எஃகில் கலந்த தளவம் 16
Egg16
16 எஃகில் கலந்த தளவம் !!
யோசிங்க யோசிங்க நான் சொல்றதுல உள்ள உண்மை தெரியும் ஏலியன்
நீல் யோசனையாக கண்ணைச் சுருக்கி கொண்டு நிற்க...
அறிவாளி தான்
என்னைய எல்லாம் ஐநாவுல கூப்பிட்டாங்க.. நான்தான் தாத்தா ஒத்தையில கிடைப்பாருன்னு சொல்லி போக மறுத்துட்டேன்..... இல்லன்னா அப்பவே நாடு உருப்பட்டு இருக்கும்.... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, நான் சொல்றதுபடி நீங்க செஞ்சீங்கன்னு வச்சுக்கோங்க ... பிள்ளை பெக்குறதுல டாப்பா வந்துடலாம்....
ம்ம் குட் ஐடியா "
அப்பாடா மெட்டலாண்டி மடிஞ்சுட்டான்... என்று நிம்மதி ஆனவள்
"அப்போ நானும் பார்த்தா கூட போகட்டா... என்னையும் அனுப்பி வையுங்களேன் .. உங்க தேசம் நல்லா இருக்கணும்ங்கிறதுக்காகதான் நான் மூச்சு பிடிச்சுகிட்டு இவ்வளவு நேரம் உங்களுக்கு அட்வைஸ் பண்ணி இருக்கேன்....
"ம்ம் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்ல என்றதும் அப்பாடா நமக்கும் விடுதலை தந்து விடுவான் என்று அங்கைக்கு உள்ளுக்குள் மத்தாப்பு வெடித்த சந்தோஷம்
"எப்படியாவது பேசி பேசியே இவனை கரைச்சு தப்பிச்சு ஓடிரணும் என்று பெரும் கனவில் பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்... அவன் விடைக்காக நீல் முகத்தை பார்க்க
புரிஞ்சிடுச்சு அப்போ இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருக்கும் லவ்வை கத்துக் கொடுக்கணும்னு சொல்ற.... லவ்வுல வர்ற குழந்தைகள் தான் நாட்ட காப்பாத்தும் மனுஷ பயல்க கூட குழந்தை பெத்துக்கிட்டா அது எங்க பூமியை நாசமாக்கிடும் கரெக்டா ?
"அதே அதே , அது தான் நான் சொன்னதை அப்படியே பிடிச்சுக்கிட்டீங்க ....
"ஆனா, அந்த லவ் எப்படி பண்ணனும்?
"அது வந்து என்று அவள் தலையை சொரிய
"அந்த லவ் எப்படி பண்ணனும்னு இங்க இருக்குற யாருக்கும் தெரியாது அதனால நீ என்ன பண்ற ... ஒரு வருசம் இருந்து எல்லாருக்கும் லவ் எப்படி பண்ணனும்னு கத்து கொடுத்துட்டு போ..
"ஹான்
"அதோட எனக்கு குழந்தை வந்துடுச்சுன்னு ஆல்ரெடி இங்க ஃபிக்ஸ் ஆயிடுச்சு ... சோ அந்த குழந்தையை பெத்து தந்துட்டு போகலாம் என்றதும் அங்கை முகம் சுட்ட கருவாடாக சுருங்கி போக
"இல்லை ஏலியன்
மூச் உன்ன இவ்வளவு தூரம் பேச விட்டதே பெருசு இனி ஒரு வார்த்தை பேசி என்னை தலைவலிக்க வச்சன்னு வை அதோ தெரியுது பார் எஃகு மலை
"ம்ம்
"அதோட உச்சிக்கு கொண்டு போய் தள்ளி விட்டுடுவேன் கம்முன்னு பின்னாடி வாடி ....
ப்ச் பேசுனது எல்லாம் வேஸ்ட்டா போச்சா, பார்த்தா உன்னை எதுக்கு தூக்கிட்டு வர்றாங்க .... பார்த்தாவை நால்வர் தூக்கி கொண்டுவர .... அவனை நோக்கி ஓடிவிட்டாள்....
"அவசரமா இது அடிக்கிறதுக்கு போனேன் அங்கை அதை கூட அடிக்க விடாம தூக்கிட்டு வராங்க என்னன்னு தெரியல எனக்கு மட்டும் நல்ல காலமே வர மாட்டேங்குது என்று பார்த்தா சுண்டு விரலை காட்டிக் கொண்டு பாவமாக சொல்ல
லைக்கா கையை கட்டிக்கொண்டு பாறையில் சாய்ந்து நிற்க... அவள் அருகே கொண்டு வந்து பார்த்தாவை போட...
நீல் பாறையின் மீது தாவி ஏறி உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு லைக்காவை பார்த்தவன்
"பனிஷ்மென்ட் கொடுத்துடலாமா லைக்கா ?
"என்ன பனிஷ்மென்ட்டா இருந்தாலும் வாங்கிக்க நான் தயார் கொடு என்றதும் ...
"மூன்று மாசத்துக்கு உனக்கு இந்த பிளானட் உள்ள இடம் கிடையாது என்றதும் லைக்கா அதிர்ந்து போய் நீலைபார்க்க...
" இந்த இடத்தில் உன் கால் கூட படக்கூடாது மூன்று மாசம் உனக்கு பனிஷ்மென்ட் பூமியில "என்று அதிரடி சட்டம் போட்டான்
வாட் பூமியா , இதை ஒத்துக்கவே மாட்டேன்... இது என்னோட இடம்
"யா, பட் உனக்கு மேலதிகாரி நான் .... சொன்னதை நீ கேட்டு தான் ஆகணும் இந்த இடத்துல நீ இருக்கக் கூடாது .. மூணு மாசம் உன்ன பனிஷ்மென்ட் பண்ணி பூமிக்கு அனுப்புறேன் "
"நீல் திஸ் இஸ் டூ மச்.... இப்படி ஒரு சட்டம் கிடையவே கிடையாது
"இந்த சட்டத்தை உருவாக்கியதே நான்தான் மூணு மாசம் அங்க கிடந்து கஷ்டப்படு, அப்பதான் உனக்கு நான் யாருன்னு தெரியும்
"நோ முடியாது நான் போக மாட்டேன்
போறியா போகலையான்னு கேட்கல, போகணும்.. இது என்னோட ஆர்டர் என்று மற்ற பணியாட்களை பார்த்தவன்...
"அவளுக்கு பறக்கும் தட்ட ரெடி பண்ணுங்க... அதோட அவகிட்ட இருக்குற மானிட்டர்ஸ் , வெப்பன்ஸ் டிவைஸ் எதுவுமே அவ கையில இருக்க கூடாது எல்லாத்தையும் புடிங்கிட்டு ,அனுப்பி விடுங்க" என்றதும் பார்த்தாவும் அங்கையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க ..
"அப்புறம் நீ என்று நீல் பார்த்தசாரதியை கைநீட்டி அழைத்தவன் ...
"அம்மாவ பாக்கணும்னு அழுதியாமே
"ம்ம் ஆமா சார்
"உன் பிரண்டோட சிபாரிசு, உன்னை பூமிக்கு அனுப்ப சொல்லி இருக்கா என்றதும் பார்த்தசாரதி அங்கையை திரும்பி பார்க்க .... அவள் தன் சேலையை காலரை தூக்குவது போல தூக்கி காட்டி
"எல்லாம் அடியேன் தான் , எல்லாம் நட்புக்காக என்ஜாய் பண்ணு பார்த்தா
"ஏன் ???அவன் குரல் உடைந்து வந்தது ..
"உனக்காக நான் ஏதாவது செய்யணும்ல பார்த்தா, சந்தோஷமா இரு என்னைக்காவது ஒரு நாள் நான் பூமிக்கு வந்தா கண்டிப்பா உன்னை வந்து பார்ப்பேன்... சரியா? அதுக்கு வாய்ப்பு இருக்கான்னு தெரியல ... இங்கையே செத்துப்போக போறேன் அதுவும் தெரியுது.... ஆனா கொஞ்ச நாளா இருந்தாலும்., நம்ம நட்பு பொய் இல்ல... நம்ம நட்புக்காக ஏதாவது நான் உனக்கு கைமாறு செய்யணும்ல .. அதான் அவர் கால்ல கையில விழுந்து என்றவள் கன்னத்தை தாங்கிய பார்த்தசாரதி.,
"நீ என் மேல வச்சிருந்த நட்பு உண்மைன்னா, நான் உன்மேல காட்டுற நட்பு உண்மைதானே அங்கை .... அம்மாவை பார்க்க ஆசைதான்.. இங்க இருந்து தப்பிக்கணும்ங்கிறது பெரிய ஏக்கம் தான் ..ஆனா அதுக்காக உன்ன விட்டுட்டு நான் மட்டும் தப்பிக்கணும்னு , உன்ன விட்டுட்டு நான் மட்டும் உலகத்துக்கு போகணும்... நீ செத்து நான் வாழனும்னு நினைக்கல அங்கை என்றவன் நீல் அருகே வந்து
"சார் எங்க அம்மா பாவம் தான், நான் காணாம போயிட்டேன்னு நினைச்சு கஷ்டப்படுவாங்கதான் ஆனா அவ இல்லாம நான் போக மாட்டேன் .... எனக்கு இந்த உதவி வேண்டாம் ... நானும் அவ கூடவே இங்கேயே இருந்துக்குறேன்.... வா அங்க நாம போவோம்" என்று சாரதி அங்கையின் கையை போய் பிடிக்க இருவர் கையையும் பிரித்து போனது நீல் கையிலிருந்த துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டு, இருவரும் அதிர்ந்து விலகி நிற்க
என்ன செய்யணும்னு நான் சொல்வேன்..அதைத்தான் நீங்க செய்யணும்... என்ற நீல் துப்பாகி புகையை உதட்டில் ஊதி கொண்டே
மூணு மாசம் இதோ போறாளே அவளுக்கு காவலா நீயும் பூமியில இருக்கணும்....
சார்
இட்ஸ் மை ஆர்டர் , அவளை பாதுகாக்க வேண்டியது உன்னோட பொறுப்பு ... அதே சமயம் அவ எங்க இருந்து வந்தா ... நீ இத்தனை நாள் எங்க இருந்த இந்த சீக்ரட் எல்லாம் யாருக்காவது தெரிஞ்சது... சாரதி ஈ ஆடாது நிற்க
"இதோ இங்க என் கூட இருக்காளே உன் தோழி அவ இருக்கிற இடம் தெரியாம போயிடுவா.... உன் தோழியோட உயிருக்கு செக்மேட் வச்சு வச்சிருக்கேன்... லைக்காவை பாதுகாக்கிறதும் உன் பாதுகாப்புல அவளை மூணு மாசம் வச்சுட்டு இங்க கொண்டு வந்து அவளை சேர்க்கிற, இல்ல இங்க இருக்குற உன் தோழியோட உயிருக்கு உத்திரவாதம் இல்லை
சார் என்று அவன் பயத்தில் அலற..
:என்ன ஏலியன் சார் நீங்க அவனை பெர்மனெண்டா அனுப்பிவிடுறேன்னு சொல்லிட்டு... இப்ப மூணு மாசம் வெக்கேஷனுக்கு போற மாதிரி அனுப்பி விடுறேன்னு சொல்றீங்க ,.. அங்கை போய் நீல் முன்னே நிற்க
"நீ சொன்னதெல்லாம் நான் ஏண்டி செய்யணும்... என் தேவைக்கு ஏற்பதான் நான் செய்ய முடியும் உன் எச்சில் முத்தத்துக்கும் நீ கொடுக்கப் போற குழந்தைக்கும் இவ்வளவுதான் என்னால செய்ய முடியும் வேணுமா வேண்டாமா ? ஓகேன்னா அனுப்பிவிடு இல்லன்னா லபோ லபோன்னு கத்தாம கிளம்பு ...
போக மாட்டேன் என்று மறுத்த பார்த்தசாரதியை உட்கார்ந்து தாஜா பண்ணிய அங்கை
"ப்ளீஸ்டா உங்க அம்மா பாவம், ஏற்கனவே ஹாட் பேஷன்ட்... அதோட என் தாத்தாவும் பாவம் தான.. போனதும் தாதாவை போய் பாரு வட்டிகாரனுக்கு பயந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிட்டா நல்லா இருக்கா , ஒரு வருஷத்துல திரும்பி வந்துருவேன்ன்னு சொல்ல சொல்லி இருக்கான்னு சொல்லிடுறியா? இந்த லெட்டரை தாத்தாகிட்ட குடு என்று ஒரு லெட்டரை மட்டும் பார்த்தசாரதி கையில் கொடுக்க
"இல்ல அங்க உன்ன என்னால தனியா விட்டுட்டு போக முடியாது அவளுக்கு துணைக்கு நான் எதுக்கு போகணும்?
"அதான் அந்த மெட்டலாண்டி போய் தான் தீரணும்னு நிக்கிறானே....
"முடியாது அவர் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் உன்ன விட்டுட்டு என்ன போக சொல்லாத...இந்த மூணு மாசத்துக்குள்ள உனக்கு ஏதாவது ஆகி போச்சுன்னா...நீ நல்லா தான் இருக்கியான்னு எனக்கு எப்படி தெரியும் நான் யாரையும் நம்பறதா இல்லை ,..
"நான் டெய்லி உன்கிட்ட எப்படியாவது பேச ட்ரை பண்றேன் பார்த்தா என்றவள் மறுபடியும் நீலிடம் போய்
"சார் டெய்லி ஒரே ஒரு நேரம் அவன் கூட பேசறதுக்கு எனக்கு பெர்மிஷன் கொடுக்க முடியுமா? ப்ளீஸ்
ம்ம் என்று அவன் தலையாட்ட அப்பாடா என்ற உணர்வு
"டேய் அதான் சொல்றேன்ல போ, நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு உனக்கு டெய்லின் எப்படியாவது சொல்லிடுறேன்.. போய்ட்டு வா பத்திரமா இரு... பயப்படாத , நான் நல்லா இருப்பேன் கவனமா இரு என்றவள் பறக்கும் தட்டில் ஏறி உள்ளே போகும் பார்த்தசாரதியை தவிப்பாக பார்த்துக் கொண்டே நின்றாள்... அவன் வாசலில் நின்று இவளை விட்டு விட்டு போக மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டே நிற்க.....
வா தொல்லைக ஒழிஞ்சது, குழந்தை பெத்துக்க போகலாம் என்று நீல் அவளை தரதரவென இழுத்து கொண்டே போக
அங்கை என்று கத்தி அழைத்த சாரதியை பறக்கும் தட்டு விழுங்கி கொண்டு பூமி நோக்கி பறந்தது ...
அவளுக்கு உறுதுணையாக இருந்த நட்பை பிரித்து உதட்டை வளைத்து சிரித்தான் நீல் ....
ஒரு பெண் மனதால் பலவீனம் ஆகும் போது அவளை தோற்கடித்து வெற்றிவாகை சுடுவது எளிது என்று சூட்சமம் அறிந்தானோ?!