மூப்பு அடையா யட்சகா 16

Yecha16

மூப்பு அடையா யட்சகா 16

16 மூப்பு அடையா யட்சகா!!

தன் வீட்டில் தன் அறையில் படுக்கை மீது சட்டை கூட மாற்றாமல் அப்படியே படுத்து கிடந்த யட்சன் உடல் கரும் பாறையை விட அதிகமாய் இறுகி போய் கிடந்தது ,  பழைய நியாபகங்களில் மூடிய கண்களில் கூட எரிந்த தணலில் அந்த அறையே வெப்பமாகி இருக்கும்...  ரெண்டு வருடங்கள் நின்ற இடத்திலேயே நின்றதே!!  

அவள் போனதை கூட கோவத்தில் போகிறாள் என்று ஏற்று கொள்ள முடிந்த  அவனால்...  ஒரு வாரத்தில் அவன் வங்கி கணக்கில் இருந்த மொத்த ரூபாயும் எடுக்கப்பட்டது அதிர்ச்சி... போதாக்குறைக்கு சூட்கேசில் வைத்திருந்த பணமும் காணவில்லை ... 

சீசீ அப்போ பணம் மட்டும் தான் இவளுக்கு குறியா இருந்ததா?   அவளை தேடி போக வேண்டும் என்ற ஆசையே போய்  விட்டது.... இதற்கு மேல் இந்த உறவில் என்ன இருக்கிறது அவனுக்கே தெரியவில்லை...

இத்தனை வயதில் ஏமாந்து விட்டேன் ஒரு பெண்ணிடம் பணத்தை ஏமாந்தேன் என்று சொல்ல முடியுமா வெட்ககேடு !! 

அவளிடம் என்னை இழந்தேன் என்று சொல்ல முடியுமா?  அவள் எனக்கு  பெரிய பூவை காதில் சுற்றி விட்டு போய்விட்டாள் என்று சொல்ல முடியுமா ??

தன் ஆசையால் வந்த வினை!!  வயதுக்கு மீறி மரியாதை மறந்து ஒரு பெண்ணின் மார்பில் மதி இழந்து கிடந்த அவனுக்கு கிடைத்தது..  ஏமாற்றம் , நட்டம் ... மன உளைச்சல் , மரியாதை குறைச்சல் ,  அதை வெளியே காட்ட முடியுமா? அப்படியே  அவளோடு வாழ்ந்த ரகசிய வாழ்க்கையை அவனோடே புதைத்து கொண்டான்... மறுபடியும் அவளை இப்படி ஒரு உறவு சிக்கலில் பார்ப்போம் என்று கனவிலும் நினைக்க வில்லை.... 

படுக்கை மீது சுருண்டு கிடந்தாள் தேனிசை , அவள் நினைவும் பழைய நாட்களை தீண்டி வந்ததோ?!!  தலையணை ஈரமாக இருக்க திடுக்கிட்டு குனிந்து பார்க்க அவள் கண்ணீரில் தலையணை நனைந்து போய் கிடந்தது ... இதழ் விரித்து சிரித்தாள் வலியால் உண்டான புன்னைகையா? மறுபடியும் இவனிடம் மாட்ட வைத்த விதியை நினைத்து சிரித்தாளா?  இல்லை இப்படி அவன் முன்னே கேவலமாக நிற்பதை நின்று சிரித்தாளா?? கண்ணீரும் சிரிப்பும் ஒன்றாக வந்தது ... தோளை உலுக்கி கொண்டவள்... 

கானல் நீர் தாகம் தீர்க்காது ,அப்படிதான் அந்த கானல் வாழ்க்கை ....  நான் தெளிவாதான இருந்தேன்  அவர் ஏமாந்தா நான் என்ன செய்ய முடியும் ....  என்ன இனி இவரை சமாளிக்கணும்  , ஊப்ஊஊஊஊ காற்றை நிரப்பி ஊதியவள்.... யட்சன் முன்னே போவதே இல்லை .. அவனும் நடு இரவு தான் வருவான் சிறுது நேரம் கீழே உருட்டும் சத்தம்  அவளுக்கு கேட்கும் .... மாடி படியில் அவன் ஏறி போகும் போது ஷூ சத்தமும் .... நடுநிசி இரவு மொட்டை மாடி அவன் ஏறி போகும் போது கைசெயின் கரீச் கரீச் என்றும் உரசும் சத்தமும் கேட்கும்....  நல்லவேளை ஜீவா அறை அருகே இவள் அறை இருந்தது எனவே யட்சன் இந்த பக்கம் வருவதே இல்லை.... 

ஒரு வாரம் கழிந்தது  இந்த வீட்டு விருந்தாளியாக  நன்றாகவே அவளுக்கு கவனிப்பு இருந்தது .... 

என்ன இசை அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்க... அப்பா எதுக்கு உன்னை இங்க கூட்டிட்டு வந்தார்னு நினைக்கிற என்று ஜீவா காலையில் வந்து  அவள் முன்னே நிற்க 

"வேற எதுக்கு அப்போ விட்டதை இப்ப பிடிக்க.... 

"என்ன சொன்ன இசை 

தெரியலன்னு சொன்னேன் ஜீவா ...

"அப்பா எதை செஞ்சாலும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்

"ஆமா ஆமா எது செஞ்சாலும் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்று முனங்கிக் கொண்டாள்,

வீடு முழுவதும் தகப்பனும் மகனும் தோளில் கை போட்டு கம்பீரமாக விதவிதமாக நிற்கும் போட்டோக்கள்...  மகன் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை சொல்லாமல் சொன்னது...

"உன்ன ஒரு மாசம் தன்னோட கண் பார்வையில் வச்சு,  நீ இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ணு தானா எங்கள நல்லா வச்சுகுவியான்னு வாட்ச் பண்றதுக்காகதான் உன்னை இங்க கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் ..."

"ப்ச், இவன் வேற கிழவனோட சேட்டை புரியாம , ஆகா ஓகோன்னு அப்பப்போ சர்டிபிகேட் கொடுத்துக்கிட்டே இருக்கான்,  எனக்கு தான்டா தெரியும்  கிழவன்  எவ்வளவு பெரிய திருடன்னு  .... 

"சோ சூட்டிப்பா இரு ... இந்த வீடு உன் வீடா இருந்தா இப்படி இருப்பியா என்றதும் அவள் இல்லை என்று  தலை ஆட்ட 

"அதைத்தான் சொல்றேன் , உன் வீட்ல நீ எப்படி பொறுப்பா இருப்பியோ...  அதே மாதிரி இங்க நடந்துக்கோ ... யார் யாருக்கு என்ன வேணும்னு பார்த்து செய் ... அதோட எங்க அப்பாவ கொஞ்சம் ஐஸ் வைக்க பழகு...  அவருக்கு என்ன வேணும்னு கொஞ்சம் அதிகமாகவே பார்த்து பண்ணு..."

"ம்ம்

"அப்பதான் ஆளு மசிவாரு புரியுதா? 

"உன் அப்பனுக்கு என்னென்னல்லாம் எப்ப எல்லாம் தேவைப்படும்னு தெரிஞ்சவ  நான்தான் ... அதெல்லாம் கொடுத்தா இப்ப இருக்கிற நிலைமைக்கு விளக்கிடும்... "

"அம்மா இல்லாத குறையை  வர்றவ பூர்த்தி செய்யணும்கிறது தான் அப்பாவோட ஆசை எனக்கும் சரி எங்க அப்பாவுக்கும் சரி , எங்க அம்மா இருந்திருந்தா  எப்படி இருந்து இருப்பாங்களோ,  அதை எல்லாம் நீ தான் இனி செய்யணும்

"இவன் பேசுறது எல்லாம் என்  காதுக்கு நான் சிங்காவே கேக்குதே....ஊப் கடவுளே !! யாருக்கும் தெரியாதுன்னு செஞ்சு வச்ச வேலை எல்லாம் இப்படி கொஞ்சம் கொஞ்சமா உசுரை எடுக்குதே" என்று புலம்ப தான் முடிந்தது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக மாட்டி கொண்டு முழித்தாள்...

"சரி ஜீவா இனி கவனமா இருக்கேன்"  என்று வேறு வழி இல்லாது கீழே இறங்கி வந்தாள்..   வேலை எல்லாம் கீழே நேர்த்தியாக நடந்து கொண்டிருந்தது... அது யட்சன் மீது உள்ள பயம் என்று தெரியாது இல்லை ...  அவள் பார்த்த யட்சன் இங்கே இல்லை இவன் முழுதாக ஆதிக்க குணம் கொண்டவன் சமுதாயத்தில் மரியாதை எனும் முகமூடியை இறுக்கி பிடித்து கொண்டு திமிரும் மிடுக்கும் பணமும் என்று வாழும் நரை வயதோன்... 

 எப்படி இங்கே தன் அடுத்த அத்தியாயத்தை தொடங்க சத்தியமாக அவளுக்கு தெரியவில்லை.. பூஜை அறைக்குள் தயங்கி  தயங்கி நுழைந்தாள்...  சாமி படம் முன்னே தங்கத்தாலி ஒன்று ,  தங்கசிமிழ் உள்ளே இருந்தது ... 

பூஜையில் இருந்து  தொடங்கிட்டியா சூசூப்பர் இசை என்று ஜீவாவும் உள்ளே நுழைய ... 

ம்ம் வா ஜீவா ,  அவள் பார்வை அந்த தாலியில் இருக்க 

"இது அம்மா தாலி 

"ஓஓஓஓஓ .... 

"இந்த வீட்டுக்கு வர போற பொண்ணுக்காக காத்திருக்கு .... 

"ஓஓஓஓ ....  

"என்ன எப்பவும் வெடி பட்டாசா பேசுவ ,இப்ப ரொம்ப அமைதியா இருக்க 

"புது இடம் புது மனிதர்கள் புது சூழ்நிலைல்ல ஜீவா அதான் கொஞ்சம் தயக்கம் போக போக பழகிப்பேன்...   என்ன சாப்பிட வேணும்னு சொல்லு சமைச்சு தர்றேன் 

"ஹே சூப்பர் ....  இட்லி பூரி  ...

"ம்ம் சமையல் அறை உள்ளே நுழைந்து விட்டாள்.. ஆனால் பயப்பந்து ஒன்று உருண்டது .... யட்சன் எப்போ வருவானோ  எப்படி எதிர்கொள்ள.... அவன் எதிர்வினைகள் எப்படி இருக்குமோ ,  அவள் கவனம் எல்லாம் மாடிப்படியில் தான் .... 

கண்ணாடி மாளிகை உள்ளே டைனிங் டேபிளில்  ஜீவா வந்து சாப்பிட அமர்ந்தவன் ... 

இசை "

"இசை 

"இசை இஇஇஇ  கிச்சனில் யோசனையாக நின்று கொண்டிருந்த தேனிசை அவன் குரலில்  சட்டென உடல் திடுக்கிட்டு 

"ஹான் ஜீவா 

"சாப்பாடு ரெடியா 

"ம்ம் 

"என்ன எல்லாம் பண்ணி இருக்க,  ஐயம் சோ எக்சைட்டட்  எப்பவும் வேலைக்காரங்க கையால சாப்பிட்டு சாப்பிட்டு போர் , எப்படா நமக்குன்னு ஒருத்தவங்க வந்து பார்த்து பார்த்து சமைச்சு அவங்க கையால பறிமாறுவாங்கன்னு ரொம்ப நாள் ஏக்கம் .. இன்னைக்கு தான் நிறைவேற போகுது,  சீக்கிரம் சீக்கிரம் உன் சாப்பாட்டை சாப்பிட வெயிட்ங் என்று ஜீவா உட்கார ....

"இதோ முடிஞ்சு ஜீவா  என்று தேனிசை சாப்பாட்டை கொண்டு வந்து டேபிளில் வைக்க..  ஸ்போர்ட்ஸ் ஷூ சத்தம் கேட்டு சட்டென தேனிசை திரும்பி பார்க்க , உடற்பயிற்சி உடையோடு  ஒட்டிய வயிறும் திண்ணிய உடலும் என்று ட்ராக் பேண்ட் சகிதம் மாடி படியில் இறங்கி வந்து கொண்டிருந்தான்  யட்சன்..... 

"குட் மார்னிங் டேட் 

"குட் மார்னிங்டா,  என்ன எட்டு மணிக்கே விருந்தா?  என்று போகிற போக்கில்  சொல்லி விட்டு யட்சன் வெளியே போய் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க...  தேனிசை கைகள்தான் ஜீவாவுக்கு உணவு பறிமாறியது கண் என்னவோ வயதான வாலிபன் மீது தான் ..

வயது வெறும் எண்தானோ 

முதுமைக்கும் இளமை எண்ணங்களுக்கும் சம்மந்தம் இல்லையோ என்று நினைக்கும் அளவு அவன் துள்ளல் துறுதுறுப்பு செயல் சேட்டை எப்போதும் இருக்கும் இப்போதும் அது குறையவில்லை  .... 

"இசை 

"இசை 

"ஹான் ஜீவா பதறி ஜீவாவை பார்க்க 

"அப்பப்ப கோமா போயிடுவ போல 

"அது  லிட்டில் டென்சன் அதான் 

"நேத்து ஏதோ  பேசணும்னு சொன்னியே இசை 

"ம்ம் சாப்பிடு பிறகு பேசலாம் ... அவன் சாப்பிடும் வரை பொறுமையாக நின்றவள் கண்கள் வியர்வை வடிய வொர்க்கவுட் பண்ணியவன்  வெள்ளை மீசை வெயில் தங்கம் போல மின்னுவதை ரெண்டு நொடி அதிகம் பார்த்தது மெய் !! 

"ஏப்இஇஇஇ சாப்பாடு செம , அம்மா கையால நான் சாப்பிட்டது இல்ல , முதல் முதலா உன் கையால சாப்பிட்டு இருக்கேன் மனசும் வயிறும் ஃபுல்" என்ற ஜீவாவுக்கு கையை துடைக்க டவலை எடுத்து நீட்டினாள் தேனிசை 

"ம்ம் இப்ப சொல்லு என்ன கேட்கணும் ..  சற்று தயங்கிய தேனிசை 

"நேத்து கேட்டிருந்தேனே ஒரு பத்து லட்ச ரூபா அவசரமா தேவைப்படுது,  இருக்குமா,  கிடைக்குமா ஜீவா?  என்று அவன் முகம் பார்க்காது தரையை பார்த்துக் கொண்டே  தேனிசை கேட்க ..

"ஆமால்ல சொல்ல மறந்தே போயிட்டேன்...  நேத்து நைட் பார்ட்டிக்கு போயிட்டு செம டையர்ட், வந்ததும் தூங்கிட்டேன் .. நீ கேட்ட   உடனே அப்பாகிட்ட கேட்டேன் என்று ஜீவா சொன்னதும் சலிப்பாக தலையை பிடித்தாள்

 "இன்கம் டேக்ஸ் ரைடு போயிட்டு இருக்காம்.  இப்போ 10 பைசா கூட எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்... பல்லை நர நர என்று ஜீவாவுக்கு தெரியாமல் கடித்துக் கொண்டவள்

ஓஓஓ 

"சாரி இசை ஒரு வாரம் பொறுத்துக்கோ,  அதுக்குள்ள எல்லாம் சரியாயிடும்.. 

இட்ஸ் ஓகே "வலுக்கட்டாயமாக சிரித்துவிட்டு ஜீவா தலை மறையும் வரை காத்திருந்தவள் ... வேக வேகமாக தோட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்

முதுகை காட்டி நின்று  50 கிலோ எடையை தூக்கிக் கொண்டு நின்ற யட்சன்  பின்னால் போய் தேனிசை  நிற்க காதுமடல் மட்டும் லேசாக சிவந்தவன் திரும்பி பார்க்கவே இல்லை ....

என்ன வேணும் என்றான் கனத்தை தூக்கிக் கொண்டே 

"பணம் வேணும்" என்றதும் கனத்தை தூக்கி தரையில் போட்டு விட்டு அவன் தலையை திருப்பி தேனிசையை பார்க்க....  தன் சேலை முந்தானையை கசக்கி கொண்டு அவனை நேர்கொண்ட பார்வை பார்த்தவள்

"10 லட்ச ரூபாய் வேணும் ,எத்தனை முத்தம் வேணும்னு சொல்லுங்க தர்றேன்...  பட் எனக்கு பணம் உடனே வேணும் என்று நின்றவளை  இடையில் கை வைத்து பார்த்தவன்

"உன் முத்தத்துக்கு லட்சக்கணக்கில் தந்த ஏமாளி யட்சன்னு  நெனச்சியா,  கிழவன்  ஏமாந்துடுவான்னு நினைச்சு வந்திருந்தா,  அந்த எண்ணத்தை டெட்டால்  ஊத்தி அழிச்சுடு .... சலிப்பாக முகத்தை சுருக்கிய தேனிசை

"என் முத்தத்துக்கு எவ்வளவுதான் தர முடியும்னு  சொல்லுங்க .... அவளுக்கும் அவள் இளமைக்கும் பேரம் பேசும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்...  விசில் அடித்துக் கொண்டே தன் வெள்ளை தாடியை கோதி  சரி செய்தபடி  அவள் பக்கத்தில் அடி மேல் அடி வைத்து வர .. இவள் பின்னால் நகர , தென்னை மரத்தில் போய் இடித்துக் கொண்டு நின்றவள் இருபுறமும் கையை வைத்து தடுத்து நிறுத்தவன் ...

ம்ம் , ஒரு முத்தத்துக்கு ஆயிரம் ரூபாய் தரலாம் 

ஆயிரமா??  தேனிசை முகம் தொங்கி போக 

"ஏன் ரொம்ப குறைவா இருக்கோ ? 

"ம்ம் எனக்கு கொஞ்சம் அதிகம் பணம் தேவைப்படுது எவ்வளவு மேக்ஸிமம் தர முடியும்..

"சரி போனா  போகட்டும் , ஒரு முத்தத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் தரேன்... ஒரு நைட்டுக்கு பத்தாயிரம் தரேன் நீ என்ன புது ஆளா எல்லாம் பழசுதான.. புது பொண்ணுக்கு லட்ச கணக்குல கொட்டி கொடுக்கலாம் உனக்கு இதுவே பெருசு சுகர்பேபி என்றான் யட்சன் குசும்பாக ...அவள் கண்ணை உருட்டி யோசிக்க

அவ்வளவுதானா??  

"சீசீ ,  ஏண்டி உனக்கு அசிங்கமாக இல்ல அன்னைக்கு பணத்துக்காக என்கூட வந்த, இன்னிக்கு,  என் மகன் கூட அந்த பணத்துக்காக ஒட்டிக்கிட்டு இருக்க,  கேவலமா இல்ல "என்றதும் சட்டென அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்த தேனிசை 

"இல்ல கேவலமா இல்ல , அசிங்கமா இல்ல அருவருப்பா இல்ல , எனக்கு பணம் வேணும் எனக்கு கோடி கோடியா பணம் வேணும் ... எவன் தந்தாலும் போவேன் , எவன் பணத்தை தந்து கூப்பிட்டாலும் போவேன் ... போவேன் போவேன் என்று கத்தினான்...,  இவனும் ஆத்திரத்தில் தேனிசை கழுத்தை பிடித்து நெரிக்க... சற்றும் அசராது அவன் பிடியில் கிடந்தாள் தேனிசை...

"இதுக்கு பேரு என்ன தெரியுமாடி எச்சைத் தனம்: என்று அவள் கழுத்தைப் பிடிக்க 

"என்ன தே......யான்னு கூட சொல்லுங்க,  எனக்கு கவலை இல்லை,  கண்ணகிக்கு சிலை வச்ச மாதிரி எனக்கு ஒன்னும் எவனும் சிலை  வைக்க வேண்டாம் .... நான் யாருக்கும் சீதையா இருக்க வேண்டிய தேவை இல்லை... நான் பத்தினியா  இருந்து எதையும் சாதிக்க போறதும் இல்லை அடமானம் வைக்க பொருள் இல்லை,  என் உடம்பும் அழகும் இருக்கு அதை அடமானம் வைக்கிறேன் விற்க   தயாரா இருக்கேன் ...  எனக்கு தேவை பணம் அது எங்க கிடைக்குதோ அங்க போவேன்..  அந்த பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் விடுங்க ... எத்தனை முத்தம் வேணும்..  எப்ப பணத்த கொடுப்பீங்க என்று அவள்  பணத்திலேயே நிற்க...  அவள் கழுத்தை விட்டவன் ...

உன் இஷ்டத்துக்கு எல்லாம் எனக்கு  மூட்  வராது அதுலேயும்  நான் கிழவன் வேற...   என் மகனுக்கு தெரியாம உன்னோட வரணும் ரிஸ்க் வேற 

"ப்ச்  இப்ப எல்லாம்   52 வயசுக்காரன் அஃபையர் வச்சிருக்கிறது நார்மல் ஆக்கிட்டாங்க., பொண்ணுங்களே பாதி பேர் சப்போர்ட் வேற பண்ணுவாங்க... பொண்டாட்டி இருக்கிறவன் வச்சாவே தப்பில்லை,  நீங்க வொய்ப் இல்லாத மனுசன் தானே உங்க மகன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டார் .... 

"ஓஓஓஓ அப்படியா அப்போ என் மகன்கிட்ட போய்  உங்க அப்பா கூட நான் போகவான்னு கேளேன் 

ப்ச் முடியாது ஒருவேளை நீங்க ஏமாத்திட்டா அவர்கிட்ட தான் அடுத்து காசு கேட்கணும்...  உங்களை நம்பி அவரை இழக்க விரும்பல என்றவள் பேச்சில் நரை மீசை எரிச்சலாக துடித்தது ...

"இப்ப என்ன செய்ய சொல்ற ? 

"முத்தம் தர்றேன், இல்லை வேறன்னாலும் ஓகேதான்...  காசு  கொடுங்க 

"எப்ப மூடு வருதோ அப்ப கூப்பிடுறேன்,  இப்ப உன் முத்தமும்  தேவையில்லை , மத்ததும் தேவையில்லை 

"ப்ச் ,  காலை உதைத்த தேனிசை...  

"வய..... ர மாத்திரை போட்டா மூடு வரும்னு சொல்லுவீங்களே வாங்கிட்டு வரட்டா 

"வரும்தான்.,  ஆனா  இப்படி வா வான்னு கூப்பிடுறவ கிட்ட வராது ... என்று யட்சன் திரும்பி நடக்க ...

அப்போ பணம் என்று கத்தியவளுக்கு....

பணம் என்ன மரத்துலையா காய்க்குது , நீ கேட்டதும் உலுக்கி கொடுக்க....  வியர்வை சிந்தி உழைச்சது சுகர்பேபி ,  நீயும் வியர்வை சிந்தி உழைச்சிட்டு வாங்கிக்க,  எனக்கு மூடு வர்ற  வரைக்கும் காத்து தான் இருக்கணும் , வேற வழி இல்லை"  என்று யட்சன் தோளை உலுக்கி விட்டுப்போக... 

நகத்தை கடித்துத் துப்பிக்கொண்டு போகும் அவனை  எரிச்சலாக பார்த்தபடி நின்றாள் தேனிசை..

எவன் சொன்னது உலகம் அன்பில் கட்டப்பட்டது என்று 

உலகமே பணத்தில் கட்டுப்பட்டது 

பணம் இருப்பவன் அதை ஆளுவான் 

இல்லாதவன் அடிமை ஆகி போவான் 

அன்புக்கும் பண்புக்கும் , ஒழுக்கத்துக்கும் இங்கே வேலையே இல்லை !!  

அன்று பெண் போதையில் வீழ்ந்தான்!

இன்று அதே பெண்ணால் மயக்கம் தெளிந்தானோ?