தெருளோ மருளோ 6
Theru6
6 தெருளோ மருளோ !!
கிணத்து திண்டில் இடுப்பில் டவலை கட்டிக்கொண்டு சோப்பு தேய்த்து குளிக்கும் மாமனிடம் காதல் பாடம் எங்கனம் தொடங்க யோசித்து யோசித்து பார்த்து ,ரதியின் தெளிவில்லாத மூளை இன்னமும் குழம்பியதுதான் மிச்சம்...
நாயகம் கழுத்தில் கிடக்கும் செயின் டாலரில் ஒருபக்கம் அவளும் , ஒருபக்கம் அவன் தமைக்கை போட்டோவும் அவனோடு சேர்ந்து நீரில் குளித்தது....அவன் கையில் கிடந்த தங்கக் காப்பாக பிறந்து இருக்க கூடாதா ?? அவனோடவே இருக்கும் பாக்கியம் பெற்றிருக்கலாமே!! .... ஷாம்புவை எடுத்து மீசையை குளிப்பாட்ட, இவள் உதட்டை கடித்தாள்....
பக்கடா மீசை அவன் களையான முகத்தை முரட்டு அழகாக காட்டுவதே அந்த பெருத்த முறுக்கிய மீசைதான்!! அவன் காப்பு அணிந்த கைகள் கோபத்தில் மீசையை முறுக்கும் போது , அட!! அட!! போங்கடா, என் மாமன் அழகுக்கு எம் மொழியிலும் கவிதை இல்லை என்று வர்ணனை செய்யும் காதல் பித்தில் அவள் , அவன் மீது கொண்ட காதல் நோய் ஒரு பக்கம் , வயது தரும் ஹார்மோன் மாற்றம் ஒரு பக்கம் என்று மொத்த ஆசையும் அவன் மாமன் மீது திரும்பி பாடாய் பட்டது பெண்மை... அது தெரியாத தெளிந்த ஆண் அவனோ வாசனை திரவியங்கள் கொண்டு தன் மேனியை குளிப்பாட்டி கொண்டு நின்றான்... அவள் கவனத்தை போன் மணி அடித்து கலைத்தது, போன் விடாது அடிக்க
ப்ச் , நம்மளை எல்லாம் ஒரு மனுஷியா நினைச்சு யார் போன் போடுவா, வேற யாரு கவிதாவா தான் இருக்கும் என்று போனை எடுத்துக் கொண்டு மீண்டும் தீண்டில் சாய்ந்து நின்று அவன் குளிப்பதை பார்த்துக் கொண்டே போனை காதில் வைத்து
ம்ம் சொல்லு கவி "
என்னடி, காலேஜுக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லையா...
பிசியா இருக்கேன் பிறகு பேசுறேன்"
ஏதே , அப்படி என்னடி வெட்டி முறிக்கிற வேல பாத்துட்டு இருக்க ...
"வேற என்ன என் மாமா கீழே குளிச்சுட்டு நிக்குது, அவரை மேல நின்னு சைட் அடிச்சுக்கிட்டு இருக்கேன்... நான் ஒருத்தி இப்படி சைட் அடிக்கிறதே தெரியாம உடம்பு முழுக்க சோப்பை போட்டு அய்யனார் சிலை மாதிரி டெம்ட் ஏத்திக்கிட்டு இருக்காரு... ஏன் புலம்பல் எப்ப தான் தீருமோ தெரியலையே ... ஐயோ இந்த மீசையை பார்க்கும் போதெல்லாம் ஆசை எட்டு மடங்கு கூடுது என்னத்த சொல்ல என்று அவள் காதலில் சலிப்பாக பெருமூச்சு விட?.
ஏண்டி வயசுக்கு மீறி பேசிக்கிட்டு இருக்க "
"அட போடி ஸ்கூல் படிக்கும்போது ஸ்கூல் படிக்கிற பொண்ணு, இப்படி எல்லாம் பேசலாமான்னு கேட்டீங்க... இப்பதான் காலேஜ் வந்துட்டேன்ல இனி பேசலாமே...
"எங்க கிட்ட பேசுறதெல்லாம் இருக்கட்டும், உன் மாமா கிட்ட போயி, நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்ல துப்பில்லை, ஊருக்கெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்டு திரியிற ...
"என்னைக்காவது ஒரு நாள் சொல்லிடுவேன்டி
"ம்க்கும், சொல்லி கிழிச்சிட போற, அதுக்குள்ள உன் மாமனை வேற எவளாவது உஷார் பண்ணிட்டு போயிடுவா,
"ஊத்த வாயி நாய், வாயை கழுவுடி, இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது சொன்ன பிரெண்டுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் கொன்னு கிணத்துல விசிடுவேன் பாத்துக்கோ ...
ஆமா நீதான , கோவம் வர்றதெல்லாம் சரிதான்... உன் மாமா புத்தி தெரிஞ்சும் , அவரைக் காதலிக்கிறேன்னு சுத்திட்டு இருக்க பாத்தியா உண்மை தெரியணும், அப்போ இருக்கு உனக்கு சங்கதி !!
"ப்ச், இப்ப எதுக்கு காலையிலேயே அபச குணமா பேசிக்கிட்டு இருக்க...
"எனக்கு என்ன வேண்டுதலா காலையில உனக்கு போன் போட்டு நேரம் வேஸ்ட் பண்ண, காலேஜ்ல நடத்துன பாடத்தை எல்லாம் உன் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வச்சிருக்கேன் ...நோட்ஸ் எடுத்துக்கோ
"இது வேறயா உன்கிட்ட எப்போடி நோட்ஸ் கேட்டேன் நான் காலேஜ் வர்ற ஐடியாவுலையே இல்ல.. நேரம் போகலன்னா வர்றேன்... உன்னை யாரு நோட்ஸ் எல்லாம் அனுப்ப சொன்னது என்று ரதிதேவி எரிச்சலாக முகத்தை சுருக்க
"எனக்கு என்ன ஆசையா, நீ படிச்சு பட்டம் வாங்கணும்னு ... நேத்து உன் மாமா இருக்காருல்ல
"மீசையா
"ம்ம் அவர்தான் என் வீட்டுக்கு வந்திருந்தார்
ஹான் எதுக்கு ?
தேவி அடிபட்டு வீட்டில் கிடக்குறா , அதனால அவ படிப்பு பாதிக்கப்பட்டுடக்கூடாது , கவிதாவும் அவ கிளாஸ்லதான படிக்கிறா , நெதமும் நடத்துற பாடத்தை அவளுக்கு அனுப்பி விட சொல்லுங்க, வீட்ல இருந்தே புள்ள படிச்சிக்கும்... புள்ளை தங்கமா படிக்கும் படிக்கிற பிள்ளை படிப்பு கெட்டுப்போயிடக் கூடாதுன்னு உச்சி கொட்டுறாரு, எனக்கு தானே தெரியும், நீ எப்படிப்பட்ட போர்ஜரி பேர்வழின்னு ... அவரு நீ படிச்சி பெரிய கலெக்டர் ஆகணும்னு ஆசைப்படுறாரு. ஆனா நீ படிக்காம அவர் பொண்டாட்டியாகி அவர் கால சுத்தணும்னு ஆசைப்படுற...
"கலெக்டர் ஆனா ஊரை கட்டி ஆளலாம்... ஆனா பெரியநாயகம் பொண்டாட்டியானா இந்த உலகத்தையே கட்டி ஆளலாம் .... உனக்கு இதெல்லாம் தெரியாது .... போடே, நான் மாமாவை சைட்டு அடிக்கிற வேலையைப் போய் பார்க்கிறேன்... என்று போனை கட் பண்ணி வைக்க போனவள் யோசனையாக போனை உத்து பார்த்தாள்
நண்பியிடம் இருந்து வந்திருந்த தொடர் மெசேஜ்களை நகத்தைக் கடித்துக் கொண்டே பார்த்தவள்
"அட மாமா கிட்ட பேசுறதுக்கு தானே திக்கும்... பேசாம நாம இதுல இருந்து மெசேஜ் அனுப்பி பாத்தா என்ன? பட்டன் போன்ல நார்மல் மெசேஜ் அனுப்பி பார்ப்போம் பேசத்தானே வர மாட்டேங்குது மனசுல வர்றது எல்லாம் எழுதி அனுப்பிட வேண்டியதுதான் என்று உல்லாசமாக விசில் அடித்து கொண்டவள் மறைத்து வைத்திருந்த இன்னொரு போனை எடுத்து அதிலிருந்து
யோவ் மீசை என்று ஒரு மெசேஜை அனுப்ப குளித்துக் கொண்டே இருந்தவன் , முகத்தில் போட்டிருந்த சோப்பை கழுவாமல், கிணற்றின் மீது இருந்த செல்போன் மெலிதாக கிர் கிர் என்று சத்தம் கொடுக்கவும் சோப்பு நுரையை கைவிட்டு வழித்து எடுத்தவன் போன் எடுத்து பார்க்க... அதில் ஏதோ மெசேஜ் வந்திருந்தது
என்ன கம்பெனி மெசேஜ் எதுவும் வருதா? யோசனையாக அதை தட்டி திறந்தான்...
உள்ளே யோவ் மீசை என்ற ஒத்த மெசேஜ் வந்திருந்தது
ஏதோ தப்பு மெசேஜ் போல இருக்கு என்று வைத்துவிட்டு நீரை எடுத்து மீண்டும் குளிக்க ஆரம்பிக்க
"ஐ அப்போ ஆளுக்கு மெசேஜ் படிக்க தெரியுது சூப்பர்!! இதுதானே நமக்கு வேணும்" என்று காதல் அத்தியாயத்தை தொடங்கினாள்...
யோவ் மீசை, உனக்காக ஒருத்தி எத்தனை வருஷமாய்யா காத்து கிடக்கணும் , கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா இல்லையாவே, தூணுக்கு மறைவாக நின்று தன் அக்கா மகள் செய்யும் சேட்டை புரியாமல்... குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருந்த பெரியநாயகம், மீண்டும் தொடர்ந்து வந்த மெசேஜ்களை திறந்தான்...
யோவ் மீசை , ராங் நம்பர் எல்லாம் கிடையாது சரியான நம்பர் தான் ... நீரு பெரியநாயகம் தானே, நீங்கன்னு தெரிஞ்சு தான் உமருக்கு மெசேஜ் பண்றேன் ...
எவ அவ?!?? பெரியநாயகம் கண்ணில் எரிச்சலும் கோவமும் கொப்பளிக்க ஆரம்பித்தது ...
வயதில் பெரியவர்கள் கூட சொல்லுங்க தம்பி என்ன விஷயம் என்று மரியாதையாக பேசுவதை தான் அவனும் விரும்புவான், அவனும் அப்படித்தான் நடந்து கொள்வான் ... எவளோ ஒருத்தி யோவ் மீசை என்று ஆரம்பித்ததும் இல்லாமல் நக்கல் நையாண்டி வேறு செய்ய ஆத்திரத்திற்கு பன்னீர் தெளித்தாள் பூச்செண்டு பெண்ணவள் ....
"யோவ் மீசை , மணி 10 ஆகப் போகுது , இன்னும் வீட்டுக்குள்ளேயே கிடந்தா எப்படிய்யா, உமருக்காக நான் காத்துட்டு இருக்கேன்... சீக்கிரம் வாரும் இன்னொரு முக்கியமான விஷயம் உங்க மீசை எனக்கு அம்புட்டு பிடிக்கும், சீக்கிரம் வந்துடுங்க காத்திருக்கேன் ;பின் குறிப்பு கோபத்தில் போனை உடைத்தால் சேதாரம் உமருக்கே!! எனென்றால் புது போனுக்கும் மெசேஜ் அனுப்பி தொல்லைகள் தொடரும், இப்படிக்கு உன் அருமை தொல்லை!! என்று மெசேஜ் முடிந்து இருக்க ... நாயகம் எழுத்தை கூட்டி கூட்டி வந்த காதல் கடிதத்தை படித்து முடித்து விட்டான்.....
ஹாஹாஹா முழியைப் பாரு மாமாவுக்கு, அய்யோ சமத்தா!! எப்படி கோவம் வருது , பெண்ணின் காதலை ரசிக்காது ,வழியாது, குலையாது நின்ற அவன் ஆண்மை பேரழகாக தெரிந்தது ... நெட்டி முறித்து காற்றில் முத்தத்தூது அனுப்பினாள் ...
மேலே நின்று நாயகம் இடுப்பில் கைவைத்து புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டு போனை முறைத்து பார்ப்பதை திண்டை பிடித்தபடி பார்த்துக் கொண்டு நின்ற ரதிதேவி
"ஐஐஐ இது கூட நல்லாத்தேன் இருக்கு... நம்ம மனசுல இருக்கிறதை அவருக்கு சொல்லணும், இப்படி ஒருத்தி காதலிக்கிறதை அவர் காதுல போடணும் அம்புட்டுதேன்... எப்படி சொன்னா என்ன சூப்பர் ஐடியா கிடைச்சிருச்சு, இனிமே மலையை குடையுற எலி மாதிரி, இந்த பெரியநாயகம் மலையை கொடைஞ்சே அவர் இருதயத்துக்குள்ள போய் உட்கார்ந்துக்குவேன், போய் உட்கார்ந்துகிட்டு மாமா உங்களை காதலிக்கிறது நான்தான்னு சொன்னா கண்டிப்பா வேற வழி இல்லாம என்ன கல்யாணம் கட்டிக்கத்தானே செய்வார் ,,, முதல்ல கொஞ்சம் தயக்கமா இருக்கும்... அதுக்கு பிறகு காதலிச்ச பொண்ணத்தானே கல்யாணம் கட்டி இருக்கோம்னு அப்படி இப்படி வாழ தொடங்கிடுவோமில்ல ....என்று அதீத நம்பிக்கை கொண்டது வெள்ளந்தி மனம்..
சிலரின் தோல்வி எங்கிருந்து ஆரம்பிக்கும் தெரியுமா ?? நாம் கொள்ளும் அதிக நம்பிக்கையில்....
காலையிலேயே மண்டை சூடாகி போனான் நாயகம் , சாப்பிட கூட செய்யாமல் விறு விறுவென்று சட்டையை மடித்து விட்டபடி போனை பார்த்துக் கொண்டே வெளியேறினான் பெரியநாயகம் ...
யானைக்கு கூட அடி சறுக்கும் , நாயகம் ஆண்மைக்கு அவ்வளவு சீக்கரம் அடி சறுக்காது ...