அநாயகா-38

அநாயகா-38

அநாயகா-38

அன்று தேர்தல் முடிவுகளை அறிவிப்பதால் இரண்டு கட்சியின் சார்பாகாவும் அங்கே கூடியிருந்தார்கள்.

இளந்தீரன்,ஆதிரா ரவீந்திரன் என்று எல்லோரும் அவனோடு இருந்தார்கள். 

அவர்களுக்கு எதிராக மதுமதியும் ரகுவரனும் உட்கார்ந்திருந்தார்கள். சிவானந்தனும் இருந்தார்.

ஒவ்வொரு இடத்திலிருந்தும் வந்த ஓட்டுகளும் பிரிக்கப்பட்டு எண்ணி அறிவிக்கும்போதெல்லாம் மதுமதியின் முகம் அப்படியே இறுகிப்போனது.

இளந்தீரனுக்குத்தான் அதை நம்பமுடியாமல் ஆதிராவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.

அவளோ சிறு புன்னகையோடு அந்த சூழ்நிலையை அழகாகக் கையாண்டாள்.

மதுமதி இளந்தீரனை இளக்காரமாக பார்க்கும் பார்வையும், அவளது முகமும் புது மதுமதியை அவனுக்குக் காட்டியது.

அழகான அமைதியான மதுமதியா? இது என்று கேட்குமளவிற்கு அவளது முகபாவனைகள் இருந்தது.

ஒரு முழு அரசியல்வாதியாக மாறியிருந்தாள்.

இது நான் காதலித்த மதுமதியா? என்று ஒவ்வொரு முறையும் அவள் தன்னைப் பார்க்கும்போதும் தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தான்.

ஒருத்தியால் எப்படி இவ்வளவு சீக்கிரமாக தன் குணத்தை இந்தளவுக்கு மாத்திக்கமுடியுது?என்று ஆச்சர்யபட்டான்.

ஆனால் ஆதிராவோ எந்தவிதமான வெறுப்பையும் எதிர்கட்சிக்காரங்க மேல,தன் முகத்துலக்கூட காண்பிக்காது, அதே புன்னைகையோடு இருந்தாள்.

அவனுக்கு இப்போ ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிராவை ஒவ்வொருவிதமாக பிடித்துப்போனது. அவனது பிடித்தங்கள் காதலைச்சார்ந்த உடலைச்சார்ந்தோ இல்லை. அப்படியே உணர்வுப்பூர்வாமாக அவளை உணர்ந்து இன்னும் அவள்மீதான பிடித்தங்களை அதிகமாக்கிக்கொண்டான்.

அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் ஊராக் சென்று செய்த பிரச்சாரத்திற்குப் பலனாக, தேர்தல் முடிவுகளும் வந்து சேர்ந்தது. 

கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கைப் போய்கொண்டிருக்கும்போதே மதுமதிக்கு கோபம் ஆத்திரம் என்று எல்லாம் கலந்து அது அப்படியே இளந்தீரன் மீது திரும்பியது. அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளும் மனநிலையில் இப்போது இளந்தீரன் இல்லை. அவன் ஆதிராவின் கையைப்பிடித்துக்கொண்டு அமைதியாக முடிவு என்ன என்பதைப் பார்க்க பதற்றத்தோடு அங்கயே திரும்பி உட்கார்ந்திருந்தான்.

அங்கே அந்த நேரத்தில் அப்படியொரு அமைதி நிலவியது. கடைசி சுற்று ஓட்டு எண்ணிமுடித்து முடிவை அறிவிக்கவும் ஜெயசந்திரனின் கட்சி ஆட்கள் ஓஓஓஓவென்று ஆர்ப்பரித்து, வெற்றியைக் கொண்டாடினார்கள். 

இளந்தீரனால் அதை நம்ப முடியாது ஆதிராவை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

அந்த இறுக்கத்தில் அவன் தன்னை உணர்ந்தான்!

இளந்திரன் வெற்றிபெற்று அந்த தொகுதி எம்.எல்.ஏவாகிட்டான்.

அவனது வெற்றியை சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு ஆர்ப்பரித்தவர்களையும், ஆதிராவையும் ரவியையும் பார்த்தவனுக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல என்று தெரியாது. ஆதிராவின் கையைப்பிடித்து முத்தம் வைத்தான்.

அவன் இத்தனை வருஷமா எதிர்பார்த்த கனவு ஒன்று நிறைவேறியிருக்கிறது. அதுக்கு முழுக்காரணமும் ஆதிரா மட்டும்தான்!அதனால் அந்த முத்தத்தை நெகிழ்ந்துதான் கொடுத்தான்.

அவன் ஜெயிச்ச சர்டிபிகேட் பேரோட குடுத்ததும் அதை கையில் வாங்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியோடு அதை வாங்கினான்.

அதை அவன் கையில் வாங்கிய அடுத்த நிமிடமே அப்படியே அவளது கையில் கொடுத்தவன் “இது நீ எனக்கு தந்தது. நீ எனக்கு விட்டுக்கொடுத்தது. எந்த இடத்தில் நிக்க வேண்டியது நீதான். ஆனால் நான் நிக்கிறேன். இப்படி விட்டுக் கொடுப்பதுக்குக்கூட ஒரு மனசு வேணும். அது புருஷனா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் விட்டுக் கொடுக்கிற அந்த மனசு இருக்கு தெரியுமா அதுக்கு எப்பவுமே நான் தலை வணங்குகிறேன். இந்த விட்டுக் கொடுக்கிறது இதோட மட்டும் வச்சுக்கோ என்னை எங்க விட்டு கொடுத்திடாத” நக்கலாக என்று சொல்லி சிரித்தவனின் சந்தோசம் அவளுக்குப் புரிந்தது.

ரவி ரொம்ப சந்தோஷப்பட்டான்.‌ அவனை அப்படியே கட்டிக் கொண்டவன் கண் கலங்கி விட்டான். 

“சத்தியமா இந்த மாதிரியான மாற்றத்தை உன்கிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கல இளா! உன் வாழ்க்கை என்னாகுமோன்னு தினமும் பயந்துட்டே இருந்தோம். நீ எதிரியாவே எங்கக்கிட்டயிருந்து பிரிஞ்சிடுவியோன்னு கவலைப்பட்டோம். தினம் நானும் மாமாவும் உன்னை பத்தி பேசாது‌ இருந்ததே இல்லை. மாமா உன்னைப் பத்தி நினைச்சு அவ்வளவு வருத்தப்படுவாரு. என்கிட்ட என்ன தெரியுமா சொல்லுவாரு நான் சின்ன வயசுல எப்படி இருந்தனோ அதைவிட அதிகமான எனர்ஜியோட இருக்கான். இந்த அரசியல்ல இவன் மேல வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. நான் எம்.எல்.ஏவோடவே நின்னுட்டேன். அவன் மேல மேலப் போகக்கூடிய நிறைய திறமை இருக்கு. ஆனால் அந்த திறமையை எதிராளிகிட்ட காண்பிச்சிட்டு இருக்கான் அதுதான் வருத்தமாக இருக்குன்னு சொல்லுவார். இந்த சர்டிபிகேட் கொண்டு போய் மாமாக்கிட்ட குடுப்போம். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாரு. உன்னோட இந்த வளர்ச்சிக்கு முதல் காரணமே அவர்தான். அவர்தான் உன் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். இப்பவும் அதே நம்பிக்கை வைச்சிருக்கிறார். அதைவிட அதிகமா ஆதிரா உன்மேல நம்பிக்கை வச்சிருக்கா. இந்த நம்பிக்கை காப்பாற்றுவன்னு என்று நானும் நம்புறேன். வாழ்த்துகள்டா உன் ஆட்டம் ஆரம்பிக்கப்போகுது ”என்று வாழ்த்தியவன், அவனுடைய குணம் தெரிந்ததால் அந்த நம்புகிறோம் என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.

ரவி அப்படி சொன்னதும் அவனது கையைப் பிடித்துக் கொண்டவன் “ரொம்ப நன்றி ரவி” என்று ஒரு வார்த்தையோடு முடித்து விட்டான்.

“நான் உங்களுக்கு கொடுத்த டார்ச்சர் எல்லாம் வாங்கிட்டு நீங்க எனக்கு நன்மை மட்டுமே செய்து இருக்கீங்க அதை நினைக்கும்போதுதான் கஷ்டமா இருக்கு”

“எல்லாமே நன்மைக்கே சீக்கிரம் போய் மாமா கிட்ட இத கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவோம்” என்று வீட்டுக்குப் போனார்கள்.

இண்டு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து ஆதிராவுக்கும் இளந்தீரனுக்குமாக சேர்த்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார்கள். 

அவன் கையில் இருந்த அந்த சர்டிபிகேட் கொண்டு போய் ஜெயச்சந்திரன் கையில் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினான். 

ஜெயச்சந்திரன் உண்மையிலேயே நெகிழ்ந்து விட்டார் அப்படியே அவனை கட்டிக் கொண்டார். 

இன்னும் உடல்நிலை தேறி வரவில்லை என்பதால் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்தார். அவரது கட்சியிலும், தொகுதியின் கட்சிப் பொறுப்பில் இப்போதைக்கு இளந்தீரனே இருக்கட்டும் எப்போதும் போல ரவி அவனுக்கு பக்கபலமாக நிற்கட்டும் என்று பேசி முடித்திருந்தார்.

குடும்பமே உட்கார்ந்திருக்க இளந்தீரன் ஆதிராவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். 

அவள் நடக்கும்போதும்,உட்காரும்போதுமென்று என்று அவனது கண்கள் அவளின் பின்னாடியே போய்கொண்டிருந்தது.

ஒரு வழியாக வெற்றி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து இளந்தீரன் அவனுடைய ரூமுக்குப்போய்விட்டான்.

ஆதிராவோ அப்போ போய் அவங்க அப்பாவிடம் பேசி முடித்துவிட்டு மெதுவாக மேலே வந்தாள். அங்கே இளந்தீரன் கோபத்தில் உட்கார்ந்திருந்தான்.

அதிரா உள்ளே வந்ததும் அவன்கிட்ட எதுவும் பேசாது அப்படியே டயர்ட்ல படுத்துவிட்டாள்.

அதைப்பார்த்ததும் அவனுக்கு இருந்தக் கோபம் இன்னும் அதிகமாகிடு.

உடனே அவளது கையைப் பிடித்து வேகமாக இழுத்துத் தூக்கினான்.

“ஐய்யோ அத்தாஆஆஆன் என்ன பண்றீங்க?” என்று அவனைப் பார்த்தவளுக்கு முகம் வெளிறியது.

“என்னாச்சுத்தான்?”என்று மிரட்சியோடு கேட்டாள்.

அவள் என்னாச்சுன்னு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை முறைத்து கொண்டு இருந்தவன், கண்கள் சிவக்கின்ற கோபத்தில் கட்டிலில் குத்தினான். அவள் பயந்துபோய் மிரண்டு முழித்தாள். அதைப்பார்த்தவன் அப்படியே திரும்பி படுத்துவிட்டான்.

“அச்சோ இந்த அத்தானுக்கு என்னாச்சுன்னு தெரியலையே? வீட்டுக்கு வந்து எல்லாருக்கிட்டயும் நல்லாதானே பேசிட்டிருந்தாங்க. இவங்க குணம் எம்.எல்.ஏ ஆனதும்மறுபடியுமா மாறிட்டோ?எம்.எல்.ஏ எலக்சன்ல ஜெயிச்சவுடனே திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டோ? அப்போ எத்தனை நாளும் அமைதியாக இருந்தது இதற்குத்தானோ. அப்பபியெல்லாம் இருக்காது. அவங்க என்மேல காட்டின அன்பு பொய்யில்லை” என்று நம்பிக்கை இருந்தாலும், கொஞ்சம்குழம்பித்தான்போனாள்.

“இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லையே!இவங்க என் தீரா அத்தான்தான்” என மனுதுக்கும் மூளைக்கும் இடையில் போராடியவள், துடிக்கும் மனதுடன் அவனது கையை பிடித்து “அத்தாஆஆன்”’ என்று தட்டி எழுப்பினாள்.

அவள் கூப்பிட்டதும் அவ்வளவுதான் விருட்டென கோபத்தில் எழுந்தவன் “உன் மனசுல என்னடி நினைச்சுட்டிருக்க காலையிலிருந்து எவ்வளவு பதட்டத்தில் இருந்தேன். அந்த பதட்டம் எல்லாம் மாறி ஜெயிச்சிட்டேன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆமா நீ எனக்கு என்னடி தந்த? காலைல இருந்து தவியா தவிச்ச தவிப்புக்கு ஒரு முத்தம் உனக்கு தர முடியாதோ? அந்த அளவுக்கு நான் உனக்கு தூரமா போயிட்டனா? நானும் என்கிட்ட வருவா வருவான்னு காத்திருந்து பார்த்தால் அவங்கப்பாதான் முக்கியம்னு போய் பேசிட்டுவந்தவள் படுத்துத் தூங்கப்போறாள். எனக்கு என்ன வேணும்னு கேட்டியாடி” என் கோபத்தில் கத்தினான்.

அதைக் கேட்டதும்தான் ஆதிராவுக்கு அவனிடம் என்ன பதில் பேச வேண்டும் என்பதையே மறந்து போய் சத்தமாக சிரித்து விட்டாள்.

அவளோ இவன் எதற்கு இப்படி கோபப்படுகிறான் என்று கண்டதையும் யோசித்து பயந்து இருக்க, அவனோ அவள் முத்தம் கொடுக்கலைன்னு கோபப்படுகிறான் என்று தெரிந்தது வந்த சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விட்டாள்.

“ஏன்டி சிரிக்கிற இப்போ?எதுக்குடி சிரிக்கிற இப்போ?இரண்டு மாசமா உருகி உருகி முத்தம் தந்தல்லாடி. இன்னைக்கு உன் முன்னாடி எம்.எல்.ஏவா வந்து நிக்கிறேன் ஒரு கட்டுப்பிடி வைத்தியம் கூட நீ எனக்குத் தரலையே. உங்க அப்பா கோமாவில் இருந்து எழுந்து வந்துட்டாருன்னு சந்தோஷத்துல என்னை மறந்துட்ட. இது நல்லதில்லை. நான் முக்கியமான விசயமா சீரியஸா இந்த விஷயத்தை பேசிட்டு இருக்கேன், நீ சிரிக்கிற? காலையில இருந்து எவ்வளவு டென்ஷன்? எவ்வளவு பதட்டம்? பக்கத்தில மட்டும் இருந்தா போதுமா தர வேண்டியது நிறைய இருக்குல்லடி? சரி நம்ம ஜெயிச்ச சந்தோஷத்துல சுத்திட்டு இருக்கா ரூமுக்கு வந்ததும் நம்மள கட்டி பிடிச்சு அப்படியே வாழ்த்து சொல்லுவான்னு ஆசைப்பட்டு உட்கார்ந்து இருந்தா, தூங்க போறேன் படுக்கிற. இந்த கட்டில் தூங்குறதுக்கு மட்டும்னீ இருக்காடி”என்று கோபத்தில் எகிறி எகிறி பேசிக்கொண்டிருந்தவனை வேகமாக நெருங்கியவள் அவனை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கட்டிக்கொண்டாள்.

அவ்வளவுதான் அவனது கோபமெல்லாம் அப்படியே கொதிக்கிற பாலிலில் தண்ணி போட்டா அடங்கிடும்ல அதுபோல அடங்கிட்டு!

அவனால் அவனது சந்தோசத்தைத் தாங்கிக்க முடியவில்லை. தனது வாழ்க்கையில் லட்சியக்கனவை ஒருத்தி காதலாலும் அன்பாலும் எட்டிப் பிடிக்க வைத்திருக்கிறாள் என்பதைவிடவும் இவ்வளவு துரோகத்திற்கு பின்பும் தனக்கு அது கிடைத்திருக்கிறது என்பதையேதான் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது தவித்தான்.

இந்தப் பதவிக்குத் தகுதியே இல்லாத தனக்கு அதுகிடைத்ததற்கு காரணம் இவள் ஒருத்திமட்டும்தான். அதனால்தான் பரிசாக அவள் தனக்கு எதுவும் தரவில்லை என்ற கோபம்தான் வந்தது.

அது இப்பொழுது அவளதுஒரு முத்தத்தினால் காணாமல் போயிற்று. அவனது அந்த ஏக்கம் இப்போது தீர்த்து அது தாபமாக மாறிற்று.

அவளது நெஞ்சில் தாளம் அவனுக்கு ரிதமாகக் கேட்டது. ஏனோ இத்தனை பலவீனனா நான்? என்று அவனுக்குள்ளயே ஒரு கோபம் வந்தது. அதுதான் அவளிடம் காண்பித்தான்.

அந்த நீர்க்குமிழிக்கோபம் வெடித்துச் சிதறி இப்போது அவளிடம் சரணடையும் காதலனாக மாறியிருந்தான். 

அவளது இடையிலூடே கைகளைப்போட்டு அவளை இறுக்கி அணைத்துத் தனக்குள் கொண்டுவர முயன்றுக்கொண்டிருந்தான்.

ஆதிராவின் கைகளோ அவனது கேசத்துக்குள் ஊர்ந்து தடவிக்கொடுக்க அப்படியே அவளது நெஞ்சில் தஞ்சமாகிப்போனான்!