எஃகில் கலந்த தளவம் 4

Egg4

எஃகில் கலந்த தளவம் 4

4 எஃகில் கலந்த தளவம் !! 

"ஐயோ அபச்சாரம் அபச்சாரம் ஒரு ஆம்பள மேல இப்படி தப்பு தப்பா கை வைக்கிறீங்களே, இதெல்லாம் உங்களுக்கு நியாயமா படுதா?... என்ன விடுங்கோ என்று பார்த்தசாரதி தன் ஆடைகளை வழிபறி செய்த லைக்காவிடம் இருந்து விடுபட அறைக்குள் ஓடிக் கொண்டிருந்தான் .. 

"ஏய் நில்லு நில்லுன்னு சொன்னேன் ... படுக்கை மீது தாவி ஏறி நின்று கொண்டு தன் உடலை அவன் கை கொண்டு மறைக்க

"ப்ச் இரிட்டேட்டிங் பண்ணாத இடியட், மூணு நாள் ஆகுது.. அது ஏன் வளரவே மாட்டேங்குது.... இப்படியே இருந்தா நான் எப்படி பேபி உண்டாகிறது" என்ற அவளைக் கண்டு அஞ்சாத காண்டாமிருகத்தை பார்த்து அவளுக்கு கோபமோ கோபம்.... அவள் பார்வையெல்லாம் இடுப்பின் பக்கம் , அவன் பார்வையோ மிரண்டு போய் அவள் கண்களையே பார்த்தது...

மூன்று நாளாக மரம் ஏன் வளரவில்லை மரம் ஏன் வளரவில்லை என்று அவள் டார்ச்சர் செய்ய... எப்படி சொல்வான் உன்னை பார்த்தால் பயத்தில் சுச்சா தான் வருகிறது என்று...

"இங்க பாருங்கோ உங்களுக்கு புண்ணியமா போகும், உங்க சந்ததி எல்லாம் என்ற அவன் முன்னால் கையை நீட்டி தடுத்தவள் 

"உன்னோட வாழ்த்து வரம் எதுவும் எனக்கு தேவையில்லை... ஐ நீட் பேபி... அதுக்கு என்ன பண்ணனும் சொல்லு "என்று கையைக் கட்டிக் கொண்டு லைக்கா அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்

நன்றாக 6 அடி அம்சமான உயரம் கட்டுடல் மேனி கொண்டவன் பார்த்தசாரதி, மீசை கூட பெண்ணை சித்திரவதை செய்து விடுமோ என்று அதை கூட வழித்து எடுத்து க்ளீன் சேவ் லுக்கில் இருக்கும் சைவன்... தீவிரவாதம் ஏட்டில் கூட அறியாதவன்... பெண்ணை சாமியாக மட்டும் கொண்டாடாமல் , பெண்ணுக்கு உண்மையாகவே மதிப்பு கொடுக்க தெரிந்த ஒருவன்... சாதாரண ஒரு வாழ்க்கை வாழ நினைத்த அவனுக்கு சகுனி சைலண்டா வந்து அவன் வண்டியில ஏறுனது போல.... இப்படி வந்து மாட்டிக் கொண்டான் .... மூன்று நாளாக அவள் பண்ணும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா ... வா குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக்கு குழந்தை கொடு என்று டார்ச்சர் செய்கிறாள் ..அவனும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான்..

"என்ன விட்டுடுங்கோ உங்களுக்கு ஏத்தது போல 

"உன்கிட்ட நான் டிப்ஸ் கேட்கல தூக்கிட்டு வந்துட்டேன் ... இனிமே என்னால முடியலன்னு சொல்லி கொண்டு போய் விட்டா இந்த கிரகம் முழுசும் என்ன கை கொட்டி சிரிக்கும்... இங்க உள்ள 2000 லேடிஸ் ஆர்மிக்கு நான்தான் தலைவி ... நானே இந்த விஷயத்தை சறுக்கிட்டா, அதுக்கு பிறகு எங்க கிரகத்தை காப்பாத்தவே முடியாது.... எனக்கு என் கிரகத்தோட வளர்ச்சி முக்கியம்... நான் தோத்துட்டதா சரித்திரமே இருக்கக் கூடாது... அதோட நீலா நானா?? அவனுக்கு முன்னாடி நான் முன்னாடி பெத்துக் கொடுக்கணும்... இத்தனை வருஷமா ஆம்பள ஆண்ட இந்த எஃகு கிரகத்தை இனிமே பொம்பள நான் ஆளணும் அதுக்கு இந்த போட்டியில் அவனா நானான்னு ஒரு கை பார்க்கணும்... அவன் குழந்தை பிறக்கிறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி என் குழந்தை இந்த கிரகத்துல பிறந்தே ஆகணும்.... அதுக்கு நீ எனக்கு இசைஞ்சு போயே ஆகணும் ... இல்லன்னு வை உன் பொணம் கூட உன்னோட பூமிக்கு போகாது ... அப்படியே ஆயிரம் துண்டா வெட்டி போட்டுடுவேன் என்ற எஃகு உடை பஜாரியை எச்சில் விழுங்கிப் பார்த்தான் பார்த்தசாரதி..

"என்ன பாத்துகிட்டே இருக்க கமான் கமான், கம் அண்ட் ஹக் மீ... டேக் மீ" என்று லைக்கா தன் இரட்டை கைகளையும் விரித்து அவனை அழைக்க...

நான் சொல்றதை கேளுங்கோ" என்று பார்த்தசாரதி மீண்டும் பழைய பள்ளுவை பாடுவதற்கு வாயை திறக்க... 

யூயூயூ ஊஊஊஊஊஊஊஊஊ லைக்கா பக்கத்தில் இருந்த ப்ளாஸ்க்கை திறந்து சுட சுட நீரை அவன் தொடையில் ஊற்றிவிட்டு அவன் அலறுவதை சற்றும் வருத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் 

"இன்னைக்கு தொடை , நாளைக்கு அது வேலை செய்யல அதுக்கும் வெந்நீர் அபிஷேகம் நடக்கும் ஜாக்கிரதை "என்று மிரட்டி விட்டு வெள்ளி ஆடை அலங்காரி தன் ஹை ஹீல்ஸ் செருப்பு சத்தம் கேட்க வெளியேறிவிட... பார்த்தசாரதி வலியில் துடித்து போய் படுக்கையில் அப்படியே கிடந்தான்...

யார் சொன்னது பெண்ணெல்லாம் பூவென்று!!

யார் சொன்னது பெண்ணெல்லாம் மென்மை என்று

யார் சொன்னது பெண்கள் தென்றல் என்று 

இல்லவே இல்லை ஒரு பெண் பூவாக மாறுவதும் 

புயலாக மாறுவதும் 

சூறாவளியாக சுழண்டு அடிப்பதும் அவள் வாழும் சூழ்நிலை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை பொறுத்தது...

என்னடா பார்த்தா , இன்னைக்கு வெளியவே வரல நானும் உனக்காக வெளியே காத்துக்கிட்டே இருந்தேன் , நீ வெளிய வர்ற மாதிரி இல்லையா உள்ள வந்துட்டேன் .. படுக்கையில் போர்வை உள்ளே சுருண்டு படுத்து கிடந்த பார்த்தசாரதி அருகே வந்து அங்கயற்கன்னி அமர...

என்ன ஆச்சு பார்த்தா உடம்பு எதுவும் முடியலையா?? அவன் கழுத்தை தொட்டு பார்த்தாள்... புனித பந்தங்கள் எல்லாம் தாலியில், தொப்புள்கொடியில் மட்டும் உருவாவது இல்லை சிலது நட்பிலும் உருவாகும் ... 

"அங்கா இங்க இருக்கிறவங்க எல்லாம் மிருகமா மனுஷங்களா ஏலியனா என்னன்னு தெரியல... ஆனா இவங்களுக்கு எல்லாம் மனசாட்சியும் இல்ல , இருதயமும் இல்லைனு மட்டும் எனக்கு நல்லா தெரியுது.... தயவுசெஞ்சு என்ன பத்தி யோசிக்காம நீ தப்பிச்சு ஓடிடு அங்கா, என்ன பாத்துகிட்டு இருந்தா உன் உயிருக்கும் ஆபத்து...வலியில் அவன் முகம் சுணங்கிட... 

"எங்க காயம் பட்டிருக்கு" என்று தன் காயம் குரலில் கூட கண்டுகொண்ட தோழியை அவன் அண்ணாந்து பார்க்க..

எங்க காயம் பட்டு இருக்குன்னு கேட்டேன் ..

தொடையில என்று அவன் முனங்க.... 

அடி பலமோ? 

ம்ஹூம் லைட்டாதான்.... ஆனா அந்த மெட்டல் மண்டச்சி சொல்லிட்டு தான் போயிருக்கா, நாளை இதை விட பெருசா வரும்னு 

"

அதுக்கு நீ இங்க இருந்தா தான பார்த்தா 

"என்ன சொல்ற ??

"இன்னைக்கே நீயும் நானும் தப்பிக்க போறோம் என்றவளை பார்த்தசாரதி ஆச்சர்யமாக பார்க்க

"எப்படி ? எப்போ சாத்தியமா? 

"அதெல்லாம் உனக்கு எதுக்கு கன்னியை நம்பினோர் கைவிடப்படார்... 

"ப்ச் எப்படின்னு சொல்லு அங்கா...

"அந்த எஃகு பயலும் ,மெட்டல் மண்டச்சியும் பூமிக்கு நாளைக்கு போறதா பேசிட்டு இருந்ததை ஒட்டு கேட்டேன் 

அதுக்கு ?

"அவங்க போக போற பறக்கும் தட்டுல நீயும் நானும் எப்படியாவது உள்ள புகுந்துட்டா "

" கேட்க நல்லா தான் இருக்கு , இதெல்லாம் நடக்கிற காரியமா அங்கா அவங்க கண்ணை மறைச்சு எப்படி போய் ஒளிய "

"போய்தான் ஆகணும் பார்த்தா இல்லை நீயும் நானும் இங்கேயே சாகத்தான் வேணும் ... முயற்சி பண்ணி பார்ப்போமே...பார்த்தசாரதி யோசித்தபடி 

செட் ஆகுமா அங்கை??

"ட்ரை பண்ணுவோம்.. நடுராத்திரி பேய் போல தான் ரெண்டும் பூமிக்கு போகுங்க ... எப்படியாவது எஃகு நதி பக்கம் வந்திடு நானும் வந்திடுறேன்.. அவங்க ரெண்டு பேரும் வந்து பறக்கும் தட்டை சுத்தி முத்தி செக் பண்ணி ஏறும் சமயம் உள்ளே புகுந்திடலாம் ப்ளான் எல்லாம் பக்காவா போட்டாள்... 

நாலு நாள் தள்ளி போற சாவை உடனே தந்தி போட்டு அழைக்க பார்க்கிறியா நீ "

"அப்போ துரை நீ ஐடியா கொடு" அவன் திருதிருக்க 

" ஐடியா இல்லைல்ல, பேசாம வா , இல்லை அவ உன்ன அண்டாவுல வச்சி அவிப்பா அவிபடு, எனக்கு என்ன வந்தது என்று அங்கயற்கன்னி எழும்பி வாசல் அருகே போக 

உன்ன நம்பி வர்றேன் போதுமா? என்று அவன் கத்த 

அது நல்ல புள்ளைக்கு அழகு , நைட் நான் சொன்னது போல வந்திடு .. 

ம்ம் இரவோடு இரவாக கிரகம் முழுவதும் பிசியாக இருக்க, இவர்கள் இருவரும் யார் கண்ணிலும் படாது வரிசையாக தயார் நிலையில் நின்ற பறக்கும் தட்டுகள் இடையே போய் ஒளிந்து உட்கார்ந்து கொண்டனர் ...

அங்கை நீ சொன்னன்னு நானும் வந்துட்டேன் மாட்டினோம் , ரெண்டு பேர் உயிருக்கும் கெடுவே இல்லாம தலைய பிச்சு போட்டுடுவாங்க ....

"சும்மா எப்ப பார்த்தாலும் அபசகுனமாவே பேசாத பார்த்தா, இதுவரைக்கும் வந்தாச்சு இல்ல எல்லாம் நல்லபடியா நடக்கும்" எல்லாரும் வேலை பிசியில் இருக்காங்க டோர் ஓபன் ஆனதும் , அவங்க முன்னாடி இருந்து பின்னாடி வர்றதுக்குள்ள உள்ள ஓடிப்போய் ஒளிஞ்சுக்கலாம் சரியா? பார்த்தசாரதிக்கு கால் கையெல்லாம் வெட வெடவென்று ஆடியது ...

அங்கை பயந்த மாதிரி எல்லாம் தெரியவில்லை அவளோ வெள்ளி சீருடையில் அங்கும்இங்கும் சுற்றிக் கொண்டிருந்தவர்களோடு கையை ஆட்டி பேசி படி அவர்களுக்கு முன்னால் நடந்து வந்து கொண்டிருந்த நீல் 420யை நகத்தைக் கடித்துக் கொண்டே பார்த்தாள்.. 

"என்ன அங்கை அவரை அப்படிப் பாக்குற..

"இல்ல பார்க்க எஃகு ,ஆனா ரொம்ப நல்ல பையன்... சேலை விலகினாகூட பார்க்கிற ஆளுக மத்தியில இவன் நல்லவன் தான் பார்த்தா... 

"அப்போ அவன் கூடவே இருந்துடுறியா? "

ம்ஹூம் என்று வேகமாக தலையாட்டியவள்

"ஏன் ஓசியா பிள்ளை தர்றதுக்கா.... என் தாத்தா கூட அதை செய், இதை செய் பொட்ட புள்ளையா அடக்கமா ஒடுக்கமா அப்படி இரு இப்படி இருன்னு 1008 ரூல்ஸ் போடுவாரு ... ஆனா இந்த எஃகு தலையன் , வாயை மூடிகிட்டு நீ சும்மா இருந்தா போதும்னு சொல்லிடுவான் அந்த மனசு யாருக்கு வரும்? அதான் கொஞ்சம் கரிசனை .... வேற ஒன்னும் இல்ல , வா வா வேலையை பார்ப்போம் அவர்கள் நின்ற பறக்கும் தட்டு அருகே வந்து நீலும், லைக்காவும் நின்றனர்.... இவர்கள் இருவரும் மறைந்து உட்கார்ந்து இருக்க ... 

"என்ன நீல் அவ பிரகனண்ட் ஆகுற வரைக்கும் உனக்கு நைட் டியூட்டி கொடுக்க கூடாதுன்னு சொன்னாங்க..."

"ம்ம் நீயும் தான் பிரகனண்ட் ஆகிற வரை நைட் டூயூட்டிக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தது நீ ஏன் கிளம்புன ???

"ப்ச் அவன் எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டேங்குறான் என்று லைக்கா தலையை தடவ

"எனக்கு அவளைப் பார்க்கவே பிடிக்கல அதான் கிளம்பிட்டேன்" என்றான் பறக்கும் தட்டில் ஏறிக்கொண்டே... இருவரும் போய் மானிட்டர் முன்னால் அமர.... கதவு மூடுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் வேக வேகமாக பார்த்தசாரதியும் அங்கையும் கதவு இடுக்கு வழியாக உள்ளே நுழைந்து கொண்டார்கள்...

இருட்டாக இருந்த அந்த இடத்தில் ஒரு மேஜை தேடி இருவரும் ஒளிந்து தன்னை மறைத்து உட்கார்ந்தும் கொண்டார்கள்...

அப்பாடா என்னால நம்பவே முடியல அங்கை, நாம தப்பிச்சிட்டோம் "

ம்ம், அப்படி சொல்ல முடியாது பார்த்தா, நம்ம போயி பூமியில கால் வைக்கிற வரைக்கும் ரிஸ்க்தான்..

ஆமால்ல என்று பார்த்தசாரதி கொட்டாவி விட..

"நைட்டு முழுக்க இந்த மெட்டல் மண்டச்சு என்ன தூங்கவே விடாம பண்ணிட்டா, தலை எல்லாம் வலிக்குது , எப்படியும் பூமிக்கு போக ரொம்ப நேரம் ஆகும் நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் ... நீ பூமி வந்ததும் என்ன எழுப்பி விடுறியா?

அவ்வளவு தானே பண்ணிட்டா போச்சு, நீ படுத்துக்க கு பார்த்தா என்று ஒதுங்கி உட்கார்ந்து அவனுக்கு இடம் கொடுக்க ..பார்த்தசாரதி அவளை நம்பி கண்ணை அசந்துவிட்டான்

சிறிது நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அங்கைக்கும் கண்கள் சுழற்றிக் கொண்டு வர...

 "நம்ம ஊர் டவுன் பஸ் எல்லாம் ஏழு கிலோமீட்டர் போறதுக்கே ஏழரை மணி நேரம் எடுப்பான் ... இது வேற்று கிரகத்தில இருந்து பூமி வரைக்கும் போக வேண்டியது இருக்கு... எப்படியும் ரெண்டு நாளாவது ஆகும்... நாமளும் கொஞ்சம் தூங்குவோம்.. என்று அவளும் தலையை சாய்ந்து விட.... அவள் சும்மா இருந்தாலும் , அவள் வாய்தான் சும்மா இருக்காதே ... 

அங்கையின் கொர் கொர் குறட்டை சத்தம் அந்த இடத்தில் பூகம்பத்தை கிளப்பியே விட்டது .... மின்னும் நட்சத்திரங்களை கிழித்து போய் கொண்டிருந்த ஸ்பேஸ் ஜெட் முன்னே ஓட்டும் பகுதியில் இருந்த நீல் காதுகள் சிவப்பாக ..  

கொர் டூர்ஊஊஊஊ கொர் தொடர் குறட்டை சத்தம் ..

நீல் இன்ஜின் எதுவும் பால்ட்டா இருக்குமா, ஏதோ உடைஞ்ச சத்தம் வருது என்று லைக்கா கையில் நட் ஸ்பனரை தூக்கி கொண்டு எழும்ப ..

"நோ இந்த சவுண்ட் எங்கேயோ பழக்கப் பட்டது 

இருக்கையை விட்டு எழும்பி நீல்.... வேகமாக அந்த குட்டி அறை போன்ற இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்... இவர்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கும் நேரம் என்பதை விட ஓய்வு நேரம்... தங்கள் அறைக்குள் போக அனுமதி... மீதி நேரம் முழுக்க மனுசனை எப்படி அழிக்க , பூமியை எப்படி தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வர என்று உலகை அழிக்க திட்டம் திட்டுவதும் , அதற்க்கான செயல்பாடுகளை செய்யவுமே நேரம் சரியாக இருக்கும் ... அந்த ரெண்டு மணிநேர ஓய்வையும் கெடுத்த இவள் குறட்டை சத்தம் எப்படி மறக்கும்... ரோட் ரோலர் எதையும் வாய்க்குள்ள வச்சிருக்காளா என்று சந்தேகம் வேறு பட்டு இருக்கிறான் 

என்னாச்சு நீல் ? லைக்கா புரியாது அவன் பின்னே ஓடி வர 

அவ எங்கையோ மறைஞ்சு இருக்கா 

யாரு ?

ப்ச் அந்த உலகவாசி...

நோ சான்சே இல்ல நான்தான் செக் பண்ணினது... தப்பாக வாய்ப்பே இல்லை யாரும் இல்ல... 

ஐ நோ, அவ குறட்டை சத்தமும் அவ வாசமும் என் மூளைக்குள்ள ரிஜிஸ்டர் ஆகி இருக்கு... அவ இங்க தான் இருக்கணும் என்று நீல் கண்களை சுழல விட... அங்கையின் மஞ்சள் நிற தாவணி மேஜை அருகே வெளியே நீண்டு கொண்டு இருக்க.. நீல் கண்ணால் லைக்காவை பார்க்க சொல்ல அவள் கண்கள் அகல விரிய ....

சொன்னேன்ல இந்த ஜந்துவை சாதாரணமா நினைச்சது தப்பா போச்சு.... இருவரும் மேஜை அருகே போய் பார்க்க... பார்ததசாரதியும் அங்கையும், உலக போரே வந்தாலும் ஓரமா நின்னு சண்டை போடுங்கடா எங்களுக்கு தூக்கம் முக்கியம் என்று சொல்லி விட்டு தூங்குவது போல குறட்டையில் பல கீரவாணி ராகம் அமைத்து தூங்கி கொண்டு இருக்க...

கனவு காணுங்கள் என்ற அப்துல்கலாம் அய்யா வாசகத்தை பலமுறை படித்தவர்கள் போலும் சற்று அதிகமாக கனவு காண .... அவர்களை காவு வாங்க இங்கே எஃகு மனிதர்கள் கையில் துப்பாக்கியை எடுத்தனர் ...