எஃகில் கலந்த தளவம் 11

Egg11

எஃகில் கலந்த தளவம் 11

11 எஃகில் கலந்த தளவம் !!

கங்க்ராஜூலேசன் நீல் 420 என்று அந்த எஃகு மாளிகையில் நடந்து வந்து கொண்டிருந்த நீலுக்கு அனைவரும் வாழ்த்து சொல்ல ...

ம்ம் ஒரு தலையசைப்போடு கையில் இருந்த பைலை புரட்டிக் கொண்டே தன் அறைநோக்கி வந்து கொண்டிருந்தான் நீல் ... 

பொய்தான் !! அவன் குழந்தை அவள் வயிற்றில் என்ற வதந்திக்கே அங்கே அவன் கிரேட் ஏகத்துக்கு கூடி இருந்தது... அத்தோடு காலைதான் இந்த கிரகத்தின் முக்கிய பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது...  

நீல் , நம்ம ப்ளனட்டை காப்பாத்திடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சு , அழிஞ்சிக்கிட்டு இருக்கிற ஜனத்தொகையை நீதான் பெருக்கணும் , அதுக்கு ஆரம்ப சுழி போட்ட உனக்கு இந்த பதவியை எல்லாரும் மனசார தர்றோம் என்று கொடுக்க எதிர்பார்த்த பதவி இவ்வளவு எளிதில் அவன் கையிலா... ஒரு ஆணியும் புடுங்காது , கூச்சமே இல்லாமல் பதவியை வாங்கி கொண்டான்.....

அவர்களின் சோதனை வெற்றி !! கிரகத்து வாசிக்கும், மானிடவாசிக்கும் இடையே ஒரு பந்தம் உருவாகிவிட்டது ... இனிமே வரப்போகும் குழந்தைகள் எப்படியும் இந்த கிரகத்தை அழிய விடாது பெருக்கி விடுவார்கள் என்று அத்தனை பேருக்கும் நிம்மதி பெருமூச்சு !! அடுத்த கட்டமாக இன்னும் 10 ஆண்கள் பெண்களை பூமியிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து இதே செயல்பாட்டை செய்ய வேண்டும் என்று பேச்சு வேறு நடந்து கொண்டிருக்கிறது... லைக்காவும் நீலும் தான்

இல்ல அவசரப்பட வேண்டாம்,. கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் என்று காலம் தாழ்த்தி இருக்கின்றனர் ... அவர்களுக்கு தானே தெரியும் ஒரு அறைக்குள்ளையே பூமிவாசியை வைத்து வாழ முடியாது , இந்த கிரகம் முழுவதும் பூமிவாசி என்றால் அய்யய்யோ!! நெனச்சு பார்க்கவே பதறியதே...

நீல் தன் அறைக்கதவை யோசனையாக தள்ளி கொண்டு உள்ளே வர, 

சோதனை மேல் சோதனை சொறிய சொறிய வேதனை, சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது அங்கை என்ற பாட்டு சத்தம் தான் அவனை வரவேற்றது... அவன் படுக்கை மீது அங்கயற்கன்னி படுக்க வைக்கப்பட்டிருந்தாள்... இவனுக்கு , அவளை பார்த்ததும் முகத்தில் சுள்முள் ஒட்டி கொள்ள...

நீ இங்க என்ன பண்ற ? பல்லை அரைக்க நீல் கேள்வி வர 

நாலு காவடி, ஏழு தடவை பூக்குழி இறங்கி நான் மெட்டலாண்டி கூடத்தான் இருக்கணும்னு வேண்டிட்டு வந்த மாதிரி பேசுவான் .... என்று இவ்வளவு நேரம் இருந்த நிம்மதி பறிபோனவளாக அவனை முகத்தை சுருக்கி பார்த்தவள் ..... 

"இல்லை உங்க ரூமை சும்மா சுத்தி பார்க்க வந்தேன் நீங்க என்ன இந்த பக்கம், என்று அசடு வழிய.... 

கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா போதும் அதை விட்டுட்டு தேவையில்லாம புலம்பின ,என்கிட்ட கேள்வி கேட்ட என்று நீல் தன் பேண்ட் பாக்கெட் உள்ளே கையை விட்டு துப்பாக்கியை எடுத்து அவள் அருகே உள்ள மேஜை மீது வைக்க 

"இங்க என்ன நீட் எக்ஸாமா நடக்குது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல... நான் இப்படிதான் பதில் சொல்வேன், வேணும்னா நீங்க கேள்வி கேட்கிறதை நிறுத்திக்கோங்க," உயிரை எடுக்கிறாளே என்பது போல பார்த்தவன் 

"கிளம்பு இனி என் ரூம் உள்ள வந்த மறுபடியும் பிழைக்க முடியாத இடத்துக்கு அனுப்பிடுவேன்"

"சுட்டவர் சுட்டு கொன்னு இருக்க வேண்டியதுதான... நான் பாட்டுக்கு நிம்மதியா பேயா மரத்துல தொங்கிகிட்டு பறந்து பறந்து ஜாலியா சுத்தி வந்திருப்பேன்... அதை விட்டுட்டு அரைகுறையா சுட்டுட்டு , இப்ப போ போன்னா எங்க போக? உங்களுக்கு எல்லாம் இந்த அங்கயற்கன்னியை பார்த்தா இளப்பமா இருக்கா ..... நான் எல்லாம் இளம் தீவிரவாதியாக்கும்!! வன்முறையை கையில எடுக்கல..எடுத்தேன் ஆஆஆஆஆஆஆ பேசிட்டு இருக்கும் போதே எதுக்கு ஏலியன் சார் தூக்குறீங்க இறக்கி விடுங்க உங்க பாசத்தை காட்ட இது நேரம் இல்லை... எம்மே விடுங்க காயம் வலிக்குது ஸ்ஆஆஆஆஆ நீல் அவளை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வந்து அறை வாசலில் கிடாசியவன்...

இது என் ரூம் !! என் ஸ்பேஸ் , இதுக்குள்ள உனக்கு இனி அனுமதி இல்லை , வந்த தொலைஞ்ச போ என்று திரும்ப போக, கதவு இடுக்கு வழியே உருண்டு உள்ளே வந்த அங்கையை அவன் முறைக்க... 

"பெல்லா பேபிதான் தூக்கி கொண்டு இங்க கிடாசிடுச்சு எது பேசணும்னாலும் அவங்க கிட்ட பேசிக்கணுமாம் .... உங்க பேபியை சுமக்கிற நான் உங்க ரூம்ல தான் இருக்கணும்... அதான் உங்க உலகத்து சட்டமாம், போன்னு விரட்டுறதும் வான்னு இழுக்கிறதும் ஒரு தினுசாதான் எனக்கு வன்முறை நடக்குது.... என்ன முறைச்சிட்டு நிக்கிறீங்க ... வழியை விட்டு விலகி நில்லுங்க,  

இல்லைன்னா கடினமான சாடல் வர 

வலிக்குதுல்ல, போய் ஒரு ஓரமா படுத்துக்கிறேன் ... இல்லை மறுபடியும் சுட்டு சுட்டு விளையாடுவேன்னா இந்தாங்க வலது பக்க நெஞ்சுல சுடுபட்டு செத்தா அங்கைன்னு சரித்திரத்தில வர படாது ... அது என் வீரத்துக்கு அவமானம், இதோ இதயம் இங்கிட்டு இருக்கு இதுல சுட்டு ஒரேயடியா மேல அனுப்புங்க ம்ம் துப்பாக்கியை எடுத்து நீல் கையில் திணித்தவள்....  

"சுடுங்க , சாவுக்கு எல்லாம் பயப்படுற ஆளு நான்னு நினைச்சிங்களா... வஞ்சனையும், வன்முறையும் துரோகமும், காழ்புணர்ச்சியும் கொண்ட உலகத்தை பார்த்தே பயப்படாத ஆளு நான் .. அப்ட்ரால் உங்க துப்பாக்கி பார்த்து பயந்து சாவேனா இல்லை ரெண்டு குண்டடியில செத்துடுவேனா?? ம்ம் காயம் வலித்தாலும் எதிரி முன் மண்டியிடாத வீர மங்கைதான் அவள் ....

மெல்லிய வெள்ளை நைட்டி ஒன்று அணிந்து இருந்தாள் ... நெஞ்சில் அவள் காயம் கட்டிய பஞ்சின் மீது ரத்தம் உறைந்து நின்றது, இவன் இழுத்து கொண்டு கிடாசியதில் காயம் தாண்டி ரத்தம் கசிய தொடங்கி வலியை கூட்ட... பல்லை கடித்து வலியை தாங்கியபடி கொல்லு என்பது போல அங்கை நெஞ்சை நிமிர்த்தி நிற்க... நீல் கைகள் துப்பாக்கியை அழுத்த .... 

"கொல்றதுக்கு முன்ன நான் செஞ்ச தப்பு என்னன்னு சொல்லிட்டு சுடுங்க ஏலியன் ... நாளைக்கு எதுக்காக செத்தன்னு சொர்க்கத்துல என்கொய்ரி வைக்கும் போது சொல்ல காரணம் வேணும்ல.. கையை கட்டி கொண்டு நின்று அவனை பார்த்தாள்... 

"வாய்தான் காரணம்னு சொல்லு "... என்ற நீல் அவளை ஒரு பார்வை பார்த்தபடி துப்பாக்கியை தூக்கி மேஜைமீது போட்டு விட்டு டவலை எடுக்க, சேம் அவள் முடி 

ஊப்ஸ்இஇஇஇஇஇ தலையை உலுக்கி கொண்டு நீல் குளியலறை புக...

"கருமம் என்னா வலி வலிக்குது ... கருணையே இல்லாதவன் கொல்லவும் மாட்டைக்கான் .. வாழவும் விட மாட்டைக்கான் கடிக்க கூடாத இடத்துல எறும்பு கடிச்சு வீங்கி அதை போய் யாருக்கிட்டையும் மருந்து போட காட்ட முடியாம, இவன் அலறணும் அதை நான் பார்த்து ரசிக்கணும் ... ச்சைக் அதை பார்த்தா என் கண்ணு போயிடாது , ஏலியன் அலறுறதை கேட்டா மட்டும் போதும் .. என்ற அவள் புலம்பல் நீர்க்குமிழி பட பட அவன் செவி ரெண்டையும் வந்து அடைந்து கொண்டே இருந்தது .... 

தலையை துடைத்து கொண்டே நீல் கதவை திறந்தான் ... அறையில் பேச்சு சத்தம் இல்லை இருட்டாக கிடந்தது... அவள் இருந்தால் அமைதிக்கே இடம் இருக்காதே... நீல் வேகமாக எட்டு போட்டு படுக்கை அருகே வந்து குட்டி விளக்கை எறிய விட படுக்கை மீது போர்வை உள்ளே முயல் குட்டி போல அங்கையற்கன்னி படுத்து கிடந்தாள்.... அசைவு இல்லை , நீல் கண்களை சுருக்கி யோசனையாக அவள் அருகே வந்தவன் மெல்ல தன் விரலை அவள் மூக்கு பக்கம் கொண்டு போக , அவள் மூச்சு காற்றில் அவன் ஈர விரல்கள் சிலிர்த்து உடலின் ரோமம் எல்லாம் பசும் புல்லாக முளைத்து நின்றது ...

என்ன அதிசயமாக இருக்கு குறட்டை இல்லாம ஜந்து தூங்குது... என்று நீல் நினைத்து முடிக்கும் முன் 

கொர் ட்ர் என்று ரெயில் பெட்டி உரசும் சத்தம் அங்கை உதட்டில் உண்டாக... ரெண்டு இமைக்கும் நொடி அவள் முகத்தை பார்த்து விட்டு முகத்தை திருப்பி கொண்டான் எஃகு இதயோன் !! 

"இந்த மானிட்டரை செக் பண்ணுங்க , அப்படியே லெஃப்ட் சைடு உள்ள சாட்டிலைட் சரியா வேலை செய்யல, பூமியோட ஈஸ்ட் பக்கத்துல இருக்கிற டவர் எரர் காட்டுது. எல்லாத்தையும் இன்னொரு முறை கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க.... இன்னைக்கு நைட் பூமிக்கு போகணும் எல்லாம் சரியா இருக்கணும் என்று நீல் அங்கே உள்ளவர்களுக்கு கட்டளையிட்டு கொண்டிருக்க அவன் முதுகை ஒரு விரல் சுரண்ட ... சட்டென திரும்பிப் பார்த்தான்..

 அங்கே அங்கையற்கன்னிதான் நின்று கொண்டு இருந்தாள் ... குளிக்க கூட இல்லை காலையில் எழும்பிய அதே முகத்தோடு இவனை தேடி வந்திருந்தாள் எல்லோரும் அவளையும் நீலையும் மாறி மாறி பார்க்க... 

"அவரவர் வேலையை பாருங்க "என்று விட்டு அவள் கையை இழுத்து தரதரவென பிடித்துக் கொண்டு வந்து தனியாக விட்டான் .. 

"அறிவு இல்லை முகத்தை கூட கழுவாம வந்து நிக்கிற ...

"முழிச்சதும் உங்க முகத்தை பார்க்கணும்னு தேடி வந்தேன் என்றவளை ஆத்திரமாக ஒரு பார்வை பார்க்க 

"பின்ன என்ன ஏலியன் எனக்கு என்ன ஆசையா உங்க முகத்தையே மறுபடியும் வந்து பார்க்க... நீங்க என்ன என் காதலனா? இல்ல புருஷனா , ஆசையா உங்களை தேடி வர.. நானும் முடிஞ்ச வரைக்கும் உங்க பக்கத்துல தலை வெச்சு படுக்கவே கூடாதுன்னுதான் நினைக்கிறேன் .... ஆனா, காலம் என்ன வச்சு செய்யுதே என்ன பண்ணட்டும்.... எல்லாரும் நான் குழந்தை உண்டாகி இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காங்க... யாருகிட்ட போய் இத கேக்குறதுன்னு எனக்கு தெரியல... அதான் சம்மந்தப்பட்ட உங்ககிட்டேயே கேட்கலாம்னு வந்துட்டேன்... எனக்கு அந்த மூணு நாள்.. சிலது தேவைப்படுது பெல்லா பேபி கிட்ட போய் கேட்டா இது ஏன் டிபார்ட்மெண்ட் கிடையாது , நீல்கிட்ட போய் கேளுன்னு மனசாட்சியே இல்லாம அனுப்பி விட்டுட்டாங்க .... காலையில இருந்து என்ன பண்றதுன்னு தெரியாம , அங்கேயும் இங்கேயும் சுத்திகிட்டு இருக்கேன் .... 

"ஓ அந்த மூணு நாள்னா , உனக்கு கால் அமுக்கி கையை அமுக்கி உன்ன கையிலேயே தூக்கிக்கிட்டு சுத்தணும்னு நினைக்கிறியா? 

"அவ்வளவு எல்லாம் பண்ண வேண்டாம் உங்க பெருந்தன்மைக்கு நன்றி!!! ரெண்டு பாக்கெட் வாங்கி கொடுங்க, இப்போதைக்கு போதும் ... கை கால் அமுக்க தேவைப்பட்டா சொல்லி அனுப்புறேன் அப்போ வாங்க" என்றவள் கேலி பேச்சில் சட்டென அவள் கழுத்தை நெறித்து விட்டவன் 

"நான்,ஏன்டி உனக்கு அதெல்லாம் செய்யணும் முடியாது போடி என்று அவளை விட்டுவிட்டு திரும்ப 

"இந்த வயித்துல நீலோட புழுவும் இல்லை பூச்சியும் இல்லை.... வாயுவும் நான் தின்ன தீனியும் தான் இருக்குன்னு உங்க உலகத்துக்கு உரக்க சொல்ல வேண்டி இருக்கும் மிஸ்டர் ஏலியன் ... 

என்ன மிரட்டுறியா?

"உங்களுக்கு தேவைன்னா என்ன வேணும்னாலும் பண்றீங்கல்ல , எனக்கு என்ன பிள்ளையா வேணும்னு உங்க சட்டையை பிடிச்சு கேட்டேன்... ரெண்டே ரெண்டு ஃபேட் வாங்கி தாங்கன்னு கேட்டதுக்கு இவ்வளவு பேசுறீங்க... வாங்கி கொடுங்க அவ்வளவு தான் .... எதையெல்லாம் தான் நானும் தாங்க ச்சை ... டான்னு மணி அடிச்ச மாதிரி பத்தாம்தேதி ஆனா வந்து தொலைச்சுடுது இதுக்கு ஒரு விடுமுறை கிடையாதா? .... என்று புலம்பி கொண்டே அங்கை வெள்ளி நீரோடை அருகே உட்கார்ந்து இருந்த பார்த்தா நோக்கி நடக்க ஆரம்பித்தாள்....  

"என்ன நீல் கூப்பிட்டு விட்டியாம் லைக்கா நீல் அருகே வந்து நிற்க 

"ம்க்கும் அது ... 

"ம்ம் சொல்லு நீல் .... 

"இல்ல அது இருக்கா ... எங்கோ பார்த்து கொண்டு கேட்டான் 

"எது ? புரியாது லைக்கா கேட்க 

"இல்ல அதான் ஊப்ஸ் பேட் "என்று முடிக்க...

"என்ன தீடீர்னு " திமிராக நின்ற ஆணும் நெளிந்தான் திமிர் கொண்ட பெண்ணும் நெளிந்தாள்...

"அவளுக்கு தேவைப்படுது அந்த பெல்லா கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கு 

"ஓஓஓ தன்னிடம் இருந்ததில் ரெண்டை அவன் பக்கம் வைத்து விட்டு லைக்கா போக ... சுற்றி முற்றி பார்த்தவன் 

"இந்த ஜந்துவை சாகடிச்சாலும் பிரச்சனை சாகடிக்கலைன்னாலும் பிரச்சனை .. இவளை என்ன பண்ணுறது என்ற யோசனையோடு யாருக்கும் தெரியாது அதை எடுத்து கொண்டவன் தன் அறையில் உள்ள படுக்கை மீது கொண்டு வைத்தான்....

நேசிக்க தெரியாதவர்களின் சொற்ப நேசம் கூட அழகானது!!