குரோத கொள்முதல் அழகே3

Kurotham3

குரோத கொள்முதல் அழகே3

3 குரோத கொள்முதல் அழகே !! 

கல்யாண மண்டபமே வெறிச்சோடி கிடந்தது, கரும்பு தோட்டத்தில் யானை புகுந்துவிட்டு போனால் எப்படி இருக்குமோ.. அப்படி கிடந்தது .. திருமணமே நடக்காத பந்தியில் உட்கார்ந்து சோற்றை போடு கறி குழம்பு கிடையாதா! இந்த இலையையும் தழையையும் எவன் தின்பான் என்று வஞ்சகமூர்த்தியின் ஆட்கள் அங்கே பாத்திரம் பண்டங்களை உடைத்து போட்டுவிட்டுதான் கிளம்பி போனார்கள்... ஆனால் அவன் சொன்னது போல ஒத்த பைசா இல்லாமல் அத்தனைக்கும் கட்டு கட்டாக வஞ்சக மூர்த்தியின் காரியதரிசி மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது..

மணமேடையில் உள்ள மலர்கள் எல்லாம் காய்ந்து பொக்கிஷா கழுத்தில் கிடந்த மாலை அழகு இழந்து அவள் முகம் பொலிவு இல்லாமல், வெளிறிப்போய் அவள் வெள்ளை நிறம் வெளுத்துப் போய் , உதடுகள் காய்ந்து கண்ணீர் கண்ணீர் துளிகள் உப்பாய் மாறி, மரத்தூணின் அருகே அவளும் ஒரு மரத்து போல உட்கார்ந்திருக்க ... அந்த அமைதியை நடந்த காட்சிகளை யார் மாற்ற? என்று தெரியாமல் தன் மகளை பார்த்தபடி நின்றார் பொக்கிஷாவின் தகப்பன் பரமானந்தன்...

சேரில் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தான் வாசு ... வஞ்சகமூர்த்தியின் அத்தனை கட்டப்பஞ்சாயத்து கை கால் எடுக்கும் கிரிமினல் கேஸ் என்று எல்லாவற்றிற்கும் ஆஸ்தான வக்கீல் வாசு.. கை நிறைய பணம், அவன் நடத்தும் வழக்குகளுக்கு பணம் வீடு வாசல் கார் என்று அத்தனையும் வஞ்சகமூர்த்தியால் உண்டான செல்வம் ...அவன் நல்லவன் இல்லை என்று தெரியும் ... ஆனால் இப்படி அடிமடியிலேயே கை வைக்கும் ஒருவன் என்று இதோ சில நொடிகளுக்கு முன்பு தான் அறிந்தான்... கூடா நட்பு கேடாய் முடியும் என்பது இவனுக்கே உண்டாக்க பட்ட பழமொழி போலும்..

இவன் கிரிமினல் லாயர் என்றால் , இந்த கிரிமினலையே உரலில் போட்டு குத்தி எடுக்கும் பொறுக்கி வஞ்சகமூர்த்தி, பாவ புண்ணியம் பார்க்கத் தெரியாத ஒருவன் என்ன செய்வது என்று தெரியாமல் மூளை பிதுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.. 

ஆனால் இதில் பாவப்பட்டது என்னவோ பொக்கிஷாதான்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு பெண் ... ஒரு வருடத்திற்கு முன்பு தாய் இறந்தபோது பாதி உயிராக மாறிப் போனாள்.. கெட்டது நடந்த இடத்தில நல்லது நடக்க வேண்டும் என்று தகப்பன் வரன் தேட ... வாசு எங்கோ பொக்கிஷாவை பார்த்துவிட்டு, எனக்கு உங்க மகளை ரொம்ப பிடிச்சிருக்கு, கட்டித் தர முடியுமா என்று கேட்க ... எல்லாம் பொருந்திப் போக, இதோ திருமணம் வரை வந்துவிட்டது ... ஆகா ஓகோ என்று எந்த ஆசையும் இல்லாதவள்.. வீடு ,கோவில், படிப்பு பூஜை புனஸ்காரம் என்று கூட்டுக் கிளி போல ஒரு வாழ்க்கை வாழ்ந்த அவளுக்கு வந்த வேதனையா இது ?? எச்சில் விழுங்கக் கூட முடியாது, துக்கத்தில் தொண்டை அடைக்க உட்கார்ந்திருந்தாள் ..

அவள் உதட்டில் இன்னும் வஞ்சக மூர்த்தி கொடுத்துவிட்டு போன முத்தத்தின் காரம் இருந்தது அந்த காரத்தோடு காரமாக., அவன் இழுத்து விட்டிருந்த பில்டர் சிகரெட்டின் வாடையும் அவள் உதட்டில் அடிக்க.. எச்சில் விழுங்கவே பயம்.. எங்கே அவனின் வாசமும் தொண்டைக்குள் போய் தன்னை அசுத்தப்படுத்தி விடுமோ என்று காய்ந்த உதட்டோடு எச்சில் கூட விழுங்காமல் அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தாள் பொக்கிஷா......

"தம்பி நீங்க சொன்ன காரணத்துக்காக தான் , உங்க ஊர்ல கல்யாணத்தை நடத்த சம்மதிச்சேன், இப்போ முதலுக்கே மோசம் வந்துடுத்தே, அடுத்து என்ன செய்யணும்னு கூட எனக்கு புடிபடல, ரெண்டு பெண்டுகளை வச்சுண்டு நான் என்ன பண்றது சொல்லுங்கோ... பரந்தாமன் வாசு முன்னே போய் நிற்க மெளனம் கலைந்த வாசு ...

சாரி அங்கிள், இப்படி அவன் கேடுகெட்ட வேலை பண்ணிட்டு போவான்னு நான் நினைச்சு கூட பாக்கல .. நீங்க எதை பார்த்தும் பயப்பட வேண்டாம்... நான் இருக்கேன், நான் பாத்துக்குறேன்... அவன் பெரிய ரவுடியா இருந்தா அவனுக்கு நாம பயப்படனுமா? சட்டமும் , நியாயமும் நம்ம பக்கத்துல இருக்கு ... "

இருந்து என்ன பண்ண தம்பி.. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையே.. அவா வந்து இவ்வளவு பெரிய அக்கிரமத்தை பண்ணிண்டு போயிருக்காள், யாருமே ஒரு வார்த்தை அவாள எதிர்த்து பேசலையே... எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு தம்பி..."

ப்ளீஸ் அங்கிள் நான் இருக்கேன்.. ஒன்னும் ஆகப் விட மாட்டேன் டி ஐ ஜி கிட்ட இத பத்தி பேசுறேன் கண்டிப்பா அவர் நமக்கு சப்போர்ட் பண்ணுவார் என்றவன் பொக்கிஷா அருகே போய் 

பொக்கிஷா என்றதும் திடுக்கிட்டு அவனை எட்டி பார்த்தாள் .... 

இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்க நாளைக்கு எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்., முதல்ல அவனுக்கு ஒரு எண்ட் போட்டுட்டு வர்றேன் , நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சி கல்யாணத்தை வச்சிக்கலாம் .... என்றதும் பொக்கிஷா தகப்பனை பார்க்க , தகப்பன் சரி என்று தலையாட்ட அவளும் சரி என்று தலையாட்ட.... 

ரியலி சாரி ... என்று வாசு கர்ச்சீப் நீட்ட ,எதிரே தெரிந்த கண்ணாடியில் உதட்டு ஓரம் வஞ்சகன் கொடுத்த முத்தத்தில் அவன் பல் பட்டு ஒரு துளி ரத்தம் அரும்பி நின்றது ..தன் புறங்கை கொண்டு அதை அழுத்தி துடைக்க தொண்டை உள்ளே சிகரெட் வாடை போனது போல பிரம்பை உவட்டி கொண்டு வந்தது...  

பயம் பயம் பயம் இந்த இரவு எப்படி கழியுமோ என்று பயத்தில் உறைந்து போய் இருந்தாள்...

அங்கிள் , நான் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் அவனை தூக்கி உள்ள போட்டுட்டாங்க.. சோ இனிமே பிரச்சனை இல்லை காலையில பத்து மணிக்கு ரெடியா இருங்க ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணத்தை பண்ணிடலாம்... வாசு குரல்... 

எல்லாம் சரி தம்பி அவன் வெளியே வந்த பிறகு பிரச்சனை பண்ணினா.."

"அதான் அங்கிள் நானும் யோசிச்சேன், பேசாம ஸ்ரீரங்கம் போயிடலாம்னு, நாளைக்கு நைட்டே எல்லாரும் அங்க கிளம்பிடலாம்" என்று வாசு கூற..அதுவே சரி என்று பட , பரந்தாமனும் நிம்மதியாக பெருமூச்சு விட.. அறை உள்ளே படுக்கை மீது கிடந்து அவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த பொக்கிஷா முகம் மட்டும் தெளியவே இல்லை ... வஞ்சகமூர்த்தி அவளை பார்த்து போன பார்வையும், அவன் சிரிப்பும், அவள் உதட்டில் அவன் தந்து போன முத்தமும், தன்னை அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா? என்ற கேள்வியை தான் கேட்டு கொண்டே கிடந்தது ... எப்படியோ பல யோசனை மத்தியில் பொக்கிஷா கண்ணை அசந்து விட்டாள் ... ஆனால் தூக்கத்தில் கூட சிகரெட் புகை வாடை முகத்தில் வீசுவது போல தோன்றியது.... புரண்டு படுத்தவள் இடையில் வலிய கரத்தின் சூடு , கை நிறைய முடியோடு ஒரு கரம் அவள் துடி இடையை பிடித்திருப்பது போல தோன்றி கண்களை திறந்து பொக்கிஷா பார்க்க பார்த்த விழி பார்த்தப்படி செல்லறித்து போனாள் ... 

என்ன குண்டூஸ் நல்ல தூக்கம் போல "ஒரு கை சிகரெட்டை இழுக்க இன்னொரு கை அவள் இடையில் தாளம் தட்டிட ,இவள் இதயம் தாளம் தப்பி துடித்தது இதுவும் கனவா இல்லை நினைவா? பிரித்து கூட அறிய முடியாத அளவு மூளை பீதியில் உறைந்து போக...

என்ன மாமி கனவா நினைவான்னு யோசிக்கிறியா கிள்ளி பார்த்துட்டா போச்சு "என்று வஞ்சகமூர்த்தி அவள் இடையில் போட்டிருந்த கையால் அவள் இடை அழகில் கிள்ளி எடுக்க வலித்ததே!! 

அப்பா எவ்வளவு நேரமா நீ முழிக்க காத்து இருக்கேன் தெரியுமா குண்டூஸ்.. சும்மா சொல்ல கூடாதுடி உன் முடியில வர்ற வாசமும் உன் உதட்டுல வர்ற துளசி வாசமும் தூக்கிடுச்சு... என்று மல்லாக்க படுத்தவனை விட்டு நகர வேண்டும் என்று கூட தெரியாத அளவு மூளை ஷாக்கில் இருந்தது ...

கேஸ் கொடுத்து தூக்கி உள்ள போட்டா தப்பிச்சிடலாம்னு அந்த வக்கீல் பய சொல்லி தந்தானா? இது எப்படி இருக்கு தெரியுமா ...சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொல்றது போல இருக்கு ஹாஹா" என்று இடிமுழக்கம் போல அவன் சிரிப்பு சத்தம் அந்த அக்கிரகாரத்தையே மிரட்டியது 

அப்பா அப்பா அப்பா என்று தன் தகப்பன் நோக்கி அவள் போக நினைக்க பொக்கிஷா கையை இழுத்து அவளை தன் மீது தூக்கி போட்டவன் அவள் அழகிய கூந்தல் மேகம் உள்ளே மூக்கை நுழைத்து ஆழ மூச்சு இழுத்து 

அட அட செம வாசம் குண்டூஸ் உன் மேல செம கோவம்... ஸ்டேஷன் வேலையை முடிச்சுட்டு நேரா ரோஸ் வீட்டுக்கு போயிட்டேன் ..நாலு ரவுண்ட் உன்ன நினைச்சு தான்டி அவளை ____டேன் குண்டூஸ் குண்டுஸ்னு பண்ணும் போது ,பாரு பாரு சொல்லும் போதே எப்படி முடி எல்லாம் சிலிர்த்து அடங்குதுன்னு... உன் முகம் தான் மனசு முழுக்க உன்னை நினைச்சு பண்ணினதே அப்படி காட்டு சுகமா இருக்கே ..உன்கூட பண்ணினா எப்படி இருக்கும் சொல்லும் போதே இடுப்புல கனம் ஏறுதே குண்டூஸ் என்றவன் கைகள் அவள் அழகை மெலிதாக தாவணி மீது விரசமாக உரச வெடவெடவென பொக்கிஹா உடல் ஆட முகத்தை தூக்கி அவளை பார்த்த வஞ்சகமூர்த்தி... 

என்ன நினைச்சு எவளையோ போட்டதுக்கு என்கிட்டயையே வந்திருக்கலாமேன்னு கேட்கிறியா குண்டூஸ்?? அவள்தான் தொண்டை அடைத்து கிடந்தாளே மாமிச மலை போல அவளை மலைப்பாம்பாக கையால் சுற்றி இருந்தான்.... எவளோடோ சல்லாபித்து வந்த அருவருப்பான உடல் ... ஜவ்வாது மணமும், சிகரெட் வாடையும் சொல்ல முடியாத வேதனை அன்றோ தந்தது ... அய்யோ ஏன் இந்த நிலமை என்று அவள் உயிரும், உடலும் அருவருப்பு தாங்காது தவித்ததை அவன் எப்படி அறிய இயலும் .... 

நான் எந்த விஷயத்துல எப்படியோ படுக்கையில பக்கா ஜெண்டில் மேன் , பொண்ணுங்க சம்மதம் சொல்லாம மேட்டருக்கு போறதே இல்லை ... பெண் பாவம் பொல்லாதது யூ நோ, நீயா வா வந்து எடுத்துக்கன்னு சொல்ற வரை உன்னை நினைச்சு எவளையாவது மேய வேண்டியதுதான்... ஆனா இனி தினம் தினம் என் கற்பனையில உன்கூடத்தான்டி படுக்க போறேன்.... இந்த அழகு மொத்தமும் எனக்கு கிடைக்க போற நாளுக்காக மரணவெயிட்டிங் எப்போ ஓகே சொல்லுவ குண்டூஸ்?? அவள் இடை மீது முகம் புதைத்து கிடந்த வஞ்சகமூர்த்தி மீசையும் அவன் உடல் எங்கும் இருந்த முடியும் பொக்கிஷா மீது புழு போல உரச ....

என்ன விட்டுடுங்கோ" என்று கையெடுத்து கும்பிட... 

பொண்ணுங்க அழவே கூடாது "என்று அவள் கண்ணீரை கட்டை விரல் கொண்டு துடைத்து விட்டவன்...

உனக்கு கார் வாங்கி தரவா ??

ம்ஹூம் 

நகை நட்டு 

ம்ஹூம் 

வீடு பணம் அப்பார்ட்மெண்ட் எதாவது எது வேணும்னாலும் கேளு வாங்கி தர்றேன்... உன் அழகுக்கு என்ன கேட்டாலும் தரலாம் ..சஸ்ட் ரெண்டு மாசம் கண்ணை மூடிட்டு என்கூட படுத்துட்டு போ போதும் .... நீ கேட்டது கேட்காதது எல்லாம் தர்றேன்டி ஓகேவா? அவள் அருகே தலைக்கு கை கொடுத்து படுத்து டீலிங் பேசி கொண்டிருக்க...

நேக்கு எதுவும் வேண்டாம், என்ன விட்டுடுங்கோ... நாங்க கண்காணாத இடத்துக்கு போயிடுறோம்...

ஒன்னு காசை வாங்கிட்டு கூட வா, இல்லை காசு இல்லாம கூட வா ஆனா எனக்கு நீ வேணும் ... அதுவும் உன் சம்மதத்தோட... அடிச்சு கனியை வைக்கிற ரகம் நான் இல்லை ,கனியை வச்சி ரசிக்கிற ஆளு சோ சேதாரம் இல்லாம வாழ்ற வழியை பாரு .... என்றவன் மிரண்டு முழித்த அவள் அழகில் சொக்கிப் போய் உதட்டை அவள் உதட்டு அருகே கொண்டு வர ,அவளோ முகத்தை திருப்ப தாடை எலும்பை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் மெல்ல அவள் உதட்டை கடித்து வைத்துவிட்டு எழும்பியவன் 

நாளைக்கும் வருவேன் குண்டூஸ் நீ ஓகே சொல்ற வரை வந்துட்டே தான் இருப்பேன் ... குட் நைட் என்று பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு வஞ்சகமூர்த்தி வெளியே போக 

அப்பா என்று பொக்கிஷா தகப்பன் நியாபகம் வந்து வெளியே ஓடிவர பொக்கிஷா தகப்பன் கழுத்தில் இருவர் அருவாளை வைத்தபடி அசைய விடாது நிற்க வைத்திருந்தனர்.... அத்தனை பேரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாலும் அக்கிரமக்காரன் ஆடும் தாண்டவத்தில் நிலைகுலைந்து போய் தான் நின்றனர்..

வக்கீல் வாசுவை யாரோ மர்ம நபர்கள் அடித்து போட்டதில் மருத்துமனையில் கோமா நிலையில் கிடப்பதாக தகவல் வர பரந்தாமன் பயந்தே போனார் .. இரவோடு இரவாக மகளை அழைத்து கொண்டு சென்னை ட்ரெயின் ஏறிவிட்டார்... ட்ரெயின் ஊரை கடந்த பின்புதான் மூச்சே வந்தது ... 

அவ்வளவு எளிதாக வஞ்சக மூர்த்தியிடம் இருந்து தப்பித்து விட முடியுமா ?? 

ஒரு துளி குருதி கொண்டு இலக்கை துல்லியமாக அளவிடுதலில் சுறாவும் இவனும் ஒன்றே !!