தெருளோ மருளோ காதல்4
Ther4
4 தெருளோ மருளோ காதல் ??
கடவுளே!! கடவுளே மண்டகப்படி வாங்கிட கூடாது அசிங்க அசிங்கமா திட்டிட கூடாது , உன்னைய நம்பிதான் இந்த காரியத்துல கால வைக்கிறேன்.. என்று கைகள் நடுநடுங்க கிடுகிடுத்த போனை வைத்து பக்தி பரவசத்தில் ஆடிக் கொண்டிருந்தாள் ரதிதேவி... போனை துணிந்து நாயகத்துக்கு போட்டு விட்டு ரதி அமைதியாக இருக்க ... சேம் கெட்டவார்த்தை பாரபட்சம் இல்லாம திட்டி காதில் ரத்தம் வர வைத்துவிட்டான்...
விபரீத ஆசைபடுறேனோ, என்னா கிழி, இதுல பாதி கெட்டவார்த்தைக்கு அர்த்தம் கூட தெரிலையே என்னவா இருக்கும் எவன் எவனோ எதை எல்லாமோ கண்டுபிடிக்க அம்மணி அவன் போட்ட கெட்டவார்தைக்கு அர்த்தம் தேடி கொண்டு திரிந்தாள்....
நாளை காலேஜில் படிப்பதற்காக சென்னைக்கு கிளம்பப் போகிறாள்...
எதுக்கு அவ்வளவு பெரிய காலேஜ்ல என்ன கொண்டு சேர்த்து இருக்கீங்க காலில் விழாத குறையாக பெரிய நாயகத்தை பார்த்து வைத்தாள்
ஆனால் அவனோ,
"அந்த காலேஜ்லத்தேன் படிப்பு நல்லா இருக்குமாம்... அதோட பொட்ட பிள்ளைகளுக்கு பாதுகாப்புமாம், அங்கன தங்கி இருந்து படி , மூணு வருஷம் தானே கண்ண மூடி திறக்கிறதுக்கு உள்ள முடிஞ்சிடும்..."
அவள் எப்படி சொல்ல முடியும்?? உன்னை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது என்று கத்தி சொல்ல அவளுக்கு தொண்டை வரை வார்த்தை வந்தாலும், அவன் சிடுசிடுத்த முகத்தைப் பார்த்து வார்த்தை நாவுகளில் நாட்டியம் ஆட
ஏதாவது பக்கத்து காலேஜில் படிக்க வைப்பான் என்று நினைத்திருக்க , பேரிடியாக சென்னையில் அவளுக்கு காலேஜ் தேர்வு செய்தது தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...
"ஏம்பா பெரியநாயகம் அந்த புள்ளைய சென்னையில கொண்டு போயி படிக்க வைக்கிறியே, அந்த புள்ள இல்லாம உன்னால இருக்க முடியுமா? என்று இவனை சிறுவயதில் இருந்து பார்த்து பழகிய தலைமை ஆசிரியர் கேட்க
"அதுக்காக கல்யாணம் கட்டி அடுத்த வீட்டுக்கு போக போற பொண்ண , என் வீட்டிலேயே வச்சுக்க முடியுமா அய்யா .... அவ இல்லாம அந்த வீடே வெறிச்சோடி தான் கிடக்கும், இதையும் பழகிக்க வேண்டியதுதான்..
"உனக்கு என்னப்பா தலைவிதி, இவள பெத்தவன் இன்னொரு கல்யாணம் கட்டி நம்ம ரதிதேவி வயசுல இன்னொரு பொண்ணு இந்த பள்ளிக்கூடத்திலேயே படிக்குது என்றதும் நாயகம் முகம் கருத்தது...
"உன்ன வருத்தப்படுத்தணும்னு சொல்லலைய்யா இவளுக்கு அப்பனா ஒரு நாளும் சுந்தரம் ஒன்னும் செஞ்சது இல்ல ... ஆனா அந்த பொண்ணுக்கு சிவி சிங்காரிச்சு, கார்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதை பார்த்தா, எனக்கே கஷ்டமா இருக்கும்...நான் கூட முதல்ல ரதிதேவி வருத்தப்படும்னு நெனச்சேன்.. ஆனா நல்ல வேளை அந்த புள்ள உன் வளர்ப்புல்ல, அதுகளை கண்டுக்கிடவே செய்யாது , வந்தோமா படிச்சமான்னு அது வேலைய மட்டும் பாத்துட்டு போயிடும் ...
ரதிதேவிக்கும் சுந்தரத்தின் இரண்டாவது மனைவியின் மகளுக்கும் வெறும் ஒரு மாதம் இடைவெளி தான்.... வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண் எஜமானியாக ஆசைப்பட்டு , படுக்கையில் பங்கு போட்டுக் கொள்ள... அந்தப் பிரச்சனையில் தான் பெரிய நாயகியை அடித்து கொன்றது ... இவள் பிறந்து ஒரே மாதத்தில் அவளும் பிறந்து விட்டாள்..ஊரே காரி துப்பினாலும் , அவர்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அது வேறு கதை..
ரதிதேவி வளர வளர ஊர் அவள் தகப்பனை அடையாளம் காட்டத்தான் செய்தது . அவ்வளவு ஏன் சுந்தரம் கூட மெல்ல நூல் போட்டு பார்க்க தான் செய்தான்..
ஒற்றை தரிசு நிலத்தை வாங்கி ஒத்தை ஆளாக அதை பண்படுத்திய பெரியநாயகத்தை பார்த்து அன்று கேவலமாக சிரித்த சுந்தரம் , இன்று ஊர் முழுவதும் வளைத்து போட்டு இருக்கும் பெரிய நாயகத்தை பார்த்து வயித்தெரிச்சல் கொண்டு சுத்துகிறான்..
எல்லாம் உமர் பொண்ணு யோகம்யா... அந்த மகாலட்சுமி அந்த வீட்டில இருக்கிற வரைக்கும், பெரிய நாயகம்தான் இந்த ஊருக்கே தலை கட்டா இருக்க போறான்.. வேணும்னா பாரு , அவ தொட்டதெல்லாம் வாய்க்கும் என்று குத்தி விட இருக்கும் நான்கு பேர் சுந்தரத்தை குத்தி விட அவர்கள் சொன்னது உண்மையோ பொய்யோ ஆனால் பெரியநாயகம் கால் வைத்ததில் எல்லாம் ஜெயிப்பான்...
"சுந்தரம் பேசாம உன் மகளை என்றதும் சுந்தரம் முறைப்பாக தன் நண்பனை பார்க்க...
"உன் முத பொண்டாட்டியும், முதல் பொண்டாட்டி பெத்து போட்ட பிள்ளையும் ஆகலன்னாலும் அது உன் பிள்ளை தானே...
"அதுல எல்லாம் அந்த கேனைச்சிறுக்கியை குறை சொல்ல முடியாது... என் காலையேதான் சுத்தி சுத்தி வருவா ... நமக்குத்தேன் இந்த மேனாமிணுக்கி மேல ஒரு கண்ணாகி போச்சு" என்று பட்டுச்சேலையில் நடமாடும் இரண்டாவது மனைவி பரமேஸ்வரியை வெள்ளை மீசையை முறுக்கிக் கொண்டே பார்க்க..
"என்ன எதுக்கு பாக்குறீங்க பொம்பள முந்தானை விரிச்சா அப்படியே வந்து பாஞ்சா மட்டும் போதாது அவங்களுக்கு கவுரவமா வாழ வசதி பண்ணி கொடுக்கணும்!! நான் இந்த வீட்டுக்கு வாழ வரும்போது தோட்டம் என்ன, துரவென்ன.. ஆனா இப்போ ஒரே ஒரு வயல்காடு ஓடவே செய்யாத தியேட்டர் ..
உடம்பு முழுக்க பவுணு இருக்கே இது போதாதா பரமு
"ம்க்கும், இதுவும் என் நகையா? இல்ல நீ சம்பாதிச்சு போட்ட நகையா... அந்த பெரியநாயகம் அவன் அக்காவுக்கு போட்ட நகை , நீரா எனக்கு ஏதாவது பண்ணித் தந்திருக்கீறா..
"சரி சரி இத்தனை வருஷமா இதை சொல்லி தானே திட்டிக்கிட்டே இருக்க... நான் என்ன சம்பாதிக்க மாட்டேன்னா சொல்றேன் .. வைக்கிறது எல்லாம் நட்டமா போகுது,
"நீ கை வச்சி விளங்குனதுல ஒன்னே ஒன்னு என் வயித்துல வந்த இந்தப் புள்ள மட்டும் தான்...
யோவ் ஏதாவது வீட்டுக்கு வெளங்குற மாதிரி ஒரு ஐடியா குடுத்துட்டு போ , ஊரெல்லாம் உன்னை பெரிய ஜோசியர், நீ சொல்றது எல்லாம் நடக்கும்னு சொல்றாங்க என்று எதிரே இருந்த சுந்தரம் தண்ணீ வண்டி நண்பனையும் திட்டியபடி பரமேஸ்வரி நொடித்துக் கொண்டு வந்து கணவன் அருகே அமர...
"அதுக்கு தான் மா நானும் ஐடியா சொல்லிக்கிட்டு இருக்கேன் அந்த பெரியநாயகம் ஆகா ஓகோன்னு இருக்குறதுக்கு காரணம்.!! அவன் அக்கா பொண்ணு ரதிதேவிதான்,.. அந்த புள்ள உங்க வீட்டுக்குள்ள வந்தா, தானா அங்க உள்ள யோகம் இங்க வரப்போகுது ..
"யோவ் கேட்டுக்கிட்டியா பின்ன என்ன எப்படியாவது உன் முத சம்சாரத்து மகளை இங்கன இழுத்துட்டு வர்ற வேலைய பாரு... எனக்கும் வேலை செஞ்சு செஞ்சு இடுப்பெல்லாம் வலிக்குது, வேலை செய்யுறதுக்கு ஒரு வேலைக்காரியும் கிடைச்ச மாதிரி இருக்கும் ... அதே மாதிரி போன யோகம் வீட்டுக்குள்ள வந்த மாதிரியும் இருக்கும் ... ஏதாவது பண்ணும் சுந்தரம் யோசனையாக வெள்ளை மீசையை முறுக்கி கொண்டிருக்க..
ரதிதேவி சமைந்திருக்கிறாள் என்ற செய்தி கேள்விப்பட்டு, யோவ் இதுதான் நல்ல நேரம் போய் மகளுக்கு சீர் செய்ற மாதிரி நல்லவன் வேஷம் போட்டு அவளை இங்கன கூட்டிகிட்டு வந்துடலாம் என்று சீர் தட்டுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பெரியநாயகம் வீட்டிற்கு போக... வீட்டு வாசலில் வந்து நின்ற சுந்தரம் நெஞ்சிலேயே எட்டி மிதித்திருந்தான் பெரியநாயகம் ..
"என் அக்காவை கொன்ன அன்னைக்கே உன்ன பொலந்து போட்டு இருக்கணும்.. எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள வந்து நிப்ப என்று அங்கே வாழை மரத்தை வெட்ட வைத்திருந்த அருவாளை பெரியநாயகம் உருவி எடுக்க
அய்யோ ஓஓஓஓஓஓ மாமா என்று ஓடி வந்து அவன் கையை தடுத்து இருந்தாள் பட்டுச் சேலையில் ஜொலித்து நின்ற அவன் நாயகி ரதிதேவி ..
அன்றிலிருந்து இன்று வரை அவன் கொலைகாரன் ஆகாமல் தடுத்துக் கொண்டிருப்பது இவள் ஒருத்தி தானே ...
அம்மாடி ரதி, அன்னைக்கு அப்பா ஏதோ புத்தி கெட்டத்தனமா உன் அம்மா கூட சண்டை போட்டு மெதுவா தான் பிடிச்ச தள்ளுனேன்... அவ அல்பாயுசுல போவான்னு, நான் நினைச்சு பாக்கல அத நெனச்சு இன்னவரைக்கும் வேதனையில் மருகிட்டு கிடக்கிறேன் ... எனக்கு ஒரு வாய்ப்பு தாம்மா என் கூட என் வீட்டுக்கு வா, அவளுக்கு செஞ்ச பாவத்துக்கு உன் காலைக் கழுவி தண்ணி குடிக்கிறேன் 'என்று சுந்தரம் பரமேஸ்வரி சொல்லிக் கொடுத்தது போலவே நடிக்க... அவரை அற்ப புழு போல பார்த்த ரதிதேவி யோசனையாக நின்ற பெரியநாயகம் கையை இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு
"எனக்கு அப்பா , அம்மா , ஆசான் , தெய்வம் எல்லாமே என் மாமா பெரியநாயகம் மட்டும்தான், எனக்கு அவரைத் தவிர வேறு யாரும் வேண்டாம் என்று அவள் சொன்ன ஒற்றைச் சொல்லில் வளர்ந்து நின்ற தன் கருத்த மீசையை பெருமையாக முறுக்கி விட்டவன்
"என் அக்கா பொண்ணுடா,,, கேட்டுக்கிட்டியா இந்த பெரியநாயகத்தை தவிர வேற எவனும் வேண்டாம்னு சொல்றா , இதைவிட எனக்கு வேற என்னலே வேணும்.. வெளியே போ ஈத்தரை... இந்த நாய் நின்னை இடத்தை கழுவி விடுங்கடே"என்று விட்டு மார்தட்டியவன்... இதே வார்த்தையைத்தான் அவள் இன்னொரு நாளும் சொல்லப் போகிறாள் ஆனால் இன்று மார்தட்டிய அவனால் இன்னொரு நாள் மார்தட்ட முடியாமல் போகப் போகிறது....
வார்த்தை என்னவோ ஒன்றுதான்
இன்று இனித்தது அன்று கசக்கும் !!
"இந்தாரு பணத்தை பத்தி யோசிக்காத என்ன வேணுமோ போய் வாங்கு, இரவு கடைத்தெருவுக்கு ரதியை அழைத்து வந்து விட்டவன் ஜவுளிக்கடையில் அமர்ந்து கடை முதலாளியோடு பேசி கொண்டிருக்க.. ரதி கைகள் சுடிதாரை புரட்டினாலும் மனமோ
"எப்படி சென்னை போறது தடுத்து இங்கனையே இருக்கலாம் "விதவிதமாக நாயகத்திடம் கேட்டு பார்த்து விட்டாள் ...
"உனக்கு என்ன படிக்க மடி, கெட்டு போய் கிடக்க இன்னொரு வாட்டி மாமா ஓமான்னு கொணட்டுன நாலு போடு சென்னி வாக்குல விட்டிருவேன் பார்த்துக்க "என்றவனிடம் அவள் ஜம்பம் பலிக்காது கிளம்ப ஆரம்பித்தாலும் , எதாவது ஒரு வாய்ப்பு கிடைச்சிடாதா என்று இப்போது வரை காத்து கொண்டு இருக்கிறாள்....
யம்மா எடுத்துட்டியா.... பில் போட வந்தவளிடம் முதலாளி மெலிதாக சிரிக்க
"ம்ம் மாமா எங்க அண்ணன்" சேரில் உட்கார்ந்திருந்த நாயகம் இல்லாது ரதி அவனை தேட கடை முதலாளி பில்லை போட்டு கொண்டே
"பணத்தை கொடுத்துட்டு பக்கத்துல ஏதோ உனக்கு கொத்து பரோட்டா வாங்க கடைக்கு போறேன்னு போனாரும்மா... இந்தா மீதி பணம் பொருள்" என்று கொடுக்க , அதை வாங்கி கொண்டவள் கடைக்கு வெளியே வர ... நாயகம் ஹோட்டலில் நின்று கொண்டிருந்தான்
"கொத்து பரோட்டாவுல சில்லி சிக்கன் அதிகம் போட்டு கொத்துடே, மிளகாய் போடாத போனமுறை மிளகாயை கடிச்சிட்டு ரொம்ப நேரம் கண்ணை கசக்கிட்டு கிடந்தா பார்த்து செய்டே....
"என்ன நாயகம் அண்ணன் அக்கா மகளுக்கா?
"ஆமாடே நான் என்னைக்கு இது எல்லாம் தின்னேன் .. அந்த புள்ளைக்குதான், நாளைக்கு ஊருக்கு போகுது ... நாயகம் குரல் சற்று பிசிறுயது.... வாரம் வாரம் பார்க்க போகலாம் தான் ஆனாலும் கைக்குள் கிடந்த பெண் தள்ளி போவது சற்று வருத்தம் தான் ..
ஏன் அண்ணன் இங்கன எத்தனை காலேஜ் இருக்கு இங்க சேர்த்து இருக்கலாம்ல "
"அட போடே, நம்ம வெதுவெதுப்புலேயே கிடந்துபுட்டா அடுத்தவன் வீட்டுல போயும் நம்மள தேடும் ..கொஞ்சம் தள்ளி கிடக்கட்டும் ,அப்பதேன் போற வீட்டுல வாழ பழகிட முடியும்.... காப்பியை பட்டை உதட்டில் வைத்து உறிஞ்சு கொண்டே பெரியநாயகம் பேசியபடி நிற்க ... ரோட்டுக்கு இந்த பக்கம் அவன் பேசுவதை கேட்டபடி நின்ற ரதிதேவிக்கு மூளை மந்தம் ஆனது ... அவன் வீட்டை விட்டு போகவும் மனம் இல்லை வாழ்க்கையை விட்டு போகவும் மனம் இல்லை
வழிகள் தெரியாத மடமையில் சடுதியாக அச்செயலை செய்து விட்டாள் ... வேகமாக வந்த காரின் குறுக்கே ஓடி வந்து ரதிதேவி விழுந்து விட
மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற அலறலோடு கையில் பார்சலோடு திரும்பிய பெரியநாயகம் காலடியில் வந்து ரத்தமாக ரதிதேவி விழுந்தாள் ...
எம்மாடி இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்று உடல் சில்லிட்டு போனவன் தன் முன்னே காலில் தலையில் ரத்தம் வடிய கிடந்த ரதியை அள்ளி தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்
ஒன்னும் பயப்பட வேண்டாம் நாயகம், கால்ல எலும்பு முறிஞ்சு இருக்கு சரியாக நாற்பது நாள் ஆகும் ... மத்தபடி நாரமல்தான்....
ஓஓஓஓ
என்ன நாயகம் ?
இல்லை நாளைக்கு மேற்படிப்புக்கு சென்னை அனுப்ப இருந்தேன்... கூறுகெட்ட கழுதை ரோட்டுல கவனம் இல்லாம போய் காலை உடைச்சிட்டு கிடக்கே எங்கன அனுப்பன்னு யோசனையா இருக்கு அதான் "
"கால் ஊனி நடக்க மூணு மாசம் ஆகும்டே, அங்கன பிள்ளையை கவனிக்க யார் உண்டு ... இங்கன எதாவது பக்கத்து காலேஜ்ல சேர்த்து விடுடே, காயமும் ஆறிடும் யாரையாவது கவனிக்கவும் போட்டு பத்திரமா பார்த்துக்கலாம் "என்று டாக்ட்டர் சொல்ல கண்ணை மூடி படுத்து கிடந்த ரதிதேவியை பெருமூச்சு விட்டு பார்த்த பெரியநாயகம் ....
கடவுள் செயல் இதுதான்னா, நான் என்னத்த செய்ய, இங்கனையே எதாவது படிக்க வைப்போம் அவளை பார்த்துக்குங்க, அவளுக்கு எதாவது காப்பித்தண்ணீ வாங்கியாறேன் "என்று நாயகம் வெளியேற .... கண்ணை திறந்த ரதிதேவி உதடு சிரிப்பில் மலர்ந்தது...
முதல் காதல் வெற்றி ஆயிற்றே !!
எல்லா வெற்றியும் மகிழ்ச்சியை தந்து விடாது என்று அவள் அறியாது போனாள்..