மூப்பு அடையா யட்சகா 15

Yeccha15

மூப்பு அடையா யட்சகா 15

15 மூப்பு அடையா யட்சகா !! 

யட்சன் இடையில் இரண்டு நாள் மகனை வந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஏற்காடு வந்து விட்டான்....

இந்த இரண்டு நாளில் தலை வெடித்து விடவா என்பது போல் ஆகிப் போனது...தேனிசை வேறு போன் போடும் போதெல்லாம் கட் பண்ண ....   கிறுக்கு பிடிக்கவா வேண்டாமா நிலை ... 

"தீராத போதை மாதிரி ஆகி போன...  என்னடி நீ,  என்ன இப்படி மயக்கி வச்சிருக்க ... ஒரு நிமிஷம் கூட எனக்கு தூக்கமே வரல தெரியுமா ... உன்னை இறுக்கி கட்டி புடிச்சுகிட்டு தூங்குற அந்த சுகம் தேடிச்சு , தலையணையை  கட்டிப்பிடிச்சு  பார்த்தேன்.."

"ம்ம் 

"ஆனா உன்கிட்ட இருக்கிற அந்த நிம்மதி வேற எங்கேயும் கிடைக்கல..."

"போதும்டா சாமின்னு மகன்கிட்ட அதை இதை சொல்லிட்டு  ஓடி வந்துட்டேன் தெரியுமா?  இந்தா உனக்காக வாங்கிட்டு வந்தேன்" என்று அவள் முன்னால்  வாங்கி வந்த பரிசுகளை குவித்து போட்டான்... 

இரண்டு நாளும் அவள் ஞாபகத்திலேயே சுத்தி இருப்பான் போலிருக்கிறது நெயில் பாலிஷ் மூக்குக்கு போட வளையம்,காதுமாட்டி,  ஜிமிக்கி கண்ணுக்கு போட மஸ்காரா...  முகத்திற்கு பூச எக்கச்சக்கமாய் கிரீம் , கண்ணாடி வளையல்,  தங்க வளையல் மோதிரம் அவ்வளவு ஏன்? அவள் காலுக்கு போட செருப்பு வரை தேடி தேடி எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னால் குவித்து இருந்தான்

"நைட்டு எங்கேயாவது வண்டிய விட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கலாம்ல, கண்ணு சிவந்து போய் கிடக்கே  .... தலையில் தலைவலி மருந்தை தடவி விட்ட தேனிசை இடுப்பில் முகத்தை புதைத்தவன்... 

"ம்ம் , எடுக்கலாம்னு பார்த்தா அந்த ரெண்டு மணி நேரம் எதுக்கு வீணா போகணும் , அக்ஸிலெட்டரை அழுத்தி வந்து சேர்ந்திடுவோம்னு வந்துட்டேன் ... கால் எல்லாம் வலிடி "என்றதும் யட்சன்   காலடியில் போய் அமர்ந்து அவன் காலை தூக்கி தன் மடியில் வைத்தவள்,  மெல்ல நீவி சொடுக்கு எடுக்க...

"அப்பா அப்படித்தான் இப்பதான் கண்ணே திறக்குது , நீ  ரெண்டு நாளா,  நான் இல்லாம ஜாலியா இருந்திருப்பியே ... தொல்லை கொடுக்குறதுக்கு கிழவன் இல்ல , இடுப்பு வலி இல்லாம தூங்கலாம்னு தூங்கி இருப்பியே என்று இன்னொரு காலால் அவள் சேலையில் தெரிந்த இடை உள்ளே  கோலமிட 

ஆமா  ஆமா , இடுப்பு இத்தனை நாளா கதறுனதுக்கு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துச்சு .... 

"மகன் பக்கத்துல இருந்தானா போன் கூட  நினைச்ச நேரம் போட முடியல ... நான்தான் போடல ,, ராத்திரி நீயாவது போட்டு இருக்கலாம்ல போன் போட்டாலும் கட் பண்ணி கட் பண்ணி விடுற 

என்ன செய்றது அம்மா அப்பா வந்துட்டாங்க

அப்படியா சொல்லவே இல்ல... 

"உன்ன பாக்குறதுக்கு வர்றேன்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தாங்க ... நான் அதை இதை சொல்லி மழுப்பிட்டே இருந்தேன்...  நல்ல வேளை  நீங்கள் இல்லாத நேரமா பார்த்து வந்து நின்னாங்க...அதான் போனை எடுக்கல ...

ஒரு மெசேஜாவது அனுப்பி விட்டு இருக்கலாம்ல்ல என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு  பயந்து வந்து சேர்ந்து இருக்கேன்டி.. 

நான் என்ன செய்யிறது,  போனை எடுத்தாவே  அம்மா குறுகுறுன்னு பார்ப்பாங்க...  அதுல வேற எங்க அத்தை மகனும் வந்திருந்தானா?

"யாரு 

"பிரபு 

கண்களைச் சுருக்கி அவன் பார்வை அவளை பார்க்க

"ஏதோ இந்த வேலையா வந்திருப்பாரு போல இருக்கு...  அதான் அம்மா இங்க கூட்டிட்டு வந்திருந்தாங்க ... வெளியே ரூம் எடுத்து தான் தங்கினார் இதர தகவலும் கொடுத்தாள்..

"ம்ம்  "என்றவள் சேலையை முந்தானையை யட்சன் சுருட்ட ரெண்டு நாள் பட்டினி கிடந்த நரைத்த மீசைக்கு கொழுக்க  தீனி போட்டு தூங்க போட்டாள் ...

காலை தேனிசை போன் அலர  , அவன் சட்டையை அயர்ன் பண்ணி கொண்டு நின்றவள் 

"அதை அட்டென் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டுட்டு போங்களேன் "என்றதும் நியூஸ்பேப்பரை படிக்க எடுத்த யட்சன் அவள் போனை ஆண் பண்ணி அருகே வைத்து வி்ட்டு அவனும் படுக்கை மீது அமர்ந்து பேப்பரை வாசிக்க சில பல நலவிசாரிப்பு 

"இசைம்மா கேட்டேனே,  நீ பதிலே சொல்லலையே என்று தேனிசை தாம் கேப்க... அவள் சட்டென யட்சனை பார்க்க .. போன் அவன் அருகேதான் கிடந்தது இவர்கள் பேச்சை கேட்டு கொண்டு தான் பேப்பர் வாசிக்கிறான் புரிய 

பிறகு பேசுறேன்மா :

"பிரபுவும் அவங்க அம்மாவும் வந்து உட்கார்ந்து இருக்காங்கடி முடிவு சொல்லுன்னு.... நீ ஓகே சொன்னா கல்யாண தேதியை முடிவு பண்ணலாம் .... என்றதும் யட்சன்  சட்டென தலையை உயர்த்தி அவளை பார்த்தான் 

பிறகு பேசுறேன்மா என்று போனை எடுக்க வர . தன் கால் கொண்டு போனை நக்டடி போட்ட யட்சன் பேசு என்றது போல பல்லை கடிக்க ...

இசை இசை 

ஹான் இருக்கேன்மா சற்று முகம் பதறியது அதைத்தான் அவன் கண்கள் நோட்டம் போட்டது 

நல்லா படிச்சிருக்கான் நல்ல குணம் உள்ள புள்ள,  உனக்கும் அவனுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம் உன்ன நல்லபடியா வாழ வைக்கிற அளவுக்கு சம்பாதிக்கிறான்,  எங்கள பத்தி கவலைப்படாத இசை..  மூன்று வேளை  சசாப்பாடுபோதும் எப்படியாவது வாழ்ந்துக்குவோம் ... நீ நல்லா இருக்கிறதை பார்த்தாலே எங்களுக்கு போதும்டா தங்கம்..  நீ சரின்னு சொன்னா அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷப்படுவோம்,,  தீப்பார்வை பார்த்த யட்சனை மெலிதாக  பார்த்து வி்ட்டு பெருமூச்சு விட்ட தேனிசை 

"அம்மா ஆறு மாசம் இங்க கமிட் ஆகி இருக்கேன் ...

"ஓஓஓஓ அதுக்கு பிறகு கல்யாணம் வச்சிக்கலாம்னு பிரபு சொல்றான்மா "

"அது வந்தும்மா 

"உன்ன அவன் கையில பிடிச்சு கொடுத்து சந்தோசமா இருக்கிறதை பார்க்க நினைச்சோம் விடு கடைசி வரை இதுதான் விதின்னா என்ன செய்ய முடியும் "தாய் அழும் குரல் வர 

ம்மா ... 

"என்ன சொல்லணும்னு சொல்லிடு இசை நான் சொல்லி அனுப்பிடுறேன்.... 

"ஆறு மாசம் கழிச்சு  பேசிக்கலாம்னு சொல்லுங்க ம்மா .... 

"அப்படியா தங்கம் 

"ம்ம் 

"நீ ஓகே சொல்லுவ தான 

"ம்ம்ஊஊஊஊ படீர் இஇஇஇஇஇஇஇஇ என்று போன் தரையில் விழுந்து சுள்ளி சுள்ளியாக உடைந்து தெறித்தது.... தரை அதிர அவள் அருகே வந்த யட்சன்  

"என்னடி நடக்குது இங்க ... உன் அம்மா என்ன சொன்னாங்க

"அது அது  தேனிசை தடுமாறி பின்னே நகர 

"உன்கிட்ட தான் கேட்கிறேன் ஏதோ கல்யாணம் அது இதுன்னு ... பொண்ணு பார்க்க தான் அந்த பையன் வந்தானா??

"ம்ம்   என்று தலைகுனிய போன அவள் நாடியை உயர்த்தி பிடிக்க அவன் விரல் அழுத்தியதில் தேனிசை கன்னம் வலித்தது...

"ஏன் என்கிட்ட சொல்லலை...அப்போ  சேலை கட்டி பூ வச்சி அவன் முன்ன புது பொண்ணு போல காப்பி நீட்டினியா "

"அது அம்மா தான் அவன் கைக்கும் அவள் கன்னத்துக்கும் அரை இஞ்ச் இடைவேளை மடடுமே அறை விழாது தப்பித்தாள்..... 

"இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல என்றவன் பேச்சில்  சட்டென முகத்தை தூக்கி அவன் கண்ணுக்கு நேராக பார்த்த தேனிசை யட்சன் கையை வெடுக்கென தள்ளி விட்டுவிட்டு

"இப்போ எதுக்கு என் செல்போனை தூக்கி போட்டு உடைச்சிங்க... என்று தேனிசை  உடைந்து  துண்டு துண்டாக போன செல்போனை குனிந்து எடுத்துக் கொண்டே,  சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்த யட்சனை அண்ணாந்து பார்க்க..  அவனோ  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி,  ஒற்றை கையை இடையில் வைத்துக் கொண்டு,  சுருள் சுருளாக சிகரெட்டை ஊதி தள்ளிக் கொண்டிருக்க....

"அஞ்சு மாசமோ ஆறு மாசமோ அதுக்கு பிறகு பழையபடி என் வீட்டுக்கு என் வாழ்க்கைக்குள்ள நான் திரும்பி போகத்தான் செய்யணும்...  காலம் முழுக்க உங்க கூட என்ன வச்சுக்க போறீங்களா? நீங்க வச்சுக்க தயாரா இருந்தாலும் நான் தயார் இல்லை என்றவளை முறைத்து பார்க்க

" இப்ப எதுக்கு இவ்வளவு கோபம் வருது, "

"யாரை கேட்டுடி கல்யாணத்துக்கு சம்மதம்னு மண்டை ஆட்டுற

யாரை கேக்கணும்?

என்ன கேட்கணும்"

"எதுக்கு உங்களை கேட்கணும்,."

"வேண்டாம்  வாயை விடாத , நீ போ பிறகு பேசலாம் 

என்ன பிறகு பேசலாம் இப்பவே பேசலாம் இப்பவே பேசி முடிச்சிடலாம் என்றவளும் விடாப்பிடியாக நிற்க ..

"இதெல்லாம் சரி வராதுன்னு  போன் போட்டு சொல்லு .. மாப்ள எல்லாம் பார்க்க வேண்டாம் அவனுக்கு வேற ஏதாவது பொண்ணு பார்த்து  கல்யாணம் கட்டி வைக்க சொல்லு...

எதுக்கு சொல்லணும் 

"கூட கூட பேசாத ஒரு லெவலுக்குதான் என் ஆத்திரத்தை அடக்கி வைப்பேன்?  அடிச்சா தாங்க மாட்டன்னு அமைதியா நிக்குறேன்...  வேண்டாத பேச்சு பேசி வாங்கி கட்டிக்காத.. 

உங்க கூட படுக்கறதுக்கு மட்டும் தான் காசு வாங்கிட்டு இருக்கேன்,  அடிக்கிறதுக்கு கமிட் ஆகல 

ஏய் ஏய் என்று யட்சன் அவளை அடிப்பதற்கு மீண்டும் கையை ஓங்க,  அவன் மணிக்கட்டை பிடித்து தடுத்திருந்த தேனிசை 

"கடைசி வரைக்கும் உங்களுக்கு இப்படி ஆசை நாயகியா இருக்க சொல்றீங்களா ? 

"இருந்தா என்னடி தப்பு  , பொண்டாட்டி மாதிரி வாழ்ந்துட்டு போ 

"எனக்கு அப்படி இருக்க வேண்டிய தேவை இல்லை....  இப்ப சொன்னீங்களே பொண்டாட்டி மாதிரி என்ன மாதிரி மட்டும் தான் பொண்டாட்டி ஆக முடியாது இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லப் போறியா இல்லையா என்று எச்சன் பல் நர நர என்று அரைபட்டது..

"சொல்ல முடியாதுல்ல... அப்போ  என் தனிப்பட்ட வாழ்க்கையில முடிவு எடுக்க , என் பெர்சனல் பத்தி பேச நீங்க யாரு என்றவள் கன்னத்தில் முதல் அறை பளீர் டன்று விழுந்திருந்தது ....

"ஆஆஆஆஆ 

"நான் யாரா நான் யாரா உனக்கும் எனக்கும்...

"ம்ம்  சொல்லுங்க எனக்கும் உங்களுக்கும் வலித்த கன்னத்தை தடவி கொண்டே உணடு விரித்து சிரித்தாள் எப்போதும் அவன் சிரிப்பை ரசிப்பவன் இன்று ஆத்திர மிகுதியில் மிதித்து கொன்று விடலாமா என்று நினைத்தான்,. 

"சொல்லுங்க நீங்களும் நானும் ... அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாற

"இந்த கட்டில் தாண்டி உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு .. சொல்லுங்க... நம்ம உறவுக்கு ஒரு புனிதமான பேர் சொல்லுங்க பாப்போம் முடியாது முடியாது சார் ஒத்துக்கோங்க..ஆசை தீரும் வர,  உங்க ஆசை முடியுறவரை இந்த கட்டிலுக்கு வேலை ... என் தேவை முடியும் வரை   உங்களோட வாழ்க்கை அப்புறம் சொல்லுங்க ,., உங்களை தப்பா சொல்லலை நானும் சரிஇல்லை... சோ நியாபடுத்த வேண்டாம்னு சொல்றேன்.... உங்களை விட்டு போன அப்புறம் எனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா ? உங்க கூட இருக்கும் போதே இன்னொருத்தர் கூட வாழ போறேன்னு சொல்லலையே ,  உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களுக்கு உத்தமியா இருக்கேன் ... அப்புறம் எவன் கூட எப்படி போனா உங்களுக்கு என்ன? 

ஏய்இஇஇஇஇஇஇஇஇ மீண்டும் அவன் கை உயர

"அடிக்கணுமா அடிங்க ஆனா நான் கேட்ட கேள்வி எதுக்காவது உங்களுக்கு பதில் சொல்ல முடியுதா? ஏன்னா என்கிட்டேயும் பதில் இல்லை சார்...

ப்ச் என்னதான் பண்ணணும்னு சொல்லுற?  

சரி இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன் .. ஒரே ஒரு தாலி சிங்கிள்  தாலி என் கழுத்துல கட்டி,  இந்த ஊர் அறிய என் கையை  பிடிச்சு இவ என் பொண்டாட்டின்னு உங்களால கூட்டிட்டு போக முடியுமா?  என்று அவள் கேள்வியில் ஆறடி மரமாக இருந்தவன் அப்படியே படுக்கை  மீது அமர ...

முடியாதுல்ல என்றவளுக்கு கசந்த புன்னகையும் கண்ணீரும் இதோ வந்து விடவா என்பது போல் இருக்க ... சட்டென முந்தானை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டவன் 

முடியாதுல்ல,  வைரம் வைடூரியம் மாணிக்கம் வீடு மாளிகை காசு பொன் பொருள்  எல்லாத்தையும் உங்களால வாங்கி கொடுக்க முடியும்...  அந்த ஒத்த தாலியை உங்களால கட்ட முடியுமா? கட்ட  தைரியம் இருக்கா ? இல்லல்ல , பிறகு எதுக்கு தேவை இல்லாம என்  வாழ்க்கையில தலையிடுறீங்க.... என்றவள்  முன்னால் இருந்த கண்ணாடி டீப்பாயில் யட்சன் ஓங்கி அடிக்க... அவன்  கையில் குருதி சாடியது ,.  கண்ணாடி துண்டுகள் அப்படியே அவன் கையில் குத்தி கிழித்தது 

"ஐயோ ஓஓஓஓஓ என்று பதறிவள் அவன் அருகே ஓடி வரப் போக ..கையை நீட்டி தடுத்தவன்

கெட் அவுட் என்று அடிபட்ட சிங்கமாக அவன் வார்த்தை வர 

ரத்தம் வருதுங்ட என்று தேனிசை  அவன் பக்கம் போக  துடிக்க..

"இது என் வாழ்க்கை என் வலி, இது  என்  அறை  எனக்கு  இப்போ உன்னோட உதவி தேவை , தேவை இல்ல கெட் அவுட் என்று அவன் சிங்கத்திற்கு ஒத்த அவளுக்கு இணையான கோபத்தில் கத்த ... 

போறியா இல்ல கழுத்தை பிடிச்சு  வெளியே தள்ளவாடி" என்றதும் மெலிதாக சிரித்தவள்...

இவ்வளவுதான் நம்ம உறவு ... இன்னைக்கு சொன்ன இதே வார்த்தையை என்னைக்காவது ஒரு நாள் சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?  உரிமையோ மரியாதையும் கழுத்துல தாலியும் கிடந்திருந்தா,  இப்ப நான் என்ன சொல்லி இருப்பேன் தெரியுமா...  நான் ஏன்டா வெளியே போகணும் ,  நான் உன் பொண்டாட்டின்னு சொல்லி இருப்பேன் அது இல்லாத உறவு என்னைக்கா இருந்தாலும் வெட்டிக்கிட்டு போகத்தான் செய்யும்...   

நான் தெளிவாக இருக்கேன் மிஸ்டர் யட்சன் . நீங்கதான் குழம்புக்குறிங்கன்னு நினைக்கிறேன்...  என் தேவை எது, என் லிமிட் எது,  என் வாழ்க்கை எது இப்ப என்ன செய்யணும்,  நாளைக்கு என்ன செய்யணும் , இனிமே என்ன செய்யணும்னு எல்லாத்துலேயும் நான் கிளியராதான் இருக்கேன்...  பட் நீங்க தான் ரொம்ப குழம்பி போய் இருக்கீங்க...  அஞ்சு மாசத்துக்கு பிறகு புடிச்சா தொடர்ந்துக்கலாம்...  இல்ல ரெண்டு பேரும் இந்த உறவை விட்டு வெளியே போயிடலாம்னு நீங்க சொன்னீங்க இல்ல...  இந்த அஞ்சு மாசத்தோட நம்ம உறவை முடிச்சுக்கலாம்... அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது ...

"நீ என்னடி எனக்கு பிச்சை போடுறது,  நீ யாருடி எனக்கு கெடுவைக்கிறது .. நீ என்னடி எனக்கு  பதில் சொல்றது ... சரிதான் போடி... அஞ்சு மாசம் இல்லடி 5 நிமிஷம் கூட இனி  நீ எனக்கு வேண்டாம்., போஓஓஓஓஓஓஓ என்று செக்கை எடுத்து   கையெழுத்து போட்டு அவன் முகத்தில் வீசியவன் 

நேத்து படுத்ததுக்கு எவ்வளவுன்னு நீதான் கணக்கு வச்சிருப்ப நீயே பில் பண்ணிக்க என்று சீற அந்த செக்கை மடித்து உள்ளங்கை உள்ளே வைத்தவள் முகம் சிவக்க யட்சன் பார்க்க ... 

தேங்க்ஸ் பார் எவிரிதிங்க் கிளம்பறேன் சார் 

ம்ம் என்று உறுமல் வர 

தோளை உலுக்கிய தேனிசை வெளியே வந்துவிட்டாள் ....  இரவோடு இரவாக ஆட்டோ வந்து நின்ற சத்தம் குடி  போதையில் உருண்டு கொண்டு  கிடந்த அவன் காதில் கேட்டது ...

எப்படி  இரவில் அவன் வாழ்க்கை உள்ளே வந்தாளோ அப்படியே இரவோடு இரவாக  போனாள்... 

பணத்துக்கு வந்தவளிடம் பாசத்தை காதலை எதிர்பார்த்து அவன் ஏமாந்தானா ? 

பணத்தை தேடி  வந்தவனிடம் மரியாதை தாலியை எதிர்பார்த்த அவள் ஏமாந்தாளா??