எஃகில் கலந்த தளவம் 3

Egg3

எஃகில் கலந்த தளவம் 3

3 எஃகில் கலந்த தளவம் !! 

காலம் காரணம் இல்லாமல் யாருக்கும், எதையும் தந்து விடாது... இறைவனும் , அந்தக் காலமும் சேர்ந்து விளையாடும் சதி விளையாட்டில் எவனும் தப்பிக்க இயலாது...

எங்கோ இருந்த என்னை இங்கே கொண்டு வந்து கடவுள் போட்டு இருக்கிறார் என்றால், ஏதோ திருவிளையாடல் கண்டிப்பாக இருக்கிறது அது நன்மைக்கானதா தீமைக்கானதா?? என்று மட்டும் தான் அங்கயர்கன்னிக்கு புரியவில்லை ...

ஏழை விவசாய குடும்பம் அவளுடையது... பத்தாம் வகுப்பு வரை கான்வென்ட்டில் படித்தவள் ... தாயின் மரணம் எல்லவற்றையும் மாற்றி போட்டு விட்டது தற்கொலை செய்து கொண்டார், தகப்பன் தகாத உறவில் இறந்ததால் மனம் உடைந்து போனவர் மகளை மறந்தார் தாயின் இறுதி காரியங்களை அழாது பார்த்தபடி நின்றாள் ..

அழூதுடு அங்கை என்று தாத்தா அழ 

நான் ஏன் அழணும் என்ன பத்தி நினைக்காம செத்து போன இவங்களுக்காக நான் அழ தேவையில்லை பசிக்குது சோறு இருக்கா என்று போனவளுக்கு , தாய் செத்ததில் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது என்று ஊரார் பேசிட... அந்த ஊரை காலி செய்து பேத்தியை அழைத்து கொண்டு தன் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்து விட்டார்... 

தன் தாத்தா வாங்கிய கடனுக்காக கடைசி இரவில் ஏற்கனவே நான்கு மனைவிகளை கட்டி கூத்தடிக்கும் வட்டிக்காரன் வந்து வாசலில் நின்று..

பணத்தை நாளை காலை தரவில்லை என்றால் நீ அந்த பணத்தை தர வேண்டாம் ஆனால் அதற்கு பதிலாக உன் பேத்தியை ஐந்தாவது மனைவியாக சேர்த்துக் கொள்வேன் என்று மிரட்டி விட்டு போயிருந்தான் ... தாத்தா பயந்து போய் பேத்தியை பார்க்க .... அப்போதும் அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை 

உன்ன பெத்த புண்ணியவதி உன்ன என் தலையில கட்டிட்டு போயிட்டா, உன்ன பெத்தவன் பொண்டாட்டி, எப்போ சாவா புது புருஷன் ஆகலான்னு எவளையோ கூட்டிட்டு ஊரை விட்டு போயிட்டான்..... நீ என்னன்னா உலகம் எவ்வளவு கொடூரமானதுன்னு தெரியாம, அவ்வளவு சொல்லியும் இந்த வட்டிக்காரன் கண்ணுல போய் விழுந்து இருக்க... அவன் உன்ன பார்த்துட்டு இவ்வளவு அழகான பேத்தி இருக்கும் பொழுது நீ ஏன்யா கடனா என்கிட்ட பணம் கேட்ட... உன் பேத்தியை என்கிட்ட கொடுத்து இருந்தா கோடி கோடியா பணம் தந்து இருப்பேன்னு அசிங்கமா கேட்கிறான்.... "

"முயல் அந்த வயல் பக்கம் ஓடிச்சு ,பிடிக்க போனேன் எனக்கு என்ன அந்த கருவாயன் அங்க இருக்கான்னு ஞானதிருஷ்டியா தெரியும் "என்று சோற்று உருண்டைகளை வாயில் திணித்து கொண்டே அங்கா கூற

"உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த வீட்டை விட்டு வெளியே போகாதன்னு" என்று பேத்திக்கு பெருமாள் இரண்டு அடியை போட முதுகை தேய்த்துக் கொண்டே...

"இந்தா பாரு தாத்தா இப்ப எதுக்கு என்னை அடிக்கிற என்ன கல்யாணம் கட்டிக் கொடுக்கணும்னுதானே கஷ்டப்பட்டு கடனை வுடனை வாங்கி நகை எல்லாம் செஞ்சு கிட்டு இருக்க ... அவன் தான் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றான்ல.... பேசாம அனுப்பிவிடு ..

"புத்தி கெட்ட நாயே அவன் உன்னை அஞ்சாவது பொண்டாட்டியா கட்டிக்க விரும்புறாண்டி "என்று பெருமாள் தன் தலையில் அடிக்க ....

"தாத்தா வாக்கப்பட்டு போற இடத்துல கலகலப்பா இருக்கணும்னு கேப்பேன்ல, என்ன சக்காளத்திகளோட கலகலப்பா இருந்துட்டு போறேன் ... பெரிய குடும்பம் ஏற்கனவே நாலு பேர் இருக்காங்க , அவங்க பெத்த பிள்ளைங்கன்னு ஜாலியா இருக்கலாம் இல்ல" என்ற பேத்தியை கண்டு மனமடிவாகி போனது ....

நேசிக்க தெரிந்தவள் , நேசம் கொண்டவள்.. நேசம் மட்டுமே கொண்டவள் எதிரியை கூட நேசிக்கும் பாங்கு கொண்ட புண்ணியவதி... தாத்தாவுக்கு சுமையாக இருக்கிறோம் என்பது அவளுக்கு நன்றாக தெரியும் ... ஆனால், அந்த சுமையை விலக்கிவிட்டு எப்படி வெளியே போவது என்று தெரியவில்லை... ஊரைப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்று உச்ச கொட்டுகிறார்கள்... அது தவறு !!! அவளுக்கு எல்லாமே தெரியும் ... தெரிந்தாலும் தெரியாதது போலவே கடக்கும் ஒருத்தி....

"உன்ன அந்த ஒப்பேராதவனுக்கு கட்டிக் கொடுக்கிறதுக்கு ஒரு சொட்டு விஷத்தை கொடுத்து கொன்னுட்டு போயிடுவேண்டி... இதுக்காகவா நான் இத்தனை வருஷம் பாடுபட்டேன் உன்ன பார்த்து பார்த்து வளர்த்தது.. அந்த தெரு நாய்கிட்ட பிடிச்சு கொடுக்கவா

நாளைக்கு காலையில பணத்தை கொடு இல்லனா உன் பேத்தியை கொடுன்னு பேரம் பேசிட்டு போயிருக்கானே என்ன தாத்தா செய்யப் போற?"

பாப்போம் கடவுள் ஏதாவது மேலே இருந்து ஒரு வழியை காட்டுவார் 

வழி கிடைக்கலைன்னா ??என்று தன் தாவணியை சுற்றிக்கொண்டு சற்றும் பயமில்லாத நின்ற பேத்தியை பார்த்து பெருமூச்சு விட்ட பெருமாள்

"கொஞ்சம் விஷத்தை நீயும் நானும் பாதி பாதி தின்னுட்டு ஊஊஊ

"ஹான் , நீ சாவு நான் எதுக்கு சாகணும்... நான் என்ன தப்பு பண்ணினேன், அதெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக சாக முடியாது .... இந்த உலகத்தில் நான் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு... நீயும் நானும் மட்டுமே உலகம்னு வாழ்ந்துட்டோம்... எனக்கு இது ரொம்ப போரிங்கா இருக்கு தாத்தா.... இந்த பரந்து விரிஞ்ச உலகத்துல நானும் சுதந்திரமா வாழனும்.... என் பேச்சை கேட்கிறதுக்கு பத்து பேர் .... நான் நெனச்ச நேரம் எல்லாம் வெளிய போகணும் , நான் நினைச்சதெல்லாம் சாப்பிடணும் சந்தோஷமா உல்லாசமா வாழனும் .. இதெல்லாம் விட்டுட்டு என்னை கல்லறையில் போய் அடக்கம் ஆக சொல்றியா ... அப்படி எல்லாம் முடியாது விஷம் வாங்குற காசுக்கு பட்டணத்துக்கு போறதுக்கு டிக்கெட் போடு , நீயும் நானும் ஓடிப் போயிறலாம்...

"விவரம் தெரியாத கழுதை, இந்த ஊரை சுத்தி வட்டிக்காரன் ஆளுக தான் இருக்காங்க ... அவங்க கண்ணை விட்டு தப்பிச்சி எப்படி போக? 

"இப்படியே சொல்லிக்கிட்டு திரி எனக்கு விவரம் இல்ல விவரம் இல்லைன்னு, விவரம் இல்லாத பிள்ளையை கல்யாணத்த மட்டும் கட்டி வைக்க ஆளா பறக்குற... 

"அதெல்லாம் கல்யாணம் கட்டுனா , தானா விவரம் தெரிஞ்சுரும்டி...

"அதுக்கு பேரு கல்யாணமா இல்ல பல்கலைக்கழகமா? கல்யாணம் கட்டினது எல்லாம் தெரிய 

ப்ச் கூட கூட பேசாதன்னு சொல்லி இருக்கேன் 

"பேச தான வாய் இருக்கு ....

எம்மா இருக்கிற வேதனையே போதும் நீ வேற உயிரை எடுக்காத... போய் தூங்கி தொலை.... 

தூங்க போகலைன்னா ... 

அப்போ செத்து தொலை, நானாவது நிம்மதியா இருப்பேன் என்று பெருமாள் கோவம் கொண்டு சொல்லி விட்டு வெளியே கிடந்த கட்டிலில் அமர... இவள் தோளை உலுக்கி கொண்டு போய் கட்டிலில் படுத்து விட்டாள்....  

காலை வட்டிக்காரன் அவளை தூக்க ஆட்களோடு வர .... வெறும் படுக்கை தான் கிடந்தது 

டேய் உன் பேத்தியை எங்க ? ஊரெல்லாம் வலை போட்டு தேட அங்கை மிஸ்ஸிங்...

அய்யய்யோ செத்து போன்னு சொன்னேனே என் புள்ளை போச்சே என்று பெருமாள் தலையில் அடித்து கொண்டு அழுதார்... 

நடிக்கவா செய்ற அவளை எங்கையோ மறைச்சு வச்சிருக்க, எப்படியும் ஒருநாள் கிடைப்பா அப்போ அவளுக்கு புருசன் நான்தான் என்று வட்டிகாரன் பெருமாளை தள்ளிவிட்டு போனான் ... 

அங்கயற்கன்னியோ கடவுள் ஜிகினா சட்டையில தான் இருக்கணுமா, மயில்ல தான் பறந்து வந்து காப்பாத்தணுமா, என்ன காப்பாத்த வந்த கடவுள் வெள்ளி சட்டை போட்டவர் பறக்கும் தட்டுல வந்துல்ல காப்பாத்தி இருக்கார் ... நல்லவேளை காலை விடியும் முன்ன தூக்கிட்டு வந்துட்டார்... வட்டிக்காரன் காதுல பூவை வச்சாச்சு தாத்தா தான் பாவம் நான் இல்லாம என்ன பாடு படுறாரோ... சரி அவருக்கு பாரமாதான இருக்கேன் ... இனியாவது பாரம் இல்லாம வாழட்டும்.... பஞ்சு மெத்தை படுக்கை மீது கால் மீது கால் போட்டு ஆட்டி கொண்டு அங்கயற்கன்னி புலம்பி கொண்டிருந்தாள் ...

பய நல்லவன் போலத்தான் இருக்கான் , பிள்ளை பெக்க தூக்கிட்டு வந்துட்டு சும்மா வச்சிருக்கான், நல்லா சோறு போடுறான், போதாக்குறைக்கு டிரெஸ் ஸ்நாக்ஸ்னு ராஜ வாழ்க்கை தான் ... ஆனா எப்போ அரக்கனா மாறுவான்னு தெரிலயே.... உலகத்தை விட இது பாதுகாப்பான இடமாகத்தான் அவளுக்கு பட்டது ...  

இவனிடம் இருந்து எப்படியும் கற்பை காப்பாத்திடலாம்...ஆனா உயிர் ..உதவாத நீ எதுக்குன்னு போட்டு தள்ளிட்டா, எப்படி தப்பிக்க நான் தப்பிக்கிறேனோ இல்லையோ பார்த்தாவையாவது காப்பாத்தி விட்டிரணும்.. என்ன செய்யலாம் .... என்று யோசனையாக கிடந்த அவள் காதில் இரும்பு கதவு லாக் திறக்கும் சத்தம் கேட்டு மணியை பார்த்தாள் இரவு ரெண்டு...

"எதுக்கு தான் இவனுக மாஞ்சி மாஞ்சி வேலை பார்க்கிறானுக , திங்க மாட்டைக்கானுக, தூங்க மாட்டைக்கானுக கொள்ளையில போறவனுக, எப்போ பார்த்தாலும் விரைச்ச கோழி போல கமண்டோ போஸ்லையே சுத்திட்டு இருக்கானுக இந்த முறைச்சசேவல் எல்லாத்துக்கும் மேல , சிகப்பு கண்ணை வச்சிக்கிட்டு தீ போலவே சுத்திட்டு இருக்கு .... "

நீல் வெளியே வெயிட் பண்றோம் எப்போ தொடங்க போற .... நீல் மணியை பார்த்தபடி 

இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஒரு மணி நேரம் தாண்டும் ... "

ஓகே வெயிட் பண்றோம் 

ப்ச் நோ காலையில ரிப்போர்ட் நானே சமிட் பண்ணுறேன் நீங்க போய் தூங்குங்க" என்று விளக்கு பிடிக்க காத்திருக்கும் ஆசாமிகளை விரட்டி அடித்தான்..

சூச்சுவே ஒருத்தன் வெளிய நின்னா ஆத்திரத்துக்கு வராது.. இவனுக முடிஞ்சா முடிஞ்சா போட்டா எங்கனம் முடிய ... இவளை கண்டாலே ஆகல உவட்டுது , இதுல அடுத்தது எல்லாம் சாத்தியமா சாத்தியமே இல்லை .. அடுத்து என்னதான் செய்ய புரியாது நீல் அறைக்குள் நடந்து வர வர முகம் அகோரமாக மாறியது... 

மாஞ்சி மாஞ்சு பத்து குடம் தண்ணீ எடுத்து ஊத்தணும் மூணு வேளை சமைக்கணும் ...கோலம் போடணும் சாணி அள்ளணும்... களை பறிக்கணும், இப்படி பெண்ணுக்கான எந்த வேலையும் இல்லாது தான்போக்கில் சுற்றி வருவது எப்படி சாபம் ஆகும் ... யாரு பெத்த புண்ணியவானோ, என்னைய வச்சு சோறு போடுறான்..

இந்த பிள்ளை பெக்கிற பிராசஸ் மட்டும் தான் சற்று உதைத்தது அதுவும் நீல் அவளை முகத்தை அஷ்டகோணலாக வைத்து பார்ப்பதிலேயே அவனுக்கு அவளை பிடிக்க வில்லை தொட கூட அருவருப்பு படுகிறான் என்று புரிந்தது.. இரவு வருவான் ... அவள் அருகே உட்காரக்கூட விரும்ப மாட்டான் ... ஆனால் வெளியே உள்ளவர்கள் இவன் பதிலுக்கு காத்திருப்பது அறிந்து குறுக்கும் நெடுக்கும் அலைவான்... இவள் தான் ,பாவம் பார்த்து ...

ஏலியன் சார் பேசாம நடந்து முடிஞ்சிருச்சுன்னு சொல்லிடுங்க ..ஏன் இவ்ளோ கஷ்டப்படுறீங்க?

உன்கிட்ட நான் ஏதாவது கேட்டேனா? என்று அதற்கும் இவளை முறைத்து வைத்தான்

இல்ல மிஸ்டர் ஏலியன் உங்கள பாக்க பாவமா இருந்துச்சு பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தயக்கமா இருக்கிற மாதிரி... உங்களுக்கும் தயக்கமா இருக்குது போல இருக்கு .. போகப்போக பழகிடும் கவலைப்படாதீங்க.... இப்போதைக்கு சும்மா எல்லாம் நடந்துருச்சு, நாலு தடவை அஞ்சு தடவைன்னு கப்சா அடிச்சு விட்ருங்க.... அவங்களும் ஏதாவது எழுதிட்டு போகட்டும்... உள்ள வந்து நீங்க முடியாம முக்கிட்டு இருக்கிறதை பார்க்கவா போறாங்க, 

உன்ன பேசாதன்னு சொன்னேன்... பல்லை கடித்தான்.. சிங்கம் சிங்கத்தோடு சண்டை போடணும் இப்படி சிறுஎலி கிட்ட சண்டை போடலாமா? கெளரவம் தடுத்தது ... 

நீல் 2 மணி நேரம் தாண்டிடுச்சு என்று வெளியே இருந்து குரல் வர ... நாடியை குத்திக் கொண்ட நீல் 

என்ன பதில் சொல்ல யோசனை தெரியவில்லை எல்லாம் முடிஞ்சிருச்சு என்று அவள் சொன்னது போலவே சொல்லிவிட.... 

சத்தமே வரல அங்கிருந்து டவுட் வர நீல் அவளை முறைத்தமேனிக்கு பார்க்க 

உங்களுக்கு தான் வாயை திறநதா பிடிக்காதே ஏலியன் சார் 

ப்ச் கத்தி தொலை 

ம்ம் அய்யோ வலிக்குதே அம்மா வலிக்குதே விடுங்க என்று பொய்யாக அவள் அலற...

ஓகே நீல் கொஞ்சம் மெதுவா ஹேண்டில் பண்ணு செத்துட போறா அங்கே இருந்து பிள்ளை பெக்கிற பொருளை பத்திரமா வச்சிக்க என்ற கட்டளை வர

ம்ம் உம் கொட்டினான்....

ம்ம் பாத்தீங்களா யாருக்கும் சந்தேகம் வரல டெய்லி இதே மாதிரியே ஒப்பேத்தலாம்... நீங்க கவலைப்படாதீங்க ... ரொம்ப களைப்பா இருக்கீங்களே காபி தண்ணி ஏதாவது போட்டு தரவா? என்ற அங்கையை எரிச்சலாக மேலும் பார்த்த நீல்.

என்கிட்ட தள்ளியே இரு 

ஏன் ஏன் ஏன்

உன் பேச்சில எரிச்சல் வந்து பொட்டு பொட்டுன்னு சுட்டு கொன்னுட்டு போனாலும் போயிடுவேன் போய் கீழே படு போ என்று கத்த 

இல்ல பெட்டு நல்ல புசுபுசுன்னு இருக்குது ஒரு ஓரமா படுத்துக்கவா தலையணை, பறந்து போய் அறையின் மூலையில் விழ ...

போர்வை யார் தருவா எடுத்துக்கவா ?

ப்ச் அதையும் அவன் எடுத்து வீசிட.... 

குளுகுளு பெட்டியை என் பக்கம் திருப்பி வச்சிட்டு படுங்க ஏலியன் சார்... வெட்கையில தூக்கம் சரியா வர மாட்டைக்கு ... திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு அடிச்சதாம் யோகம் என்பது போல, வறுமை கோட்டுக்கு கீழே இருந்த அவளுக்கு ஒய்யார வாழ்க்கை ஆகி போனது ... 

அங்கை அங்கு உள்ள ஃப்ரிட்ஜை திறந்து பலகாரங்களை எல்லாம் எடுத்து தாவணியில் கட்டிக்கொண்டு போய் தரையில் உட்கார்ந்தவள் 

"அப்பப்ப வயிறு பசிக்கும் கொஞ்சமா தின்னா தூக்கம் நல்லா வரும் அதான்.... ஒரே பிரெட்டும் ஜாமூமா வாங்கி வச்சிருக்காங்க... முடிஞ்சா அடுத்த வாட்டி காரசாரமா , முறுக்கு காரபூந்தி மஸ்கோத்அல்வா இதெல்லாம் வாங்கி வைக்க சொல்லுங்க ஒரே மாதிரி தின்னு தின்னு போரடிக்குது என்றவள் மேலே வந்து பொருட்களெல்லாம் விசிறி அடிக்கப்பட....

 நான் என்ன தப்பா பேசினேன் இந்த கோபப்படுறாரு"

தூங்க போறியா இல்லை சாக போறியா ??"என்று நீல் படுக்கையில் மல்லாக்க படுத்தபடி கோபத்தில் கத்த ...

கத்தாதீங்க கத்தாதீங்க தூங்கவே போறேன் அப்புறம் ஏலியன் சார் அரைக்கிலோ சீடையும் அப்படியே சேர்த்துக்கோங்க "

ஆஆஆஆஆஆஆஆ அவள் குரலை நீல் தன் இரு காதை அடைத்து தடுத்தான்....  

நீலால் ஒன்று முடியாதா? அவனால் எல்லாம் முடியும் எதையும் செய்யும் வலிமை கொண்டவன் என்று இந்த கிரகமே அவன் பெருமை பாட .. இவளை தூக்கி வந்த காரியத்தை சற்றும் செய்ய முடியாது தொடர் தோல்வி யாரும் அறியாத தோல்வி, தலையை ஒரு கையால் சொரிந்து கொண்டே இன்னொரு கையால் கண்ணாடியை தாவணியில் துடைத்து போட்டபடி படுக்கையில் காலை ஆட்டி கொண்டு கிடந்த அவளை பார்த்து வயித்தெரிச்சல் கன்னாபின்னா என்று வந்தது.... 

எஸ் நோ என்று அவன் கேட்ட கேள்விக்கு இந்த கிரகம் முழுவதும் ஒருவரி பதில் சொல்லும் இவளோ கார்ப்பரேசன் பைப் போல திறந்தா மூடாது பேசுவதும் , அவனுக்கே அறிவுரை சொல்வதும் சற்றும் பிடிக்கவில்லை... கண்ணை மூடி ஆத்திர அவசரமாக கலவி செய்ய கூட இவள் வேண்டாம் என்று மனம் அவளை வெறுத்து தள்ள ....

ம்ஹூம் என்னால இவக்கிட்ட நோ நோ நினைக்கும் போதே உடல் கூச... 

சீசீ என்னால முடியலைன்னு இவ வெளிய போய் சொல்லிட்டா என்ன பண்ண ? 

அவன் கவலை அவனுக்கு இவள் கவலையோ எத்தனை நாள் ப்ரெட் ஜாம் பழங்கள் தின்று வாழ்வது சுடச்சுட சோறு திங்கணும் அதுக்காகவாவது இந்த கிரகத்தை விட்டு தப்பிக்கணும் என்று தப்பிக்க வழி தேடினாள்..

தெனாலிராமன் தூரத்து பார்வைக்கு கோமாளிதான் .. அவன் புத்திக்கூர்மையையும் தெளிவையும் கோமாளிதனங்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தது போலவே இவளும் ஒருநாள் ஒன்னும் செய்ய மாட்டாள்... கடைசி வரி பஞ்சுக்கு பஞ்சம் ஆனதால் , அப்படியே கம்முன்னு போயிடுவோம் ...