எஃகில் கலந்த தளவம் 21
Egg21
21 எஃகில் கலந்த தளவம் !!
இந்த பொண்ணுங்கள பத்தி மெட்டலாண்டி என்ன நெனச்சுக்கிட்டு இருக்கார்... வான்னா வந்து ஒட்டிக்குவா ,போன்னா அப்படியே போயிடுவான்னு நாய்குட்டி போல நினைச்சு என்ன வச்சி விளையாட்டுகிட்டு இருக்காரா? நான் என்ன அடிமையா அன்பு அடிமை அன்புக்கு மட்டும் தான் அடி பணிவேன், டேய் மெட்டலாண்டி வெளியே வாடா நீயா நானா பார்த்துடுவோம் என்று கத்திய அங்கை தன் கையை வைத்து வாயை மூடி கொண்டு
இந்த அரை இஞ்ச் வாயால தான் உனக்கு வில்லங்கம் வாயை மூடிக்க, மெட்டலாண்ட்டிக்கு நம்ம ரவுசு பண்ணினது தெரிஞ்சுது... மறுபடியும் ஐட்டம் டான்சர் போல பாக்சரோடு வந்து எண்ட்ரி கொடுத்து, கன்னி பொண்ணு மனசை சபலம் அடைய வச்சிட போறான்" என்று புலம்பி கொண்டே எஃகு மலை மீது ஏற ஆரம்பித்தாள்....
"கண்ணுல மாட்டுனா தானடா கறிக்குழம்பு வைப்ப காணாம போயிடுவேனே ... எப்படி நீ என்ன வச்சி பிள்ளை பெக்கிறன்னு பார்ப்போம்.... என்ன வேலை எல்லாம் பாத்துட்டு அசால்டா கடன் அடைகிறேன்னு சொல்றாரு,.. இந்த அங்கையை பார்த்தா இளிச்சவாய் மாதிரி இருக்கா....ப்ச் கொஞ்சம் இருக்கும்தான் அதுக்காக இது எல்லாம் ஓவர் இல்லையா? தன் விரல்களை பார்த்தாள்
சீசீ அய்ய என்று உடலை உலுக்கினாள்
"எவ்வளவு தைரியம் இருக்கணும் என்கிட்ட அனுமதி கூட கேட்காம அங்கங்க கைய வச்சிட்டு, அசால்ட்டா தோளை உலுக்கிட்டு போறான்.... எனக்காக ஷாருக்கான் மாதிரி தாஜ்மஹால் கட்டினாவே நான் எல்லாம் திரும்பி பார்க்க மாட்டேன்.. இவ்வளவு ராங்கா என்கிட்ட பிஹேவ் பண்ணிட்டு போறார்... குழந்தை பெத்து தர்றேன்னு சொன்னேன்தான் அதுக்காக என்னோட உணர்வை ஹராஸ் பண்ண இவருக்கு யாரு உரிமை கொடுத்தது ... இனிமே வரட்டும் பார்த்துக்கிறேன்
வந்துட்டேன் பாரு என்ற நீல் குரலில் அங்கை கீழே எட்டி பார்க்க ...
மேல பாரு .... என்று அவன் குரல் வர, எஃகு மலை உச்சியில் நீல் 420 நின்று கொண்டிருந்தான்...
நீங்களா... நீங்க இங்க என்ன பண்றீங்க
அதை நான்தான் கேட்கணும்டி, எதுக்கு என்ன தேடி வந்திருக்க
அய்யடா , நான் எல்லாம் உங்கள் தேடி வரல.... நிம்மதி தேடி வந்தேன் ... இங்கேயும் முட்டுசந்தா நீங்க இருப்பீங்கன்னு எவனுக்கு தெரியும்.... முட்டு வலிக்க நடந்து வந்தது வேஸ்ட்டா, ப்ச் மறுபடியும் கீழ போகணுமா என்று அங்கை கீழே எட்டி பார்க்க உலகமே உருண்டது போல தலை சுற்றியது, மலை உச்சியில் நின்றவள் தலை கிறுகிறுக்க கீழே சரிய
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பயந்து அலறிய அவளை மரத்தில் சாய்ந்து நின்று சேட்டிலைட் கருவிகளை சரி செய்து கொண்டிருந்த நீல் ஒற்றை கையை நீட்டி பிடித்து தூக்கி சமதளமான இடத்தில் போட ..
சிறுது நேரம் பெரிய பெரிய மூச்சு விட்டு தன்னை சரி செய்து கொண்டவள் ..
"சாகும்போது கூட அழகா சாகணுங்கிறது தான் என்னோட அதிகபட்ச ஆசையே .. இங்கிருந்து கீழே விழுந்துருந்தேன் முகம் எல்லாம் பூசணிக்காய் மாதிரி வெடிச்சி இருக்கும் ஏலியன், எனிவே தேங்க்ஸ்...
"கடன்ல இதையும் எழுதி வச்சிக்க
"என்னது கடனா??? .... என்று அவன் அருகே ஓடியவள் பனிவடியும் பாறை மீது சட்டை இல்லாமல் நின்று வாக்கிடாக்கி போன்ற ஒன்றில் பேசி கொண்டு நின்றவன் முன்னே போய் நின்றாள்
"சிக்னல் சரியா இருக்கான்னு பாருங்க ,
"அங்க சிக்னல் எல்லாம் நல்லாத்தான் இருக்கு இங்கதான் பியூஸ் போய் கிடக்கிறேன் "என்று அவன் கையில் இருந்த வாக்கி டாக்கியை வாங்கி கீழே போட்டவள்
"நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஏலியன்
மதியாதோர் தலைவாசல் மிதிக்க மாட்டேன்னு தெரிஞ்சு , இந்த மாதிரி சிம்பதி எல்லாம் பண்ணி ....பால்கனி வழியா என் இதயத்துக்குள்ள வந்துடலாம்னு பாக்குறீங்களா ? நோ நெவர் இப்பவும் காதல்னா என்ன பொறுத்த வரைக்கும் மனியாதை தான்.. அந்த மரியாதை இல்லாத உங்ககிட்ட எனக்கு எதுவும் செட் ஆகாது.... நீங்க சொன்ன மாதிரி இது எல்லாம் கடன்தான், உங்களுக்கு குழந்தை பெத்து தரேன்னு சொன்ன அந்த கடனை அடைச்சிட்டு பூலோகத்துக்கு போறதா இருந்தா போறேன்... இல்ல இதுக்கும் மேல உள்ள மேலோகத்துக்கு போறதா இருந்தாலும் போறேன் ஆனா என் உள்ளத்துக்குள்ள இந்த மெட்டலாண்டி எப்பவுமே வர முடியாது....
எப்படிதான் எனர்ஜி குறையாம பேசுறாளோ என்று தலையை உலுக்கினான்
உங்க இதயத்துக்குள்ள நான் ஒரு வேளை தப்பி தவறி , கால் வச்சி வந்து இருந்தா ... நடராஜர் ரப்பர் வாங்கி கரகரன்னு அழிச்சிடுங்க புரியுதா? என்று கையை நீட்டி நீட்டி பேச... நீல் கையை கட்டிக்கொண்டே அவளை கீழ் இருந்து மேல் வரை உரித்து பார்த்துக் கொண்டிருந்தான்....
அவள் ஆடை எல்லாம் வாஷிங் போட்டாச்சா... அவன் ட்ராக்பேண்டை டிசர்ட்டை தொளதொள என்று போட்டு கொண்டு சோளைக்காட்டு பொம்மை போல வந்து நின்ற அவளை ரசிக்க என்ன இருக்கு ஒன்னுமே இல்லை ....
நீ சொன்னது ஒத்துக்க தான் வேணும்
என்ன சொன்னேன் ?
அடிக்கடி அறிவாளின்னு சொல்வல்ல, அறிவாளிதான் இதை எல்லாம் நான் சொன்னா மேடை பேச்சாளர் ஆகி இருப்ப .... நீயே புரிஞ்சிக்கிட்ட ... கடனை அடைக்க தான வந்த ....
நான் உங்களை தேடி வரல ஏலியன்
ஆனா நான் உனக்கு முன்னேயே இங்க தான இருக்கேன் ... அப்போ என்ன தேடி தான வந்திருக்கன்னு அர்த்தம்..... வேலை இருக்கு, அரை மணிநேரம் வெயிட் பண்ணு ... வேலை முடிச்சுட்டு வர்றேன், அப்பறம் உன் கடனை கழி என்று மறைத்து நின்ற அவளை இடையில் கை கொடுத்து தூக்கி அங்கே இருந்த தங்க நிற மரத்தின் கிளை ஒன்றில் அமர வைத்து விட்டு ....
அரை மணிநேரம் போதுமா?
எதுக்கு ?
அதான் பேபி பிராசசிங் பண்ண .... அங்கை முகம் போன போக்கை பார்த்தவன்
ஒரு மணிநேரம்... உனக்கு ரெண்டு மணிநேரம் வேணும்ல , ஓகே, ரெண்டு மணிநேரம் தர்றேன் என்ஜாய் பண்ணு .... என்று போனவன் முதுகில் ஏறி உட்காந்து கழுத்தை கடித்து ரத்தத்தை குடிக்கும் காட்டேரி ஆக தோன்றியது
திமிர பாரு நான் என்னவோ இவன் தொட ஏங்கி அழுது கிடந்த மாதிரி... இறங்கி ஓடிரு அங்கை இன்னைக்குதான் உனக்கு டெத் டேன்னு இந்த மெட்டலாண்டி நேரம் குறிச்சிட்டான் போல என்று அங்கை குனிந்து பார்க்க
அய்யய்யோ அவளுக்கு கீழே பெரிய பாதாளம்...
ஏலியன் வந்து இறக்கி விட்டுட்டு போங்க
ஏத்தி மட்டும் தான் வைக்க முடியும் நீயாதான்டி இறங்கிக்கணும் டிரெஸை எல்லாம் கழட்டி ரெடி பொசிசன்ல இருந்துக்கோ , என்னோட டைம் எனக்கு ரொம்ப முக்கியம் நேர விரையம் பிடிக்காது ... வந்ததும் வாஸ்து பார்த்து குடியேறிட வேண்டியதுதான்...
எய்யா ராசா தொங்கல்ல விட்டு போடுற ரூல்ஸாய்யா இதெல்லாம், எனக்கு உயரம்னா பயம் ....
நீதான் தில்லான ஆளாச்சே, துப்பாக்கி குண்டுக்கே நெஞ்சை நிமிர்த்தி நிப்பியே ... அப்படியே தொங்கு என்றவன் குரல் தேய்ந்து போனது ...
அவள் நகர்ந்தால் கீழே விழுந்து மண்டை சிதறி விடுமோ என்று பயந்து அங்கை குரங்கு போல கொட்ட கொட்ட முழித்து கொண்டே மரத்தின் கிளையில் உட்கார்ந்து இருக்க ...
ஊஊஊஊஊ இது என்னடா கொடுமை ஒன்னு மாத்தி ஒன்னு லைன் கட்டி வருது , சூரிய கதிர்கள் அக் கிரகம் விட்டு மறைய உறைநிலைக்கு அவர்கள் பூமி மாற ஆரம்பித்தது... பனியில் செய்த சிலை போல உடலெங்கும் பனி படர ஆரம்பிக்க
ஏலியன் ... மிஸ்டர் 420, அம்மா குளுருதே .... ராத்திரி ஏன் இந்த மலை இவ்வளவு அழகா இருக்குன்னு ரசிச்ச பாவத்துக்கு இங்கேயே பாடை கட்டிரும் போலயே ... அரை மணிநேரத்துல வர்றேன்னு போன மகாராஜனை காணலையே
சாதாரண குளிரா அது , உயிரை உறிஞ்சி எடுக்கும் குளிர் அங்கங்கே பனிக்கட்டி போல உருவாக... அங்கையின் உடலை துளைத்து ஓட்டை போட்டு கொண்டிருந்தது பனிக்காற்று வெவெட குளிரில் ஆடியவள்.... அவ்வளவு தான் மயக்க நிலைக்கு போக போன நேரம் பிரகாசமாக அவள் இருந்த மரம் வெளிச்சத்தை சூடாக அவள் மீது கதகதப்பாக பாய ...
என்ன தேடுன போல " அறைக்கு போய் குளித்து , இரவு ஆடை போட்டு புது மாப்பிள்ளையாக நீல் வந்து நின்றவன் ...
தேடினேனா இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சி வந்திருந்தா அங்கை மர்கைய்யா ஆகி போய் இருப்பா...
அறிவாளியா இருந்தா போதாது, அப்பப்ப அந்த அறிவாளிதனத்தை பயன்படுத்தணும் என்று அவள் கையை விலக்கி அதன் அருகே இருந்த ஸ்வீட்சுகளை எல்லாம் போட வெள்ளை மலையில் வண்ண விளக்குகள் சூரிய மின்சாரம் மூலமாக கலர் கலராக எரிந்தது ... அதை ரசிக்கும் உடல்நிலையில் அவள் இல்லை குளிர் அவளை அட்டை போல ரத்தம் குடித்து வலு வில்லாது மாற்றி இருக்க .....
உன் ரைட் சைட்ல ஒரு லேசர் கீ இருக்கு எடு என்றதும் அவள் கை அருகே கிடந்த கீயை எடுத்து அவனிடம் நீட்ட அதை வைத்து அங்கிருந்து இரும்பு கூடாரம் ஒன்றை திறந்தான்...
பக்கத்திலேயே இருந்தாலும் சிலது இப்படிதான் உபயோகம் இல்லாம கிடக்கும்.... உன்ன மாதிரி
உங்களை மாதிரின்னு கூட சொல்லலாம் ஏலியன்
நான்தான் உனக்கு உபயோகம் ஆகுறேனே "
"நானும்தான் உங்களுக்கு" என்று பேச்சை நிறுத்தி விட்டவள்...
"உங்ககிட்ட பேச எனக்கு தெம்பு இல்ல, இறக்கி விடுங்க இது வருது என்று சுண்டு விரலை காட்டியவள் அவன் மரம் போல வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க கண்ணை மூடி கொண்டு குதித்து விட்டாள் .... எவ்வளவு நேரம் தான் ஆத்திரத்தையும், அதையும் அடக்க... விழுந்தவள் அவன் கையில் அன்றோ கிடந்தாள்.....
அந்த பக்கம் போகாத என்று முடிக்கும் முன்னே அங்கே போய் தொப்பென விழுந்து மண்டையை உடைத்து இருந்தாள்...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பனிக்கட்டி மீது சறுக்கி நேரே போய் அங்கே குளிராக ஓடி கொண்டிருந்த நதி ஒன்றில் பொத்தென்று விழுந்து கிடந்தாள்
அய்யோ அம்மா குளுருதே அலறி கொண்டே அங்கை ஓடி வந்தாள் ... ஆடை எங்கும் ஈரம் .... ஏற்கனவே குளிரில் செத்து கிடந்தவளுக்கு இது வேறையா என்று ஆகி போக
ஏ.....லி...... யன் குளிர் ..... ஊப் ஊப் மூச்சு திணறினாள் .....
ட்ரெஸ்ஸை கழட்டு ...
ப்ச் நான் என்ன சொல்றேன் நீங்க என்ன செய்ய சொல்றீங்க ...
அந்த ஈர டிரஸ்ஸை கழட்டி தூர போடு , குளிர் அடங்கும்
ஓஓஓஓ அதுக்கா, ஆனா மாத்திக்க வேற உடுப்பு இல்லையே
ஐடியா தான் தர முடியும் ... உனக்கு தான் குளுருது நீதான் எதாவது செஞ்சிக்கணும்....
கூடாரம் உள்ளே கதகதப்பாக ஒளியை பாய்ச்சும் விளக்குகள் நடுவே போய் மல்லாக்க நீல் படுத்தான்... அவன் அருகே மட்டும் கதகதப்பாக இருக்கும் என்பது தெரிந்தது அத்தனை புறமும் வெதுவெதுப்பான காற்று அடித்தது ... இவள் ஈர ஆடையில் இருக்கவா சாகவா நிலையில் கிடுகிடுக்க...
உங்க சட்டை மட்டுமாவது கழட்டி கொடுங்க ஏலியன்...
"நான் சட்டைக்கு எங்க போக, எனக்கு பனி ஒத்துக்காது சளி பிடிச்சிடும் ...
"இந்த வன்முறைக்கு நீங்க வண்டு அங்கேயே கடிச்சுதான் சாவீங்க இது என் சாபம்..
"உனக்கு அது மேலையே தான் கண்ணு போல" என்றவன் தன் மீது கிடந்த டவலை மட்டும் தூக்கி அவள் புறம் போட
"எப்பா இவன் இந்த அளவுக்கு மனசு இறங்குனதுக்கே, இவனுக்கு இங்கிட்டு ஒரு சிலையை வச்சிடலாம் அங்கை வேக வேகமாக ஈர ஆடைகளை கலைந்து டவலை கட்டி கொண்டவள்... அவனுக்கு பின்னே சற்று இடைவெளி விட்டு வந்து உட்கார்ந்து கொண்டாள்....
பஞ்சும் நெருப்பும் பத்திக்குமோ இல்லையோ
எஃகும் பூவும் சேர்ந்து ஒரு புதிய உயிர் உண்டாகும் என்பது ரைட்டர் போட்டு வைத்த சதி!!