எஃகில் கலந்த தளவம் 20
Egg20
20 எஃகில் கலந்த தளவம் !!
அம்மா அது வந்து லைக்கா சொல்லி விட்டு போன பொய்யில் பார்த்தசாரதி பேச மறந்து நின்றான் தாய் வேறு அவனே குறுகுறுவென பார்த்து வைக்க ஊரே இவன் காதல் கதையை கேட்க கூடி விட இவனுக்கு அய்ய என்றாகி போனது...
பார்த்தா என்னடா இது
அது அவ வந்து ...
பகவானே, எனக்கு கருணை காட்டிட்ட.. என் மகன் வாழ்க்கைக்கு ஒரு துணையை காட்டிட்ட.... ஒரு பொண்ணு கிடைச்சா போதும்னு நெனச்ச எனக்கு அந்த பகவானே மேலே இருந்து ரம்ப ஊர்வசி எல்லாம் சேர்ந்து செஞ்ச கலவையா தேவதை மாதிரி ஒரு பொண்ண அனுப்பிவிட்டு இருக்கார்டா... அதுவும் காதலாமே எவ்வளவு தைரியமா சொல்லிட்டு போறா... பாரேன் உனக்காக உசுர கூட விடுறதுக்கு தயங்காத பொண்ணு கிடைச்சிருக்கே... ஊர் கண்ணு உலகு கண்ணு, இந்த கொள்ளி கண்ணு எல்லாம் உன் மேல தான் இருக்கு "என்று லெட்சுமி ஓடிப்போய் போஞ்சு போய் போன தன் அண்ணனின் காலடி மணலை எடுத்து மகனுக்கு ஏகப்பட்ட சுற்று சுற்றி..
துப்புடா
அம்மா நான் சொல்றத கேளுங்க , "
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், மனசுல கிடந்து அடுச்சுக்கிட்டு இருந்த பாரமே தீர்ந்து போச்சு... துப்பு
தூ தூ தூ
அவ்வளவு வேண்டாத கண்ணு ...
ப்ச் அம்மா , நீங்க நினைக்கிற மாதிரி அவ பொண்ணே இல்லம்மா...
ஆமாடா தேவதை, என் குலத்தை காக்க வந்த தேவதை ...
இல்லம்மா அவ ஏலி
என்றவன் நீல் சொல்லிவிட்ட சட்ட திட்டங்கள் தொண்டையை அடைக்க
அம்மா அவ உங்ககிட்ட பொய் சொல்லிட்டு போறா
ஆமாடா பொய் தான் நாலு வருஷம் காதலிச்சு இருக்க ... எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேடா.... ஊமை போல இருந்துகிட்டு எவ்வளவு பெரிய வேலை பார்த்து இருக்க...
அது
நான் என்ன காதலுக்கு எதிரியாடா, நீ காதலிக்கிறன்னு தெரிஞ்சா அடுத்த நாளே கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டேன்... சரி சரி அம்மா எதுவும் சொல்லுவேன்னு நீ தயங்கி இருப்பியா இருக்கும் .. பரவால்ல இருக்கட்டும் அடுத்த முகூர்த்தத்திலேயே என் மருமகளுக்கும் உனக்கு கல்யாணம்
அம்மா ஆஆஆஆஆஆஆ சாரதி அலறியே விட்டான்..
மூச் அம்மா சொன்னா சொன்னது தான் ....
மருமக பேரு என்னடா...உன்கிட்ட என்ன பேச்சு நான் என் மருமக கிட்டேயே கேட்டுக்கிறேன்... குடுகுடுவென மருமகள் நோக்கி லெட்சுமி ஓட.... தாய்க்கு முன்னே குறுக்கே புகுந்து ஓடிய சாரதி படாரென்று தன் அறைக்குள் புகுந்து கதவை அடைக்க ...
சீசீ என் மகனுக்கு அவசரத்தை பாருங்க , சின்ன சிறுசுக , நாம தொல்லை பண்ண கூடாது போய் நல்ல நாள்.... அது என்ன நல்ல நாள், கடவுள் படைச்ச எல்லா நாளும் நல்ல தான் ... மருமகளுக்கு எந்த நாள் சவுகரிய படுதோ அப்பவே கல்யாணத்தை வச்சிக்க வேண்டியதுதான் சின்ன அறை ரெண்டு பேருக்கும் சங்கடம் ஆகிட கூடாதே உள்ளிருந்து டமார் டமார் என்று எல்லாம் உடையும் சத்தத்தில் லெட்சுமி வெட்கத்தில் சிவந்து வெளியே ஓடி விட ...
மெட்டல் மெட்டல் இப்ப எதுக்குடி, அம்மாக்கிட்ட அப்படி சொல்லி மானத்தை வாங்கின , சாரதி அங்கே இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி லைக்கா மீது வீச , லைக்கா அதை கேட்ச் பிடித்து அருகே வைத்து கொண்டே
"அங்கை மாதிரி நான் ஒன்னும் வயிறு வீங்கி இருக்கேன்னு சொல்லலையே ... நீயும் நானும் லவ் பண்றோம்னுதான சொன்னேன்... ஓவரா பண்ணிக்கிட்டு இருந்த, ரெண்டு தடவை இவனால குழந்தை உண்டாகி அழிச்சிருக்கேன், இது மூணாவது தடவைன்னு அணுகுண்டா தூக்கி போட்டுருவேன் பார்துக்க,.. என்றதும் பார்த்தசாரதி அவள் கழுத்தை போய் நெறிக்க போக..
அப்போதுதான் வெறும் சட்டையோடு நின்ற அவளைப் பார்த்து அதிர்ந்து போய் தலையை திருப்பிக் கொண்டவன் ...
ப்ச் என்ன அலங்கோலம் இது .... முதல்ல என் சட்டை கழட்டு , அங்கேயாவது குட்டி டவுசர் பனியனில் சுற்றுவாள் இங்கே அதற்கும் பங்கம் செய்து அவன் சட்டை மட்டும் தொடைக்கு மேல ஏறி நின்று பளிங்கு சிலையில் பன்னீர் வடிய நின்றாள் மேலோகத்து பருவத்தேர்...,
ம்ம், உள்ள எதுவுமே போடல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லப்பா கழட்டவா சட்டை பொத்தான் மீது லைக்கா கை வைக்க...
சீசீ வேண்டாம் ....
வேண்டாம்னு சொல்லு, சீச்சீனு எல்லாம் சொல்ல உன்ன விட எல்லாம் அழகாதான் இருக்கும்.... ஒன்னுமே செய்யாத உருப்படிக்கு ஒன்பது தடுப்பு ம்க்கும் தள்ளு ...என்று அவனை இடித்து தள்ளி விட்டு லைக்கா கதவை திறக்க போக கதவின் முது ஓடி போய் சாய்ந்து கொண்ட சாரதி
இப்படியே எங்க போற
வெளிய பசிக்குது
ம்ஹூம் இப்படியே போய் என் குறை மானத்தை வாங்க போறியா , அம்மா என்ன நினைப்பாங்க
நான் என்ன ட்ரெஸ் போடணும் எங்க போகணும்னு உங்க அம்மாக்கிட்ட எதுக்கு நான் கேட்கணும்...
அய்யோ இப்படி உன்ன பார்த்தா
பார்த்தா
நீயும் நானும் தப்பு பண்ணிட்டோம்னு
ஓஓஓ நினைச்சா நினைச்சுட்டு போறாங்க .. அவங்க நினைக்கிறதுக்காக எல்லாம் நான் வெளியே போகாம இருக்க முடியாது
நில்லுன்னு சொன்னேன்.... என்ன வேணும் நானே உள்ள கொண்டு வர்றேன் ...
ம்ம் இது கூட நல்ல ஐடியா தான் ...
பசிக்குது பழம் எதுவும் வச்சிருக்கியா...
ம்ஹூம்
கூட்டிட்டு வந்தல்ல நீதான் வச்சி பாடு பாக்கணும்
உன்ன என்கூட தள்ளி விட்டுட்டாங்கன்னு சொல்லு என்னவோ விரும்பி இழுத்துட்டு வந்த மாதிரி பேசுற
விரும்பி இழுத்துட்டு வந்தியோ விரும்பாம இழுத்துட்டு வந்தியோ வந்துட்ட மூணு மாசமும் நீதான் எனக்கு செய்யணும்,, அப்படியே கடைக்கு போகும் போது நான் சாப்பிடுற ஐட்டங்கள் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடு, நல்லா லினன் கிளாத்துல நாலு செட் துணி..
ஏதே நான் எதுக்கு வாங்கி தரணும்?
நீதான என் லவ்வர்
நான் எப்போ அப்படி சொன்னேன்
நான் சொன்னேனே கேட்கல, நாலு வருட லவ் ... அப்போ லவ்வர் உன்கிட்ட தான எல்லாம் கேட்கணும் ...
இங்க பாரு விளையாடாத...
விளையாடுற மூட்ல இல்ல, சீக்கிரம் கடைக்கு போயிட்டு வா ஐயம் ஹங்கிரி, இருக்கிற பசியில உன்னையே கடிச்சு தின்னுடுவேன் போலிருக்கு இதுல தான் தூங்கணுமா... கயிறா இருக்கே, உடம்பு வலிக்காது ... கயிற்று கட்டிலில் லைக்கா தொடை தெரிய சட்டையோடு கால் மீது கால் போட்டு அம்ர்ந்தாள்... அவளை திரும்பி பார்க்க கண்கள் கூசியது... வெள்ளை சட்டை, அவள் உடலை மூடி இருக்க அங்கங்கே கருப்பு புள்ளி தலையை உதறி மீண்டும் திரும்பி கொண்டவன்
இப்படி எல்லாம் பண்ணாத .... அம்மா என்ன பத்தி என்ன நினைப்பாங்க :
"அதை பத்தி எனக்கு கவலை இல்லை..
"ப்ச் உனக்கு எதுதான் கவலை, இதெல்லாம் பொய்னு அம்மாக்கிட்ட சொல்லு, வா "
"சொல்ல முடியாது , பொய் இல்லை எல்லாம் உண்மைன்னு வேணும்னா வந்து சொல்லவா "
"ஏதே ... அலறியவன் கையை இழுத்து தன் தொடையில் அமர வைத்த லைக்கா ...
மீசை அழகா இருக்குடா மேன்லி என்ன மேட் ஆக்குவது
என்ன சொன்ன எழும்ப முற்பட்ட அவனை முதுகோடு கட்டி கொண்ட லைக்கா...
மீசை வளர்ந்தா மட்டும் போதாது, அதுவும் வளரணும் என்று கிசுகிசுப்பாக கூற
அது உன்ன பார்த்தா மட்டும் தான் வளரல ...
ம்க்கும் இல்லைன்னாலும் , ஆறடி வளர்ந்து வயலை நிரப்பிடும், காற்று கூட ஊத முடியாத பலூன் அதை வச்சிட்டு பீத்திட்டு சுத்து என்று லைக்கா உதட்டை வளைத்து பேச
இந்த மாதிரி பேசாத
"பேசத்தான் செய்வேன் என்ன பண்ணுவ, முடிஞ்சா நீயும் இதே மாதிரி பேசு "
"சீசீ பே" என்று வெடுக்கென்று அவளை தள்ளி விட்டு எழும்பி கதவு அருகே போக
" இங்க எனக்கு எந்த சுகமும் குறைய கூடாது ... என்ன ராணி மாதிரி வச்சிப்பியோ, பொண்டாட்டி மாதிரி வச்சிப்பியோ, வப்பாட்டி போல வச்சிப்பியோ அது உன் செளகரியம்.. பட் உன்கூடவே உன் ரூம்லதான் இருப்பேன்... டாட் முடிஞ்சு கதவை பூட்டிட்டு கிளம்பு...
கடவுளே ஏன் மறுபடியும் இவளோடவே கோர்த்து விடுற.... பிசாசு பார்க்கிற பார்வையை பாரு .... முதல்ல அந்த ட்ரெஸ்யாவது மாத்து, அம்மா வந்தா தப்பா நினைக்கும் ....
"என்ன நினைக்கும், வந்ததும் அவசரத்துல பாஞ்சுட்டன்னு நினைப்பாங்களா, நான் வேணும்னா சொல்லவா , உங்க மகனுக்கு அது செத்து போச்சுன்னு ஆவ்ச் இஇஇஇஇ
"அசிங்கமா பேசாதடி அம்மா காதுல விழுந்துடாம என்று சாரதி அவள் காதை திருகிட , அவள் அண்ணாந்து அவனை பார்க்க அவன் குனிந்து அவளை பார்க்க ... என்ன என்று அவள் வில்லாக புருவத்தை வளைக்க சட்டென அவள் மீதிருந்த தன் கையை எடுத்து விட்டு.
"இப்படியே வெளிய போயிடாத ட்ரெஸ் எடுத்துட்டு வர்றேன்.. அது வரை ரூமுக்குள்ளயே இரு அம்மா ஒரு ஆர்வக்கோளாறு.... எதாவது கேட்டா
இன்னும் நாலு பிட்டு சேர்த்து சொல்லவா
ம..று வாயை திறக்கவே கூடாது .. நான் வர்ற வரை இந்த இடத்தை விட்டு நகராத
ம்ம் ஓகே சாப்பாடு
வாங்கிட்டு வர்றேன்
"குட், அப்படியே காலுக்கு கொலுசு வாங்கிட்டு வா
"ஏன் ?
"சும்மா போட ஆசை அப்புறம் உன்,மம்மி கல்யாணத்துக்கு நாள் பார்க்குதே, கழுத்துல ஏதோ கட்டுவாங்களே அதெல்லாம் கட்டுவியா ?
தாலி...
ஓஓஓ தாலியா ?
உனக்கு அதோட அருமை எல்லாம் தெரியுமா, மனுசங்க உணர்வு புரியுமா, காதலோட புனிதம் தெரியுமா உன்ன போய் எவனாவது கல்யாணம் கட்டுவானா...
எவனும் கட்ட மாட்டான் நீ கட்டு ...
நான் எதுக்கு கட்ட போறேன், எப்படியாவது அம்மா கால்ல கையில விழுந்து இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்
முடிஞ்சா பாரு மூணு மாசத்துல உன் பேபியோட தான் என் உலகத்துக்கு போவேன் என்று கண்ணை சிமிட்டியவள்
தண்டனை வாங்க இங்கே வந்தவள் போல தெரியவில்லை அவனை முழு நேரம் காதலிக்க வந்தது போலவே இருந்தது ...