குரோதம்14

Kurotham14

குரோதம்14

14 குரோத கொள்முதல் அழகே !! 

இரவோடு இரவாக அந்த ஊரின் எல்லை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான்  ஜீவா .. இனி ஒரு நிமிடம் கூட  இந்த ஊரில் இருக்க கூடாது யாருக்கும் தெரியாமல் ஓடிவிட வேண்டும் என்று ஊர் எல்லையில் போய் பேருந்திற்காக காத்து நிற்க...  அவன் முன்னால் வந்து கார் பிரேக் போட்டு நின்றது ஜீவா சற்று பயந்து போய் மரத்திற்கு பின்னால் மறைந்து நின்று கொள்ள ....

எவ்வளவு நேரமாக தான் பிஷ் அடிப்ப,  சீக்கிரம் வெளியே வா என்ற பாரிஜாதம் குரலில் மெல்ல தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தான்... இவள் 

அய்யய்யோ பொம்பள காட்டேரி ... சில நாளிலேயே இவர்கள் செய்யும் அராஜகம் எல்லாம் பார்த்து இப்படி எல்லாம் காட்டுமிராண்டி மனிதர்கள் உண்டா என்று மிரண்டே விட்டான் விட்டிடுங்கடா ஊருக்கு நடந்தே போயிடுறேன் என்ற அளவு பயத்தில் இருந்தான் ... 

"இந்த ராத்திரில எங்க போற ? அவன் இருக்கும் வீடும் இவள் இருக்கும் வீடும் ஒரே காம்பவுண்ட் தான் அடிக்கடி பார்த்து கொண்டாலும் இவன் ஒதுங்கி போய்விடுவான்..  

"ஊரை விட்டு ஓடித்தான் போற...

"ஹான் அவன் அதிர 

"தெரியுது தெயியுது உன் முகரையிலதான் எழுதி ஒட்டி இருக்கே" அவன் தன் முகத்தை தடவி பார்க்க 

"தேறாத பயலா இருப்பான் போல இருக்கே.  இந்த அம்மாஞ்சியை நம்ம வழிக்கு கொண்டு வந்து நானும் ரெண்டு மூணு பிள்ளையை பெத்து போடலாம்னு பார்த்தா இவன் முழியே  தினுசா இருக்கே... ஆனா என்ன செய்ய ? இவன்தான்னு முதல் முதல்ல மண்டையில ஏழுதிட்டேன்,  இனி அழிக்கிறதா இல்லை ஒன்னு அவன் பிள்ளையை கொடுக்கணும் இல்லை நான் பிள்ளையை கொடுக்கணும் ரெண்டுல ஒன்னு நடந்தே தீரணும் என்று நாடியை தன் நீள ஜடை வைத்து சொரிந்து கொண்ட பாரிஜாதம்.. 

"இப்போதைக்கு பஸ் இல்ல .. காலையில அஞ்சு மணிக்கு தான் முதல் பஸ் ... அதுவரைக்கும் இங்கேயா இருக்க போற ... அப்படியே இருந்தாலும் அந்த தடிப்பய  உன்னை கண்டுபிசுசு   தூக்கிட்டு போய் மீன்தலைய பிச்சு போடுற மாதிரி பிச்சு போட்டுருவான்.... 

"எதுக்கு நான் என்ன பண்ணினேன் 

"என்ன பண்ணுனியா ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன் எவனையோ போட்டு தள்ளனதை  போலீஸ் விசாரிச்சு வந்ததுக்கு வஞ்சக மூர்த்திதான் அவனை கொன்னதுன்னு  போட்டுக்கொடுத்தியாமே 

"அது,   கேட்டாரு பயத்துல  வாய் தவறி சொல்லிட்டேன்ங்க..  என்னையும் தூக்கி உள்ள போட்டுடுவாங்களோ ...

உள்ள போட்டா பரவாயில்லையே, போட்டு கொடுத்த ஆசாமி நீதான்னு தெரிஞ்சது  உன்னையே போட்டுருவான்..

அய்யய்யோ!! 

"அவன் ஏன் எதுக்குன்னு கேட்காம உனக்கு வேலை கொடுத்து கை நிறைய காசும் அப்பப்ப தரும்போதே யோசிச்சு இருக்கணும் ...ஏதோ வில்லங்கம் இருக்கேன்னு ..குவாட்டர் கிடைச்சதும்  மகாபிரபு கோஷம் போட்டல்ல..  இனி இந்த ஊரை விட்டு நீ போகணும்னு நினைச்சாலே , உன் பாடி தாண்டி வெளியே போகும்' என்று பாரிஜாதம் சிரிக்க ஏற்கனவே பயத்தில் நின்றவன் இன்னும் பீதியாகி அவளைப் பார்த்தான் .. ஜீவா , ரெண்டு நாளைக்கு முன்னே  தேனிசைக்கு போன் போட்டு நான் ஊருக்கு வருகிறேன் என்று சொல்ல...

" அவ்வளவுதானா உன்  வீர சாகசம் எல்லாம்..   பெரிய சபதம் போட்டுட்டு போன,  போன ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியல போல என்ற அவள் நக்கலாக சிரிக்க  போனை வைத்து விட்டான்... 

அதே நேரம் போலீஸ் வந்து விசாரிக்கவும் அவன் வாய் சும்மா இல்லாமல் போட்டு கொடுத்து விட இப்போது போட்டுக் கொடுத்தவன் யார் என்று வஞ்சகமூர்த்தியின் ஆட்கள் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்க, ஜீவா அவர்கள் கூடவே இருந்தாலும்  உயிர் பயத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான்

மூன்று வேளை சாப்பிடுவது போல கொலை அடிதடி கொள்ளை கந்து வட்டி என்று பாவத்தின் மீது பாவத்தை ஒவ்வொரு நாளும் அசால்டாக செய்யும் இவர்கள் கூட்டணியை கண்டு ஈரக்குலை நடுங்கித்தான் போனது..  எவ்வளவு அழகான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் மாட்ட கூடாத இடத்தில் மாட்டிக் கொண்டு பேய்முழி முழித்தான்... 

"நீதான் போட்டுக் கொடுத்த ஆசாமின்னு எனக்கு மட்டும்தான் தெரியும் , ஒழுங்கா என்கூட வந்தா அவங்க காதுல இந்த விஷயம் போய் சேராத மாதிரி  பாத்துக்குவேன் இல்ல ஊருக்கு போயே தீருவேன்னு சின்ன பிள்ளை மாதிரி அடம்பிடிச்சா,  நீ முன்னாடியே போ அவன பின்னாடியே அனுப்பிவிட்டு உன்னை தூக்கிட்டு வர வச்சிடுவேன்....

"நான் ஏதுக்குங்க உங்க கூட வரணும்... அவங்க கிட்ட இருந்து என்ன ஏன் நீங்க காப்பாத்தணும்?  புரியலையே 

"ப்ச் அவனை எனக்கு பிடிக்காது  சோ ஒரு சமூக சேவை , அதோட உன்ன வச்சி எண்டர்டெய்ன் பண்ணலாம்ல.... அதான் வர சொல்றேன்  வா வா என்று அவன் காலரை இழுத்து கார் உள்ளே போட்டவள் ... 

உண்மையாவே என்ன சொல்லி கொடுக்க மாட்டீங்கதான ?

அது உன் நடக்கையில இருக்கு ஆமா, என்ன பார்த்தா கிழவி போல இருக்கா ? 

ம்ஹூம் 

பின்ன எதுக்கு ங்க அதை கட் பண்ணிட்டு வேற எதாவது பேர் சொல்லி கூப்பிடு.. 

வேறன்னா 

யோசி மண்டைக்குள்ள இருக்கிறதை சும்மாவே வச்சிருப்ப போல இருக்கு

நாளைக்கு யோசிச்சு சொல்லவா  

சுத்தம் ..  சாப்பிட்டியா ? 

ம்ஹூம் மூணு நாளா  ஒழுங்கா சாப்பிடவே இல்லை..... பயத்திலேயே சுத்திட்டு இருக்கேன் என்று  ஜீவா வயிற்றை தடவினான் ..

இந்தா சாப்பிட்டு போய் தூங்கு ... என்று தான் கொண்டு வந்த  கேரியரை அவன் புறம் நீட்டியவள் சாப்பாட்டை அவன் தயக்கமா பார்க்க 

எனக்கு பாதகம் வராத வரை நான் நல்லவ தான் ... என் மனசு கோணாம நடந்துக்கிற வரை உனக்கு நான் ரொம்ப நல்லவ தான் .... ம்ம் போ  தூங்கு என்று அவனை இறக்கி விட்டவள்  போகும் ஜீவாவை கன்னத்தில் கை வைத்து ரசித்தவள் .... 

ஜோடிபொருத்தம் நல்லாதான் இருக்கும் ....  என்ன பெட்டார்மாஸ்க லைட்டா இருக்கான் ஊதி ஊதி எரிய வச்சிடலாம், கனவில்  அவன் வருவான் என்று கனவை கூட  தன் தூக்கத்தில் அனுமதித்தாள்... 

அவள் நல்லவள் தான்,    அவளை உதாசீனம் செய்யாதவரை அவள் மிகவும் நல்லவள் ... அவள் காதல் பரிகாசம் செய்யப்படாத வரை அவள் அழகான காதலி தான்... அவள் புறக்கணிக்கப் படாதவரை அவள் அன்பானவள்தான்..  அழகிய காதலி தான் அவள் காதலியாக இருப்பதும் அரக்கியாக மாறுவதும் ஜீவா கையில் உள்ளது ,., 

பொக்கிஷா அவனால்   கசங்கிய படுக்கை விரிப்பை தூக்கி வீசினாள் ... ஆனால் அவனால் கசங்கிய தன் வாழ்க்கையை என்ன செய்ய .. வெற்று தரையில் அப்படியே கிடந்தாள் ... என்ன முயன்றும் அவன் விட்டுவிட்டு போன இரவின் பயங்கர எச்ச நினைவுகளை விரட்டி அடிக்க முடியவில்லை ,..   இவள் இப்படி இருக்க வஞ்சமூர்ததி அவள் நியாபகம் இல்லாது ஜாலியாக சுற்றி கொண்டிருந்தான்

காதலால் கூடல் நடந்து இருந்தால்  அவள் நியாபகத்தில் சுத்தி வரலாம் , இவன் காமத்தில் கரை கண்டவன் , இரவோடு நிலவும் போனது,  அவள் நினைவும் போனது ... எப்போதும்  போல பரபரப்பாக அவன் வேலைகளை கவனித்தான்...

என்ன அண்ணன் ராத்திரி மாமி வீட்டுல  செம  விருந்து போல கழுத்துல எல்லாம் நகத்தடமா இருக்கு என்று ஒருவன் வேடிக்கையாக கேட்ட.. வஞ்சமூர்ததி சட்டென கார் கண்ணாடியில் நெஞ்சு முடி நடுவே கிடந்த புதுக்காயம் பார்த்தான் .... 

"ஆமாடா ஆளு புதுசுல்ல  கொஞ்சம்  பதம் தெரில.. போக போக சரியாகிடுவா.. என்றவனுக்கு இப்போதுதான் அங்காங்கே அவள் அடித்த கடித்த கீறிய இடம் காந்தியது போல இருந்தது 

"குண்டூஸ் இதுதான் சமயம்னு என்னா கடி கடிக்கிறா.. சும்மா சொல்ல கூடாது நான் எதிர்பார்த்தது விட  இன்பத்துபால் தான் .... என்று  அப்போது தான்  அவளை நினைத்தான்..... கூடவே உடல் தேவையும் வர .. 

உடம்பு குறுகுறுக்கு வண்டியை மாமி வீட்டுக்கு விடு... "

"அண்ணன் பக்கத்துல தான் அல்போன்ஸ் வீடு இருக்கு நீங்க இந்த பக்கம் வந்தா வர சொன்னா வண்டியை விடவா?  

"ம்ம் அப்படிங்கிற,  சரி அவளை பார்த்து ரொம்ப நாள் ஆகி போச்சு ஒரு எட்டு பார்த்துட்டு போவோம்...

சரி அண்ணன்  அந்த  இரவு அவன் வண்டி வேறு ஒரு பொண்ணை தேடி போக ... 

இதே போல குண்டுஸூம் என்ன வா மூர்த்தின்னு கூப்பிட்டா எப்படி இருக்கும் ? எல்லாரும் என் வரவுக்காக எப்படி காத்து இருக்காளுக,  அவ இப்ப என்ன நெனைப்பா இருப்பா?  எப்பா போய் சேர்ந்தான் சனியன்னு தான நிம்மதியா இருப்பா , இருக்க கூடாதே... அவளை நிம்மதியா இருக்க விட கூடாதுல்ல அந்த மல்கோவா  கன்னம் சிவந்து உதடு  நடுங்க கண் கலங்க அவ பார்க்கிற அந்த பார்வைக்கு பரம போதை வருமே .... இவளுக செயற்கை பார்வைக்கும் ,அவ கண்ணீர் பார்வைக்கும் ஆயிரம் வித்யாசம் உண்டே!! அந்த பார்வையே ஒரு சுத்து ஆசையை பெருக்க வைக்குமே....  கண் முன்னே அவள் அழுத விழியும், சிவந்த முகமும் மீண்டும் மீண்டும் வந்து இரவில் போட்ட ஆட்டத்தை அழகாக நியாபகத்தில் கொண்டு வர நெட்டி முறித்தான்,, 

அண்ணன் அல்போன்சா வீடு வந்துடுச்சு 

ப்ச் இவ கிடக்கா, நீ மாமி வீட்டுக்கே வண்டியை விடு என்றவன் புது விருப்பம் புது வரவாகி போனது.... 

போதும் ஒரு நாள் வதையோடு என் வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்து விடேன் என்று பொக்கிஷா கடவுளிடம் கெஞ்சாத நொடி  இல்லை ... மணி இரவு ஒன்றாக அப்பாடா இனி வர மாட்டான் என்று நிம்மதி படத்தான் செய்தாள்.. அவள வீட்டு வாசலில் வந்து கார் நின்றது 

அய்யோஓஓஓஓஓஓஓஓ அலறியது உள்ளம் ... ஜன்னல் வழியாக பொக்கிஷா மெல்ல பார்க்க வஞ்சமூர்ததி வந்து இறங்கினான் கூடவே பத்து பேர் கும்பலும் நின்றது ..  

எனக்கு ஸ்கெட்ச் போடுறதா கேள்வி பட்டேன் வெளியே காவல் இருங்க  என்று குவாட்டர் பாட்டில்களை அவர்களுக்கு கொடுத்து விட்டு இவனும் ஒன்றை தூக்கி கொண்டு  கதவை திறந்து கொண்டு திறந்து வீட்டில் நுழையும் ஐந்து அறிவு ஜீவியாகவே செயல்பட்டான்.. 

ஒரு கையில் கையில் மல்லிகை மலர் , இன்னொரு கையில் பாட்டிலோடு வந்து நின்றவன்...

அல்போன்சா வீட்டுக்கு போனேன் என் காலும் வாலும் உன்ன தேடி வர வச்சிட்டு ஓடியே வந்துட்டேன் நான் வர கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டுனியாமே.. 

ம்ஹூம் 

அட சும்மா சொல்லு கடவுள்தான் என்கிட்ட போட்டு விட்டுட்டான் மாமிகூட மல்லு கட்டாம இங்க என்ன பண்றன்னு இங்க விரட்டி விட்டுட்டான்,  தொட்டு குத்தம் ஆகிட கூடாதுல்ல அதான் வந்துட்டேன் ... சரக்கு மிக்ஸ் பண்ணி கொடு வா என்று அவளை அலேக்காக தூக்கி கொண்டு போய் மடியில் உட்கார வைத்து 

சரக்கு அடிக்குறியா என்று உதட்டில் வைக்க 

ம்ஹூம் அவள் அலற..

ஒரு நல்ல பழக்கம் இல்ல என்ன பொண்ணு  நீ என்று ஒரு மடக்கு சரக்கு அதற்கு தொட்டு கொள்ள அவள் அழகு என்று  விருப்பம் போல அவளிடம் ஆடி தீர்த்தான்...அவன் காம போதைக்கு அவள் மீண்டும் மீண்டும் பலி ஆகினாள் .... நடு இரவு டமடம என்று கதவு உடைபட நல்ல தூக்கத்தில் ,  அவன் கை வளைவில் இருந்த  பொக்கிஷா நகர போக ,  சட்டென அவள் கையை பிடித்து இழுத்தவன்.. கண்களை சுருக்கி கதவு தட்டும் ஓசையை கூர்ந்து கவனித்து விட்டு ,. 

நம்ம பயலுக போல தெரில , நான் போய் பார்க்கிறேன்  என்றவன் கத்தி துப்பாக்கி என்று ஓரமாக வைத்ததை  எடுத்து கொண்டு வாசல் நோக்கி போக ...   இவளும் பின்னே போக.... அவள் வீட்டு  வாசலில் போலீஸ் சுற்றி வளைத்து நின்றது ... 

ப்ச் நீங்கதானா?    என்று சலித்தான்..

அண்ணன் நாங்க எவ்வளவோ சொன்னோம்,  அண்ணன் உள்ள வேலையா இருக்கும்னு சொன்னது கேட்காம  தட்டிட்டாங்க என்று அவன் அடி ஆட்கள் கூறவும் 

என்ன விஷயம் ? என்றான் மீசையை முறுக்கி வானம் நோக்கி விட்டபடி 

மார்கெட் மணியை ரெண்டு நாளைக்கு முன்ன கொன்னு பாலத்துல போட்டிருந்த கேஸ்ல எவிடென்ஸ் கிடைச்சிருக்கு "

அப்படி என்ன பொல்லாத எவிடென்ல்??? என்றதும் குட்டி செயினை தூக்கி காட்ட அது பொக்கிஷா செயின் அன்று அவள் வீட்டுக்கு வந்த வேளை அதை வைத்து இவன் தான் விளையாடிய நியாபகம் அது எப்பபடியோ செத்தவன்  சட்டையில் மாட்டி இருக்கும் போல ... 

அதான் விசாரிக்க  அந்த பொண்ணை என்று பொக்கிஷாவை பார்த்தபடி போபோலீசார் பேச்சை  இழுக்க, 

"உனக்கு தேவை கொலையாளிதான ... ரெண்டு நாள்ல யாராவது சரண் அடைய சொல்றேன்...அவன் பின்னே நின்ற பொக்கிஷா பயந்து போய் கதவின் பின்னே ஒண்ட...  வஞ்சகன் அவளை திரும்பி பார்த்தபடி ..

"அவளுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை போட்டது நான்தான்னு உங்களுக்கு தெரியும் .. இது என்ன புது பழக்கம் ... எப்பவும் போல எனக்கு பதிலா ஒருத்தர் வந்து சரண் அடைவான் .. போகலாம்"

"இல்ல மூர்த்தி  டிஐஜி புதுசு ....  அதான் மழுப்ப வழி இல்லை.... ரெண்டு நாள் விசாரணை கைதியா  நீ  வந்தா போதும் அப்பறம் நீ சொல்ற படி பண்ணிக்கலாம்.. இல்லை இந்த பெண்ணை   விசாரிக்க  அழைச்சிட்டு போனாலும் உனக்கு பிரச்சனை வராது ... அப்ட்ரால்  வப்பாட்டி தான ஒருத்தி போனா என்ன ?  

பொக்கிஷாவுக்கு இது என்னடா மலைப்பாம்பு போய் டைனோசர் வந்தது போல , ஷிப்ட் பிரகாரம் என் வாழ்க்கையில பிரச்சனை வருது என்று பயம் வராது இல்லை...  ஒருத்தன் ஆடிய ஆட்டத்துக்கே இன்னும் விடை  இல்லை  அடுத்ததா?? மிரண்டாள்... 

அவளை அழைச்சிட்டு போயிட்டு ரெண்டு நாள்ல கொண்டு விடுறேன் மூர்த்தி என்று  போலீஸ் பொக்கிஷா நோக்கி எட்டு வைக்க  , வஞ்சமூர்ததி கைகள் குறுக்கே நீட்டி  அவர்களை தடுத்து இருக்க ... 

மூர்த்தி...

"குண்டுஸ் உள்ளே போய் என் சட்டையை எடுத்துட்டு வா ....   அவள் அங்கேயே நிற்க , அவன் திரும்பி பார்த்த பார்வையில் பொக்கிஷா குடுகுடுவென உள்ளே ஓடி போய் அவன் சட்டையை தேடி கொண்டு நின்றவள் காதுகளில்  அவன் பேச்சு கேட்கத்தான் செய்தது...

அண்ணன்  இதுக்காக நீங்க உள்ள போகணுமா ரெண்டு நாள் அந்த பொண்ணு உள்ள கிடக்கட்டும்...  இவ என்ன பெரிய விஷேசம்னு அவளுக்காக நீங்க உள்ள போறீங்க.... 

"விடுறா விடுறா என்ன நம்பி கூட படுத்தவ., அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு ... அதோட என் ஆசை தணியும் முன்ன அவளுக்கு ஏதாவது ஆகி போனா  நட்டம் எனக்கு தான..  வப்பாட்டிக்காக ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தானானாம்னு ஊர் உலகம் என்ன  புகழட்டும் ..  என்றவன் நார வாயை மூடினாவே நாலு மார்க்காவது வாங்குவான் .. 

"அதுவரை மாமியை நாங்க பாத்துகிறோம் அண்ணன் என்றவர்களை மேலும் கீழும் பார்த்த வஞ்சகமூர்த்தி... கூட்டம் நடுவே நழுவிய ஜீவாவை கையை நீட்டி அழைத்து 

"மாமி உன் பொறுப்பு ... பார்த்துக்க 

"ம்ம் என்று  ஜீவா தலையாட்டினான்,

சட்டையை நீட்டிய பொக்கிஷா கையில் கத்தியை திணித்தவன்.. 

வீட்டுக்குள்ள எவனாவது நுழைஞ்சா ,  ஓங்கி நடு தொண்டை குழியில குத்து  மூச்சு நின்னுடும்  கத்தியை இப்படி பிடிக்கணும் புரியுதா என்று கத்தியை பிடிக்க பழக்கி கொடுத்தவன் ,அவள் காது பக்கம் குனிந்து 

சந்தோஷப்படாத திருப்பி வருவேன்...  சேர்த்து வச்சிக்கிறேன் மாமா போயிட்டு வர்றேன் குண்டூஸ் "என்று அவள் உதட்டில் பச்சக் கொடுத்துவிட்டு பெரிய சுதந்திர போராட்ட தியாகி போல கையை ஆட்டி பொக்கிசாவுக்கு ப்ளைன் கிஸ் கொடுத்து பந்தாவாக போலிஸ் வண்டியில் ஏறியவன் , குட்டி விடுதலை அவளுக்கு கொடுத்து போக 

அப்பாடா  என்று நிம்மதியாக மூச்சு விட்டாள் 

நரகாசுரன் செத்தால் தீபாவளியாம் அவளுக்கு மட்டும் இவன் சாகும் நாளே தீபாவளி!!