தெருளோ மருளோ7

Ther7

தெருளோ மருளோ7

7 தெருளோ மருளோ காதல்?. 

எம்மாடி எம்மாடி பாத்தாலும் பார்த்தேன்.. இப்படி ஒரு உலகமகா நடிப்பை, நான் எவகிட்டையும் பாக்கலடி யம்மா.... நாயகம் தம்பி வீட்டுல இருக்குற வரைக்கும் நொண்டி நொண்டி நடிக்கிறது என்ன? படுக்கையிலேயே கொதங்கிப் போயி படுத்து கிடக்கிறது என்ன ? அவன் வீட்டை விட்டு வெளியே போன அடுத்த நிமிஷம் , இடுப்புல தாவணியை சொருகி கட்டிக்கிட்டு, வெளியே விளையாட ஓடிடுற... உன்னோட நடிப்பு ஜாலம் தெரியாம, என் அக்கா பொண்ணுக்கு கால் சரியாகட்டும்னு உலகத்தில் உள்ள அத்தனை கோவிலுக்கும் நேம்சம் வச்சு தாடியை செரைக்காம சுத்திக்கிட்டு இருக்கான் பெரியநாயகம் "என்று வாசலில் உட்கார்ந்து முத்துவின் தாய் ரங்கம்மா நொண்டி விளையாடிக் கொண்டிருந்த ரதி தேவியை திட்டிக் கொண்டிருக்க...

"இந்தா பாரு ஐஸ்வர்யா ராய், இந்த விஷயம் எல்லாம் என் மாமன் காதுக்கு போச்சு, உன்ற காதை கடிச்சு துப்பிடுவேன் பாத்துக்க.. அவர் வந்து அவளுக்கு காலு எப்படி இருக்கு பரவால்லையான்னு கேட்டா... இன்னும் நடக்க முடியாம தான் கிடக்கிறா , படுக்கையை விட்டு எழும்பவே இல்ல சாப்பிடாம வலியில முனங்கிக்கிட்டேதான் இருக்கா , சுகமாக இன்னும் எப்படியும் மூணு மாசம் ஆகும் போல இருக்குன்னு நாலு பிட்டு நச்சுன்னு போடுற , சொல்ற புரியுதா ? நொண்டி அடித்துக் கொண்டே ரதி ரங்கம்மாவை பார்த்து முறைப்பாக சொல்ல 

"ம்க்கும், எனக்கு என்ன வந்துச்சு ... காலேஜ்க்கு மட்டம் அடிக்கிறதுக்கு குணமான கால இன்னும் நொண்டி நொண்டி இழுத்துகிட்டு இருக்க.. அவன் வெளிய போன உடனே உன் வாலு தனத்தை காட்டுற, என்னைக்காவது ஒருநாள் உன் நடிப்பு எல்லாம் அவன் கண்ணுல படத்தானப் போகுது, அப்போ வெடுக்கு வெடுக்குன்னு ஆட்டுற உன்ற இடுப்ப முறிச்சு அடுப்பில் வைக்கப் போறான் பாரு 

"என்ற இடுப்ப என் மாமா ஒடிக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் போவியா, நல்லா நாட்டுக்கோழி பிடிச்சு சூப் போட்டு வை.. கால் தேறட்டும்..

"ஆமாடி ,வக்கனையா வாய்க்கு ருசியா பொங்கி போட நான் இருக்கேன் , போற வீட்ல அங்கன என்ன செய்வியோ? உன் மாமா வேற , சீமையெல்லாம் தேடி பெரிய இடமா பார்த்து என் அக்கா மகளை கட்டி கொடுப்பேன், போற இடத்துல ஒரு குறையும் வராம இருந்துபுடனும்னு தேடி தேடி வரண் கொண்டு வர பார்க்கிறான்...ஆனா நீ , இப்படி சுத்திக்கிட்டு இருக்க 

"ப்ச், அதெல்லாம் நான் எங்கேயும் போக போறது கிடையாது, இங்கனத்தான் கடைசி வரைக்கும் கிடக்க போறேன்.. நீயும் எனக்கு கடைசி வரைக்கும் சோறு பொங்கி ஆக்கிப் போடத்தான் செய்யப் போற சும்மா என்ன குறை சொல்லிக்கிட்டே இருந்தேன்னு வையி , மாமா வந்தததும், ரங்கம்மா சரியில்ல மாமா என்னை திட்டிக்கிட்டே இருக்குன்னு போட்டுக் கொடுத்தேன்னு வை , நாளைக்கு உனக்கும் வேலை கிடையாது, உன்ற மூக்குறிஞ்சான் மகனுக்கும் வேலை கிடையாது, சோத்துக்கு ஜிங்ஜக் அடிக்க வேண்டியது இருக்கும் பாத்துக்க..

"ஆத்தாடி !! வாயா இது, வாய்க்காலால்ல இருக்கு, உன் வாயை ஒரு நாள் கூட நாயகம் பார்த்ததில்லை பார்த்தா தானே தெரியும் .. இது அமைதி பேர்வழி இல்லை அமுக்கணின்னு , எனக்கு என்ன வந்தது உன் மாமன் பிரச்சனை, உன் பிரச்சனை உங்க குடும்ப விஷயத்துல நான் ஏன் தலையிட போறேன் நான் பெத்தது சரியா இருந்தா, நான் ஏன் இங்கன கிடந்து பாடுபட போறேன்... "

"ஆமா அப்படியே நல்ல பிள்ளை பெத்துட்டாலும் உனக்கு பார்லிமெண்ட்ல மொத சீட்டு கொடுத்து உட்கார வச்சிருவாங்க பாரு .. உன் மகன் என் மாமாக்கிட்ட சம்பளத்தை வாங்கிட்டு ஊர் வாயெல்லாம் பாத்துட்டு திரியிறான்., ஐயோ பாவம்னு உனக்கு ஒரு வேலை போட்டு கொடுத்தா நீயும் பத்து பைசா பாப்பியேன்னு காச காசுன்னு பாக்காம என் மாமா என்ன பாக்குறதுக்கு இந்த வீட்ல வேலை கொடுத்து வேளைக்கு சோறும் கொடுத்து வச்சிருக்கு... நீ என்னையே குறை சொல்லி கேட்டு திரியிறியா "என்றதும் ரங்கம்மா முகம் தொங்கி போக ...விளையாடிக் கொண்டிருந்த ரதிதேவி ஓடி வந்து ரங்கம்மாவின் கழுத்தில் கைகளை போட்டு தொங்கிக் கொண்டவள்

"என்ன கோச்சிக்கிட்டியா ஐஸ்வர்யாராய், உன்கிட்ட விளையாடாம யாருகிட்ட விளையாடுவேன் என்று ரங்கம்மா கன்னத்தைக் கிள்ளி வாயில் போட

"ஏன் ஆத்தா, என்னைய பேசுறதுக்கு உனக்கும், பெரிய நாயகத்துக்கும் அத்தனை உரிமையும் இருக்கு.. என் வீட்டுக்காரர் செத்து அவர் வச்ச கடனை எல்லாம் எப்படி அடைக்கப் போறேன்னு நடுரோட்டில் நிற்கும் போது, விவரம் இல்லாத பிள்ளையை நாயகம் கைய புடிச்சு கூட்டிகிட்டு வரலைன்னா, இன்னைக்கு நானும் என் புள்ளையும் தெருவுல போய் இருக்க மாட்டோமா? என்ன ஒரு வேலைக்காரி மாதிரியா நீங்க ரெண்டு பேரும் நடத்துறீங்க பாரு நான் கட்டுற சேலை என்ன? நான் படுக்கிற பெட் என்ன நான் வாழ்ற வசதி என்ன?

"பின்ன எதுக்கு முகத்தை தொங்க போடுற,அழகாக சிரிக்கிறது"

"இல்லத்தா உன் மாமா உனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யுது , பட்டப்படிப்பு படிக்கிறதுக்கு சென்னை வரைக்கும் பெரிய பெரிய காலேஜ்ல இடம் பார்த்துட்டு வந்து இருக்கு ... ஆனா, நீ என்னன்னா அதெல்லாம் வேண்டான்னு சொல்லிட்டு பாரு இப்ப கூட கால சும்மா நொண்டிக்கிட்டு வீட்ல கிடக்குற , நல்லா படிச்சு பெரிய இடத்துக்கு வந்தாதானே நாளைக்கு பின்னுக்கு நல்லா இருக்கும் ..

"என்ன நல்லா இருக்கும் சொல்லு, நான் பெரிய படிப்பு படிச்சிட்டேன்னு வச்சுக்கோ , என் புருஷன் அஞ்சாப்பு தாண்டல அது எனக்கு எந்த குறையும் இல்ல ... ஆனா அவருக்கு ஏதாவது மனசுக்குள்ள உறுத்தல் வந்துடுச்சுன்னா.. 

"நம்ம நாயகம் உனக்கு அப்படி எல்லாம் படிக்காத பையனை கொண்டு வர மாட்டான்ல... இவள் சூட்சமம் தெரியாமல் ரங்கம்மா பேச 

"உனக்கு இதெல்லாம் புரியாது இது காதல் கணக்கு அது எனக்கு தெரிஞ்சா போதும் 

"காதலா???!! என்னடி என்னென்னமோ பேசுற , ஆத்தாடி !!!எதையாவது ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சு வச்சிப்புடாத, நாயகம் வயசு வித்தியாசம் பாக்காம என் வாயிலையும் மிதி மிதின்னு மிதிச்சிடுவான்.. ஒழுங்கா புள்ளைய பார்க்க தெரியல நீ எல்லாம் என்ன பொம்பளைன்னு இடுப்பு மேலேயே ஏறி மிதிச்சிடுவாண்டி ..

"ஹாஹா ,சண்டைன்னா சில பல அடிகள் விழத்தான் செய்யும் ஐஸ்வர்யாராய் அதுக்கு எல்லாம் பயப்பட்டா ரஸ்க் சாப்பிட முடியுமா?? சூப் இன்னும் வரல மேடம்... எனக்கு சூப்பை போடுங்க என்ற மாமாவுக்கு நல்லா சேவலா பிடிச்சு கறி வச்சு, சுக்கா பண்ணி வைங்க, பாவம் எனக்கு உடம்பு சரியில்லன்னு மாமா ஒழுங்கா சாப்பிடல போல இருக்கு ... கையில உள்ள எலி எல்லாம் செத்துப்போச்சு "என்று உச்சி கொட்டிக் கொண்டே ரதி வெளியே போக ... ரங்கம்மா இவள் பேசுவது, நடப்பது ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு இருக்க....

சரியாக துள்ளிக் கொண்டே வெளியே வந்தவள் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த பெரியநாயகம் மீது இடித்து கொண்டு நிற்க...

மாமாஆஆஆஆஆ  

"என்னத்த பார்த்துட்டு நடந்து வர்ற, எப்பவும் வானத்த பாத்துக்கிட்டேதேன் நடப்பியோ, பார்த்து ஒழுங்கா வா என்று கொஞ்சம் யோசனையாக சட்டென ரதி கால்களை பார்க்க.... தாங்கியபடி சுவற்றை பிடித்துக் கொண்டவள்

"சாரி மாமா வெளியே ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது அதான் "

"அதுக்கு இப்படி நொண்டி காலோட நெம்பி நெம்பி நடந்து வருவியா , கால் எப்ப சரியாகி எப்ப காலேஜ் போகலாம்னு இருக்க ? எல்லா பிள்ளைங்களும் காலேஜ் போயி மூணு மாசம் ஆவுது... நீ இன்னும் இந்த நாலேமுக்கால் காலை வச்சுக்கிட்டு நொண்டிக்கிட்டே திரி, படிக்கணும்னா மட்டும் கறி வலிக்குது உனக்கு...என்றபடி நாயகம் உள்ளே போய் சாப்பிட அமர்ந்தவன் 

"ரங்கா அக்கா மீனை எடுத்துட்டு வாங்க என்றதும் ரதி முகத்தை சுளிக்க... மீனை முள் எடுத்து தட்டில் வைத்தவன் அவனுக்கு எதிரே வந்து அமர்ந்த ரதிதேவி முன்னே தட்டை தள்ளிவைத்து விட்டு 

"ஒரு மீன் துண்டு இருக்கபடாது தின்னு" ... 

"ம்ம் தட்டில் சோற்றை பிசைந்து உருட்டி அடிக்கும் அவன் சாப்பிடும் அழகை ரசித்து கொண்டே ரதி சாப்பாட்டை கொத்தினாள்

எவளா இருக்கும் ? ஏத்தம் புடிச்சவ , யோவ் மீசையாம்ல கையில கிடடி ,பகுடி பேசுற வாய்க்குள்ள விரலை விட்டு கிழிச்சுடுறேன்... எப்படா எவன் மயங்குவான்னு அலைவாளுக போல இருக்கு... எவளோ என்ன பத்தி தெரிஞ்சவத்தான் இந்த வேலை பார்க்கிறா, இன்னொரு தடவை ஏதாவது அனுப்பட்டும் அப்ப இருக்கு சங்கதி.. இந்த பெரியநாயகம் யாருன்னு தெரியும் என்று சாப்பாட்டை வாயில் தள்ளிக் கொண்டே காலையில் வம்பு வளர்த்த அந்த எழுத்துக்குச் சொந்தக்காரியை வாயில் வந்தபடி இத்தோடு லட்சம் முறை திட்டி விட்டான்...  

"ஏகப்பட்ட காதல் கணைகளை இத்தனை வயது வரை தாண்டி இருக்கிறான்..அதில் பாதி இவனுக்கு இருக்கும் மரியாதை பணத்திற்காக வந்த காதலாக இருந்திருக்கிறது , ஒரு சில காதல் அவனுக்காகவே அவன் குணத்திற்காகவே வந்ததும் உண்டு.. ஆனால் எல்லாவற்றிற்கும் பாரபட்சமில்லாமல் பச்சை வார்த்தையில் பேசி, துண்டை காணல துணிய காணல என்று ஓட வைத்துவிட்ட புண்ணியவான்... இப்போது, எழுத்தில் வந்து மாயம் செய்யும் மன்னவள் யார் என்று தெரியாமல் மண்டகப்படி போட முடியாமல் அதை சோற்றில் காட்டிக் கொண்டிருந்தான்.. 

நேருக்கு நேர் நின்று இருந்தால் நான்கு பல் கீழே விழும் அளவிற்கு அறை விட்டிருப்பான், பேசி இருந்தால் வாயில் வந்த கெட்ட வார்த்தையெல்லாம் போட்டு பந்தாடி இருப்பான், இவளோ எழுத்தில் ஜாலம் காட்ட... இவனுக்கு பேசுவதை எழுத்து வடிவில் கொடுப்பதில் பெருஞ்சிக்கல்... பேச சொன்னா பேசலாம் எழுத சொன்னா என்னத்த எழுத? 

"எவ்வளவு கஷ்டப்பட்டுனாலும் நானும் எழுதுற அளவு படிச்சிருக்கலாமோ? அவளை திட்டவாவது உதவி செஞ்சிருக்குமே "என்று இப்போது லைட்டா பீல் பண்ணினான் , பதிலுக்கு எழுத்து வடிவம் கொடுக்க தடுமாறியது மீசை...

அவன் பலகீன புள்ளி எங்கு என்று அறிந்து அதில் சரியாக இலக்குப் பார்த்து அடித்தாள் அவனின் ரதிதேவி , பேச சொல்லி இருந்தால் கூட எப்போதாவது ஒரு நாள் மாட்டிக் கொள்வாள்.. இது எழுத்து வடிவம் அல்லவா புகுந்து விளையாடினாள்..  

கீங் கீங் மெசேஜ் அடிக்க கையை கழுவி கொண்டு நின்ற நாயகம் போனை பல்லை கடித்து பார்த்தான்... 

"யோவ் மீசை எப்போய்யா ஓகே சொல்ல போற... உன்ன அம்புட்டு பிடிச்சிருக்கு உன் தாலியை குலுங்க குலுங்க கட்டிக்கிட்டு சுத்தணும்யா ... படுக்கை மீது குப்புற படுத்து ஆடுதசை ஆட ரதி தன் மாமனுக்கு மெசேஜ் அனுப்ப .... சட்டென மெசேஜ் வந்த நம்பருக்கு இவன் போனை போட்டுவிட...

"அய்யய்யோ" என்று பதறி ரதி போனை ஆப் பண்ண போக கை பட்டு ஆணாகி விட்டது ...

"______ அரிப்பெடுத்த நாயே , உன் அரிப்புக்கு ஊர்ல எவனாவது சுத்தி வருவான், அவன் கிட்ட போய் உரசி கிட்டு நின்னு.. இன்னொரு வாட்டி கண்ட மாதிரி எனக்கு அனுப்புறது , கொஞ்சுறது குலாவுறது எல்லாம் வச்சுக்கிட்ட, உன்னை கண்டுபிடிச்சு வந்து கழுத்து மேலேயே போட்டுருவேன் கீங் கீங் என்று கட் ஆன சத்தம் வர நாயகம் மீண்டும் போன் போட ஸ்விட்ச் ஆப் என்று வந்தது ...  

"அந்த பயம் இருக்கட்டும், பொட்டச்சி விரிச்சு காட்டுனா, அப்படியே மேல வந்து விழுந்திடுவேன்னு அவளுகளா நெனச்சுப்பாளுக போல இருக்கு... அது வேற எவன்கிட்டேயும், நான் பெரியநாயகம் " என்று காலால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு திட்டிகொண்டே போய் அவன் புல்லட்டை எடுக்க ...

படுக்கையில் கிடந்த ரதிதேவிக்கு குளிர் காய்ச்சல் வந்தது போல உடல் எல்லாம் கிடு கிடுவென்று நடுங்கியது.

"எம்மாடி என்னா திட்டு விழுது , இந்த வேலையை பார்க்கிறது நான்தான்னு தெரியணும் அப்போ இருக்கு... கடவுளே மீசையை சமாளிக்க எனக்கு சக்தி கொடு... காதலிக்க எல்லாம் சந்தோஷமாத்தேன் இருக்கு, ஆனா இவரை சமாளிச்சு கல்யாணம் கட்டி கரை சேர்வதற்கு முன்னாடி, என் உசுரு போய்ரும் போல இருக்கே... என்று புலம்பி கொண்டே ரதிதேவி போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி தன் துணிகளுக்கு இடையில் மறைத்து போட்டாள்

பத்து நாளைக்கு இந்த போனை கையில எடுக்கவே கூடாது... பத்து நாள்தான் அதன் பின் சேட்டை தொடரும் அவாவில் அவன் நினைவில் கட்டிலில் உருண்டாள்.. 

தெரியும் இதெல்லாம் தவறு என்று,

தெரிந்தும் அந்தத் தவறை செய்ய வைப்பது தானே காதல் 

தெரியும் இது எல்லாம் புதை குழியில் போய் சிக்கிக் கொள்ள வைக்கும் என்று

தெரிந்தும் புதைக்குழியில் போய் விழுவது தானே காதல்

தெரியும் இது எல்லாம் நாளை பிரச்சனையை இழுத்து விடும் என்று,

தெரிந்தும் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளி வைத்து ரசிப்பது தானே காதல் என்பது 

காதல் அறிவாளிகளின் சொத்தா, இல்லை அறிவில்லாதவர்களின் சொத்தா?

காதல் தெருளோ? மருளோ??