குரோத கொள்முதல் அழகே 19

Kurotham19

குரோத கொள்முதல் அழகே 19

19 குரோத கொள்முதல் அழகே !!

கண்மூடி திறக்கும் முன் பொக்கிஷா வயிற்றில் கத்தி பாய்ந்து விட்டது வஞ்சகமூர்த்தி தன் முதுகின் பின்னால் அவளை பாதுகாத்து நிறுத்தியபடியே தான் சண்டையிட்டு கொண்டிருந்தான் ஜீவா அழைக்கவும் இவள் இவனா அவனா என்று தடுமாறிய வேளை  அவன் முதுகில் இருந்து நகர்ந்து விட இவனை நோக்கி வந்த கத்தி பின் இருந்து வெளியே வந்த அவள் மீது சொருகி இருந்தது....

அம்மா ஊஊஊஊஊ என்று வலியில் வயிற்றை பிடித்த அவளை சட்டென ஒரு கையால் தாங்கி பிடித்த வஞ்சமூர்ததி... 

ஏய்இஇஇஇ ப்ச்  அவளை தோளில் தூக்கி கொண்டவன்  ... அவளை குத்தியவனை கண்மண் தெரியாது கழுத்தில் சதக் சதக் என்று கொன்று போட்டவன் .. 

குண்டூஸ் குண்டூஸ் என்று வலிக்க அவள் முதுகில் தட்டினான் 

ம்ம் என்று முனங்க 

" ஷோ முடிஞ்ச பிறகும் வெறும் ஸ்கீரினையே பார்த்துட்டு நிக்காத வந்து  காரை எடு "கார் சாவியை தூக்கி ஜீவா அருகே போட அவனோ அம்மாடி  அடிதடி என்று பயத்தில் உறைந்து போய் நிற்க 

டேய் வண்டியை எடுத்து தொலைடா" என்று வஞ்சமூர்ததி கத்தவும் ஜீவா வந்து காரை எடுக்க ரேசர் அன்றோ அவன் கையில் கார் கீர் கீர் என்று பறக்க பின் இருக்கையில் தன் தொடை மீது பொக்கிஷாவை கிடத்தி போட்டிருந்தவன்...  தன் சட்டையை விறுவிறுவென கழட்டி வலியில் அனத்திய பொக்கிஷா வயிற்றை சப்பென்று கட்டிட அவள் இன்னும் வலி எடுத்து துடித்து 

அம்மா இஇஇஇ என்று அழ 

அவன்தான் குத்த வர்றான்னு தெரியுதுல்லடி பப்பரப்பன்னு போய் நிக்கிற,  சின்ன காயம் தான் பயப்படாத  சாகுறதுக்கு முன்ன ஆறிடும்... போய் சேரணும்னு விதி இருந்தா போய் தான் ஆகணும்  நான்  எல்லாம்  எத்தனை குத்து வாங்கி இருக்கேன் ... எனக்குன்னு வந்து வாச்சி இருக்கியே எத்தையோ வப்பாட்டி வச்சிருந்தேன்... கருமம் உன் ஒருத்தியை என்னைக்கு வப்பாட்டி லிஸ்ட்ல சேர்த்தேனோ ....  உன் பின்னாடி அலையவே எனக்கு நேரம் சரியா இருக்கு ,   வரவர உன்னை பார்த்தா ஆசை போய் எரிச்சல் தான் வருது.... ஹாஸ்பிட்டல் போய் சேரும் வரை திட்டிக்கொண்டே வந்தான் .. அவள் பின்னங்கழுத்தை தூக்கி பிடித்து வைத்திருந்தான்... அவள் குருதி அவன் ஆடை எங்கும் வடிந்து கிடந்தது.. 

"செத்தா சாவுன்னு போட்டுட்டு  போயிருப்பேன்  சவத்தை   கூட படுத்த பாவத்துக்கு பாடு பார்க்கிறேன் "என்று குனிந்து அவளை தூக்கி கொண்டவன் சட்டையை வலியில் பொக்கிஷா பிடித்து...

எ....ன்...ன காப்பாத்தாதீங்கோ ..... விட்டிடுங்கோ...... நான் வா...ழ  ஆசை.....ப்....படல ஏஏஏஏஏஏஏஏஏ 

என்று வலியில் துடித்தவளுக்கு பதில் சொல்லாது வஞ்சமூர்ததி கால்கள் விறுவிறுவென ஐசியூ நோக்கி நடந்தது.. 

அண்ணா போலீஸ் கேஸ் அது இதுன்னு அட்மிட் பண்ண மாட்டைக்கிறாங்க என்று ஜீவா எதிரே ஓடி வர....

"எந்த கூந்தலாண்டி வர மாட்டேன்னு சொன்னது வர சொல்லு நான் பேசிக்கிறேன்.... ஹாஸ்பிட்டல் இருக்கிறி இடத்தை டூலெட் போட்டு வாடகைக்கு விட்டிருவேன் டாக்ட்டர் க்கு மாலை போட்டு பிறப்பு இறப்பு  போட்டிருவேன்னு சொல்லு வருவான் என்றவன் பேசுவதை கேட்டு கொண்டு வந்த டாக்டர் இவன்  அடாவடியில்... 

தம்பி யாருன்னு தெரியாம பேசிட்டேன் வாங்க ட்ரெண்ட்மெண்ட் பார்க்கிறேன் என்று அவர் முன்னே நிக்க 

அண்ணன் நான் வேணும்னா தூக்கிக்கிறேன் கொடுங்க என்று ஜீவா பொக்கிஷாவை தூக்கிட கையை விரிக்க  அவன் கையை விட்டு கீழே இறக்கினான் இல்லை .. அவளை கைமாத்தவும் இல்லை .... 

"சின்ன காயம் தான் டாக்டரே பெருசா எல்லாம் படல அவ கொஞ்சம் நோஞ்சான் உடம்பு ,  அதான் இதுக்கே ஊழ் ஊழ்னு முனங்கிட்டு இருக்கா...  இவளை எல்லாம் என் வப்பாட்டின்னு சொல்லவே வெட்கமா இருக்கு ... இத்தனை நாள் என் கூட படுத்து இருக்கியே இப்படியா ஒத்த குத்துக்கு வலியில துடிப்ப வஞ்சகமூர்த்தி வப்பாட்டியா கெத்தா கழுத்தை அறுத்து போடணும்டி , எவன் வந்தாலும் நெஞ்சு மேல மிதிக்கணும்டி... 

சார் நீங்க வெளியே போனா ட்ரெண்ட் பார்க்க வசதியா இருக்கும் தொண தொண என்று அவளிடம் கரிச்சான் வண்டு போல பேசி கொண்டே நின்றான்....  அவளுக்கு வலியை விட இந்த நாரப்பய வாயை மூடாது பொல பொல என்று பேசுவது தான் சாவே மேல்டாசாமி என்று தோன்றி இருக்கும் ... 

மருத்துவமனை கட்டிலில்  பன்னீர் புஷ்பம் ரெண்டாக பிய்ந்தது  போல பொக்கிஷா கிடந்தாள்,   சேலை மறைத்த இடையில் குருதி இன்னும் சொட்டு சொட்டாக வெள்ளை நிற மருத்துவ கட்டுக்கு மேலே  தெரிந்து கொண்டிருந்தது  ... அவள் எதிரே சேர் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மருத்துவர் அவளுக்கு கை நடுங்க பார்க்கும் மருத்துவத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் வஞ்சக மூர்த்தி....

என்ன ஆச்சு சார் எப்படி இவ்வளவு பெரிய காயம் .... மருத்துவர் வாஞ்சியை பார்க்க 

"ப்ச்,  என்ன போட ஸ்கெட்ச் போட்டு  வந்தானுக... சண்டையில  லைட்டா இவ மேல கோடு விழுந்திடுச்சு  .... 

"லைட்டாவா? சார் இடுப்புல  மூணு இஞ்சுக்கு கத்தி இறங்கி இருக்கு ...  எப்படியோ பொண்ணு  தப்பிச்சு இருக்கு 

தப்பிச்சால்ல அவ்வளவுதான்...  எனக்கு வப்பாட்டியா இருந்தா, இதெல்லாம் சகஜம் ஆமா காயம் எப்போ ஆறும் என்றான் வஞ்சகமூர்த்தி தன்  கத்தியில் இருந்த இரத்த கறையை அருகே இருந்த பஞ்சில் துடைத்து கொண்டு 

எப்படியும் ஒரு மாசம் ஆகும் சார் 

ஏதே ஒரு மாசமா?? சலித்த பார்வை வந்தது 

காயம் பெருசு சார்  ஆற நாள் ஆகும்  "

"சரியா போச்சு,  அப்போ அதுவரை நான் என்ன பண்றது  ஏற்கனவே பத்து நாளா அதுஇதுன்னு பக்கத்துல வரல இனி இதையே காரணம் காட்டி பல மாசம் ஓட்டிடுவாளே மாமி "என்றவனை டாக்ட்டர் புரியாது பார்க்க 

அவளை  மிரட்டி  என் கூட வச்சிருக்கிறதே சுகத்துக்கும்,  படுக்கைக்கும் தான் ., ஒரு மாசம் ஆகும்னா அதுவரை  என்ன  செய்ய ,  ப்ச் இது செட் ஆகாது , பத்து நாள்ல அவளை சுகபடுத்து,  காயத்தை குணமாக்கு" என்ற சதை வெறி பிடித்த மிருகத்தை மருத்துவரே வெறுத்து போய் பார்க்க ... அப்போதுதான் கண்ணை திறந்த பொக்கிஷா அவன் பேசுவதை எப்போதும் போல அமைதியாக கேட்டுகொண்டே மீண்டும் கண்களை சிக்கென மூடிக்கொண்டாள் ..

"ஆழமான காயம் சார், மீறி எதாவது ஆனா செப்ட்டிக் ஆகிடும் 

"போச்சா,  எனக்கு வாரத்துல  மூணு நாளாவது மூக்கு முட்ட இவ  வேணும் டாக்ட்டரே  .... ஒரு வெட்டுக்கே  சீக்கு கோழியா விழுந்துட்டா.... என்றவன் யோசனையாக... தன் அல்லக்கைக்கு போனை  லவுட் ஸ்பீக்கரில் போட்டு 

மாமி  இப்போதைக்கு தேற மாட்டா போல அந்த ரோஜா ராத்திரி ப்ரீயா பாரு  , 

"அண்ணன் நீங்க மாசக்கணக்கா  மாமி வீடே கதின்னு கிடக்கவும்,   ரோஜா எம்பிக்கு சின்ன வீடா தவ்விடுச்சு 

"ப்ச் .. அந்த மஞ்சுளா 

அது வேணும்னா இருக்கான்னு கேட்கிறேன் 

"ம்ம் கேட்டு வை நைட்  போகணும்,  உடம்பெல்லாம் குறுகுறுன்னு வருது..  இவ எப்போ சரியாகி,  இவ கூட போக ஒரு மாசமும் மத்தவளுகளை ரெடி பண்ணி வை ..." 

சரி அண்ணன் ... மருத்துவரும் அவன் பேச்சை கேட்டபடி தான் நின்றார்... 

"யோவ் டாக்டரே  மாமி  முழிச்சா காப்பி தண்ணீ கொடுத்து தேத்தி வை .. செத்தா தூக்கி போடு இந்தா பணம் "என்று வஞ்சக மூர்த்தி கண் மூடி கிடந்த அவள் உடலை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்

ம்ம் சும்மா சொல்ல கூடாது,  மேலிருந்து கீழ் வரை எடுக்க எடுக்க குறையாத சுகம் தருவா,  இவளை போல இன்னொருத்தி பிறந்து தான்  வரணும் ....  எத்தனை தடவை அனுபவிச்சாலும் தீராத போதை என்று சிலிர்த்து தோளை உலுக்கியவன்... 

ஒரு மாசம் உனக்கு ரெஸ்ட் வப்பாட்டி,  அதுக்கு பிறகு  இருக்குடி குண்டூஸ்,  மொத்தமா வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன் என்று அவள் கொழுக் மொழுக் கன்னத்தை  கிள்ளி வாயில் போட்டு விட்டு வஞ்சக மூர்த்தி அறையை விட்டு வெளியேற..... பொக்கிஷா கண்களை திறந்து மருத்துவரை கண் கலங்க பார்க்க ....

குழந்தை _______ ஆகிடுச்சும்மா  .... உன்ன மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது ...   பொக்கிஷா அமைதியாக யாரிடமுமோ போனில் சிரித்து பேசி கொண்டு போகும் வஞ்சக மூர்த்தி முதுகை பார்க்க 

"அவாளுக்கு  தெரியுமா டாக்டர் "

சொல்லலை அப்படிங்கிறது விட அதை பத்தி கேட்க அவருக்கு டைம் இல்லைம்மா ....  

கவலை படாதீங்கம்மா" ...

"ம்ஹூம் சந்தோசமா இருக்கேன் ,  இப்படி ஒருத்தனோட  குழந்தை மட்டும் எப்படி இருந்துட போகுது ..  என்றவள் மீண்டும் கண்களை மூடி கொண்டாள் ....   

அவன் ஆசைக்கு முதல் பலி அவள் 

ரெண்டாம் பலி உலகே பார்க்காத குழந்தை 

இன்னும் எத்தனை பலி கொடுக்க போகிறான்!! 

குரோதங்கள் எல்லாம் ஒரே நாளில் உண்டாவது இல்லை சிறுக சிறுக சேர்ந்தவையே ... பூவுக்கு வன்முறை கற்று கொடுத்தது அவன் தகுதியில்லாத வார்த்தைகள்!!