எஃகில் கலந்த தளவம் 12

Egg12

எஃகில் கலந்த தளவம் 12

12 எஃகில் கலந்த தளவம் !! 

 பார்த்தா என்ற குரலில் கவலை சூழ்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்த பார்த்தசாரதி..  தலையை திருப்பி அவனை நோக்கி வந்த அங்கயற்கன்னியை பார்த்துவிட்டு அவளிடம் ஓடினான் ....

இரண்டு முறை நடக்க முடியாமல் நடந்து அவள் அறைக்கு போனான்...  வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டான் ...

"சார் அங்காவை பார்க்கணும் 

"அவ  தூங்கிட்டு இருக்கா.  இப்ப அவளை பார்க்க முடியாது ....  அதோட என்னோட அறைக்குள்ள  அவளே அதிகப்படி , உன்னையும் உள்ள அனுமதிக்க முடியாது .... இது ஒன்னும் சத்திரம் சாவடி இல்ல "என்று அலுவலுக்கு  கிளம்பி வெளியே வந்த நீல் சாரதியை தடுத்து நிறுத்த...

"ஒரு பத்து நிமிஷம் டைம் தாங்களேன்....  அவ எப்படி இருக்கான்னு பாத்துட்டு போயிடுறேன்.....  

"லைக்கா இஇஇஇஇஇஇஇஇ 

"எதுக்கு இப்ப அந்த பேயை கூப்பிடுறீங்க போயிடுறேன்" என்று அடித்து பிடித்து சாரதி ஓடி விட்டான் 

"ஸ்ப்பா  உலகத்துல எத்தனையோ பேர் இருக்க இதுக வந்து கண்ணுல மாட்டி இருக்கே" என்று தலையை தடவி கொண்டவன் 

"அவனை என் ரூம் உள்ள அலோவ் பண்ண கூடாது என்று வெளியே நிற்கும் நபர்களிடம் சொல்லி விட்டு தான் போனான்....  

"எப்படி இருக்க பார்த்தா ?

"நீ எப்படி இருக்க?

"ம்ம் சாப்பிட்டியா" ரெண்டு பழத்தோடு தான் எப்போதும் போல ஓடி வந்திருந்தாள்... வாங்கி கொண்டான் காலையில் லைக்கா சுடச்சுட ப்ரெட்டை கொண்டு வந்து நீட்ட அதை அப்படியே வைத்து விட 

"அய்யோ பாவம்னு தந்தேன்ல இனிமே  பச்சை தண்ணீ கூட உனக்கு தர மாட்டேன்,  பசியில சாவு என்று லைக்கா கத்த .. அப்போது இருந்து எதுவும் சாப்பிடாது இவனும் இங்கேயே தான் இருக்கிறான்... வேகமாக அந்த பழத்தை சாப்பிட்டு அவள் நீட்டிய நீரை குடித்தவன்...

"நீ சாப்பிட்டியா ?

"வாய் கருவாட்டு குழம்பு கேட்குது எங்க ... இந்த புல்லும் தழையும் தானே கிடைக்குது 

"அதையும் விட்டு வச்சிருக்க மாட்டீயே 

"ஹிஹி நிறைய ரத்தம் போயிடுச்சுன்னு பெல்லா பேபி சொல்லுச்சு...  அதான் ரத்தம் ஊற  கொஞ்சூண்டு தின்னேன் "என்று  அங்கா விரலை சுருக்கி காட்டினாள்.... வெகு நேரம் அமைதியாக இருவரும் எங்கோ ஓடும் மேகங்களை பார்த்தபடி இருக்க 

"அங்கா 

"ம்ம் 

"நீ குழந்தை உண்டாகி இருக்கேன்னு பேசிக்கிட்டாங்க... "பாவம் ஆண் அவனுக்கே அந்நிய பெண் தீண்டல் பேச்சு அருவருக்க செய்யும் போது பெண் இவள் பாவமே என்று வருத்தம் வந்தது 

"ம்க்கும்  இவனுக கற்பனையில தீயை வைக்க அதெல்லாம் ஒன்னும் இல்லை..  அந்த மெட்டலாண்டி விரல் கூட என் மேல படல .... அதுல எல்லாம் ஆளை குறை சொல்ல முடியாது ... இதுவே நம்ம உலகமா இருந்து இருந்தா அவனுக பசிக்கு இரையாக்கி என்னை உரு தெரியாம மாத்தி இருப்பாங்க,  அந்த வகையில இந்த உலகம் பெண்களுக்கு ஏற்றது தான் பார்த்தா "

"ம்ம் ... ஆனா ஆண்களுக்கு ஏற்றது இல்லை அங்கா 

"ரொம்ப கொடுமை பண்றாளோ 

"ரொம்ப.... ராட்சசி!!  இப்ப கூட உன்ன பார்க்க வர்றேன்னு தெரிஞ்சு போக கூடாதுன்னு  என் கையை பிடிச்சு திருக்கினா... எப்பவும் முரட்டு தனமா நிக்கிறா ...  எப்படா இவக்கிட்ட இருந்து தப்பிப்போம்னு இருக்கு ... சாரதி  அங்கலாய்க்க  மரத்திற்கு பின்னே நின்ற லைக்கா முகத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது ..

"அவன்தான் தங்கை போல மகள் போல என்றுவிட்டானே!! பின்னே ஏன் இந்த பொறாமை தீ ....  தன்னிடம் முகத்தை திருப்பும் அவன் ,அவளிடம் உட்கார்ந்து உள்ளத்தை திறந்து பேச பொறுக்கவில்லையே,  பின்னாடியே வேவு பார்க்க வந்து விட்டாள்....   இதுவரை வஞ்சகம் நினையாத பெண் உள்ளம் ,  காதல் என்ற கோட்டைக்குள் சுண்டுவிரல் வைத்ததும்  வஞ்சம் தீர்த்தாயினும்  அவன் அருகாமை தனக்கே வேண்டும் என்ற சுயநலம் அவளை ஆட்கொள்ள ... நகத்தை கடித்து கொண்டே சிரித்து சிரித்து பேசும் இருவரையும் பார்த்தவள்  ...

"நீ இருக்கிறதுனால தான அவனுக்கு நான் கண்ணுல  தெரில,  வேற வழியே இல்லைன்னா என் பின்னாடி தான சுத்தி ஆகணும் ..." காதல் எதையும் செய்ய வைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் உதட்டை வளைத்து சிரித்த லைக்கா 

"ஒரே கல்லுல  ரெண்டு மாங்கா,  நீலுக்கு  மட்டும் ஹையர் போஸ்ட் எனக்கு மட்டும் எப்பவும் அவனுக்கு  கீழே உள்ள போஸ்ட்.... ஒத்த உண்மையை சொன்னா அவன் பதவி எனக்கு ,இந்த பேக்கும் எனக்கு  ... என்று சிரித்தவள்  .... நேரே போய் அவர்கள் சீப்  குவாக் முன்னே போய் நின்றாள்.....  

நீல் மற்றும் அய்யற்கன்னி இடையே எதுவுமே நடக்கவில்லை என்பதை கூறி முடிக்க...

என்ன சொல்ற ? அங்கே  உள்ள அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க 

"நான் பொய் சொல்லலை டீன் .... அவ வெர்ஜின்,  நீல் குழந்தை அவ வயித்துல வளரல.. நீல் இந்த போஸ்ட்டுக்காக  நாடகம் போடுறான் .... ட்ரஸ்ட் மீ .... அந்த பொண்ண இங்கேயே செக் பண்ண சொல்லுங்க நான் சொல்றது உண்மையா பொய்யா தெரியும் .... 

நீலை வர சொல்லுங்க ....என்னு குவாக் கூற

நான் சொல்றதை நம்பலையா டீன் 

வரட்டும் லைக்கா ... நீ சொல்றது உண்மையா இருந்தா நீலுக்கு கொடுக்க போற தண்டனையை யாரும் மறக்க முடியாது .... நம்ம சட்டதிட்டங்களை மதிக்காதவனுக்கு  என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை  கொடுக்க தயார் .... 

"அந்த பொண்ணை பூமிக்கு அனுப்பிடுங்க அவளால நமக்கு எந்த லாபமும் இல்லை .... 

"முதல்ல நடந்தது உண்மையா பொய்யான்னு விசாரிப்போம்  அந்த பொண்ணு நீல் பெல்லா எல்லாரையும் வர சொல்லுங்க ..... 

"டேய் இருங்கடா எப்போ பாத்தாலும் வெளவால் போல என்ன தூக்கிட்டு போறீங்க ,எங்கடா தூக்கிட்டு போறீங்க  இருவர் அங்கையை தூக்கி கொண்டு வர 

அங்கா அங்கா என்று சாரதி அவள் பின்னேயே ஓடி வர எஃகு மாளிகை ஹாலில் அத்தனை கூட்டமும் வெள்ளி ஆடையில் நிமிர்ந்த தேகத்தோடு உட்கார்ந்து இருந்தது ... 

"போச்சு எண்ணெய் சட்டியில போட போறான்களா.... கருவாட்டு குழம்பு கேட்டது குத்தமா...ஓடினேன் ஓடினேன் ஒரு கருவாட்டு குழம்புக்காக கண்டம் கண்டமாக ஓடினேன்னு புலம்ப வச்சிட்டானுவளே  ... என்ன ஏழரை நடக்க போகுதோ தெரியலையே , என்ன அதிசயம் மெட்டலாண்டியை கூட்டத்துல காணல .... ஒருவேளை எண்ணெய் சட்டியை சூடு பண்ற ஜாப்ல இருப்பானோ ... அது சரி நான் செத்தா ஹேப்பி அண்ணாச்சி போஸ் கொடுக்கிற முதல் ஆளு அவன்தானே.... காயம் ஆற கூட செய்யலையே அதுக்குள்ள அடுத்த டக்கப்போரா... அய்யோ மனம் அலற உதடும் உளற  அங்கை பாவமாக அத்தனை பேர் முன்னேயும் நிற்க  வைக்கப் பட்டாள்...

சரட் சரட் என்ற எஃகு காலணி சத்தத்தில் அங்கை திரும்ப ,  கேசத்தை ஒரு கையால் கோதி கொண்டு சிவப்பு கண்ணை இடுக்கி பார்த்தபடி அவளையும் ஒரு பார்வை பார்த்தபடி உள்ளே வந்து டீன் முன்னே நின்றான் நீல் ....

"என்ன விஷயம் டீன்?...

"உன் மேல கேஸ் பைல் ஆகி இருக்கு நீல் 420"

வாட் யாரு??  அங்கையை அவன் கோவமாக பார்க்க 

"மாடல் ஆண்டவனே, நான் இல்லை நான் இல்லை என்ன தினுசா பார்க்காத" என்று அவள்  உதட்டை பிதுக்கி முனங்க..   அவன் பார்வையில் லைக்காவின் ஆர்வ விழிகள் பட்டு விட்டது ....  

"என்ன கூப்பிட்டு விட்டீங்களாமே" என்று பெல்லா உள்ளே வர 

"ம்ம் அவ குழந்தை உண்டாகலைன்னு தகவல் வருதே பெல்லா 777 ....  எங்க முன்னால செக் பண்ணுங்க  என்றதும் அங்கை அலறியவள் 

"டேய் லூசு கம்னாட்டிகளா, நான் என்ன சோதனை எலியா இத்தனை பேர் மத்தியில போட்டு சோதனை பண்ண" என்றவள் பேச்சை சாரதி கை வைத்து அடைத்து விட்டவன்...

"அமைதியா இரு அங்கா அதுகளுக்கு உள்ளேயே ஏதோ குழப்பம் போல , நமக்கு எதாவது  விடிவு காலம் வரலாம் ..  என்று அவளை பேச விடாது வாயை அடைத்து வைத்து கொண்டான் ....

நீல் உன்னோட ரூம் சிசிடிவி கேமரா பதிவுகள் எல்லாம் உடனே வந்தாகணும்....  அத்தோடு இன்னும் ரெண்டு நிமிஷத்துல அந்த பொண்ண செக் பண்ணி ரிப்போர்ட் வரணும்... நீ மட்டும் இந்த தப்பு செஞ்சது உறுதியாச்சுன்னா,  ஏழு வருஷத்துக்கு உன்ன  டீ ப்ரொமோட் பண்ணி வைக்க வேண்டியதிருக்கும் ... இந்த கிரக சட்டத்தின் முன்னால் எல்லாரும் சமம்தான் அது  நீலுக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்... என்றதும் நீல் தலையை தடவிக் கொண்டே ...

சிசிடிவி ஃபுட்டேஜ் எப்படி காணாம போச்சுன்னு தெரியல...  இப்போதைக்கு இல்லை,   ஒரு ரெண்டு நாள் டைம் தந்தா ரெக்கவரி பண்ணி தந்திடுவேன் என்றதும்  எல்லோர் பார்வையும் சந்தேகமாக நீலின் மீது விழ.... 

ஆஆஆஆஆஆ பார்த்தசாரதி கையை உதறி கொண்டு நின்றான் ... அவன் கையைப் பிடித்து கடித்து விட்டாள்  அங்கையற்கன்னி...

அங்கை,  ஏதாவது பேசி காரியத்தை கெடுத்து வச்சிறாத,...  இதுதான் நமக்கு தப்பிக்கிறதுக்கான ஒரே வாய்ப்பு என்று சாரதி அவள் கையில் பிடித்து இழுக்கும் முன்னால் ஓடி வந்து நீல்முன்னால் நின்றவள்... குவாக் நோக்கி திரும்பி 

"ஏங்க தலைவரே உங்களுக்கு கூச்சநாச்சமாவே இல்லை....  நீங்க வேற்று கிரகத்து வாசியாவே இருந்தாலும்,  இதெல்லாம்  அநியாயம் ... ஒரு அறைக்குள்ள நானும் அவரும் இருந்ததை சிசிடிவி போட்டு பாக்கணும்னு ஆசைப்படுறீங்களே அல்பத்தனமா இல்ல...  

"எங்களுக்கு  அதுவும் ஒரு வேலைதான் ... எந்த ஒளிவு மறைவும் இல்லை "

"அதான்டா செல்ப் எடுக்காம சுத்திட்டு கிடக்கீங்க....  பொம்பளையை பொம்பளையா பார்க்கணும்  ஆண்பளைய ஆம்பளையா பார்க்கணும்,  ரெண்டும் ஒன்னு போலவே சுத்துனா...  எங்க இருந்து இன்ஜின் வேலை செய்ய ..

யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்  பொண்ணு ...

"என்ன வச்சி தான பஞ்சாயத்து அப்போ நான்தான பேசுவேன்... 

"இந்த கிரகத்துக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை 

"என்ன இல்லை இதோ இங்க நிக்கிறாரே அவர் பிள்ளை என் வயித்துல உதைக்குது.. அப்போ நானும் இந்த கிரகத்துக்கு அங்காளி பங்காளிதானப்பா" என்றவளை நீல் கூர்ந்து பார்க்க அவனை பார்த்து உதட்டை சுளித்தவள் மீண்டும் திரும்பி.... 

யார் சொன்னா எனக்கும் அவருக்கும் எதுவுமே நடக்கலன்னு,  எல்லாமே நடந்தது உண்மை...  அதனால நான் குழந்தை உண்டானதும் உண்மை அது உண்மையா பொய்யான்னு  பார்க்கிறதுக்கு நீங்க பத்து மாசம் காத்து இருக்கத்தான் செய்யணும்...  பெல்லா மேடம்தான் ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல,  நான் குழந்தை உண்டாகி இருக்கேன்னு ... சம்பந்தப்பட்ட நானே சொல்றேன் என் வயித்துல அவர் குழந்தை வளர்றது சத்தியம் யாரோ சொன்னாங்கன்னு ,  இத்தனை வருஷம் உங்களோட உலகத்துக்காக உழைச்சிட்டு இருக்கிற அந்த மனுஷன சாரி சாரி அந்த ஏலியனை..  எப்படி நீங்க குறை பேசலாம் ... இதெல்லாம் தாண்டி நானும் அவரும் ஒன்னா இருந்தது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா என்றவள் சட்டென நீலின் சட்டை காலரை பிடித்து இழுத்து குனிய வைத்தவள் ,

என்ன பேசுகிறாள் என்ன செய்கிறாள் என்று புரியாத நிலையில் நின்ற நீலின் சிவந்த உதட்டோடு தன் பஞ்சு உதட்டை கவ்வி சுவைத்து விட்டாள் ...

ஹக்இஇஇஇ   அவன் ரெட்டை சிகப்பு கோர விழிகள்  அகல விரிய , அவள் அகண்ட விழிகள் மூடிக்கொள்ள அவை எங்கும் அமைதி நிலவ  

லபெக் என்று நான்கும்  உதடுகள் விடுபட்ட சத்தம் ... 

இந்த முத்தம் எங்க ரெண்டு பேருக்கும் இடையில இது எதுவும்  புதுசு இல்லன்னு காட்டி இருக்கும் ,  நான் சொன்னது மெய்ன்னு  புரிய இந்த முத்தம் போதும்னு நினைக்கிறேன்....,  நாங்க ரெண்டு பேரும் எப்படி இருந்துகிட்டு இருக்கோம்னு உங்களுக்கு நிரூபிக்க இது போதுமா ?இல்லை,  நீங்க சொன்ன மாதிரி ஒளிவு மறைவு இல்லாம இருக்கணுமா...  இங்கேயே வேணும்னாலும் உங்க சந்தேகத்துக்கு முற்று புள்ளி வைக்கிறேன் .... என்றவள் தன் சேலை மீது கையை வைக்க ...  சட்டென நீல் கைகள் அவள் கையை அழுத்தி பிடித்து தடுத்து இருந்தது...  

இதை எல்லாம்  மீறி சந்தேகம்னா,   பத்து மாசத்துல அவர் ஜாடையில பெத்து போடுறேன் அப்பறம் முடிவு பண்ணுங்க  ...  இதுக்கு போட்டு ஆதாரம் திரட்டி நேரத்தை வீணாக்கிட்டு இருகானுக கூறுகெட்ட குக்கருக...   கையை விடுங்க என்று நீல்  கையிலிருந்த தன் கையை எடுத்து கொண்ட அங்கை ...

தன் உதட்டில் பட்டிருந்த நீலில் ஈரத்தை  கை வைத்து துடைத்து கொண்டே  அந்த சபையை விட்டு வெளியேறி விட்டாள்.... 

இனி எவன் அவனுக்கு தண்டனை கொடுக்க இதற்கு மேல் யார் அவனை குற்றவாளி என்று சொல்ல முடியும் ... 

குற்றம் சுமத்த வேண்டியவளே,  அவனை நிரபராதி என்று நிருபித்துவிட்டு போய் விட்டாள்..