எஃகில் கலந்த தளவம் 15
Egg15
15 எஃகில் கலந்த தளவம் !!
உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் இங்கெல்லாம் சட்டம் ரொம்ப கடுமையா இருக்குமாமே , உங்களை எண்ணெய் சடியில போட்டு வடை போல பொரிச்சு எடுப்பான்னு அங்கை சொன்னா, போச்சு மாட்டிண்டேளா.... என்று படுக்கை மீது படுத்து கிடந்த பார்த்த சாரதி கால் மேல் கால் போட்டு ஆட்டி கொண்டே உள்ளே நுழைந்த லைக்காவை கிண்டலாக வரவேற்க...
என்ன கொடுக்கு முளைச்ச மாதிரி இருக்கு
ம்ம் உங்க கொடுக்கு இனி கொட்டாதாமே... இனி நீங்க பல்லு புடுங்கின பாம்புதான ... தப்பா நினைக்காதேள் , பொண்ணு ஆத்திரப்படலாம் தப்பில்லை கோவப்படலாம் அதிலும் தப்பில்லை ... ஆனா எங்கே எப்படி இருக்கணும்னு கொஞ்சமாவது தெரியணுமோ இல்லையோ.... நான் எடுத்ததே முடிவுன்னு தலைகீழா நின்னா, இப்படிதான் முட்டிண்டு நிக்க வேண்டியது இருக்கும் ....
அறையில் தன் ஆடை மீது இருந்த பதவிக்கான பதக்கங்களை எல்லாம் லைக்கா கழட்டி வைத்துக் கொண்டு இருந்தாள்... சாதாரண ஒருத்தியாக டிபிரமோட் செய்யப்பட்டிருந்தாள் ...
"நான் எதுவும் பொய் சொல்லலையே, எதுக்கு நீ சொன்ன மாதிரி எண்ணெய் சட்டியில வடை மாதிரி கொதிக்க போறேன்..,.. அத்தனை பேர் முன்னாடி அவ அவனுக்கு நின்னால்ல.... நீ என்கூட நிக்கணும்னு தோணலல்ல... என்ன ஆசையில் அப்படி கேட்டாள் என்று தெரியவில்லை ஆனால் நிலுக்காக ஒருத்தி நின்றாளே இவளுக்காக நிற்காது வேடிக்கை பார்த்தானே என்று கோவமா? வருத்தமா??அதெல்லாம் அவளுக்கு வருமா ? வந்ததோ??...
"ஹான் நல்ல கதையா இருக்கே , நான் எதுக்கு நிக்கணும் ... உங்களுக்கும் நேக்கும் என்ன இருக்கு, உங்களுக்கு நான் ஏன் சப்போர்ட் பண்ணனும்... எனக்கு குளுகுளுன்னு இருந்தது... வேணும் வேணும் நல்லா கொடுங்கோன்னு கடவுள்ட்ட வேண்டிட்டே இருந்தேன்... அப்பா கடவுளுக்கு ஏன் கூக்குரல் கேட்டிருச்சு., இனிமே உங்களோட தொல்லை எனக்கு இருக்காதுல்ல என்ற பார்த்தசாரதியை பல்லை நரநரத்து பார்த்த லைக்கா....
"சாக ஒன்னும் செய்யலையே பனிஷ்மென்ட்ல தான் போறேன் வருவேன், இதுக்கும் சேர்த்து வச்சி உன்ன செய்றேன் தள்ளு" என்று அவனை உருட்டி அவன் அருகே கிடந்த துப்பாக்கியை எடுத்து பேண்ட் பாக்கெட் உள்ளே சொருகி கொண்டவள் உற்சாகமாக பாடல் பாடும் சாரதியை எரிச்சலாக பார்த்து கொண்டே எஃகு மலை நோக்கி போக .....
எதுக்கு என்ன கூப்பிட்டு விட்டீங்க மனசு மாறிட்டீங்களா ஏலியன் சார் ... குழந்தைக்காக கூட என்ன சகிக்க முடியாதுன்னு உங்க ஏழாம் அறிவு கொட்டிருச்சா.... உண்மையும் அதுதான் ஏலியன் உங்களுக்கு என்னுடைய எச்சிலே பிடிக்கல, எப்படி மத்தது மத்ததெல்லாம் ... யோசிச்சு பாருங்க , உடம்பு கூசலை ... அவள் முன்னால் விறு விறுவென்று நடந்து போய்க் கொண்டிருந்த நீல் பின்னால் ஓட்டமும் நடையுமாக அங்கயர்கன்னி ஓடிக்கொண்டே கூற....
பரவால்ல சகிச்சிக்கிறேன் ... ரெண்டு நாளோ மூணு நாளோ கண்ணை மூடிக்கிட்டு படுத்துகிறேன் என்று நீல தோளை உலுக்க ..
ஐயோ ஏலியன் சார் உங்களுக்கு ஏரோப்ளேன் ஓட்ட தெரிஞ்ச அளவுக்கு.... மானிட்டர் வச்சு உலகத்தையே கைக்குள்ள வச்சிருக்க உங்களுக்கு சேட்டிலைட்ல சடுகுடு ஆட்ட தெரிஞ்ச உங்களுக்கு பலான மேட்டர் தெரியலைன்னு நினைக்கிறேன்.... என்று அங்கை அவன் பக்கத்தில் வந்து கிசுகிசுப்பாக கூற அவளை தலையை திருப்பி பார்த்த நீல்
அப்படின்னா அவள் சற்று வெட்கம் கலந்து கண்ணை சுருக்கி ஒரு தினுசாக பார்த்தபடி...
பலான மேட்டருக்கு கண்ணை மூடி எல்லாம் படுக்க முடியாது தெரியாதா ஏலியன்? ... சாட்டிலைட்டை கூட உட்கார்ந்து இருந்தே நீங்க ஆராய்ச்சி பண்ணிடலாம். ஆனா அதுக்கு உடல் உழைப்பு ரொம்ப அவசியம் !! கண்ண மூடிக்கிட்டு ஒன்னுமே முடியாது ரொம்ப ஹார்ட்வொர்க் பண்ண வேண்டியது இருக்கும் .... ஒன்னுமே தெரியாத ஏலியனாஇருக்கீங்களே.... அது சரி , அதெல்லாம் தெரிஞ்சிருந்தா நீங்க எல்லாம் ஏன் இப்படி சிங்கிள் பாய்ஸா இக்க போறீங்க .... குடும்ப கட்டுப்பாடு சாதனமே இல்லாம கட்டுப்பாடாக இருந்திருக்கீங்களே... அந்த விஷயத்துல உங்க உலகம் ரொம்ப வீக் ... அதை ஒத்துக்க தான் வேணும் .... அதுல எங்க மனுசபயலுகளை அடிச்சிக்கவே முடியாது.... அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போடுவானுக , காதலி ஒருத்தி, துணைவி இணைவி அப்பறம் என்ன பொதுவி ன்னு ஜாலியா இருக்காங்க...
அது என்ன பொதுவி ?? அவன் புரியாது கேட்க...
உனக்கு மட்டுமா அவ பொண்டாட்டி , எல்லாருக்கும் அவ பொண்டாட்டின்னு எல்லாருக்கும் கொடுக்கிறது என்ற அங்கை பேச்சில் சற்று தலைவலி ஆரம்பமாக
போதும் வாயை மூடு ...
இல்ல நான் நாலு கருத்து சொல்லுவேன்னு என் மக்கள் எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க ...
இலவசமா அட்வைஸ் பண்றது என்னோட தீராதநோய்... அந்த நோய்க்கு மருந்தே இல்லை யாரை பார்த்தாலும் நாலு அட்வைஸ் எடுத்து விட்டுட்டு தான் போவேன்... ப்ளீஸ் எலியன் நாலு இல்லனாலும் ரெண்டு ... அவன் இன்னும் வேக எட்டு போட்டு நடக்க ஆரம்பிக்க ....
இவ்வளவு கேவலமான ஒரு மனித பிறவியில இருந்து நீங்க குழந்தை வேணும்னு நினைக்கிறது நியாயமா சொல்லுங்க .... நீங்க நினைக்கிற மாதிரி அவங்க குழந்தை இங்க வளர்ந்தா... பாசம் அன்பு எல்லாம் வந்து இந்த பூமி மக்கள் தொகையால் நெறஞ்சிடும்னு நினைக்கிறது எல்லாம் சரிதான்.... ஆனா. அதோட உங்க அழகான இந்த உலகத்தையும் அழுக்காகிடுவாங்க பரவாயில்லையா? என்றதும் அவன் நடையை நிறுத்தி கையை கட்டிக்கொண்டு அவளை பேசு அதுக்கப்புறம் போவோம் எனக்கே இவ்ளோ டயர்டா இருக்கே என்பது போல ஒரு பார்வை பார்த்தான்...
இந்த பூமியை பாருங்க சுத்தி எவ்வளவு அழகான மலைகள் எவ்வளவு வித்தியாசமான இடங்கள் எவ்வளவு அற்புதமான இயற்கை என்று அங்கை கையை விரித்துக் கொண்டு அந்த இடத்தை அப்படியே ரசனையாக சுற்றிப் பார்த்தாள் அவளை புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு... தன் பூமியை அவனும் சுற்றிப் பார்த்தான்..
இது அவன் பூமி ரசிப்பதற்கு என்ன இருக்கிறது? இதுவரை நின்று ரசிக்க அவன் வாழ்க்கையில் இடம் கொடுத்தது இல்லை. நேரம் கொடுத்ததும் இல்லை இவள் என்ன இதையெல்லாம் ரசிக்கிறாள் என்பது போல்தான் அவளை மேலும் கீழும் பார்த்தான்....
மனுஷ பயல்க இங்க வந்துட்டாங்கன்னு வச்சுக்கோங்க... இந்த மலையை எல்லாம் குடைஞ்சு பணமாக்கிடுவாங்க ... இந்த மணலை எல்லாம் வித்து மாளிகை கட்டிடுவாங்க... அப்புறம் அட்டை பெட்டி சைஸ் ரூமுக்குள்ள இருக்கிற நீங்க நான் , எனக்கு என் பிள்ளைக்கு , என் கொள்ளு பேரனுக்குன்னு சொத்து சேர்க்கணும் , அடுத்தவங்ககிட்ட லஞ்சம் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க.. இவன் எப்படி நல்லா இருக்கலாம்னு சொல்லி சூனியம் வைக்கிறதுக்கு சூனியம் வைக்க ஆரம்பிச்சுடுவீங்க... இவன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருக்காளேன்னு உஷார் பண்ணி அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசை பட ஆரம்பிச்சிருவீங்க ... படிப்ப விலை கொடுத்து வாங்கணும், அவ்வளவு ஏன் மருத்துவத்தை கூட காசு கொடுத்து தான் வாங்கணும் ... நின்னா காசு நடந்தா காசு .. நின்னா ஊழல் நடந்தா ஊழல் தூங்குனா கூட காதுல கிடக்குற கம்மலை அத்துட்டு போயிடுவானுக.... பச்சை குழந்தைக்கு கூட பாலியல் தொல்லை கொடுக்கிற மிருகம் வாழ்ற இடம் பூமி.... அவ்வளவு கேப்மாரி பசங்க உலகத்துல இருக்காங்க .. அவங்ககிட்ட இருந்து குழந்தை வரணும்னு எதிர்பார்க்கிறீங்களே உங்க பூமி தாங்குமா?? வாழ தகுதி இல்லாத இடமும் , வாழ தகுதியே இல்லாம மனுசனும் நிறைஞ்சு கிடக்கிற இடம்தான் பூமி... என்று பெருமூச்சு விட்டாள்...
ஓ இவ்வளவு இருக்கோ , அப்போ என்னதான் செய்யலாம்.. நீ தான் ரொம்ப அறிவாளியாச்சே நீயே பதில் சொல்லு...
ம்ம் அதுக்கும் ஐடியா வச்சிருக்கேன்ல பேசாம நீங்க இப்போ எடுத்திருக்க முடிவை எல்லாம் கைவிட்டுட்டு
கைவிட்டுட்டு என்றான் கேள்வியாக
உங்க பயலுகளுக்கு எல்லாம் டெய்லியும் ஒரு மணி நேரம் எப்படி காதலிக்கலாம்னு டியூசன் எடுங்க
எடுத்தா
காதல்னா என்னன்னு தெரிஞ்சு போகும் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா... அப்புறம் பயர் பத்திக்கும் , தானா குழந்தை ஒட்டிக்கும்... ரிஸ்க்கே இல்ல.... மனச ஜந்துகளை கொண்டுவந்து உங்க பூமியை சீரழிக்க போறிங்களா? இல்ல உங்களுக்குள்ளேயே லவ் பண்ணி ஒரு அழகான சந்ததிய உருவாக்க போறீங்களா? சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....
உண்மைதான் !! மிருகம் கூட தன் தேவைக்கே வேட்டையாடும் ஆனால் இந்த மனித மிருகங்கள் மட்டும் தன் சுகத்துக்காக வேட்டையாடுகிறது...