எஃகில் கலந்த தளவம் 13

Egg13

எஃகில் கலந்த தளவம் 13

13 எஃகில் கலந்த தளவம் !! 

பார்த்தா பார்த்தா என்று தன் அருகே நடந்து வந்த பார்த்தசாரதி தோளை அங்கை சுரண்ட 

"என்ன அங்கை 

""இல்லை அங்க நடந்தது பத்தி எதுவும் கேட்காம அமைதியா வர்றியே ... 

என்ன கேட்கணும் 

ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேட்கணும் பார்த்தா....

"எதுக்கு கேட்டு.... அதை பண்றதுக்கு முன்ன சொல்லி இருக்கணும் , என்கிட்ட கேட்டு இருக்கணும் இனி என்ன கேட்டு எதுக்கு ? 

"பரவாயில்லை பார்த்தா , நீயும் என்கூட சேர்ந்து அறிவாளி ஆகிட்ட என்றவளை முறைத்த பார்த்தசாரதி ..

"இப்ப எதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா 

"இப்பதான் சொன்ன கேக்க மாட்டேன்னு ..

"சரி சொல்ல வேண்டாம் என்று பார்த்தசாரதி விறுவிறுவென்று நடக்க ..அவன் சட்டையை இழுத்து நிறுத்தியவள்.. 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்துவிடல் 

நமது திருவள்ளுவர் தாத்தா சொன்னதுதான்... சரி அவர் நமக்கு கெட்டதை செஞ்சாலும், நாமளும் பதிலுக்கு பதில் கெட்டது செய்யக்கூடாதுன்னுதான் பார்த்தா இதை செஞ்சேன்... அவர் கையால உப்பு சாப்பிடலனாலும், பிரட்டு சாப்பிட்டு வளர்ந்து இருக்கேனே அதான் போனா போகட்டும்னு முத்த பிச்சை போட்டு காப்பாத்திட்டு வந்துட்டேன்.... தப்பா பார்த்தா என்றவளை தலையில் அடித்துப் பார்த்த பார்த்தசாரதி

" நானே ஒரு பைத்தியம் நீ என்னை விட பெரிய பைத்தியமா இருக்க...  

"ஐ அப்போ நான் தான் பஸ்ட் "என்று சிரிக்க பார்த்தா பின்னால் கண்ணை காட்டினான் 

என்ன ??

அவரு 

மெட்டலாண்டியா...

"ம்ம் என்றதும் அவள் திரும்பி பார்க்க... கையை கட்டி கொண்டு நீல் நின்று கொண்டிருந்தான் முகம் இறுகி , தாடை எலும்பு சதை வழி கோடாக தெரிய , அவளை நீல் பார்க்க 

"பார்த்தா துணைக்கு நில்லுடா விட்டுட்டு போயிடாத மெட்டலாண்டி என்னை மார்சூரி அனுப்புற மாதிரியே பார்க்கிறான் நில்லு" என்று பார்த்தசாரதி கையை பிடிக்க 

"நீ கிளம்பு" என்றான் நீல் அங்கையை தினுசாக பார்த்து கொண்டே ... 

சார் அவ சாரதி ஆயிரம் மன்னிப்பாவது கேட்டு அவளை காப்பாத்திடணும் விட்டுட்டு போக கூடாது என்று அரணாக நின்றான்... 

கிளம்புன்னு சொன்னேன்..

இல்ல 

ஐ சே அவுட் ஊஊஊஊஊஊஊஊ சாரதி அசையாது அங்கையை தன் முதுகு பின்னே விட்டு கொண்டு நிற்க ... 

ப்ச் நீ போ பார்த்தா நான் செஞ்ச உபகாரத்துக்கு கால்ல விழுந்து நன்றி சொல்ல நினைக்கிறார் போல , உன் முன்னால தேங்க்ஸ் சொல்ல கால்ல விழ கூச்சமா இருக்கும்ல , அதான் தனியா கூப்பிடுறார் நீ போ ....  

சும்மா இரு நானும் கூட இருக்கேன் 

போன்னு சொன்னேன் பார்த்தா, அப்படி எல்லாம் அங்கையை யாரும் எதுவும் பண்ணிட முடியாது .... என்றதும் பார்த்தசாரதி விலகி நடக்க ஆரம்பித்தாலும் தூரத்தில் நின்று அவள் பாதுகாப்பை உறுதி செய்ய காத்திருந்தான்....

என்ன ஏலியன் என்று நீல் நோக்கி அங்கை திரும்ப ...

"அதை நான் கேட்கணும் 

"அப்போ கேளுங்க .... 

"இப்ப அங்க என்ன பண்ணிட்டு வந்த குரலில் எஃகு உருகி ஓடியது 

"அதுஊஊஊஊ 

"உன் பாட்டுக்கு எச்சில் வச்சிட்டு வந்துட்ட என்று தன் உதட்டை சுளித்தான்... 

எச்சி....லா அவள் பே என்று முழிக்க... 

"அது முத்தம் உங்களை காப்பாத்த 

"கேட்டேனா என்ன காப்பாத்த எச்சில் முத்தம் தான்னு கேட்டேனா? என்று அவள் அருகே நீல் வந்து நிற்க

"ம்ஹூம் .... அவள் தலையை வலமும் இடமும் ஆட்ட 

இல்ல அந்த டைம்ல வேற எது செஞ்சாலும் நீங்க மாட்டீப்பிங்கன்னு நினைச்சு 

"நினைச்சு என்ன டேர்டி ஆக்கினியா .... இதுல வேற சேலையை கழட்ட போற, என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ஹான் .... என்ன காப்பாத்த எனக்கு தெரியாதா? பெரிய தியாகின்னு நினைப்பா , உன் ஹெல்ப் எவன் கேட்டான் ஹான் என்றவன் சுள் சுள் பேச்சில் முகம் சூம்பி போனவள் , 

இந்த மலைகுரங்குக்கு போய் உதவி செஞ்ச என்னை கட்டி வைத்து ஆயிரம் முறை சிரை சேதம் பண்ணுங்கடா தேவையா தேவையா என்று மனம் அவளை காறித்துப்ப...

ஐ நீட் ஏ அன்சர் ,

அங்கை அமைதியாக தலையை குனிந்து கொண்டே .... 

அதை எல்லாம் பண்ணினது பார்த்தாவுக்காகதான் என்றதும் நீல் கண்ணை சுருக்க 

"இல்லை நீங்க பெரிய போஸ்ட்டிங்க்ல இருக்கீங்களாம் .... நீங்க நினைச்சா பார்த்தாவை பூமியில கொண்டு போய் விட முடியுமாம் .... உங்களால மட்டும் தான் உதவ முடியும் ...  

யார் சொன்னா?..

பெல்லா பேபி .... இங்க உள்ள சட்டத்திட்டம் கடுமையானது கடத்துனவனே காப்பாத்தி விட்டா மட்டும் தான் உயிரோட இந்த ப்ளணட் விட்டு தப்பிச்சு பூமி போய் சேர முடியும்னு சொன்னாங்க அதான் என்று அங்கை பாவமாக முழித்தாள்...

சோ ஓஓஓ 

"நான் செஞ்ச உபகாரத்துக்கு என் பார்த்தாவை மட்டும் பூமியில கொண்டு போய் விட்டிருங்களேன்... நான் வேணும்னா இங்கேயே இருக்கேன் ... பார்த்தா பாவம் ரொம்ப அழுவுறான், கஷ்டமா இருக்குன்னு சொல்றான் ... அவங்க அம்மா வேற வயசானவங்க இவனை விட்டா வேற கதி இல்லை .... என் தாத்தாவாவது ஒழிஞ்சது சனியன்னு தலைமுழிகிடுவார்... ஆனா அவங்க அம்மா பாவம் .... என்ன காலம் முழுக்க பிணைய கைதியா வச்சிக்கோங்க பார்த்தாவை அனுப்பி விட்டிடுங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்சுதலாக நீலை பார்க்க ... கையை கட்டி கொண்டு அவளை மேலும் கீழும் பார்த்தவன்....

எச்சில் வச்சதுக்கும் சேர்த்து உன்ன வெளுக்கணும் இதுல அதுக்கு கைமாறா ?? உன் நண்பனை காப்பாத்த வேற செய்யணுமோ ... நீயா வந்து விழுந்து கவ்விட்டு போனதுக்கு எல்லாம் என்னால எதுவும் செய்ய முடியாது .... என்று அவன் திரும்பி நடக்க 

ஏலியன் ஏலியன் நில்லுங்க என்று அவனை வழிமறித்து நின்ற அங்கை 

"ரொம்ப கஷ்டப்பட்டு தம் பிடிச்சு பக்கம் பக்கமா பேசி காப்பாத்தி இருக்கேன்... நான் செஞ்ச ஹெல்புக்கு குட்டி ஹெல்ப் பண்ணினாதான் என்னவாம்...

கேட்டு செஞ்சா தான் அதுக்கு பேர் ஹெல்ப்... கேட்காம செஞ்சா அதுக்கு பேர் இடைஞ்சல் நீ பண்ணினது கிட்டதட்ட ரேப் ...

ஏதே ஏஏஏஏஏஏஏ ரேப்பா அவள் வாயை பிளக்க 

பின்ன ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை வலுக்கட்டாயமா தொட்டா அதுக்கு பேர் என்ன 

"ரேப்

"அப்போ நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க 

"அதுவும் இதுவும் எப்படி ஒன்னாகும் ஏலியன்....

"ஒன்னுதான் எனக்கு பிடிக்கலைல்ல ..பிடிக்காம தான உன்ன தள்ளி வச்சேன் , எனக்கு தேவைன்னா உன்ன பயன்படுத்தி இருக்க மாட்டேனா, உன்ன ஆகாம தான விலக்கி வச்சேன் , 

ஹான் அப்போ எதுவும் கிடையாதா? அவள் முகத்தை சுளித்து போச்சே சோனமுத்தா என்பது போல நின்றாள்.. பார்த்தாவுக்காவது விடுதலை வாங்கி கொடுத்துடலாம் என்று நினைத்து போட்ட குஸ்தி எல்லாம் வேஸ்டா கோபால் .... அங்கை போட்ட ப்ளான் எல்லாம் சொதப்பலோ சொதப்பல்... 

இப்ப என்ன பண்ண சொல்றீங்க.... 

என் அனுமதி இல்லாம தந்ததை நீயே எடுத்துடு... ம்ம் கமான் என்று நீல் கையை கட்டி கொண்டு அவளை பார்க்க 

என்னது அனுமதி இல்லாம தந்தேன் அவள் புரியாது அவனை பார்க்க

"அங்க வச்சி என்கிட்ட பெர்மிஷன் வாங்காம ஒன்னு தந்தல்ல அது அப்படியே இருக்கு ஒழுங்கா எடுத்துட்டு ஓடிரு இல்ல செத்த .... 

புரியும்படி பேசினாவே எனக்கு புரியாது ஏலியன் நான் வேற இப்போ பார்த்தாவை காப்பாத்த முடியலையேன்னு டிப்ரிமேசன்ல இருக்கேன்... என்ன தந்தேன் என்னத்த எடுக்கணும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.... 

அத்தனை பேர் முன்னாடி பெர்மிஷன் இல்லாம எச்சில் ஆக்கினல்ல 

ம்ம்  

உன் எச்சில் என் உதட்டுல ஒட்டி இருக்கு ... எனக்கு பிடிக்கல என்றான் முகத்தை சுருக்கி 

அ.......து.க் ....கு ?? 

வச்ச நீயே துடைச்சு எடு என்றான் தன் உயரத்தை குறைத்து அவள் அருகே நெருங்கி நின்று ....

அவ்வளவு தான அதுக்கு போட்டு எதுக்கு இப்படி பாரத்து வைக்கிறீங்க.... துடைச்சு விடுன்னா துடைச்சு விட்டுட்டு போறேன் என்று அங்கை தன் முந்தானை எடுத்து நீல் உதட்டை துடைக்க போக அவள் கையை அழுத்தி பிடித்தவன் 

இதுல துடைச்சா எப்படி போகும் .... எப்படி வச்சியோ அப்படியே எடுத்துட்டு போ... அவள் கண்களை உருட்ட .. நீல் கைகள் அவளை தொட வில்லை, உடல் அழுத்தவில்லை ஆனால் மூச்சு இரண்டும் மோதிட இவ இப்படி ஒரு பிரச்சனை வரும் என கனவா கண்டாள் அங்கை பேக்க பேக்க முழிக்க...

ஐ ஹெவ் வொர்க் சீக்கிரம் வேலையை முடி.... அவள் உதட்டு அருகே நீல் தன் உதட்டை சுளித்து காட்டி கொண்டு நின்றான்...  

அது வந்து ஏலியன் சார் இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்றவள் உதடு அவன் உதட்டை வந்து இணைந்து இருந்தது நச்சென அவள் இடையோடு கைபோட்டு அங்கையை தன்னை நோக்கி நீல் இழுத்திருக்க... ஏற்கனவே அருகே அருகே இருந்த அவள் உதடு வந்து நீல் சிவந்த உதட்டை நச்சென மோதிட சபை நடுவே போல உரசி சென்ற முத்தம் இல்லை அஃது...

கவ்வி இழுத்த முத்தம் , அவள் கீழ் உதட்டில் பல் தடம் விழ கொடுத்த முத்தம் ..... நாவோடு நாவு இழுத்து வைத்து சப்பி எடுத்த முத்தம் அவள் இடை வலிக்க கச்ககி கொடுத்த முத்தம் அவள் மூச்சு திணற திணற ஊட்டிய முத்தம்... அவளை அசைய ஒட்டாது ஆக்டோபஸ் போல வளைத்து பிடித்து எச்சில் தீர தீர கொடுத்த முத்தம் .... அவள் பின்மேனியை கசக்கி தூக்கியவன் தன் உயரம் அவளை தூக்கி வைத்தபடி நாவை சுழட்டி சுழட்டி உள்ளே கொடுக்க அவள் திணறி நடப்பது புரியாது திகைத்து கிடக்க மென்மையாக, வன்மையாக, வலிமையாக இருவர் சுவையும் இருவர் அறிய கவுச்சையாகவே ஆழமாக நீண்ட நெடிய முத்தம் கொடுத்து அவளை இறக்கி விட்டவன் 

லொக் லொக் என்று அங்கை உதட்டை மூடி கொண்டு அவனை பார்க்க 

இன்னொரு தடவை இந்த வேலையை எங்கிட்ட வச்சிக்காத நீ தந்ததை திருப்பி தந்துட்டேன் எனக்கு உன் முத்தம் தேவையில்லை புரியுதா? என்று விட்டு அங்கங்கே நின்று இவர்களை இன்னும் சந்தேகமாக பார்த்தவர்களுக்கு இருவரும் இணைவாகத்தான் இருக்கின்றனர் என்பதை காட்ட இந்த முத்தத்தை பயன்படுத்தினானா? இல்லை ஆசை கொண்டு அவளை முத்தமிட்டானா , அவனே அறிவான்..

நீல் முகத்தில் உள்ள இறுக்கம் அப்படியே தான் இருந்தது நடையிலும் செயலிலும் மாற்றமில்லை கொடுத்த முத்தத்தை நினைத்து பூரித்த மாதிரியும் இல்லை...

 நீல் பாட்டுக்கு அங்கிருந்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட அங்கையற்கன்னி தான் அவன் விட்ட இடத்தில் உதடு முழுக்க அவன் விட்டு போன அவன் வாசத்தோடு பே என்று நின்று கொண்டிருந்தாள்.... 

அவள் கொடுத்தது குழந்தை முத்தம் , இவன் கொடுத்தது கூடலில் உச்சத்தில் கொடுக்கும் ஆழ முத்தமே!! நாவில் அவன் எச்சில் சுவை தெரிய ... பரபரவென உதட்டை போட்டு தேய்த்தாள்... போவேனா என்றது அவன் தந்த முத்த மணம் ....

என்ன அங்கை நடக்குது இங்க .... சாரதி நடந்ததை தூரம் இருந்து பார்த்தவன் தானே... அவனுக்கும் தலையும் புரியல வாலும் புரியல .... 

அதான்டா எனக்கும் தெரியல நீ தந்த முத்தம் வச்சிக்கன்னு தந்துட்டு போறார் .... இப்படி எல்லாம் கடன் அடைப்பாங்களா என்ன ? 

தெரிலையே 

எனக்கும் தெரியலையே.... அவன் செய்கை புரியாது குழம்பி போய் தான் பூலோகத்து ரம்பை நின்றாள்...