி முடியை கோதினாள் ... போன் அதிரவும் சேரில் உட்கார்ந்திருந்த தேனிசை தலையை தூக்கி பார்த்த யட்சன் நோக்கி கண்ணை காட்டியவள்
வேலையை பாரும்வோய் இதை நான் பார்த்துக்கிறேன் என்று விட்டு
"ம்ம் சொல்லுடா பிழைச்சிக்கிட்ட போல ...
"ப்ச் நீயா டேடிக்கிட்ட போனை கொடு
"டேடி கீழ முக்கியமான வேலையில பிசி ...
"கீழ் ப்ளோர்லையா
"கீழ் ப்ளோர்தான் ஸ்ஊஊஊ மெதுவா கிழவா என்று கிசுகிசுப்பாக கூறிவிட்டு
"ம்ம் என்ன விஷயம் சொல்லு...
"நான் அவர்கிட்ட தான் பேசணும்
"என்ன பேச போற டேடி டேடி இனிமே ஒழுங்கா இருப்பேன் அந்த பள்ளு தான ? நீ அதை என்கிட்டயையே பாடு நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன்...
"எனக்கும் டேடிக்கும் இடையில நீ யார்
"ம்க்கும் என்னடா பேச்சு தினுசா இருக்கு "யட்சன் குரல் வர
"சாரி டேடி உடனே பம்மி கொண்டவன்
"அது வந்து டேடி ...
"அவனை என்கிட்ட பேச வேண்டாம்னு சொல்லிடு , எனக்கும் அவனுக்கும் எதுவும் இல்லை .... ரவுண்ட்ஸ் போறேன் என்று எழும்பி வெளியே போக போன யட்சன் கையை பிடித்து தடுத்த தேனிசை
பாவம் என்று கெஞ்சுதலாக போனை கொடுக்க வாங்கினான் இல்லை ...
"நீங்க சொன்ன டிரைவர் வேலைக்கு போறேன் டேடி இனி ஒழுங்கா இருப்பேன் ப்ராமிஸ்" ஜீவா உதடு பிதுங்க தன்னை தள்ளி நிறுத்திய யட்சன் செயலில் தவிக்க ....
நீ சொல்றதை நம்ப முடியாதுன்னு நான் சொல்லலப்பா அவர் சொல்றார் என்று தேனிசை கூற ...
அதான் ட்ரைவர் வேலைக்கு போறேன்னு சொல்றேனே
"அது நேத்து வர தம்பி , இன்னைக்கு உன் டாஸ்க் வேற ...யட்சனும் இவள் பேசுவதை கூர்ந்து கவனித்தான்
வேறையா ??
"யா யா டிரைவர் வேலையோட சேர்ந்து லவ் வேலையும் பாரு "
"லவ்வா?
"அதே உன் புது முதலாளி வஞ்சகமூர்த்திக்கு ஒரு தங்கச்சி இருக்காம் "
"இருந்துட்டு போகட்டும்
"அதான இருந்துட்டு போகட்டும் ... நமக்கு என்ன வந்தது ,.. அந்த தங்கச்சியை நீ உசார் பண்றியாம்
"உசாரா அப்படின்னா
"அதான்டா டாவு அடிப்பியோ, கரெக்ட் பண்ணுவியோ காதலிப்பியோ, கண்டம் பண்ணுவியோ அது உன் சாமர்த்தியம் ... அந்த பொண்ணோட நீ வந்து உன் டேடி முன்னாடி நின்னாதான் இனி உனக்கு மன்னிப்பாம் , உன் டேடி சொல்ல சொன்னார் சொல்லிட்டேன்" என்று யட்சன் பார்த்து தேனிசை கண்ணை சிமிட்ட
"நான் எப்போடி சொன்னேன்" என்று யட்சன் தலையில் அடிக்க ...
"அதெல்லாம் எனக்கு வராது ஜீவா அலறினான்,.
"என்ன காசு கொடுத்து நடிக்க கூட்டிட்டு வந்த மாதிரியாவது கூட்டிட்டு வந்திடுடா இல்லை உன் டேடி உக்கிரம் குறையாது ... லவ் பண்ண ட்ரை பண்ணு மசியல, காசை கொடுத்து கரெக்ட் பண்ணிடு எதுவோ ஒன்னு பண்ணு... இல்ல இவரை சமாதானம் பண்ணவே முடியாது...
நான் வேணும்னா வேற எந்த பொண்ணையாவது கூட்டிட்டு வரவா
நோ அந்த பொண்ணே தான் வேணுமாம் ..
ப்ச் எனக்கு நீ சொல்லுற எதுவுமே வராது இசை ...
அது எனக்கு தெரியாதா என்ன, முதல்ல போ வேலையில சேர் அப்பறம் மெல்ல மெல்ல அந்த பொண்ணுக்கிட்ட பேச்சுக்கொடு ...
கொடுத்தா
"நீ அரை லூசுன்னு புரிஞ்சு அவளே பாவம் பார்த்து உனக்கு உதவி பண்ணலாம்,., பாரு ஜீவா மனுசன் உன் மேல அவ்வளவு கோவத்துல இருக்கார் .. அவரை சமாளிக்கணும்னா நீ இதை எல்லாம் பண்ணித்தான் ஆகணும் ...
"அப்படியா?
"அப்படிதான் ..உனக்கு ஒரு வருசம் ம்ஹூம் நீ எப்பேற்பட்டவன்னு தெரிஞ்சும் ஒரு வருசம் சொல்றேன் பாரு ரெண்டு வருசம் எடுத்துக்க அந்த பொண்ணு முக்கியம் தம்பி ...
"வேற வழியே இல்லையா இசை
"நோ வே உனக்கு கொடுத்த அத்தனை சான்ஸையும் நீ மிஸ் பண்ணிட்டப்பா ,இனிமே இதுதான் உன் இறுதி சான்ஸ் இதுல தப்பிச்சா அவர்கிட்ட நல்ல பேர் வாங்கலாம் இல்ல அவ்வளவு தான் ....
"ஓஓஓ டேடியை பார்க்கணுமே
"எதுக்கு கால்ல கையில விழுந்து கெஞ்சவா , கால் கை சரியானதும் நேரே அங்கேயே போயிடுவியாம் இதையும் அவர்தான் சொல்ல சொன்னார்ப்பா.... வேலை கிடக்கு வைக்கட்டா என்று போனை வைத்துவிட்டாள்..
"இப்ப எதுக்குடி அவனை குண்டக்க மண்டக்க மாட்டி விடுற சரி வேலைக்கு தான் போறான்னு நினைச்சா நீ என்னன்னா அவன் வீட்டு பொண்ணை இவனை லவ் பண்ண சொல்ற அதெல்லாம் ஒரு குடும்பமா ??
"உங்களுக்கு சிந்தாமணி மேல தீர்க்க முடியாத பகை உண்டு அப்படி இருந்தும் மூர்த்தியை அந்த பொண்ண இப்ப வரை எதுவும் செய்யல ஏன் ?
"ஏன்னா பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா? அவ செஞ்ச தப்புக்கு அவளை தான தண்டிக்க முடியும் ? இவங்க எனக்கு எதுவும் செய்யலையே ... அப்போ ரெண்டும் பச்சை புள்ளைங்க மனசும் வரல அன்று தொட்டிலில் தங்குகொலுசு மி்ன்ன கண்ணை உருட்டிய அந்த பெண் குழந்தையை எதுவுமே செய்ய மனசு வரவில்லை ... வீடே ரத்த காடாக கிடக்க சைக்கிளை விட்டுட்டு பள்ளி சீருடையில் உள்ளே வந்த ஒருவன் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தோளை உலுக்கியபடி சோற்று பானையை உருட்டி சோற்றை எடுத்து கொண்டு வந்து நடு ஹாலில் உட்கார்ந்து பிணங்கள் நடுவே சோத்தை பிசைந்து தின்றவனை தூணுக்கு மறைவில் இருந்து பார்த்த யட்சன் கையில் இருந்த ஆயுதத்தை வீசவா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க... அது வேறு யார் வஞ்சகமூர்த்திதான்!! இழுத்து கொண்டிருந்த தகப்பன் சங்கில் ஏறி மிதித்து
எவ்வளவு நேரமா இழுத்துட்டு கிடக்க? என்று மூச்சை நிறுத்திவிட்டு போனவனை என்ன நினைத்தானோ விட்டுவிட்டு வந்து விட்டான் ...
எல்லாரையும் கொல்லாம விட்டது உங்க தப்பு ...
ப்ச், அவ பெத்த பிள்ளைங்க எப்படின்னு உனக்கு தெரியுமா?
"நான் ஏன் தெரிச்சுக்கணும் வாழ போற அவன் தெரிஞ்சிக்கட்டும், ஏன் அந்த பொண்ணை அவன் கட்டிக்கிட்டா உங்களுக்கு பிடிக்காதா?
"ப்ச் எனக்கு என்ன அந்த பசங்க மேல கோவம் , இவனை நினைச்சாதான்.. ஆனா ஒன்னுடி என் புள்ளை மேல அவனுக கை பட்டுச்சு...
"ரெண்டு வருசம் உமரு வாலையும் கையும் வச்சிட்டு சும்மா இரும் கிழவா.... அடிப்பட்டு மிதிபட்டு தான் சில பக்குவம் கத்துக்க முடியும் ... ரெண்டு வருசத்துல அவன் முழு ஆம்பளையா வந்து நிப்பான், என்ன நம்பினா இதுக்கு ஓகே சொல்லுங்க அவ்வளவு தான்
என்னவோ பண்ணு ... என்று மனம் இல்லை என்றாலும் தேனிசை மீது நம்பிக்கை வைத்து யட்சன் சரி என்க ... மருத்துவமனை விட்டு வந்த ஜீவா இவனை பார்க்க முயற்சி செய்யும் போதெல்லாம் இசை தடுத்து விட ... வேறே வழியே இல்லாது பெட்டி படுக்கையை கட்டி கொண்டு வஞ்சகன் ஊருக்கு போக ஜீவா காரை எடுக்க போக ...
கோடி ரூபாய் கார்ல போய் ட்ரைவர் வேலைக்கு சேர போறியா ?இந்தா ஆயிரம் ரூபாய் இருக்கு உன் செலவுக்கு வச்சிக்க .. இது கூட அவர் தரல, நான் சேர்த்து வச்ச காசு தான் என்று தேனிசை ரூபாயை அவன் கையில் திணித்து விட்டு , கார் சாவியை புடுங்கி கொண்டவள்...
"நேரா போனா ஆட்டோ ஸ்டாண்டு இருக்கும், அங்க போய் பஸ்ஸ்டாப் போகணும்னு கேளு கொண்டு விடுவாங்க இந்தா ரூட் மேப்" என்றவளை முறைத்து கொண்டே ஜீவா போய் ஆட்டோவில் ஏறி அண்ணாந்து பார்க்க... யட்சன் தன் அறை ஜன்னல் வழியாக ஆட்டோவில் ஏறும் ஜீவாவை வெறித்து பார்த்து கொண்டு நின்றான்.. அவன் கண்ணின் பளபளப்பு சூரிய வெளிச்சத்தில் இவனுக்கு தெரியாது இல்லை...
அவருக்காக அவர் ஆசை பட்ட மாதிரி திரும்பி வருவேன்னு சொல்லிடுங்க என்று தேனிசையிடம் கத்தி சொல்லி விட்டு அவன் கையசைக்க தேனிசை வடிந்த கண்ணீரை முந்தானையில் துடைத்து கொண்டு அவனுக்கு கையசைக்க யட்சன் கைகளை இறுக்கி தொடையில் குத்தி கொண்டே போகும் ஆட்டோவை நெஞ்சு துடிக்க பார்த்தான் ...
முள் பாதையில் முட்கள் குத்தியாவது வாழ்க்கை பாதை கற்று கொள்வான் ..
திசை மாறி போனவன் வாழ்க்கை சரியாகுமா? இல்லை திசை மாறி போய் கொண்டிருக்கும் ஒருத்தியின் வாழ்க்கைக்கு துணையாவானா??