தெருளோ மருளோ 8
The8
8 தெருளோ மருளோ காதல்??
உண்மையாவே உனக்கு கால் வலி இன்னும் இருக்கா இல்ல , வேற எதுவும் காரணமா வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற" என்று சந்தேகமாக நாயகம் கேட்க ... இதற்கு மேல் ஓபி அடிக்க முடியாமல் ரதிதேவி காலேஜ் போக ஆரம்பித்து விட்டாள்.. இரண்டு நாள் பஸ்ஸில் அடித்து பிடித்து ஏறி காலேஜ் போனவளுக்கு, வீட்டிற்கு வந்ததும் கை கால் எல்லாம் வலித்தது ..
"எப்பா நாயகம் இந்த பைக்கை மாத்துன்னு உன்கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன் , பாரு வருஷத்துக்கு பத்து நேரம் ரிப்பேர் ஆயிடுது... எவ்வளவு சம்பாதிக்கிற நல்லா ரக ரகமா காரு பைக்குன்னு வர்ற அளவுக்கு உன்கிட்ட காசு இருக்கு பின்ன எதுக்குடே இந்த பழைய பைக்கை போட்டு பாடு பார்த்துகிட்டு இருக்க...
மெக்கானிக் ஷாப்பில் உள்ள மரபெஞ்சல் உட்கார்ந்து நாயகம் பேப்பரை புரட்டி கொண்டு இருக்க அவன் புல்லட்டை சரி செய்து கொண்டிருந்தவர் கேட்க
"அட போய் வர ஒரு வண்டி , அது எதுவா இருந்தா என்ன., நமக்கு இவன் தான் சரி நாம எவ்வளவு முறுக்குனாலும் கன் மாதிரி போவான், கோவத்துல நாலு மிதிச்சாலும் வாங்கிப்பான்....
"அது இல்லடே, இதுக்கு மேல இதுல ரிப்பேர் பார்க்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல.. பேசாம ஒரு புது புல்லட்டை வாங்கி போடு,
"காசு என்ன மரத்துலேயா காய்க்குது, சம்பாதிக்கிறேங்கிறதுக்காக, சும்மா சும்மா வாங்க முடியுமா ? வீட்டுல வயசுக்கு வந்த புள்ளை வச்சிருக்கேன்.. அவளுக்கு ஜாம்ஜாம்னு செய்ய வேண்டாமா? இதே இருக்கட்டும் முடிஞ்ச வரைக்கும் இதையே வச்சு ஒப்பேத்துறேன் பார்த்துவிடுடே.... என்றவன் பார்வை பஸ்ஸில் படிக்கட்டில் இடம் இல்லாது தொங்கி கொண்டு போகும் ரதிதேவியை கண்டுவிட அடுத்த நொடி பேப்பரை கீழே போட்டவன்
"ஏடே வண்டியை சரி பண்ணி மரக்டையில விட்டிரு என்று நாயகம் வேட்டியை காலால் ஏத்தி மடக்கி கட்டி கொண்டே ஓட ஆரம்பிக்க
"எங்கிட்டு ஓடுறான்" என்று புரியாது அவர் திரும்பி பார்க்க... சீறிய பேருந்து பின்னே சிறுத்தை வேகத்தில் ஓடிப்போய் முன் படிக்கட்டில் தாவி ஏறி இருந்தான் நாயகம் ... கம்பியை பிடித்து கொண்டு கண்ணை சிக்கென பயத்தில் மூடியபடி படிக்கட்டில் கடைசியில் படியில் இறுதி ஆளாக நின்ற ரதிதேவி உயிர் பயத்தில் நின்றாள் வேறு வழி இல்லாமல் ஏறிவிட்டாள் பேருந்து சரிந்து நெளிந்து ஓட இவளுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது... அவள் பின்னே அவளை அணைத்தபடி யாரோ வந்து நிற்கவும் பதறி கையை விட்டுவிட...
"ஏய் இஇஇஇஇஇஇஇ என்று ஒற்றை கையால் அவள் முதுகை கையால் தாங்கி தடுத்து அழுத்தமாக அவள் இடையில் நாயகம் கைகள் பதிய ரதியை சரியாக விட்டவனை பார்த்தவள் பார்த்தபடி நிற்க .... பேருந்து என்னவோ வேகமாகத்தான் ஓடி கொண்டு இருந்தது
"மாமா நீங்களா? ஆச்சாரமான பார்வை பார்த்தாள்
"அறிவு இல்ல... பஸ் இம்புட்டு கூட்டமா இருக்குன்னா, நின்னு அடுத்த பஸ்ஸூக்கு வரணும்னு தெரியாதா? இம்புட்டு கூட்டத்துல ஏறி படியில் தொங்கிக்கிட்டு வர்ற, நல்லவேளை நான் வந்து ஏறுனேன் .... இல்ல ,இந்த நேரம் கீழே விழுந்து மண்டையையும் உடைச்சு தொலச்சியிருப்ப, இப்பதான் கால் சரியாகி இருக்கு, அதுக்குள்ள கைய உடைக்கிறதுக்குய் வேலை பார்க்கிறியாட்டி? அவன் பாசம் அதட்டலாகவே தான் வரும் ...
"இல்லைங்க மாமா முத வகுப்பு பிரக்டிகல் கரெக்டான நேரத்துக்கு போகலைன்னா வெளியே நிப்பாட்டி விட்டுருவாங்க.. இந்த பஸ்ஸை விட்டா அடுத்த பஸ் வர்றதுக்கு அரை மணி நேரம் ஆகும்... நேரம் ஆகிடும், அதான் வேற வழி இல்லாம ஏற வேண்டியதாகி போச்சு "
"ஏன் இந்த பஸ் அரை மணி நேரம் பஸ் ஸ்டாண்ட்லதானே நின்னு இருக்கும், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போயி பஸ்ல ஏறுனா என்ன கொள்ளை போவுது .. அப்படியே கண்ணாடி முன்னாடி நின்னு சந்தனத்தையும், குங்குமத்தையும் பூசி கிட்டே நிக்க வேண்டியது.. ஒரு வேலையில கூறு கிடையாது, நீ எல்லாம் கல்யாணம் கட்டி போற இடத்துல எப்படிதேன் சமாளிக்க போறியோ தெரியல... சரி சரி புடிச்சு ஒழுங்கா நில்லு, மாமா இருக்கேன் பயப்படாத என்று நாயகம் இரண்டு பக்கமும் அவளுக்கு அணை கொடுத்தது போல நாயகம் வாசலில் நின்று கொள்ள....
அப்பப்பா, ராஜ சுகம் எது தெரியுமா? அவன் வேர்வையோடு வந்த ஜவ்வாது மணத்தில் அவன் கையில் உள்ள சுருட்டை முடிகள் அவள் இடையில் உரசுவது அன்றோ ராஜசுகம்!! அவன் கழட்டிவிட்ட சட்டை வழியே அவனுடைய நெஞ்சு முடி இவள் முதுகில் உரசுவது சொர்க்கத்தின் வாசலுக்கே கொண்டு போனதுவே!! தாவணி தான் கட்டிட்டு காலேஜ் போகணும் என்ற அவன் சட்டம் அன்று கடுப்பை கிளம்பியது ஆனால் இன்று அவள் வெற்று இடை அவன் கை உரச,. தாவணிதான் காதலின் உடை என்று பிரகடனப்படுத்தி விட்டாள் ...
டிக்கெட் டிக்கெட்" என்றதும் அவன் வாசத்தில் சொக்கி நின்ற ரதிதேவி பதறி பேக்கை திறக்க போக
"ஏட்டி நீ பிடிச்சு நில்லு நான் எடுக்கிறேன்" என்று அவள் அருகே வந்து நாயகம் கிசுகிசுப்பாக கூற
அய்யோ!! சாகடித்து விட்டானே வெட்கத்தை!
முரட்டு முனகலில் தூக்கிலிட்டு விட்டானே கூச்சத்தை
அவன் உதட்டு அசைவில் மீசை அவனை அறியாது அவள் கன்னம் உரசி இருக்க
மீசை எனும் வாள் முனையில் அவள் பெண்மை களவாடப்பட்டதுவே
சூறையாடி விட்டானே அவள் தயகத்தை
தன்னை மறந்து ரதிதேவி அவன் நெஞ்சில் பட்டும் படாது சாய .... இடப்பற்றாக்குறை என அவன் தன் தமக்கை மகள் சாய்ந்ததை நினைத்து கொள்ள அவளோ காதல் தேடலில் அன்றோ அவன் மார்பு தேடி சரணாகதி அடைந்தாள்
ரெண்டு ____ காலேஜ் என்று டிக்கெட்டை எடுத்து சட்டை பாக்கெட் உள்ளே வைத்த குட்டி இடைவெளியில் அவன் கைகள் அவள் இடையை உரசி போக உதட்டை கடித்தாள்...
ஸ்ஆஆ மாமாஆஆஆஆ தன்னை மறந்து முனங்கி விட
என்னட்டி என்றவன் குரலில் தன் தடுமாற்றம் சரி செய்து கொண்டவள்..
"இல்லைங்க மாமா நீங்க பிடிச்சு நின்னுக்கோங்க...
"அதெல்லாம் இது பழக்கம்தேன், நீ ஒழுங்கா நில்லு ராஜாவின் பாடல்கள் அவள் உணர்வுக்கு தீனி போட நாயகம் சாய்ந்து நின்று காலை குறுக்கே நீட்டி அவளுக்கு அணை போட்டு விட்டு வந்த போனில் பேசி கொண்டு நின்றான் ...
"லோடை ஏத்தி விட்டிரு , எத்தனை டன்னுன்னு பார்த்து எழுதி வை , கூறு இல்லாம எதாவது பண்ணி வச்சிருந்த வெளுத்துடுவேன் , " எவன் இருந்தா என்ன என்று அவன சிம்மக்குரலில் நாயகம் கனைத்து கொண்டு இருக்க...
இவளுக்கு இப்படி ஒரு பயணம் அவன் மாமனை உரசி கொண்டு சொல்லவா வேண்டும்..
ஓரக்கண்ணால் நாயகத்தை பார்த்தாள், அவன் பிடித்திருந்த கம்பியில் அவள் கையை வைத்தவள் அவன் பேச்சு போனில் இருக்க ... தன் விரலை நகட்டி நகட்டி நாயகம் கையின் மீது தன் கையை வைக்க சட்டென பேச்சை நிறுத்தி நாயகம் தன் கை மீது பட்ட அந்த அந்நிய கையை பார்த்தவன் அது ரதி கைகள் என்றதும்
"என்னட்டி "
"இல்ல மாமா பிடிக்க இடம் இல்லை அதான்" என்று பதறி கையை எடுக்க போக, தன் கைகளை அவன் நகட்டி அவள் கைக்கு இடம் கொடுத்தவன் அவள் கை மீது தன் கையை வைக்க பிறவி பயன் அடைந்தாளே பூங்கோதை!!
அவன் சூடான விரல் உள்ளே அவள் கை ஆஹா!! என்ன ஒரு அழகிய முதல் கூடல் அஃது!!
கூடலா !! ஆம், கூடலே தான் , அவன் அகண்ட மார்புக்குள் கட்டில் போரில் இவள் தோற்றுப்போய் கிடக்கும் வேளை, அவன் அவளை ஆட்கொள்வது போல் மூச்சு திணறியது அந்த ஐவிரலில் அடைப்பட்டு கிடந்த இந்நேரம்.... அவன் முடி அகண்ட மார்பின் கீழே அவள் பஞ்சு மேனி நசுங்குவது போல் அவன் விரல் உள்ளே அவள் விரல்கள் நசுங்கிக் கொண்டிருந்தது .. காலோடு கால் உடலோடு உடல் உரச ஆடைகள் எல்லாம் இழந்து ஈருடல் ஓர் உயிராக அவன் உடல் , அவள் உடலுக்குள் புகுந்து விளையாடுவது போல் ஒரு பிரம்மையை கொடுத்தது அவனின் கையணைப்பு!! ஏதேதோ எண்ணங்கள் வந்து அவள் கண் சொக்கி நின்றாள் ...
___ இறங்குங்க என்று நடத்துனர் சத்தம் வர
ஏட்டி ஏட்டி இஇஇஇஇ நாயகம் கனைப்பில் ரதி பதறி அவனை பார்க்க
"என்ன இழவு நெனைப்புலதேன் சுத்தி வர்றியோ காலேஜ் வந்திடுச்சு இறங்குட்டி" என்று அவன் இறங்க அவளும் பின்னே இறங்கினாள் ...
"சரி மாமா நான் போயிக்கிறேன்.... கசங்கி இருந்த தன் தாவணியை அவள் சுருக்கி நீவி கொண்டே ரதி சொல்ல .. பயணத்தில் களைத்து இருந்த அவளை கண்ணை சுருக்கி பார்த்தவன்
ஏட்டி நில்லு "
"என்ன மாமா
"அரை மணிநேரம் அவகாசம் வாங்கிட்டு வா என்றதும் அவள் கண்ணை உருட்டினாள்
"என்னவா இருக்கும் ... என்று யோசனையாக அவகாசம் வாங்கி விட்டு நாயகம் பின்னால் அவளும் நடக்க , நடைபாதை கடையில் அவளுக்கு தாகம் தீர்க்க இளநீர் வாங்கி கொடுத்தான்.. அவள் புத்தகப்பையை வாங்கி கெளரவம் பார்க்காது தன் தோளில் தொங்க போட்டு கொண்டு , அவள் சுமை தாங்கி கொண்டு நடந்த அவன் பின்னே கல் என்ன மண் என்ன கல்லறை கூட போக ஆசை!!
கல்லறையிலும் அவள் அருகே அவன் இருப்பான் என்றால் கல்லறை கூட அவளுக்கு சொர்க்கம் தான் !!
நீ போகும் இடமெங்கும் உன் நிழலாய் நான் வருவேன் என்று சொன்னால் அவனுக்கு புரியுமா? பெருமூச்சு விட்டவள் அவன் நின்ற இடத்தை சுற்றி பார்க்க .... பைக் ஷோரூம் அது .....
"பொட்டப்புள்ள ஓட்டுற மாதிரி ஒரு பைக் காட்டுடே ஏட்டி இந்த பஸ்ல போற சோலி எல்லாம் நமக்கு செல்லாது போல, நிதமும் இம்புட்டு இடி மிதி வாங்கிட்டு போனா .. நீ திங்கிற ரெண்டு இட்லிக்கு என்னத்த தாங்குவ ..
"நல்லா விலை அதிகமாக, புள்ளைக்கு பாதுக்காப்பு கூட இருக்கிறது போல வண்டியை காட்டுடே
"மாமா அதெல்லாம் வேண்டாம் என்று அவள் மறுக்க
"ப்ச் அமைதியா இரு நீ காட்டுடே.. ஏட்டி எது வேணுமோ பார்த்து எடு நான் முத்துவை பணத்தை எடுத்துட்டு வர சொல்றேன்..
"நீங்க பாருங்க மாமா எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது .. என்றதும் நாயகம் இருப்பதில் அழகான வண்டியை தேர்வு செய்து ..
"முன்னாடி நம்ம குலசாமி துணைன்னு போட சொல்லு அந்த சோங்கிபய பணத்தை எடுத்துட்டு வந்துட்டான் நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று நாயகம் வெளியேற ...
என்ன பேர் போடணும் மேடம் "என்றதும் போகும் நாயகம் முதுகை பார்த்து கொண்டே ரதி ...
"மாமா துணைன்னு டங்குலீஸ்ல போடுங்க அண்ணன் " அவன் யோசனையாக அவளை பார்க்க
"ப்ளீஸ் மாமாக்கிட்ட இதுல என்ன எழுதி இருக்குன்னு சொல்லாதீங்க அவன் நமக்கு எதுக்கு வம்பு என்று சொன்னதை எழுத .. பணத்தை செட்டில் பண்ணிவிட்டு வந்த நாயகம் பைக் முன்னே எழுதி இருந்த ஆங்கில எழுத்துகளை புரியாது தடவி கொண்டே
"என்னட்டி இதுல கடவுள் துணை தான போட சொன்னேன் "
"ஆமாங்க மாமா, கடவுள் துணைதான் இங்கிலீஷ்ல போட சொன்னேன் மாமா ...
"ஓஓஓ அப்படியா அப்ப சரி ,என்ன கொண்டு போய் மரக்கடையில இறக்கி விட்டுட்டு காலேஜ்ல போ
ம்ம் அவள் பைக்கின் முன் அமர, நாயகம் ஏறி பின்னால் அமர, பைக் ஓட்ட கற்று கொடுத்த அவனே அவள் பின்னால் அமர கொஞ்சம் தடுமாறியவள் அருகே நெருங்கி வந்தவன்
"ப்ச் பார்த்து ஓட்டு" என்று தடுமாறும் போது அவன் கை அவளை வழிநடத்த....
"பார்த்து போ "என்று கடை வந்து இறங்கிவன் போனை பேசி கொண்டே உள்ளே நடக்க ஆரம்பிக்க, ரதி நகர மனம் இல்லாது அவனையே பார்த்தபடி
ஐ லவ் யூ மீசை!! இச் இச் இச் என்று வாய்விட்டு கூற சட்டென நாயகம் நடை நிறுத்தி இவளை திரும்பி பார்த்தபடி
எதாவது சொன்னியாட்டி?? என்று கேட்க இவள் பதறி
இல்லைங்க மாமா என்றதும் தலையசைத்து விட்டு அவன் உள்ளே போய்விட..
ஏங்கி ஏங்கியே செத்துடுவேன் போல மசிய மாட்டைக்கிறாரே காதல் நோயில் நெஞ்சு கனத்து நின்றாள் ரதிதேவி!!
ஒருதலையாய் காதலிக்கும் பொழுது நினைவுகள் வலி
இருதலையாய் காதலிக்கும் பொழுது காதல் சுகவலி
காதல் பிரியும்போது இழப்பு வலி
பிரிந்து வாழும் பொழுது தனிமை வலி
இப்படி காதலை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அறியாமையின் மொத்த உருவம் வலியின் மொத்த சுவடு என்று தெரிந்தும் காதலிக்கும் காதலர்கள் தைரியசாலிகள் தான்!!