எஃகில் கலந்த தளவம் 14

Ehg14

எஃகில் கலந்த தளவம் 14

14 எஃகில் கலந்த தளவம் !!

லைக்கா  வாட் இஸ் திஸ்..  உன்கிட்ட இப்படி ஒரு செயலை  நாங்க நினைச்சு கூட பாக்கல...  எல்லோருக்கும் முன்னோடியா இருக்க வேண்டிய நீ,  இப்படி ஒரு சின்ன பதவி ஆசைக்காக,  நீலை குற்றம் சாட்டி இருக்க ... இதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்கு உண்டு என்று குவாக் கோபமாக எல்லார் முன்னாலும் நின்ற லைக்காவை பார்த்து கூற..

கண்ணீர் வடிக்கத்தான் அவர்களுக்கு தெரியாதே  தலையை குனிந்து போய் பழக்கம் இல்லையே ... சாவுக்கு தான் பயந்தவர்கள் இல்லையே...  சாதாரண தண்டனைக்கா பயப்பட போகிறார்கள்....  கையை கட்டிக் கொண்டே நின்று குவாக்கை பார்த்தவள்

"என்ன பனிஷ்மென்ட் , வாங்கிக்க தயாரா இருக்கேன் 

ஏன் இப்படி பண்ணினன்னு எங்களுக்கு ரீசன் சொல்லு....  அந்த ரீசன் அக்சப்ட்டபுளா இருந்தா உன்ன டிப்ரொமோட் பண்ண வேண்டிய தேவையே இல்லை

நிரூபிக்க முடியும் ஆனா நான் தப்பு செய்யலைன்னு நிரூபிச்சு தான் ,இந்த பதவியில இருக்கணும்னா எனக்கு அப்படி ஒரு பதவியே தேவையில்லை... பனிஷ்மென்ட் கொடுங்க பாத்துக்குறேன்...

ம்ம்  குவாக் பனிஷ்மென்ட் கொடுக்க  வாயை திறக்க போக

டீன் என்ற நீல் குரலில் அனைவரும் நீலை பார்க்க... 

'இது அவளுக்கும் எனக்கும் நடந்த பெர்சனல் வெஞ்சன்ஸ், இதை நானே டீல் பண்ணிக்கிறேன் அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு தெரியும்..  எனக்கு அதுக்கு அனுமதி மட்டும் கொடுத்தா போதும் என்றதும் குவாக் நாடி தடவ 

இந்த பிளானட்டோட  தலைவர் நீங்க குவாக்...  நீங்க கொடுங்க நான் வாங்கிக்கிறேன் என்று லைக்கா நீலை முறைத்துக் கொண்டே சொல்ல 

'ஆனா உனக்கு பாஸ் நான் லைக்கா...  சோ,  நீ என் கட்டுப்பாட்டில் தான் இருக்க...  உனக்கு வேலையும் நான் தான் தரணும் ... பனிஷ்மென்ட்டும் நான் தான் தரணும் என்று நீலும் பதிலுக்கு அவளை முறைக்க 

"நீ சொல்றது சரிதான் உனக்கான தண்டனை அவன் தான் கொடுக்கணும் என்று குவாக் முடித்து விட லைக்கா காலை தரையில் உதைத்தவள் வெளியேறி போக

"உனக்கான தண்டனையை தயார் பண்ணி வைக்கிறேன் லைக்கா,  எஃகு மலை  பக்கம் வந்துரு என்ற நீலை ஆத்திரம் தீர பார்த்து கொண்டே  லைக்கா அவ்விடம்  நோக்கி கிளம்பினாள்

படுக்கையில் அமைதியாக அங்கயர்கன்னி  உட்கார்ந்து இருந்தாள்...  சுற்றி பழங்கள் அத்தனையும் இருந்தது,  சாப்பிட மனமில்லை கன்னத்தில் கை வைத்து அதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்...  எப்போதும் கவலை என்றால் ஒரு சுற்று அதிகமாக தான் சாப்பிடுவாள்..  இப்போது இருக்கும் கவலைக்கு ,மனநிலைக்கு மொத்தத்தையும் விளங்க வேண்டும்...

அவன் கொடுத்த முத்தம் அவளை ஏதோ செய்து விட்டதோ? அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை 

கொடுத்த முத்தத்தில் உதடு காந்தி தொலைத்தது .... உதடு கன்றி போய் உட்கார்ந்து இருந்தாள்.. இழுத்து வைத்து உதட்டை குதறி இருந்தான் ...  உள் உதடெல்லாம் காயம்,  அத்தோடு நாக்கு வலி வேறு.. அதை வேற பிடித்து கடித்து வைத்திருப்பான் போலிருக்கிறது ... 

ஸ்ஆஆஆஆ  என்னா வலி வலிக்குது  கையால் உதட்டுக்கு  காற்று வீசிக் கொண்டிருந்தாள்  அங்கை 

க்ரீச்  என கதவை திறந்து கொண்டு நீல் உள்ளே வர சட்டென  அவனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள் 

"எப்பவும் காலையில போனா ராத்திரி தானே உள்ள வருவான்,  எதுக்கு மெட்டலாண்டி  இந்த டைம்ல உள்ள வந்திருக்கான்...  யோசனையாக இருந்தாலும் கை உதட்டுக்கு காற்று வீசி கொண்டு தான் இருந்தது .... 

"இடியட் எதை செஞ்சாலும் உருப்படியா செய்ய மாட்டியா? வந்ததும் அவன் சுள்ளென ஆரம்பிக்க 

"நான் என்ன செஞ்சேன் ... 

"அதை சொல்ல வேற செய்யணுமா வேற வேலை இல்லை பாரு ... உன்னால என் மேல எல்லாம் அழுக்காகி போச்சு   என்று  நீல் சட்டையை கழட்டி அவள் மீதே  வீசி விட்டு ரெண்டாவது குளிக்க போனான்   ....  

"ப்ச் ரொம்ப பண்றீங்க ஏலியன், ஒரு குழ‌ந்தை முத்தம் கொடுத்ததா நினைச்சு மன்னிக்கலாம்., சும்மா எச்சில் அது இதுன்னு சொல்லி ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க நான் என்ன ஆசையாவா தந்தேன் .. நடந்தது நடந்து போச்சு விடாம சும்மா சும்மா அசிங்கபடுத்துறது பெரிய மனுஷனுக்கு அழகு இல்லை சொல்லிட்டேன் ஸ்ஆஆஆ உதட்டை பிளந்தாவே வலிக்குது இதோட எப்படி சாப்பிடுவேன் "இடையே அவள் புலம்பலும் வந்தது ... 

பச்சை குழந்தை முத்தம் தந்த மாதிரி நினைச்சு நடந்த சம்பவத்தை அப்படியே விட்டுடுங்க  ஏலியன் 

நீ என்ன குழந்தையா?  உள்ளிருந்து அவன் கேள்வி 

"வளர்ந்த குழந்தைதான் ஏலியன் அப்பாவி அங்கைன்னு உலகமே சொல்லும் ... 

"ஆனா நான்,சொல்ல மாட்டேன்...  நீ குழந்தை இல்லைன்னு ஐ நோ .. கண்ணாடி போய் பாரு உன் வண்டவாளம் தெரியும் 

"அப்படி என்ன தண்டவாளம் கண்டார்" என்று படுக்கை விட்டு இறங்கி கண்ணாடி முன் நின்று அங்கை முன்னே பின்னே பார்த்தாள்..

ப்ச் ஒன்னும் தெரியல" ஆனால் அந்த கண்ணாடி அவள் பிம்பத்தை அழகாய் படம் எடுத்ததுவே... 

மலை சிகரம் மீது வளைந்து வளைந்து ஓடும் ரெயிலுக்கு போட்டு வைத்த தண்டவாளம் போல அவள் மேனி வளைந்து மேடாக நெளிந்து பருத்து என்று பெண் நதி போல ஜொலித்தாள்... அவள் அங்கம் அத்தனையும் ஜாலங்கள் காட்டியது அவள் மானிட கண்ணுக்கு ஒன்னும் புலப்படாது போகவே

"ஒன்னும் தெரியலையே.... 

"அது சிவப்பு கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் நகர்ந்து  நில்லு ....    என்று ஈர தலையோடு வந்து கண்ணாடி முன்னே நின்றவன் அவள் அருகே  கையை நீட்ட இவள் உடல் தானாக ஜெர்காகி பின்னால் போக 

"மறுபடி விஷப்பரிட்சை  பண்ண நான் தயார் இல்லை  ...  உன்ன தொடுற எண்ணமும் இல்லை என்றவன் அவளுக்கு பின்னே கிடந்த டவலை எடுத்து தலையை துவட்ட 

"இருந்தாலும் இந்த ஜிகினா மண்டையனுக்கு இவ்வளவு ஏத்தம் ஆகாது .... என்று மண்டகப்படி போட்டாலும் அவனையே பார்த்தபடி நிற்க 

என்ன ? என்றான் சட்டை பட்டனை மாட்டியபடி...

"

"அந்த கோர்ட் எடு

"ம்ம்  அவன் வெள்ளி கோர்ட்டை எடுத்து நீட்டியவள் 

ம்க்கும்.... கொஞ்சம் கன்சிடர் பண்ண கூடாதா...

எதை ? 

"இல்லை பார்த்தாவை.... 

"எச்சில் வச்சி எல்லாம் அவனை ரிலிஸ் பண்ண முடியாது 

அப்போ என்ன செய்யணும் சொல்லுங்க..  நான் எது வேணும்னாலும் என் நண்பனுக்காக செய்ய தயார் என்று ஓடி வந்து நீல் முன்னே அங்கை ஆர்வமாக நிற்க அவளை நாவை சுழட்டி பார்த்த நீல்...

"அங்க சொன்னதை செய் ..

"போச்சு அங்க என்ன சொன்னேன்??.

யோசி 

"இப்படி பரீட்சை ஹால்ல சூத்திரம் மறந்த நிலைக்கு அப்பப்ப  ஆகி போறேனே " என்றவள் இதுவா அதுவா 

"சத்தியமா தெரியல ஏலியன் எதை பண்ணினா அவனை விடுதலை பண்ணுவீங்க....  என்றவளை ஆழமாக பார்த்த நீல் ... தன் கைகளை அவள் அருகில் கொண்டு போக ...அங்கை சட்டென பின்னால் நகர...

அவளை தொடாமல் சுவற்றின் மீது இரண்டு கைகளையும் வைத்து அழுத்தியவன் ... உடலும் உடலும் உரசாமல் ஆனால் மூச்சுக்காற்றுகள் உரசும் தூரத்தில் உதட்டை கொண்டு போக...

மறுபடியும் கடிப்பானோ என்று பயந்து  அவள் முகத்தை திருப்ப ... அவள் நாடி பிடித்து தன் முகம் அருகே அவள் முகத்தை கொண்டு வந்தவன்

நீ சொன்ன பொய்யை,,  நீ தான் மெய் ஆக்கணும் என்றான் கரகரப்பான குரலில்..

பொய்யா?

ம்ம்  என் ஜாடையில புள்ள பெத்து 10 மாசத்துல கொடுப்பேன்னு சொன்னேன்ல..

"அது உங்கள காப்பாத்த சொன்ன பொய் ... 

அது எப்படி என்னை காப்பாற்றும்...  உள்ளதான்,  ஒண்ணுமே இல்லையே... என்று அவள்  தின்று தின்று பெருத்த குட்டி  தொப்பையை காட்டியவன்..

இன்னும் ஒரு மாசத்துல குழந்தை எங்கன்னு மறுபடியும் என்கிட்ட கேட்பாங்க...  நீ சும்மா இருந்திருந்தா பிரச்சனையே இருந்திருக்காது...  இப்போ என் புள்ள உன் வயித்துல இருக்குன்னு பொய் சொல்லி வச்சுட்டு வந்து இருக்க

ஆமால்ல "

"வேற ஆப்சனும் தேட முடியாது ...

ஓஓஓ

எந்த கடையில போய் குழந்தையை வாங்க சொல்ற என்றதும் அவள் தலையை சொரிய 

என்னதான் வழி ஏலியன் ...

இஷ்டமோ கஷ்டமோ நஷ்டமோ உன்ன தான் சகிச்சு  தொலைய வேண்டியது இருக்கு... அவனுக்கு விடுதலை கொடுக்கிறேன் ஆனா நீ அங்க சொன்னத செய்யுற...

ஏதே 

ஐ நீட் மை பேபி 

ஹான் 

சொன்னதை செய்வேன்னு சொல்லு,  அவனை ரிலிஸ் பண்ணுறது பத்தி யோசிக்கிறேன் 

"உங்களுக்கு தான் என்கிட்ட முடியாதே  ஏலியன்,   அருவருப்பா இருக்குமே , எச்சில் வேற பட்டா ஆகாது யோசிச்சு பாருங்க ரொம்ப கஷ்டம்..அங்கை  கழுவுகிற மீனில் நழுவி ஓட பார்த்தாள்... 

அந்த திமிர்லதான ஆடிட்டு இருந்த .. என்னால முடியாதுன்னு தான் சொல்றேன் ... நீ தான  பிரச்சனையை இழுத்து என் தலையில போட்டிருக்க .. பெருசா சொன்னல்ல உதைக்குது , பெத்து காட்டுறேன்னு , அதுக்கான வேலையை இனி நீதான் செய்ற நான் வேணும்னா போனா போகுதுன்னு  கோ ஆபரேட் பண்ணுறேன்,  அவ்வளவு தான் என்னால  செய்ய முடியும்,..  இந்த வேலைக்கு சம்மதம்னு சொன்னா உன் நண்பனை பத்தி யோசிக்கிறேன்...

ஏதே சார் நீங்க சொல்றது வேலை இல்லை , எனக்கு வைக்கிற உலை அவன் தோளை உலுக்கிட...

"உனக்காவது  பத்து மாசம் கெடு இருக்கு..  பிள்ளை பெக்கிற வரை உன்ன எதுவும் செய்ய மாட்டாங்க...  பட் அவனால இனி யூஸ் இல்லைன்னு போட்டு தள்ளிட்டா என்ன நீல் கேள்வியில் இவளுக்கு பீதியாகி வியர்வை வடிய 

"போட்டு தள்ளிட்டா என்ன ? போட்டு தள்ள சொல்லி நான் ஆர்டர் கொடுத்தா உன் பாத்தா செத்தான்" 

"சார் சார் அப்படி எல்லாம் யோசிக்க கூட செய்யாதீங்க "

"அப்போ நீ  சொன்ன பொய்யை உண்மை ஆக்கு ... என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு பிள்ளை பெத்து தா .... முடியுமா ?கேள்வியாக புருவம் வளைத்து கேட்டான்...  

"சத்தி...யமா  பார்த்தாவை ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொல்லுங்க எனக்கு அவன் பொழைச்சா போதும் சத்தியம் பண்ணுங்க அவனை ஒன்னும் செய்ய மாட்டேன்னு .. அங்கை தன்   உள்ளங்கையை  விரிக்க.... 

"எனக்கு தேவை என் ஆதாயம் தான் ,  அது கிடைச்சா போதும்... . அவனை எதுவும் செய்ய மாட்டேன் செய்ய விடவும் மாட்டேன்...  அவள் நீட்டிய கையை தொட கூட செய்யாது நகண்டான்...

 அப்போ சரி  சத்தமில்லாது அங்கை முனங்க ..

நண்பனுக்காக உயிரை கொடுப்பதுதான் நட்பா என்ன?  அவள் தன்னையே கொடுத்து நட்பை நிருபித்து விட்டாள்.. 

நட்பை காப்பாத்தி,  கிட்னியை வாரண்டி கேரண்டி இல்லாம ஏலியன்கிட்ட வித்துட்டாளே!!